Thursday, March 24, 2022


கனடா உதயனின் பகிர்வோம் பாராட்டுவோம் வெள்ளிவிழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                       

  இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்  


                                          

 உதயன் ஆசிரியர் நட்பின் நாயகர் லோகேந்திரலிங்கம் அவர்கள் கோரனா தீநுண்மி காலத்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கு வருகை தந்துள்ளார்கள். நானும் தம்பி உதயன் இந்தியப் பிரதிதி பிரகாசு அவர்களும் வானூர்தி நிலையம் சென்று அவரை வரவேற்று மகிழ்ந்தோம். தமிழகத்திலிருந்து செல்லும் அறிஞர் பெருமக்களை வரவேற்று தம் இதழில் வெளியிட்டு சிறப்பிக்கும் பேருள்ளத்திற்கு சொந்தக்காரர். உலகில் எத்தனையோ தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன. கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் வார இதழிற்கு என்றும் சிறப்புண்டு. உலகளாவிய தமிழர்களுக்கு விருது வழங்கும் பெருமை உடைய இதழ். கனடிய அரசிடம் சான்றிதழ்கள் பெற்று அந்த நிகழ்வில் வழங்குவது உதயனின் தனிச்சிறப்பு. நானே கனடாவில் அவர் சான்றிதழ் பெற படும் பாட்டை நேரில் கண்டிருக்கிறேன்.

  உதயன் இதழின் வெள்ளிவிழா ஆண்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டு கனடாவில் மிகச் சிறப்பாக நடத்தினார். சென்னையிலும் பங்களித்த பெருமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறபித்து நம்மோடு மகிழவே இந்த நிகழ்வை பகிர்வோர் பாராட்டுவோம் என இந்த ஐந்து நட்சத்திர விடுதியில்நடத்துகிறார். மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பிரகாசு அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். 

ஒரு சிறந்த பெண்மணியாகவும் குடும்பத்தலைவியாகவும், ஆண்மீக ஒருங்கிணைப்பாளராகவும், சமுகச் சிந்தனையுடையவராகவும் விளங்கும் லோகன் அவர்களின் துணைவியார் பத்மா லோசினி அவர்கள் வருகை தந்துள்ளார்கள். மகளிர் தினத்தன்று அருமை அம்மையார் அவர்களுக்கு நந்தவனம் இதழின் சார்பாக விருது வழங்கினார்கள். மிகத் தகுதியான் பெருமாட்டிக்கு விருது வழங்கியுள்ளீரகள். தம் குடும்பம் தன் கணவர் குடும்பம் தமிழ் உறவுக் குடும்பம் என அனைவருக்கும் அன்னையாக விளங்கும் பத்ம லோசினி அம்மையாருக்கு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உதயன் லோகன் அவர்கள் நன்றியின் இலக்கணம் இன்று சென்னையில் தனக்கு தன் இதழிற்கு உதவியாக இருக்கும் பெருமக்களை நன்றியுணர்ச்சியோடு பாராட்டியுள்ளார்கள். பாராட்டும் போது அனைவருக்கும் பரிசுப் பொதி ஒன்றை வழங்கியுள்ளார்கள். அந்தப் பரிசைப் பொதி தானே தயார் செய்து இங்கு வழங்கியுள்ளார்கள். அவர் வழங்கியுள்ள கோப்பையில் உதயன் நண்பன் ரூபம் என்ற மூன்று பெயர்களும் பொறிக்கப்பட்டு அழகு ஒளிர மிளிர்கிறது.. இந்த நிகழ்விற்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் உலகமெலாம் தமிழர்கள் தம் மதுரா பயண ஏற்பாட்டகம் சார்பில் ஒருங்கிணைக்கும் வி.கே.டி பாலன் அவர்களும் வருகை தந்துள்ளாது இந் நிகழ்வுக்குப் பெருஞ்சிறப்பு.. நட்பின் நாயகரின் அரும்பணிதொடரவும் உதயன் இதழ் நூற்றாண்டு காணவும் வாழ்த்தி இந்தக்  கவிதையை வழங்கி மகிழ்கிறேன். 

வெள்ளிவிழாக் காணும் எங்கள் 

வித்தான உதயன் மாட்சி

கிள்ளைமுதல் முதியோர் காணும் 

கிளர்ந்தெழும் எழுத்தின் ஆட்சி  

வல்லமையார் உழைப்புச் செம்மல் 

வழங்கிடும் தமிழின் காட்சி  

எல்லையிலா சோதனை மீண்டே 

ஏற்றநம் உதயன் வாழ்க !


நட்பிற்கே நாயகன் இவரே 

நலமோங்கும் காவலர் லோகன் 

திட்டமிடும் தெளிந்த நோக்கால் 

திகழ்புகழ் உதயன் வென்றார் 

மட்டிலா எழுச்சி பொங்க 

மனம்மகிழ் கனடா காண்பார் 

விட்டிலாய் ஊர்தி பறந்தே 

வினைத்திட்ப லோகன் வாழ்க!! 


கற்றமேல் சான்றோர் சூழ்ந்தே 

கவிவானம் போன்றே செல்வார்

நற்றவம்சேர் தொண்டர் தம்மை 

நனிபுகழும் உதயன் காட்சி 

பெற்றிநல் கூட்டம் சேவை 

பெருமைசேர் நாயகன் லோகன் 

சுற்றமென உலகம் காணும் 

சூழ்புகழ் உதயன் வாழ்க!!!  


உலகெலாம் தமிழர் கண்டு 

உன்னதமாம் உதயன் விழாவில் 

வளம்காணும் விருதைத் தந்தே 

வண்டமிழைக் காக்கும் லோகன்  

களம்பல கண்டோர் தம்மை 

கவினார்ந்த உதயன் காட்டும் 

நலமெலாம் உருவாய் பத்மா 

நயத்தகு இணையர் வாழ்க !!!!

Wednesday, March 23, 2022

 குமரி சென்னை ஊர்திப் பயண நிறைவுவிழா                                                                                  தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்,                                                                ஆசிரியர் தமிழ்ப்பணி                                                                                                          இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்      




                                     

     எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தோடு உலகத் தாய்மொழிநாள் தமிழ் இந்திய ஆட்சிமொழி திருக்குறள் தேசிய நூல் ஆகிய நோக்கங்களுக்கு குமரி முதல் சென்னை வரை 1993 ஆம் ஆண்டு நடைப்பயணமாகத் தொடங்கி தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஊர்திப்பயணமாக வரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கொ அவர்களை இவ்வாண்டு வரவேற்று நிறைவு விழாவைக் நடத்தும் பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.                                          

          தலைநகர்த் தமிழ்சங்கத்தின் கட்டிடத்தில் நடை பெறுவது சாலச் சிறந்தது. அரங்கில் தமிழ் அறிஞர்களின் திரு உருவங்களாக உள்ளன. அரும்பாடுபட்டு உருவாக்கிய சுந்தரராசன் அவர்களையும் அவரோடு துணைநின்ற பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். கன்னியாகுமரியில் அண்ணல் காந்தி மண்டபம் முன் ஐயன் திருவள்ளுவர் அருட்பார்வையோடு 12\2 ல் தொடங்கிய பயணம் தமிழகம் முழுமையும் முழக்கமிட்டு கூட்டங்கள் நடத்தி உலகத் தாய்மொழி நாளான இன்று 21\2ல் தலைநகர்த் தமிழ்சங்கத்தில் உள்ள ஐயன் திருவளுவர் சிலைமுன் நிறைவுற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டம நகரம் பேரூர் சிற்றூர் அனைத்து இடங்களிலும் நிகழ்வுகள் நடத்தி ஆதரவு நல்கிய தமிழ் அமைப்புகளுக்கும் அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.               எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ இங்கே வருகை தந்துள்ளார்கள் அவருடைய அளப்பரிய தொண்டு உரை தமிழர்களை நெஞ்சு நிமிரச் செய்யும். அவர் இன்று ஒரு கோட்டம் அமைத்து அங்கு அவரை நாடி தமிழர்கள் தமிழர் வரலாறு அறிய வேண்டும். போலிச் சாமியார்கள்தான் நாட்டில் பெரும் சாதனையளர்களாக உள்ளது தமிழகத்தின் சாபக்கேடு.                              

         மண்பாண்ட தொழிலாளர்களின் தலைவர் மேனாள் மாநகராட்சி உறுப்பினர் ஐயா சேம நாராயணன் அவர்கள் ஐயாவை வாழ்த்த வருகை தந்துள்ளார்கள். ஐயா  அவர்களின்  வீட்டின் முன் மண்பாண்டங்கள் குவிந்து இருக்கும் தனக்கும் மண்பாண்டங்கள் செய்யத் தெரியும் நான் செய்துள்ளேன என்பதை வரவேற்கிறேன்..  இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் அண்மையில் கடைசிவிவசாயி என்ற படம் பார்த்தேன் அந்தப் படத்தில்  நடிகர் விசய் சேதுபதி எடுத்துள்ளார் அவர் சிறிய வேடத்தில் வந்து விவசாயியை முன்னிறுத்துகிறார். பறை இசைக் கலைஞர்கள் மண்பாண்ட குயவர்கள் எந்திலையில் உள்ளனர். அவர்கள் ஒற்றுமையாய் இருந்தால்தான் நாடு செழிக்கும் தழைக்கும். இல்லையேனறால் அனைவரும் கடைசித்  தலைமுறைதான் என்பதை உணர்த்துகிறார்..                    

               தமிழ் தமிழர் சிந்தனைகளுக்காக தம் வாழ்நாளையே ஒப்புவித்த தந்தையார் பெருங்கவிக்கோ 1993ஆம் ஆண்டு நடைப்பயணமாக தமிழ் அறிஞர்களோடு வந்து இன்று 30 ஆண்டுளாக ஊர்திப்பயணமாக வந்துள்ளோம்  இந்த உணர்வுகளுக்கும் கடைசி மாமனிதராக உள்ளார். தமிழர்களாகிய நாம் நம்மில் உள்ள வேறு[பாடுகளைக் களைந்து ஒற்றுமையோடு நாம் நம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் திருக்குறள் தேசிய நூல் சாதனையை நிகழ்த்துவோம்.. அறிஞர் பெருமக்கள் பலர் தங்கள் அமைப்புகளின் சார்பில் பங்கேற்றுள்ளீரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்                     

  .( 21-2-2022 அன்று குமரி சென்னை ஊர்திப்பயண நிறைவு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

 திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அந்தாதி 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர் தமிழ்ப்பணி 

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் 

     

      மதரை மாநகரின் அடையாளமாக விளங்கிய திருக்குறட்செம்மல் மணிமொழியனாரின் அந்தாதி அவர் வாழும் காலத்தில் தந்தையார் பெருங்கவிக்கோ பாடி தமிழ்ப்பணியில் வெளியாக்கி இன்று நூலாக வெளிவருவது காலத்தின் கொடையாகும் 


      உலகம் முழுமையும் தமிழால்அளந்த பெருங்கவிக்கோ இந்த தமிழ்க்குடிக்கு அடையாளப்படுத்திய  சான்றோர்கள் ஏராளம் அவருள் நம் திருக்குறட்செம்மல் மணிமொழியானார் தலையானவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி எண்ணற்ற பெருமக்களை அவரது கல்லூரி விடுதியில் பாராட்டி சிறப்பித்த புரவலர் பெருமகன். முத்தாய்ப்பாக பன்னாட்டுத் தமிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டை 4 நாட்கள் தந்தையார் பெருங்கவிக்கோவின் வேண்டுகோளுக்கிணங்க தலைமையேற்று உலகமே வியக்கும் வண்ணம் வெள்ளிவிழா மாநாட்டை நடத்திய தமிழ்செம்மல்.மாநாடு நடத்தியதோடு மட்டுமல்லாமல்  நிலையான கல்வெட்டாகத் தம் விடுதியின் திருவள்ளுவர் அரங்க வாயிலில் பொறித்து வைத்த பெருமகன் நம் அந்தாதி நாயகன். 

 நம் அந்தாதி நாயகரை அறிமுகப் படுத்தும் நம் உலக மாக்கவி 

ஓங்குவகை வாழ்வில் ஒளிமல்கும் செய்வினைகள் 

தாங்கு தமிழ்குடி தான்பிறந்தே – வீங்குவளம் 

செல்வம்நல் செல்வாக்கு சீரார் மனிதநேயம்              

   நல்ல மணிமொழி யன். (1)

இந்த நான்கு வரிகளுக்குள்ளேயே மணிமொழியானாரின் பிறப்பு வாழ்வு சிறபைப் பதிவு செய்துள்ளார். விடுதிகள் பலர் வைத்துள்ளனர் ஆனால் நம் மணிமொழியானாரின் விடுதியில் தங்காத சான்றோர்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் காக்கும் கொடை நெஞ்சராகத் திகழ்ந்தவர் நம் அந்தாதி நாயகர். 

ஐயா அவர்களின் துணைவியார் அன்னை கமலா அம்மா அவர்கள் பற்றி எழுதிய அந்த்தாதி அவர்தம் பெருமையை செப்புகிறது. 

வீணையின் நாதமோ மெல்லிசை கீதமோ 

பூணும் அணிஅழகோ பொன்னோ - மாணும்நல்       

 ஓவியமோ காவியமோ உள்ளொளிக் காந்தமோ 

தேவிக மலாவின் திரு  (54) 


திருமகளோ கொஞ்சும் அருமகளோ பாசக் 

கருமகளோ காமகளோ காதல்  - தருமகளோ 

தேவி கமலா செம்மை மணிமொழியன் 

ஆவி கலந்த அகம் (55)  


தம் துணைவரையே எண்ணி வாழும் அருமைப் பெருமாட்டி செல்வச் சீமாட்டி அன்னை கமலா அம்மையாரின் சிறப்பு இந்தப் பாக்கள் மெய்ப்பிக்கிறது. கமலா அம்மையாரும் ஐயாவும் இணைந்து  தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் எம் மதுரை பொற்பரி இல்லத்தைத் திறந்த்து என் கண்முன் நிற்கிறது.

அய்யாவின் மருகர் கல்விக்கோ கணேசன் அவர்களின் தந்தையார் சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றிய பாடல் கல்விக் குடிச் சிறப்பைப் பறைசாற்றுகிறது

 பண்பாடு மிக்கார் பலகல்வி யாளர்க்கோ 

சண்முகம் சுந்தரம் தக்கமுறை – புண்ணியர் 

போற்று கண்பதியர் பொந்தேவி தந்த மாமா  

ஏற்று சம்பந்தத்தின் இயல்  ( 23 )

தமிகத்தில் கல்விக்கொடை நெஞ்சராக வாழும் குடும்பத்தைப் பற்றிய பதிவு நம் நெஞ்சைத் தொடுகிறது.

திருக்குறட் செம்மல் மணிமொழியார் அவர்களின் உரையாடும் போது வள்ளுவப் பேராசானின் குறள்கள் மடை திறந்த வெள்ளம்போல் வெளிவரும். நாம் எந்தப் பொருள்பற்றிப் பேசுகிறோம் அந்தப் பொருளிற்கான் குறளைத் தருவார். திருகுறட்செம்மல் ஒரு கவகனகராகவே வலம் வந்தார். 

தெளிவாய்த் திருக்குறள் நூற்றுமுப் பத்தின் 

அளிமூன்றோ டேதான் அகத்தில் – ஒளிபதித்த 

சான்றோர் மயக்கும்  தடைநீக்கும் வேளாளன்  

வான்போல் வளந்த வகுப்பு   (75)

வகுத்தான் வகுத்த வகையல்லால்  கோடி 

தொகுத்தார்க்கும் துய்ப்பது அரிதாம் – பகுத்துச்சொல் 

வள்ளுவன் தேர்ந்த வழிகற்றே அவ்வழியின்

 வெள்ளம்போல் சொல்லும் விடை  ( 76 )

மதுரை மாநகரின் குறளாசானாக மணிமொழியார் திகழ்ந்த்தை இப்பாடல் படிப்போர் உணரலாம்.

அன்பே உருவான் ஐயா அவர்களின் சிரிப்பு . காட்சிக்கு எளியாராக எல்லோரையும் அரவணைக்கும் பேருள்ளம் நம் மணிமொழியாரின் உள்ளம். 

காண்பார் களுக்கெல்லா காட்சி மலர்முகமே

பூண்பார் தமக்கெல்லாம் புன்னகையே – மாண்புடைய      

  உச்சத் தமைச்சர் உறவுமுதல் சாமான்யர்                  

 மெச்சும் நடுநிலை வீறு  ( 47 ) 

       மாசற்ற மாமனிதரின் அந்தாதி அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய நூல். ஏற்ற தாழ்வுள்ள சமுதாயத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும். அறச் சிந்தனைகள் இல்லறத்தின் வழி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மணிமொழியானாரின் அந்தாதி நூல் சிறந்த பதிவு. நூறு பாடல்களும் மணிமொழியனாரின் புகழ்பாடும் பாடல்கள். தம் பல்வேறு அயராத்  தமிழ்த் தொண்டுகளுக்கிடையே அந்தாதி வழங்கிய தந்தையாரைப் போற்றி பதிப்பிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். திருக்குறட்செம்மல் மணிமொழியனார் புகழ் ஒங்குக உயர்க.


Wednesday, March 16, 2022

 நேர்படப் பேசு அமுதசுரபி அறக்கட்டளையின் விருது வழங்கு விழா




தமிழ்மாணி வா.மு.சே.திருவள்ளுவர்   

                          நேர்படப்பேசு இதழின் ஆசிரியர் அமுதசுரபி அறக்கட்டளையின் தலைவர் அரிமா ஞானி அவர்களின் அழைப்பின் பேரில் வந்துள்ளேன்.சாதனைப் பெண்கள் பலருக்கும் விருது வழங்கியதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விருது பெற்ற கலைஞர்கள் கவிஞர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் சமூக சேவகர்கள் அனைவருக்கும் வாழ்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.                                                 சென்ற ஆண்டு அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் ஊர்திப் பயணமாக வந்தபோது  சென்னையில் மிகச் சிறந்த வரவேற்பு வழங்கினார் ஞானி அம்மையார். சென்னையில் பல தமிழ் அமைப்புகள் இருப்பினும் ஞானி அவர்களின் அமுதசுரபி அறக்கட்டளைதான் நடத்தியது அந்த நன்றியுணர்ச்சியின் காரண்மாகவே இங்கு நின்றுள்ளேன். விருது பெற்ற பெருமக்கள் பலர் பல மாவட்டங்களிலிருந்து பல ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார்கள். அவருக்கும் துணைநின்ற பெருமக்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன். விருது பெற்ற பெருமக்கள் சிலர் காலில் விழுந்தனர். அருள்கூர்ந்து காலில் விழுவது தவறு இரு கரம் கூப்பி வணங்குங்கள். நான் ஒருமுறை இனமானக் காவலர் பேராசியர் பிறந்த நாளில் அவர் காலைத் தொட்டு வணங்கினேன். பேராசியர் என்னைத் தட்டி கைகொடு காலில் விழாதே என்று கூறினார் அன்றிலிருந்து  நான் காலில் விழுவதை விட்டுவிட்டேன். சுய மாரியாதை உணர்வு தேவை. ஒரு அம்மையாரை கணவர் காலில் கூட விழக் கூடாது தோழமையோடு இருங்கள் என்றேன். இது என் கொள்கை என்று கூறினார். அவரது மொழியையும் ஏற்கிறேன். இருப்பினும் நம்மவர்கள் காலில் விழுந்து அடிமைகளாக இருந்ததை நாம்மறக்கக் கூடாது. அருமை நண்பர் அரிமா தகுதி திவாகரன் அவர்கள் என்னை இந்த மேடைக்கு மிகச்சிறப்பாக அறிமுகப் படுத்தினாரகள் பெருமகனாருக்கு நென்சார்ந்த நன்றி. தமிழ் அறிஞர்களுக்கு தொண்டு செய்வதில் மிகச்சிறந்த் பெருமகன். ஆளுயர மாலை அணிவித்து அவரிடம் சிறப்புப் பெறாத பெருமக்கள் இல்லை எனும் அளவிற்கு பெருந்தொண்டுச் சிகரம். அரிமா மாவ்ட்ட்த்தில் ஆசிரியர் தின விழா மாவட்ட்த் தலைவராக இருந்தபோது 1000 ஆசிரியப் பெருமக்களை சிறப்பித்த பெருமகன். 

ஞானியன் கணவர் அரிமா அசய் மிகச்சிறந்த பண்பாளராக உள்ளார். ஞானியின் பணிகளுக்கு பின் புலமாக உள்ளார். ஒவ்வொரு ஆணிற்குப் பிண்ணும் பெண் உள்ளார் இங்கு மாற்றாக ஆண் உள்ளார். அசய் பெருமகனை நெஞ்சாரப் போற்றுமிறேன். 

நான் அரிமா சங்கத்தின் தலைவராக இருந்த போது ருபேலா என்ற பருவப் பெண்களுக்கு போடப் படும் ஊசி அரிமா இயக்கம் அறிமுகப் படுத்தியது. பல் பெண்களுக்கு அப்பொது விழிப்புணர்வூட்டி போடவைத்தோம். இரத்த வங்கி கண்வங்கி என மக்கள் தொண்டறப் பணியில் தலைசிறந்து நிற்பது அரிமா இயக்கம். எங்கல் சங்கத்தின் அறக்கட்டளை மருத்துவமனை வைசுனாவ கல்லூரியில் வாயிலில் உள்ளது அங்கு கண் பல் பொது மருத்துவம் பெண்கள் சிறப்பு மருத்துவம் எளிய மக்களுக்குப் பார்க்கிறோம் என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறேன் 

மகளிர் பெருமக்கள் திரளாக கூடியுள்ளீர்கள். ஆற்றல் பெருமக்களாக இங்கே அனைவருக்கும் விருது வழங்கியுள்ளது அமுத சுரபி அறக்கட்டளை. 

ஒரு குடும்பத்தின் ஆணி வேர் பெண் தான். ஒரு பெண் இல்லையென்றால் வாழ்க்கை முழுமை பெறாது. எந்தக் குடும்பமாக இருந்தாலும் பெண் சிறப்பாக இருந்தால்தான் அக் குடும்பம் சிறக்கும். 

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை  

ஒரு ஆண் செம்மாந்து உள்ளான் என்றால் அதற்குத் பெண்தான்  காரணம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.. அதற்கு அச்சானியாக விளங்கும் இங்கு வருகை தந்துள்ள பெருமாட்டிகளே உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.      நம் ஊரில் உள்ள குடும்ப அமைப்புதான் இந்தியாவின் வெற்றிக்குக் காரணம். வெளிநாடுகளில் குடும்ப உறவு சிறப்பாக இல்லை . 

 ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாண்பாடு அங்கில்லை. இன்று ஒருவர் மனைவி மற்றொரு நாள் மற்றவரின் மனைவியாக உள்ளார். அதை அந்நாடு ஏற்றுக் கொள்கிறது. ஆதலால் குடும்ப உறவுகள் மீக்கெழுவதில்லை. 

தற்காத்த்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண் 

தன்னையும் காத்து தம் கணவரையும் காத்து தம் புகழையும் காத்து உறுதி கலையாமல் நிற்பவள் பெண் என்று வள்ளுவப் பேராசான் கூறுகிறார். வளுவப் பேராசான் வாக்கிற்கிணங்க வாழும் மகளிர் பெருமக்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

இசுலாமியப் பெருமக்கள் கிறித்துவப் பெருமக்களும் இவ்விழாவில் பங்கேற்பது கண்டு மகிழ்கிறேன். ஒரு மதச் சார்பற்ற விழாவாக நடத்தும் பாங்கைப் போற்றுகிறேன். பெண்களை போற்றும் குடும்பம் உச்சம் பெறும். பெண்களைப் போற்றும் அமைப்பு பொலிவுறும். பெண்களைப் போற்றும் நாடு முன்னணி நாடாக விளங்கும் என்பது கண்கூடு.           விருதுகள் பெற்றுள்ள விருதாளர்களே மகளிர் பெருமக்களே உங்களை மீண்டும் வாழ்த்தி விடைபெறுகிறேன்

.( நேர்படப் பேசு அமுதசுரபி அறக்கட்டளையின் விருது வழங்கு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

Sunday, March 13, 2022


 மகத்தான வெற்றி தந்த முதல்வரே வாழ்க! வாழ்க!!


தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர  

  ஆர்த்தே எழுந்து நன்றாய்                               

 மாட்சியர் மேயர் தேர்தல்                           

மகத்துவ தி.மு.க வெற்றி                                

 காட்சியர் மற்றோர் எல்லாம்                                                                                     கவிழ்ந்தே  தோற்றார் என்னே                                               

  மாட்சியாம் தமிழர் வேட்கை                                             

  முதல்வர் ஸ்டாலின் வாழ்க!


நகராட் சியெல்லம் எங்கும்          

 நயத்தகு தி.மு.க வெற்றி             

பகைவர்  எங்கே மறைந்தார்                         

  பகலவன் எழுச்சி கண்டே                              

 தகத்தக உதய சூரியன்                                    

 தக்கநல் மக்கள் காத்தே  

மகத்துவ வெற்றி தந்த                

முத்துகரு ஸ்டாலின் வாழ்க! 


ஊராட்சி பேரூ ராட்சி             

  உவந்தே தி.மு.க வெற்றி       

   திறமான தொண்டர் எல்லாம்       

 தீத்திற தலைமை கண்டார்         

 வரமென வளமார் பெண்கள்    

 வலம்வரும் மாட்சி என்னே       

 உரமான வெற்றி தந்த             

உத்தமர் ஸ்டாலின் வாழ்க


களத்தினில் வென்றோர் எல்லாம்

 கலைஞரின் அறத்தைக் கொள்க

 உளத்தினில் திராவிடம் எண்ணி

 உண்மையாய் மக்கள் காக்க!   

  தலமெலாம் திராவிடத் தீரம்     

 தகுதியாய் வெல்க வெல்க        

 உளமுயர் உன்னத முதல்வர்      

 உளப்படி உணர்வாய் நிற்க!







Friday, March 11, 2022

 முப்பதாம் ஆண்டு நிறைவு ஊர்திப்பயணம் தொடக்கவிழா                                                                 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                                              30 ஆம் ஆண்டு நிறைவு ஊர்திப்பயணம் நிகழ்வு இன்று காந்தி நினைவாலய்ம் முன் ஐயன் திருவள்ளுவர்  அருட்பார்வை முன் நடப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய எண்ணங்களெல்லாம் 1993ஆம் ஆண்டு முன்னோக்கிச் செல்கிறது. இந்த மண்னின் மைந்தர் தி.மு.க  மாநிலங்கவை உறுப்பினர் ஆரல்வாய்மொழி கல்லூரியின் தாளாளர் சங்கரலிஙகனார் புலவர் பெருமாள் பிள்ளை ஆயோரின் பெரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கிறேன். நடைப்பயந்த்தை தம் தள்ளாத வயதிலும் குமரி வந்து தொடங்கி வைத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் பெரியார் பேருரையாளர் இறையன், திராவிடன் நல நிதியின் தலைவர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பெருமகன் நீதியரசர் வேணுகோபால் உணர்வோடு நடைபயணத்தில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள் புலவர் பெருமக்கள் இளைஞர்கள் அனைவரையும் இன்று எண்ணிப்பார்க்கிறேன். இன்று பலர் காலமாகிவிட்ட்னர் ஆனால் அவர்கள் எந்தக் கொள்கைக்காக எங்களோடு நடந்தார்களோ அந்தக் கொள்கை இந்த ஊர்திப் பயணத்தின் வழி உயிரோட்டமாக உள்ளது.                                                                                             அந்த  நடைப்பயணத்தின் தொட்டர்ச்சிதான் இன்றைய 30ஆ,ம் ஆண்டு தமிழ் ஊர்திப் பயணம். ஒவ்வொரு ஆண்டும் தளர்ச்சியில்லாமல் குமரியில் எல்லாப் பணிகளையும் தம் மேல் கொண்டு செயலாற்றும் மூதிளைஞர் குமரிக் கிளைத் தலைவர் தியாகி முத்துக்கருப்பன் பணி மகத்தானது. ஐயா அவர்கள் கீழே விழுந்து புண் ஆறாத நிலையிலும் இப்பயணக் கூட்டத்தை நடத்தி தொடங்கி வைக்கும் அவர்கள் நெஞ்சுரத்தைப் போற்றுகிறேன். அவரோடு இணைந்து பணியாற்றும் இவ்வாண்டு எங்கள் சேது அறக்கட்டளை விருதாளர் தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் இளங்கோ என்ற வஞ்சிக்கோ அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன் . தலைநகரில் தமிழ்ச்சங்கத்திற்கன கட்டிடம் கண்டு அங்கு தமிழ்ச் சான்றோர்கள் படங்களையெல்லாம் திறந்து அழியாப் புகழை உருவாக்கியுள்ள சுந்தர்ராசன் அவர்கள் இங்கே வருகை தந்துள்ளார் மற்றும் வாழ்த்தி வரவேற்ற அனைத்துப் பெருமக்களையும் வணங்கி மகிழ்கிறேன். தமிழ் ஊர்திப்பயண 30ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு மாண்பமை முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் காணச் சென்றோம். கொரணா காலமாக உள்ளதால் கவனமாக சிறப்பாக செயல்படுங்கள் என வாழ்த்தி அனுப்பினார். தந்தையாரின் பிறந்த நாளன்று தந்தையை கைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெருவித்தார். இந்த வாழ்த்து ஐயா முத்துக் கருப்பன் வஞ்சிக்கோ சுந்தர்ராசன் அரிமா கீதாகுமாரி தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் தெருவிக்கப்பட்ட வாழ்த்து. ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்கட்கு தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பல தமிழ் சார்ந்த திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளார். தந்தைபெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை தம் ஆற்றலால் முதல்வர் அவர்கள் நீக்கி ஆலயங்களில் தமிழ் வழிபாட்டிற்கு வித்திட்டுள்ளார். அனைவரையும் அர்ச்சகராக்கி அமைதிப் புரட்சியே நடத்தியுள்ளார். தமிழக அரசின் பணியாளர் தேர்வணையத்தில் தமிழ் தேர்வு மொழியாக அறிவித்துள்ளது. தமிழ் தேர்வில் வெற்றி பெற்றால்தான் தமிழக அரசின் வேலை என் அறிவித்து சாதனைச் செம்மலாகத் திகழ்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த திருவள்ளுவர் ஆண்டை சென்ற ஆட்சி முடக்கி நாசகார வேலை செய்த்து. அதையெல்லாம் முறியடித்து மீண்டும் திருவள்ளுவராண்டு தமிழாண்டு நடைமுறைப்படுத்தியுள்ளார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நம் கொள்கை  முழக்கத்திற்கு நம் முதல்வர் அவர்கள் தம் ஆட்ட்சியை ஒப்படைத்து அளப்பரிய சாதனைச் சிகரமாக விளங்குகிறார். இந்த ஆட்சியைத் தக்கவைத்தால்தான் தமிழ் வாழும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஊர்திப்பயணத்தின் வெள்ளிவிழா ஆண்டின் போது குமரியிலிருந்து தில்லி நோக்கி பெருங்கவிக்கோ தலைமையில் பயணித்தோம். இந்தியா முழுமையும் திருக்குறளை தேசிய மொழியாக்குக என்ற முழக்கத்தை முன்வைத்தோம். தலைமையமைச்சர் அலுவகத்தில் எங்கள் கோரிக்கைமடலை சேர்ப்பித்தோர்ம் பெற்றுக்கொண்டமைக்கு மடல் வந்தது. ஆனால் இது நாள்வரை திருக்குறள் தேசிய நூலாக்கப் படவில்லை. அதற்குத் தொடர்ந்து போராடுவோம். குமரி முதல் சென்னை தில்லி வரை நம் கொள்கைக்கு இணைந்து போராடும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நடைப்பயணத்தின் நினைவாக இங்கே நினைவு கற்பலகை திறந்திருந்தொம். நம் கழக வேட்பாளர் மகேசு அவர்கள் நாகர்கோய்யில்  மாநாகராட்சியில் வெற்றிபெறுவார் என்பதுதிண்ணம். மீண்டும் இங்கே பலகை திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

     (குமரியில் 30 ஆம் ஆண்டு  ஊர்திப்பயணம் தொடக்க்க நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)