Wednesday, December 8, 2021

 பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கோவில்பட்டி கிளை திறப்பு விழா                                                           தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.







பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோவில்பட்டி கிளையை திறந்து வைத்து உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன மகாகவி பாரதியாரின்   நூற்றாண்டு  நினைவு நாள் காணொளி தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் நானும் பல கவிஞர்களும் பங்கேற்றோம். அந்த நிகழ்வில் அருமை நண்பர் பிரபு கிருட்டிணன் பங்கேற்றார். நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்பொது ஐயா பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிகழ்வை நட்த்த வேண்டும் என தகவல் பதிவு செய்தார். அவர் எண்ணை அனுப்பக் கூறினேன் அனுப்பினார். உடன் அவரோடு பேசி இன்று இங்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோவில்பட்டி கிளை தொடக்கவிழாவில் பங்கேற்று உங்களோடு உரையாற்றிக்கொண்டிருக்கிறேன். நண்பர் பிரபு கிருட்டிணன் அவர்களின் முயற்சி நுட்பம் ஆர்வம் அனைத்தும் கண்டு மகிழ்கிறேன்.                                                              வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்                                                                       மற்றைய எல்லாம் பிற (66)                                                    என்ற குறளுக்கு ஒப்ப பிரபு கிருட்டிண்ண மனத் திட்பம் இன்று கோவில்பட்டி கிளையை தொடங்க முடிகிறது. மிகச் சிறந்த அறிஞர் குழாத்தையே இங்கு கூட்டியிருக்கிறார் நம் பிரபு கிருட்டிணன். வருகைதந்துள்ள அனைவரும் தங்களை தன் அறிமுகப் . படுத்தி;யுள்ளீர்கள். தொண்டுள்ளம் கொண்ட உங்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன். அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சந்தன மாரியம்மாள். கலைமாமணி அமல் புட்பம் தமிழ்நெஞ்சர் துரைப் பாண்டி தமிழாசிரியை மணிமேகலை முதுகலை ஆசிரியர் இராசசேகர் சுற்றுச்சூழல் அறிஞர் இராசாராம் முனைவர் ஆரோக்கியராசு ஆசிரியர் பெருமகன் காந்தி தமிழாசிரியர் முத்துப்பாண்டி ஆகியோர் தங்களைப் பற்றி கூறும்போது பெருமிதம் கொண்டேன். வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும் வணக்கத்தைது தெரிவித்துக் கொள்கிறேன்.

 பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உலகளாவிய தமிழர்களைக் கொண்ட பேரமைப்பு. உலகளவிய மாநாடுகள் 7 மாநாடுகள் நடத்திய சிறப்பிற்குரிய அமைப்பு. அதில் 4 மாநாடுகள் வெளிநாடுகளில் நட்த்திய பெருமைக்குரிய மன்றம். அயல் நாட்டிலிருந்து வருகை தந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட அறிஞர் தமிழகத்தில் பாராட்டுவிழா நட்த்தி அறிமுகப் படுத்தியிருக்கிறோம்.

மன்றத்தின் முதல் மாநாடு திருச்சியில் 1985ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஈழத் தலைவர் அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மற்றும் உலகளாவிய பெருமக்கள் பங்கேற்றனர்.

இரண்டாம் மாநாடு 1990ஆம் ஆண்டு சென்னைமாநகரில் 4 நாட்கள் நடைபெற்றது. பெருங்கவிஞர் புரட்சிதாசனின் வசந்த மகாலிலும் விசிபி சந்தோசம் அண்ணாச்சியின் தங்கக் கடற்கரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 மூன்றாம் மாநாடு உலகமே வியக்கும் வண்ணம் செருமணி பெர்லின் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஈழக் கொடுமைகளால் செருமணியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நட்த்திய மாநாடு. பெருந்தமிழர் குணரத்தினம் தந்தையார் பெருங்கவிக்கோ வழிகாட்டி போறுப்பேற்று நடத்திய சீரிய மாநாடு.. தமிழகத்திலிருந்து 50 பெருமக்களுக்கு செருமணி இத்தாலி பிரான்சு மூன்சு நாடுகளுக்கு விசா பெற்ற் கதையை எண்ணும்போது இன்றுமே எனக்கு மலைப்பாக இருக்கும்..அதிலும் தமிழகத்தின் தலையாய பெருமகன் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், மேனாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், நீதியரசர் வேணுகோபால், திராவிடர் கழக இறையன் புதுவை நீதியரசர் கோவிந்தசாமி, சட்ட அறிஞர் நாராயணசாமி இசையரசி சேலம் செயலட்சுமி சீர்காழி சிவ சிதம்பரம் திருச்சி தமிழ்ச் சங்கத் தலைவர் அண்ணாமலை மருத்துவர் சே.சி.கண்ணப்பர் உள்ளிட்ட பெருமக்கள். செருமன் சனாதிபதி கெல்மட் கோல் அவர்களே இந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெருவித்திருந்தார்.

மன்றத்தின் நான்காம் மாநாடு 1999ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டின் தலைந்கர் பாங்காக்கில் நடைபெற்றது. இலங்கை அமைச்சர் மூத்த அமைச்சர் தொண்டமாண் பங்கேற்று விடுதலைப்புலிகளுக்கு ஆதராவாகப் பேசினார். கலைஞரின் பவழ விழாவை ஒருநாள் உலகத் தமிழர்கள் சிறப்பாக்க் கொண்டாடினோம். மலேசியாவிலிருந்து டான்சிறி சோமசுந்தரம் பங்கேற்று சிறப்பித்தார். மலேசியா சிங்கப்பூரிலிரிந்து ஒருகுழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழகத்திலிருந்து 160 பெருமக்களை அழைத்துச் சென்றது இன்று நினைத்தாலும் பெருமிதமாக உள்ளது. 

மன்றத்தின் ஐந்தாம் மாநாடு 2002ஆம் ஆண்டுமதுரை மாநகரில் திருக்குறட்செம்மல் மணிமொழியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழர்கள் ஒன்று கூடிய மாநாடாக அமைந்தது. மன்றத்தின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிதோம். முத்தாய்ப்பாக முத்தமிழறிஞர் கலைஞருக்கு சீரிய விருது வழங்கினோர். இன்றும் அது கலைஞர் கரூவூலத்தில் உள்ளது.

 மன்றத்தின் ஆறாம் மாநாடு மலேசியா நாட்டில் 1999ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது..மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மலயா பல்கலைக் கழகத்தில் உலகத்தமிழர்கள் ஒன்று கூடினர். மலேசியா மூத்த அமைச்சர் டத்தோ சாமிவேலு பிரதமதுறை அமைச்சர் கோடுங் துணைஅமைச்சர்கள் பங்கேற்றனர்.

 இரண்டாம்நாள் பினாங்கு நகரில் நடைபெற்ற மாநாட்டில் பினாங்கு துணைமுதல்வர் இராமாசாமி பங்கெற்று சிறப்பித்தார். மூன்றாம் நாள் ஈப்போநகரி பேராசிர்ய பாலசுப்பிரம்ணியமும் ஆசிரியமணி மாணிக்கமும் மிகச்சிறந்தமுறையில் நடத்தினர். பங்கேற்ற அனைவருக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

  நான்காம் நாள் கெடா மாநிலத்தில் பூசாங்க் பள்ளத்தாக்கில் இராசேந்திர சோழன் கொடி நாட்டிய பள்ளத்தாக்கைக் கண்டு தமிழனின் பெருமையை கண்டு வியந்தோம், ஏய்ம்சு பல்கலைக கழகத்தில் மிகச் சிறந்த வரவேற்பை டத்தோ சாமிவேலு விருந்து வழங்கிச் சிறப்பித்தார்..

மன்றத்தின் ஏழாம் மாநாடு உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டு  நடைபெற்றது. அமெரிக்கா வாசிங்க்டன் நகரில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்களுக்கு பத்து வருட விசா அமெரிக்க விசா வழங்கியது. உலகத் தமிழர்களின் பங்கேற்று தமிழ் தமிழரின் பெருமையை நிலை நிறுத்தினர். 

மன்றத்தின்ஏழு மாநாடுகளிலும் மாநாட்டின் மலர்கள் சிறப்பாக வெளியிடப்பட்டது. ஏழு மாநாட்டு மலர்களும் உலகத் தமிழர்களின் கலைக்களஞ்சியமாக பதிபாகியுள்ளது.. உலகளாவிய அறிஞர்கள் பேராசிரியர்கள் உலகளாவிய தமிழ்த் தலைவர்கள் கவிஞர்கள் தமிழ்நெஞ்சங்களை அறியும் அகர முதலியாக விளங்குகிறது. 

இந்த மாநாடுகளுக்கெல்லாம் ஒரு படைகளனாக இருக்கும் இதழ்தான் தமிழ்ப்பணி கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து தமிழர் கேடயமாக உள்ளது..பொன்விழா காணும் இதழை கோவில்பட்டி வாழ் பெருமக்கள் பயண்படுத்திக் கொள்ளவும்.

அருமை கோவில்பட்டி தமிழ் நெஞ்சங்களே மன்றத்தின் சில பணிகளையே கோடிட்டுக் கூறியுள்ளேன். வருகை தந்துள்ள கிளை பொறுப்பேற்றுள்ள அனைவரையும் தொடருங்கள் உங்கள் பொதுப்பணியை என்று கூறி விடைபெறுகிறேன்.

(19-9-2021 அன்று பன்னாட்டுத் தமிழுறவுமன்ற கோவில்பட்டிகிளையை தொடங்கிவைத்து ஆற்றிய உரை) 


No comments:

Post a Comment