Thursday, December 31, 2015

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் பதில்கள்பேட்டி கண்டவர் முனைவர் பேராசிரியர் சாந்தி சென்னை
1.      கவிதையில் உங்களுக்கு ஈடுபாடு வரக் காரணம்.?                           நான் பிறந்தது தமிழ்க் கவிதைக்  குடும்பம். தந்தை பெருங்கவிக்கோ அவர்கள் எங்களைப் பள்ளிப் பருவத்திலிருந்த்தே கவிதை எழுத ஊக்குவிப்பார்கள். தந்தையார் கவிதைகளும், இந்நூற்றாண்டில் வாழும் கவிஞர்களின் கவிதைகளின் தாக்கமே கவிஊற்றின் காரணம். சமூக அவலங்களைக் காணும்போது எழும் உள்ளக் கொதிப்பே கவிதையின் பிறப்பு.
2.      வணிகவியல் படித்துவிட்டு தமிழ் எழுத்தாளர் வரிசையில் வரக் கார்ணம் என்ன?                                                                பள்ளி நாடகளிலேயே  எழுத்தார்வம் எம்மை ஆட்கொண்டது. தமிழ்ப்பணி எனும் இதழ் தந்தையாரால் தொடங்கப்பட்டு 44 ஆண்டுகளாக் வெளியிட்டு வருகிறேன். புதுமுக வகுப்புக்குப்பிற்குப் தமிழ்ப்பணியின் ஆசிரியராகவும் மாலைநேரக் கல்லூரியில் வணிகவியலும் படித்தேன். தமிழ்ப்பணிக்கென அச்சகம் தொடங்கினேன்.பின் முதுகலை வணிகவியல் அஞ்சல் வழியில் படித்தேன். என் அன்னைக்கு வங்கிப்பணிக்கு யான் செல்லவேண்டும் என்ற பேரவா. தந்தையின் வழிகாட்டுதலில்  தமிழ்ப்பணியே என்னை ஆட்கொண்டது.‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்”                   என்ற வள்ளுவனாரின் எண்ணமே எழுத்தாளர் வரிசையில் வரக் காரணம்.
3.      உங்கள் புத்தகங்களில் ஈழத் தமிழர்கள் குறித்து அதிகம் எழுதியுள்ளீர்கள் அதுகுறித்து சில வார்த்தைகள்?                                ஈழத் தமிழர் போராட்டங்களைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவாக பன்னாட்டுத் தமிழுமன்றம் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழகத்தில் அனைத்துக் கட்சி போராட்டங்கள் தில்லி மாநகர் போரட்டங்கள் சுவிடசர்லாந்து, இலண்டன், அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர் போராட்டங்களில் கலந்து அவர்களுடைய இன்னலில் பங்கேற்றுள்ளேன்.தமிழகத்திலிருந்து எண்ணற்ற் ஈழ மக்கள் புலம் பெயர்வதற்கு என் இல்லத்திலேயே தங்கவைத்து வழிப்படுத்தியுள்ளேன். அந்த புறநானூற்றுத் தமிழர்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளேன்.நம் வாழும் காலத்தில் தமிழர்களின் வீரத்தையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்தியவர்கள் ஈழத்தமிழர்களே.
4.      தந்தை பெரியாரின் சிந்தனைகளை உங்கள் எழுத்துக்களின் பதிவு செய்துள்ளீர்கள் பெரியாரின் கருத்துப்படி பெண்களின் முன்னேற்றம் உள்ளதா இல்லையா?                                             தந்தைபெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் சமத்துவம் தோன்றிருக்காது. தந்தை பெரியார் 94ஆம் அகவை வரை முத்திரப்பையை சுமந்து இறுதி வரை மனித இனதிற்கும் சமூக நீதிக்க்கும் பெண்சமத்துவத்திற்கும் போராடிய மாமனிதர்.. அவர் போராடிய அனைத்திலும் சமூகம் முன்னேற்ற்ப் பாதையில் உள்ளது. பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக உயர்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு மேலாக கோலோச்சுகிறார்கள். சொத்துரிமை, குடும்ப கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு.அனைத்திலும் முன்னனியில் உள்ளார்கள். ஆண்பெண் சமத்துவச் சிற்பி தந்தைபெரியார். அவருடைய பகுத்தறிவுக் கொள்கைகளே தமிழர்களின் ஆயுதம் என்பதில் அசையாத கொள்கையாளன் நான்.
5.      சினிமா  பெண்களை காட்சிப் பொருளாக விளம்பரப் பொருளாக பயண்படுத்திக் கொண்டிருப்பது குறித்து தங்கள் கருத்து?               ”பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்ற பொய்யாமொழியாரின் மொழியை உணராத அறிவிழிகள். பெண் தாயாக, தாரமாக, மகளாக. மருமகளாக, வாழ்ந்து சமூகத்திலும் தலையாய பங்கேற்கிறார்கள். நான் பெண் என்ற தலைப்பிலேயே நெருப்ப்பு நதி நூலில் எழுதியுள்ளேன். அவர்கள் காட்சிப் பொருளல்ல கற்பகத் தருக்கள். அந்தப் படங்களை மக்கள் புறக்கணிபதற்கு கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
6.      இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதலைத் தவிர வேறு சிந்தனை இந்த சினிமா பதிக்கவில்லை அதுகுறித்து உங்கள் கருத்து?                 தமிழர்கள் வாழ்வில் காதல் இரண்டறக் கலந்தது “செம்புலப் பெயல்நீர் போல அன்புடைநெஞ்சம்” என புறநானூற்றும் புலவன் பாடியுள்ளான். காதல் இருபாலாரும் கற்புடன் கடமையுடன் சமூக உணர்வுடன் இருக்கும் காதலாக இருக்கவேண்டும். சாதியை சமாதியாக்கும் ஒரே சக்தி காதல்தான். வரும் படங்கள் காமத்தையே தூண்டுகிறது காதலைத் தூண்டவில்லை கண்டிக்கப் படவேண்டிய ஒன்று.
7.      சமூகச் சீரழிவுகளைக் களைய இளைஞர்கள் மத்தியில் எந்த வழியில் சிந்தனைகளைப் பதிக்க வேண்டும்.                                              ஒவ்வொறு இளைஞனுக்கும் திருக்குறள் மறை நூலாகப் பதியவைக்க வேண்டும். அது வீடு பள்ளி சமுகம் என நம் தமிழர்களுக்குப் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்து வோமானல் சீரழிவுகள் தானகக் களையும்.தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வர்.
8.      நூல் ஆசிரியர் கவிஞர் பேச்சாளர் இதில் எந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்வீர்கள்?                                                               நான் எழுத்துவதையோ பேசுவதையோவிட  செயல் வடிவில் தொண்டாகச் செய்வதில்தான் மகிழ்ச்சியடைவேன். எழுதுவதால் மட்டும் சாதித்து விடமுடியாது அதைப் பின்பற்றினால்தான் சமுதாயம் மேன்மையுறும். என்னுடைய ஒரு நூலின் தலைப்பே “கற்றபின் நிற்க” என வைத்துள்ளேன்
9.      உங்கள் படைப்புகளில் எது சிறந்தது.?                                         என்னுடைய படைப்புகள் அனைத்துமே சிறந்த படைப்புகளாகவே. இருப்பினும்  “யாதும் ஊரே” உலகத் தமிழர்களின் உரைகல். கனடாவில் டோரண்டோ நகரில் இந்நூல் வெளியீட்டின்போது கீதம் வானொலி அறிஞர் கணபதி இரவீந்திரன் ஈழத்தமிழர்கள் பற்றிய நான் ;பட்டியலிட்ட கருத்துக்களை நெகிழ்வுடன் கூறி ஈழத்தமிழர்கள் துன்பத்தை திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார் ஈழத்தமிழர்கள் ஆசிரியருக்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறியது நூலின் பயணை உணர்ந்தேன். மலேசியாவில் ஆய்வறிஞர் அமரர் சந்திரகாந்தன் ஆய்வுரை என உலக நாடுகளில் பலநாடுளிலும் வெளியீடு கண்ட நூல்.
10.   உங்கள் படைப்புகளில் எதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று நினைத்தது உண்டா?                                                                 யான் பர்மா சென்று திரும்பியவுடன் பர்மா மண்ணிலே எனும் நூல் வெளியிட்டேன். இன்னும் விரிவாக பர்மா பற்றி எழுத ஆவல் காலப் போக்கில் நிறைவு செய்வேன்.
11.   தமிழ்நாட்டில் தமிழ் பின் தங்கியதற்கு காரணம் என்ன?                              தமிழ் நாட்டில் தமிழ் பின் தங்கியதற்குக் காரணம் பெற்றோர்களின் ஆங்கில மோகம். கல்வியை அரசு கட்டுப்பாட்டிலிருந்து மெட்ரிகுலேசன் பள்ளி என தனியார் துறையாக்கியது. அரசு பள்ளி ஏதோ எழைமக்களின் புகழிடம் என மாற்றி வஞ்சித்தது. தமிழ் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை அளிக்காதது. தமிழ்நாட்டில் தமிழரல்லாதாரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் 1993ஆம் ஆண்டு தந்தையார் 50 தமிழ் அறிஞர்களுடன் 1330கி.மீ. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக நடைப்பயணமாக வந்தோம். தொடர்ந்து 23 ஆண்டுகாலமாக ஊர்திப் பயணமாக விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடர்ந்து செய்துவருகிறோம். மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். ஆட்சியாளர்கள் கபட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் ஆள வகை செய்யவேண்டும்.
12.   ஒருமொழியின் பொருளாதர பொருளாதார நிலை உயரும்போது மொழியின்நிலை உயரும் இது குறித்து உங்கள் கருத்து?                          தமிழுக்கு எல்லா ஆற்றலும் உண்டு தமிழர்களுக்கு உண்டா. மொழி தலைமுறை தலைமுறையாக வென்று வருகிறது. அது தன் இனத்திற்கு மிகப் பெரிய அரணாக உள்ளது. கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்பது வரலாறு இன்று வாழும் தலைமுறையினர் தம் பொருளாதர வளத்தைப் பெருக்கி மொழியைக் காக்கவேண்டியது அவசியம. அதற்கு ஆட்சியாளர்களைப் பணிய வைப்பதற்கு புரட்சி வேண்டும் அதற்கு தமிழர்கள் அணியமாக வேண்டும். வீன் பிதற்றலால் பயணில்லை.
13.    மலேசிய மக்களுக்கு தமிழ்ப் பற்று அதிகம் காரணம் என்ன என்பது குறித்து கருத்துகள்?                                                     பேரறிஞர் அண்ணா அவர்கள் மலேசியா பயணத்தின்போது மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று குறிப்ப்பிட்டார். இன்றும் அதுதான் தமிழை வாழவைக்கிறார்கள். தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், ஆலயங்கள், பகுத்தறிவு முழக்கங்கள், தமிழ் மாநாடுகள் நூல் வெளியீடுகள்  நாளிதழ்கள் பருவ இதழ்கள் தமிழ் இயக்கங்கள், தமிழ் வானொலி, தொலைக்காட்சி என தமிழ் வளர்ச்சியைப் பட்டியலிடலாம். கற்றணைத்து ஊறும் நூலில் விரிவாகக் கூறியுள்ளேன். 2009 ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு கோலாலம்பூர், ஈப்போ. பினாங்கு. கெடா ஊர்களில் நான்கு நாட்கள் நடத்தினோம். நடத்திய பெருமைக்குரியவர்கள் மலேசியத் தமிழர்களே.
14.   அமெரிக்கா கனடா சப்பான் ஐரோப்பிய தென்ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளில் தமிழின் நிலைகுறித்து தங்கள் கருத்து?     அமெரிக்கத் தமிழர்கள் அனைத்து மாநிலத்திலும் ச்ங்கம் வைத்து தமிழ் வளர்க்கின்றனர். ஆண்டுதோறும் ஃபெட்னா கூட்டமைப்பின் மூலம் மாநாடுகள் நடத்திவருகின்றனர். ஒவ்வொரு சங்கமும் தமிழ் இதழ்கள் நடத்துகின்றனர்.இந்த ஆண்டு சூலை25,26. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 7ஆம் உலகத் தமிழர்கள் மாநாடு வாசிங்க்டன் நகரில் நடத்தினோம் உலகளாவிய பெருமக்கள் பங்கெற்றனர். கனடாவில் ஈழத் தமிழர்களின் தமிழ் உணர்ச்சியையும் வளர்சியையும் கணலாம் டொரண்டோ நகரில்எங்கு நோக்கினும் தமிழ்ப்பெயர்ப் பலகைகள். 15 மேற்பட்ட தமிழ் இதழ்கள்  தமிழ்க் கல்லூரிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். நாள்தோறும் கலை நடன விழாக்காள் ஆண்மிக ஆலயங்கள் என தமிழ் உணர்வு பொங்கும் நாடு கனடா. ஐரோப்பிய நாடுகளில் நாடுகளின் தம் பிள்ளைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர். ஈழத் துன்பத்தல் புலம் பெயர்ந்தாலும் தமிழைத் தன் வாழ்வில் நீங்கா வண்ணம் காத்து வருகின்றனர்.உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் மூலம் 10 மாநாடுகள் உல்கம் முழுமையும் நடத்தியுள்ளனர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் செர்மனி பெர்லின்நகரில் 3ஆம் உலகத்தமிழ்மாநாடு நடத்தினோம். 50 அறிஞர் பெருமக்கள் 50 ஈழக் குடும்பங்களில் தங்கினர். உலகப் பெருமக்கள் பங்கேற்ற மாநாடு இது. தென் ஆப்ரிக்காவில் நம் இந்தியத் தமிழர்கள் தமிழ் மறந்து தமிழ் பெயரளவில் கொண்டுள்ளனர், தமிழ்கத்திலிருந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இராமசாமி பல்கலைகழகமும் இணைந்து தமிழ் பயிற்றுணர்களை உருவாகியுள்ளனர். யானும் தந்தையும் தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோம். கவிவானம் நூலில் பதிவு செய்துள்ளேன். தமிழ்க்கலை ஆலயம் அங்கு சிறப்பாக உள்ளது.
15.   பேச்சுத் தமிழ் குறித்து உங்கள் கருத்து?                                பெற்றோர்கள் இல்லத்தில் தமிழிலேயே மக்களிடம் பேசவேண்டும். ஆனால் மம்மி டாடியும் வாக் பன்னித்  டாக்பன்னி என பன்னித் தமிழ் தமிழர் நாவில் வருவதைக் கண்டு நெஞ்சம் குமுறுகிறது. மக்களை வழிப்படுத்த வேண்டிய ஊடகங்களின் தலைப்பும் பேச்சும் ஆங்கில மயம்.செய்தித் தாள்கள் தமிழ் பத்திரிகை என்ற எண்ணமே இல்லை, நான் பர்மா சென்றிருந்த்தபோது அனைத்து மக்களிடமும் இராமநாதபுர மாவட்ட கொஞ்சு தமிழ் நடமாடியது. உங்கள் தொலைக் காட்சி இங்கு வந்தவுடன் தமிழ் இங்கு கெடுகிறது என்று கூறிய்போது வெட்கித் தலைகுனிந்தேன். தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலக்காத தமிழே பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலம் பேசும் மான உணர்ச்யைக் கொள்ளவேண்டும்.
16.   கவிதைகள் குறித்து உங்கள் கருத்து?                                      தழிழ்க் கவிதையின் பொற்காலம் இக்காலம். மூத்த கவிஞர்களும் இளைய கவிஞர்களும் உலகம் முழுமையும் சாதனை புரிகின்றனர். எல்லா பாவகைத் தளத்திலும் தமிழ்க் கவிதை உச்சத்தில் உள்ளது, இணைய தளத்திலும் கவிதைத் தாய் ஊர்வலம் மிகச்சிறப்பாக உள்ளது. எம் தந்தையார் கூறுவதுபோல் ஒரு தமிழ்க் கவிஞர் நோபல் பரிசு பெறுவார். தமிழ்க் கவிதை தம் வீச்சால்  உலகை ஆள்கிறது.                      
17.   பொதுவுடைமை குறித்து உங்கள் கருத்து                                 பெரியார் சிந்தனைகள் எல்லம் பொதுவுடைமை கருத்து தானே. பெரியார் சிந்தனையாளர்கள் பொதுவுடைச் சிந்த்னையாளர்களே
18.   தமிழ் வளர்வதற்கு அரசு செய்ய வேண்டிய வேலை என்ன.? முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் தமிழுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்து எல்லா நிலைகளிலும் தமிழை முதன்மைப் படுத்தினார்கள் அது தொடர வேண்டும். செம்மொழி எனத் தகுதி பெற்று அதற்கென நிதி பெற்று செம்மொழி மாநாடு உலகமே வியக்கும் வண்ணம் நடத்தினார்கள் தற்போது செம்மொழி என்ற சொல்லே இல்லாமல் புதைக்கிறார்கள் அது யார் ஆண்டாளும் செம்மையாக தொடரவேண்டும். தமிழர்கள் பெட்டகம் அறிஞர் அண்ணா நூலகம் போன்று மாவட்டம் தோறும் தொடரவேண்டும். ஆட்சி மாற்றம் தமிழைப் புதைக்கக் கூடாது. ஆட்சியில் அலுவலில், நீதிமன்றத்தில். கல்விக்கூடத்தில். உயர்கல்வியில் ஆலயத்தில், வாழ்கையில் அனைத்திலும் தமிழை நடைமுறைப்படுத்தவேண்டும்.
19.   மெட்ரிக்குலேசன் கல்வி குறித்து தங்கள் கருத்து?                                         கல்வியை வியாபார மையமாக மாற்றிய ஒரு அமைப்புதான் மெட்ரிகுலேசன் பள்ளி. பெற்றோர்களிடம்பகல் கொள்ளை, பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியம் அவர்கள் கல்லூரி பல்கலைக்கழகமென உயர்வர். அங்கு படித்தவர்கள் பெரும்பாண்மையினர் எவ்வித எம்மொழியறிவும் இல்லாமல் அறிவுமின்றி அல்லலுறுகின்றனர். சென்னை முதல் குமரி முதல் அனைவருக்கும் ஒரே அரசுவழி  தரமான தமிழ் வழிக் கல்வி கொண்ட வரத்  திட்டமிட வேண்டும்.
20.   இலக்கிய உலகில் தமிழின் நிலை முதல் இடத்தில் உள்ளது ஆனால்  நடைமுறையில் ஏன் தளர்ந்து உள்ளது?                                           தாங்கள் கூறுவது உண்மை சங்க காலம் முதல் இன்றுவரை தமிழின் நிலை முதல்நிலையில்தான் உள்ளது. மதத்தைப் பரப்பவந்த மத போதகர்களை ஆட்கொண்டு அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. இன்று தமிழர்கள் அனைத்தையும் படிக்கும் ஆர்வம் பெருக வேண்டும். தமிழ் உணர்வாளர்கள் தமிழுக்காக போராடியவர்கள் போற்றப்பட வேண்டும். வளர்ந்தவர்கள் தங்களைப் பற்றியே தன்னல விளம்பரம் செய்யாமல் அனைவரையும் வெளிச்சம் காட்டவேண்டும். அரசு பரிசுகள் நடுநிலையோடு வழங்கி ஊக்கமளிக்கவேண்டும். ஆசிரியரில் நூல்கள் அரசு நூலகங்களில் கன்னியத்தோடு வாங்கி எழுத்தாளர்களை பாதுகாக்கவேண்டும்.தமிழ் என்றும் முதன்மையாகவே  இருக்கும் தமிழைத் தாங்குவர்களை தமிழர்கள் முன்னிறுத்தவேண்டும்.
21.   தமிழ் மொழியின் ஆய்வுகள் குறித்து ஒரு சில கருத்துகள்?        தமிழ் காட்சிப் பொருளாக இல்லாமல். கருவூலமாகத் திகழ எல்லா நிலைளிலும் தமிழ் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழர்கள் இன்று உலகம் முழுமையும் வெற்றிகொடி நாட்டுவதை தமிழ்த் திரைப்படம் வரும்போது உணரலாம், இந்தத் தளத்தை ஆய்வுக் களமாக எல்லா நிலைகளிலும் முயற்சி மேற்கொள்ளவேண்டும். ஒவ்வொரு உலகப் பல்கலைக்கழகங்களும் தமிழ் இருக்கைகள் அமைத்து உலகத் தமிழர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழனால் முடியும் என்ற சாதனைச் சரித்திரம் நிலைகொள்ளவேண்டும். 
                                                             

கனடா டோரண்டோ நகரில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவரின் கற்றபின் நிற்க நூல் வெளியீட்டு விழா
(கனடா டோரண்டோ நகரில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவரின் கற்றபின் நிற்க நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)                         
கனடா டோரண்டோ நகரில் அரும்பாடு பட்டு கற்றபின் நிற்க நூலின் வெளியீட்டு விழா  நடத்தும் அருமைச் சகோதரர் உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களே நிகழ்வுக்கு தலைமை தாங்கும் சோதிசெல்லா அவர்களே முதுபெரும எழுத்தாளர் நவம் அவர்களே வருகை தந்துள்ள ஈழத் தமிழ் நெஞங்க்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். கற்றபின் நிற்க நூலை சிறப்பாக ஆய்வுரை வழங்கிய கீதம் வானொலி கணபதி இரவீந்திரன் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி.
     தங்கள் முன் இன்றுநிற்பதற்குக் காரணம் அமெரிக்காவில் வாசிங்க்டன் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 7ஆம் மாநாடு. தமிழகத்திலிருந்து 20 பெருமக்களோடு நான் நான் வாசிங்டன் நகருக்கு வந்தேன். அதுபோது அண்ணன் உதயன் லோகேந்திரலிங்கம் தலைமையில் கனடாவிலிருந்து ஒரு குழுவை அழத்துவந்தார்கள். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் துரைராசா அவர்க்ளில் ஒருவர். அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.  இருபெரும்க்களும் மாநாட்டில் அரியொரு உரை நிகழ்த்தி மாநாடு சிறக்க பங்கேற்றமையை போற்றி மகிழ்கிறேன்.
     அண்ணன் லோகன் அவர்கள் தமிழகம் வந்திருந்தபோது என் கற்றபின் நிற்க நூலைக் கொடுத்து இந்நூல் கனடாவில் வெளியீடு காணவேண்டும் என்ற அவ்வாவினைத் தெருவித்தேன். அண்ணன் அவர்கள் நான் தமிழகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே தொலைபேசியில் பேசி நாள் இடம் அனைத்தையும் உறுதிப்படுத்தி முகநூலிலும் உதயன் இதழிலும்  பெரும் விளம்பரப் படுத்தினார்கள். உதயன் அவர்கள் நான் மட்டுமல்ல உலகிலிருந்து வரும் தமிழ்ப் பெரும்க்களை பாராட்டும் நட்பின் நாயகர்.
     மாநாடு வாசிங்டனில் முடித்து அமெரிக்கா வாசிங்க்டனிலிருந்து கனடா டொரண்டோவிற்கு தன் மகிழ்வுந்திலேயே என்னை இங்கு அழைத்துவந்துள்ளார்கள். அமெரிக்கா சாலைகளில் நாங்கள் பயணிக்கும்போது ஆனந்தக் களியாட்டம்தான். நீண்ட பரந்த சாலைகளும் எங்கு நோக்கினும் இயற்கைத்தாயின் எழிலும் எம்மை ஆட்கொண்டன. உதயன் லோகன் கவித்துவம் உடைய கவிநெஞ்சர். ஒவ்வொரு இயற்கைக் காட்சியின்போதும் நாயகாராவைத் தாண்டும்போதும் இவருடைய கவியருவியும் தலைகாட்டும்.
     நான் உலக நாடுகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பே கற்றபின் நிற்க எனும் இந்நூல். பல்வேறு நாடுகளில் அருந்தமிழ்த் தொண்டாற்றும் பெருமக்களின் அருமை பெருமைகளைப் பதிவு செய்துள்ளேன். தமிழ் இலக்கியம் சமுதாயம் இன உணர்வு எழுத்தாளர்கள் என பல்வேறு கோணங்களில் இந்நூல்  பறைசாற்றும். எமை பேச அழைத்த பெருமக்கள் பெருமையுறும் வண்ணம் நன்கு தாயாரித்தபின்தான் பேசச் செல்வேன் அந்தப் பேச்சுக்களும் அந்நிகழ்வை அரும்பாடுபட்டு நடத்தியர்களையும் உலகறியச் செய்வதுதான் இந்த கற்றபின் நிற்க நூல் என பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
     மலேசியா. சிங்கப்பூர் கனடா அமெரிக்கா என பல நாடுளில் ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன. திரைப்படங்களே தமிழர்களை ஆளூகிற நேரத்தில் இலக்கியமும் உலகை வலம் வருவது எண்ணி மகிழத்தக்க ஒன்று. கனடாவில் தமிழ் இதழ்களும் கலைகளும் தமிழ்ப் பள்ளிகளும் வானொலி தொலைகாட்சி  கண்டுபெருவகை கொள்கிறேன். சுகார்பொரோ பகுதியில் சென்றால் எங்கு நோக்கினும் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் கண்டு பேராணந்தம் கொண்டேன்.
     சென்றமுறை நான் இங்கு வந்தபோது நகராட்சி தேர்தல் நடைபெற்றது. அப்பொது இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கும் சகோதரர் சோதிசெல்லா மற்றும் நம் தமிழ்ப் பெருமக்கள் பலர் போட்டியிட்டனர் அதுபோது நம் மக்களின் சன்நாயகப் பங்களிப்பைக் கண்டேன்.தற்போது  இங்கு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினாராக உள்ள இரதிகா சிற்சபேசன், செந்தில், மற்றும் பல தமிழ்ப் பெருமக்கள் கனடாவின் மூன்று கட்சியிலும் போட்டியிடுகின்றனர். சுகார்பரோ தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சிகளும் வேட்பாளர்கள் தமிழர்களே. இந்த சனநாயகப் பங்களிப்பில் நம் தமிழ்மக்களின் உள்ளார்ந்த உணர்வைக் கண்டு மகிழ்கிறேன். மக்களாட்சியின் மாண்பை உலகுக்கு உணர்த்தும் கனடா நாட்டை போற்றிப் பாராட்டுகிறேன்..
     ஈழத்து மூத்த எழுத்தாளர் நவம் அவர்களின் நூலும் வெளியீடு கண்டுள்ளது. ஐயா அவர்களை சென்னையிலேயே கண்டு அளவலாவிய பேறுபெற்றுள்ளேன். அந்தக் காலத்திலேயே இலங்கையிலிலிருந்து தமிழகம் வந்து பயணக்கதையாக தந்துள்ளார்கள். அந்தக் கால தமிழகத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள். பெருமகனாருக்கு என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.
     தமிழன் என்ற இனத்தை உலகிற்கு உணர்த்திய பெருமை ஈழப் போராட்டத்திற்கே உண்டு. ஈழ மக்களின் ஈகம் என்றும் நிலைத்து நிற்கும். காலத்தின் கோலத்தால் ஈழத் தமிழர்களிள் புலம், பெயர்ந்த நாடுகளில் வாழலாம். அவர்களுடைய உணர்வு எங்கும் தமிழ் தமிழர் பெருமையைக் காக்கும் பேரரணாக உள்ளது. தாங்கள் அளித்துள்ள ஈகம் வீண் போகாது காலப்போக்கில் கட்டாயம் தமிழீழம் பிறக்கும். பிறக்கும் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

Saturday, September 5, 2015

அமெரிக்க மண்ணில் தேமதுரத் தமிழோசை


தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்
(அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் சூலை 25,26 – 2015 நாட்களில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாட்டு மலருக்கு மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவரின் முகவுரை )
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாடு அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் நடைபெறுவதென்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும். அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் ஐந்தாம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு சான்பிரான்சிசுக்கோ செல்லதிட்டமிட்டபோது உலக்கவிஞர் சங்கத் தலைவர் பத்மபூசன் கிருட்டிணா சீனிவசன் வழி உலகக் கவிஞர் உரோசுமேரி வில்கின்சன் சான்று அனுப்பி அமெரிக்க நுழைவைப் 35 ஆண்டுகட்கு முன்பே பெற்று  அருமை சிற்றந்தையார் வா.மு.முத்துராமலிங்கம் பயணச்சீட்டு வழ்ங்க மாநாடு முடித்து உலகை வலம் வந்தார். பின் மருத்துவாமாணி பஞ்சாட்சரம் அவர்கள் தமிழ் ஈழ மாநாடு நீயூயார்க்கில் தந்தையார் தலைமையிலேயே உலகத் தமிழ்த் தலைவரக்ள் பங்கேற்றனர்.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து                               மன்னுயிர்க் கெல்லாம்  இனிது.
என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதின் மெய்மையை வாழ்வில. உணர்கிறோம். என் அன்புச் சகோதரர் பொறிஞர் கவியரசன் அவர்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாடு நடந்தபோது பெரும் இன்னலுக் உட்பட்டோம் பெருந்தொகை அனுப்பி மாநாடு வெற்றிகரமாக நடத்த பேருழைப்பும் பொருளும் வங்கினார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உத்தமம் போறுப்பேற்று செம்மையான முறையில் மாநாட்டை நடத்தினார். அமெரிக்காவிலும் பல்க்லைகழக வாசு அரங்கநாதன் அவர்களோடு இணைந்து கணினி மாநாட்டை தமிழ்ப் பெருமக்களுக்கு சான்று வழங்கி அழைத்து சிறப்பாக நடத்தி தமிழுக்கும் தமிழர்க்கு பெருமைசேர்த்தார்.
    தம்பி தமிழ்மணிகண்டன் வாஞ்சையின் வடிவம். பிறருக்கு உதவுவதில் பேருள்ளம் கொண்டவர்.  எங்களது பணிகளில் இரண்டறக் கலந்தவர். 1993 ஆம் ஆண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக சென்னை கன்னியாகுமரி நடைப்பயணம் வந்தபோது எங்களோடு உர்க்க  முழக்கமிட்டு நடந்த நற்றமிழ் நாயகர். சென்ற ஆண்டு நான் அமெரிக்கா சென்றபோது அவருடைய இல்லத்தில் தமிழ் நூல்கள் பலவற்றையும் வாங்கி ஆழ்ந்த சிந்தனையில் பல்வேறு பாடல்களைப் பாடினார். நான் இரசித்தேன் தந்தை எங்களுக்கெல்லாம் ஊட்டிய உணர்வு குன்றாமல் பெருக்கெடுத்து ஒடியது கண்டு மகிழ்ந்தேன்.
    தற்போது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டை உலகத்தமிழ் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்று பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 7ஆம் உலகத்தமிழர் மாநாட்டை சிறப்பாக அரும்பாடுபட்டு நடத்திகிறார். உலகம் முழுமையும் வரும் பேராளர்களுக்கு சான்றுருதி வழங்கி அழைத்துள்ளார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற பொன் மொழிக்கொப்ப எங்களுடைய இன்பங்களை பொதுமையாக்கி தமிழிற்கும் தமிழர்க்கு ஏற்றம் தரு பணிகளில் மகிழ்கிறோம்.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநட்டை அழைப்பை 44 ஆண்டுகளாக தமிழர்களின் படைக்கலனாக இருக்கும் தமிழ்ப்பணியில் வெளியானவுடன் ஆர்வத்தோடு பேராளர்களாகப் பதிவு செய்தனர். அமெரிக்கா என்பது அனைவராலும் வர இயாலாத பொருட்செலவு உள்ள பணியாக இருந்தது. இருப்பினும் தமிழ் மீதும் அருமைத் தந்தையார் அவர்களின் கண்ணயராப் பணீமீதும் எண்பது வயதில் தடம் மாறாமல் கொள்கைச் சிகரமாக வாழும் தொண்டறக் கோமான் மீது கொண்ட பேரன்பால் பதிவு செய்து வருகை தருகின்றனர். அப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
    இணைப்பு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாடு எனது பொன்விழா ஆண்டில் மலேசியாவில் 2009ஆம் ஆண்டில் 4 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் டாக்டர் தருமலிங்கம், அருளாளர் விக்டர் அவர்க்ளின் பேருழைப்பை மறக்க இயாலாது.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டு மலர்கள் தமிழினத்தின் வரலாற்றுப்பதிவுகள். அறிவியல் முன்னேற்றத்தின் முழு சக்தியையும் பயண்படுத்தி மலர் தயாராகிறது. உல்கம் முழுமையும் கட்டுரை வாழத்துரை வழங்கிய பெருமக்களுக்கும் நென்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
    என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்                                 இறுதி இறுதி எமக்கு வாராது                                        என்றன் மொழி உககாள வைக்காமல்                                 என்றன் உயிரோ போகாது
என்ற என் தந்தையாரின் கவிதைக்கொப்ப தமிழர்கள் ஒற்றுமை மாநாடு அமரிக்கா வாசிங்டன் நகரில் நடைபெறுகிறது. தேமத்ரது தமிழோசை அமெரிக்க மண்ணில் ஒலிக்கிறது.                

தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி

   
{2015 மே 1- 4 வரை தென் ஆப்ரிக்கா பயணத்தின் போது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதியது)
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உலகின் மிகச்சிறந்த இயக்கம். தலைவர் இர. ந. வீரப்பனாரின் அரிய முயற்சியால் உலகம் முழுமையும் தழைத்து ஓங்கி உள்ளது. பொதுச் செயலாளர் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் அவர்களின்  அளப்பரிய தொண்டு போற்றத்தக்கது. இயக்கத்தின் முதல் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்ளோடும் முனைவர் அருகோ அவர்களோடும் இணைந்து நடதிய முதல் மாநாடாகும். தமிழ்ப்பணியில் சார்பில் அரியதொரு மலர் ஒன்று வெளியிட்டோம. தொடர்சியாக பலவேறு நாடுகளில் உலகத்தமிழ்ப் பண்பாடு மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தந்தையும் நானும் பல்வேறு நாடுகளில் பங்கேற்று அளப்பரிய பங்காற்றி வருகிறோம்.
    தலைவர் மிக்கி செட்டி அவர்கள் உதப இயக்கத்தின் தென் ஆப்ப்ரிக்கா கிளையின் தலைவரும். உலகத் துணைத்தலைவரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் பன்னாட்டுக் குழு உறுபினரும் ஆவார். பல்வேறு மாநாடுகளில் பெருமகனின் அளப்பரிய தொண்டைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவருக்கு சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தந்தையாரின் முத்துவிழாவிற்கு வருகை தந்து பெருமைப்படுத்தினார்.
    மிக்கிசெட்டி அவர்கள் இந்நூற்றாண்டின் சிகரமான் சாதனையை தென் ஆப்ரிக்கா தமிழர்களுக்கு வழங்கியுள்ளார். தென் ஆப்ரிக்கா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் தமிழக எசு.ஆர். எம். பல்கலைக் கழகமும் இணைந்து தென் ஆப்ரிக்கா மக்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்களை உருவாக்கி உள்ளனர். அந்த பட்டமளிப்பு விழவிற்கு உலகின் பல்வேறுபகுதியிலிருந்து உதப இயக்கப் பொறுப்பாளர்கள் 30 பெருமக்கள் கலந்து கொண்டனர். அதில் நானும் தந்தையும் கலந்து கொண்டோம். இராமசாமி பல்கலைக் கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் அவர்களும் பல்கலைகழத்தின் பொறுப்பாளர்களும் தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றனர்.
    வந்திருந்த அனைவருக்கும் கோஃச்ட் லாண்ட் உணவகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரையும் டர்பன் இந்தியப் பெருங்கடலின் கடற்கரை அழகை காண அழைத்துச் சென்றனர். காந்திவாழ்ந்த இல்லத்திற்கும் சென்றோம். 20 ஆண்டுகள் காந்தி அங்கிருந்து ஆற்றிய தொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அன்னை தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகளுக்கு ஆற்றி தொண்டு இந்த இடத்தில்தான். அண்ணல் காந்தி நடத்திய இந்தியன் போஸ்ட் இதழ் அச்சகம் அனைத்தும் கண்டோம். அறிஞர் திரு.வி. க. எழுதி பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட காந்தியடிகள் பற்றிய நூலை பயணம் முழுமையும் படித்து மகிழ்ந்தேன. அவர் தென் ஆப்ரிக்காவில் காந்திடிகள் கண்ட சோதனைகளை பதிவு செய்துள்ளார், அந்த மண்ணில் அவர் வாழ்ந்து விடுதலைக்கு வித்திட்ட உணர்வைப் பெற்ற இடத்தில் நாங்கள் அனைவரும் வலம் வந்து எங்களின் பதிவுகளை குறிப்பேட்டில் பதிவு செய்தோம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த வந்த பெருமக்களை டர்பன் வலம் வரச் செய்த பெருமை தலைவர் மிக்கிசெட்டி அவர்களைச் சாறும்.
    டர்பனில் உள்ள இந்தியப் பெருங்கடல் வழியாகவே நம் தமிழர்கள் அந்நாட்களில் கப்பல் வழியாக ஆங்கிலேயர்கள் தோட்டப் புற வேலைகளுக்கு அழைத்து வந்துள்ளனர்.அன்று வந்த தமிழர்கள் இன்று மொழி இழந்து உருவில் தமிழர்களாக உள்ளனர்.ஆங்கிலமே பேசுகின்றனர் வழிபடும்போதுகூட ஆங்கிலத்தில் எழுதி வைத்தே படிக்கின்றனர்
        இராமசாமி பல்கலைக் கழக வேந்தர் பாரிவேந்தர் அவர்கள் ஒருநாள் அனைவருக்கும் விருந்து வழங்கினார். தென் ஆப்ரிக்கா பெருமக்கள் அரியதொரு கலைநிகழ்ச்சி வழங்கினர். தென ஆப்ரிக்கா வாழ் தமிழர்கள்  சங்கீதமும் இசையும் பாட்டும் தமிழ்கத்தில் உள்ளதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.திரு சின்னப்பன் அவர்களின் மகள் சிவானி அவர்களின் பாட்டும் நடனமும் மெய்சிலிர்க்க வைத்தது. என் கால்களும் உடலுமே ஆடத் தொடங்கின. நாங்கள் தங்கிய நான்கு நாட்களூம் அசைவம் சைவம் என ஆப்ரிக்கத் தமிழர்களின் விருந்தோம்பல் திருவள்ளுவர் கூறிய விருந்தோம்பலின் சான்றாக இருந்தது.
    தென ஆப்ரிக்காவில் டர்பன் நகரில் உள்ள மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றனர். காட்டில் திறந்தவெளி உந்துவில் சென்றோம். தந்தையும் நானும் வேந்தர் பாரிவேந்தர்  செருமனி நயினை விசயன் கனடா உதயன் லோகெந்திர லிங்கம் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோரோடு பயணித்தோம். வரிக்குதிரைகளும் ஒட்டகச் சிவிங்கங்களும் காட்டு எருமைகளும் எங்கள் கண்கள் முன் உலா சென்றுகொண்டிருந்தன. அருமைத் தந்தையார் அவர்கள் திருவள்ளுவர் சிவிகை என்று குறிப்பிட்டிருக்கீறாரெ இங்குள்ளோர் கூறமுடியமா என்றார். உந்து அமைதியாகவே சென்றுகொண்டிருந்தது. இராமசாமி பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் அந்தக் குறளைக் கூறினார்.
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை                         பொறுத்தானோடு ஊர்ந்தா விடை (37)                                                                                                                  
வேந்தர் அவர்களின் அவர்களின் இமாலயா உயர்வின் உண்மையை புரிய முடிந்தது.
    டர்பன் நகரில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இராமசாமி பலகலைக்கழகமும் இணைந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிக்கிசெட்டி பேசும்போது என் வாழ்நாள் பணியாக இந்த மண்ணில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இன்று என் கனவு நிறைவேறுகிறது என நெஞ்சம் நெகிழ கண் கலங்கக் கூறினார். உலகத் தமிழர்கள் அனைவரும் கண்கலங்கினர். ஐம்பதுக்கு மேற்பட்ட பெருமக்கள் ஆப்ரிக்காவில் தமிழ் பயிற்றுவிக்கப் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற பெருமக்கள் இளமையும் முதுமையும் கலந்த பெருமக்களாக இருந்தனர். எழுபத்தைந்து வயது பெருமாட்டி பட்டம் பெற்றது அவர்களின் ஆர்வத்தை உணரலாம்.
    மிக்கிசெட்டி அவர்கள் அனைத்துப் பெருமக்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்தி ஆப்ரிக்கத் தமிழர்களுக்கு உணர்வு ஊட்டியதை காணும்போது பாரதியின் ”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செயதல் வேண்டும்” கனவு இன்று தென் ஆப்ரிக்காவில் மெய்யாகியுள்ளது.
    யான் மிக்கி அவர்களின் துணைவியார் திருமதி கசுத்தூரி மிக்கி அவர்களிடம் பேசி கொண்டிருந்தபோது கண் கலங்கினார். ஏனம்மா என்று வினவியபோது தன் மருமகன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவரசரப் பிரிவில் உள்ளார் என்றார். அண்மையில் அவர் காலமாகிவிட்டார் என்ற சோகமும் கேட்டு மனம் நொந்தோம்.
    தன் மருமகன் மருத்துவமனையில் இருந்த நேரத்திலும் மிக்கி அவர்கள் தமிழைக் காக்க அவர் கொண்ட முயற்சியை எண்ணும்போது இவரல்லவா உலகத் தமிழர் என் எண்ணம் பெருமிதம் அடைந்தது
    தற்போது ஆப்ரிக்காவில் இருந்து 50 பெருமக்களை ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்ய வேந்தர் சகத்ரட்சகன் அவர்களின் பாரத் பல்கலைகழகம் வழி தன் செலவில் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து அருட்சுணைஞர் பட்டம் பெற வழிவகுத்துள்ளார். துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்ளின் வழிகாடுதலின்படி அறிஞர் சக்திவேல் முருகனார் பயிற்றுவிக்கிறார்.
    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய                                                 மண்ணுயிர் எல்லாம் தொழும்.
என்ற வள்ளுவர் வாய்மொழி வழி காந்தி வாழ்ந்த மண்ணில் தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி.
   

நிறம்மாறா நிறவெறி


(தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் சூன் 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொலம்பசு-நீயூயார்க்  பேருந்துப்  பயணத்தில் கண்ட அனுபவம் பற்றி எழுதியது)
அருமைச் சகோதரர் கவியரசனோடு தம்பி தமிழ்மணிகண்டர் இல்லத்தலிருந்து புறப்பட்டு மேரிலாண்ட் ஓசியன் சிட்டி, பாசுடன் கனக்டிகட் நீயூயார்க் நீயூசெர்சி வழியாக கொலம்பசு சென்றடைந்தோம். தம்பி கவியும் மகள் தமிழ் நடைப்பாவையும் மகிழ்வுந்தை  ஓட்டி வந்தனர். மகன் கவின் மருமகள் முத்துமாரி பல்வெறு செய்திகளை உரையாடிய வண்ணம் வந்தோம். வரும்போது திருக்குறள் பாடி ஒவ்வோரு குறள் பற்றியும் அமெரிக்க சாலைகளில் பயணிக்கும்போது யாங்கள் உரையாடி வந்தது பிள்ளைகளுக்கு ஒரு ஊக்கம் நம்பிக்கை முன்னேற்றத்திற்கு மாமருந்தாக எண்ணினேன். நீயூயார்க்கிலிருந்து. கொலம்பசு பத்துமணிநேரப் பயணம், சாலைகளின் எழிலும் ஆங்காங்கே உள்ள பயண ஒய்விடங்களும் உணவகங்களும் பயணக் களைப்பில்லாமல் மகிழ்வுலாவாக இருந்தது.
    தம்பி கவியரசனும் தமிழ்மணிகண்டனும் வீடு வாங்கி இது நாள் வரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. தற்போதே செல்லமுடிந்தது. நகர் அமைப்பும் இல்ல வடிவமைப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. கால் ஏக்கர் உள்ளமனையில் நடுவில் இல்லம். கீழ்ப்பகுதியில் முன் கார் நிறுத்தம் உள்ளுக்குள்ளேயே முதல் மாடி செல்லும் படி வசதி. புதுமையான படுக்கையறைகள் குளியலறைகள் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டைச்சுற்றி பசுமையான புல்வெளிகள். ஆங்காங்கே மரங்கள் எழில் சூழ்ந்து உள்ளன. டப்ளின் பகுதியில்  நகர் அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தன. தம்பி தமிழ்மணிகண்டன் வீடு மூன்று அடுக்கு உள்ளது. வீட்டைச்சுற்றி உள்ள புல்வெளிகளை பராமாரிக்கவேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை யென்றால் டப்ளின் நகராட்சி சீர்செய்து அதற்குறிய கட்டணத்தைப் பெறுவர் எனக் கூறினர். இரு நாட்கள் தம்பி இல்லத்த்லிர்ந்து விட்டு நீயார்க் புறப்பட திட்டமிட்டேன். கொலம்பசுலிருந்து பேருந்தில் செல்ல பயணச்சீடை இணையத்தில் தம்பி பதிவு செய்தார்.
    இரவு பதினோறு மணிக்கு பேருந்து. தம்பியும் முத்துமாரியும் கொலம்பசு டவுண்டவுன் பகுதியில் உள்ள பேருந்துநிறுத்தத்திற்கு ஊர்தியில் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் நல்ல மழை. பேருந்து நிறுத்தம் வந்து அலுவலகம் சென்றால் அங்கு யாறும் இல்லை. விசாரித்ததில் 11 மணி பேருந்திற்கு இனிமேல்தான் வருவார்கள் என்று கூறினர். ஒருவழியாக ஒரு அலுவலர் வந்தார் மணி11 ஆகி விட்டதே என்றோம் அமருங்கள் வரும் என்றார். தம்பியும் முத்துமாரியும் காரிலேயே இருந்தனர், ஒருவழியாக பேருந்து 11-30 மணியளவில் வந்தது. ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். தம்பி விடைபெற்றுச் சென்றார். உடைமைகளைக் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார். நான் அமர்ந்தும் கால்  மணி நேரம் கழித்துத்தான் பேருந்து புறப்பட்டது. நான் பேருந்தின் நடுப் பகுதியின் ஒரத்தில் அமர்ந்திருந்தேன். கருப்பர்கள் வெள்ளையர்ளும் அமர்ந்திருந்தனர். இசுலாமிய கருப்பர்களும் தலையில் தொப்பி அணிந்துகொண்டு பயணம் செய்தனர்.
    சிறிது நேரம் கழித்து பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஒரு கருப்புநிற மத்திம வயதுப் பெண்மணி 35 பேருந்தில் ஏறினார். தன் உடைமைகளை வைத்துவிட்டு என் இருக்கைக்கு ஓர் இருக்கை முன் அமர்ந்தார். தீடிரென ஒரே சப்தம். இருக்கையை விட்டு எழுந்து பார்த்தேன். 20 வய்து மதிக்கத்தக்க ஒரு வெள்ளை இளைஞர். ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அந்த அமையாரும் வேகமாக கையை நீட்டிக் கொண்டும் வெகுண்டு கத்தினார். இருவருடைய வாக்குவாதமும் முற்றிக் கொண்டு இருந்த்தது. தீடிரென அந்தப் பேருந்தின் இருந்த அனைத்து கருப்பர்களும் ஆவேசமாக இருக்கையை விட்டு எழுந்து அந்த இளைஞனை எதிர்த்து கொதித்தெழுந்தனர். ஆனால் அந்த இளைஞர் முகத்தில் எந்த விதமினா அச்சம்  இன்றி தன் கைப்பேசியை இயக்கிக் கொண்டு அமர்ந்துகொண்டு விவாதித்தான். பின் அந்த அம்மையாரைச் எழும்பும்படி சாடினான்
    பெருத்த சப்தம் வந்தவுடன் பேருந்து நின்றது. எனக்கு ஒரே கவலை ஏற்கனவே பேருந்து தாமதமாக வந்து தாமதமாகவே எடுத்தனர் நான் காலை சென்றால்தான் மருமகன் புவியரசன் வெலைக்குப் போகுமுன் என்னை அழைத்துக் கொண்டு செல்லமுடியும் இதற்குள் இந்த இந்த நிற வேற்றுமைப்போர். ஒரு கருப்பராக உள்ள ஒபமா ஆட்சி செய்யும் அளவிற்கு நாடே மாறியுள்ள நிலையிலும் அந்த இளைஞருடைய செயல் அருவருப்பைத் தந்தது.
    பேருந்தை நிறுத்திய ஒட்டுநர் இருவரின் இருக்கை அருகே வந்தார். அந்த பேருந்து சீனர் நடத்தும் நிறுவணம். அந்த ஓட்டுநரும் சீனர். நான் அந்த இளைஞரை கண்டித்து இருவரையும் இருக்கையில் இருக்க வைப்பார் என எண்ணினேன். ஆனால் இருவரின் வாக்குவதமும் ஓய்வதாக இல்லை. பேருந்தில் இருந்த கருப்பர்கள் கண்டித்த வண்ணம் இருந்தனர். பேருந்தில் இருந்த வெள்ளையர்கள் அமைதியாக இருந்தனர், அந்த இளைஞனை கண்டிக்கத் தயாரக இல்லை.
    கடைசியாக ஒட்டுனருடன் அந்த அம்மையாரை அழைத்து முன் இருக்கையில் அமரவைத்தார். முதலில் மறுத்துப் பின் அம்மையார் முன் இருக்கையில் அமர்ந்தார். அந்த வெள்ளை இளைஞர் இரு இருக்கையிலும் அமர்ந்துகொண்டு தன் கைப்பேசியை பயண்படுத்திய வண்ணம் வந்தார்.
    ஒருவழியாக பேருந்து காலை 8 30 மணியளவில் நியூசெர்சியிலிருந்து நியுயார்க்கை அடைய ஃகட்சன் நதிப் பாலத்தைக் கடந்துகொண்டிருந்தது. மருமகன் புவியரசனுக்கு தொட்ர்பு கொண்டேன். மாமா நீயூயார்க் 34ஆவ்து தெருவில் அங்கேயே நில்லுங்கள் என்று கூறினார். நான் இறங்கி நின்றேன் மருமகன் வந்து அழைத்துச் சென்றார்.

அமெரிக்காவின் உயர்ந்த பல்கலைக்கழகங்கள்


(தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் சூன் 2014ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைகழகங்களுக்குச் சென்றபோது எழுதியது)
அமெரிக்காவின் உயர்ந்த பல்கலைக்கழகங்கள் மூன்றிர்க்குச்  சென்றேன். ஒன்று அறிவுச் சுரங்கமாகத் திகழும்,ஃகார்டுவார்டு பல்கலைக்கழகம்,  மசாசுசட்சு இன்சுடிடுயூட் ஒஃப் டெக்னாலாசி, மற்றொன்று அறிஞர் அண்ணாவிற்கு டாக்டர் பட்ட, வழங்கிய யேல் பல்கலைக்கழகம்.
    கணினி அறிஞர் தம்பி கவியரசன் ஒகியோ மாநிலத்தில் கொலம்பசு நகரிலிருந்து எங்களின் கடைசித் தம்பி தமிழ்மணிகண்டன் வாழும் மேரிலேண்டு பகுதிக்கு குடும்பத்தோடு வந்தார். நாங்கள் அங்கிருந்து மேரிலாண்டில் உள்ள ஒசியானிக் சிட்டி கடற்கரைக்குச் சென்று அங்கு ஒரு நாள் தங்கினோம். கடற்கரையை மிகச் சிறப்பான சுற்றுலாத் தலமாக வைத்துள்ளனர். அருமை மக்கள் தமிழ்நடைப்பாவை கவின் சாதுகுருவோடு நாஙகள் கடல் அழகையும் மணல் வெளியையும் கண்டு மகிழ்ந்தோம்.
    கடற்கரையின் சாலைப் பகுதியில் விஞ்ச் மூலம் கடல் அழகையும் நகர் அழகையும் காணமுடியும். அழகு அழகான மிதிவண்டிகல் வாடகைக்கு விடுகின்றனர். உல்லாசமாக மிதி வண்டியில் பயணித்து உடல் பயிற்சியும் உள்ளக் களிப்பும் பெறுகின்றனர். மணல் வெளியை  ஒட்டினாற்போல் மரத்தால் தரைச்சாலை அமைத்துள்ளனர். நடைப் பயிற்சி செல்வோர் மரச் சாலை உள்ள அளவு நடந்து செல்கின்றனர். மறுபுறம் மரச்சாலை ஒட்டி தொடர் கடைகளும் உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் சூழ்ந்து பரபரப்பான எழிலான சுற்றுலாத் தலமாக உள்ளது. நானும் தம்பியும் நடந்து சென்றோம். உலக மக்கள் கூடும் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது.

    அங்கிருந்து பாசுடன் நகரில் வசிக்கும் மருமகன் கோபிநாதன் இல்லத்திற்குச் சென்றோம். புதிய இல்லம் வாங்கி குடியேறியுள்ளார். மூன்று அடுக்குள்ள கட்டிடம். மரம்தான் வீடுகட்டப் பயண்படுத்தியுள்ளனர்.பாசுடனில் உள்ள ஃகார்டுவேர்டு பல்கலைக் கழகத்திற்கு மருமகள் முத்துமாரி மக்கள் தமிழ்நடைப்பாவை ஆகியோருடன் கோபி ஊர்தியில் அழைத்துச் சென்றார். ஃகார்டுவார்டு பல்கலைக்கழகம் முதன்மைச்சலையில் இருபுறமும் பரந்த வெளியில் பல்கலைகழகம் உள்ளது. மகன் கவின் சாதுகுருவை இப் பல்கலைகழகங்களில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆவல் எங்கட்கு உண்டு. கவினை புத்துணர்ச்சியூட்ட அப் பல்கலைக்கழத்தைப் பற்றி மருமகள் விவரித்துக் கொண்டே வந்தார். பல்கலைகழகத்திற்கென வரவேற்பு அரைக்கு அழைத்துச் சென்றார் மருமகன் கோபிநாதன்.பின் நாங்கள் அனைவரும் பதிவு செய்தோம். குட்டிப் பேருந்துகள் ஒவ்வொரு குழுவாக அழைத்துச் சென்றனர். எங்களது நேரம் வந்தது மற்றவர்களோடு நாங்களும் குழுவாக ஏறிச் சென்றோம். வரவேற்பு அரையிலேயே பல்ககலைக் கழகம் பற்றிய அச்சடித்த படிவங்கள் இருந்தன நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
    பல்கலைக் கழக்த்தில் உள்ள அரங்கில் அனைவரையும் அமர வைத்தனர். சிறிது நேரத்திற்கும் பிற்கு ஒரு பேராசிரியர் மேடையில் தோன்றி அறிமுகப் படுத்திக் கொண்டார். இந்தப் பல்கலைக் கழகத்தின் சிறப்புகள் பற்றியும். தேர்ச்சி விகிதம் பற்றியும். அங்குள்ள படிப்புகள் பற்றியும் நாற்பது நிமிடம் உரையாற்றினார். புன்சிரிப்போடும் மாணவர்கட்கும் பெற்றோர்கட்கும் புரியும் வண்ணம்  பவர் பாயின்ட் மூலம் திரையில் தெளிவுபடுத்தினார் எம்.ஐ.டி. பேராசிரியர். 35 வயது மதிக்கத்தக்க பேராசிரியராகத் தோன்றினார். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பெற்றோர்களும் மாணவர்களும் அரங்கில் இருந்தனர். அனைவரும் குறிப்பேட்டிலும் கைக் கணீனியிலும் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
    பேராசிரியரின் உரை முடிந்தவுடன் குழுக்களாக பிரித்து பலகலைக் கழகத்தில் பயிலும், மாணவ மாணவிகள் எங்களை அழைத்துச் சென்றனர். எங்கள் குழுவிற்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளம் மாணவி அழைத்து சென்றார். தன்னை புன்சிரிப்போடு அறிமுகப் படுத்திக்கொண்டார். பின் அவர் எங்களை வழிகாட்டி உரையாற்றி அழைத்துசென்ற பாங்கு மிகச் சிற்ப்பாக இருந்தது. அவர் எங்களை நோக்கி பேசிக்கொண்டே பின்புறமாக நடந்து கொண்டே பல்கலைக் கழகத்தின் சிறப்பையும் அங்குள்ள படிப்பின் உயர்வையும், கூறிக் கொண்டே சென்றார்..
    பல்கலைக் கழ்கத்தின் ஒவ்வொறு துறைக்கும் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு துறையையும் காணும்போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் பல்கலைக்கழகம்தான். ஒருபுறம் முடித்து சாலையின் மறுபுறம் உள்ள பகுதிக்கும் அழைத்துச் சென்றார். வகுப்பு அறைகள், அரங்கங்கள், அனைத்து விளையாட்டு திடல்கள் கூடங்கள்,   நூலகங்கள், நீச்சல் குளங்கள், உணவு விடுதிகள் பூங்காக்கள் என பிரமீப்பூட்டும் வகையில் பல்கலைகழகம் இருந்தது, இங்கு பிள்ளைகளைப் படிக்க வைக்க பெரும் செலவாகும் என்று மாரி கூறினார்.
  மாசாசுசடச் இண்டிடீயூட் ஒஃப் டெக்னாலசி (எம்.ஐ.டி). மட்டுமல்ல தகுதியும் இருந்தால்தான் இங்கே படிக்கும் பேறு கிட்டும். இதுவும் பாசுட்டனில் மாசாசுசட்சு பகுதியிலேயே உள்ளது. நம் சென்னையில் எம்.ஐ.டி உண்டு. மெட்ராசு இன்சுடுயூட் ஒஃப் டெக்னாலசி இங்கும் தலைசிறந்த மாணவர்களே பயில்வர்.
    நாம் காணும் முகநூல் கண்டுபிடித்த் பெருமகன் இந்தப் பல்கலைக் கழக்த்தில்தான் படித்தவர் என்ற தகவலும் அறியமுடிந்தது. பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நிறிவணர்களின் சிலை இருந்த்து. அவரது காலில் கைவைத்து வணங்கினர். அவர் கால்மட்டும் அனைவரின்கைபட்டுக்கொண்டே இருப்பதால் கால் பலபலவென்று இருந்தது. சிலையுடன் நின்று படமெடுத்தனர் நாங்களும் படமெடுத்துக் கொண்டோம்.பின் இல்லம் திரும்பினோம்.
    பாசுட்டனிலிருந்து கனக்டிகெட் சென்றோம். அங்கு தம்பி கவியின் நண்பர் சுரேசு கவுரி இல்லத்தில் தங்கினோம். மக்கள் பாவை, கவின் சுரேசுகவுரியின் மக்கள் இருவர் மருமகள் முத்துமாரியுடன் தம்பி கவியரசன் யேல் பல்கலைக் கழக்த்திற்கு அழைத்துச் சென்றார். இப் பல்கலைக் கழகமும் அமெரிக்காவின் உய்ர்ந்த பல்கலைக்கழ்கங்களில் ஒன்று. அந்தப் பகுதி முழுமையுமே பல்கலைக் கழகமாகவே உள்ளது. நமது நம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சென்னிற அமைப்பு போன்றே உள்ளது.  வரவேற்பு அறையில் நாங்கள் பதிவு செய்துகொண்டோம்.அங்கு ஒரு அரங்கில் இரண்டு நேரங்களில் உரை வழங்குகின்றனர். நாங்கள் எங்கள் நேரத்திற்கு சென்று அமர்ந்தோம். அந்தப் பல்கலைக்கழகத்தில்  படித்த கறுப்பு நிற மாணவிதான் எங்களுக்கு  பல்கலைக்கழத்தைப் பற்றியும் அந்தப் பல்கலைகழக்த்தின் சிறப்புகள் பற்றியும் நீண்ட உரையாற்றினார். பல்கலை கழகத்தைப் பற்றி ஒரு திரைப்படம் ஒன்று காண்பித்தன்ர். மிகச் சிறப்பாக இருந்தது. கடைசியில் அதில் திரைக் கதை வசனம் நடிப்பு இசை அனைத்தும் அப் பல்கலை கழகத்தில் படித்தவர்கள் என குறிப்பிட்டனர். உண்மையிலேயே மாணவர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகச் சிறப்பாக எடுத்திருந்தனர். உரை முடிந்தவுடன் பல்கலைக் கழக குறிப்பேட்டை வழங்கினர். மிகப் பெரிதாக் இருந்தது  கிட்டத்தட்ட 800 பக்கம் அச்சடிக்கப்பட்டதாக இருந்த்து. நான் கவினுக்கும் சென்னையில் படிக்கும் தம்பி ஆண்டவர் மகள் சேதுச்செல்விக்கும் வாங்கினேன்.
    பின் குழுவாக மாணவ மாணவிகள் அழைத்துச் சென்றனர். பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டே சென்றனர். ஒவ்வொரு துறையும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களை இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளது. பலகலை கழகத்தின் அரங்கம் மிகப் பெரிய அரங்கமாக இருந்த்து.இங்குதான் உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் உரையாற்றியுள்ளனர் என்று கூறினார், அங்கு அழைத்துச்சென்ற் போது என் இருகண்களும் கலங்கின. சாதாரணக் குடியில் பிறந்து வறுமையில் படித்து பெரியாரால் ஈர்ர்க்கப்பட்டு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை கூறி அதன் படி வாழ்ந்து தமிழக மக்களின் அண்ணனாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா உரையாற்றிய அரங்கம். யேல் பல்கலைகழத்தில் சுற்றியபோதெல்லாம் பேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் என்னை ஆழ்த்தின. அண்மையில்தான் மியான்மர் நாட்டில் பல்லாண்டுகள் சிறையில் வாடி சன்நாகம் தழைக்கப் பாடுபட்ட ஆங்சான்கியூ அரங்கில் பங்கேற்று பேருரை வழங்கியதாகக் கூறினர்.
    நம் ஊரில் கல்வி நன்கு வளர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் தமி பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் அவர்களைப்பற்றிய தன் அறிவுப்பும் பல்கலைக் கழ்கத்தில் சிறப்பும் அங்கு பயின்ற மாணவர்களின் வெற்றிகளும் பட்டியலிடப் படவேண்டும்.
பெற்றோரகளும் மாணவர்களும் முறையாக் கண்டு மனத்தெளிவு பெறும் வண்ணம் செயல்பட வேண்டும். நம்நாட்டில் காசு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டுள்ள கல்விமுறையைக் கண்டு வறுந்தினேன்
   
     

Monday, June 1, 2015

தலைவர் கலைஞர் தளபதி பிள்ளைத்தமிழ் பாராட்டுரை


(சென்னை இராயப்பேட்டையில் 31=5-2015 அன்று நடந்த ஓவியக் கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் 69ஆம் அகவை விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
.
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் திராவிட இயக்கத்தின் தூண்கள் அமைப்புச் செயலர் ஆர்.எசு பாரதி அவர்களே மொழிப்போர் தளபதி எல்.கணேசன் அவர்களே கவிஞர் முத்துமாணீக்கம் அவர்களேசெம்பை சேவியர் புலவர் தேவதாசு அவர்களே கவிபாடிய கவிஞர் பெருமக்களே விழா நாயகர் ஓவியக் கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் அவர்களே வருகை தந்திருக்கும் பெருமக்களே அனைவருக்கும் வணக்கம்.

அண்மையில் கவிஞர் அவர்களின் தலைவர் தளபதி பிள்ளைத்தமிழை சென்னையில் இராணி சீதைமன்றத்தில் மிகச் சிறப்பாக வெளியிட்டார். இந்நூலைப் படித்த்தால் கலைஞரையும் தளபதியையும் இரு கண்களாகவே பதிவு செய்துள்ளார்.தலைவர் கலைஞர் அவர்களின் 92 ஆம் அகவை திருநாளை நாமெல்லாம் கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில் கவிஞர் நூலில் கலைஞரையும் தளபதியையும் பற்றி அவர்  கூறியுள்ள கவிதைகளைக் கூறுவது பொறுத்தம் எனக் கருதுகிறேன்.

காப்புப் பருவத்தில் கலைஞர் பற்றிக் கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது.

”மூன்றாம்நாள் சூன்திங்கள் இருபத்து நான்கில்
முழுமதியார் கதிரொளியார் பிறந்த ஆண்டு” (பக் 51)

தலைவர் கலைஞர் அவர்களை முழு மதியாயாகவும் தமிழர்களின் இன்னல் எனும் இருட்டைப் போக்கவந்த கதிரொளியார் எனப் பகரும் விதம் அருமையிலும் அருமை.

நாமெல்லாம் கலைஞரை பகுத்தறிவின் வடிவாகவும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அவர்களின் திரு உருவமாகவே இன்றும் காண்கிறோம். தமிழினத்திற்கு தொண்டாற்றும் ஈடு இணையற்ற் தலைவரை கவிஞர் வரியில் காண்போம்.

”கருவான ஐயாவை அண்ணவை உன்றன்
உருவாகக் காணுவதால் தமிழே காக்க “ (பக் 53)
எனப் பதிவு செய்கிறார்.

கலைஞரின் வரலாற்று அளவை மிகச் சிறப்பாக மெய்ப்பிக்கிறார் தலைவர் கலைஞர். தமது வரலாற்றை நெஞ்சுக்கு நீதியில் தொடர் தொகுப்பாக வெளிவந்து அதில் உலக வரலாறு தமிழர் வர்லாறு தமிழ் வரலாறு என கலைஞர கலைக் களஞ்சியமாகவே உள்ளது. கவிஞர் தம் வரியில் கூறும் வண்ணத்தைப் பாருங்கள்.

”வித்தகமே மொத்தமாக சித்தம் ஏற்றோம்
விண்ணளவு வரலாற்றைத் தமிழே காக்க” (பக் 54)

நம் தளபதி அவர்களின் பெயர் சூட்டல் வரலற்றை மிக சிறப்பாகக்
கூறுகிறார்,
”அண்ணாவை அய்யாவை நினைவு படுத்த
அய்யாதுரை என்றா பெயர் வைப்பதற்கும்
எண்ணத்தில் வைத்திருந்தார் தந்தை கலைஞர்
ஏற்றமிகு ருசுயநாட்டு தலைவர் சுடாலின்
மண்ணகத்தில் பிரிந்ததாலே அவரின் பெயரை
மாண்புடனே சுடாலின் என்ற பெயரைச் சூட்டி” (பக் 55)

சுடாலின் என்ற பெயருக்கு ஒப்ப வியக்கும் தமிழகத்தில் வலம் வருகிறார்.
நூலில் தாலப் பருவத்தில்  சான்றுகள் எல்லாம் நம் தொல் தமிழ் நூல்களில் உள்ளது, கலைஞர் பெருமான் நிலையான சான்றுகளாக தமிழகத்தில் உருவாக்கிய வள்ளுவர் கோட்டம், குறளோவிம், குமரியில் அய்யன் 133 அடிதிருவள்ளுவர் சிலை, பூம்புகார்,பன்னெடுங்காலம் மூடியிருந்த திருவள்ளுவர் சிலையை திறந்த வைத்த திறத்தை, தீரத்தை தம் பா வடிவில் தருகிறார் சுவையுங்கள்.

வள்ளுவர்க்கே எழிற்கோட்டம் கட்டி முடித்து
வரலாறாய் குறளோவியம் தீட்டிக் காட்டி
அள்ளும் அலை கன்னியாகுமரி திடலாம் கடலில்
அய்யனுக்கே உயரமான் சிலையை வைத்தாய்
துள்ளுகின்ற காவியமாம் சிலப் பதிகாரத்
தந்துபியை பூம்புகாரை வடித்த்தெடுத்தாய்
கள்ளென்று வெயில்காணா பெங்களூரீல்
சிறப்பான் சிலைதிறந்தாய் தாலோ தாலேலோ  (பக் 76)

தலைவர் கலைஞர் அவர்கள். மாற்றார் இழிசொல்லால் பெருமகனாரைச் சாடியபோது அவருகே உரித்த முறையில் அவர்கள் என்னைப் பற்றி வாழ்த்திய பேச்சுகளை எண்ணிக்கொள்வேன் என வள்ளுவனார் கூறிய

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
என்ற குறளுக்கு ஒப்ப வாழ்ந்து வருகிறார், அதை தம் கவிதையில் வண்ணப்பூங்காவின் வண்ணத்தைப் பாருங்கள்.
”இழிச்சொல்லைப் படிக்கட்டாய் மாற்றிக் காட்டி
இயக்கத்தை வளர்த்தெடுத்த வாய்மையாளர்” (பக் 102)
முத்தப் பருவத்தில் தள்பதியை வாழ்த்துவது சிகரமாக உள்ளது. ஓவியக் கவிஞரின் கவி ஒவியத்தைப் பாருங்கள்.
“பொதுவுடைமைத் தலைவர்பேர்  உனக்கும்  உண்டு
பொன்றாப்புகழ் நின்றதனால் எமக்குச் செண்டு
புத்ப்பொலிவை கழகத்தில் கொண்டு வந்தாய்
புதுநீதி கல்லார்க்கும் பாடம் தந்தாய்
பொதுநீதி வழுவாத புதுமை வேழம்
பொழிவாக மழையாக விழைவோம் உன்னை
செதுக்குகின்ற கற்சிலையாய் உன்னின் உறுதி
செம்மொழியே எம்விழியே முத்தந் தருகவே (பக் 103)
இந்நூலில் கழகத்தின் முன்னணிப் பெருமக்கள் அனைவரையும் கலைஞரோடும் தளபதியோடும் இணைத்து ஒரு வரலாற்றுப் பதிவாகவே தந்துள்ளார்.
இனமானக் காவலர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி வீரமணி ஆகியோரின் வாழ்த்துரைகள் இந்நூலிற்கு மகுடமாக உள்ளது.
கோவையில் ஐயா மு. இராமநாதன் அவர்களின் பட்டரையில் உருவானவர் எனபதை அறியும் நெஞ்சம் நெகிழ்கிறது. அவரது வாழ்த்துரையும் அணிசேர்க்கிறது.

தலைவர் தளபதி பிள்ளைத்தமிழ் திரவிட மாண்புடையோரின் களஞ்சியமாக உள்ளது.

வண்ணப்பூங்கா வாசன் பன்னெடுங் காலத்திற்கு முன்பே கழகக் குடும்பத்தின் போராளி. இலக்கிய வாணில் ஒளிரும் நட்சத்திரம். பல் போராட்டங்களுக்கிடையில் தம் கொள்கையை கூற வண்ணப்பூங்கா எனும் இதழை நடத்திவரும் இதழாளர். தாம் மட்டுமல்ல மற்றோரையும் அறிமுகப் படுத்த 1000 பெருமக்களின் யார் எவர் தொகுப்பை வெளியிட்ட பண்பாளர். அவர் கையால் பட்டம் பெறாதவர்கள் இல்லை எனும் அளவிற்கு பட்டம் வழங்கிய பாவலர். அவர் பட்டம் வழங்கும் விதம் பெறுவோர் பெருமிதம் கொள்ளத்தக்க அளவு வாங்குவோரை சிறப்பு இருக்கையில் உட்காரவைத்து தலையில் முடிசூட்டி பட்டம் வழங்குவார்.

இராயப்பேட்டையில் தேனியாகப் பணியாற்றும் தொண்டர். அவரது ஓவியங்கள் சான்றோர்களின் பாராட்டைப் பெற்றவை. அதனால்தான் அவர் ஓவியக் கவிஞராக வலம் வருகிறார், 69ஆம் அகவை காணும் ஒவியக் கவிஞரை காவியக் கலைஞரை  வாழ்த்துவதில் பேருவகை கொள்கின்றேன்.வண்ணப் பூங்கா வாசன் அவர்கள் சோர்வு அறியாத இளைஞர்.முதுமை அவரின் எழுச்சியால் குறையும் தமது துணைவியார் கோமதி அம்மையார் இழந்த நிலையிலும் அயராமல் தொண்டாற்றும் வாசன் நீடு வாழ்க, அவர்து பணிக்கு உறுதுணையாக இருக்கும் திருமகன் சுந்தரக் கண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வண்ணப்பூங்கா  வளர்க அவரது கழகத் தொண்டு

Wednesday, May 27, 2015

தென் ஆப்ரிக்காவில் தமிழ்


(4-4-2015 அன்றுதென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவின்போது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதிய கவிதை)

பொருளறிய மண்விட்டே கடல்வழியைக் கொண்டே
புகழ்சுற்றம் புறக்கணித்தே ஆப்ரிக்கா சென்றார்
அருளறியா ஆங்கிலேயர் அடக்குமுறை ஏற்றே
அகதிகளாய் மொழியிழந்து உறவிழந்து உள்ளார்
கருவிழிபோல் பெயரங்கு தமிழிலேயே உண்டு
கற்பதெல்லாம் ஆங்கிலமே கருதுமொழி இல்லை
உருவினிலே தமிழர்களாய் உ;லகிடையே உள்ளார்
உன்னதமாம் தமிழ்மொழியே அவர்வாழ்வில் இல்லை

நூற்றாண்டின் மேலாய்நம் முன்னோர்கள் விட்ட
நுண்தமிழர் நலிவைத்தான் போக்கினோம் இன்றே!
கற்றபதற்கே இராமசாமி பல்கலையின் வேந்தர்
கருணைமிகு மிக்கிசெட்டி பெருவள்ளல் சேர்ந்தே
பொற்பதத்தால் தமிழன்னை காப்பதற்கு அங்கே
பூவுலகபண் பாட்டுடைய மாந்தரெலாம் கூட்டி
நற்றவத்தால் நாம்கண்டோம் பட்டமேற்பு விழாவும்
நாநிலத்தை வலம்வந்த பெருங்கவிக்கோ முன்னே!

நாற்பதின்மேல் தமிழ்ப்பட்டம் மண்மக்கள் பெற்றார்
நல்மோங்க தமிழ்த்தாயும் நாமகளாய் எழுவாள்
பொற்புடைய ஆப்ரிக்கா காந்திமகான் ஈகம்
புகழ்வானின் நினைவிடமும் நற்பெருமை செப்பும்
தற்பெருமை இல்லாநம் ஆப்ரிக்காத் தமிழர்
தவவலுவாம் தேவாரம் பாடிவளம் உள்ளார்
கற்பதுவும் தமிழதனை ஆங்கிலத்தின் வழியே
கலைக்கோயில் நம்பண்பை நாயகமாய்க் கொண்டார்!

எழுச்சிமிகு கலைகள்வழி பாட்டுவழிக் கூத்தும்
ஏற்றமிகு நம்டர்பன் நகர்த்தந்தை பேச்சும்
விழுதுகளாய் வாழுமுயிர் மிக்கிசெட்டி மக்கள்
விருந்தோம்பல் வியனாற்றல் அரவணைப்புப் பாங்கும்
தழுதழுத்து நெஞ்சம்விம்மி மிக்கிதந்த உரையும்
தவவலிமை பெற்றநம் வீறுபுகழ் தமிழர்
பழுதில்லா தமிழ்ப்பணியை பார்போற்ற நின்றோம்
பாசமுடன் உலகமெல்லாம் ஒன்றாகிக் காப்போம்!

Tuesday, May 26, 2015

சிங்கப்பூரின் தந்தை நாடு கட்டுவித்த நாயகன் லீக்குவான்யூ


(4-5-2015 அன்று புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் நடைபெற்ற விழாவில் அமரர் லீக்குவான்யூ பற்றி தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய தொடக்க உரை)

நிகழ்வுக்கு தலைமை தாங்கும் பெரியார் கொள்கைகளின் அரனாக வாழும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அவர்களே, வருகைதந்திருக்கும் கழகத்தின் முன்னோடிகள் கூத்தரசன் கயல் தினகரன்,தமிழ் வள்ளல் மாம்பலம் சந்திரசேகர் நண்மாறன் சாமிநாகப்பன் ஐயா இளம்வழுதியின் திருமகன் சூர்யா ஒய்.எம்.சி.எ. பட்டிமன்றச் செயலர் பக்தவதசலம் மற்றும் சான்றோர் பெருமக்களே.. நாடுகட்டுவித்த நாயகர் பற்றி தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் தஞ்சை கூத்தரசன் உரையாற்ற உள்ளார்கள். இலககிய அறிவும் இயக்க அறிவும் தொண்டாற்றும் அஞசா நெஞ்சமும் கொண்ட அவர்களே அனைவர்க்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். என்னை தொடக்க உரையாற்றப் பணித்துள்ளார்கள் யான் லீகுவான்யூ இறந்த உடன் தமிழ்ப்பணியில் எழுத வேண்டும் என என் உள்ளம் அவாவியபோது அழைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன

சிங்கப்பூர் என்றாலே உலகமே உற்று நோக்கும் நாடாக ஆக்கிய பெருமை சிங்கப்பூரின் தந்தை லீக்குவான்யு அவர்கட்கு உண்டு. சிங்கப்பூர் அனைத்துத் துறைகளிலும் செழித்தோங்க வித்திட்டவர் லீக்குவான்யு. லீக்குவான்யு சீனாவிலிருந்து வருகை தந்தோரில் நான்காவது தலைமுறை. லீக்குவான்யு 16-9-1923 அன்று பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிறக்கிறார். இலண்டனில் படிப்புமுடித்து வழக்கறிஞராகத் திகழ்ந்தார்.

சிங்கப்பூர் விடுதலைக்குப் பின் 1955 ஆம் ஆண்டு தஞ்சோங் பாகார் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் லீக்குவான்யு சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சியின் நிறுவுனரானார். சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் என்று பெருஞ்சிறப்பும் லீக்குவான்யு  அவர்கட்கு உண்டு.   1959 முதல் 1990 வரை ஏழு முறை பிரதமராக பொறுப்பேற்று பெருந்தொண்டாற்றிய பெருமை லீக்குவான்யு அவர்கட்கு உண்டு.

லீக்குவான்யு ஐந்தாண்டுத் திட்டத்தை சிங்கப்பூரில் திட்டமிட்டு மிகப்பெரும் வளர்ச்சியை உருவாக்கினார். இத் திட்டத்தில் நகர் வளர்ச்சி பெருநகர் வீடுகள் பெண்களுக்கு சமஉரிமை கல்வி வளர்ச்சி  தொழிற்புரட்சி எனத் திட்டமிட்டு சிங்கப்பூரை வளர்ச்சிப் பாதைக்கு வழி வகுத்தார்.

1980 ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூரின் தனி நபர் வருமானம் சப்பானிற்கு அடுத்தநிலையில் இருந்தது. ஆசியாவில் முதன்மையானதாக சிங்கப்பூர் உள்ளது

லீக்குவான்யு கோசோதுங்க் அமைச்சரவையில் முதுநிலை அமைச்சராக பொறுப்பேற்று நல்வழிப்படுத்தினார். 2004 முதல் 2011 வரை லீக்குவான்யு அவர்கள் மதியுரை அமைச்சராக அமைசரவையில் இருந்து நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்தினார்.

  லீக்குவான்யுவின் மகன் லீசீன் லுங் சிங்கப்பூரின் பிரதமாராகப் பொறுப்பேற்று தந்தையின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்.

சிங்கப்பூர் நான் பலமுறை சென்றீருக்கிறேன். நான் முதன் முதல் சென்னையிலிருந்து சென்றபோது விமானநிலையத்திலேயே நல்வரவு எனப்பதாகை தமிழில் இருந்தது. பின்தொடர்வண்டி வழியாகவும் பேருந்துவழியாகவும் நகர்க்குல் சென்றேன் எங்குநோக்கினும் தமிழ் .சீனம் மலாய் தமிழ் ஆங்கிலம் எனநான்கும் ஆட்சிமொழியாக உள்ளது.
லீகுவான்யூ அவர்கள் எப்போதும் வலியுறுத்துவது ஒன்று`

”நாம்மலேசியாவில் சிறூபான்மையாக இருந்தபோது நாம்நடத்தப்பட்டதுபோல் சிங்கப்பூரில் நாம் நடத்தக்கூடாது என்பதுதான் அது. மலாய்காரர்களூக்கும் இந்தியர்களூக்கும் அவர்களூக்குரிய இடத்தையும் வாழ்க்கைவாழ்வதையும் அவர்கள் சமமானவாய்ப்புகள் பெறுவதையும் அவர்கள் பாராபட்சம் காட்டாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்`
 “
சமத்துவமான் கொள்கையை உருவாக்கி மிகப் பெரும்மாற்றத்தை உருவாக்கிய  சிங்கப்பூர் சிற்பி லீஅவர்கள்
.
சிங்கப்பூரின் 6ஆம் அதிபராக இருந்தஎசு.ஆர்.நாதன் அவர்கள் லீ அவர்களைப் பற்றி

 “அழிவுச்சக்தியை நம்மை அழித்து சிங்கப்பூரை ஒருகம்யூனிசுட்டு நாடாக்க முயன்றபோது அவர்நமக்குக் கொடுத்த வலிமைதான் அவரின்மிகச் சிறந்தபங்களீப்பு அந்தத்தீய சக்திகளை எதிர்த்துப் போராடும் வலிமையை அவர்தந்தார்`. ”

சிங்கப்பூரில் எப்போது சென்றாலும் அடுத்தடுத்துச் செல்லும் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய மாற்றாங்களைக் காணாமுடியும். சாலைகள் பேருந்துகள் கட்டிடங்கள் மெட்ரோ தொடர்வண்டிகள் பாலங்கள் பொழுதுபோக்குசாதனைகள் என அனைத்தும் உலகத்தரத்தில் உள்ளன. எப்போது தொடர்வண்டியில் சென்றாலும் மக்கள் எழுச்சியுடனும் உழைக்கும் மனப்போக்குடனும் மகிழ்ச்சியாகச் செல்வர். ஒவ்வொருவர்கையிலும் நவீனத் தொலைபேசிகள் உலகில் வெளீயான கைக்கணீனிகள் அனைவர்கையிலும் இருக்கும் அதைக் காணூம்போதே அந்தநாட்டின் வளர்ச்சியும்மக்கள் வளார்சிசியும்தெரியும்.

சிங்கப்பூரின் தந்தை லீ காட்டியவழியை மக்களூம் தலைவர்களூம் பின்பற்றூவதே வளர்ச்சியின் காரணாமாகும்.

சிங்கப்பூரின் துணைப்பிர்தமாராக இருந்த செயக்குமார் அவர்கள் லீ அவர்கள் சிங்கப்பூர் வானூரிதியில் நான்கு இந்தியர்கள் யூரேசியர்களின்  பங்களிப்பு இருக்கவேண்டும் எனபதில் கண்டிப்பாக இருப்பார் என பதிவு செய்துள்ளார். ஒருமுறை வெளிநாட்டுகுச் செல்லும் பட்டியலை கொண்டு சென்றபோது ஏன் இந்தியர்கள் மற்ற இனம் யாரும் கிடைக்கவில்லையா எனக் கூறி அடுத்த கூட்டத்தில் அவர்களின் பங்களிப்போடு பட்டியலை வெளியிட்டார் என அவரது இன நல்லிணக்கத்தைப் பதிவு செய்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாய் இருக்கும்போது மலேசியா பயணமானார். முதன் முதலில் சிங்கப்பூரில் லீகுவான்யூ தலைமையில் பேருரையாற்றினார். அண்ணாவின் பேச்சு என்றும் நிலைத்துநிற்கும் உரையாகும்.

சிங்கை விடுதலைப் பொன்விழாவை முடிக்கும் முன்னமே லீக்குவான்யு அவர்கள் 23-3-2015 அன்று காலமானர்.

சிங்கை எழுத்தாளர்கள் சங்கம் சாரிபில் லீ அவர்களின் 90 ஆம் அகவை விழாவில் 90 உலகத் தமிழ்க் கவிஞர்கள் வாழ்த்தை தமிழுலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டம்னர். எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆண்டியப்பன் அவர்களின் பெருமுயற்சியாகும்.

சிங்கையின் தந்தை லீக்குவான்யு அவர்களின் இறப்பிற்கு இந்தியப் பிரதமர் மோடி அவர்ளும் உலகப் பெருந்தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் அரியதொரு இரங்கல் அறிக்கை வழங்கி உகத்தமிழர்களின் ஆற்றோணாத் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை நகரிலும் தமிழகத்தின் தென் பகுதியிலும் லீக்குவான்யு அவர்களின் உருவத்தோடு இரங்கல் தட்டிகள் தமிழர்களின் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தின.

தன்னிகரற்ற தமிழர் மேல் பற்றுள்ள தலைவர் லீக்குவான்யு ஈழத் தமிழர் படும் துயரத்தை கண்டு இலங்கை அரசை கண்டித்துள்ளது  தமிழர் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்தும்.

சிங்கையில் தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிய சிங்கையின் தந்தை லீக்குவான்யு தலைவர்கள் பின் பற்றி வேண்டிய தலைவர் அவர் புகழ் ஒங்குக. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பிலும் உலகத் தமிழர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை இம் மன்றத்தில் பதிவு செய்கிறேன்

கவிஞர் நிலவு முதுக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை

சென்னையில்2-5-2015 அன்றூ கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் வெளீயீட்டு விழாவில்    தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய      நூல் ஆய்வுரை

நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை பகுத்தறிவு போற்றும் பாவலர்.சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் செயலாற்றும் செயல் மறவர். எங்களது நிகழ்வுகளில் எங்களுக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழர். முத்துக்கிருட்டிணன் அவர்கள்  தம் நண்பர் கவிஞர் நவநீதம் அவர்களை நமது பன்னாடுத் தமிழுறவு மன்றத்தில் இணைத்தார். அவர் மிகச் சிறந்த கவிஞர் அவரை ஒரு நூல் வெளியிடுங்கள் என பலமுறை வலியுறுத்தினேன். அவர் தற்போது காலமாகி விட்டார். அவர் கவிதைகள் பொன் பொருள் என அலைவோர் மத்தியில் இனிமேல் வெளிவருவது ஐயமே. இதை பலமுறை முத்துகிருட்டிணன் அவர்களிடம் பகிர்ந்துள்ளேன்.

தன் நண்பரைப்போல் இல்லாமல் நெடு நாட்களுக்குப் பிறகு ஒரு நூல் வெளியிடுகிறார் என அறிந்தவுடன் பாராட்டி மகிழ்ந்தேன். உறுதுணையாக இருந்த பொருளுடையார் அருளுடையார் அறமுடையார் நெறியுடையார் தலைவர் பாண்டுரங்க உடையாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

அருமைச் சகோதரரிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது நான் தங்கள் தந்தை எப்படி இருப்பார் தந்தையின் படத்தைக் காண்முடியவில்லையே என்றேன். அவரது கண்கள் குளமாயின நான் தந்தையைப் பார்த்ததே இலலை இது நாள் வரை தேடியும் என் தந்தையின் படத்தைக் கூட நான் எவ்வளவோ அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கப் பெறவில்லை. என்றார்.

ஒரு தாய்க்கு நூற்றாண்டு விழா காணும் மகனை இன்றுதான் காண்கிறேன்., அன்னை இல்லம் எனப் பெயர் வைத்துக்கொண்டு அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலம் இன்றும் உள்ளது. வாழும்போது ஒருவேளை சோறு போடாமல் செத்தவுடன் திதி என்று கூறி வடை பாயசத்தோடு காக்கைக்குக் கொடுத்து தான் நிம்மதியாக உண்ணும் வழக்கம் தொடர் கதையாக உள்ளது..

இந்தக் காலகட்டத்தில் தம் தாயின் பிறந்த நாளை எண்ணி நிணைவில் கொண்டு இன்று  தம் உறவினர்கள் நன்பர்கள் அனைவரையும் அழைத்து நூற்றாண்டு விழாக் கொண்டாடும் நேரத்தில் தம் தாயைப் பற்றியும் அந்தத் தாய் ஈன்ற மக்கள் பற்றியும் தன்னைப் பற்றியும் ”தந்தையுமான தாய்” என்ற நூலை வெளியிட்டு பெரும்பதிவு செய்துள்ள அன்பு மகனை இன்று நாமெல்லாம் கண்டு பெருமிதமும் பேருவகையும் கொள்கின்றோம்.
தந்தையுமான தாய் நூலில் தன்னை அவன் என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளார். அவன் எனக் கூறும்போது தான் கவியரசர் கண்ணதாசன் வழியைப் பின் பற்றுகிறேன் என படிப்போருக்கு தெளிவு படுத்துகிறார்.

அவரது எழுத்து நடை மிகச் சிறந்த நடையாக உள்ளதை படிப்போர் உணரலாம்.

’சாலையின் இருபுறமும் பச்சைப் பட்டுக்கம்பளம் விரித்தாற்போல பரந்து விரிந்து அடிவானைத் தொடும் அழகிய நஞ்செய் நிழகழனிகள்” (பக்.1)
”அறுவடைக் காலங்களில் செந்நெல் வயல் வெளிகளில்  உழைக்கும் மக்களால் உயிர் பெற்ற ஓவியமாய் அழகு மிளிரும் வயல் வெளிகளின் வரப்பு வரிசையாய் நெற்கட்டுகளை சுமந்துசெல்லும் காளையர்கள் நடவு செய்ய நடைபோடும் நங்கையர்கள் கதிர் அறுக்க பரம்படிக்க களையெடுக்க அண்டைவெட்ட என உழைப்பவர்கள் இடையே நெற்குவியல்களை சுமந்து நிற்கும் களங்கள்”. (பக்.5)

சரித்திரச் சான்றுகள் இந்நூலில் நிலையாக இடம் பெற்றுள்ளன.
‘மாமன்னன் இராசராச சோழன் தான் கட்டிய கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கியுள்ளான். மன்னன் கோயிலுக்கு அளித்த நிலத்திற்கு பெயர் தேவதானம் என்றும் சமனத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு சமனப் பள்ளி என்றும் பவுத்த விகார்களுக்கு அளிக்கப் பட்ட நிலங்களுக்கு பள்ளிச் சதகம் என்றும் அறநிலையங்களுக்கு விடப்பட்ட நிலம் மடப்புரம் அல்லது சாலபோகம் என்றும் புலவர்களுக்கு விடப்பட்ட நிலம் புலவர் முற்றூட்டு  என்றும் பெயர் பெற்றன”. (பக்.2)

அவன் பிறந்த மடப்புரம் ஊரைப் பதிவு செயவதற்கு மேற்கண்ட வரலாற்று ஆய்வுகள் இந்நூலின் சிறப்பைப் பகர்கின்றன. தாய்க்கு மட்டுமல்ல தாய் மண்ணுக்கும் பெருமை சேர்க்கிறார்.

தாய் குழந்தையம்மாள் அதே ஊரில் எதிர்வீட்டு சுப்பையாவை மணப்பதை சுவை படக் கூறுகிறார். இணையருக்கு எழுவர் பிறந்ததையும் அவன் நான்காமவன் என்பதையும் பதிவுசெய்கிறார். இந்தியா விடுதலை பெற்ற அடுத்தமாதம் அவனின் தந்தை காலமாகிறார்.

அதற்குபின் அவனின்  தாய் தந்தையுமானவனாகிறார். தாயாரின் கண்ணீர் அவனை மிகப் பெரிய பகுத்தறிவுவாதியாக நமக்குத் தந்துள்ளது.
“அம்மா நீ அழவேண்டும் என்று உன் தலையில் எழுதிய கடவுளை நாம் ஏன் கும்பிடனும்” (பக்.11)

அவனது படிப்பு நான்காவது நாஞ்சலூரிலும் பின் இராமகிருட்டினா வித்யாசாலையிலும்  தான் சூரப்புலி அல்ல கடைசி இருக்கை மாணவர் என தாயின் விருப்புக்கு மாறாக குஸ்தி பயின்ற உண்மையும் உயர்நிலைப் பள்ளியிலேயே நையாண்டியாகப் குற்றாலக் குறவஞ்சி போன்று கவிதை எழுதும் ஆற்றல் அவனுக்கு வந்துள்ளதும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னையின் ஆசைப்படி பள்ளி இறுதிவகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் புதுமுக வகுப்பு சேர்ந்து இலக்கியக்கடலில் சங்கமிக்கிறான்.

”அவன் பல்கலைக்கழக மாணவரிடையே பிரபலமானான் புகழ் குவிந்தது படிப்பு கவிழ்ந்தது” (பக்.22)

பின் ஊரில் அவனின் போக்கு திசை மாறியது. அவனது உறவினர் தமிழ்ச் சமுதாயாத்தையே மாற்றிய பெரியாரின்  பெருந்தொண்டர் கிருட்டிணசாமி  சென்னைக்கு அனுப்பிவைத்தார். அங்கு தொழிற்கல்லூரி படிப்பை முடிக்கிறான்.அங்கும் என்.சி.சி. மற்றும் கூட்டுறவு அமைப்பில் தன் முத்திரையை பதிக்கிறான்.

உளுந்தூர்பேட்டைக்கு பெண் பார்க்கச் சென்று பின் பெண் வீட்டார் மறுத்துவிட்டதையும் அவன் பதிவு செய்கிறான்.

“அவன் அன்னை செய்த தவப்பயன் பெண்வீட்டார் ஓட்டு வீட்டை ஓட்டைவீடு என்று கூறி பெண் தர மறுத்ததாக மாமா சொன்னார் மகிழ்ந்தான்”. (பக்.29)
பணியாற்றும்போது தம் அனுபவத்தைக் கூறுவது சிறப்பாக உள்ளது.

“அவ்வழியே சென்ற செயற்பொறியாளர் அருகில் வந்து பார்த்துவிட்டு ஓ கவிதையா எனக் கேட்டு வாங்கிப் படித்தார். பரவாயில்லையே நன்றாகத்தான் உள்ளது நீங்கள் கவிஞரா என்றார்  நண்பர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள் என்றான்” (பக்.30)
தன் எழுபது வயதைக் கண்ட நிலைய்யிலும் அதே சொற்கள் இன்றும் கூறக் கேட்டுள்ளேன்.

எந்நிலையிலும் அவனின் தமிழ்ப் பற்று இந்நூலில் தெளிவாக உள்ளது. அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் அறிஞர் தெ.பொ.மீ அவர்களின் வழிகாட்டலை அவன் நன்றியோடு பதிவு செய்கிறான்

”தமிழை வெளியிலிருந்து படி” (பக்.31)
சேலத்தில் அவன் ஆற்றிய தொண்டும் பத்திரிக்கைப் பணியும் பெரியார் மாநாட்டுப் புரட்சியும் அவனை யார் என்று அடையாளம் காட்டுகிறது.
அவன் தன் மனைவி கற்கண்டு அம்மையாரைக் கரம் பிடிக்க எடுத்த முய்ற்சி கற்கண்டு அம்மையாரின் மேல் அவன் கொண்ட அன்பை நாம் அறியமுடிகிறது. சோதிடத்தை புறம் தள்ளி, தந்தை பெரியாரை அழைக்கச் சென்று அவர் ஐயா கிருட்டிணசாமியை வைத்து நடத்தக் கோரி திருமணத்தில் தன் தாய் ஓரத்தில் கைம்பெண் என நிற்க அன்னையின் கரத்தில் தாலி வழங்க திருமணம் முடித்த பெருமை அன்று முதல் இன்றுவரை , திராவிடக் கழகத்தின் பெருமையை பரைசாற்றும்.தாலி அறுப்பு என இன்று எக்காளமிடும் பரதேசிகளுக்கு ஒரு சவுக்கடி இந்நூல்.

தந்தை பெரியார் அவர்கட்கு உணவு வாங்கிச்சென்று தயங்கி நின்று தன் கிருட்டிணசாமி வழி பெரியாரிடம் சொல்ல பகுத்தறிவும் பகலவன் பதில் இன்று நிலையாக உள்ள திராவிட இயக்கத்தை உணர்த்துகிறது. இப பேறு அவனின் அளப்பரிய பேறு அல்லவா.

“பெரியார் தனக்கேயுரிய புன்னகையோடு அவனை தன்னருகே அழைத்து அமரவைத்துக்கொண்டு சொன்னார் நான் ஏன் கையெழுத்து போட நாலணா சாப்பிடக் கூப்பிட்டால் அய்ந்து அணா ரூபாய் தர வேண்டும் என்று கூறுகிறேன் யோசித்துப் பார் எல்லோரும் என்னைக் கூப்பிட்டால் என்னால் முடியுமா பணம் கொடுத்தால் சாப்பிடுவேன் என்றால் சிலர் மட்டுமே கூப்பிடுவார்கள் பணம் கிடைக்கும் அந்தப் பணத்தை நானா கொண்டு போகப் போகிறேன் எல்லாமே இந்த நாட்டு மக்களுக்குத்தானே தருகிறேன் (பக்.42)

அச்சமுடையார்க்கு அறனில்லை என்ற திருக்குறளைக் கூறி அஞ்சாமையின் சிறப்பை பல இடத்தில் அவன் செயல்பாட்டை இந்நூல் செப்புகிறது.

தன் மகனுக்கு பகுத்தறிவு நிலைக்க பெரியார் என பெயரிட எண்ணி பின் மாறுபட்ட கொள்கை கொண்டால் பெரியார் கொள்கைக்கு இழுக்கு என தமிழ் நிலவு எனப் பெயரிட்டது அவனது பகுத்தறிவுக் கொள்கையின் உச்சமாக உள்ளது

தலைவர் கலைஞரின்பால் பேரன்பு கொண்ட அவனுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் பேருந்து நிலையத் திறப்புவிழா அறிவிப்பாளராக அலுவலகத்தால் நியமிக்கப்பட்டு ஆற்றிய பங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது

”அப்படி அழைக்கும்போது அவன் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தாற்போல ஒரு சக்தி உருவானது கலைஞர் என்றே சொல்லக் கூடாது என சொன்னவர் முகத்தில் கரியைப்  பூசினாற்போல் பெருமித உணர்வோடு பேசினான் அப்படி அவன் கலைஞரை புகழ்ந்து அழைக்கவே சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். (பக்.51)

அலுவலகப் பணிக்காக தான் சென்றபோது கண்ட துன்பங்களும் நட்பின் ஆளுமையாள் தப்பியதும் பணி ஓயவுக்குப் பின்னும்  பணியாற்றிய சிறப்பும் நயமாக நூலில் அவனால் கூறப்பட்டுள்ளது.

”அப்பணியை முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றான். குழுமத் தலைவர் குழுத்தலைவர் (அமைச்சர்) மொழியாக்கத்தை இரசித்ததாகவும் செயலர் பின்னர் கூறினார்” (பக்.51)

ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன்
எனக் கேட்ட தாய்

என்ற வள்ளுவப்பெருமானின் குறள் இம் மகனை ஈன்ற மகனுக்கும் தாய்க்கும் தொடக்கம் முதல் இன்று வரை பொருந்தும்.

தாய்க்குப் புற்று நோய் என தெரிந்தவுடன் தாய்க்குத் தெரியாமலேயே சிகிச்சை செய்ததும் தாய்க்காகாவே மகிழ்வுந்து வாங்கி மகிழ்வித்ததும் தாயின் கரத்தாலெ தாலியும், தாயின் கரத்தாலெ புது வீட்டிற்கும் செங்களும் தாயின்பால் அவன் கொண்ட அன்பை உணர்ந்த நணபர் தாய்க்கு ஆளுயர மாலை சூட்டியதும் தாய்க்கு பவளவிழா சிறப்பாக நடத்தியதும் முத்துவிழா காண முடியுமோ என்ற அச்சத்தில் தொடக்கத்திலேயே முத்து விழாவும் நடத்திய அவனுக்கு தன் தாய் குழந்தையம்மளின் சார்பிலும் உலகத் தாய்களின் சார்பில் உச்சிமோந்து பாராட்டி மகிழ்கிறேன்   நன்றி வணக்கம்.
a

கனடாவில் டொரண்டோ நகரில் “யாதும் ஊரே” நூல் வெளியீட்டுவிழா(6-7-2014 அன்று கனடாவில் டொரண்டோ நகரில் யாதும் ஊரே நூல்
வெளியீட்டுவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பெருமதிப்பிற்குரிய தலைவர் கவிவாணர் கந்தவணம் அவர்களே, நிகழ்ச்சிக்கு அணி சேர்க்கும் வண்ணம் நூலைப் படித்து அரியதொரு உரை ஆற்றிய கணபதி இரவிச்சந்திரன் அவர்களே நூலைப் மூன்று நூல்களாகப் பகுத்து உரையாற்றிய கவிஞர் புகாரி அவர்களே என்னை கனடா வரவேற்று  அன்பு பாராட்டி உங்களையெல்லாம் கூட்டி இந்த யாதும் ஊரே நுலை வெளியீட்டு நிகழ்வை நடத்தும், அருமை அண்ணன் நட்பின் நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்தம் துணைவியார் மகளிர்மாமணி பத்மலோசினி அவர்களே வாழ்த்துரை வழங்கிய உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க தமிழ்க் கல்விப் பொறுப்பாளர் துரைராசா அவர்கல்ளே, மூத்த பெருமகன் துரைசிங்கம் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

கனடா வருவதென்றால் எனக்குப் பேரின்பம். இங்கு உணர்ச்சியுள்ள பெருமக்கள் தமிழ் உணர்வோடு வாழ்கின்றீர்கள். சென்ற முறை நான் வருகை தந்தபோது தாங்கள் காட்டிய அன்பையும் தங்களின் தமிழ் ஈழ உணர்ச்சியையும் யாதும் ஊரே இந் நூலில் பதிவு செய்துள்ளேன். இந்நூலை தங்கள் முன்னிலையில் வேளியிடுவது என்பது யான் பெற்ற பேறு. யான் சென்ற பயணத்தில் கண்ட அன்பு உள்ளங்களை அன்பு குன்றாமல் மீண்டும் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு உள்ள கோயில்கள் ஈழத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் உள்ளட்டக்கி உள்ளன. நம்மவர்கள் எங்கு பார்த்தாலும் பக்திப் பரவசமாகவே உள்ளார்கள். ஆனால் ஈழத்து மக்களும் இந்துதான் என்ற உணர்ச்சி நம் இந்தியு மத்திய அரசுக்கு  இல்லையே. நம் மக்களை கொன்று குவித்தபோது வாளாயிருந்த்தனர் அதனால்தான் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப் பட்டனர்.இந்த்துவா பேசும் பாசக வினருக்கு ஈழத் தமிழர்கள் என்ற உணர்ச்சியும் இல்லையே. இனிமேலாவது ஈழப் பிரச்சினையில் நியாயமான தீர்வை எட்டவேண்டும்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வறுத்தக் கூலி தரும்

என்று நம் ஐயன் கூறியவண்ணம் தம் மெய்வருத்தி ஈழத்திற்காப் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்வருத்தம் உலகம் முழுமையும் உள்ள தமிழர்களை அடையாளம் காட்டி இன்றும் நீரு பூத்த நெருப்பாக ஈழம் உள்ளது அவருடைய ஈகம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். உலகத் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் குடியிருப்பார் தமிழர் குல மாணிக்கம் தலைவர் பிரபாகரன்.

திரைப்படத் துறையினருக்கு நாம் காட்டும் ஆர்வத்தை முற்றிலுமாக போக்கவேண்டும் நம் இனத்திற்கு மொழிக்கும் ஈகம் செய்யும் பெருமக்களைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும். நம் மக்கள் ஈழத்திற்காக் செய்த ஈகங்கள் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும். திரைப்படக் கவர்ச்சி நம் உணர்ச்சிகளை மழுங்கச் செய்துவிடாமல் இருக்க வேண்டும்.

கணபதி இரவிச்சந்திரன் அவர்கள் பேசும்போது உண்மையிலேயே மெய்மறந்தேன். நேற்று என்னை கீதவாகிணி வானொலியில் பேட்டி கண்டார். பேட்டியின் போது பெருமக்கள் ஆவலோடு உரையாடினர். அப்போதுதான் நான் யாதும் ஊரே நூலைத் கணபதி இரவிச்சந்திரன் அவர்களிடம் தந்தேன். ஓர் இரவில் படித்து என் உள்ளம் நெகிழ்ந்த செய்திகளையெல்லாம் பட்டியலிட்டுள்ளார். ஈழத்து மக்களின் பதிவே இந்நூல் என பதிவு செய்தது எனக்குக் கிடைத்த சான்றிதழாகவே கருதுகிறேன்.

இலண்டனில் ஊர்தி ஓட்டுநர் டேவிட்டுடன் நடந்த நிகழ்வையும் கனாடாவில் டோரண்டோ நகரில் வாழும் ஈழத்து மூதாட்டி சீவரட்டிணம் அம்மையார் அவர்களைக் பற்றிக் கூறியுள்ள பதிவையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார். பெருமகானாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இன்னலின் சிகரத்திற்கு தாங்கள் சென்றாலும் தமிழையும் தமிழரையும் உலகில் என்றும் வலம் வரச் செய்த பெருமை ஈழத் தமிழ் தியாக உருக்களே தங்கட்கு என்றும் உண்டு. அந்தப் பதிவுகள்தான் இந்த யாதும் ஊரே எனப் பெருமிதம் கொள்கிறேன்.

அருமை அண்ணன் லோகன் அவர்கள் செல்லா சோதி அவர்களின் அச்சகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தமிழ் கணினி தட்டச்சும் அச்சகமும் மிகச் சிறப்பாக நடத்துகிறார். அவரது துணைவியார் உற்ற துணையாக உள்ளார். தற்போது சோதி செல்லா அவர்கள் மார்க்கம் தொகுதியில் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார். கோயம்பத்தூரில் வருகை தந்து இங்கு குடியுரிமை பெற்றுள்ள மாணிக்கம் அவர்களும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் வட இந்தியப் பெருமக்களும் வருகை தந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொள்கிறேன். கனடாவில் சனநாயகம் கோலோச்சி உள்ள தங்களைக் காணும்போது அரிய முடிகிறது.

ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பை மனித உரிமை மீரலை கண்டித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்த பெருமை கனடா பிரதமருக்கு உண்டு. இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டை புறக்கணித்த பெருமையும் கனடாவிற்கு உண்டு. இந்த நாட்டிற்கும் ஆட்சியாளர்களுக்கும் என் நன்றியைத் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கவிவாணர் கந்தவணம் அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ பற்றியும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி நாங்கள் ஆற்றும் பணியையும் மனம் நெகிழக் கூறினார்.  பெருங்கவிக்கோ மகன் திருவள்ளுவர் ஒழுக்கத்தின் சிகரம் என்று கூறினார். மூத்த கவிஞர் பெருமகன் வாயால் யான் கிடைத்த பாராட்டை பெரும் விருதாகவே எண்ணுகிறேன்.

கவிவாணர் கந்தவணம் ஐயா அவர்கள்  வருகை தந்திருந்த போது தந்தையார் அவர்கள் ஊரில் இல்லை என்றும் நான் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாப் படத்தையும் வெளியான நெடு நாட்களுக்கு முன் வெளியான தமிழ்ப்பணி இதழையும் காண்பித்தார்.முன்னாள் மேயர் சா. கணேசன் அவர்கள் கவிவாணருக்கு பொன்னடை போர்துகிறார். கவிவாணர் போன்ற பெருமக்களெல்லாம் வருவது தமிழர்கள் பெற்ற கொடை அன்றோ. பவள விழாக் கண்ட பெருமகன் கவிவாணர் கந்தவனத்தை  வணங்கி மகிழ்கிறேன்

அரும்பாடுபட்டு இந்த விழாவை நடத்திய அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்கட்கும் துணை நின்ற அண்ணன் அவர்களின் நிழலாகத் தொடரும் சகோதரர் விமல்ரத்தினம் அவர்ககும் மற்றும் பெருமக்கட்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு(சோகூர் மாநிலத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளியே என் தேர்வு நிகழ்ச்சியில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

சிங்கையிலிருந்து  மலேசியா வரும்போது நான் சோகூர் மாநிலத்தில் அருமை நண்பர்கள் கவிஞர் வடிவேலு, எழுத்தாளர் வேணுகோபால் அவர்களை சந்தித்து ஒரு நிகழ்வில் பங்கேற்றுச் செல்வது வழக்கம். இம் முறை முனைவர் சேதுபதி அவர்கள் என்னை பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக இந் நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களும் கல்வித் துறை அதிகாரிகளும் ம.இ.க தொகுதித் தலைவர்களும் வருகை  தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் துறையின் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்ட  வரைவு முழக்கமாம “ தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” என அச்சிட்ட படிகளை என்னிடம் வழங்கினர்.

அதில் அண்மைக் கால் தமிழ்ப் பள்ளிகளின் வெற்றிகளையும் நடவடிக்கைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.

100% பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள்

45% இளங்கலை/முதுகலை கல்வி தகுதி பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்.

2013ல் யு.ப்.எசு.ஆர். மாணவர்களின் சிற்புத் தேர்ச்சி அடைவுநிலை 62% உயர்வு.

2014ஆம் ஆண்டு பிறபள்ளிகளைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு பதிவு உயர்வு  கண்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் பயின்ற மாண்வர்கள் உலக அளவில் பெற்ற் வெற்றிகளையும் பட்டியலிட்டுள்ளீர்கள்

உண்மையிலேயே தமிழ்வழிப் பள்ளி சிறப்புற அமைய தாங்கள் எடுத்து வரும் முயற்சியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

ஆனால் தற்போது பெற்றோர்களிடம் அந்த ஆவல் இல்லை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களி எண்ணிக்கை குறைகிறது என்ற செய்தியையும் குறிப்ப்பிட்டீர்கள். 20% சீன வழிப் பள்ளிகளில்  நம் தமிழ்ப் பிள்ளைகள் சேர்கிறார்கள் என்ற அதிர்ச்சியான்  செய்தியையும் வெளியிட்டீர்கள்.
தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து மக்கள் ஆங்கில மோகத்தில் திளைத்து தமிழையே புதை குழிக்குத் தள்ளும் அவலம் தொடர்கிறது.

1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் 50 தமிழ் அறிஞர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிட்டு தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை பட்டி தொட்டி எல்லாம் பரப்பினோம். அதைத் தொடந்து இவாண்டு வரை 22 ஆண்டுகளாக் ஊர்திப் பயணமாக வலம் வந்து தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தை உயிர்க் கொள்கையாகக் கொண்டு பரப்பி வருகிறோம்.

தமிழகத்தில் ஆங்கிலம் பிடித்த இடத்தை மலேசியாவில் சீனம் தொடர  அனுமதிக்கக் கூடாது. அதற்காக அரசாங்கப் பணீயாற்றும் ஆசிரியாராகப் பணீயாற்றும் நீங்கள் அரசோடு இணைந்து எடுத்துவரும் முயற்சி கட்டாயம் பலனளிக்கும். தமிழ்ப் பெற்றோர்களை அழைத்து தாங்கள் கொடுத்துவரும் விழிப்புணர்ச்சி நம் மக்கள் நம் மொழியைப் பேணுவார்கள் என்ற நம்பிக்கையை வழங்குகிறது.

நான் மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன் கோலாலம்பூர், ஈப்போ, தாப்பா, பினாங்கு பட்டர்வொர்த் சிம்பாங் அம்பாட், சித்தியவான், கெடா, சிரம்பான், தெலுக்கிந்தான், போன்ற பகுதிகளிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள் பிள்ளைகளின் வளர்சிகளையும் ஆசிரியர்களின் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளேன்.

ஆயிரக்கணக்கில் இருந்து தமிழ்ப் பள்ளிகள் ஐநூறாக இக் காலக் கட்டங்களில் குறைந்துள்ளது வேதனைப்படத்தக்க ஒன்றாகும். அது மேலும் குறையாவண்ணம் தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு நாங்களும் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும் என்றும் துணைநிற்கும் எனக்கூறி என்னை இங்கு அழைத்துவந்த அருமைச்சகோதரர் முனைவர் சேதுபதி அவர்கட்கு நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன்.

தமிழில் பெயர் எழுதுவது எப்படி


[27 12-2014 அன்று மலேசியாவில் கோலலம்பூர் நகரில் தான்சிறீ சோமா மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் குழுவினர் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை]

பெருமதிப்பிற்குரிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பொன்சண்முகம் அவர்களே மக்கள் ஓசை ஆசிரியர் இராசன் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் தமிழருக்காக தொண்டாற்றும் ”தமிழ் எங்கள் உயிர் குழுவின்” தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உல்கத் தமிழர் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திய அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம் அவர்கள் தமிழ்கத்திலிருந்து வருகை தந்திருக்கும் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள் அண்ணன் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழில் பெயரை முறைப்படி எழுதுவது எப்படி என சரியான தலைப்பை  கலந்துரையாடலின் தலைப்பாக தந்துள்ளீர்கள். தமிழ் வாழ நம் பெயரில் வாழ தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பெருமுயற்சியாகும். இந்தக் கலந்துரையாடலுக்கும் நடுநாயகமாக மலேசியத் திருநாட்டி முன்னணி நாளிதழ் மக்கள் ஓசையின் ஆசிரியர் அமந்திருந்து அனைவருடைய கருத்துகளையும் உள் வாங்கி தன் கருத்தை வழங்கினார்கள். நீண்ட அனுபவமும் தமிழ் அறிவும் உள்ள ஐயா அவர்கள் தன் நேரத்தை தமிழ் மேம்பாட்டுக்கு ப்யண்படுத்துவதை அனைவரும் பின் பற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் தமிழ்வழிக் கல்விக்காகவும் தமிழ் மொழிக்காகவும் அரும்பாடுபட்ட ஐயா அமரர் மணிவெள்ளையன் அவர்களையும் அவரின் தொண்டைத் தொடரும் தமிழ் நெஞ்சங்களையும் போற்றுகிறேன்.
முதலில் தமிழைச் சிதைப்பது மூடநம்பிக்கையே. தமிழர்கள் தாம் பெற்ற செல்வத்திற்கு பெயர் வைப்பதற்கு சோதிடனிடம் கேட்கிறார்க:. அவர்கள் வடமொழிப் முதல் எழுத்தைக் கொடுத்து தமிழக் குழந்தைக்கு தமிழ் அல்லாத பெயரை முன்மொழிகிறார்கள். அவர்களைத் புறம் தள்ள நம்மவர்கள் தெளிவு பெறவேண்டும்.

தமிழகத்தில் தமிழ்ச்சுரங்கம் என்ற அமைப்பின் வழி பேராசிரியர் ஆறு. அழகப்பனார் அவர்கள் தமிழ்ர்கள் தலைபெழுத்துகளை தமிழில்தான் எழுத் வேண்டும் என வலிய்றுத்தி செயல் பட்டு வருகிறார்கள். தமிழ்ப்பணியிலும் ந்நான் வெளியிட்டுள்ளேன்,

பெருமக்களே நாம் முதலில் நம் பிள்ளைகளும் வழிமுறையினருக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும், என் தந்தையார் பெருங்கவிக்கோ எனக்கு இட்ட பெயர் திருவள்ளுவர் என் தம்பிகள் கவியரசன் ஆண்டவர் தமிழ்மணிகண்டன். தங்கைக்கு பூங்கொடி எனவும் என் மக்கட்கு அறிவன் அன்பன் என என் குடும்பம் முழுமையும் தமிழ்ப்பெயர்களே.

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ 1993ஆம் ஆண்டு குமரியிலிருந்து சென்னை நடைப்பயணம் வந்தபோது மதுரையில் தம்பி கவியரசன் – முத்துமாரிக்கு பெண்குழந்தை பிற்ந்தது. விழா மேடையில் மகளுக்கு தமிழ் நடைப் பாவை என பெயர் வைத்தோம். அம்மகள் இன்று அமெரிக்காவில் தமிழ் நடைப்பாவை வலம் வருகிறார்.

நம் பெயரைக் கூறும் நம் மொழியும் இனமும் ஒளிரவேண்டும்.
இறுதியாக ஐயா பொன் சண்முகம் ஐயா அவர்கள் தலைபெழுத்தும் பெயரும் முழுமையாக இடம் பெறவேண்டும் என தீர்மாணம்
தந்தைபெயர்+தனதுபெயர் தனதுபெயர்+ துணைவர்பெயர் என இடம் பெறவேண்டும்

என இயற்றியுள்ளார்கள் இதை கோலலம்பூர் பிரகடணம் என மொழிந்துள்ளார்கள். இத் தீர்மாணத்தை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பாக வழிமொழிந்து உலகம் வாழ் தமிழர்கள் பின் பற்றவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.