Monday, December 14, 2009

கடாரம் வென்ற சோழனின் கெடா பூசாங் பகுதியை வணங்கினோம்
கடாரம் வென்ற சோழனின் கெடா பூசாங் பகுதியை வணங்கினோம்
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு மலேசியாவில் மலயாப் பல்கலைக்கழக்த்தில் 25,26-9-2009ஆம் நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, இந்நூற்றாண்டிற்குத் தேவையான ஐந்து தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை வழங்கினர்.மாநட்டிற்குப் பிறகு செப்டம்பர் 28ஆம் நாள் தமிழகதிலிருந்து வருகை தந்த பெருமக்கள் பினாங்கு கெடா நோக்கிப் பயணமானோம். முன்னாள் செனனைமாநகரத் தந்தை சா.கணேசன், தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், திருச்சி அறந்தை திருமாறன்,மற்றும் 45 பெருமக்கள் அனைவரும் பெருந்தில் பண்மானோம். பேருந்தில் அருட்பா பாடகி அன்னபூரணி, தமிழிசைமாமணி தி.க.ச.கலைவாணன், திருக்குறள் கோ.பா.செல்லம்மாள், திருவேஙகடவன் பலக்லைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் மனுவல் ஆகியோர் தஙகள் இனிய குரலால் பாடி மகிழ்வித்தனர். நமது நிறுவனர் பெருஙகவிக்கோ பாவேந்தரின் பாடலைப் பாடி மகிழ்வித்தவாறு யாங்கள் பேருந்தில் பயணித்தோம். நமது மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாகடர்.சி.தருமலிஙகம் மலேசியத் தமிழர்கள் பற்றியும் மலேசிய நாட்டைப் பற்றியும் விவரித்தார்.ஆங்காங்கே யான் என் கருத்துக்களைக் அறிஞர்களுக்குக் கூறி தமிழுறவுப் பயணம் பினாங்கு கெடா நோக்கி பயணமானது.

பினாங்கில் 27 இரவு பினாங்கு மாநில துணைமுதல்வர் பேராசிரியர் இரா. இராமசாமி அவர்களுடன் கலந்துரையாடலை முடித்து சிறப்பான விருந்தும் அளித்தனர். 28ஆம் நாள் காலை யாங்கள் கெடாநோக்கிப் பயணமானோம்..வந்திருந்த அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் இராசேந்திர சோழன் வென்ற கடாரப் பகுதியைக் காணப்போகிறோம் என்ற ஆவல் மீக்கெழுந்து இருந்தது. அனவரும் பேருந்தில் சுங்கைப் பட்டானியைக் கடந்து கெடா பகுதியை அடைந்தோம். அறிஞர் பெருமக்கள் அனைவரும் இராசேந்திர சோழன் காலடி பட்ட மண்ணை வணங்கினர்.

லெம்பாங் பூசாங் பள்ளத்தாக்கில் உள்ள அக்ழ்வாராய்சி அரங்கைக் கண்டு வியந்தோம்.கெடாமாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வஉருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர்.1500ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.

யாங்கள் அனைவரும் அருங்காட்சியகத்தைக் கண்டோம். சிவன்,, வினாயகர், துர்ககை சிதைந்த நிலையில் பார்வைக்கு வைத்துள்ளனர். தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் காணமுடிந்தது. பெருமக்கள் அனைவரும் தங்களின் ஒளிப்படக் கருவியில் பட்மெடுத்தவண்ணம் இருந்தனர். எங்களுடைய குழுவில் வருகைதந்த கட்டிடக் கலைஞர் தமிழ்வள்ளல் சந்திரசேகரும் அவரது துணைவியார் மாலதியும் ஆர்வத்தோடு அனைத்தையும் கண்டு படமெடுத்தனர். திருமதி மாலதி ச்ந்திரசேகர் எல்லோரிடமும் அன்பும் பரிவும் காட்டிய பாங்கைக் கண்டபோது வியப்பு மேலோங்கியது. சந்திரசேகர் அவர்கள் இல்லத்தில்க தம் மனைவியை பாட்டாளி என அழைப்பதின் ஆழம் புரிந்த்து.தலைசிறந்த கவிஞர் முனைவர் சவகர்லால் தன் துணைவியரோடு கண்டு குறிப்பெடுத்தார்.

செம்மொழிவாரியத்தின் அலுவலராகப் பணியாற்றும் கோ.புண்ணியமூர்த்தி மிகச்சிறந்த ஆராய்சிக் கட்டுரையை மலருக்கு வழங்கியுள்ளார். அவர் அனைத்துத் தகவல்களையும் ஆர்வத்தோடு பதிவுசெய்தவண்ணமிருந்தனர். நகர்ப்புற வடிவமைப்பின் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானநவனீதன் ஆர்வத்தோடும் வியப்போடும் கண்டு குறிப்பெடுத்தார்.கவிச்சிங்கம் கண்மதியன் தன் 85 வயது தாயோடு கண்டது எமக்குப் பெரு மகிழ்வைத் தந்தது.

அருங்காட்சியகத்தைக் கடந்து மலைமேல் சென்று கண்டோம். இந்துக் கோயிலின் வடிவமைப்பு அங்கே உள்ளது..கருங்கற்கலாளான சுற்றுச்சுவரும் மேற்பகுதியில் கருவரையும் உள்ளன. குறிப்புப்பலகையில் 11ஆம் நூற்றாண்டின் கோயில் என குறிப்பிட்டுள்ளனர் தஞ்சைப் பெரிய கோயில் காலமும் ஆயிரம் காலப் பழமையானது. அதை நாம் பாதுகாத்துவருவதால் இராசராசனின் பெயர் இன்றும் நிலை பெற்றுள்ளது. பன்னெடுங்காலம் கழித்து இங்கே கண்பிடித்தமையால் முழுமையாக இல்லாமல் உள்ளதை உணரலாம். தமிழகக் கோயில்களில் நாம் பயன்படுத்தும் கற்கலாளான உடைந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அங்கு காணமுடிகிறது.

யாங்கள் பெருந்தில் பயணித்தபோது சாலையின் இரு புறங்களிலும் நெல்வயல்கள் பச்சை வண்ணத்தில் காட்சியளித்தன.தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம் அதைப்போன்றே கெடா மாநிலமும் காட்சி தந்தன.எம்மோடு வந்த மறக்குணத்து பிரபாகரன் இராசேந்திர சோழன் காலத்தில் வந்தவர்கள் இங்கு விவசாயம் செய்திருக்கின்றனர் என்ற செய்தியையும் தெருவித்தார். திருக்குறள் தொண்டில் தன் வாழ் நாளையே ஒப்புவித்த வேங்கடேசனும் தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் தேவராசும் ,ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சிவருவாய்த்துறை அதிகாரி சி.முனிசாமியும் எவ்வித களைப்பும் இன்றி மலையின் உச்சி வரை எம்மோடு வந்தனர். மலையின் முன்பகுதி கடல்வெளி இந்தக் கடல் வழிதான் சோழர்கள் கடாரத்தை வென்றுள்ளனர்.

சோழம்ன்னர்கள் கெடாவையும்,சயாமையும் ஆண்ட செய்தியும்,முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட குறிப்பும், சோழன் கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட வரலாறும் நம் பழம்பெரும் இலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் உணரமுடிகிறது..

மாநாட்டிற்கு வருகைதந்த பெருமக்களெல்லாம் ஆய்ந்தறிந்த அறிஞர்கள். அச் சான்றோர் பெருமக்களை இஙுகு அழைத்துவந்ததன் நோக்கம் இன்னும் வரலாற்றுப் பதிவுகளை பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலே ஆகும். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் நடத்திய ஆறு மாநாடுகளில் மூன்று செர்மனி,தாய்லாந்து,தற்போது மலேசியாவிலும் நடத்தியுள்ளது.அனைத்தும் தமிழுறவை இருகப் பிணைக்கும் மாநாடுகளாகும்.கங்கை கொண்டான் கடாரம் வென்றான் எனற பழம்பெரும் தமிழர்கள் பெருமையை 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு உணர்த்தியுள்ளது.

.

Monday, November 23, 2009

நூல் மதிப்புரை --


நூல் மதிப்புரை
-----------------------------
நூல்: அரசியல் இமயம் அண்ணா
ஆசிரியர்: முனைவர். அ. ஆறுமுகம்
பக்கம்: டெம்மி/ 144
விலை: உரூபா. 60/=
வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், சீரகம், 4/79 நடுத்தெரு திருமழப்பாடி _ 621851, அரியலூர் மாவட்டம்.

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு மிகச் சிறப்பாக உலகெங்கும் கொண்டாடப் பட்டது. அறிஞரைப்பற்றி பல்வேறு நூல்கள் வெளியாகியுள்ளன. அனைத்தும் நம் குடி உயர்த்திய பெருமகனின் புகழைப் பரப்பும் நற்செயலாகும். அவ் வழியில் அண்ணா காலத்தில் வாழ்ந்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின்” அரசியல் இமயம் ”அண்ணா எனும் நூல் வளரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

பேரறிஞரின் வாழ்க்கையோடு நீதிக்கட்சியின் முன்னோடிகளான வெள்ளுடைவேந்தர் தியாகராயர், டாகடர் டி.எம் நாயர், சி.நடேசனார்,பொன்ற பெருமக்களின் ஈகங்களை விளக்கியுள்ளார். நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தோற்றங்களையும், தொண்டுகளையும் உணர்வாளர்கள் சிதறமால் கொள்கை வழி மாற்றமில்லாமல் இல்லாததை பதிவு செய்துள்ளார்.

சனநாயக வழியில் தந்தை பெரியாரிடம் விடைபெற்று திராவிட முன்னேற்றக்கழகத்தை நிறுவி அண்ணன் தம்பி என்ற குடும்ப உறவோடு கழகத்தைக் கட்டிக் காத்ததைச் சான்றுகளோடு பட்டியளிட்டுள்ளார்.பேரறிஞரின் சடமன்றப் பணிகளையும், மாநிலங்களவைப் பணிகளையும் மிகச் சிறப்பாக வளரும் தலைமுறையினரக்குப் பாடமாகத் தந்துள்ளார்.

தநதை பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்து தனிக் கட்சி கண்டவுடன் பெரியார் காங்கிரசையே ஆதரித்து வந்ததையும் இறுதியில் அண்ணா இராசாசியுடன் கூட்டணிவைத்து ஆட்சியைப் பிடித்து பெரியாருக்கு காணிக்கையாக்கிய பாங்கைக் கூறி பேரறிஞரை கொள்கைக் கோபுரமாக உயர்த்தியுள்ளார்.

இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நிகழ்வுகளில் ஆசிரியர் பங்கேற்று அறிஞரின் கட்சிமாச்சரியம் இல்லா பணியையும் தமிழ் அறிஞர்களின் சிலைகளைத் திறந்த சிறப்பையும் படத் தொகுப்புபோல் நம் கண்முன் நிறுத்துகிறார்.

தி.மு.க சென்னை மாநகராட்சியைப் பிடித்து அப்போது பெருந்தலைவர் காமராசரின் சிலையை அன்றைய தலைமையமைச்சர் நேருவால் திறக்கச் செய்த அண்ணாவின் பேருள்ளத்தினை பதிவு செய்துள்ளார்.

மாநகராட்சித் தேர்தலில் மிகத் திறம்பட உழைத்து அன்றே சென்னை மாநகரட்சியைக் கைப்பற்றிய தலைவர் கலைஞருக்குத் தங்க மோதிரம் வழங்கி தங்க குனம் படைத்த கலைஞர் எனப் பாராட்டியதை எழுதி நெகிழ்கிறார். கட்சி தொடக்கத்திலிருந்து அண்ணா மறைவு வரை தலைவர் கலைஞரின் அப்பழுக்கில்லா உழைப்பையும் அண்ணாவுக்குப் பின் தந்தை பெரியார், பேரறிஞரின் அண்ணாவின் கொள்கைகளை ஆட்சியிலும் சமுதாயத்திலும் காக்கும் காவல் அரணாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்லாற்றல் மிக்க பேரறிஞரின் புகழ் பரப்பும் நூல்களுள் இந்நூலில் அண்ணாவை அரசியல் இமயமாகவும், பண்பாட்டு இமயமாகவும் போற்றி மகிழ்கிறார்.
-திரு

Thursday, November 19, 2009

நூற்றாண்டு நாயகர் தூயோன் கக்கன்

மாசிலாத் தலைவன் எங்கள்
மாமணி காம ராசர்
காசிலாத் தொண்டின் வாழ்வாய்
கடமையைக் காத்த தூயோன்
கூசிடும் நாணம் இன்றி
குவித்திடும் அரசியல் வாழ்வில்
பேசிடும் வாழ்வாய் வாழ்ந்த
பெற்றிமைச் சான்றோன் கக்கன்!

அமைச்சராய் உயர்வு ஏற்றும்
அடிமட்ட வாழ்வாய் வாழ்ந்தார்
குமைந்திடும் வறியோர் எண்ணி
குடும்பமாய் துன்பம் ஏற்றார்
இமையதே கண்கள் காக்கும்
இனியநல் மக்கள் தொண்டர்
சுமையிலாத் தலிவர் நம்முள்
சுகத்தையே கண்டார் வென்றார்!

காவலர் அமைச்சுக் காலம்
கடமையாய் இளவல் வேலை
ஏவலாய்ப் பெற்றுத் தம்மின்
ஏந்தலைக் காணச் சென்றார்
காவலாய் வாழ்ந்த கக்கன்
காவலர் பணியைப் பெற்ற
மேவிடும் உறவைச் சாடி
மேதினி வென்றார் நின்றார்!

நூற்றாண்டு கண்ட நம்மின்
நுண்னுணர் தொண்டைப் போற்றி
நாற்றினில் காணும் நெற்கள்
நெறியுடன் வளர்தல் போன்றே
தூற்றிடும் இலஞ்சம் வஞ்சம்
துணிவோடு மாய்த்து நம்மில்
ஏற்றிடும் கக்கன் வாழ்வாய்
எண்ணியே எழுவோம் வெல்வோம்!

Sunday, November 15, 2009

மலேசியா, 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடுபன்னாட்டுத் தமிழுறவு மன்ற த்தின்

மலேசியா, 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009 செப்டம்பர் 25,25,27,28,29 நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், பினாங்கு, ஈப்போ, மலாக்கா, நகர்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழ்மாநாட்டை முதன் முதலில் நடத்திடத் திட்டமிட்ட அருட்திரு பேராசிரியர் தனிநாயக அடிகளார் பணியாற்றிய கோலாலம்பூர் மலயாப் பலகலைக்கழகத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு தனிப்பெரும் சிறப்பாகும்.மலேயாப் பல்கலைக் கழகத்தில் அடிகளார் வழித்ததடத்தில் பணியாற்றும் பேராசியப் பெருமக்கள் முனைவர் பேராசிரியர் குமரன், முனைவர் கிருட்டிணன், மற்றும் தமிழ்த்துறைப் பெருமக்களின் ஆதரவு மகத்தானதாகும்,


மாநாட்டின் திறப்பு விழா நிகழ்வில் மலேசியத் தமிழர்களின் விடிவெள்ளி ம.இ.க.தேசியத் தலைவர் டத்தோசிறீ சாமிவேலுவும், மலேசிய பிரதமர் துறையின் ஒற்றுமைத் துறையின் அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோசூன் கூன் ஆகியோரும் பங்கேற்றது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வாகும். மாநாட்டிநற்கு மலேசியாவின் பல்வேறு பகுதியிலிருந்து பன்னெடுங்காலம் தொடர்புடைய தமிழ்ப்பணி அன்பர்கள் பங்கேற்றனர்.மலேசியாவில் தமிழ்ப்பணி இதழின் வழியே மாநாடு குறித்து அறிந்து வந்தோம் எனக் குறிப்பிட்டது நம் தொண்டிண் உயர்வை உணரமுடிந்தது. மலேசிய இந்திய இயக்கங்களின் பெருமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். மலேசியப்பத்திரிகையாளர்களான தமிழ் நேசன், மலேசியநண்பன், தமிழோசை நிருபர்கள் மாநாட்டு நிகழ்வுகளை பதிவு செய்து இதழ்களில் வெளியிட்டனர்.

தம்வாழ்நாளையே தமிழ் தமிழர்களுக்காக ஒப்புவித்த மன்றத்தின் உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோ தம் வரவேற்புரையில் மாநாட்டின் நோக்கத்தையும் மாநாட்ட்டிற்காக ஒத்துழைத்த, வருகை தந்துள்ள உலகப் பேராளர்களையும் நெஞ்சம் நெகிழ வரவேற்றார்.


மிகக் குறுகிய காலத்தில் மாநாட்டின் அழைப்பு விடுத்தவுடன் தமிழ் உணர்வோடு கடந்த 5 மாநாடுகளுக்கும் ஆதரவு அளித்த தமிழகப் பெருகமக்கள் மலேசிய 6ஆம் உலகத் தமிழர் மாநாட்டிற்கு அனைத்து மனமாச்சசிரியங்களை மறந்து தமிழால் ஒன்று சேர் தமிழுக்காக ஒன்று சேர் தமிழர்க்காக ஒன்று சேர் என்ற கொள்கை வழிக்கு உரமூட்டினர். பங்கேற்ற பேராளர்கள் ஐந்து தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கினர். இந்திய செம்மொழி வாரியத்தின் பொறுப்பு அலுவலர் இரா.இராமசாமி அவர்கள் பங்கேற்றது உலக மொழிகளில் அன்னை மொழியாம் தமிழ் மொழியை உலஅரங்கில் தலைநிமிரச் செய்வதாகும்.

மலேசியப் பல்கலைக்கழக சிறப்பு வாய்ந்த ஐந்து அரங்குகளில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றன.மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் தமிழ்த் துறைப் பேராசிரியர் களான பேராசிரியர் குமரன், முனைவர் கிருட்டிணன்,முனைவர் சவகர்லால், இலக்குவனார் திருவள்ளுவன், தொழிலதிபர் தமிழ் வள்ளல் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆய்வரங்கங்கள் நடைபெற்றது.

1.செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்கைலக்கியங்களின் வாழ்வியல் நெறிகளும். 2. காலந்தோறும் காலந்தோறும் காலம் வெல்லும் தமிழ் இலக்கிய மேம்பாடு. 3. அன்றும் இன்றும் உலகளாவிய தமிழ்கர்களின் வாழ்வும் தாழ்வும். 4. ஈழம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும். 5. வையகத் தமிழர்களின் தொழில் வணிகம் - கனிணி வளர்ச்சிப் போக்குகள். ஆகிய ஐந்து தலைப்புகளில் ஆய்வரங்கம் நடைபெற்றது.

திருவேங்கடவன் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சான் மனுசவல்,மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அழகேசன்,பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆண்டவர்,தில்லி பல்கலைக்கழக் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இந்திராணி மணியம் முனைவர் சரளாமனெவேல்,முனைவர் இலலிதா சுந்தரம்முனைவர் பேராசிரியர் அக்னிபுத்திரன்,முனைவர் வசுமதி இராசன்,மருத்துவர் இராசேசுவரி அழகேசன் போன்ற கல்வியாளர்களும் மற்றும் பெருமக்கள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினர்

தமிழிசைமாமணி தி.க.ச.கலைவாணன் அவரிகளின் தமிழிசை கேட்டோர் உள்ளங்களில் தமிழ் உணர்வைத் தூண்டியது.புலவர் கோ.பா.செல்லம்மாளின் கரகாட்டம் உள்ளத்தைத் தொட்டது.


மாநாட்டின் சிறப்பாக வருகை தந்த பேராளர்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இராசேந்திரசோழன் கால் பதித்த கடாரம் பகுதிக்குச் சென்றோம். தற்போது மலேசிய அரசு அப் பகுதியை அருங்காட்சியகமாக் வைத்துள்ளனர். நம் தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்களான சிலைகள் நம் மக்கள் பயன்படுத்ததிய கற்பொருட்கள் அனைத்தும் உள்ளன.கடல் வழி வாணிபமும் நாடுகளையும் தன்வயப் படுத்திய சோழனின் ஆற்றல் மலைப்படையவைக்கிறது.பூசாங் பள்ளத்தாக்கின் வழியாக கடல் வழி காடாரத்தை வென்றுள்ளான் சோழவேந்தன். கற்கோயில்களின் சுற்றுச்சுவர்கள் பாதுகாகக்ப்பட்டுவருகின்றன. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்ற குறிப்பும் உள்ளது.
மாநாட்டிற்கு வருகைதந்த சோழன் வழித்தோன்றல்களான பெருமக்கள் அனைவரும் மலைமீது ஏறி சோழனின் ஆற்றலைக் கண்டு வியந்தனர்.ஆய்வறிஞர்கள் பேராசிரியர்கள் தமிழ் உணர்வாளர்கள் அப் பகுதி முழுமையும் கண்டு பதிவுகளை நெஞ்சிலும் ஒளிப்படக் கருவியிலும் பதிவு செய்தனர்.அங்கிருந்து தரைவழியாகச் சென்றால் ஒரு மணி நேரத்தில் தாய்லாந்தை நாட்டை அடையலாம். இன்று தரைவழியாகச் செல்லக் கூடிய பகுதியை கடல் வழி கடந்து உலகை ஆண்ட சோழனை எண்ணுங்கால் தமிழனின் ஆற்றல் தலைவணங்கச் செய்கிறது.மலேசியா செல்லும் உலகப் பெருமக்கள் கடாரம் சென்று மண்ணை வணங்குங்கள்.

Monday, November 2, 2009

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேதுமதி அம்மையார் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்


அன்னை சேது அறக்கட்டளை

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேதுமதி அம்மையார் மூன்றாம் ஆண்டு
நினைவுநாள் அருள்மங்கலம்

நாள்: 6-11-2009 காலை 6.00மணி அன்னை சேது ஆலயம்
கவியரங்கம் அன்னதானம்,

மாலை: 6-00மணி இராமநாதபுரம்
இடம்: செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி

தலைமை: மாண்புமிகு அமைச்சர் சுப.தங்கவேலன்

பொற்கிழி வழங்குநர்: பாரளுமன்ற உறுப்பினர் மாண்பமை ரித்தீசுகுமார்

பெறும் பெருமக்கள்:

1. நூலகவித்தகர் வே. தில்லைநாயகம், கம்பம்
2. சமுகக்காவலர் நவமணி மதுரை
3. இலக்கியச்சுடர் மூவேந்தர் முத்து சென்னை
4: நடைப்பயண அரிமா.கவிஞர் நெல்லை இராமச்சந்திரன்
சென்னை

அன்புடன்,
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் மக்கள்

Saturday, October 31, 2009

நோபல் தமிழன் இராமகிருட்டிணன்


நோபல் தமிழன் இராமகிருட்டிணன்புத்தொளி புகுந்து நம்மின்

புதுமைகள் கண்டு மாட்சி

வித்தக விருதாம் நோபல்

வியத்தகு தமிழன் பெற்றான்

எத்திக்கும் புகழைப் பாய்ச்சும்

ஏற்றமாய் நம்மின் மைந்தன்

புத்தியின் திறத்தால் பாரில்

புகழேணி கண்டான் வாழி !


தில்லையில் பிறந்த செல்வன்

திருமிகு நாட்டின் பற்றால்

எல்லையில் ஆவல் பொங்க

ஏங்கிய வீட்டைக் கண்டான்

பல்புகழ் வளர்ச்சி எல்லாம்

பல்கிடும் வாழ்வில் கண்டும்

தொல்புகழ் தாயின் மண்ணை

தொழுதிடும் மைந்தன் வாழி!


இயற்பியல் தேர்ந்த நல்லோன்

இன்றைய உயர்வைக் கண்டோன்

முயற்சியில் அமெரிக்க மண்ணில்

முழுமையாய் உழைத்தே வென்றான்

அயர்விலா ஆற்றல் பேற்றால்

அகிலத்து விருதாம் நோபல்

உயர்வுடன் இணைந்து பெற்றான்

உன்னத பேற்றைத் தந்தான்!


வெங்கட் ராமன் பெற்ற

வெல்புகழ் இராம கிருட்டிணன்

தங்கத்தின் திறத்தைப் போன்றே

தலத்திலே புகழைப் பெற்றான்

சஙகங்கள் கூடிக் கூடி

சாதனைத் தமிழன் போற்ற

பொங்கிடும் அன்பால் நம்மின்

வாழ்துக்கள் சொல்வோம் நன்றே!

Friday, October 30, 2009

சென்னையில் உத்தமம் 2009 மாநாடு - கருத்துரை

எட்டாவது தமிழ் இணைய மாநாடு- சென்னையில் கருத்துரை.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், சென்னையில் உத்தமம் துணைத் தலைவர் வெங்கடரங்கன், மற்றும் கவிஅரசன் அவர்களுடன் 29- 10 2009 அன்று ஓர் சந்திப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. கொலோன், செர்மனியில் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த உத்தம உறுப்பினர்கள் கருத்துரை வழங்கினர். மாநாடு குறித்த சிறப்புச் செய்திகளை சென்னை வாழ் தமிழறிஞர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் இரு பெருமக்களும் கொலோன் மாநாடு குறித்து விளக்கினர். கொலோன் மாநாடு உத்தம உறுப்பினர்களின் ஒட்டுமொத்த
முயற்சி எனக் குறிப்பிட்டனர்.

தமிழக அரசின் உலகச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9 ஆம் தமிழ் இணைய மாநாட்டை கோவையில் நடத்த முத்தமிழறிஞர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதை உத்தமத்தின் ஆலோசகர் முனைவர் அனந்தகிருட்டிணன் அறிவித்ததை வெங்கடரங்கனும் கவியரசனும் கூறினர்.

மன்றத்தின் உலக அமைப்பாளரும் நிறுவனத் தலைவருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மாம்பலம் சந்திரசேகர் பெருமக்களுக்கு மாலை அணிவித்து சிறப்பித்தும் அமைப்பிற்கும் வாழ்த்துரைத்தனர்.


முனைவர் மறைமலை, முனைவர் ஆண்டவர்,இலக்குவனார் திருவள்ளுவன்,
வாழ்த்துரைத்தனர். மன்ற இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்றினார். செயலர் கண்மதியன் நன்றி நவின்றார்.