Saturday, January 7, 2023

 இந்திய முசுலீம்லீக் நடத்திய மீலாது தொடர்சொற்பொழிவு  சமய 

நல்லிணக்க விழா


தமிழ்மாமணி வா.முசே.திருவள்ளுவர்   

              இந்திய முசுலீம் லீக் வடக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பில் நடைபெறும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன.  இந்த நிகழ்வுக்கு நான் வருவதற்கு காரணமான் என் பள்ளி நண்பர் குலாம் உசேன் அவர்களுக்கு எஅன் நன்றியை உரித்தாக்குகிறேன். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் எங்கள் தமிழாசிரியர். தந்தையார் அவர்கள் தம் பூசை அறையில் எல்லா தெய்வங்களையும் வணங்குவர். அறையில் கிறித்தவர்களின் கர்த்தரும் இந்துக்களின் பல் தெய்வங்களும்இசுலாமியரின் மக்காமதினாவும் ஆசையைத் துறந்த புத்தரும் அருட்பிரகாச வள்ளலாரும் அருட்குநாதர் சாதுகுருசாமிகளும் உள்ளார்கள். அனைவருக்கும் கற்பூர தீபம் காட்டி வழிபடுவார். சுத்த் சன்மார்க்க நெறி எம் தந்தையார் அவர்களின் வழிபாட்டில் இருக்கும். அவர் வழிபடும் முறை இசுலாமிய முறை போன்று ஐந்துமுறை முட்டியிட்டு மண்ணில் முட்டி வழிபடுவார். தற்போது எம் தந்தையாரின் நெற்றி முட்டிய வடு திராவிட இயக்கத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அருமை முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பொற்கால ஆட்சியைத்த் தரும் பெரும்க்கள் வழியில் அரிய தொண்டாற்றும் அருமைப் பெருமகன் நாஞ்சில் சம்பத் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் போன்றே நானும்  பேச்சைக் கேட்க ஆவலாய் உள்ளேன். பெருமகனுக்கு வணக்கமநிகழ்வுக்கு தலைமைதாங்கியுள்ள ஆலம்கான் சிறப்பாக நிகழ்ச்சியை தொடர்ந்து செம்மையாக் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவணைத்து நட்த்தும் தொகுப்புரையாற்றும் நிசாமுதின், தொடர்ந்து  உரையாற்றவுள்ள மவுலவி அப்துல் காதர்சிராசு, முகமது அபுபக்கர் வருஅனவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன்.அந்தப் பள்ளியில் பணியாற்றிய அருளாளர் அப்துல் சலாம் மிக இனிமையான குரலில் ஓதுவார் அது இனிமை நாதமாக ஒலிக்கும். அருமை நண்பர் குலாம் உசேன் அவர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பள்ளியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாடுவார்கள். இன்றும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் பெருமகன் அப்ப்துல் சலாம் அவர்கள் நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம்  அவர்களைப் பற்றிப் பேச மேடை ஏற்றினார்கள். அதுதான் எனது முதல் மேடை. இன்று உலகம் முழுமையும் மேடை ஏறி முழங்கிக் கொண்டிருக்கிறேன். 

நம் வள்ளுவப் பேராசான் எழுதிய குறளுக்கு மண்ணில் சான்றாக வாழ்ந்து வழிகாட்டிய அருளாளர் நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள்.. நாயகம் அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு அம்மையார் குப்பையை அவர் தலைமேல் வீசிக் கொண்டிருந்தார்.  ஒரு நாள் குப்பை விழவில்லை உடனே நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள் அந்த அம்மையாரைப் பற்றி விசாரிக்க அவர் உடல் நலமில்லை என் அறிந்து அவரைக் காணச் சென்றார். அந்த  அம்மையார் மனம் திருந்தி மார்க்கத்தின் இணைந்தார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 

நன்நயம் செய்து விடல் 

தனக்கு தீமை செய்தவரையும் அவர் நாண நன்நயம் செய்த குறள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாயகம் அவர்கள் தாயின் காலடியில் சொர்க்கம் எனக் கூறி தாயின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். நம் உண்ணும் உணவு நா சுவைக்கும் முன் தந்தை  சுவைத்திருக்க வேண்டும் என்ற தந்தை பேணலை உணர்த்தியுள்ளார். நபிகள் நாயகம் சல்ல்லாகு சலைகுவ சல்லம் அவர்கள் ஒட்டகத்தைக் கட்டிவிட்டுத் தூங்குங்கள். உங்கள் கடமையை செய்து இறைவனைக் கும்பிடுங்கள். என தன் சீடர்களுக்கு கூறியுள்ளார்.

 ஏழைகளின் பசியை உணர இரமலான் மாத்த்தி. நோண்பு இருக்கப் பணித்தார்.. தன் உணவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பண்பை நெறியாக்கியுள்ளார்.


 நாயகம் அவர்கள் தம் மெக்கா மதினா குர்துப் போரின்போது மக்காவை அடைந்து விட்டார் அப்போது மக்கா அரசர்மூன்று கட்டளைகள் விதித்தார்.  குறிப்பிட்ட  நாள் மதினா விலிருந்து மக்காவிற்கு நுழையக்கூடாது. மீறி யாரும் நுழைந்தால் தாங்களே அவர்களை ஒப்படைக்க வேண்டும் அவர்கட்கு  இங்கு மரண தண்டணை வழஙகப்ப்படும்அதற்கான உடன்ப்டிக்கை தயாரானது அந்த உடன்படிக்கையில் நபி இறைத்தூதர் என்ற் சொல்லை மறுத்தனர்.அப்துல்லா முகமது என்ற பெயரே இருக்கவேண்டும் என்றனர். சீடர்கள் மறுத்தனர். ஆனால்  என் பெயர் முக்கியமல்ல உடன்படிக்கைதான் முக்கியம் என ஒப்பினார்.   நபிகள் நாயகம் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒப்புதலோடு மக்கா  நுழைந்தார என்பது வரலாறு.

 இன்றைய மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைப் போட்டு கடந்த ஒராண்டாக போராடி வருகிறார்கள். அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களின் போராட்ட உணர்வை மதிக்க்காத அரசாக உள்ளது. நான் தில்லி சென்றபோது போராட்டக் களத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். குடும்பத்தோடு விவசாயிகள் போராடி வருகின்றனர். நானும் பங்கேற்று சன் தொலைக்காட்சியில் ஆதரித்து பேட்டி கொடுத்தேன்.. மனித நேயம் முற்றிலும் இங்கு தவிர்க்கப் படுவதைக் காணலாம்.


Wednesday, January 4, 2023

 திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அந்தாதி 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர் தமிழ்ப்பணி 

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் 

     

      மதரை மாநகரின் அடையாளமாக விளங்கிய திருக்குறட்செம்மல் மணிமொழியனாரின் அந்தாதி அவர் வாழும் காலத்தில் தந்தையார் பெருங்கவிக்கோ பாடி தமிழ்ப்பணியில் வெளியாக்கி இன்று நூலாக வெளிவருவது காலத்தின் கொடையாகும் 


      உலகம் முழுமையும் தமிழால்அளந்த பெருங்கவிக்கோ இந்த தமிழ்க்குடிக்கு அடையாளப்படுத்திய  சான்றோர்கள் ஏராளம் அவருள் நம் திருக்குறட்செம்மல் மணிமொழியானார் தலையானவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி எண்ணற்ற பெருமக்களை அவரது கல்லூரி விடுதியில் பாராட்டி சிறப்பித்த புரவலர் பெருமகன். முத்தாய்ப்பாக பன்னாட்டுத் தமிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டை 4 நாட்கள் தந்தையார் பெருங்கவிக்கோவின் வேண்டுகோளுக்கிணங்க தலைமையேற்று உலகமே வியக்கும் வண்ணம் வெள்ளிவிழா மாநாட்டை நடத்திய தமிழ்செம்மல்.மாநாடு நடத்தியதோடு மட்டுமல்லாமல்  நிலையான கல்வெட்டாகத் தம் விடுதியின் திருவள்ளுவர் அரங்க வாயிலில் பொறித்து வைத்த பெருமகன் நம் அந்தாதி நாயகன். 

 நம் அந்தாதி நாயகரை அறிமுகப் படுத்தும் நம் உலக மாக்கவி 

ஓங்குவகை வாழ்வில் ஒளிமல்கும் செய்வினைகள் 

தாங்கு தமிழ்குடி தான்பிறந்தே – வீங்குவளம் 

செல்வம்நல் செல்வாக்கு சீரார் மனிதநேயம்                 நல்ல மணிமொழி யன். (1)

இந்த நான்கு வரிகளுக்குள்ளேயே மணிமொழியானாரின் பிறப்பு வாழ்வு சிறபைப் பதிவு செய்துள்ளார். விடுதிகள் பலர் வைத்துள்ளனர் ஆனால் நம் மணிமொழியானாரின் விடுதியில் தங்காத சான்றோர்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் காக்கும் கொடை நெஞ்சராகத் திகழ்ந்தவர் நம் அந்தாதி நாயகர். 

ஐயா அவர்களின் துணைவியார் அன்னை கமலா அம்மா அவர்கள் பற்றி எழுதிய அந்த்தாதி அவர்தம் பெருமையை செப்புகிறது. 

வீணையின் நாதமோ மெல்லிசை கீதமோ 

பூணும் அணிஅழகோ பொன்னோ - மாணும்நல்           ஓவியமோ காவியமோ உள்ளொளிக் காந்தமோ 

தேவிக மலாவின் திரு  (54) 


திருமகளோ கொஞ்சும் அருமகளோ பாசக் 

கருமகளோ காமகளோ காதல்  - தருமகளோ 

தேவி கமலா செம்மை மணிமொழியன் 

ஆவி கலந்த அகம் (55)  


தம் துணைவரையே எண்ணி வாழும் அருமைப் பெருமாட்டி செல்வச் சீமாட்டி அன்னை கமலா அம்மையாரின் சிறப்பு இந்தப் பாக்கள் மெய்ப்பிக்கிறது. கமலா அம்மையாரும் ஐயாவும் இணைந்து  தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் எம் மதுரை பொற்பரி இல்லத்தைத் திறந்த்து என் கண்முன் நிற்கிறது.

அய்யாவின் மருகர் கல்விக்கோ கணேசன் அவர்களின் தந்தையார் சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றிய பாடல் கல்விக் குடிச் சிறப்பைப் பறைசாற்றுகிறது

 பண்பாடு மிக்கார் பலகல்வி யாளர்க்கோ 

சண்முகம் சுந்தரம் தக்கமுறை – புண்ணியர் 

போற்று கண்பதியர் பொந்தேவி தந்த மாமா  

ஏற்று சம்பந்தத்தின் இயல்  ( 23 )

தமிகத்தில் கல்விக்கொடை நெஞ்சராக வாழும் குடும்பத்தைப் பற்றிய பதிவு நம் நெஞ்சைத் தொடுகிறது.

திருக்குறட் செம்மல் மணிமொழியார் அவர்களின் உரையாடும் போது வள்ளுவப் பேராசானின் குறள்கள் மடை திறந்த வெள்ளம்போல் வெளிவரும். நாம் எந்தப் பொருள்பற்றிப் பேசுகிறோம் அந்தப் பொருளிற்கான் குறளைத் தருவார். திருகுறட்செம்மல் ஒரு கவகனகராகவே வலம் வந்தார். 

தெளிவாய்த் திருக்குறள் நூற்றுமுப் பத்தின் 

அளிமூன்றோ டேதான் அகத்தில் – ஒளிபதித்த 

சான்றோர் மயக்கும்  தடைநீக்கும் வேளாளன்  

வான்போல் வளந்த வகுப்பு   (75)

வகுத்தான் வகுத்த வகையல்லால்  கோடி 

தொகுத்தார்க்கும் துய்ப்பது அரிதாம் – பகுத்துச்சொல் 

வள்ளுவன் தேர்ந்த வழிகற்றே அவ்வழியின்

     வெள்ளம்போல் சொல்லும் விடை  ( 76 )

மதுரை மாநகரின் குறளாசானாக மணிமொழியார் திகழ்ந்த்தை இப்பாடல் படிப்போர் உணரலாம்.

அன்பே உருவான் ஐயா அவர்களின் சிரிப்பு . காட்சிக்கு எளியாராக எல்லோரையும் அரவணைக்கும் பேருள்ளம் நம் மணிமொழியாரின் உள்ளம். 

காண்பார் களுக்கெல்லா காட்சி மலர்முகமே

பூண்பார் தமக்கெல்லாம் புன்னகையே – மாண்புடைய         உச்சத் தமைச்சர் உறவுமுதல் சாமான்யர்                   மெச்சும் நடுநிலை வீறு  ( 47 ) 

       மாசற்ற மாமனிதரின் அந்தாதி அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய நூல். ஏற்ற தாழ்வுள்ள சமுதாயத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும். அறச் சிந்தனைகள் இல்லறத்தின் வழி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மணிமொழியானாரின் அந்தாதி நூல் சிறந்த பதிவு. நூறு பாடல்களும் மணிமொழியனாரின் புகழ்பாடும் பாடல்கள். தம் பல்வேறு அயராத்  தமிழ்த் தொண்டுகளுக்கிடையே அந்தாதி வழங்கிய தந்தையாரைப் போற்றி பதிப்பிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். திருக்குறட்செம்மல் மணிமொழியனார் புகழ் ஒங்குக உயர்க.




Tuesday, January 3, 2023

 திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் சிறந்து விளங்குவது கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எனும் தலைப்பியல் 

சிந்தனைப்பட்டிமன்றம்

தமிழ்மாமணி வா.மு. சே.திருவள்ளுவர்

தமிழ்நாடு திருவள்ளுவர்  கழகம் அறக்கட்டளை  தொடர்நிகழ்வுகள் பல நடத்தி  சாதனை நிகழ்த்தியுள்ளார்  தொண்டர் திலகம் வை.மா.குமார். இன்று திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் சிறந்து விளங்குவது கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எனும் தலைப்பில் 

சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில் நடுவராகப் பொறுப்பேற்று நட்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வில் இரு தலைப்பிலும் வழக்காட உள்ள பெருமக்களைப் போற்றுகிறேன். தொடர் மழை வெள்ளங்களுக்கிடையில் வருகை தந்துள்ள பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

நம் குறளாசான் கல்வி எனும் அதிகாரத்தில் 391ஆம் குறள் நம்மை சிந்திக்க செயலாற்றவைக்கும் குறளாகும்

கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக

தமது குறைகள் நீங்குமளவுக்கு குறையில்லாமல் கற்க வேண்டும். கற்றால் மட்டும் போதுமா அதன் வழி நடந்து சிறப்புற மேன்மையுறவேண்டும். இந்தக் குறள் கல்வியின் சிறப்பை மனிதகுலத்திற்கு வழங்குகிறது. கல்வி என்பது பணிக்காக  பதவிக்காக் அறப்பணிகளுக்காக குடும்ப  உயர்வுக்காக சமுதாய உயர்வுக்காக நாட்டு உயர்வுக்காக மனிதநேய சம நிலைச் சிந்தனைகளுக்கா என அனைத்து நிலைகளுக்கும் கல்வி அச்சாணியாக உள்ளது. 

அண்ணல்  காந்தியடிகள் இலண்டன் சென்று பாரிசுட்டர் பட்டம் முடித்து தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞர் பணியாற்றச் சென்றவர். அங்கு நடக்கும் நிறவெறிக் கொடுமைகள் கண்டு தம் அறப்பணியைத் தொடங்கியவர். பின் இந்தியா வந்து விடுதலைப் போராட்ட்த்தில் தலையேற்று நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். அவர் பயின்ற அறக் கல்வியும் அறிவுக் கல்வியும்  தம் வாழ்நாளில்  மனச்சான்றோடு பயண்படுத்திதை நாம் அறியலாம். தமிழக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியபேரறிஞர்அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து உயர் கல்வி கற்று  சராசரியான மனிதர்கள்போல தன் பெண்டு பிள்ளை வேலை என வாழமல் தந்தைபெரியாரிடம் இணைந்து தமிழ்நாட்டைக் காத்த பெருமகன் அவர் வழியில்  கிடைத்த தலைவர் கலைஞர் தமிழகத்திற்கு சாதித்த சாதனைகள் கற்க கசடற கற்றபின் நிற்க என்ற கஉளுக்கு சான்றாகினர்.

பொருளின் சிறப்பைப் பற்றிக்  வள்ளுவப் பேராசான் கூறும் குறள் சிந்திக்க வைக்கிறது. 


பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது

 பொருளல்ல இல்லை பொருள்  (751)

 நம் நடைமுறை வாழ்கையிலேயே காணலாம் பொருள் உள்ளவர்களிடம் அனைவரும் மத்க்கும் போக்கு இன்றும் உள்ளது. எந்தக் காரியங்களையும் பொருளுள்ளவர்கள் எளிதாக செய்யும் திறன் உடையவராகின்றனர். இந்தக் காலத்தில் கல்வியே பொருள் இல்லையென்றால் கேள்விக்குறியாகிறது. வள்ளு வப் பேராசான் எந்த பொருளைப் பற்றிப் பாடுகிறாரோ அந்தப் பொருளின் நிலையினின்றே பாடுகிறார் என்பதை அறியாலாம். 


கல்வியும் பொருளும் நம் வாழ்வில் எவ்வாறு அங்கம் வகிக்கின்றன என்பட்தி திருக்குறள் வழி கற்றுணர்ந்து வாதாட வருகின்றனர் நம் அறிஞர் பெருமக்கள்

  யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்  

  சாந்துனையும் கல்லாத வாறு (397)


வள்ளுவர் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் மிகச் சிறந்த விளக்குவது கல்விச் செல்வமே தலைப்பில்  உரையாற்ற முன்னைவர் வாணிசோதி,  ஆசுகவி இனியா இளங்கலை மாணவி சன்னி  கற்றவர்களுக்க்கெல்லம்  எங்கு சென்றாலும் சிறப்பு என்ற வகையில் கற்ற்றிந்த அறிஞர் பெருமக்கள் திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வருகை  தந்துள்ளனர். . 


ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை

 ஊக்கார் அறிவ்டையார்  

என்கிறார் வள்ளுவப் பேராசான் . 

கல்வி கற்கிறீர்கள் கற்றபின் செல்லவத்தை சேர்க்க பாடாய் படுகிறீரகள்/ பின் சேர்த்த செல்வத்தை பாதுகாப்பதும் நமது கடமை என மொழிகிறார் நம் ஆசான். நம்  அறிவுக்கு புலப்படாத இந்த்த் தொழிலைச் நாம் செய்யமுடியுமா என்ற பட்டறிவு இல்லாமல்   இருக்கும் முதலையும் அறிவுடையவர்கள் இழக்க மாட்டார்கள் என நம் ஆசான் ஆணித்தரமாக்க் கூறுகிறார்.  


குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொண் றுண்டாகச் செய்வான் வினை. (758) 


மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பது போல்  தக்க பொருளோடு செயலைச் செய்தால் வாழ்வின் உச்சத்தை அடைமுடியும்.  என்று வள்ளுவப் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழ்யில்  மிகச் சிறந்து விளங்குவது பொருட் செல்வமே. எனும் தலைப்பில் ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள் கவிஞர் பொருனை மாயன்  ககவிஞர் ஞால இரவிச்சந்திரன் கவிஞர் மதியரசு திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வாதாட் வந்துள்ளனர். திருவள்ளுவர் கழக அறக்கட்டளை அழைத்துள்ள நிகழ்வுக்கு வருகை தந்துள்ள சிந்தனைச் செல்வங்களே திருவள்ளுவர் கூறும் அறச் சிந்தனைகளை வருகை தந்துள்ள  அறவாணர்கள்  கருத்துக்களை நுட்பமாகக் கேளுங்கள்.

கல்விச்செல்வமே என்ற அணியின் தலைவர் முனைவர் வாணிசோதி பேச வருகிறார்கள். நெல்லை மாவட்டத்துப் பெருமாட்டி இங்கு சிந்தி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் கும்மனாஞ்சாவடி வழியாக திருவேற்காட்ட்டில் உள்ள கல்லூரிகுச் செல்கிறார்கள். தினமும் 34கிலோமீட்டர்  பயணித்து தமிழ்ப்பேராசிரியப்  பணியாற்றும் பெருமாட்டியை கல்விச் செல்வமே என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கிறேன்.  பேராசிரியர் உரை மிகச் சிறந்த உரை. வள்ளுவப் பெருமான் கல்விக்கே என  சிறப்பாக பதிவு செய்துள்ளார். 

பொருட்செல்வமே எனும் அணிக்கு தலைமை தாங்கும் கவிஞர் பொருனை மாயன் வருகிறார். தோற்றமே புலவர் பெருமக்களின் தோற்றத்தோடு இருகிறார். ஆனால் பொருளுக்கு ஆதரவாக பேச வருகிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பட்டிமன்ற நிகழ்வுகளில் பேசிவரும் பெருமகன். திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கு உருகார் என்ற மொழிக்கேற்ப  திருவாசக உரைகள் பல வழங்கிய கவிஞர். வருக பொருட்செல்லவமே  தலைப்பில் திருக்குறள் பதிவைத்தருக.

 பொருட்செல்வமே தலைப்பில் அரிய கருத்துக்களைத் தந்துள்ளீர்கள். நம் மண்ணிலேயே உழைப்பால் உயர்ந்த சிறந்த செல்வர்கள். இலக்கிய செல்வர் குமரிஅனந்தனால அழைத்துவரப்பட்ட தம்பி வசந்த்குமாரை வி.சி.பி நிறுவணத்தில் பணியாளாக சேர்ந்து இன்று வசந்த் நிறுவணம் 100ஆவது கிளையைத் துவங்குகிறது. பாராளுமன்ற உறுப்பினராக வசந்தகுமார் மகன் உள்ளார். பொருள்செல்வத்தின் சான்று. 

கல்விச் செல்வத்திற்கு பேச ஆசுகவி இனியா அவர்களை அழைக்கிறேன். எந்த இலக்கிய நிகழ்வுக்கும் அயர்ச்சியில்லாமல் சென்று இலக்கியம் வளர்க்க்கு  கவிஞர்இனியா அவர்கள் பணி மகத்தான பணி வாழ்த்துகிறேன். 

இனியா அவர்கள் மிகச்சிறந்த  திருக்குறள் சிந்தனைகளை வழங்கினார். என் அருமைத்தையார் அவர்களும் சிற்றந்தையார் அவர்களும் ஒரு ஆண்டநாயகபுரம் குக் கிராமத்தில் பிறந்தவர்கள். எனது தாத்தா  முத்து பாட்டி இராமாயி அரும்பாடுபட்டு கல்வியைக் கொடுத்தனர். அந்தக் கல்வியின் சிறப்புதான் இன்று நாங்கள் கல்விச் சிகரத்தில் உள்ளோம். தந்தையார் நீங்கள் அறிந்த உலா மாக்கவி பெருங்கவிக்கோ என் அருமை சிற்றந்தையார் வா,மு.முத்தராமலிங்கம் ஐ ஆர் எஸ் முடித்து இந்தியாவின் நேரடித்துறைத் தலைவராக பொறுப்பேற்று  கல்வியால் சாதித்து சுற்றங்களை பேணிக் காத்தவர். இனியா வழி கல்வியின் பெருமையை பதிவு செய்கிறேன். 

 அடுத்து பொருட்செல்வமே தலைப்பில் காணொளிகளின் காதநாயகன் கவிஞர் ஞால. இரவிச்சந்திரன் அவர்களை அழைப்பதில் மகிழ்கிறேன். கவிஞர் ஞால இரவிச்சந்திரன் சிறந்த கவிதை நூலை  பெருமகன்  வழங்கியுள்ளார். வருக திருவள்ளுவரின் பொருட்சிந்தனைகளைத் தருக.. 

கவிஞர் ஞால இரவிச்சந்திரன் பொருள் சார்ந்த திருக்குறள் கருத்துக்களை வழங்கினார். வாழ்த்துகள். மலேசியா சென்றவர்களுக்குத் தெரியும் துன்சம்பந்தன் சாலையில் 25 மாடி கட்ட்டிடம் மாலேசியா தோட்டப்பு’றத் தொழிலாளிகளின் கட்டிடம். அதை உருவாக்கிய பெருமை டான்சிறி சோம சுந்தரம் அவர்களைச் சாரும். எழுத்தாளர்கள் கவிஞர்கள்  மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி என அனைவருக்கும் நிதி வழங்கும் பெருமகன். சிறந்த எழுத்தாளர்களுக்கு உயரிய 10000 டாலர் உயரிய விருதைத் தரும் பெருமகன். பொருளை உருவாக்கி மக்கட்கு வழங்கும் அவர்களை அறிய வேண்டும் என பதிவு செய்கிறேன்.

 கல்வியே எனும் தலைப்பில் இறுதியாக மாணவி சனனி  அவர்களைப் பேச அழைக்கிறேன்.மாணவியை பயிற்றுவித்து அழைத்து வந்துள்ள வாணி சோதியைப் பாராட்டுகிறேன்.. மாணவி சனனி மிகச்சிறந்த உரையாற்றினார். வாழ்த்துகள் மிகச் சிறப்பாகப் பேசினீர்கள் தொடர்க. 

 இறுதியாக செலவமே தலைப்பில் பேசுவதற்கு கவிஞர் மதியரசு அவர்களை அழைக்கிறேன்.முத்தாய்ப்பாக திருக்குறள் கருத்துகளில் செல்வச் செழுமையை வழங்க வேண்டுகிறேன். மதியரசு மிகச் சிறந்த பதிவுகளை சிலப்பதிகாரம் தொல்காப்பியம் புறநானூறு என இலக்கியப்ப் பதிவுகளை வழங்கியுள்ளார். சிறப்பு. 

இங்கு அமர்ந்து கேட்போர் சார்பில் பொருளுக்கு அருளாளர் ஐயாப்பிள்ளை அவர்களையும் கல்விக்கு கவிஞர் திருவைபாபு அவர்களையும் அழைக்கிறேன். அனைவரின் கருத்துக்களையும் கேட்ட நான் எதற்கு தீர்ப்பு வழங்குவது என்ற திகைப்பில் இருக்கிறேன். மிகச் சிறப்பாக தங்கள் அணிக்கு சிறப்பாக வாதாடியுள்ளீர்கள். பொருள் குறித்து நீங்கள் பேசும்போது எனக்க் தென் ஆப்ப்ரிக்கா வாழும் தமிழர் மிக்கி செட்டி நினைவுக்கு வருகிறார். தென் ஆப்ரிக்காவில் தமிழர்கள் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள்.