Saturday, September 5, 2015

தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி

   
{2015 மே 1- 4 வரை தென் ஆப்ரிக்கா பயணத்தின் போது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதியது)
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உலகின் மிகச்சிறந்த இயக்கம். தலைவர் இர. ந. வீரப்பனாரின் அரிய முயற்சியால் உலகம் முழுமையும் தழைத்து ஓங்கி உள்ளது. பொதுச் செயலாளர் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் அவர்களின்  அளப்பரிய தொண்டு போற்றத்தக்கது. இயக்கத்தின் முதல் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்ளோடும் முனைவர் அருகோ அவர்களோடும் இணைந்து நடதிய முதல் மாநாடாகும். தமிழ்ப்பணியில் சார்பில் அரியதொரு மலர் ஒன்று வெளியிட்டோம. தொடர்சியாக பலவேறு நாடுகளில் உலகத்தமிழ்ப் பண்பாடு மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தந்தையும் நானும் பல்வேறு நாடுகளில் பங்கேற்று அளப்பரிய பங்காற்றி வருகிறோம்.
    தலைவர் மிக்கி செட்டி அவர்கள் உதப இயக்கத்தின் தென் ஆப்ப்ரிக்கா கிளையின் தலைவரும். உலகத் துணைத்தலைவரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் பன்னாட்டுக் குழு உறுபினரும் ஆவார். பல்வேறு மாநாடுகளில் பெருமகனின் அளப்பரிய தொண்டைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவருக்கு சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தந்தையாரின் முத்துவிழாவிற்கு வருகை தந்து பெருமைப்படுத்தினார்.
    மிக்கிசெட்டி அவர்கள் இந்நூற்றாண்டின் சிகரமான் சாதனையை தென் ஆப்ரிக்கா தமிழர்களுக்கு வழங்கியுள்ளார். தென் ஆப்ரிக்கா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் தமிழக எசு.ஆர். எம். பல்கலைக் கழகமும் இணைந்து தென் ஆப்ரிக்கா மக்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்களை உருவாக்கி உள்ளனர். அந்த பட்டமளிப்பு விழவிற்கு உலகின் பல்வேறுபகுதியிலிருந்து உதப இயக்கப் பொறுப்பாளர்கள் 30 பெருமக்கள் கலந்து கொண்டனர். அதில் நானும் தந்தையும் கலந்து கொண்டோம். இராமசாமி பல்கலைக் கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் அவர்களும் பல்கலைகழத்தின் பொறுப்பாளர்களும் தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றனர்.
    வந்திருந்த அனைவருக்கும் கோஃச்ட் லாண்ட் உணவகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரையும் டர்பன் இந்தியப் பெருங்கடலின் கடற்கரை அழகை காண அழைத்துச் சென்றனர். காந்திவாழ்ந்த இல்லத்திற்கும் சென்றோம். 20 ஆண்டுகள் காந்தி அங்கிருந்து ஆற்றிய தொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அன்னை தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகளுக்கு ஆற்றி தொண்டு இந்த இடத்தில்தான். அண்ணல் காந்தி நடத்திய இந்தியன் போஸ்ட் இதழ் அச்சகம் அனைத்தும் கண்டோம். அறிஞர் திரு.வி. க. எழுதி பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட காந்தியடிகள் பற்றிய நூலை பயணம் முழுமையும் படித்து மகிழ்ந்தேன. அவர் தென் ஆப்ரிக்காவில் காந்திடிகள் கண்ட சோதனைகளை பதிவு செய்துள்ளார், அந்த மண்ணில் அவர் வாழ்ந்து விடுதலைக்கு வித்திட்ட உணர்வைப் பெற்ற இடத்தில் நாங்கள் அனைவரும் வலம் வந்து எங்களின் பதிவுகளை குறிப்பேட்டில் பதிவு செய்தோம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த வந்த பெருமக்களை டர்பன் வலம் வரச் செய்த பெருமை தலைவர் மிக்கிசெட்டி அவர்களைச் சாறும்.
    டர்பனில் உள்ள இந்தியப் பெருங்கடல் வழியாகவே நம் தமிழர்கள் அந்நாட்களில் கப்பல் வழியாக ஆங்கிலேயர்கள் தோட்டப் புற வேலைகளுக்கு அழைத்து வந்துள்ளனர்.அன்று வந்த தமிழர்கள் இன்று மொழி இழந்து உருவில் தமிழர்களாக உள்ளனர்.ஆங்கிலமே பேசுகின்றனர் வழிபடும்போதுகூட ஆங்கிலத்தில் எழுதி வைத்தே படிக்கின்றனர்
        இராமசாமி பல்கலைக் கழக வேந்தர் பாரிவேந்தர் அவர்கள் ஒருநாள் அனைவருக்கும் விருந்து வழங்கினார். தென் ஆப்ரிக்கா பெருமக்கள் அரியதொரு கலைநிகழ்ச்சி வழங்கினர். தென ஆப்ரிக்கா வாழ் தமிழர்கள்  சங்கீதமும் இசையும் பாட்டும் தமிழ்கத்தில் உள்ளதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.திரு சின்னப்பன் அவர்களின் மகள் சிவானி அவர்களின் பாட்டும் நடனமும் மெய்சிலிர்க்க வைத்தது. என் கால்களும் உடலுமே ஆடத் தொடங்கின. நாங்கள் தங்கிய நான்கு நாட்களூம் அசைவம் சைவம் என ஆப்ரிக்கத் தமிழர்களின் விருந்தோம்பல் திருவள்ளுவர் கூறிய விருந்தோம்பலின் சான்றாக இருந்தது.
    தென ஆப்ரிக்காவில் டர்பன் நகரில் உள்ள மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றனர். காட்டில் திறந்தவெளி உந்துவில் சென்றோம். தந்தையும் நானும் வேந்தர் பாரிவேந்தர்  செருமனி நயினை விசயன் கனடா உதயன் லோகெந்திர லிங்கம் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோரோடு பயணித்தோம். வரிக்குதிரைகளும் ஒட்டகச் சிவிங்கங்களும் காட்டு எருமைகளும் எங்கள் கண்கள் முன் உலா சென்றுகொண்டிருந்தன. அருமைத் தந்தையார் அவர்கள் திருவள்ளுவர் சிவிகை என்று குறிப்பிட்டிருக்கீறாரெ இங்குள்ளோர் கூறமுடியமா என்றார். உந்து அமைதியாகவே சென்றுகொண்டிருந்தது. இராமசாமி பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் அந்தக் குறளைக் கூறினார்.
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை                         பொறுத்தானோடு ஊர்ந்தா விடை (37)                                                                                                                  
வேந்தர் அவர்களின் அவர்களின் இமாலயா உயர்வின் உண்மையை புரிய முடிந்தது.
    டர்பன் நகரில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இராமசாமி பலகலைக்கழகமும் இணைந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிக்கிசெட்டி பேசும்போது என் வாழ்நாள் பணியாக இந்த மண்ணில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இன்று என் கனவு நிறைவேறுகிறது என நெஞ்சம் நெகிழ கண் கலங்கக் கூறினார். உலகத் தமிழர்கள் அனைவரும் கண்கலங்கினர். ஐம்பதுக்கு மேற்பட்ட பெருமக்கள் ஆப்ரிக்காவில் தமிழ் பயிற்றுவிக்கப் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற பெருமக்கள் இளமையும் முதுமையும் கலந்த பெருமக்களாக இருந்தனர். எழுபத்தைந்து வயது பெருமாட்டி பட்டம் பெற்றது அவர்களின் ஆர்வத்தை உணரலாம்.
    மிக்கிசெட்டி அவர்கள் அனைத்துப் பெருமக்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்தி ஆப்ரிக்கத் தமிழர்களுக்கு உணர்வு ஊட்டியதை காணும்போது பாரதியின் ”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செயதல் வேண்டும்” கனவு இன்று தென் ஆப்ரிக்காவில் மெய்யாகியுள்ளது.
    யான் மிக்கி அவர்களின் துணைவியார் திருமதி கசுத்தூரி மிக்கி அவர்களிடம் பேசி கொண்டிருந்தபோது கண் கலங்கினார். ஏனம்மா என்று வினவியபோது தன் மருமகன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவரசரப் பிரிவில் உள்ளார் என்றார். அண்மையில் அவர் காலமாகிவிட்டார் என்ற சோகமும் கேட்டு மனம் நொந்தோம்.
    தன் மருமகன் மருத்துவமனையில் இருந்த நேரத்திலும் மிக்கி அவர்கள் தமிழைக் காக்க அவர் கொண்ட முயற்சியை எண்ணும்போது இவரல்லவா உலகத் தமிழர் என் எண்ணம் பெருமிதம் அடைந்தது
    தற்போது ஆப்ரிக்காவில் இருந்து 50 பெருமக்களை ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்ய வேந்தர் சகத்ரட்சகன் அவர்களின் பாரத் பல்கலைகழகம் வழி தன் செலவில் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து அருட்சுணைஞர் பட்டம் பெற வழிவகுத்துள்ளார். துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்ளின் வழிகாடுதலின்படி அறிஞர் சக்திவேல் முருகனார் பயிற்றுவிக்கிறார்.
    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய                                                 மண்ணுயிர் எல்லாம் தொழும்.
என்ற வள்ளுவர் வாய்மொழி வழி காந்தி வாழ்ந்த மண்ணில் தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி.
   

No comments:

Post a Comment