Saturday, September 5, 2015

நிறம்மாறா நிறவெறி


(தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் சூன் 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொலம்பசு-நீயூயார்க்  பேருந்துப்  பயணத்தில் கண்ட அனுபவம் பற்றி எழுதியது)
அருமைச் சகோதரர் கவியரசனோடு தம்பி தமிழ்மணிகண்டர் இல்லத்தலிருந்து புறப்பட்டு மேரிலாண்ட் ஓசியன் சிட்டி, பாசுடன் கனக்டிகட் நீயூயார்க் நீயூசெர்சி வழியாக கொலம்பசு சென்றடைந்தோம். தம்பி கவியும் மகள் தமிழ் நடைப்பாவையும் மகிழ்வுந்தை  ஓட்டி வந்தனர். மகன் கவின் மருமகள் முத்துமாரி பல்வெறு செய்திகளை உரையாடிய வண்ணம் வந்தோம். வரும்போது திருக்குறள் பாடி ஒவ்வோரு குறள் பற்றியும் அமெரிக்க சாலைகளில் பயணிக்கும்போது யாங்கள் உரையாடி வந்தது பிள்ளைகளுக்கு ஒரு ஊக்கம் நம்பிக்கை முன்னேற்றத்திற்கு மாமருந்தாக எண்ணினேன். நீயூயார்க்கிலிருந்து. கொலம்பசு பத்துமணிநேரப் பயணம், சாலைகளின் எழிலும் ஆங்காங்கே உள்ள பயண ஒய்விடங்களும் உணவகங்களும் பயணக் களைப்பில்லாமல் மகிழ்வுலாவாக இருந்தது.
    தம்பி கவியரசனும் தமிழ்மணிகண்டனும் வீடு வாங்கி இது நாள் வரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. தற்போதே செல்லமுடிந்தது. நகர் அமைப்பும் இல்ல வடிவமைப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. கால் ஏக்கர் உள்ளமனையில் நடுவில் இல்லம். கீழ்ப்பகுதியில் முன் கார் நிறுத்தம் உள்ளுக்குள்ளேயே முதல் மாடி செல்லும் படி வசதி. புதுமையான படுக்கையறைகள் குளியலறைகள் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டைச்சுற்றி பசுமையான புல்வெளிகள். ஆங்காங்கே மரங்கள் எழில் சூழ்ந்து உள்ளன. டப்ளின் பகுதியில்  நகர் அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தன. தம்பி தமிழ்மணிகண்டன் வீடு மூன்று அடுக்கு உள்ளது. வீட்டைச்சுற்றி உள்ள புல்வெளிகளை பராமாரிக்கவேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை யென்றால் டப்ளின் நகராட்சி சீர்செய்து அதற்குறிய கட்டணத்தைப் பெறுவர் எனக் கூறினர். இரு நாட்கள் தம்பி இல்லத்த்லிர்ந்து விட்டு நீயார்க் புறப்பட திட்டமிட்டேன். கொலம்பசுலிருந்து பேருந்தில் செல்ல பயணச்சீடை இணையத்தில் தம்பி பதிவு செய்தார்.
    இரவு பதினோறு மணிக்கு பேருந்து. தம்பியும் முத்துமாரியும் கொலம்பசு டவுண்டவுன் பகுதியில் உள்ள பேருந்துநிறுத்தத்திற்கு ஊர்தியில் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் நல்ல மழை. பேருந்து நிறுத்தம் வந்து அலுவலகம் சென்றால் அங்கு யாறும் இல்லை. விசாரித்ததில் 11 மணி பேருந்திற்கு இனிமேல்தான் வருவார்கள் என்று கூறினர். ஒருவழியாக ஒரு அலுவலர் வந்தார் மணி11 ஆகி விட்டதே என்றோம் அமருங்கள் வரும் என்றார். தம்பியும் முத்துமாரியும் காரிலேயே இருந்தனர், ஒருவழியாக பேருந்து 11-30 மணியளவில் வந்தது. ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். தம்பி விடைபெற்றுச் சென்றார். உடைமைகளைக் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார். நான் அமர்ந்தும் கால்  மணி நேரம் கழித்துத்தான் பேருந்து புறப்பட்டது. நான் பேருந்தின் நடுப் பகுதியின் ஒரத்தில் அமர்ந்திருந்தேன். கருப்பர்கள் வெள்ளையர்ளும் அமர்ந்திருந்தனர். இசுலாமிய கருப்பர்களும் தலையில் தொப்பி அணிந்துகொண்டு பயணம் செய்தனர்.
    சிறிது நேரம் கழித்து பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஒரு கருப்புநிற மத்திம வயதுப் பெண்மணி 35 பேருந்தில் ஏறினார். தன் உடைமைகளை வைத்துவிட்டு என் இருக்கைக்கு ஓர் இருக்கை முன் அமர்ந்தார். தீடிரென ஒரே சப்தம். இருக்கையை விட்டு எழுந்து பார்த்தேன். 20 வய்து மதிக்கத்தக்க ஒரு வெள்ளை இளைஞர். ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அந்த அமையாரும் வேகமாக கையை நீட்டிக் கொண்டும் வெகுண்டு கத்தினார். இருவருடைய வாக்குவாதமும் முற்றிக் கொண்டு இருந்த்தது. தீடிரென அந்தப் பேருந்தின் இருந்த அனைத்து கருப்பர்களும் ஆவேசமாக இருக்கையை விட்டு எழுந்து அந்த இளைஞனை எதிர்த்து கொதித்தெழுந்தனர். ஆனால் அந்த இளைஞர் முகத்தில் எந்த விதமினா அச்சம்  இன்றி தன் கைப்பேசியை இயக்கிக் கொண்டு அமர்ந்துகொண்டு விவாதித்தான். பின் அந்த அம்மையாரைச் எழும்பும்படி சாடினான்
    பெருத்த சப்தம் வந்தவுடன் பேருந்து நின்றது. எனக்கு ஒரே கவலை ஏற்கனவே பேருந்து தாமதமாக வந்து தாமதமாகவே எடுத்தனர் நான் காலை சென்றால்தான் மருமகன் புவியரசன் வெலைக்குப் போகுமுன் என்னை அழைத்துக் கொண்டு செல்லமுடியும் இதற்குள் இந்த இந்த நிற வேற்றுமைப்போர். ஒரு கருப்பராக உள்ள ஒபமா ஆட்சி செய்யும் அளவிற்கு நாடே மாறியுள்ள நிலையிலும் அந்த இளைஞருடைய செயல் அருவருப்பைத் தந்தது.
    பேருந்தை நிறுத்திய ஒட்டுநர் இருவரின் இருக்கை அருகே வந்தார். அந்த பேருந்து சீனர் நடத்தும் நிறுவணம். அந்த ஓட்டுநரும் சீனர். நான் அந்த இளைஞரை கண்டித்து இருவரையும் இருக்கையில் இருக்க வைப்பார் என எண்ணினேன். ஆனால் இருவரின் வாக்குவதமும் ஓய்வதாக இல்லை. பேருந்தில் இருந்த கருப்பர்கள் கண்டித்த வண்ணம் இருந்தனர். பேருந்தில் இருந்த வெள்ளையர்கள் அமைதியாக இருந்தனர், அந்த இளைஞனை கண்டிக்கத் தயாரக இல்லை.
    கடைசியாக ஒட்டுனருடன் அந்த அம்மையாரை அழைத்து முன் இருக்கையில் அமரவைத்தார். முதலில் மறுத்துப் பின் அம்மையார் முன் இருக்கையில் அமர்ந்தார். அந்த வெள்ளை இளைஞர் இரு இருக்கையிலும் அமர்ந்துகொண்டு தன் கைப்பேசியை பயண்படுத்திய வண்ணம் வந்தார்.
    ஒருவழியாக பேருந்து காலை 8 30 மணியளவில் நியூசெர்சியிலிருந்து நியுயார்க்கை அடைய ஃகட்சன் நதிப் பாலத்தைக் கடந்துகொண்டிருந்தது. மருமகன் புவியரசனுக்கு தொட்ர்பு கொண்டேன். மாமா நீயூயார்க் 34ஆவ்து தெருவில் அங்கேயே நில்லுங்கள் என்று கூறினார். நான் இறங்கி நின்றேன் மருமகன் வந்து அழைத்துச் சென்றார்.

No comments:

Post a Comment