Wednesday, December 29, 2010

பொன்மன நல்லி வாழ்க


பொன்மன நல்லி வாழ்க

பத்மசிறீ நல்லி குப்புசாமிசெட்டியார் அவர்களின் 70ஆம்
அகவையை முன்னிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடியது

பட்டுவை நெய்து நம்மின்
பெருமையை நிலைக்கச் செய்தோன்
மட்டிலா நல்லி மேன்மை
மண்புகழ் பரவச் செய்தார்
எட்டிடும் சிகரம் நோக்கி
ஏறுபோல் உயர்ந்து வென்றார்
பட்டென உடலின் பொட்டாய்
பொன்மன நல்லி வாழ்க!

புன்னகை மன்னன் பாரில்
புன்னகை பூக்கச் செய்வோன்
கண்ணென தொழிலைப் போற்றி
கண்டிட்டார் வணிக ஏற்றம்
தன்னரும் வாழ்வின் மேன்மை
தகுதியாய் நூலாய்த் தந்தோன்
புண்ணியப் பணிகள் ஆற்றும்
புண்ணிய நல்லி வாழ்க!

உலகெலாம் பறந்து நம்மின்
உயர்தொழில் உயர்த்தும் நல்லி
பலமெலாம் பகிர்ந்து நல்கும்
பண்புள நெஞ்சர் நல்லி
நிலமெலாம் கருணை ஊற்றை
நிகழ்த்திடும் தூயோன் நல்லி
நலமெலாம் இணைந்தே பாரில்
நனிபுகழ் நல்லி வாழ்க!

எழுபதைக் கண்டார் நம்மின்
எழுச்சியாய் வாழ்வில் நின்றார்
தொழுதிடும் சேவை வாழ்வில்
தொண்டராய் என்றும் உள்ளார்
பழுதிலா நல்லி மேன்மை
பார்புகழ் மென்மேல் ஏற்று
விழுதுபோல் அறங்கள் தாங்கும்
வியத்தகு நல்லி வாழ்க!

அமெரிக்க மருத்துவமாமணி பத்மினி பஞ்சாட்சரம் படத்திறப்பு



அமெரிக்க மருத்துவமாமணி பஞ்சாட்சரம் அவர்களின் துணைவியார் மருத்தவர் பத்மினி படத்திறப்பு

அமிரிக்கா நியூயார்க்கில் தமிழுக்கும் தமிழ் ஈழத்திற்கும் அருந்தொண்டாற்றி வரும் மருத்துவமாமணி தமிழ்மாமணி வின்செண்ட் பஞ்சாட்சரம் அவர்களின் துணைவியார் மருத்துவர் பத்மினி இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெருவிக்கிறோம்.. தமிழுக்காகவே அமெரிக்கா வாழும் குடும்பங்களில் வின்சண்ட் பஞ்சாட்சரம் குடும்பம் தலைமையான குடியாகும்.

மருத்துவர் பத்மினி அவர்கட்கு பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பாக வீரவணக்கம் 5-11-2010 ஆம் நாள் வடபழனி அறிஞர் அண்ணா நூலகத்தில் நடத்தப்பட்டது. மாட்சிமிகு கு.க.செல்வம், செ.கண்ணப்பன் முன்னிலையில் சென்னை முன்னாள் மாநகரத்தந்தை சா.கணேசன் தலைமை தாங்கினார். மன்ற இயக்குநர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அறிமுகவுரையாற்றினார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அம்மையார் படத்தை திறந்துவைத்து அவரது சிறப்புகளை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

மறவன்புலவு சச்சிதானந்தம், மணீமேகலை கண்ணன், கண்மதியன், இரங்கலுரை நிகழ்த்தினர்.கழகப் புர்டோத்தமன் நன்றி நவின்றார்

Friday, November 26, 2010

திருக்குறளில் கலைகள்


திருக்குறளில் கலைகள்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர் தமிழ்ப்பணி

சென்னையில் 26,27,-11-2010 நாட்களில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் ஆற்றிய உரை

திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மையத்தின் சார்பில் திருக்குறள் கலை இலக்கிய சங்கமம் நடைபெறுவது மகிழத்தக்க ஒன்றாகும். இருபது ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்திவரும் முனைவர் இலலிதா சுந்தரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகளிர்மாமணியான இலலிதா சுந்தரம் 1999ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாட்டிற்கு வருகை தந்த பெருமைக்குரியவர். அண்மையில் மலேசியாவில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று பன்னாட்டுத்தமிழுறவுப் பணிகளில் இரண்டரக் கலந்தவர். எந்த அமைப்பாக இருந்தாலும் நான் என்று முன்னின்று செயலாற்றும் மன வளம் உடையவர். இந்த மன வளத்திற்கு அடிப்படை திருக்குறள் சிந்தனைகளே.

தமிழ் மறை:

தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக தோன்றிய தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் திருக்குறள் தாக்கத்தினாலாயே நிலைபெற்றுள்ளனர். திருக்குறளின் கருத்துக்கள் உலகத்தையே வலம் வந்து தமிழனின் பேராற்றலை செப்பும் தமிழ் மறையாகும்.
நாம் வாழும் இந்நூற்றாண்டில் திருக்குறள் சிந்தனைகளால் தம் மக்களை நிலைபெறச் செய்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. அவர்தம் வழியில் திருக்குறளை வாழ்வியலாகவே கொண்டு வாழ்ந்து தமிழினத்தையும் திருக்குறளையும் நிலைநிறுத்தியவர் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இந்த மாபெரும் கலைஞர்களை உருவாக்கிய திருவள்ளுவரின் திருக்குறள் அனைத்துமே கலை வாழ்வியல் சார்ந்து உலக மக்களுக்கு வந்துதித்த பெருங்கொடை..

உலகக் கலைஞானி:

உலகப் பெரும் ஞானி திருவள்ளுவர் வாழ்க்கையின் அறச் சிந்தனைகளை மென்மையாகவும், கடுமையாகவும் உணர்த்தியுள்ளார். நணபர்களுக்கு இன்னல் வருமேயாயின் அதை நீக்க மானிட உள்ளம் உணருமாரு உணர்த்தியுள்ளார்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (788)

தான் உடுத்தியிருக்கும் ஆடை தானாக நெகிழ்ந்தால் தன்னுடைய கைகள் உடனே தாங்கி மானம் காப்பதைப் போல் நண்பரின் இன்னல் கண்டு இயல்பாக இடையூற்றை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். திருவள்ளுவர் வாழ்வியல் கலைகள் அனைத்தையும் அறிந்த கலைஞானி என்பதால் மானிட வாழ்வில் தாம் உடுத்தும் உடையைக்கொண்டே மிகப் பெரும் இடையூற்றை நீக்கி மகிழ மானிட சமுகத்திற்கு உணர்த்துகிறார்.

பகுத்தறிவுக் கலைக்கோமான்:

அவரவர் தம் வலிமையை அறிய வலியுறுத்தும் திருவள்ளுவர் வண்ணமயிலின் இறகைக் கொண்டு உணர்த்துகிறார். வண்ணமயிலை எண்ணும்போதே அதனுடைய அழகு மானிட உலகை மகிழச்செய்யும் அந்த மயிலின் இறகின் மென்மையையும் மனிதனின் மென்மையான மானிட வாழ்வையும் ஒப்பிட்டு வாழ்வியல் கருத்தை வழங்குகிறார்.மூடத்தனமாக எதையும் வலிமையறியாமல் செய்யக்கூடாது என்ற பகுத்தறிவுக் கலைக்கோமானாக உணர்த்துகிறார்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (475)

மயிலின் தோகை மென்மையாக இருந்தாலும் அதனை மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும் தாங்கும் வலிமையறியாமல் தாக்கம் விளைவிப்பாரின் நிலையும் அதுதான் என உணர்த்தியுள்ளார். மானிட வாழ்வில் எண்ணற்றோர் தம் வலிமையறியாமலேயே படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உலகில் வாழும் மானிடர்களுக்கு எக் காலத்திலும் உணரும்வண்ணம் வாழ்வியல் உண்மைகளை உணரும் திருக்குறளுக்கு நிகர் வேறேதும் இல்லை.

உலகப் புரட்சிக் கலைஞன்:

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. தனக்காக மட்டுமின்றி அறம் பொருள் இன்பம் என அனைத்தையும் உய்த்துணர்ந்து தம்மையும் உலக மக்களையும் காக்கும் வாழ்வியல் மறையை வழங்கிய காவியக் கலைஞனாக நம் சிந்தையில் திருவள்ளுவர் குடிகொண்டுள்ளார். அந்த வாழ்வு குற்றமில்லாத வாழ்வாக வாழவேண்டும் அப்படி குற்றமேற்படின் அழிந்து போகும் என தீர்வாக கூறுகிறார்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (435)

தவறு நேர்வதற்கு முன்பே குற்றத்தை தடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்க இயாலாதவர் வாழ்க்கை நெருப்பு முன் வைக்கோல் போர் போல அழிந்து விடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய திருவள்ளுவர் இன்று பாடியது போன்று எக் காலதிற்கும் ஒத்தது போன்று பாடியுள்ளார். அவருடைய கலைக் கண் மானிட சமுகம் மீட்சியுற குற்றமின்றி வாழ்வாங்கு வாழ கடுமையின் தன்மையை குறிப்பிட்டு உணர்த்தியுள்ளார்.

பேருழைப்புக் கலைஞன்:

உழைப்பையும் முயற்சியையும் திருவள்ளுவர் மானிடத்தின் உயிராக உணர்த்தியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே முயற்சியும் உழைப்புமே நற்பயனைத் தரும் என வலியிறுத்தியுள்ளார்.அக் காலத்திலும் இன்றும் பண்டாரங்களாகவே வாழ்ந்து எந்த உழைப்பும் இன்றி வாழ்வோரைச் சாடி உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் மகுடமான புரட்சிக் கலைஞனாக உள்ளார். தன்னுடைய வாழ்வியலுக்கே திண்டாடும் பலர் பக்தி என்ற போர்வையில் கடன் பெற்று தம் வாழ்வையே அழித்து பக்தியைப் புலப்படுத்துகின்றனர். தான் எந்தக் காரியத்திற்காக நம்மை அணியப்படுத்தி உலகில் வாழ்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு சோம்பேறிகளாக பக்தி என்ற வலையத்தில் வலம் வருகின்றனர் அவர்களையெல்லாம் தகர்த்து நிலைகுலையச் செய்யும் பேருழைப்புக் கலைஞனாக திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளாக வலம் வருகிறார்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619)

தெய்வத்தை நம்பி மூடத்தனமாக வாழும் பிறவிகளே தங்களின் குறிக்கோளும் முயற்சியும் உழைப்பும் இருக்குமேயானால் வெற்றிபெற முடியும் என பாட்டாளிக் கலைஞனாக திருவள்ளுவர் மெய்சிலிர்க்க வைக்கிறார். உலகில் வெற்றி பெற்ற பெருமக்களின் வாழ்வியலைக் கண்டோமானால் வள்ளுவப் பேராசானின் கருத்தை உணர முடியும்.

அருட் கலைஞன்:

பொருளுடையோர் பொருளை அருள் வழியில் பயன்படுத்தவும் வழிகூறுகிறார். அருளை அன்பு ஈனும் குழந்தையாகக் கண்டு குழந்தையைப் பேணுவதுபோல் அறப்பணீகளை வலியுறுத்தி உலக மக்களிடம் மனித நேயத்தை மீக்கெழச் செய்கிறார். மனிதம் வாழ்விக்க வந்த அருட்கலைஞராக பொய்யாமொழியார் நெஞ்சம் நிறைகிறார்.

அருளெனும் அன்புஈன் குழவி பொருளெனும் செல்வச் செவிலியால் உண்டு (757)

அன்பு என்ற தாய்பெற்ற பிள்ளைதான் அருளாகும். அந்த மழலையை வளர்க்கும் பொறுப்பு செவிலித்தாயாகிய பொருளுக்கு உண்டு. என பொருளுடையோரின் பொறுப்பை உலகுக்கு உணர்த்துகிறார். வறுமை தலைவிரித்தாடும் நம் நாட்டில் பொருளுடையோர் 45 விழுக்காடு உள்ளனர். திருவள்ளுவர் கூறிய மறையை முழுமையாகப் பின்பற்றுவோமானால் நம் நாட்டில் வறுமையை முற்றுமாக ஒழித்துவிட முடியும். பொருளுள்ளவர்கள் செவிலித்தாயாக வலம் வந்தால் அருளாகிய குழந்தை செழிப்படையும்.

இல்லற நல்லறக் கலைஞன்:

இல்லற இன்பத்தை முற்றும் முழுமை உணர்ந்த இல்லறக் கலைஞர் நம் பாட்டன். மானிட வாழ்வில் அறம் பொருள் இன்பம் என பட்டியலிட்டு வாழ்வின் முழுமையை உணர்த்தியுள்ளார்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. (1323)

வாழ்விணையரின் காதலை உணர்த்தும் திருவள்ளுவர் நீரும் நிலமும் கலந்தமையைக் குறிப்பிடுவது இல்லறத்தின் நல்லறக் கலைஞராக நிலைபெறுகிறார்.இல்லற இணையர் காணும் இன்பம் புத்தேள் உலகத்திலும் இல்லை என அறுதியிட்டுக் கூறுகிறார்.

முடிவுரை:

உலகமக்களின் நலனுக்கு வாழ்பவர்கள். உள்ளத்தாலும் செயலாலும் உண்மையாக வாழ்பவர்கள் உலக மக்களின் நெஞ்சங்களில் என்றும் வாழ்வர். உலகப் பொதுமறை வழங்கிய பொய்யாமொழியார் இன்றும் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்துள்ளார். மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெருமக்கள் வள்ளுவப் பெருமான் குறள்போல் நிலையாக வாழ்ந்து வருகின்றனர்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன். (294)

உளத் தூய்மையாக சொல்லும் செயலும் ஒன்றாக தூய்மையான வாழ்வு வாழ்பவர்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்வான் என உண்மையை உலகோர் பின்பற்ற பதியம் போட்டுள்ளார் திருவள்ளுவர்.

Wednesday, November 10, 2010

என்றும் ஆளும் அன்னை சேது




அன்னை சேதுமதியின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2010 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்,கணேசுக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளஞ்செம்பூர் பேரூராட்சி தலைவர் காயாம்பு தலைமையில் தொழிலதிபர் கந்தசாமி, கவிச்சிங்கம் கண்மதியன், முனியாண்டி, செந்தமிழ்ச்செழியன், மோ.அன்பழகன், செல்லம் பூசாரி, கருப்பண் கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் சென்னைமாநகரத் தந்தை சா.கணேசன் நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் வரவேற்றார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் மாலதிமுருகேசன் குத்துவிளக்கேற்றினர். சானகிசக்திவேல் இராசேசுவரி கோபிநாதன் அன்னையின் பதிகப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர் நன்றிபாராட்டினார்.

6-11-2010 அன்று மாலையில் அபிராமம் பேரூராட்சி மண்டபத்தில் தமிழ் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பெருங்கவிக்கோ வா.மு.சே.அறிமுகவுரை ஆற்றினார். மாண்புமிகு அமைச்சர் சுப.தங்கவேலனார் அன்னை சேதுவின் திரூஉருவப் படத்தை திறந்துவைத்து மூன்று அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார் ஆசிரியர் பாலகுருசாமி, செல்வி பாலமீரா,சனாப் இத்ரீசு மற்றும் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் சென்னைமாநகரத் தந்தை சா.கணேசன் நிறைவுரையாற்றினார். வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். அதுபோது அவர் குறிப்பிட்டடதாவது

அன்னையின் நினைவாக ஆண்டுதோரும் தமிழ் அறிஞர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்கிவருகிறோம். 2006ஆம் ஆண்டு மதுரை மார்சல் முருகன், சென்னை கவிக்குயில் பொன் ஐயனாரப்பன் 2007ஆம் ஆண்டு காரைக்குடி பொற்கிழிக்கவிஞர் அரு சோமசுந்தரம், சென்னை கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், 2008ஆம் ஆண்டு முதுபெரும் கவிஞர் பழநி இளங்கம்பன், நாகர்கோயில் பெரும்புலவர் பெருமாள், சென்னை எழுகதிர் கவிச்செம்மல் அரு.கோபாலன், இராசபாளையும் பாவாணர் கோட்ட புலவர் நெடுஞ்சேரலாதன் திருவில்லிபுத்தூர் சிவ.வே.மோகனசுந்தர அடிகளார் 2009ஆம் ஆண்டு கம்பம் மேனாள் இயகுநர், வே.தில்லைநாயகம், மதுரை சமூகக் காவலர் நவமணி, சென்னை இலக்கியச்சுடர் மூவெந்தர் முத்து, நடைப்பயண அரிமா நெல்லை இராமச்சந்திரன் விருதும் ரூ.10,000 பொற்கிழியும் பெற்றுள்ளனர்.

இவ்விருதினை சேது அறக்கட்டளையின் சார்பில் வழங்குவதை பெரும்பேறாகக் கருதுகிறோம். இவ்வாண்டு விருது வழங்க குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் வருகை தந்துள்ளார். மாண்பமை முதல்வர் தலைவர் கலஞரின் வழியில் அயராத மக்கள் தொண்டில் தன்னை ஒப்படைத்த இம் மண்ணின் நாயகர் தங்கவேலனார் கரத்தில் அறிஞர் பெருமக்கள் விருது பெறவுள்ளனர்.

2010ஆம் ஆண்டு மூன்று பெருமக்களுக்கு விருது வழங்க முடிவெடுத்தோம். முதலாவதாக முத்துவிழாக் காணும் நாயகர், பேரறிஞர் அண்ணா அவ்ர்களால் திராவிட நாட்டில் 1963ஆம் குறிபிடப்பட்ட 252 பெயரில் 7 பெருமக்கள்தான் உள்ளனர் அவர்களுள் ஒருவர் சா.கணேசன் அவர்கள்.சென்னை மாநகரதின் மாநகரத் தந்தையாகப் பொறுப்பேற்று 40 ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் சா.க அவர்களை மேயர் என்றே அழைக்கின்றனர். இன்னார் இனியார் எனப் பாராமல் தொண்டாற்றும் பெருமைக்குரிய பெருந்தகை.சென்னை தியாகராய நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பன்னாட்டுத்தமிழுறவு மன்றப் பணிகளுக்கு தந்தையின் தோளோடு தோள் நின்று தொண்டு செய்யும் செயல் மறவர். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டிற்கு தம் சொந்த செலவிலேயே பங்கேற்று மாநாட்டிற்கு பெருமைசேர்த்த பண்பாளர்.

இரண்டாவதாக விருது பெறுபவர் கவியரசு செந்தமிழ்ச்செழியன்.புலவர் செந்தமிழ்ச் செழியனாரின் இடிமுழக்கம் நூலைப் படித்தால் பாவேந்தர் கவிதையோ என்று எண்ணும் அளவிற்கு தமிழ் உணர்ச்சி பொங்கி வழியும். சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி தமிழுணர்வுப் பெருமக்களை உருவாக்கியவர்.மிகச் சிறந்த நடிகர் பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்தவர். பட்டிமன்றப் பேச்சாளர். அருமைத்தந்தையரின் சேது காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பெருமைக்குரிய பெரும்புலவர். புலவர்களுக்கேயுள்ள அறிவுச் செருக்கோடு வாழும் செயல் வல்லார்.

மூன்றாவதாக விருதுபெறும் பெருமைக்குரியவர் தூத்துக்குடி மோ. அன்பழகன். சுழழும் தேனீயைப் போன்று பணியாற்றும் தமிழ்த்தொண்டர். தூத்துக்குடி பன்னாட்டுத்தமிழுறவு மன்றக் கிளையின் செயலாளர்.அருமைத் தந்தையார் 1993 ஆம் ஆண்டு நடப்பயணத்தைத் தொடந்து 18 வருட ஊர்திப் பயணங்களுக்கு துணைநின்ற செயல் மறவர். சிறந்த எழுத்தாளர். திருக்குறள் கட்டுரைகள் பல படைத்த படைப்பாளி.

ஆண்டநாயகபுர மண் எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண். உலகத்திற்கே இரு பெருமக்களை முத்து இராமாயி மூலம் வழங்கிய மண். ஒருவர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். உலகின் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்ற தமிழ்த் தொண்டாற்றும் உலகத் தமிழ்த் தூதுவர். இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியில் இந்திய மக்களுக்குப் பாடுபட்டுப் பணியாற்றி காலமான வா.மு முத்துராமலிங்கம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

என்ற குறளிற்கேற்ப அன்னையின் நினைவையொட்டி அங்கு வாழும் மக்களோடு உணவுண்டு மகிழ்ந்தோம்.

அருமைத்தாயர் சேதுமதி அவர்கள் தந்தையாரை மணமுடித்து மருமகளாகக் குடியேறிய மண் இந்தமண். இங்குள்ள நத்தம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். நானும் இங்கு அன்னையிடம் மாணவனாக இருந்த மண் இந்தமண்ணில் தாயிடம் பயின்றவர்கள் இன்னும் நினைவோடு கூறுவது மகிழ்வாக இருக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்திலும் வெற்றிகண்டு இராமநாதபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து சென்னைக்குச் சென்று தந்தையாரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிராக இருந்தவர். ஐந்து மக்களைப் பெற்றெடுத்து ஐவரையும் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறள்வழி இந்தச் சமூகத்துக்கு வழங்கிய அன்னை சேதுமதி.

வாழ்க அன்னையின் புகழ்
வளர்க அறக்கட்டளையின் தொண்டு.

Tuesday, October 12, 2010

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேதுமதி அம்மையார் நான்காம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்

வாழ்க பெருங்கவிக்கோ
கவிஞர் இரா.இரவி

சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்
வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார்

இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்
இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர்

சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்
சேது சமுத்திரத் திட்டத்தை மதியில் வைத்து உள்ளார்

தமிழுக்காக நடைப்பயணம் நடந்த வேங்கை
தமிழுக்காக உரக்க குரல் கொடுக்கும் சிங்கம்

இவர் மீசையின் நிறம் வெள்ளை அளவு பெரிது
இவர் உள்ளமோ வெள்ளை மனமோ பெரிது

மரபு க்கவி புனைவதில் மாபெரும் வல்லவர்
மரபு க்கவி மறையாமல் காத்து வருபவர்

பெருங்கவிக்கோ வெற்றிக்கு அவரது துணைவி
அன்னை சேதுமதி முன் நின்றார்கள்

மனைவி இறந்தவுடன் மறுமணம் புரியும் காலத்தில்
மனைவி இறந்தவுடன் ஆலயம் கட்டி வணங்கும்

பெருங்கவிக்கோ வாழ்க பல்லாண்டு

Wednesday, October 6, 2010

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் ‘ பாருலாப் பாக்கள்’ நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையத்தள வலைப்பூ அறிமுக விழா





பெருங்கவிக்கோமுன்னிலையில்,மேயர்மா.சுப்பிரமணியன் வலைப்பூவைத் திறக்க தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது


பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் பாருலாப் பாக்கள் நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையதள வலைப்பூ அறிமுக விழா 4-10-10 சென்னையில் கன்னிமாரா நூலக அண்ணா அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

சென்னைமாநகரத் தந்தை வணக்கத்திற்குரிய மா.சுப்பிரமணியன் தமிழ்ப்பணி பிளக்சுபாட் வலைப்பூவை திறந்து வைத்துப் பேசினார். வலைப்பூவில் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது கண்டோர் மகிழ்சிப் பெருக்கில் கரவொலி எழுப்பினர். விழாவிற்கு சா.கணேசன் தலைமை தாங்கினார். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முன்னிலை உரையாற்றினார். கவிமுரசு திருவள்ளுவரின் பாருலாப்பாக்கள் நூலை இலண்டன் கவிஞர் கருணானந்த ராசா வெளீயிட தமிழ் வள்ளல் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் மறைமலை வலைப்பூ பயிற்சி பட்டறையை சிறப்புடன் நடத்தினார்.அவர் அவர் உருவாக்கிய 31 பாவேந்தர் பர்ம்பரைக் கவிஞர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தி உரையாற்றி காணொலியில் காட்டினார்.

கணித்மிழ்ச் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர். இரா.கருணாநிதி,வாழ்த்துரை வழங்கினர். கவிச்சிங்கம் கண்மதியன் வரவேற்புரையாற்றினார். திருக்குறள் மு.வேங்கடேசன் நன்றி நவின்றார். கவிமுரசு வா..மு. சே. திருவள்ளுவர் ஏற்புரையாற்றினார்.

Sunday, October 3, 2010

காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்



காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மாமன்னர் இராச ராசன்
மதிநுட்ப தமிழர் வேந்தன்
தேமதுரத் தமிழின் மேன்மை
தேசமெலாம் வணங்கும் சோழன்
பூமணத்து நம்மின் மக்கள்
புத்தமுதக் கலையின் உச்சம்
காமணக்கும் கற்கோயில் கண்ட
காலத்தால் அழியா சோழன்

வீரத்தால் தம்மின் நாட்டை
விண்ணளவு ஏற்றி வைத்தார்
சோராத வேங்கை நாடு
சொந்தமாக கங்கை பாடி
வேராக தடிகைப் பாடி
வேந்தனது நுலம்ப பாடி
மாறாத குடமலை ஈழம்
மதிகொல்லம் கலிங்கம் கண்டான்

பெரியகோயில் லிங்கம் பாரில்
பேரெழுந்த வடிவம் என்னே
உரியநல் கோபுரத் தோற்றம்
உன்னத வானை முட்டும்
இருநூற்றுப் பத்தும் ஆறும்
இறுமாந்த எழிலைக் காட்டும்
கருங்கல்லில் அடுக்கின் ஏற்றம்
கவின் பதிமூன்று அன்றோ

ஆயிரத்து ஆண்டின் முன்னே
அகிலத்தை ஆண்ட வேந்தன்
மாயிரத்து ஐப்பசி திங்கள்
மாமண்ணில் உதித்த மன்னன்
பாயிரம் அற்றை நாளில்
பாடிய கரூர் தேவன்
மாஇனத்து வேந்தன் வாழ்வை
மாத்தமிழில் செதுக்கி உள்ளான்

தகதகக்கும் ஐம்பொன் மேனி
தவவேந்தன் இராச ராசன்
புகழ்காத்த உலகமா தேவி
புண்ணியச் சிலையின் தோற்றம்
அகமதாபாத் அருங்காட்சி மன்றம்
அடங்கியுள இணையர் தம்மை
மக்த்தான முயற்சி கண்டு
மாக்கோயில் உள்ளே காண்போம்

மெய்கீர்த்தி தம்மின் வாழ்வை
மேதினிக்கே தந்து சென்றோன்
பொய்யறியா நம்மின் மக்கள்
போற்றிடும் வரலாறு தந்தோன்
செய்வதை உணர்ந்து வெல்லும்
செயல்வல்லார் கலைஞர் வேந்தர்
மெய்வடிவாய் ஆயிரம் ஆண்டை
மேற்கொண்டார் நீடு வாழ்க

Wednesday, September 22, 2010

பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்


பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்

சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் எனக்குத் தெரிந்தவரை கவிஞராகவே அறிமுகப்படுத்தப்பட்டவர். பாடசாலை விழாக்களில் அல்லது எமது சனசமூக நிலைய ஆண்டுவிழாக்களில் தனது பேச்சாற்றலால் கவிவல்லமையினால் சமய சொற்பொழிவுகளாலும், கவியரங்கங்க‌ளாலும் அலங்கரித்தவர். நாடகம், கவிதை இலக்கியம், சமயம் எனத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வாழ்ந்த சமூகத்தையும் வாழ்ந்திடச் செய்த ஒரு சமூக யோதி. ஆசிரியராக, அதிபராக தன்னை உயர்த்திக் கொண்டாலும் ஒரு நாடக ஆசானாக, கவிஞனாக எமக்கு அறிமுகமான அவரின் ‘பாடுமனமே’ கவிதைநூல் என்னை முழுமையாக ஆகர்சித்ததாகும்.

இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருக்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர், எனப்பட்டங்கள் இருந்தும் மதுரகவி எனவே ஈழத்தில் அறிமுகமானவர்.

இவர் ஆரம்பக்கல்வியை நுணாவில் கணேசவித்தியாலயம், சாவகச்சேரி றிபேக்கல்லூரி ஆகியவற்றிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். கூடவே நாடகம் கல்வி சார்ந்த டிப்புளோமா கற்கை நெறிகளையும் கற்றுத் தனதாக்கிக் கொண்டார்.

இவர் மாத்தளை புனிதத்தோமையர் கல்லூரியில் கற்பித்த காலத்தில் கல்லூரி இலக்கியவட்டம், மாத்தளை இலக்கியவட்டம் ஆகியவற்றில் அதிக பங்காற்றினார். புவியியல் பட்டதாரியான இவர் மேற்படி கல்லூரியில் சிறந்த ஆசிரியராக மாணவராலும், ஆசிரியராலும் போற்றப்பட்டார். மலையகம் சார்ந்த அனைத்து இலக்கிய, சமய நிகழ்வுகளில் தன்னை ஆத்மாத்தமாக அர்ப்பணித்துக் கொண்டவர். பின்னர் வயாவிளான் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றியபின் யோகபுரம் மகாவித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக்கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிய காலத்தில் குரும்பசிட்டி சர்மார்க்க சபை சார்ந்த இலக்கிய நண்பர்கள். குலாம் இணைந்ததால் பின்னாளில் ரசிகமணி கனகசெந்தில்நாதன் அவர்களின் அபிமானத்திற்கு உரியவரானார். 1980ல் நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக தென்னாபிரிக்கா சென்று ஆசிரியராகக் கடமை புரிந்தார். 1988 முதல் இன்றுவரை கனடாவில் வாழ்ந்து வரும் கவிஞர் அருணோதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட ‘பூச்சொரியும் பொன்னொச்சிமரம’ (2000) தொகுப்பில் எழுதிய கனடாவில் சைவசமயம் என்னும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

நுணாவில் என்றதுமே என் உறவுசார்ந்து என் இலக்கிய உலகம் சார்ந்து ஒரு தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய, இலங்கை இராணுவ நகர்வின் போதும் எம்மை ஆதரித்த ஒரு கிராமமாகவும் நுணாவில் எம்முள் வாழ்கிறது.

ஈழத்துக்கவிதைக் கனிகள்(1991) என்னும் நூலில் நான் பிறந்ததும் ஏதுக்கே! எனும் கவிஞரின் கவிதையை சிலோன் விஜஜேந்திரன் சேர்த்துள்ளார்.

ஆசிரியரின் நூல்களாக 110 ரூபாய் (1954), இலக்கிய உலகம் (1964), ஏன் இந்தப் பெருமூச்சு (1965), கூனியின் சாதனை (1966), கீரிமலையினிலே (1969), நுணாவிலூர் (1971), நல்லூர் நாற்பது (1971), பாடுமனமே (1972), உய்யும் வழி (1972), பரீட்சையில் சித்தியடைவது எப்படி? (1972) கவியரங்கில் கந்தவனம் (1972), இலங்கையில் ஆசிரியத்தொழில் (1977), விநாயகப்பா (1993), ஒன்றுபட்டால் (1994), மணிக்கவிகள் (1994), இயற்கைத்தமிழ் (1995), எழுத்தாளன் (1995), முத்தான தொண்டன் (1995), புதிய சைவ விநாவிடை (1997), தங்கம்மா நான்மணி மாலை (1997). பத்துப்பாட்டு (1998). ஆறுமுகம் (1998), ) சிவபுராணத் தத்துவம் (1998), கனடாவில் சைவசமயம் (2000), அது வேறுவிதமான காதல் (2001), சிவ வழிபாடு (2001), புதிய சைவ வினாவிடை- 2 (2001), கந்தன் கதை (2002), ஓ கனடா (2002), வரிக்கவிகள் (2002), குருவழிபாடு (2002), விநாயகப் பெருமானும் அகத்தியரும் (2003), முருகப்பெருமானும் அவ்வையாரும் (2003), விநாயக வெண்பா (2004) விநாயக விருத்தம் (2004), பொங்கு தமிழ் (2005), கவிதை மரபு (2005), தென்னகத்தில் என்னகத்தார் (2007), பாவாரம் (2007) எனத் தொடர்கிறது. கூடவே பல தொகுப்பு நூல்களின் வெளியீட்டிலும் அக்கறை காட்டி வருகிறார்.

இவரின் பவளவிழா சிறப்புற காற்றுவெளி சார்பில்லும் வாழ்த்துகிறோம்.

கவி‍-முல்லை அமுதன்

Thursday, September 9, 2010

தடைகள்

சென்னை சாசுத்தா பொறியியல் கல்லூரியில் 9-9-2010அன்று கல்லூரியின் டீன் முனைவர் வைத்தியநாதன் தலைமையில் அரிமா கோசுவாமி முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை

மனித சமுதாயத்தில் செய்தித் தொடர்புத் தடைகள் ஏராளமாக உள்ளன. தடைகளினாலேயே பல்வேறு வளர்ச்சிகள் தடைபட்டும் நிறகின்றன.மனித சமூகத்தில் வளர்ச்சிக்கான தடைகள் சாதி மதம் இனம் மொழி நாடு உலக மாந்தர்கள் ஒருகுடைக்கீழ் வாழ்வதற்கு தடையாகவே உள்ளது.

உலகின் மாந்தர்கள் வாழ்வதற்கும் மற்றவர்ளை உயர்த்தி தானும் உயரவே பிறப்பெடுக்கிறார்கள். பிறக்கும் குடி, சமூகம், நாடு போன்ற சூழல்களே அவர்களை வழிப்படுத்துகின்றது. பிறகு கல்வி கடமைளை உணர்ந்து தன் நாட்டிற்கும் மனித சமூகத்திற்கும் தொண்டு செய்கிறான்
.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்ற குறள்வழி வழி வழி வரும் மனித சமுகம் தன்னுடைய அறிவால் ஆற்றலால் மனித குல வளர்ச்சிக்கு வித்தாகிறான். அந்த வித்துகள் எல்லாம் விருட்சமாகி உலகின் பல்வேறு துறைகளும் வளர்சியின் சிகரத்தை அடைந்துள்ளன.

இன்று இணைய தளமும், கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்புகள் உலகத்தை நம் கைக்குள் கொண்டு வந்துள்ளது. உலகின் எப்பகுதியில் எது நடந்தாலும் நொடியில் அறியக் கூடியா வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தற்போது வாழும் தலை முறை தகவல் தொடர்பால் தலைநிமிர்ந்து நிற்கும் தலைமுறை.

சங்க கால புறநாநூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றனார்

”யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என உலகத்து மக்களையெல்லாம் உறவினர்களாகவே கருதியுள்ளான். மனித குலத்தில் பிறந்தவர்கள் அனைவரும் நம் சுற்றத்தாரே. நாம் காணும் இன்பமும் துன்பமும் அவரவர் செயர்பாட்டு வினைகளே என்று ஆணித்தரமாக எழுதிச் சென்றுள்ளனர். இன்றுள்ள தகவல் தொடர்பையே நன்மைக்குப் பயன்படவேண்டியவற்றை தீய வழிகளிலும் பயன்படுத்துவதை அன்றாடச் செய்திகளில் காண்கிறோம்..

உலகின் வளர்ச்சியும் முன்னோர்களின் கருதுக்களும் கொட்டிக் கிடந்தாலும் மனிதன் பல்வேறு தடைகளுக்கு ஆளாகிறான். பரந்துபட்ட உலகில் வளர்ச்சியையும் இலட்சியத்தையும் நோக்கிச் செல்பவனுக்கு பல்வேறு தடைகள் வரும் அதைத் தகர்த்தெறிந்து செல்பவனே வெற்றியாளனாக வலம் வருவான்.

வளர்ச்சிகு முதல்தடை தன்னம்பிக்கை இன்மையே. என்னால் முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் வரவேண்டும்.அந்த நம்பிக்கையே அவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒருசெயலைச் செய்யும் நிறை குறைகளை முற்றும் அறிந்து தொடங்க வேண்டும். தொடங்கியபின் அதன் நிறைவேற்ற செயலாக்கம் காண்பதே சிறந்த வழி என்கிறார் திருவள்ளுவர்.

மிகச்சிறந்த அறிவாளியாக இருப்பார்கள் மனித உறவில் இறுக்கமாகக் காணப்படுவார்கள். வளர்சிக்குப் இது ஒரு பெரும் தடை. சக மனிதர்களை புன்முறுவல் பூக்கக் கூட மறுப்பது பெரும்தடை. குழு உணர்வோடு செயல்பட இவர்களால் இயலாது புண்ணகை என்பது மனிதர்களால் மட்டுமே உரிய ஒன்று அது மனித உறவைப் பேணும் மந்திரம். இந்தியன் வானுர்தில் விற்பனை மேலாளரகப் பணியாற்றிய சந்திரன் என்பவர் என் கண்முன் வருகிறார் 30 ஆண்டுகளுக்கு முனபு என் தந்தை பெருங்கவிக்கோ அவர்கட்கு உலகப்பயணத்திற்கு பயணச்சீட்டு வாங்க சந்தித்தோம்.சந்திரன் முகம் சிரித்தால் மல்லிகை மலர்தோட்டம் போன்றே இருக்கும் அவர் அமரராகிவிட்டாலும் இன்றும் என் நினைவில் நிற்கிறார்.

தான் எண்ணியதைத் சொல்லத் தயங்குதல் ஒரு பெரும் தடை. நாம் கூறும் கருத்து தவறாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்வதற்கு அச்சப்படக் கூடாது. தாங்கள் எண்ணியிருக்கும் கருத்தைக் கூறாமல் இருந்தால் தவறான கருத்தே தங்களிடம் நிலைகொண்டுவிடும்.

நல்ல செயல்களைச் செய்யும் மனிதர்களைப் பாராட்டாமல் இருப்பது ஒரு தடை. நம்மில் ஒருவர் சிறந்த செயலாக்கம் காணும் போது அவரை மனம் திறந்து பாராட்டவேண்டும். பாராட்டே அவர் மேலும் துறையில் மேம்பட மாமருந்தாக இருக்கும். துறை மேம்படும்போது வளர்ச்சியைக் காணலாம்.

நாம் செய்த செயல்களை விளக்கக் கூடிய ஆற்றலின்மை பெருந்தடையாகும். அதற்கு மொழியும் பெருந்தடையாக இருக்கும். தமிழ் மக்கள் கூடியுள்ள பகுதியில் ஆங்கிலத்தில் பேசுவதும்.ஆங்கிலத்தில் பேசவேண்டிய இடத்தில் மறுப்பதும் பெரும் தடையாகும். உலகின் தொழில் வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கும் சப்பான் சப்பானிய மொழியையே அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்துகின்றனர். உலகின் எம் மொழியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தலூம் அடுத்த சில மணிநேரங்களில் சப்பானிய மொழியில் அரசே சப்பானிய மொழியில் மொழிபெயர்த்து சப்பானிய மக்களுக்கு வழங்குகிறது.வளரும் நாடுகளில் மொழி ஒரு தடைக்கல்லாகும்.

நம்மைப் போன்ற நாடுகளில் ஏழ்மையும் மிகப்பெரும் தடைக்கல்லாகும். இந்தியாவில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் எல்லாம் உயர் கல்வி பயில இயாலாமல் சிதைந்து போகின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஏழ்மை மாணவர்கள் அறியாத காரணமும் ஒன்றாகும்.ஏழ்மை மாணவர்களுக்குள்ள உரிமைகள் தகுந்த காலத்தில் அறியாமையும் தடையே.

மிகப் பெரும் தகவல் புரட்சி வந்துள்ள காலத்தில் அதைப்பற்றி அறியா மை மிகப் பெரும் தடைக்கல்லாகும். அறியாமை என்ற பேதமை நம்மைப் பின்னோக்கித் தள்ளும்.
யாம் எந்த கருத்து குறித்து பேசுகின்றோமே அது குறித்தே பேச வேண்டும் அதைவிடுத்து தேவையற்றவற்றை பேசுவதும் ஓரு தடைக்கல்லாகும்.

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.

என திருவள்ளுவர் பயனுடைய சொல்லைப் பேசாமை மடமை எனக் கூறியுள்ளார்.

மாணவச் செல்வங்களே தடைகளையெல்லாம் தகர்த்து நம் நாட்டின் தளபதிகளாக உயர்ந்து உங்களை பல்வேறு இன்னல்களில் பெரும் பொருட்செலவில் படிக்கவைக்கும் பெற்றோர்க்கும், நயமான கல்வி வழங்கும் கல்லூரிக்கும், நம் நாட்டுக்கும் பெருமையை நிலை நாட்டுங்கள்.

Wednesday, September 1, 2010

சென்னை அருள்மிகு ஓம்சக்தி இசக்கி அம்மன்


சென்னை அருள்மிகு ஓம்சக்தி இசக்கி அம்மன் திருவிழாவில் 23-7-210 அன்று நடைபெற்ற கவியரங்கில் கவிமுரசு வா.மு,சே,திருவள்ளுவர் வழங்கிய நிறைவுக் கவிதை

தொன்மை என்று என்றே
தொடங்க மறுத லிக்கும்
உண்மை மொழியாம் எங்கள்
உயிராம் மெய்மொழித் தாயே
தன்மையால் செம்மொழிப் பேறாய்
தமிழர் தவத்தால் தோன்றி
தோன்றிய முன்னோர் எண்ணி
தொடர்ந்தே வணங்கு கின்றேன்

எண்ணிய முடிக்கும் ஆற்றல்
எழில்ஆறு முகனார் வாழ்க
திண்ணிய நெஞ்சம் கொண்ட
தெளிந்தநல் முருகேசன் வாழ்க
கண்ணிய கடமை நெஞ்சர்
கவின் பஞ்சநாதம் வாழ்க
புண்ணியப் பணிக்கு வந்த
புகழ்மிகு மக்காள் வாழ்க

வான்புகழ் கலைஞர் கோமான்
வழியினில் என்றும் வாழும்
வண்டமிழ் கவிஞர் எங்கள்
வள்ளியின் மைந்தன் வாழ்க
ஊனினை மறந்து எம்கோ
உலகிடை நடந்த போதே
தோணியாய் வந்த எங்கள்
தொண்டர் கலையரசன் வாழ்க

எண்ணெயும் திரியும் போன்றே
எழில்மிகு கவிஞர் வாக்கை
நுண்ணிய மதியால் கேட்கும்
நுட்பநல் மக்காள் வாழ்க
அன்னையின் புகழைப் பாட
அறிந்துள அறிவை எல்லாம்
அன்பினால் ஒன்றாய்க் கூட்டும்
அரங்குள கவிஞர் வாழ்க

கோயிலைக் கட்டும் நம்மோர்
கருவறை வெளியில் தானே
நோயினை நீக்கிய நம்மின்
நிலைபுகழ் இசைக்கி அம்மன்
மாபுகழ் கோயில் கட்டி
மாட்சியாய் உள்ளே உள்ளான்
நாபுகழ் இசைக்கி அம்மன்
நன்நிலை அருளே போற்றி

தகுதியைக் கண்டு நாளும்
தக்கோரைத் திரட்டி நன்றாய்
மிகுதிநிலை உணர்ந்து எண்ணும்
மீட்டெழும் மக்கள் சக்தி
பகுதியென பக்கம் எல்லாம்
பக்தியெனும் பெரும் பேற்றால்
விகுதியென நற்பண்பு நாட்டி
விரிந்துஎழும் நற்றாயின் சக்தி

இல்லோர் இருப்போர் எலாம்
இன்றுலகில் இணைந்து வாழ
தொல்லைகள் மறந்து வாழ்க்கை
தடத்தினிலே காணும் சக்தி
பல்லக்குத் தூக்கும் மாந்தன்
பல்லிளித்து கீழே வீழா
தொல்லுலகம் நிமிர்ந்து வாழ
தோன்றிஎழும் உறவுச் சக்தி

நாட்டிலிளோர் ஒன்றாய்க் கூடி
நயத்தகு புகழும் வாழ்வை
போட்டியின்றி இணைந்து வாழ
பொன்னான அன்பு சக்தி
காட்டில்வாழ் மாக்கள் போன்றே
கருணையை மறந்து நம்மில்
கேட்டினை என்று,ம் நாடா
கேவலம் போக்கும் சக்தி

மீட்டெழும் நாதம் போன்றே
மிகுந்திடும் பொருளை ஈந்து
ஓட்டிடும் வறுமை நீக்கி
ஒற்றுமை நாட்டும் சக்தி
பாட்டுளநல் பொருளை எண்ணி
பண்புளநல் மாந்தர் ஆக்கும்
தோட்டமும் மலரும் பூவாய்
தோன்றிய மக்கள் சக்தி

வழிவழி நம்மின் முன்னோர்
வாஞ்சையாய் நம்மைக் கூட்ட
பழியிலா வாழ்க்கை வாழ்ந்து
பாண்மையை செப்பும் சக்தி
விழியது இமையைக் காக்கும்
விண்மீனை வானம் தாங்கும்
உளியது செதுக்கும் வாழ்க்கை
உள்ளொளி வழங்கும் சக்தி

நல்லதை நினைத்து என்றும்
நாளெலாம் உழைத்து வாழ்தல்
அல்லதை நீக்கி ஆன்றோர்
அறவழி ஆற்றும் சக்தி
முள்ளுமே மலரைக் காக்கும்
முறைவாழ்க்கை குடியைக் காக்கும்
சொல்லுமே பாவைக் காக்கும்
சொந்தமாய்க் காக்கும் சக்தி

Thursday, August 19, 2010

நிதம்பாடும் வானம்பாடி இகேதா வாழி

நிதம்பாடும் வானம்பாடி இகேதா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


புத்தனைக் கண்ட தில்லை
புரியுமன ஞானத் தேடல்
சித்தமுடன் உலகை ஆளும்
சீராளன் வழியில் இகேதா
வித்தகன் விரிஉலக மன்றம்
விரிவாக்க கவிச் சித்தன்
நித்தமும் அமைதி வேண்டி
நிதம்பாடும் வானம் பாடி

கவிதையாம் களத்தில் கண்டார்
கவிஞானி சீனீ வாசன்
புவித்தலத் தொடர்பை நாட்டி
புத்தெழுச்சி இகேதா தந்தார்
தவித்தாரைத் தாங்கி நிற்கும்
தலம்வெல் பத்ம நாபர்
குவித்தபுகழ் பெருங்க விக்கோ
குவலயம் கண்ட இகேதா

கொத்துக் கொத்தாய் மாய்ந்த
கொடுமை நாகசாகி கிரோசிமா
செத்ததுவும் பவனி வரும்
செழுமைவளர் சப்பான் மண்ணில்
புத்தமுதாய் வந்த அண்ணல்
புரிஞான வள்ளல் கோவாம்
எத்திக்கும் புகழ் ஓங்கும்
ஏந்தலாம் இகேதா வாழி

போங்சாய் வளர் நுட்பம்
பொதியும் தனிச் சான்றாய்
எங்குமே பரவி நிற்கும்
எழுச்சியாம் சோகா கக்காய்
தங்குதடை துன்பம் எல்லாம்
தகர்த்துஎழும் இன்பம் இகேதா
பொங்கும்நற் கல்வி ஞானம்
போதிக்கும் ஞானி இகேதா

Monday, August 16, 2010

உலகத் திருமறை திருக்குறள்


உலகத் திருமறை திருக்குறள்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர், தமிழ்ப்பணி

[சென்னையில் குட்செப்பர்டு பள்ளியில் 15-8-2010 அன்று நடந்த விடுதலை நாள் விழாவில் திருக்குறள் அரங்கிற்கு தலைமையேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வழங்கிய உரை]

திருக்குறள் உலகின் ஒப்பற்ற மறை நூல். 2041 ஆண்டுகட்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் உலக மானிடத்திற்கு திருக்குறளை அர்ப்பணித்துள்ளார். அறம் பொருள் இன்பம் என முப்பாலில் திருக்குறள் உள்ளது,.அறத்துப்பாலில் 39 குறள்களும் பொருட்பாலில் 56 குறள்களும் இன்பத்துப்பாலில் 38 குறள்களுமாக மொத்தம் 133 அதிர்காரங்களில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என 1330 திருக்குறளில் உள்ளது.

திருக்குறள் குறள் வெண்பா என்ற பாவடிவில் உள்ளது.இண்டு அடிகளில் குறளை இயற்றியுள்ளார். முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் மொத்தம் ஏழு சீர்களில் ஒரு குறள் உள்ளது. வடிவில் சிறிதாய் இருந்தாலும் பொருள் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைப்பது.

திருக்குறளுக்கு 20 நூற்றாண்டுகளாய் அறிஞர் பெருமக்கள் 500 உரை நூல்களுக்கு மேல் எழுதியுள்ளனர். காளிங்கர், மனக்குடவர், இறையனார், பரிமேழழகர், குறிப்பிடத்தக்கவர்கள். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் உரை எழுதியுள்ளார்.அறிஞர் மு.வ, கப்பலோட்டிய தமிழன் வ..உ.சி .பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் போன்ற பெருமக்களும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர்.

திருக்குறள் அனைத்து மக்களுக்கும் பொதுவானது திருக்குறளை 130க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். திருக்குறளை சி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சி.யூ.போப் அவர்கள் தம் கல்லறையில் ”தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்” எனப் பொறிக்கப் பணித்தார். இன்றும் இலண்டனில் உள்ள கல்லறையில் இந்த வரிகள் உள்ளன. யான் இலண்டன் சென்றபோது அந்தத் திருவாசகத்தைக் கண்டேன் திருக்குறளும் திருவாசகமும் எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது என்பதை அறியாலாம்,

சீ.யூ.போப் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பை படித்த இரசிய நாட்டு மாமேதை லியோ டாட்ல்சுடாய் காந்தியடிகளுக்கு திருக்குறளின் உலக மகத்துவத்தைப் பற்றி எழுதிஉள்ளார். அண்ணல் காந்தி திருக்குறளை மூல நூலைப் படிப்பதற்காகவே தமிழ்மொழியைப் பயின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிற்ப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

உயிர்கள் அனைத்தும் பிறப்பால் சமமே அவரவர் செய்யும் தொழில் திறமைகளிலே வேறுபடலாம் என மானிட சமூகத்தை சமமாக நோக்குகிறார். இந்தத் திருக்குறள் சொற்றோடரே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சின்னத்தில் திருவள்ளுவர் திருஉருவம் தாங்கி இடம் பெற்றது.

மாணவச் செல்வங்களாகிய தங்கட்கு திருவள்ளுவர்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்கவேண்டிய நூல்களைக் குற்றமில்லாமல் கற்கவேண்டும். கற்ற பிறகு அந்நூல்கள் காட்டிய வாழ்வு நெறியில் நிற்க வேண்டும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

மணற்கேணியை தோண்ட தோண்ட நீர் ஊற்று பெருகுவதுபொல நூல்களைப் படிக்க படிக்க அறிவு ஊற்று பெருகும்.

வாய்மையைப் பற்றி திருக்குறளில் ஒரு குறள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளதுள் எல்லாம் உளன்

நம் திருவள்ளுவரே உண்மை வாழ்க்கை வாழ்ந்தமையால்தான் அவர் உலக மக்கள் உள்ளங்களெல்லாம் வாழ்கிறார். நம் அண்ணல் காந்தியடிகள் தன் வாழ்வையே பொய்மையின்றி நம் மக்களின் வறுமை எண்ணி அரை வேட்டி கட்டிக்கொண்டு நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.ஆதலால்தான் நம் உள்ளங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார்.

அறன் வலியுறுத்தலில் திருவள்ளுவர்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

அறம் என்பது குற்றமில்லாத தூய்மைக் காப்பே. மனத் தூய்மையற்ற அனைத்தும் வெற்று ஆரவார ஆர்ப்பாட்டமே எனக் கூறுகிறார். மனத்தால் தூய்மை இன்றி பொய் சூதுகளோடு வாழ்வோர் என்ன அறம் செய்யினும் ஆரவாரமே.

ஈகையின் சிறப்பைப் பற்றி திருவள்ளுவர்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

பயன் கருதிச் செய்வது ஈகையாகாது. எவ்வித வாய்ப்புமற்ற ஏழை மக்களுக்க்குக் கொடுக்கும் ஈகையே சிறந்ததாகும் கல்வியறிவில்லாத ஏழை மாணவனுக்கு கல்வி கற்ற்பிப்பதும் ஈகையே. இந்த ஈகையே கிறித்துவப் பள்ளிகள் பல் நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றன. அச்சிறுப் பாக்கத்தில் அருட் தந்தை ரெசிசு என்பவர் தன் மறை மாவட்டத்தில் உள்ள நரிகுறவர் பிள்ளைகளைத் தத்தெடுத்து கல்வி, உடை உறையுள் கொடுத்து ஆதரித்தார் இதுவல்லவோ ஈகை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

உணவின்றி பட்டினியால் வாடுவோரின் பசியைத் தீர்க்க பொருள் பயன்பட வேண்டும்.அவ் வயிறே பொருளுடையவன் சேர்த்துவைக்கும் வங்கியாகும்.

வான்புகழ் தந்த வள்ளுவனின் சிலையை மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் 133 அடி சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கட்சென் நதியில் உள்ள சுதந்திரதேவி சிலையைக் கண்டுள்ளேன்.அதே போன்று திருவள்ளுவர் சிலையை முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கடலில் நிறுவிய முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞரை தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றிபாராட்டும். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்து அங்கு 1330 திருக்குறளும் சலவைக் கற்களில் பதியச் செய்துள்ளார்.

பர்மாவில் வள்ளுவர் கோட்டம் உள்ளது. பர்மீயத் தமிழர்கள் யான் அங்கு சென்றபோது திருவள்ளுவர் சிலை முன் திருக்குறள் ஓதி என்னை வரவேற்றனர்.

இசுலாமிய நாடான மலேசியாவில் திருக்குறள் மாநாடு கண்டு தோட்டப்புற மாளிகையில் நிற்கும் நிலையில் திருவள்ளுவர் செம்மாந்து உள்ளார். பத்துமலையில் மலேசியப் பெருமக்கள் திருக்குறளை பதிய வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் வாசிங்க்டனில் அமெரிக்கத் தமிழர்கள் மாநாடு கண்டு திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளனர்.

கனடா,ஐரோப்பிய நாடுகள், தென்னாப்ரிக்கா,உலகின் அனைத்துப் பகுதியிலும் நாள்தோரும் திருக்குறள் சிந்தனைகள் வலம் வருகின்றன.

இந்தியாவின் பலப்குதியிலும் திருவள்ளுவர் சிலை நிறுவி திருக்குறள் சிந்தனைகள் போற்றப்படுகின்றன.

உலகிற்கே வழிகாட்டியாக திருவள்ளுவர் படைத்த திருக்குறள் வழி வாழ்வதே உலகம் உய்த்துணர்ந்து வாழும் நெறியாகும்.

Sunday, August 8, 2010

Woman


Woman
Kavimurasu. Va.mu.se.Thiruvalluvar
Editor: Tamilpani

{சென்னையில் 7-8-2010அன்று உலகக் கவிஞர்கள் சங்கம் நடதிய விழாவில் முன்னாள் ஆளுனர் ஆ.பத்மநாபன்,சப்பானிய அறிஞர் அவுச்சி ஆகியோர் முன்னிலையில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் பாடிய ஆங்கிலக் கவிதை}

Woman is epitome of sacrifice
Woman is rays of hopes
Woman is embodiment of renunciation
Woman is like mother earth who revolves everyday

Woman is wedlock makes mercy
Woman is candle for her better half

By birth she is daughter
By living becomes daughter in-law

She is symphony of beauty
Her beauty is universe
She is an Idol
Who is worshiped as Goddess
She is nucleus in marriage

But she fire walks from epidemic veteran of dowry
She weaves her own modesty
She be a village belly or
Heroine of celluloid

Death cruelty does not spare her
She who learnt the burnt
Of her counterparts hang over

She surrenders to be male during instinct
Same man makes her trading flesh
She who hands on knees with societies mud slimming
She who treated as intoxicant by her fellow man

But she is Holy mother of Andal Mary Fathima Seetha
She who lives in dark with white robe as widows
She who lives as warrior irrespective of her Mr. Non-caliber
She who can rule the country but tires in to domesticity
Victories in societies
Victories in leading nation

All praise to Woman
Woman Woman woman

வாழும் வள்ளுவம் இதழ் திறனாய்வு


வாழும் வள்ளுவம் இதழ் திறனாய்வு
கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 7-8-2010 அன்று அருள்மாமுனிவர் கு.மோகன்ராசு அவர்கள் நடத்திய மநாட்டில் வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை

திருக்குறள் திருத்தொண்டர்கள் வரலாற்று மூன்றாவது மாநாடு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுவது பொன்னொழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். திருக்குறள் பணிக்காகவே தன்னை ஒப்புவித்துள்ள அருள்மாமுனிவர் மோகன்ராசு அவர்களின் பணி இந் நூற்றாண்டின் செம்மாந்த பணியாகும். அவரின் பணிபற்றி தொண்டாற்றும் அனைத்து உள்ளங்களையும் நெஞ்சார[ப் பொற்றுகிறேன்.

அருள்மாமுனிவர் அவர்கள் ஆன்மீகத்தைப் பர்ப்பும் அருட்தொண்டர்கள் போன்றே அனைவரையும் இணைத்து திருக்குறள் அருட் தொண்டர்ளை உருவாக்கி செயலாற்றும் திருக்குறள் தொண்டு தமிழர்களை தலை நிமிரச் செய்யும் பணியாகும்.

திருக்குறள் அறக்கட்டளைகள் 8 தொடங்கியுள்ளார்கள்.திருக்குறள் முனைவர் பட்ட படிப்பைத் தொடங்கியுள்ளார்கள்.திருக்குறள் 6 அமர்வுகளை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள். இறுதியாக திருக்குறள் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.இம்மாநாடு திருக்குறளை தேசிய நூலாக நாம் வேண்டுவதற்கு அரும்பெரும் செயலாக இம்மாநாடு அமைகிறது.

உலகளாவிய பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றிருக்கிறேன். மலேசியாவில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டிற்கு இந்தியச் செயலாளராகப் பணியாற்றி திருவள்ளுவரின் திருஉருவச்சிலையை வி.சி.சந்தோசப் பெருமகனார் வழங்க இசுலாமிய நாட்டில் மலேசியத் தலைவர் டத்தோசிறி சாமிவேலு அவர்கள் திறந்துவைத்தார்கள்.தமிழ் மறவர் பெ.அ. தமிழ்மணி அம் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். ஆயிரம் பக்க அளவில் உலகத் தரத்தில் மலர் வெளியிடப்பட்டது 160 பெருமக்களை தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்றோம்.

மியான்மாரில் தட்டோன் நகரில் உள்ள வள்ளூவள்ளுவர் கோட்டத்தில் பங்கேற்று உரையாற்றியுள்ளேன்.தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையில் துரத்தப் பட்டாலும் திருக்குறள் உணர்வு மங்காத் தமிழர்கள் திருககுறள் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். கோட்டம் உருவாக்கிய மாரிமுத்து காலமாகிவிட்டார். ஆனால் திருக்குறள் ஓதுவார் குருசாமி,சேகர் போன்ற உணர்வாளர்கள் இன்றும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்

சுவிட்ச்ர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் ஈழத் தமிழர் முருகவேள் வள்ளுவன் பாடசாலை என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி நடத்திவருகிறார். திருவள்ளுவர் ஆண்டை ஆண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.பாடசாலையில் பங்கேற்று உரையாற்றியுள்ளேன்.
கனடா நாட்டில் அறிஞர் செல்லையா போன்றோர் டொரண்டோ நகரில் திருக்குறள் மாடாட்டை மிகச் சிறப்பாக நடத்தி அருமைத் தந்தயார் பெருங்கவிக்கோவை சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளனர்.

யான் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநராகப் பொறுப்பேற்று நடத்தியுள்ள 6 மாநாடுகளிலும் திருக்குறள் அமர்வுகளும் மலரில் கட்டுரைகளும் முதன்மையாக இடம் பெறும்.உலகளாவிய பெருமக்கள் பங்கேற்று கருத்துரை வழ்ங்கியுள்ளனர்.அருமைத் தந்தையார் பெருங்கவிகோ அவ்ர்களின் திருக்குறள் செம்மொழிஉரையை வெளியிட்டு உலகம் முழுமையும் வழங்கி வருகிறோம்.

திருக்குறள் தொண்டின் தொடர் பணியில் இம் மாநாட்டில் பங்கேற்பதையும் பெரும்பேறாகக் கருதுகிறேன், வாழும் வள்ளுவம் இதழை திறனாய்வு செய்வதில் பேருவகை கொள்கின்றேன்.
ஒரு இயக்கமாயின் ஓர் இதழ் அவசியமான ஒன்றாகும்.அவசியத்தின் தேவையை உணர்ந்த ஐயா மோகன்ராசு அவர்கள் வாழும் வள்ளுவம் என்ற இதழைத் தொடங்கி இரண்டாம் ஆண்டாக மிகப் பொழிவோடும் தெளிவோடும் நடத்திவருவது அவரது செயற்பாட்டின் மகுடமாகும்.

அட்டைப்படத்துடன் நூறு பக்கங்களைக் கொண்ட அறிவுச் சுரங்கம் இவ்விதழ்.அட்டையின் முன் திருவள்ளுவர் திருக்கோயிலில் உள்ள திருச்சிலையின் வடிவம் பல்வண்ண வடிவில் அச்சாகியுள்ளது. இரண்டாம் பக்கம் நீண்ட காலம் மூடிவைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர்சிலையை வாழும் வள்ளுவ வாழ்வறிஞர் தமிழினத் தலைவர் மாண்பமை முதல்வர் அவர்களின் பெருமுயற்சியால் திறக்கப்பட்ட பெங்களூரு சிலையும், மயிலை சிலையும் அச்சிடப்பட்டுள்ளது. முறையே மூன்று நான்கு பக்கங்களில் திருக்குறள் நெறிபரப்பும் அறிஞர் பெருமக்கள் இரா.இராதாகிருட்டிணன், அ.ம.வேணுகோபாலனார் படங்கள் எழில்பொங்க அச்சிடப் பட்டுள்ளது.

பக்கம்1,2:
தலையங்கப் பகுதியில் ஆசிரியரின் கருத்து சைவ, சமன, பெளத்த, இசுலாமிய, கிருத்தவப் பெருமக்களாகிய தமிழர்கள் அனைவரும் திருவள்ளுவரை வணங்காமல் திருக்குறளை வாழ்வியலாக்க முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறார்.


பக்கம் 3-12:
வள்ளுவர் கோட்டத்தை வாழ்வியல் கோட்டமாக்க எனும் தலைப்பில் 1.திருக்குறள் ஆய்வகம், திருக்குறள் ஆய்வரங்கம்,3.திருக்குறள் நூலகம் 4.திருக்குறல் வாழ்வியலாக்க அரங்குகள் என தலைப்பிட்டு செறிவான திட்டங்களை பதிவு செய்துள்ளார்.

பக்கம்13-17:
திருவள்ளுவர் யார் எவர் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவரவர் போக்கிற்கு கூறியுள்ளதை மறுத்து திருக்குறளில் உள்ள கருத்துக்களை வாழ்வியலாக்காமையை குறிபிடப்பட்டுள்ளது.

பக்கம் 18-24:
திருக்குறள் பேரொளி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் திருக்குறள்பணிகளை நெஞ்சாரப் போற்றுகிறார். இன்னும் செய்யவேண்டிய திட்டங்களை நடுநிலையுடன் கூறுகிறார்.

பக்கம் 25-30:
பெங்களூர் திருக்குறள் தொண்டர் அ.ம.வேணுகோபாலன் பற்றி திருக்குறள் வே அரசு அவர்கள் திருக்குறள் வாழ்க்கைப்பயணத்தை மிகச் சிறப்பாக தொகுத்துத் தந்துள்ளார்,பெங்களூருவில் திருக்குறள் பரப்புரை மாநாடு,இதழ், ஆசிரியப் பணி நிலையப் பணி என அமரர் வேணுகோபலனாரின் பணிகளை படம்பிடித்துள்ளார்.

பக்கம் 31-38:
வரலாறுபடைத்த திருக்குறள் ஆய்வாளர் எனும் தலைப்பில் திருக்குறள் சாந்தி மோகன்ராசு அவர்கள் உலகத்திருக்குறள் மையத்தின் தோற்றம் வளர்ச்சியை பட்டியலிட்டுள்ளார். திருக்குறள் மக்கள் உரை வெளியான வரலாற்றையும் பேராசிரியர் முனைவர் மோகன்ராசு அவரிகளின் ஈகத்தையும் பதிவு செய்துள்ளார்.`தற்போது மக்கள் உரை 20 பதிப்புகள் கண்டு 1 இலக்கத்தைத் தாண்டி வெற்றிகொடி நாட்டியுள் சாதனையை குறிப்பிட்டுள்ளார்.

பக்கம் 39-44:
திருக்குறள் மூதறிஞர் இரா.இராதாகிருட்டிணனின் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கவிஞராகவும், பேச்சாளராகவும், கிராமம்தோரும் திருக்குறள் பரப்புனராகவும் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்த செயல்வீர்ராககவும் வாழும் வள்ளுவம் பதிவு செய்துள்ளது.

பக்கம் 45-47:
திருக்குறள் வினா விடைப் போட்டி வெளியிட்டு திருக்குறள் குறித்த பல செய்திளை வாழும் வள்ளுவம் வழங்குகிறது.தந்தை பெரியாருக்கு திருக்குறள் மீது பற்று வர துணைநின்றவர் பா.வே.மாணிக்கனார் என்றும்.வள்ளுவர் கோட்டம் உருவாக்கம் பெற முத்தமிழறிஞர் கலைஞர் நெஞ்சில் தோன்றிய நாள்1974 ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் சிலை திறப்புவிழாவில் என பல் நுட்பமான செய்திகளைக் காண முடிகிறது.

பக்கம் 49-57:
வள்ளுவர் கோட்டத்தில் பங்கேற்ற உயர்வாய்வரங்குகள் 5-3-2005 முதல் 10-2-2007 நூறு அரங்குகளில் உரையாற்றியோர் தலைப்பு விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பக்கம் 58-79:
திருக்குறள் அனுக்கக் கட்டுரையில் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் என்ற தலைபில் பார்ப்பான் என்ற சொல் வந்திருக்கும் குறளும் பல்வேறு உரையாசிரியர்களின் விளக்கமும் சங்க இலக்கியங்களில் காணப்பபெறும் பதிவுகளும் ஆழ்ந்த ஆய்வின் திறத்தைப் .புலப்படுத்துகிறது.

பக்கம் 80:
பன்னெடுங்காலம் ஐயாவுடன் இணந்து தொண்டாற்றும் திருக்குறள் தூதர் கவிஞர் சோ.பத்மநாபனின் வள்ளுவத்தை வாழ்விக்க வா எனும் இசைப்பாடல் தேனாக இனிக்கிறது.”உள்ளத்தூய்மை இல்லாத உரைஒன்றும் உதவாது” என்ற வரி சாட்டை அடியாக உள்ளது.

பக்கம் 80-89:
பேராசிரியரின் உலக ஒருமைப்பாட்டுச் சிந்தனையில் தற்கால சமுகத்திற்குத் தேவையான் சிந்தனைப் பிழிவுகள் உள்ளன.
”மக்களைப் பிரிப்பவன் கட்வுளேயானாலும் கயவந்தான்”
“சாதியைத் தொட்டுப்பார்த்தால் நீதி பட்டுப்போகும்”
“மண்ணில் மதிக்கவேண்டியது மத தர்மங்களல்ல மனிததர்மங்கள்”
“எல்லைக்கோடுகள் எழுத்துப் படிவுகள் ஆகலாம் எண்ணப்பதிவுகள் ஆகக்கூடாது”
அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் உல்கச் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கில்
”எல்லைக்கோடுகள் இல்லாத – உலகம்
இனியதோர் உலகம் செய்வோம்” என்ற வரிகளை சிந்திக்கவைக்கிறது.

பக்கம் 90-96:
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற 2010 ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பக்கம் 95-9:
அருள் மாமுனிவர் பங்கேற்ற நிகழ்ச்சி விபரங்கள் தரப்பட்டுள்ளன.

கருத்துகள்:
தமிழகத்துப் பெருமக்களைமட்டும் குறிப்பிடாமால் மாதம் ஒரு வெளிநாட்டில் திருக்குறள் தொண்டு செய்வோரை பற்றி எழுதுதல்.
திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட அந்தந்த பதிவுகளை இதழில் பதிவு செய்தல்.
தாளின் தரத்தைக் குறைத்து மலிவுப் பதிப்பாக அனைவும் வாங்கிப் படிக்கும் வண்ணம் விலையை குறைத்து வெளீயிடல்

வாழும் வள்ளுவம் தமிழர்க்கு வழிகாட்டி

வாழும் வள்ளுவம் திருக்குறள் தேனூற்று

வாழும் வள்ளுவம் திருக்குறள் தொண்டர், அறிஞர், தூதர்களின் பாசறை.

Saturday, July 17, 2010

உயிர்த்தமிழ் முதல்வா வாழி


உயிர்த்தமிழ் முதல்வா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

எத்திக்கும் தமிழர் கூட்டம்
ஏற்றமாய் செம்மொழி வெற்றி
தித்திக்கும் அறிஞர் ஆற்றல்
தேர்ந்திட்ட மாநாட்டு வெற்றி
பத்தியம் காப்பது போல்
பார்புகழ் தமிழர் கூட்டி
வித்தக மாநாடு கண்ட
வெற்றியின் முதல்வா வாழ்க


சாத்திரம் சடங்கை ஓட்டி
சரித்திர நம்மின் பாங்கை
சூத்திரம் காண்பது போல்
சுழழ் கண்காட்சி காட்டி
தீத்திற கவிஞர் சான்றோர்
தீந்தமிழ் முழக்கம் காண
காத்த நம்தமிழர் ஒன்றாய்
கூட்டிய மாண்பே வாழி

பழந்தமிழ் சான்றோர் போற்றி
புத்தொளிர் ஆய்வு மன்றம்
களம்பல தலத்தில் கண்ட
கவின்மிகு அறிஞர் கூட்டி
உலகலாம் போற்றும் வண்ணம்
உன்னதத் தமிழின் மாட்சி
பலமெலாம் ஒன்றாய்க் காட்டும்
பைந்தமிழ் வேந்தே வாழி

கட்சியின் வாசம் இல்லை
கவின்மிகு தமிழர் ஒன்றாய்
கூட்டிய தாயின் பாசம்
குழுமிய அரங்கில் கண்டோம்
நாட்டமாய் தமிழில் கற்றோர்
நல்கிடும் அரசின் வேலை
ஊட்டமாய் நூறு கோடி
ஊட்டிய தலைவா வாழி

“கட்டளை இடுக என்றே
கவின்மிகு அறிஞர் மக்காள்”
தட்டுக கதவை என்றே
தூய்மையர் ஏசுவைப் போல்
மொட்டது மலரும் பூவாய்
மொய்த்துள யாங்கள் எல்லாம்
உட்பூசல் கலைந்த எங்கள்
உயிர்த்தமிழ் அறிஞா வாழி

Friday, July 16, 2010

தமிழியக்கங்களின் தாக்கம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர், தமிழ்ப்பணி

இந்தியாவின் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27-6-2010 ஆம் நாள் நப்பூதனார் அரங்கில் வழங்கிய ஆய்வுக் கட்டுரை

முன்னுரை
தமிழ் மக்களிடம் தமிழ் மொழியின் சிறப்பையும் உணர்வையும் ஊட்டிய பங்கு திராவிட இயக்ககங்களைச் சாரும். இந்திய விடுதலைக்கு பேராயக் கட்சியின் பங்களிப்பு மகத்தானது. தமிழ் தமிழர் விடுதலைக்கு திராவிட இயக்கங்களே வித்திட்டன. திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார். தமிழர்கள் யார் என்பதை தனக்குத்தானே உணரவைத்தவர். தமிழர் மறுமலர்ச்சிக்கு தன்மானத் தளபதிகளை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் பாசறையாக இருந்த பெருமைக்குரியவர். தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் சமுதாய இயக்கமாயிற்று.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை இந்திதிணிப்பு அறிவிப்பு மிகப்பெரும் மொழிப் புரட்சியை உருவாக்கியது. பெரியாரிடமிருந்து அவரது வழித்தோன்றல்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெருந்தலைவர்கள் தோற்றுவித்த திராவிட முன்னேற்றக்கழகம் மொழிவிடுதலை இயக்கமாக மாறி மக்களிடையே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. தி.மு.கவின் கொடிக்கு வண்ணம் தேர்ந்தெடுத்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருப்பின் மேல் தன் விரலைக் கீறி இரத்தத்தை வைத்து இருவண்ணக்கொடியை உருவாக்கினர். புரட்சிகரமான வேகத்தோடு மொழிப்போராட்டமும் திராவிட முன்னேற்றக் கழ்கத்தினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத்,கே.ஏ.மதியழகன் பேராசிரியர் க.அன்பழகன், போன்ற தனிப்பெருந் தலைவர்கள் சொற்பெருக்காற்றி தமிழுணர்வர்வாளர்களை கிளர்ந்தெழச் செய்தனர். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் பெயரளவிலேயெ இருந்தது

பேரறிஞர் அண்ணா தலைமையில் மும்முனைப்போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்டது. தாய் மொழிக்காக தன் இன்னுயிரை தீக்குளித்துத் துறந்தனர். கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிவகங்கை இராசேந்திரன், பீளமேடு தண்டபாணி, சத்திய மங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், கீரனூர் முத்து, வீராலிமலை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி போன்ற தமிழ்ப்போரளிகள். மொழிக்காக உயிரை ஈகம் செய்த பெருமைக்குரிய ஈகவான்கள். உலகில் தமிழினம்தான் மொழிக்காக ஈகம் செய்த இனம்.

தமிழ் நாட்டில் ஏற்படுகின்ற புரட்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர்தான் காரணம் என்று அன்றே குற்றம் சாட்டி பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்,இந்தியை எதிர்த்து 63 நாட்கள் தனிமைச் சிறையில் வாடினார். கல்லக்குடியில் தமிழுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் தண்டவாளத்தில் தலையை வைத்துப் உயிரை துச்சமாக நினைத்துப் போராட்டம் நடத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். தம் வாழ்நாளை சிறையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் தியாகம் செய்த பெருமைகுரியவர்கள் தி.முகவினர்.

மொழியுணர்வால் தமிழ்கத்தின் ஆட்சிப்பொறுப்பு தி.மு.க என்ற பேரியக்கத்தின் தலைமையில் அமைந்தது.பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். தமிழை முன்னிறுத்தி ஆட்சி அமைந்ததால் அனைவர் நாவிலும் தமிழ் முழங்கின. சட்டமன்றம், மேலவை, பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நிதிநிலை அறிக்கை போன்ற சொற்களெல்லாம்
நடைமுறைக்கு வந்தன. மக்கள் மொழியும் விவாகம் திருமணமாகவும், நமசுகாரம் வணக்கமாகவும்,சமாச்சாரம் செய்தியாகவும்,நாசுட்டா சிற்றுண்டியாகவும் தமிழ்ச்சொற்கள் தமிழர்களால் நடைமுறை வழக்கில் வந்தன.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மெட்ராச் சுடேட் என்றிருந்த தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றச் சட்டத் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற மாற்றத்திற்கு தன் இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனாரைக் குறிப்பிட்டார் முதல்வர். அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று மூன்றுமுறை முழங்க உறுப்பினர்கள் வாழ்க! வாழ்க! என முழங்கி தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பை நிலைப்படுத்தினார்.

இந்தியாவிலேயே மொழியின் பெயரால் பெயர் பெற்ற சிறப்பைப் பெற்றாலும் இது நாள்வரை தமிழிற்கு எந்த நிலையிலும் தமிழ்நாட்டில் முதன்மை கிடைக்கப் பெறவில்லை. தமிழ் நாட்டில் தமிழுக்கு இயக்கம் வேண்டும் என்ற கொள்கையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தம் கவிதைகள் வழியும் உணர்வோடு பாடுபட்டார். புரட்சிக் கவிஞரின் பாடல்களை மேடைகள்தோறும் உணர்ச்சி பொஙகப் பாடினர். தமிழின உணர்வை மீட்டிய பெருமைக்குரியவர் பாவேந்தர்.

அறிஞர் பெருமக்கள் கா.அப்பாதுரையார்,மொழிஞாயிறு தேவனேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கனார், வேலா.அரசமாணிக்கனார், முனைவர் தமிழ்க்குடிமகன் போன்ற பெருமக்கள் தொடர்ந்து தமிழை முன்னிறுத்த அயராது பாடுபட்டனர்.
இருமொழிக் கொள்கையின் வேகம் காலப்போக்கில் தமிழுக்கு முதன்மையின்றி ஆங்கிலத்திற்கு முதன்மையாயிற்று.ஆங்கிலத்தின் ஆதிக்கம் மழலையர் பள்ளிகளில் பெருகின. தமிழே படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆகலாம் என்ற அவல நிலை உருவானது.

தமிழ்நாட்டில் ஆட்சித் துறையில் அலுவல்மொழியாக தமிழ் இல்லை, கல்வித்துறையில் பயிற்றுமொழியாக இல்லை, நீதித்துறையில் வழக்காடும் ,மொழியாக இல்லை,ஆலயத்தில் வழிபாட்டு மொழியாக இல்லை.இந்நிலையைப் போக்க தமிழ்நாட்டில் உணர்ச்சிமிகு இயக்கங்கள் தோன்றின.பன்னாட்டுத் தமிழுறவுமன்றம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம்,தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழகத் தமிழாசிரியர் கழகம்,பாவேந்தர் இலக்கியப் பேரவை, தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம், கலைஞர் கருணாநிதி இலக்கிய வட்டம், தமிழ் வளர்ச்சிப்பேரவை, பாவேந்தர் பாசறை, பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கம்,திருக்குறள் பேரவை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் நற்பணி மன்றம். உயிர்மெய்த் தமிழ்ச்சங்கம் ,தமிழ் மீட்புப் பேரவை, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, செந்தமிழ் விரும்பிகள்மன்றம், தமிழ்த் தன்னுரிமை இயக்கம், தையற் கலைஞர் தமிழ்ப் பேரவை, இலக்கியப் பண்ணை, தமிழ்ச் சுரங்கம் போன்ற தமிழ் இயக்கங்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைக்குப் போராட்டங்கள், உண்ணாநோன்பு, மறியல், தெருமுனை விளக்கப் பொதுக் கூட்டம் தமிழ் மேம்பாட்டு மாநாடு என தமிழ்க் களம் கண்டுள்ளன.

1993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கன்னியா குமரியிலிருந்து சென்னை வரை 1330 கி.மி. 50 நாட்கள் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நடைப்பயணமாக வந்தனர். பட்டி தொட்டியெல்லாம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கொள்கை முழக்கமிட்டு தமிழுக்காகப் போராடினர். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அன்றைய முதல்வர் செயலலிதாவை நேரில் அறிக்கை கொடுக்கச் சென்றபோது அலுவலரே வாங்கினர்.முதல்வரை சந்திக்கக கூட வாய்ப்பளிக்கப்படவில்லை.

தஞ்சையில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அறிஞர் பெருமக்கள் ஒன்பது தமிழ்க் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தனர். 1-1-1995 ஆம் நாள் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,புலவர் சுந்தரராசன் ,புலவர்.வேதிருவேங்கடம், புலவர் ப.சாத்தன், இரா.பத்மநாபன் போன்ற பெருமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறைப்பட்டவர்கள் பிணையில் வர மறுத்ததால் மாநாடு முடிந்த பிறகே விடுதலை ஆகினர். தமிழ்ச் சான்றோர்கள் கைதைத் தொடர்ந்து ஊர்கள்தோறும் பல மன்றங்கள் சங்கங்கள் அறிஞர்கள் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி கண்டித்தன.

25-4-1999 அன்று தமிழ்ச் சான்றோர் பேரவையோடு தமிழ் இயக்கங்கள் அடையாறு நா.அருணாச்சலத்தோடு இணைந்து மிகப் பெரிய உணர்வுப் போராட்டமான பட்டினிப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு தமிழகம் முழுமையும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலோடு இருந்தனர். இறுதியாக 102 பெருமக்கள் சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தனர்.அறிஞர் தமிழண்ணல் தலைமையில்
1.ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் இருந்திட வேண்டும். 2.பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட உயர்கல்விகள் அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே தொடங்குதல் வேண்டும். 3. தமிழ்ப் வழிப் படித்த்வர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழ்ங்கப்படுதல் வேண்டும் என்ற கொள்கைகளை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்தனர் .
போராட்டக் குழுவின் சார்பில் பேராசிரியர் தமிழண்ணல் ,நா.அருணாச்சலம், பெ.மணியரசன்,தோழர் தியாகு உள்ளிட்டோர்அரசோடு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
தமிழக அரசு உண்ணா நோன்பு இருந்தோரின் உணர்வுகளை மதித்து அமைச்சர் தமிழ்க்குடிமகன் வழி மறுநாள் காலை 8.30 மணிக்கு உண்ணாநோன்பை முடித்து வைத்தார். பெருங்கவிக்கோ வாமுசேதுராமன், கயல் தினகரன் போராட்டக் குழுவிற்கும் அரசுக்கும் பாலமாக இருந்து செயல்பட்டனர்.


தமிழக அரசின் அறிக்கையில் “ஒன்று முதல் ஐந்துவகுப்புகளுக்குரிய தொடக்கப் பள்ளிகள் நாடு முழுவதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி தமிழ் மொழிப்பாடமாகவும் பயிற்றுமொழியாகவும் இருத்தல் வேண்டும் என்ற கொள்கையில்தமிழ் அறிஞர்களுக்கும் தமிழக அரசுக்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. இக் கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ஏப்ரல் 30க்குள் ஒரு குழு அமைக்கப்படும் மே 31க்குள் அக் குழுவிடம் பரிந்துரை பெற்று வரும் கல்வி ஆண்டிலேயே அதனை நடைமுறைப்படுதுவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்யும்.” என பண்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அரசின் உறுதிமொழிப்படி தமிழ் வழிக் கல்விக்கான வழிவகைகளைக் கண்டறிய நீதிஅரசர் மோகன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக் குழுவில் முனைவர் வா.செகுழந்தைசாமி, முனைவர் ச,முத்துக்குமரன் புலவர் இரா.இளங்குமரன், முனைவர் தமிழண்ணல் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.

மோகன்குழு அறிக்கையின்படி தமிழக அரசு தமிழ்ப்பாடத்தை கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தது. ஆங்கிலக் கல்வி வழங்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் நீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்றனர். பணத்தை ஆங்கிலக் கல்வியைக் காட்டி திரட்டி மக்கள் அறியாமையை பயன்படுத்தி தமிழ்வழிக் கல்விக்கு பெரும் தடையாக உள்ளனர்.
மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோதே தமிழ் வழியாகக் கல்வியைக் கொணர்ந்தார்.அப்போதே தமிழ்ப் பகைவர்கள் ஆங்கிலத்திற்க்கு வக்காளத்து வாங்கினர்.தமிழ் ஒழிக ,ஆங்கிலம் வாழ்க என்ற உச்சநிலையில் எதிர்த்தனர். சிலம்புச்செல்வர் ம.பொ.சி, முத்தமிழ்க்காவலர் கீ.ஆ.பெ.வி., தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் வேண்டுகோளிற்கிணங்க தளர்த்தினார் கலைஞர்.


தற்போது ஐந்தாம் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் மாண்புமிகு கலைஞர். இன்னும் தமிழ் நாட்டில் தமிழே பயிலாமல் பட்டம் பெறலாம் என்ற இழி நிலையைக் கண்ட கலைஞர் முதல் வகுப்பிலிருந்து தமிழ் கட்டாயம் என சட்டம் கொணர்ந்து நடை முறைப்படுத்தியுள்ளார்.

தமிழால் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.முக. தமிழ் வழிக் கல்விக்கும் தமிழ் உயர்வுக்கும் செய்தது என்ன. கால்கள் கொப்பளிக்க எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்கு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பெருங்கவிக்கோ தலைமையில் நடந்து வந்த நடைப்பயணக் குழுவினரை முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களோடு முதல்வர் செயலலிதாவைக் கோட்டைக்குச் காணச் சென்றபோது நேரில் கூட அறிக்கையைப் பெறவில்லை.தமிழ் இயக்கவாதிகளின் உணர்வை உணராத அரசாக இருந்தது.

தஞ்சையில் நடந்த 8ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் உண்ணாநோன்பு இருக்கச் சென்றபோது அடித்து இழுத்து சிறையில் தள்ளினர். தமிழ் உணர்வை தமிழ் மாநாட்டிலேயெ நிலைகுலையச்செய்த அரசு அ.தி.மு.க அரசுதமிழைச் செம்மொழி ஆக்குவதற்கு மாண்புமிகு முதல்வர் கலைஞரின் சிந்தனையும் செயலும் முன்னோடியானது.தமிழ் அறிஞர்களின் கருத்துக்களை தமிழக அரசின் வாயிலாக மைசூர் செம்மொழிவாரியத்திற்கு பரிந்துரைத்து செயல்வடிவமாக்கினார்.

தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்கு தமிழ் இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளன.பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தலைநகர் தமிழ்ச் சங்கம்,பெங்களூர் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து தமிழ் செவ்விவியல் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உண்ணாநோன்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு 135 தமிழ்ப் பெருமக்கள் தில்லியில் 18-8-2003 அன்று
உண்ணாநோன்பு போராட்ட்டத்தில் பங்கேற்றனர். மாண்பமை அர்சியல் பெருமக்கள் மத்திய அமைச்சர்கள் போராட்டக் களத்தில் வாழ்த்துரைத்தனர். உண்ணா நோன்பு முடித்து அன்றைய பாரதப் பிரதமர் வாச்பாய் அவர்களை போராட்டக் குழுவினர் சந்தித்து அறிக்கை வழங்கினர்.குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்தனர். இப் போராட்டத்தில் தம் சொந்த செலவிலேயே தமிழகத்திலிருந்து தில்லிக்கு வருகை தந்து போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் இயக்கவாதிகளின் உணர்வு மகத்தானது. தமிழை எல்லா நிலைகளிலும் உயர்த்த தமிழ் இயக்கங்களின் ஈகத்தை இப் போராட்டங்கள் மூலம் உணரலாம். மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த உண்ணாநோன்பு குறித்து முரசொலியில் கடிதம் எழுதி உணர்வுக்குத் தலைமைதாங்கினார்.

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு முதல்வர் கலைஞரின் அயரா முயற்சியால் 40/40 வெற்றிபெற்று ஆட்சி அமைத்தனர். அன்னை சோனியா தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. மைசூரிலிருந்த செம்மொழி வாரியத்தை சென்னைக்கு மாற்றி கட்டிடமே எழுப்பி திறப்பவிழாக் கண்டார் நம் மாண்புமிகு முதல்வர் கலைஞர். தம்முடைய சொந்தத் தொகையில் ரூபாய் ஒரு கோடி வழங்கினார். ஆண்டு தோறும் ரூபாய் பத்து இலட்சம் கலைஞர் செம்மொழி விருதாக செம்மொழி மேம்பாட்டு வாரியம் வழங்குகிறது.தமிழ் மேம்பாட்டு வாரியத்தில் ஆய்ந்தறிந்த தமிழ் அறிஞர் பெருமக்களை ஐம்பெருங்குழு எண்பேராய உறுப்பினர்களாக நியமித்து தமிழிற்கு மிகச் சிறந்த தொண்டாற்றி வருகின்றனர்.

தமிழியக்கங்களின் உணர்வுக்கு இது நாள் வரை கலைஞர் அரசுதான் செவிசாய்த்து தமிழ் உணர்வை மேலோங்கச் செய்துள்ளது.மேலும் தமிழ் இயக்கங்களின் பணிகள் தொடரவேண்டும்.தனித்தனி தீவுகளாக இருக்கும் தமிழ் இயக்கங்கள் ஒன்றுபட்டு மக்களிடம் தமிழ் உணர்வை மீக்கெழச் செய்யவேண்டும். ஓன்றுபட்டுப் போராட வேண்டும்.

முடிவுரை
தமிழ் நாட்டில் தமிழிற்கு ஓரளவு முன்னேற்றம் – மாற்றம் உருவானது தமிழியக்கங்களின் தாக்கங்களினால்தான். நாம் தாய்மொழியாம் தமிழ் நாட்டில் அனைத்துத் துறையிலும் முதன்மை பெற, இந்திய ஆட்சிமொழியாக தமிழ் அரியனை ஏற தமிழ் இய1க்கங்களின் பொறுப்பில்தான் உள்ளது. தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக வாழும் கலைஞர் காலத்திலேயே நடைபெறும் என்பது திண்ணம்.

Tuesday, May 25, 2010

போற்றிடும் தமிழே வாழ்க

போற்றிடும் தமிழே வாழ்க
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்,


திராவிடச் சொல்லில் வாழும்
திண்ணிய நெஞ்சர் எம்கோ
தீரராம் தமிழர் வாழ்வின்
திக்கெட்டும் வாழும் எம்கோ
பரவிடும் சாதிப் பேயை
பொசுக்கிடும் கொள்கைத் தங்கம்
துறவியாய் என்றும் வாழும்
துன்பத்தை துரத்தும் சிங்கம்

அருவிகள் தோற்கும் இன்ப
அமுதமாய்ப் பொழியும், சொற்கள்
தருவதில் பேகன் பாரி
தாண்டிய இல்லோர் செம்மல்
உறுதியில் எக்கும் தோற்கும்
உன்னத உழைப்புத் தேனீ
கருதிடும் செயலின் வாழ்வாய்
கழகத்தைக் காக்கும் எம்கோ

விம்மிய வாழும் ஏழ்மை
விரட்டிட அண்ணா சொன்ன
நம்மனக் கலைஞர் ரூபாய்
நயத்தகு அரிசி தந்தார்
எம்மினம் உயர்ந்து வாழ
ஏற்றமாய் நிலமும் தந்தார்
தெம்புடன் வாழஎரி வாயு
தக்கவர் தந்த எம்கோ

செம்மொழிச் சிறப்பை நன்றாய்
செழுமையாய் பெற்ற எம்கோ
நம்மொழி உலகோர் கூட
நயத்தகு மாநாடு கண்டார்
மும்மொழி வையச் சான்றோர்
முழுமையாய் கோவை கூட்டி
செம்மொழித் திறனை ஏற்றும்
செம்மொழிக் கலைஞர் வாழி

முதுமையும் மிரண்டு ஓடும்
முத்தமிழ் அறிஞர் எம்கோ
எதுஎது நமது சொந்தம்
ஏற்றமாய் வழங்கும் எம்கோ
பதுமையாய் பகட்டாய் வாழும்
பாதகி துரத்தும் எம்கோ
விதிஎன வாழும் நம்மோர்
வீரத்தை எழுப்பும் எம்கோ

சதிவலை கண்டு நீக்கி
சாதனை படைக்கும் எம்கோ
கதியிலா ஏழ்மை மக்கள்
காத்திடும் வறியார் தோழன்
புதியன படைக்கும் சிற்பி
புத்தமுது தொல்காப்பியம் தந்தோன்
விதிகளை சமைக்கும் எங்கள்
வித்தகத் தலைவா வாழ்க

நூற்றாண்டு கடந்து எந்தன்
நுண்ணறி குடியைக் காக்க
காற்றினைப் போன்று எங்கள்
கடைமைசெய் பேறே வாழ்க.
தூற்றிய பகையோர் எல்லாம்
தூயஉன் அடிகள் பற்றி
போற்றிடும் தமிழே எம்கோ
புண்ணிய நீடு வாழ்க

Friday, April 30, 2010

காவியச் சான்றோன் தி.க.ச புகழ் வாழ்க!

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர், தமிழ்ப்பணி

திராவிட இயக்கத் தோன்றல்
தீந்தமிழ் வளர்த்த தென்றல்
போராடும் குணமோ சொந்தம்
பொங்கிடும் அன்புச் சந்தம்
நேரான பார்வைச் சான்றோன்
நேர்நிறை காணும் மூத்தோன்
வேராகக் கழகம் காககும்
வேந்தர் அன்பழகர் வாழி!

நிமிர்ந்த நன்நடையின் ஆற்றல்
நிகரிலா அரிமா நோக்கு
பூமியின் சுழற்சி போன்றே
புவியுள தமிழர் காத்தார்
எழுந்துள அறவோர் தம்மை
ஏற்றியே போற்றும் நெஞ்சம்
தொழுதிடும் குணங்கள் கொண்ட
தொல்புகழ் அன்பழகர் முன்னே

வணங்கியே வணக்கம் சொன்னேன்!

வான்புகழ் திகச எண்ணி
வந்துள அருமைச் சாண்றோர்
சொந்தமாய் திகச போற்றும்
சார்ந்துள நடிக வேள்கள்
முந்திடும் தமிழை ஏந்தும்
முத்தமிழ் அறிஞர் மக்காள்
வந்துமே வணக்கம் சொன்னேன்
வாழிய உங்கள் கொற்றம்
.

நாடகக் கலையை நன்றாய்
நாட்டிய கொள்கைக் கோமான்
தேடரும் கலையின் வித்தாய்
தோன்றிய அறத்தின் சான்றோன்
பீடுறு அவ்வைப் பாட்டி
பெற்றிமை வாழ்க்கை காட்டி
பாடிடும் வாழ்வாய் வாழ்ந்த
பார்புகழ் திகச அன்றோ!

நாட்டையே இன்றும் ஆளும்
நாயகர் கலைஞர் எம்மான்
நாடகக் கலையில் வேந்தை
நல்தொல் காப்பியர் என்றார்!
காட்டிடும் திரையில் இன்றும்
காவியச் சான்றோன் பேரால்
கேட்டிடும் அவ்வை சண்முகி
கேண்மையின் சிறப்பு அன்றோ!

தமிழரின் ஆட்சிப் பேற்றை
தலைமையாய் முதலாய் வென்ற
எமின்இன ஏந்தல் அண்ணா
ஏற்றாமாய் மேலவை மன்றம்
நமின்அவ்வை நாடக மேதை
நாட்டமாய் கலைக்குத் தந்தார்
தமிழரின் கலைவாழ்வுச் செம்மல்
தகுதியாம் அவ்வை அன்றோ!

மலேசியா சிங்கை சென்றார்
மாசிலா கலையால் வென்றார்!
தலம்புகழ் நாடகச் செல்வர்
தக்கநல் மாட்சி அன்றோ!
உலகெலாம் விரிந்து நிற்கும்
உன்னதக் கலையின் வேந்தர்
தலமெலாம் இன்றும் பேசும்
தவநெறி அவ்வைச் சான்றோன்!

இந்திய நாட்டில் எங்கும்
இணையிலா நாடகக் காட்சி
சிந்தனைக் கலைஞர் எல்லாம்
சீர்மிகு வாழ்வைப் பெற்றார்
செந்தமிழ் மக்கள் நாவில்
செந்தேனைப் போன்றே நன்று
நம்தமிழ் காத்த மேலோன்
திகச புகழே வாழி!

பாரத நாட்டின் மேன்மைப்
பத்மசிறி பட்டம் பெற்றார்
சீர்மிகு நடிகர் காக்க
சிந்தனை இதழைக் கண்டார்!
வேரதாம் தம்மின் வாழ்க்கை
வியத்தகு நூலை யாத்தார்
வரலாறு காக்கும் வாழ்வாய்
வாழ்ந்த நம்அவ்வைச் சான்றோன்


வழிவழி மக்கள் பெற்றார்
வாஞ்சையாய் கலையும் தந்தார்
பொழிவுடன் தமிழை ஏந்தி
புகழ், கலைவாணன் சேர்ந்தே
தெளிவுடை அமெரிக்கா மண்ணில்
தேர்ந்தநல் நாடக காட்சி
களிப்புடன் தந்தை போற்றும்
கலைவழி மக்கள் வாழ்க!

தந்தையின் பெயரைத் தாங்கி
தனித்தமிழ் காக்கும் பிள்ளை
செந்தமிழ் இசையைப் பாரில்
செழுமையாய்ப் பாடும் பாடல்
சிந்தனைச் சங்கரதாசு மன்றம்
சீர்மிகு சான்றோன் வழியில்
செந்தமிழ்க் கலைவாணண் காக்கும்
செயலறம் வாழி! வாழி!

பத்மசிறீ தி.க.சண்முகம் 98ஆம் அகவை விழாவில் 26-04-2010 அன்று மாண்பமை பேராசிரியர்.க.அன்பழகனார் தலைமையில் சென்னை இராணி சீதை மன்றத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடிய கவிதை.

Saturday, April 24, 2010

கற்புக்கரசி கண்ணகி

கற்புக்கரசி கண்ணகி

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர் தமிழ்ப்பணி

ஐம்பெரும் காப்பிய மாநாடு மலேசிய ஈப்போ நகரில் நடைபெறுவது போற்றி மகிழத் தக்கது. ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றி தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் ஆய்வு மழை ஈப்போ நகரில் பொழிய உள்ளனர்.மாநாட்டினை நடத்தும் ஆசிரியமணி இரா.மாணிக்கம் தமிழக மலேசிய தமிழ் நெஞ்சங்களின் ஒப்புரவாளர் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று.

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழகத்தில் பகுத்தறிவுக்கு வித்திட்ட காப்பியம். நிமித்தகன் தம்பிக்கே அரசாளும் தகுதி உண்டு என கூறியவுடன் தம் அண்ணன் செங்குட்டுவனுக்கே தகுதி உண்டென துறவறம் மேற்கொண்டு இன்றும் தமிழர்களை அழிக்கும் மூடப் பழக்கமாம் சோதிடத்தை அன்றே புறம் தள்ளி இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம். கண்ணகிக்கு கற்கோவில் கட்டினார் தமையன் சேரன் செங்குட்டுவன் சொற்கோயில் கட்டினார் இளவல் இளங்கோவடிகள்.

காப்பியத்தின் மாந்தர்கள் கோவலன் கண்ணகி மாதவி என இன்றும் படிப்போர் வியக்கும் வண்ணம் தமிழர்களின் கலை ஓவியமாக மிளிர்கிறது. கற்புக்கரசி கண்ணகி, இளங்கோவடிகள் புகழ்உருவச் சிலைகள் இன்றும் அழியா ஓவியமாக சென்னைக் கடற்கரையில் தமிழரின் பெருமையை பறைசாற்றுகின்றன. அதிமுக ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றியபோது தமிழகமே அச் சிலையை நிறுவ போராடியது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்பமை கலைஞர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சிப் பெருமக்களும் கண்டனக் குரல் எழுப்பினர்.பன்னாட்டுத் தமிழுறவுமன்றத்தின் சார்பில் யானும் பங்கேற்று முழங்கினேன்
.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைவரை பெருங்கவிக்கோ தலைமையில் கண்ணகிச் சுடரை ஏந்தி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் கலைஞரின் திருக்கரத்தில் வழங்கினோம். மீண்டும் அதேஇடத்தில் நிறுவினார் மாண்பமை முதல்வர் கலைஞர்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றது இந்நூல்.முதல்வர் கலைஞர் பூம்புகார் திரைப்படம் உருவாக்கி அனைத்து மக்களிடமும் கண்ணகியின் பெருமையைக் கொண்டு சென்றார் பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரத்தின் அழியா ஓவியமாக சிலப்பதிகார காட்சிகளை உருவாக்கியுள்ளார்.இன்றும் அழியாக் காவியம் ஓவியமாக உள்ளது.

சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் மூவேந்தர் காப்பியமாக உருவாக்கியுள்ளார். நடுகல்காதையில்

அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து, செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலம் காவல் மன்னவர்க்கு அளித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசைமன்னவர் மருங்கின்அறியக்
குடதிசை வாழும் கொற்றவர்க்கு அளித்து” (207-217)

செங்கோல் வழுவாது ஆண்டால்தான் கற்பு சிறக்கும் என சோழன் வாயிலாகவும்,செங்கோல் வழுவினால் உயிர் வாழமாட்டார்கள் என பாண்டியன் வாயிலாகவும், வேந்தர்கள் தாம் சொன்னசூளுரையை முடித்தாலன்றி சினம் நீங்கார் என்பதை வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாள் என்பது பாடல்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் புகார் நகரில் உள்ள மருவூர்ப்பாக்கம் பகுதியைப் பற்றிப் பாடியதை நோக்குங்காள் அந்நாளைய தமிழகத்தின் சிறப்பை உணரலாம்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனார் இருக்கையும்,,
கலம்தரு திருவின்புலம்பெயர்மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் கண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வளர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் (9-27)

பாடலில் அழகிய யவனர் (சீனர்,அரபு நாடுகள் கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளிநாட்டவரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுவர்) இருக்கைகள்,நறுமணப் பொருட்கள், பூவும் புகைகும் பொருளும் கூவி விற்கும் தெருக்கள்,பொன்னும். முத்தும்,மணியும், அலங்கார உடை வகைகள்,உண்ணும் பொருட்கள், மீன், இறைச்சி,உப்பு, வெற்றிலை என பல்வேறு பொருள்கள் விற்கும் பகுதிகள் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மருவூர்ப்பாக்கத்தில் இருககும் இடங்கள் என பாடியுள்ளார்.

மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை உச்சநிலையில் பாடியுள்ளார்.கோவலன் கண்ணகியை வாழ்த்தும் பாடலில்
”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடப் பிறவா மணியே என்கோ அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி” (2.73-81)

என இல்லறத்தில் கோவலன் தன் மனைவி கண்ணகியை பாடும் பாடல் இருவரின் அன்பின் பிணைப்பை இளங்கோவடிகள் நயம்படக் கூறியுள்ளார்.

கண்ணகியுடன் இணயற்ற வாழ்க்கை வாழ்ந்த கோவலன் மாதவியிடம் சென்ற பிறகு கண்ணகியின் நிலையை அந்திமாலைச்சிற்ப்பு காதையில் வரும் பாடலில்

”அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை மூன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினல்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கெண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என காலில் சிலம்பு, இடையில் மேகலை, மார்பில் குங்குமம்,காதில் குழை,கண்களில் மை,நெற்றியில் பொட்டு ஏதும் இல்லாமல் சிரிக்கும் அழகை இனிக் கோவலன் காணமுடியாத துயர நிலையில் இருந்ததை நயமாகப் பாடியுள்ளார். கணவனைத் தேடிச்செல்லும் கண்ணகி பற்றி ஆயர் குலப் பெண் மாதிரிக்கு கவுந்திஅடிகள் சொல்வதாக வரும் பாடலில்

”கற்க்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

என கண்ணகி போன்ற பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் ,வளம் கொழிக்கும் செங்கோலும் நீதிதவறாமல் இருக்கும் எனப் பாடியுள்ளார்.

குன்றக் குறவையில் வேங்கை மரத்தின் நின்று வானுலகம் சென்ற கண்ணகியைப் பாடுவதாக பாடும் பாடும் பாடலில்

”சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கினர் அருவிப் பறம்பின் தழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழழ் கீழ்ஓர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயங்குமின் குறிஞ்சிப் பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்மின் காப்புக்கடி நிறுமின் பரவலும் பரவுமின் விரைவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்கு[ப் பெருமழை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”
என கற்புக்கரசி கண்ணகியை தெய்வமாகவே குன்றவர் மொழியாக இளங்கோவடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.

Saturday, April 17, 2010

மடமையைச் சாய்த்தல் என்றோ?

பக்தியாம் போலி வேடம்
படித்தவன் போற்றும் ஈனம்
சக்தியாய் தனனைக் காட்டி
சாய்த்திடும் மனித நேயம்
வக்கிர நெறியில் வாழ்ந்தே
வனிதையர் கற்பை சாய்த்தே
முக்தியை காணும் மோக
மடமையைச் சாய்த்தல் என்றோ?

இயல்பினால் வாழ்க்கை வாழ
இயலாத மடமைச் சாமி
புயலென காமம் தேக்கி
புரிந்திடும் அவலம் ஏனோ?
செயல்நெறி உணரா மக்கள்
செறிந்துள அறிவை மாய்த்து
முயற்சியின் அருமை தன்னை
முயலாது செல்தல் தானே!

பெரியார் தோன்றிய மண்ணில்
பேதமை தொடரும் மோசம்
அறியாமை வீழ்த்திய அண்ணா
அகவழி வெல்தல் என்றோ?
நெறியிலா பக்திச் சாயம்
நிலையான உருவாய்ச் சேர்க்க
புரியாத மக்கள் தம்மை
புதைகுழி தள்ளல் நன்றோ?

நித்தியா நந்தன் லீலை
நீசத்தை நாளும் காட்டி
எத்திசை மக்கள் எல்லாம்
ஏசியே முகம் சுழிக்க
பத்தியம் குடும்பம் காக்கும்
பாவையர் கொதித்தல் வீணோ?
சத்தியம் வாழ்க்கை என்றே
சாக்கடைக் குளியல் அன்றோ!

பக்தியை விற்கும் வேடம்
பரத்தையர் சேர்க்கும் ஓலம்
சக்தியே தானே என்றே
சந்ததி அழிக்கும் மோசம்
புத்தியைக் கூர்மை ஆக்கி
புவியினில் மடமை சாய்த்தே
நத்திடும் இயல்பின் வாழ்க்கை
நாடிடும் நாள்தான் என்றோ?

Wednesday, April 7, 2010

ஒர் தமிழனின் புலம்பல்

ஒர் தமிழனின் புலம்பல்

தமிழ் ஈழ மாயையில்

சிக்கியதால்….



தமிழர்;

மதியிழந்தனர்..

அறமிழந்தனர்..

கல்வியிழந்தனர்…

தனமிழந்தனர்…

தரமிழந்தனர்..



மானமிழந்தனர்..

பதியிழந்தனர்..

உயிரிழந்தனர்..

பாலரையிழந்தனர்..

தாரமிழந்தனர்..

தந்தையிழந்தனர்…

தாயையிழந்தனர்..

சகோதரனையிழந்தனர்…

துணையிழந்தனர்…

சுற்றமிழந்தனர்…

சூழலிழந்தனர்…



கதியிழந்தனர்…

நெறியிழந்தனர்…

நேர்மையிழந்தனர்…

கலையிழந்தனர்…

மறையிழந்தனர்…

பண்பிழந்தனர்….

தவமிழந்தனர்…

தானமிழந்தனர்..

நிலைகுலைந்தனர்…

ஆனால்……தமிழர்;

மறக்கக் கூடாத சரித்திரம் படைத்தனர்





விடுதலைக்காக

அடிமைகளாயினர்.



விடிவிற்க்காக…

இருட்டில் தள்ளப்பட்டனர்…

வழி தவறினர்.



பிள்ளைகள் கடத்தப்பட…

பெற்றோர் பதறினர்,

உற்றோர் வருந்தினர்;

தமிழர் தமிழனை தமிழின் பெயரால்

அழிப்பதை கண்டேங்கினர்;



போர் களத்தில்,

உயிர்க்கேடயம் ஆகினர்;

வாழ்விற்கும் சாவிற்க்கும்

இடையே விழிம்பில் பரிதவித்தனர்;



அழிவின் மத்தியில் ஆக்கம்

இறப்பின் மத்தியில் பிறப்பு

பாவத்தின் மத்தியில் புண்ணியம்

கோரத்தின் மத்தியில் கருணை

அகங்காரத்தின் மத்தியில் தெய்வீகம், கண்டனர்.



உயிரைப் பேணாக் கேவலம்;

பொய், பிரட்டு, சூது, வாது,

கொலை, கொள்ளை,

அகங்காரத்தின் கோரத்தாண்டவம்,

கண்டனர்.



மூத்தோர் இருக்க

இளையோர் மாண்டதை..

தம்முயிரைக்காக்க

காயமுற்றோரை கைவிட்டதை…

தம்முயிரின் மேலாக

மற்றயோரதை பேணியமையை

எதிரியின் கருணையை கண்டனர்.



இன்று,

அகதிகளாய்..

ஊனமுற்றோராய்…

விதவைகளாய்…

நடைபிணங்களாய்…

நாதியற்றோராய்….

கையேந்தி நிற்போராய்…

கைதியாய்….

இருக்கும் தமிழருக்கு

தீர்வு என்ன?



இது போதாதென்று

களம் இறங்கியுள்ளனர்

தமிழ் அரசியல் கழுகுகள்..

தேர்தல் பெயரில்

பிணந்தின்ன..



கடவுளே!

போதும் நாம் பட்டபாடு..

முதலில் காப்பாற்று எம்மை

இத்தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து….



கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன்.

இலங்கை தேர்தல் பற்றி சுவிசு முருகவேள்

யாழ்தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சித்தொகுதிக்கு .த.தே.கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர் திரு.சிவஞானம்.சிறிதரன் (அதிபர்.கிளி.மகாவித்தியாலயம்.)அவர்களை தெரிவு செய்வதன் மூலமே பொது எதிரியின் கைக்குள் கிளிநொச்சி பறிக்கப்படுவதை தடுக்கலாம். கிளிநொச்சித் தொகுதி மக்கள் வீட்டுச்சின்னத்திற்கும் முதல் விருப்புவாக்கை 10ஆம் இலக்கத்திற்கும் வழங்கவேண்டும். யாழ்ப்பாணத் தொகுதிகளிலும் வீட்டுச்சின்னத்திற்கும் உங்கள் தொகுதிவேட்பாளருக்கும் கொடுப்பதுடன் இன்னும் இரண்டு விருப்பு வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கலாம் .அதில் ஒன்றை 10ஆம் இலக்கத்திற்கு இடுவதின் மூலம் கிளிநொச்சி பறிபோவதை தடுக்கலாம்.
இதை செய்யாது விடுவோமேயாயின் அங்கே சக்கரைப் பொங்கலுக்குப் பதிலாக அடுத்தபொங்கலுக்கு பால்பொங்கலே(கிரிபத்) பொங்கலாம். இது உண்மை யாழின் உணவுக்களஞ்சியமாக விளங்கிய நிலங்கள் பறிபோவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? கண்டாவளை பரந்தன் கிளிநொச்சி கரச்சி பளை பூநகரி போன்ற இடங்களில் குடியேறிய மக்கள் எல்லோருக்கும் வாக்காளர் அட்டைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை ஆகையால் மீதிவாக்குகளையும் அரசஅதிகாரிகளால் வெற்றிலைக்கு கிடைக்க ஏற்பாடாக பிரச்சாரங்கள் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் டக்ளசு தேவானந்தாவும் ஆனந்தசங்கரி அவர்களும் பழையசெல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதனால் மிகச்சொற்பமான வாக்குகளும் பிரிக்கப்படவிருப்பதை உணரவேண்டும்.

திரு .சி.சிறிதரன்அவர்களின் தெரிவு தடைப்பட்டு கிளிநொச்சியில் தாம்விரும்பியதைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகுவதைத் தடுக்கவேண்டும். இது அந்தமண்ணில் பிறந்ததற்காக கற்ற தற்காக தேசப்பற்றோடு நாம் செய்யவேண்டிய கடமையாகும்.மிகவும் நொந்தமக்கள் மீளவாழ முடியாத மக்களாக இருப்பதால் வெறுப்போடு எமக்கு தேர்தல் வேண்டாம் என்று இருப்பார்கள். அதிகாரத்திற்க்கு பயந்து இருப்பார்கள். இவர்களை வாக்களிக்குமாறு உற்சாகப்படுத்துவது உங்கள்
தொலைபேசிகளும் குறுந்தகவல் செய்திகளுமாகும். வட்டக்கச்சி கிளிநொச்சி பரந்தன் பளை பூநகரி கண்டாவளையைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தநாடுகளிலிருந்து செய்யக்கூடிய முதல்கட்டாய கடமையாகும். அதன்பின் அங்குள்ள மக்களுக்கும் சிறுசிறு உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். இது எமிடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தும். உங்கள் பிரதிநிதியை நீங்களே தெரிவு செய்யவேண்டும்.
எமக்கெதிரான குடியேற்றத்தை நாமே தடுக்க வேண்டும். சில அரச அதிகாரிகள் தமது உறவினர்கள் மூலம் பூநகரியில் இருக்கின்ற சில ஊர்களிலுள்ள குமுழமுனை விநாசியோடை தட்டுவங்கொட்டித் தமது உறவினர்கள் மூலம் அரசுக்குவாக்களிக்க வேண்டுமென்ற திட்டத்தை முடுக்கியுள்ளார்கள். ஆகையால் கிளிநொச்சித்தொகுதி மக்களும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துத்தொகுதி மக்களும் தமது மூன்று வாக்குகளையும் பயன்படுத்தும் போது கிளிநொச்சித்தொகுதி வேட்பாளரான திரு.சி.சிறிதரனின் 10 ஆம் இலக்கத்தை கவனத்தில் கொள்ளவேண்டிய சாணக்கியம் வேண்டும்.

பொ.முருகவேள் ஆசிரியர் - பூநகரி

Saturday, April 3, 2010

முத்துவிழாக் கண்ட கூட்டுறவுக் காவலர் டான்சிறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையர்

டான்சிறி அவர்கள் முத்துவிழாவின் நிறைவுவிழா பிப்ரவரி 29ஆம் நாள் காலை 9-30 மணியளவில் சென்னை சாசுத்திரி நகரில் உள்ள திருமணமண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.மலேசியத் தமிழர்களின் ஒப்பற்ற தமிழர், ம.இ.க.வின் தேசியத் தலைவர் டத்தோசிறி ச.சாமிவேலு அவர்கள் வருகை தந்திருந்தது முத்துவிழாவிற்கு மகுடம் வைத்தாற்போல் இருந்தது.டத்தின்சிறீ இந்திராணி அம்மையார் அவர்களும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர்

மலேசியத் திருநாட்டிலிருந்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டத்தோ சகாதேவன்,கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி என்றும் டான்சிறியின் துணையாக விளங்கும் நாடகக்கலைஞர் பதி.கூட்டுறவு இதழில் தமிழகத்திலிருந்து செல்லும் பெருமக்களைப் பற்றி எழுதும் மாணிக்கம் மற்றும் பெருமக்கள் பலர் இணையராக வந்து டான்சிறியின் முத்துவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
.
டான்சிறியின் மேல் பேரன்பு கொண்ட அருமைத் தந்தையார் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் யானும் நிறைவுவிழாவிற்குச் சென்றிருந்தோம் அருளாளர் இராம வீரப்பனார்,முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எசு.இளங்கோவன் மலர்மாமணி இளஞ்செழியன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் யுவராச அமிழ்தன், எழுத்தாளர் இறையெழிலன்,சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் மற்றும் தமிழகத்தின் புகழ்வாய்ந்த பெருமக்களெல்லாம் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

தந்தையார் அவர்கள் எழுதிய வாழ்த்துப்பா டான்சிறியின் கொடையுள்ளத்தையும், தொண்டுணர்வையும் பறைசாற்றுவதாக இருந்தது. அந்த வாழ்த்துப்பாவை யான் மேடையில் பாடினேன்.வந்திருந்த அனைவருக்கும் அச்சான படிகளையும் வழங்கி மகிழ்ந்தோம்.

மலேசியத் திருநாட்டின் மாசிலா மாணிக்கம் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்சீறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையரின் முத்துவிழா சென்னையில் அவரது இல்லத்திலும் மிகச் சிறப்பாகநடைபெற்றது.28-2-20010 ஆம் நாள் காலை யானும் துணைவியார் பரிமளாவும் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்கும் பேறு[பெற்றோம்.

டான்சிறியின் இல்லறக் கொடையான மக்களும் மருமக்களும் வழியினரும் சுற்றத்தாரும் சூழ்ந்து நிகழ்வை மகிழ்வாகக் கொண்டாடினர்

டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மலேசியத் தமிழர்களின் வாழ்வைச் செழிப்புறச் செய்த பெருமகன். தோட்டப்புறத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்.உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் கோலாலம்பூர் நகரில் 26 மாடி கட்டிடத்தை கட்டி விசுமான் துன் சம்பந்தன் என தமிழில் பொறித்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர்.மலேசியா முழுமையும் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வு மலரச்செய்த மனிதநேயமாமணி. ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகள் நடத்தி கவிதை கட்டுரை அனைத்துத் துறைப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் பெருமகன். கூட்டுறவு இதழை நடத்தி எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் கேஆர்எசு பதில்களில் மக்களை தெளிவுபடுத்தும் இதழாளர்.

என்றும் இளமைத்துடிப்போடு பணியாற்றும் டான்சிறிக்கு 80 அகவை என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான் ஆனால் புவான்சிறி உலகநாயகி பக்கத்தில் அமர்ந்து அன்புசெலுத்தும் பாங்ககைக் கண்டபோது இளமையின் உண்மை புரிந்தது..உறவினர் பெருமக்களெல்லாம் டான்சிறியின் முத்துவிழாக் கோலத்தை சூழ்ந்திருந்து மிகச் சிறப்பாக நடத்தினர். டான்சிறி பிறந்த ஊர் தமிழகத்தின் திருக்கோட்டியூர்.திருகோட்டியூரில் தொடங்கி மலேசியத் திருநாட்டின் மாண்புரு மன்னராக விளங்கும் மாமணி டான்சிறி சோமசுந்தரம்.

ஆன்மீக முறைப்படி புனித நீரைக் கொண்டு முத்துவிழா இணையர்கள் மேல் ஊற்றி நீராட்டினர்.வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முத்துவிழாப் பெருமக்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.யானும் என்னுடைய துணைவியார் பரிமளாவும் முத்துவிழா இணையருக்கு பொன்னாடை போர்த்தி வணங்கி வாழ்த்துப் பெற்றோம். வந்திருந்த பெருமக்களோடு உணவருந்தி மகிழ்ந்தார் டான்சிறி.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டை பாங்காக்கில் நடத்தினோம்.அதுபோது மாநாடு நடத்த பொறுப்பேற்றவர் பின்வாங்கினார் தந்தையார் அவர்கள் பல்வேறு சுமைகளை தன் தோள்மேல் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களை யான் பாங்காக் அழைத்துச் சென்று மாநாட்டில் பங்குபெறச் செய்தேன்.மாநாட்டை வெற்றியுடன் நடத்த யானும் தந்தையும் இன்னலுற்றபோது டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மாநாட்டில் பங்கேற்று இரண்டாம் நாள் உணவுச் செலவை தாமே ஏற்று மாநாடு வெற்றிபெற வழிவகுத்தவர். அப்போது அவரிடம் தொகை இல்லை இருப்பினும் தன் கடன் அட்டையைக் கொடுத்து அதில் அவர் செலுத்திய பாங்கை எண்ணும்போது டான்சிறி அவர்களின் பேருள்ளத்தை உணரமுடியும்.

உலகப் பொதுமறை மாநாடு மலேசியா கோலாலம்பூர் நகரில் டாக்டர் தமிழ்மணி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அம் மாநாட்டின் இந்தியச் செயலாளராகப் யான் தொண்டாற்றினேன். தமிழகத்திலிருந்து 160 பேராளர்கள் பங்கேற்றனர். அதுபோது கோலாலம்பூர் நகரின் முதன்மைச்சாலையில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் தோட்டப்புற மாளிகையின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை டத்தோசிறி அவர்களும் டான்சிறி அவர்களும் நிறுவிய பாங்கு தமிழ் கூறு நல்லுலகம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதாகும்.

உலத்தமிழ்ப் பணபாட்டு இயக்கத்தின் 10ஆம்மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினர் அதுபோதும் டான்சிறி அவர்களின் பங்களிப்பு மகத்தானது..சென்னையிலிருந்து என்னுடைய தலைமையில் பேராளர்கள் பங்கேற்றனர். தமிழர்கள்பால் டான்சிறி கொண்டுள்ள பற்றை உணரமுடிந்தது.

அண்மையில் யாங்கள் நடத்திய பன்னாட்டுத்திமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டில் அவர் தமிழகத்தில் இருந்ததால் பங்கேற்க இயாலா நிலையில் இருந்தார். இருப்பினும் தந்தையார் அவர்களும் அருளாளர் விகடர் சுப்பையா, டாடக்டர்.சி.தர்மலிங்கம் ஆகியோர் சென்றபொது மாநாட்டிற்கு உதவி புரிந்த பாங்கு போற்றத்தக்கது.

மலேசியாவில் நடைபெறும் புத்தக வெளியீட்டிற்கு டான்சீறியின் பங்களிப்பு இல்லாத நிகழ்வே இல்லை என்ற பெருமைக்குரிய எழுத்தாளர்களின் ஏந்தல் டான்சிறி சோமா.

முத்துவிழாக் கண்ட இணையர்கள் நூற்றாண்டு விழாக்கண்டு தமிழினம் தழைத்தோங்க பன்னாட்டுத் தமிழர்கள் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.

Sunday, March 21, 2010

மன்றம் வென்ற பெண்கள் உரிமை வாழ்க

ஒதுக்கீடு கண்ட எங்கள்
ஒப்புயர் கலைஞர் தம்மின்
புதுக்கிய புதுமைப் பெண்கள்
புத்தொளிர் வெற்றி வெல்க!
பதுக்கிடும் பெண்கள் தம்மின்
பண்புள உயர்வை நன்றாய்
செலுத்திய சோனியா அன்னை
செரிவுடை ஆட்சி வெல்க!

ஒளிபுகழ் மன்மோகன் சிங்
ஒப்பமாய் உரைத்த பாங்கு
நளினமாய் பாசக நன்றாய்
நாட்டிய பெண்கள் ஊக்கம்!
தெளிவுடை கலைஞர் கோவின்
தேர்ந்த நல்மகளாம் நம்மின்
பொழிவுடை கனிமொழி பேச்சின்
பெற்றிமை கண்ட வெற்றி!


மண்மகள் செயந்தி வென்ற
மாசிலா சொல்லின் ஆக்கம்
கண்மணி பெண்கள் நன்றாய்
காட்டிய பிருந்தா வெற்றி
மன்றமே திரண்டு நன்கு
மாண்புயர் பெண்கள் தாங்கும்
வென்றிடும் முழக்கம் கண்ட
வேங்கையாம் சுசுமா வாழ்க!

இந்திய மன்றம் தன்னில்
இணையிலா உரிமை கண்ட
சந்ததி வாழ்த்தி ஒன்றாய்
சாதித்த ஒதுக்கீடு வாழ்க!
முந்தைய நாளில் பெண்கள்
முடக்கிய மோசம் வீழ்க
சொந்தமாய் இணையாய் என்றும்
சோர்விலாப் பெண்கள் வெல்க!

Tuesday, January 12, 2010

மலேசிய மக்களின் நிலையான பேரன்பு






மலேசிய மக்களின் நிலையான பேரன்பு

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டிற்கு வருகை தந்த பெருமக்கள் சோழனின் கடாரம் கண்ட மகிழ்வோடு மலேசிய நாட்டில் தமிழர்களின்பெருமையை நிலைநிறுத்திய சாதனைத் தலைவர் சாமிவேலு அவர்கள் கட்டிய எய்ம்சு பல்கலைக் கழக த்தைக் கண்டடோம்.. கண்கவர் கட்டிடக் கலையின் உயர்கவைக் காண முடிந்தது. மிகப் பெரிய பரப்பளவில் பல்கலைக் கழகத்தை நிர்மாணித்துள்ளனர். ஆய்வரங்குகளும் அரங்குகளும்உலகத் தரத்தில் உள்ளன. யாங்கள் அனைவரும் இறங்கி வாயிலில் எய்ம்சு பலகலைகழகம் என தமிழில் பொறித்துள்ள வலைவுடன் படம் எடுத்துக் கொண்டொம். பின் உள்ளே சென்றோம் வாயிலில் இரு பேராசிரியர்கள் எங்களை வரவேற்றனர்.


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளரும் நிறுவனருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் வந்திருந்த பெருமக்கள் அனைவரையும் அவரவர்கள் சிறப்புக்களைக் கூறிஅறிமுகப்படுத்தினார்.கோலாலம்பூர் மாநாட்டு நிகழ்வில் மாண்பமை டத்தோசிறி சாமிவேலு அவர்கள் வந்திருந்த பெருமக்கள் சிலருக்கு தம் இல்லத்தில் காலைச்சிற்றுண்டியை தம் அன்புக் கரத்தாலேயே வழங்கினார்.எத்துனை பேர் வந்துள்ளிர்கள் என வினவினார் யான் 45 பெருமக்கள் என்று கூற்னேன். யாங்கள் காடாரம் செல்கிறோம் என்று கூறியவுடன்அங்கு அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். டத்டோசிறி சாமிவேலரின் கருணை உள்ளத்தையும் மனிதநேயத்தையும் மனமாறப்போற்றினோம். ஆசிரியமணி மாணிக்கம் டத்தோசிறி அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள் அவசியம் செல்லுங்கள் என தொலைபேசியில் நினைவுடுத்திய வண்ணமிருந்தார். மாநாட்டின் அச்சானியாகவும் இந்த பயணங்களுக்கே அடித்தளமாகவும் இருந்த அண்ணன் டாக்டர் சி தர்மலிஙகம். ஆர்வத்தோடு எங்களை அழைத்துச் சென்றது மலேசியத் தமிழர்கள் தாய்த்தமிழர்கள்பால் கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்தியது


பல்கலைக்கழக்த்தின் ஒர் அரங்கில் எங்களுக்கு வரவேற்புஅளித்தனர். பேராசியப் பெருமகன் ஒருவர் பல்கலைக்கழக்த்தின் தோற்றத்தைப்பற்றியும் அங்குள்ள துறைகளைப் பற்றியும் தமிழில் விளக்கினார்.யாங்களும் எங்களின் வினாக்களைத் தொடுத்து பல்வெறு செய்திகளைத்தெரிந்து கொண்டோம்.கடாரம் ஆயிரம் ஆண்டுககட்கு முன் இராசசாசசோழன் கண்டசாதனை. எய்ம்சு பல்கலைகம் நம் சாதனைத் தலைவர்சாமிவேலர் மலேசியாவில் இந்நூற்றாண்டில் கண்டசாதனை.

எய்ம்சு பல்கலைக் கழக மகிழ்வோடு யாங்கள் ஈப்போவிற்கும் சென்றோம். அங்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டின் தூணாகச் செயல்பட்ட ஆசிரியமணி மாணிக்கமும் செயலாளராக செயல்பட்ட பேராசிரியர் பாலாவும் ஈப்போவில் மிகப் ;பெரிய வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர் மகளிர் திருவிழாவாக நடத்தி பேராசிரியர் இந்திராணி மாணிக்கம்,மகளிர் மாமணி மாலா சந்திரசேகர், முனைவர் இலலிதா, முனைவர் வசுமதி, மருத்துவர் இராசேசுவரி அழகேசன், திருக்குறள் புலவர் செல்லம்மாள், ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்


தமிழிசைமாமணி தி,க.ச,கலைவாணன் அவர்களின் இன்னிசைநிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது ஆசிரியமணி மாணிக்கம் தொகுப்புரையில்மிகத்தேர்ந்தவர்.பன்னாட்டுத்மிழுறவுமன்ற மாநாடுகளில் மாணிக்கம் அவர்களே தொகுப்புரையாளராக இருப்பார்..உலகளாவிய தமிழர்களின் சிறப்பை அறிந்த பெருமகன் ஆசிரியமணி மாணிக்கம்.தந்தையரும் மற்ற மகளிர் பெருமக்களும் முன்கூட்டியே சென்றிருந்த்தனர். யாஙகள் சற்று தாமதமாகவே சென்றோம் ஆசிரியமணியின் தொகுப்புரையோடு அனைத்துப் பெருமக்களும் உரையாற்றினர்.


யான் தற்போது 45 தமிழ் அறிஞர், முனைவர், பேராசிரியர், கவிஞர், புலவர், மருத்துவர், பொறிஞர்,ஆசிரியர், மகளிர் மாமணிகள், மூத்த பெருமக்களோடு மலேசிய மண்ணின் முழுப்பகுதியையும் வலம் வரும்போது என் எண்ணங்கள் பின்நோகிக்ச் சென்றது. அருமைத் தந்தையார் அவர்கள் 1977 ஆம் ஆண்டு அமரர் இரா நா. வீரப்பனாரின் உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டை சென்னையில் மயிலை கற்பகாம்பாள் திருமணமண்டபத்தில் எழுகதிர் ஆசிரியர் முனைவர் அரு.கோபாலன் அவர்களின் துணையோடு நடத்தினார்கள்.தமிழ்ப்பணியின் சார்பில் சிற்ப்பு மலர் ஒன்றும் வெளியிட்டோம்.அப்போது என் வயது 18.. அந்த மாநாட்டிற்கு மாணிக்கம் அவர்கள் ஒரு குழுவோடு சென்னைவந்தது நினைவிற்கு வந்தது..பளபளக்கும் நீல நிற மலேசிய பூப்போட்ட பட்டுச் சட்டை இளமைத் துடிப்பான முகம் கையில் ஒரு ஒளிப்படக்கருவி அவர் தலைமையில்தன் குழுவினர் வருகைதந்திருந்தனர். அதில் திருமதி கமலாட்சி ஆறுமுகம், திரு.ஆறுமுகம், போன்ற பெருமக்களெல்லாம் வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்ற நிகழ்வுகளெல்லாம் என் முன் நிழலாடின.


அதற்குப்பின் பன்முறை பல்வேறு பெருமக்கள் வருகை தந்து வரவேற்பு நடத்தியுள்ளோம். ஆசிரியமணி மாணிக்கம் ஆர்வம் குன்றாது இன்றும் மாநாட்டின் தொடர்நிகழ்வாக ஈப்போ நகரின் புகழ்பெற்ற அரங்கில் அதே பளபளக்கும் பட்டுச் சட்டையோடு நிகழ்வை நடத்துவது மலேசியத்தமிழ்ர்களின் மாறா அன்பைப் புலப்படுத்தும்

நாம் வாழும் காலத்தில் தமிழ் உண:ர்வையும் தமிழகத்தில் பேயாட்சியை ஓழித்து நல்லாட்சியைக் கண்டவர் நம் முதல்வர், வறுமையைக் களைய ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கிய பெருவள்ளல் நம் கலைஞர். உலக்மே வியக்கும் வண்ணம் செம்மொழித் தகுதியை இந்தியப் பேரரசில் போராடிப் பெற்ற பெருமகன். உலகமே வியக்கும் வண்ணம் உலகச் செம்மொழி மாநாட்டை நடத்தும் முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞருககு வாழ்நாள் சாதனையாளர் விருதை மலேசிய மக்களின் சார்;பில் ஆசிரியர்மணி மாணிக்கமும், பேராசிரியர் கு.பாலசுப்பிரமணீயமும் வழங்கினர், மான்பமை கலைஞரின் சார்பில் அருமைத் தந்தையார் ருங்கவிக்கோ,முன்னாள்நகரத் தந்தை சா. கணேசன்,கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், தென்சென்னை தி.மு.க.இலக்கிய அணித்தலைவர் மாம்பலம் சந்திரசேகர், யானும் இணைந்து வரலாற்று நாயகரின் பட்டத்தைப் பெற்றுக்கொண்டோம்.


என் வாழ்க்கையில் விபரம் தெரிந்த நாள்முதல் வாழ்நாளில் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற உணர்வோடு தொண்டாற்றிவருபவன்.பன்னாட்டு அன்பர்களின் பேரன்பையே வாழ்வாகக் கொண்ட எனக்கு தந்தையரின் முன்னிலையில் தந்தை பாலாவும் ஆசிரியமணி மாணிக்கமும் செந்தமிழ்த் தொண்டர் சிகரம் எனும் பட்டம் வழ்ங்கி சிற்ப்பித்தனர். வந்திருந்த பெருமக்கள் அனைவருக்கும் ஆடவருக்கு சட்டைத்துணியும் மகளிருக்கு புடவையும் வழங்கி சிறப்பித்தனர்.மலேசிய மண்ணில் கோலாலம்பூர், ஈப்போ, கெடா, பினாங்கு, மலாக்கா நகர்களில் தமிழ்கத்துப் பெருமக்களுக்குச் சிறப்பும், தமிழ் உறவும் கைகோர்த்த காட்சி பன்னாட்டுத் தமிழுறவின் வலிமையையும் பெருமையையும் உணர்த்தியது.




.