Wednesday, December 15, 2021

 வீரமகான் பிபின்ராவத் – வீர்ர்கட்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


அகில இந்திய தலைமைக்கோ                                                                                

ஆற்றல் செயலின் பெருமைக்கோ                                                                    

தகிக்கும் வானம் உடைந்தந்தோ

தன்னிகர் மக்கள் அழுகையந்தோ

 முகிலின்   கூட்டம் எதிரியாமோ

முழுமைத் தலைமை முடிந்ததந்தோ

பகிரும் உலகமே சோகமந்தோ

படையின் சிகரம் அழிந்த்தந்தோ!


வீரன் நாட்டினைக் காப்பதற்கே

விதியாய் சாவோம் என்றாரே

உறவார் உற்றார் மக்களுமே

உவந்தே ஏற்க மொழிந்தாரே 

பறந்தே வானில் சாதித்தோன் 

பிரிவு எம்மை வதைக்கிறதே

இறந்த போதும் இல்லாளே 

இணைந்தே மாண்ட கொடுமையென்னே!


தில்லி சூளூர் அடைந்த்துமே 

தீதின் கொடுமை வெடித்ததுவே

 அள்ளும் உடலாய் மலையினிலே

அவலம் நடக்கல் முறையாமோ 

உள்ளம் உவக்க கிராமத்தார்

உருகிக் காக்க முனைந்தாரே

தள்ளும் ஊழின் கொடுமையந்தோ

தணலாய் வீர்ர்கள் மாண்டாரே!


வீர் மகான் பிபின்ராவத்

வித்தக வீர்ர் படையோர்க்கே

அருமை முதல்வர் ஸ்டாலினுமே 

அணியாய் வழங்கும் வீரவணக்கம்! 

பெருமை பிரதமர் அமைச்சரெலாம் 

பெரிதாய் வணங்கும் வீரவணக்கம்! 

உரிமை வழியாம் மகளோடு

உரித்தாய் சொல்வோம் வீரவணக்கம்!

Tuesday, December 14, 2021

 தமிழ்நாடு திருவள்ளுவர்  கழகம் அறக்கட்டளை  நடத்திய பட்டி மன்றம்


  நடுவர்: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


தொடர்நிகழ்வுகள் பல நடத்தி  சாதனை நிகழ்த்தியுள்ளார்  தொண்டர் திலகம் வை.மா.குமார். இன்று திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் சிறந்து விளங்குவது கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எனும் தலைமையில் 

சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில் நடுவராகப் பொறுப்பேற்று நட்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வில் இரு தலைப்பிலும் வழக்காட உள்ள பெருமக்களைப் போற்றுகிறேன். தொடர் மழை வெள்ளங்களுக்கிடையில் வருகை தந்துள்ள பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

நம் குறளாசான் கல்வி எனும் அதிகாரத்தில் 391ஆம் குறள் நம்மை சிந்திக்க செயலாற்றவைக்கும் குறளாகும்

கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக

தமது குறைகள் நீங்குமளவுக்கு குறையில்லாமல் கற்க வேண்டும். கற்றால் மட்டும் போதுமா அதன் வழி நடந்து சிறப்புற மேன்மையுறவேண்டும். இந்தக் குறள் கல்வியின் சிறப்பை மனிதகுலத்திற்கு வழங்குகிறது. கல்வி என்பது பணிக்காக  பதவிக்காக் அறப்பணிகளுக்காக குடும்ப  உயர்வுக்காக சமுதாய உயர்வுக்காக நாட்டு உயர்வுக்காக மனிதநேய சம நிலைச் சிந்தனைகளுக்கா என அனைத்து நிலைகளுக்கும் கல்வி அச்சாணியாக உள்ளது. 

அண்ணல்  காந்தியடிகள் இலண்டன் சென்று பாரிசுட்டர் பட்டம் முடித்து தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞர் பணியாற்றச் சென்றவர். அங்கு நடக்கும் நிறவெறிக் கொடுமைகள் கண்டு தம் அறப்பணியைத் தொடங்கியவர். பின் இந்தியா வந்து விடுதலைப் போராட்ட்த்தில் தலையேற்று நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். அவர் பயின்ற அறக் கல்வியும் அறிவுக் கல்வியும்  தம் வாழ்நாளில்  மனச்சான்றோடு பயண்படுத்தியதை நாம் அறியலாம். தமிழக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியபேரறிஞர்அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து உயர் கல்வி கற்று  சராசரியான மனிதர்கள்போல தன் பெண்டு பிள்ளை வேலை என வாழாமல் தந்தைபெரியாரிடம் இணைந்து தமிழ்நாட்டைக் காத்த பெருமகன் அவர் வழியில்  கிடைத்த தலைவர் கலைஞர் தமிழகத்திற்கு சாதித்த சாதனைகள் கற்க கசடற கற்றபியன் நிற்க என்ற குரளுக்கு சான்றாகினர்.

பொருளின் சிறப்பைப் பற்றிக்  வள்ளுவப் பேராசான் கூறும் குறள் சிந்திக்க வைக்கிறது. 


பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது

 பொருளல்ல இல்லை பொருள்  (751)

  நம் நடைமுறை வாழ்கையிலேயே காணலாம் பொருள் உள்ளவர்களை அனைவரும் மதிக்கும் போக்கு இன்றும் உள்ளது. எந்தக் காரியங்களையும் பொருளுள்ளவர்கள் எளிதாக செய்யும் திறன் உடையவராகின்றனர். இந்தக் காலத்தில் கல்வியே பொருள் இல்லையென்றால் கேள்விக்குறியாகிறது. வள்ளு வப் பேராசான் எந்த பொருளைப் பற்றிப் பாடுகிறாரோ அந்தப் பொருளின் நிலையினின்றே பாடுகிறார் என்பதை அறியாலாம். 


கல்வியும் பொருளும் நம் வாழ்வில் எவ்வாறு அங்கம் வகிக்கின்றன என்பட்தி திருக்குறள் வழி கற்றுணர்ந்து வாதாட வருகின்றனர் நம் அறிஞர் பெருமக்கள்

  யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்  

  சாந்துனையும் கல்லாத வாறு (397)


வள்ளுவர் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் மிகச் சிறந்த விளக்குவது கல்விச் செல்வமே தலைப்பில்  உரையாற்ற முன்னைவர் வாணிசோதி,  ஆசுகவி இனியா இளங்கலை மாணவி சனனி  கற்றவர்களுக்க்கெல்லம்  எங்கு சென்றாலும் சிறப்பு என்ற வகையில் கற்ற்றிந்த அறிஞர் பெருமக்கள் திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வருகை  தந்துள்ளனர். . 


ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை

 ஊக்கார் அறிவுடையார்  

என்கிறார் வள்ளுவப் பேராசான் . 

கல்வி கற்கிறீர்கள் கற்றபின் செல்லவத்தை சேர்க்க பாடாய் படுகிறீரகள்/ பின் சேர்த்த செல்வத்தை பாதுகாப்பதும் நமது கடமை என மொழிகிறார் நம் ஆசான். நம்  அறிவுக்கு புலப்படாத இந்த்த் தொழிலைச் நாம் செய்யமுடியுமா என்ற பட்டறிவு இல்லாமல்   இருக்கும் முதலையும் அறிவுடையவர்கள் இழக்க மாட்டார்கள் என நம் ஆசான் ஆணித்தரமாக்க் கூறுகிறார்.  

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொண் றுண்டாகச் செய்வான் வினை. (758) 


மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பது போல்  தக்க பொருளோடு செயலைச் செய்தால் வாழ்வின் உச்சத்தை அடைமுடியும்.  என்று வள்ளுவப் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழ்யில்  மிகச் சிறந்து விளங்குவது பொருட் செல்வமே. எனும் தலைப்பில் ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள் கவிஞர் பொருனை மாயன்  ககவிஞர் ஞால இரவிச்சந்திரன் கவிஞர் மதியரசு திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வாதாட வந்துள்ளனர். திருவள்ளுவர் கழக அறக்கட்டளை அழைத்துள்ள நிகழ்வுக்கு வருகை தந்துள்ள சிந்தனைச் செல்வங்களே திருவள்ளுவர் கூறும் அறச் சிந்தனைகளை வருகை தந்துள்ள  அறவாணர்கள்  கருத்துக்களை நுட்பமாகக் கேளுங்கள்.

கல்விச்செல்வமே என்ற அணியின் தலைவர் முனைவர் வாணிசோதி பேச வருகிறார்கள். நெல்லை மாவட்டத்துப் பெருமாட்டி இங்கு சிந்தி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் கும்மனாஞ்சாவடி வழியாக திருவேற்காட்ட்டில் உள்ள கல்லூரிகுச் செல்கிறார்கள். தினமும் 34கிலோமீட்டர்  பயணித்து தமிழ்ப்பேராசிரியப்  பணியாற்றும் பெருமாட்டியை கல்விச் செல்வமே என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கிறேன்.  பேராசிரியர் உரை மிகச் சிறந்த உரை. வள்ளுவப் பெருமான் கல்விக்கே என  சிறப்பாக பதிவு செய்துள்ளார். 

பொருட்செல்வமே எனும் அணிக்கு தலைமை தாங்கும் கவிஞர் பொருனை மாயன் வருகிறார். தோற்றமே புலவர் பெருமக்களின் தோற்றத்தோடு இருகிறார். ஆனால் பொருளுக்கு ஆதரவாக பேச வருகிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பட்டிமன்ற நிகழ்வுகளில் பேசிவரும் பெருமகன். திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கு உருகார் என்ற மொழிக்கேற்ப  திருவாசக உரைகள் பல வழங்கிய கவிஞர். வருக பொருட்செல்லவமே  தலைப்பில் திருக்குறள் பதிவைத்தருக.

 பொருட்செல்வமே தலைப்பில் அரிய கருத்துக்களைத் தந்துள்ளீர்கள். நம் மண்ணிலேயே உழைப்பால் உயர்ந்த சிறந்த செல்வர்கள். இலக்கிய செல்வர் குமரிஅனந்தனால் அழைத்துவரப்பட்ட தம்பி வசந்த்குமாரை வி.சி.பி நிறுவணத்தில் பணியாளாக சேர்ந்து இன்று வசந்த் நிறுவணம் 100ஆவது கிளையைத் துவங்குகிறது. பாராளுமன்ற உறுப்பினராக வசந்தகுமார் மகன் உள்ளார். பொருள்செல்வத்தின் சான்று. 

கல்விச் செல்வத்திற்கு பேச ஆசுகவி இனியா அவர்களை அழைக்கிறேன். எந்த இலக்கிய நிகழ்வுக்கும் அயர்ச்சியில்லாமல் சென்று இலக்கியம் வளர்க்க்கு  கவிஞர்இனியா அவர்கள் பணி மகத்தான பணி வாழ்த்துகிறேன். 

இனியா அவர்கள் மிகச்சிறந்த  திருக்குறள் சிந்தனைகளை வழங்கினார். என் அருமைத்தையார் அவர்களும் சிற்றந்தையார் அவர்களும் ஒரு ஆண்டநாயகபுரம் குக் கிராமத்தில் பிறந்தவர்கள். எனது தாத்தா  முத்து பாட்டி இராமாயி அரும்பாடுபட்டு கல்வியைக் கொடுத்தனர். அந்தக் கல்வியின் சிறப்புதான் இன்று நாங்கள் கல்விச் சிகரத்தில் உள்ளோம். தந்தையார் நீங்கள் அறிந்த உலா மாக்கவி பெருங்கவிக்கோ என் அருமை சிற்றந்தையார் வா,மு.முத்தராமலிங்கம் ஐ ஆர் எஸ் முடித்து இந்தியாவின் நேரடித்துறைத் தலைவராக பொறுப்பேற்று  கல்வியால் சாதித்து சுற்றங்களை பேணிக் காத்தவர். இனியா வழி கல்வியின் பெருமையை பதிவு செய்கிறேன். 

 அடுத்து பொருட்செல்வமே தலைப்பில் காணொளிகளின் காதநாயகன் கவிஞர் ஞால. இரவிச்சந்திரன் அவர்களை அழைப்பதில் மகிழ்கிறேன். கவிஞர் ஞால இரவிச்சந்திரன் சிறந்த கவிதை நூலை  பெருமகன்  வழங்கியுள்ளார். வருக திருவள்ளுவரின் பொருட்சிந்தனைகளைத் தருக.. 

கவிஞர் ஞால இரவிச்சந்திரன் பொருள் சார்ந்த திருக்குறள் கருத்துக்களை வழங்கினார். வாழ்த்துகள். மலேசியா சென்றவர்களுக்குத் தெரியும் துன்சம்பந்தன் சாலையில் 25 மாடி கட்ட்டிடம் மாலேசியா தோட்டப்பு’றத் தொழிலாளிகளின் கட்டிடம். அதை உருவாக்கிய பெருமை டான்சிறி சோம சுந்தரம் அவர்களைச் சாரும். எழுத்தாளர்கள் கவிஞர்கள்  மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி என அனைவருக்கும் நிதி வழங்கும் பெருமகன். சிறந்த எழுத்தாளர்களுக்கு உயரிய 10000 டாலர் உயரிய விருதைத் தரும் பெருமகன். பொருளை உருவாக்கி மக்கட்கு வழங்கும் அவர்களை அறிய வேண்டும் என பதிவு செய்கிறேன்.

 கல்வியே எனும் தலைப்பில் இறுதியாக மாணவி சனனி  அவர்களைப் பேச அழைக்கிறேன்.மாணவியை பயிற்றுவித்து அழைத்து வந்துள்ள வாணி சோதியைப் பாராட்டுகிறேன்.. மாணவி சனனி மிகச்சிறந்த உரையாற்றினார். வாழ்த்துகள் மிகச் சிறப்பாகப் பேசினீர்கள் தொடர்க. 

 இறுதியாக செலவமே தலைப்பில் பேசுவதற்கு கவிஞர் மதியரசு அவர்களை அழைக்கிறேன்.முத்தாய்ப்பாக திருக்குறள் கருத்துகளில் செல்வச் செழுமையை வழங்க வேண்டுகிறேன். மதியரசு மிகச் சிறந்த பதிவுகளை சிலப்பதிகாரம் தொல்காப்பியம் புறநானூறு என இலக்கியப்ப் பதிவுகளை வழங்கியுள்ளார். சிறப்பு. 

இங்கு அமர்ந்து கேட்போர் சார்பில் பொருளுக்கு அருளாளர் ஐயாப்பிள்ளை அவர்களையும் கல்விக்கு கவிஞர் திருவைபாபு அவர்களையும் அழைக்கிறேன். அனைவரின் கருத்துக்களையும் கேட்ட நான் எதற்கு தீர்ப்பு வழங்குவது என்ற திகைப்பில் இருக்கிறேன். மிகச் சிறப்பாக தங்கள் அணிக்கு சிறப்பாக வாதாடியுள்ளீர்கள். பொருள் குறித்து நீங்கள் பேசும்போது எனக்க் தென் ஆப்ப்ரிக்கா வாழும் தமிழர் மிக்கி செட்டி நினைவுக்கு வருகிறார். தென் ஆப்ரிக்காவில் தமிழர்கள் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள் .உலகெலாமுணர்ந்து ஓதற்கறியவன் பாடலையே ஆங்கிலத்திலே எழுதிவைத்துத்தான் பாடுவார்கள். அந்தத் தமிழர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்க மிக்கி செட்டி என்ற பெருந்தமிழர் 40 பெருமக்களுக்கு தமிழாசிரியர் பயிற்சி இராமசாமி பல்கலைக்கழகத்தோடு இணைந்து தம் சொந்த செலவில் உருவாக்கினார்.. பட்டமளிப்புவிழாவிற்கு தென் ஆப்ரிக்காவிற்கு  உலகத்த்ழிப் பண்பாட்டுக் கழகப் பெருமக்களை அழைத்து பட்டம் வழங்கினார். நானும் தந்தையும் பங்கேற்றோம். ஒரு தமிழர் செல்வம் தமிழ்க்கல்விக்கு அறமாக இருந்ததை பதிவுசெய்கிறேன். 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்                             செல்வச் செவிலியால் உண்டு 

     என்ற குறளுக்கு சான்றாக வாழ்கிறார். இதில் பொருளின் பெருமையை அறியலாம்

                                              

  ஊருணி நிறைந் தற்றே உல்கவாம்                                                                          பேரறி வாளன் திரு   

                                                                                     திருவள்ளுவப் பெருமானே யார் பேரறிவாளன் என்கிறார் என்றால் அனைவருக்குக் வழங்குபவர்க்க்கே. அடுத்தவரின் நண்மைக்கு வாழ்பவரே பேரறிவாளன்.. கர்மவீர்ர் காமராசர் தந்தை பெரியார் இருவரையும் இங்கு எண்ண வேண்டும். இருவருமே தமிழர்களின் கல்விக்கு கண்ணாக உள்ளனர். அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராசர். அனைத்து நிலை மக்களும் கல்வியில் மேம்;பட்டு உயர அயராது உழைத்தவர் தந்தை பெரியார். கல்வியால் அனைத்தையும் பெறமுடியும் ஆதலால் திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் மிகச்சிறந்து விளங்குவது கல்விச்செல்வமே.. எனத் தீர்ப்பளித்து விடைபெறுகிறேன். வாழக வள்ளுவர். வளர்க திருக்குறள் தொண்டறம்


.( 12-12-2021 அன்று திருவளுவர் கழகம் அறக்கட்டளை நட்த்திய பட்டிமன்றத்தில் நடுவராக பொறுப்பேற்று ஆற்றிய உரை.).








Wednesday, December 8, 2021

 பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கோவில்பட்டி கிளை திறப்பு விழா                                                           தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.







பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோவில்பட்டி கிளையை திறந்து வைத்து உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன மகாகவி பாரதியாரின்   நூற்றாண்டு  நினைவு நாள் காணொளி தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் நானும் பல கவிஞர்களும் பங்கேற்றோம். அந்த நிகழ்வில் அருமை நண்பர் பிரபு கிருட்டிணன் பங்கேற்றார். நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்பொது ஐயா பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிகழ்வை நட்த்த வேண்டும் என தகவல் பதிவு செய்தார். அவர் எண்ணை அனுப்பக் கூறினேன் அனுப்பினார். உடன் அவரோடு பேசி இன்று இங்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோவில்பட்டி கிளை தொடக்கவிழாவில் பங்கேற்று உங்களோடு உரையாற்றிக்கொண்டிருக்கிறேன். நண்பர் பிரபு கிருட்டிணன் அவர்களின் முயற்சி நுட்பம் ஆர்வம் அனைத்தும் கண்டு மகிழ்கிறேன்.                                                              வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்                                                                       மற்றைய எல்லாம் பிற (66)                                                    என்ற குறளுக்கு ஒப்ப பிரபு கிருட்டிண்ண மனத் திட்பம் இன்று கோவில்பட்டி கிளையை தொடங்க முடிகிறது. மிகச் சிறந்த அறிஞர் குழாத்தையே இங்கு கூட்டியிருக்கிறார் நம் பிரபு கிருட்டிணன். வருகைதந்துள்ள அனைவரும் தங்களை தன் அறிமுகப் . படுத்தி;யுள்ளீர்கள். தொண்டுள்ளம் கொண்ட உங்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன். அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சந்தன மாரியம்மாள். கலைமாமணி அமல் புட்பம் தமிழ்நெஞ்சர் துரைப் பாண்டி தமிழாசிரியை மணிமேகலை முதுகலை ஆசிரியர் இராசசேகர் சுற்றுச்சூழல் அறிஞர் இராசாராம் முனைவர் ஆரோக்கியராசு ஆசிரியர் பெருமகன் காந்தி தமிழாசிரியர் முத்துப்பாண்டி ஆகியோர் தங்களைப் பற்றி கூறும்போது பெருமிதம் கொண்டேன். வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும் வணக்கத்தைது தெரிவித்துக் கொள்கிறேன்.

 பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உலகளாவிய தமிழர்களைக் கொண்ட பேரமைப்பு. உலகளவிய மாநாடுகள் 7 மாநாடுகள் நடத்திய சிறப்பிற்குரிய அமைப்பு. அதில் 4 மாநாடுகள் வெளிநாடுகளில் நட்த்திய பெருமைக்குரிய மன்றம். அயல் நாட்டிலிருந்து வருகை தந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட அறிஞர் தமிழகத்தில் பாராட்டுவிழா நட்த்தி அறிமுகப் படுத்தியிருக்கிறோம்.

மன்றத்தின் முதல் மாநாடு திருச்சியில் 1985ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஈழத் தலைவர் அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மற்றும் உலகளாவிய பெருமக்கள் பங்கேற்றனர்.

இரண்டாம் மாநாடு 1990ஆம் ஆண்டு சென்னைமாநகரில் 4 நாட்கள் நடைபெற்றது. பெருங்கவிஞர் புரட்சிதாசனின் வசந்த மகாலிலும் விசிபி சந்தோசம் அண்ணாச்சியின் தங்கக் கடற்கரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 மூன்றாம் மாநாடு உலகமே வியக்கும் வண்ணம் செருமணி பெர்லின் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஈழக் கொடுமைகளால் செருமணியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நட்த்திய மாநாடு. பெருந்தமிழர் குணரத்தினம் தந்தையார் பெருங்கவிக்கோ வழிகாட்டி போறுப்பேற்று நடத்திய சீரிய மாநாடு.. தமிழகத்திலிருந்து 50 பெருமக்களுக்கு செருமணி இத்தாலி பிரான்சு மூன்சு நாடுகளுக்கு விசா பெற்ற் கதையை எண்ணும்போது இன்றுமே எனக்கு மலைப்பாக இருக்கும்..அதிலும் தமிழகத்தின் தலையாய பெருமகன் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், மேனாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், நீதியரசர் வேணுகோபால், திராவிடர் கழக இறையன் புதுவை நீதியரசர் கோவிந்தசாமி, சட்ட அறிஞர் நாராயணசாமி இசையரசி சேலம் செயலட்சுமி சீர்காழி சிவ சிதம்பரம் திருச்சி தமிழ்ச் சங்கத் தலைவர் அண்ணாமலை மருத்துவர் சே.சி.கண்ணப்பர் உள்ளிட்ட பெருமக்கள். செருமன் சனாதிபதி கெல்மட் கோல் அவர்களே இந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெருவித்திருந்தார்.

மன்றத்தின் நான்காம் மாநாடு 1999ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டின் தலைந்கர் பாங்காக்கில் நடைபெற்றது. இலங்கை அமைச்சர் மூத்த அமைச்சர் தொண்டமாண் பங்கேற்று விடுதலைப்புலிகளுக்கு ஆதராவாகப் பேசினார். கலைஞரின் பவழ விழாவை ஒருநாள் உலகத் தமிழர்கள் சிறப்பாக்க் கொண்டாடினோம். மலேசியாவிலிருந்து டான்சிறி சோமசுந்தரம் பங்கேற்று சிறப்பித்தார். மலேசியா சிங்கப்பூரிலிரிந்து ஒருகுழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழகத்திலிருந்து 160 பெருமக்களை அழைத்துச் சென்றது இன்று நினைத்தாலும் பெருமிதமாக உள்ளது. 

மன்றத்தின் ஐந்தாம் மாநாடு 2002ஆம் ஆண்டுமதுரை மாநகரில் திருக்குறட்செம்மல் மணிமொழியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழர்கள் ஒன்று கூடிய மாநாடாக அமைந்தது. மன்றத்தின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிதோம். முத்தாய்ப்பாக முத்தமிழறிஞர் கலைஞருக்கு சீரிய விருது வழங்கினோர். இன்றும் அது கலைஞர் கரூவூலத்தில் உள்ளது.

 மன்றத்தின் ஆறாம் மாநாடு மலேசியா நாட்டில் 1999ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது..மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மலயா பல்கலைக் கழகத்தில் உலகத்தமிழர்கள் ஒன்று கூடினர். மலேசியா மூத்த அமைச்சர் டத்தோ சாமிவேலு பிரதமதுறை அமைச்சர் கோடுங் துணைஅமைச்சர்கள் பங்கேற்றனர்.

 இரண்டாம்நாள் பினாங்கு நகரில் நடைபெற்ற மாநாட்டில் பினாங்கு துணைமுதல்வர் இராமாசாமி பங்கெற்று சிறப்பித்தார். மூன்றாம் நாள் ஈப்போநகரி பேராசிர்ய பாலசுப்பிரம்ணியமும் ஆசிரியமணி மாணிக்கமும் மிகச்சிறந்தமுறையில் நடத்தினர். பங்கேற்ற அனைவருக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

  நான்காம் நாள் கெடா மாநிலத்தில் பூசாங்க் பள்ளத்தாக்கில் இராசேந்திர சோழன் கொடி நாட்டிய பள்ளத்தாக்கைக் கண்டு தமிழனின் பெருமையை கண்டு வியந்தோம், ஏய்ம்சு பல்கலைக கழகத்தில் மிகச் சிறந்த வரவேற்பை டத்தோ சாமிவேலு விருந்து வழங்கிச் சிறப்பித்தார்..

மன்றத்தின் ஏழாம் மாநாடு உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டு  நடைபெற்றது. அமெரிக்கா வாசிங்க்டன் நகரில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்களுக்கு பத்து வருட விசா அமெரிக்க விசா வழங்கியது. உலகத் தமிழர்களின் பங்கேற்று தமிழ் தமிழரின் பெருமையை நிலை நிறுத்தினர். 

மன்றத்தின்ஏழு மாநாடுகளிலும் மாநாட்டின் மலர்கள் சிறப்பாக வெளியிடப்பட்டது. ஏழு மாநாட்டு மலர்களும் உலகத் தமிழர்களின் கலைக்களஞ்சியமாக பதிபாகியுள்ளது.. உலகளாவிய அறிஞர்கள் பேராசிரியர்கள் உலகளாவிய தமிழ்த் தலைவர்கள் கவிஞர்கள் தமிழ்நெஞ்சங்களை அறியும் அகர முதலியாக விளங்குகிறது. 

இந்த மாநாடுகளுக்கெல்லாம் ஒரு படைகளனாக இருக்கும் இதழ்தான் தமிழ்ப்பணி கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து தமிழர் கேடயமாக உள்ளது..பொன்விழா காணும் இதழை கோவில்பட்டி வாழ் பெருமக்கள் பயண்படுத்திக் கொள்ளவும்.

அருமை கோவில்பட்டி தமிழ் நெஞ்சங்களே மன்றத்தின் சில பணிகளையே கோடிட்டுக் கூறியுள்ளேன். வருகை தந்துள்ள கிளை பொறுப்பேற்றுள்ள அனைவரையும் தொடருங்கள் உங்கள் பொதுப்பணியை என்று கூறி விடைபெறுகிறேன்.

(19-9-2021 அன்று பன்னாட்டுத் தமிழுறவுமன்ற கோவில்பட்டிகிளையை தொடங்கிவைத்து ஆற்றிய உரை) 


Sunday, December 5, 2021

 இந்திய முசுலீம்லீக் நடத்திய மீலாது தொடர்சொற்பொழிவு  சமய 

நல்லிணக்க விழா


தமிழ்மாமணி வா.முசே.திருவள்ளுவர்   

              இந்திய முசுலீம் லீக் வடக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பில் நடைபெறும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன.  இந்த நிகழ்வுக்கு நான் வருவதற்கு காரணமான் என் பள்ளி நண்பர் குலாம் உசேன் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் எங்கள் தமிழாசிரியர். தந்தையார் அவர்கள் தம் பூசை அறையில் எல்லா தெய்வங்களையும் வணங்குவார். அறையில் கிறித்தவர்களின் கர்த்தரும் இந்துக்களின் பல தெய்வங்களும் இசுலாமியரின் மக்காமதினாவும் ஆசையைத் துறந்த புத்தரும் அருட்பிரகாச வள்ளலாரும் அருட்குநாதர் சாதுகுருசாமிகளும் உள்ளார்கள். அனைவருக்கும் கற்பூர தீபம் காட்டி வழிபடுவார். சுத்த சன்மார்க்க நெறி எம் தந்தையார் அவர்களின் வழிபாட்டில் இருக்கும். அவர் வழிபடும் முறை இசுலாமிய முறை போன்று ஐந்துமுறை முட்டியிட்டு மண்ணில் முட்டி வழிபடுவார்.தற்போது எம் தந்தையாரின் நெற்றி வடுவை தற்போதும் காணலாம்.

திராவிட இயக்கத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா முட்டிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அருமை முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் திராவிடக் கலன்களாகும். பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பொற்கால ஆட்சியைத்த் தரும் பெருமகன் ஸ்டாலின்   வழியில் அரிய தொண்டாற்றும் அருமைப் பெருமகன் நாஞ்சில் சம்மபத் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் போன்றே நானும்  பேச்சைக் கேட்க ஆவலாய் உள்ளேன். பெருமகனுக்கு வணக்கம. 

நிகழ்வுக்கு தலைமைதாங்கியுள்ள ஆலம்கான் சிறப்பாக நிகழ்ச்சியை தொடர்ந்து செம்மையாக் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவணைத்து நட்த்தும் தொகுப்புரையாற்றும் நிசாமுதின், தொடர்ந்து  உரையாற்றவுள்ள மவுலவி அப்துல் காதர்சிராசு, முகமது அபுபக்கர் வருஅனவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன்.அந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் அப்துல் சலாம் மிக இனிமையான குரலில் ஓதுவார் அது இனிமை நாதமாக ஒலிக்கும். அருமை நண்பர் குலாம் உசேன் அவர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பள்ளியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாடுவார்கள். இன்றும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் பெருமகன் அப்ப்துல் சலாம் அவர்கள் நபிகள் நாயகம் சல்லலாகு அலைகுவ சல்லம்  அவர்களைப் பற்றிப் பேச மேடை ஏற்றினார்கள். அதுதான் எனது முதல் மேடை. இன்று உலகம் முழுமையும் மேடை ஏறி முழங்கிக் கொண்டிருக்கிறேன். 

நம் திருவள்ளுவப் பேராசான் எழுதிய குறளுக்கு மண்ணில் சான்றாக வாழ்ந்து வழிகாட்டிய அருளாளர் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள்.. நாயகம் அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு அம்மையார் குப்பையை அவர் தலைமேல் வீசிக் கொண்டிருந்தார்.  ஒரு நாள் குப்பை விழவில்லை உடனே நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள் அந்த அம்மையாரைப் பற்றி விசாரிக்க அவர் உடல் நலமில்லை என் அறிந்து அவரைக் காணச் சென்றார். அந்த  அம்மையார் மனம் திருந்தி மார்க்கத்தின் இணைந்தார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 

நன்நயம் செய்து விடல் 

தனக்கு தீமை செய்தவரையும் அவர் நாண நன்நயம் செய்த குறள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாயகம் அவர்கள் தாயின் காலடியில் சொர்க்கம் எனக் கூறி தாயின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். நம் உண்ணும் உணவு நா சுவைக்கும் முன் தந்தை  சுவைத்திருக்க வேண்டும் என்ற தந்தை பேணலை உணர்த்தியுள்ளார். நபிகள் நாயகம் சல்ல்லாகு சலைகுவ சல்லம் அவர்கள் ஒட்டகத்தைக் கட்டிவிட்டுத் தூங்குங்கள். உங்கள் கடமையை செய்து இறைவனைக் கும்பிடுங்கள். என தன் சீடர்களுக்கு கூறியுள்ளார்.

 ஏழைகளின் பசியை உணர இரமலான் மாதத்தில் .நோண்பு இருக்கப் பணித்தார்.. தன் உணவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பண்பை நெறியாக்கியுள்ளார்.

 நாயகம் அவர்கள் தம் மெக்கா மதினா குர்துப் போரின்போது மதினாவை அடைந்து விட்டார் அப்போது மதினா மக்கள் மூன்று கட்டளைகள் விதித்தனர்.  குறிப்பிட்ட நாள் வரை மக்காவிலிருந்து மதினாவில் நுழையக்கூடாது. மீறி யாரும் நுழைந்தால் தாங்களே அவர்களை ஒப்படைக்க வேண்டும் அவர்கட்கு  இங்கு மரண தண்டணை வழஙகப்ப்படும். நபிகள் நாயகம் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒப்புதலோடு மதினா நுழைந்தார என்பது வரலாறு.

 இன்றைய மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைப் போட்டு கடந்த ஒராண்டாக போராடி வருகிறார்கள். அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களின் போராட்ட உணர்வை மதிக்க்காத அரசாக உள்ளது. நான் தில்லி சென்றபோது போராட்டக் களத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். குடும்பத்தோடு விவசாயிகள் போராடி வருகின்றனர். நானும் பங்கேற்று சன் தொலைக்காட்சியில் ஆதரித்து பேட்டி கொடுத்தேன்.. மனித நேயம் முற்றிலும் இங்கு படுகொலைக்கு ஆளாக்கப் படுவதைக் காணலாம். நாயகம் சமூக நல்லிணக்கத்தைக் கற்பித்தார் அதன்படி நடப்போம்.

 நாயகம் மாற்றாரின் தவறையும் மண்ணித்து வாழக் கட்டளையுட்டுள்ளார். நாயகம் மனித நேயத்தோடு வாழப் பணித்தார் அவர் வழிப்படி வாழ்ந்து வெல்வோம்.


 (9-10-2021 அன்று தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)