Wednesday, December 13, 2023

 மலேசியா கெடா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மேனாள் அமைச்சர் ட த்தோ சுப்பிரமணியம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

மலேசியா கெடா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மேனாள் அமைச்சர் ட த்தோ சுப்பிரமணியம் மலேசியாவில் காலமானார். ட த்தோ சுப்பிரமணியம் தமிழகத்தில் பயின்று மலேசியாவின் சிறந்த மருத்துவர்.  ம இ க வின் பொறுப்பேற்று தேர்தலில் வென்று மலேசிய அமைச்சராகப் பொறுப்பேற்று அருந்தமிழ்த் தொண்டாற்றியவர். வேலூர் திராவிட இயக்க குடும்பமான மூத்த வழக்கறிஞர் சமரசம் அவர்க்ளின் சகோதரி தாமரைச் செல்வியை மண ந்து இணையரோடு அரும்பணியாற்றியவர். கெடா நகரில் அவரது இல்லத்தில் தங்காத தமிழ்ப் பெருமக்களே இல்லை என்னும் அளவிற்கு விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கிய பெருமக்கள்.  கெடா ந்கரில் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாட்டை  சிறப்புடன் தம் துணைவியார் அமர ர் ட த்தின்  தாமரைச்செல்வியோடு இணைந்து நட த்திய சாதனைத் திலகம். மாநாட்டின் பன்னாட்டுக் குழுத் தலைவராக தமிழ்மாமணி வா.மு. சே . திருவள்ளுவரை நியமித்தார். மாநாட்டு மலரை விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட  தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர் பெற்ருக்க் கொண்டார்.இனமானக் காவலர்  பேராசிரியர் க.அன்பழ்கனார் மகள் தாமரை இதய் மருத்துவர் சொக்கலிங்கம் இணையர் பங்கேற்று சிறப்பித்தனர். கவிஞர் செம்பை சேவியர் புலவர் தேவதாசு இலக்கியத் தேனி வாசு இலங்கை ரூபன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்து அனைவரையும் இராசராச சோழன் வென்ற பூசாங்க பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்து சென்று அருந்தொண்டு ஆற்றிய பெருமகன். சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்தித்துச் செல்லும் பேரன்பிற்குரியவர். நான் சுவிட்சலாந்து செல்வதற்கு முன் அவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.பெருமகன் அண்மையில் காலமானார் என்ற செய்தியை ஆசிரியமணி மாணிக்கம் தெரிவித்தார். மலேசியா ரோட்டரி சங்கத்தின் வாயிலாக ஏழை எளியோருக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் பெருமகன் மலேசியப் பயணத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்.

Sunday, December 10, 2023

 ஊட்டிடும் தாயைப் போன்றே  

ஊக்கமாய் முதல்வர் ஸ்டாலின் 


 காலத்தின் சூழல் எல்லாம்

  கோலத்தின் அழிவாய்ப் போச்சே 

ஞாலத்தைச் சுற்றி  மாசே

  ஞாயிறை மறைக்கும் வண்ணம்

 ஓலமாய் மழையின் உச்சம்

 ஓய்விலா சென்னை மண்ணில்

பேயென நகரம் சாய்க்கும் 

பேதமை ஏனோ ஏனோ 


படகினில் செல்லும் வன்ணம் 

  பெய்ததே வெள்ளம் எங்கும்

 தடமுள நீரின் போக்கில் 

அடுக்ககம் வின்னை முட்டும்

மடக்கிடும் நீரே இல்லம்  

மடையென பாய்ந்தே மாய்க்கும் 

திடமிலா மக்கள் ஊரில் 

தீமையாய் மாறும் மோசம்


ஆட்சியின் அசூர வேகம் 

ஆளுமைப் திட்டப் போக்கால்

 மாட்சிமை உயிர்கள் எல்லாம்  

மாதவப் பணியால் காத்தார்

ஊட்டிடும் தாயைப் போன்றே  

ஊக்கமாய் முதல்வர் ஸ்டாலின் 

காட்டிடும் கடமை வேகம்

காவலாம் திமுக அன்றோ


மனமாசு கருத்தைக் கூறும்  

மக்களின் துன்பம் அறியார்

 தினமுமே உளறும் நெஞ்சர்

 திண்ணியப் பணியை மெச்சார் 

வினைகளை ஆற்ற வேண்டும் 

 விருட்சமாய் வழங்க வேண்டும்

 சினத்துடன் உள்ள மக்கள்

 சீற்றத்தைப் போக்க வேண்டும்

Thursday, December 7, 2023

 

 

புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின் திருமணப் பொன்விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்



புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. நிகழ்வுக்க்கு இணையர் மக்கள் பொறியாளர் அமுதா நடேசன் வரவேற்புரை வழங்கினார். தம் தந்தை தாயின் சிறப்பகைக் கூறி அனைவரையும் வரவேற்றார். வாழ்த்துகள். அமரிக்காவில் வாழும் மகன் அருளரசு தம் பெற்றோரின் பெருமையையும் அமெரிக்க தமிழகத் தமிழர்களில்  நிலையையும் ஆற்றொழுக்காகப் பேசினார் வாழ்த்துகள். மருத்துவர் செய்கணேசு தம் பெற்றோருக்குத் தெரியாமலேயே இந்த நிகழ்வை நட த்தி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார் சிறப்பு.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மண்ணுயிர்க் கெல்லாம் இனிது

            என்ற வள்ளுவப் பேராசான் வாக்குப்படி இந்த இணையர் தம்பெருமையையும் காத்து உலகிற்கு நன் மக்களை ஈன்று சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். தங்களின் பலத்த கரவொலிக்கிடையில் பொன்விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்னரசனின் தம்பி இராசேந்திரன் தொடக்கம் முதல் இன்று வரை எம்மையெல்லாம் அழைத்து விழாவை சிறப்பாக நட த்திவருகிறார். இப்படி ஓர் தம்பி பவள விழா நேரத்தில் அமைவது சிறப்பு தம்பி உடையான் படைகஞ்சான் என்பது உண்மை போலும்.  வாழ்த்துகள். அனைவரும் அம்மா சந்திரா அவர்களின் பெருமையைப் பேசினீர்கள் மக்கள் உட்பட பேசினார்கள். யான் புலவர்கரசரின் ஈகத்தை பதிவிட விரும்புகிறேன், எந்த சராசரி மனிதனுக்கு பிள்ளையை முறையாக  வளர்க்கும் பெற்றோரும் பொறாமை வஞசனைஇல்லா உறவுகளும் இருந்தால் இயல்பாக பொன்விழா நட்த்துவார்கள். தங்களைச் சார்ந்த உறவுகள் கூடுவார்கள்.

ஆனார் தெய்வத் தமிழ்ச்சங்கம் மருத்துவர் பாரி தகுதி திவாகர் பொறிஞர் சிறீதார் முனைவர் மல்லிகா எதிரில் அமர்ந்திருக்கும் கவிக்கோ வசந்தராசன் புலவர்குழு முனைவர் சோ. கருப்பாசாமி எண்ணற்ற தமிழ் உறவுகள் கூட முடியுமா. புலவர்க்கரசரின் தமிழ்த்தொண்டிற்காகவே அவருடை உலகளாவிய தமிழ் உரைகளுக்காகவே நாமெல்லம் கூடி வாழ்த்துகிறொம் . பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பிலும்  புலவரின் இளைமைக்க்கால நண்பர் பெரும்புலவர் செந்தமிழ்ச்செழியானார் சார்பிலும் பொன்விழா இணையரை வாழ்த்துகிறேன்

  புலவர்க்கரசர் தம் வாழ்வை தமிழுக்காகா வாழ்ந்து ஆற்றியுள்ள சிறப்பை நம் மருத்துவர் பாரி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தமது மருத்துவ்ப் பணிகளுக்கிடையில் எண்ணற்ற் உலகக் குறிப்புகளையெல்லாம் வழங்கி நம்மை சிந்திக்க வைத்துள்ளார். படிக்கும் காலத்திலேயே மாணவர் மன்ற தமிழ்த் தேர்வுகளிலேயெ மிகச் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் வேலை தேடி சென்னை வரும்ப்பொது மாணவர் மன்ற ஆட்ட்சிக்குழு உறுப்பினராக இருந்த புலவர் கோ, வில்வபதி புலவர் தணிகை உலகநாதன் இந்து தியாலசிகள் பள்ளியில் இருந்தபோது இரவது தமிழ்ப்பற்றை அறிந்து இவருக்கு தமிழாசிரியராக நியமித்துள்ளனர். அதே பள்ளியில் தலைமையாசிரியர் வரை சென்று சிறந்த நன்மாணாக்கர்களை உருவாக்கிய பெருமைக்குரிய ஆசிரியப் பெருமகன் தம் துணைவியாரையும் தமிழாசிரியராக உருவாக்கி   அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர். இவர் தொடக்க காலத்திலிருந்தே இதழாசிரியர். புன்னகை என்ற இதழை நட த்திய பெருமைக்குரியவர். .

 இலக்கியச் சோலை இதழின் ஆசிரியர் தமிழினியன் தம் இதழில் ஒரு செய்திவெளிய்ட்டுள்ளார். பொன்னரசன் பொங்கல்  மூன்று நாள் பள்ளி வ்டுமுறையில் கர்நாடாககோலர் தங்கவயல் பகுதிக்கு பட்டிமன்றப் பேச்சுக்காக சென்றுள்ளார் இவர் பேச்சின் திறத்தை அறிந்த பேராயக் கட்சியின் வேட்பாளரான புலீந்த்திரன் தம் தேரதல் பரப்புரைக்காக 10 நாள் தங்கி பரப்புரைசெய்யுங்கள்  என வேண்டியுள்ளார். பொன்னரசன் பள்ளி வேலையை எண்ணி சொல்லாமல் இரவோடு இரவாக சென்னை திரும்ப்பிவிட்ட்டார். இவர் மட்டு ம் அன்று பேராயக் கட்ட்சியின் பிடியில் சிக்கியிருந்தால் ஒரு மத்திய மந்திரியாகவே வந்திருப்பார். மிக ஆற்றல் பொறுந்தியவர் நம் புலவர்க்கரசர்.

மின்வாரியத்தின் அதிகாரி சிறீதர் அவர்கள் மிகச் சிறந்த உரையாற்றியுள்ளார். எல்ல நிலைகளிலும்  தமிழ் வரவேண்டும் என்று போராடிகொண்டிருக்கும் வேலையில் தமிழைப் பட்டி மன்றப் பேச்சுகளால். எழுத்துக்களால் தகுதியான் தமிழை மாணவர்களுக்கு ஆசானாக இருந்து கற்பித்தலால் தம் வாழ்நாளை வழங்கிய பொன்விழாக் காணும் இணையரை வாழ்த்தி  மகிழ்கிறேன்.உங்கள் தொண்டு மென்மேலும் தொடரவேண்டும் பாவேந்தர் குடும்ப விளக்கின் பாட்டுபோல் ”அவள் இருக்கிறாள் என்பதே இன்பம் ” என்ற கவிதை வழி நூற்றாண்டு கண்டு  வாழ்க வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.

(26 -11-23 அன்று சென்னையில் புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

Friday, December 1, 2023

  •  உலக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார் சென்னையில் நினைவேந்தல்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்




தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானதை நம் சேது பாட்கரா குழுமத்தின் தலைவர் சேதுகுமணன அவர்கள் இந்து நாளிதழில் ஒரு இரங்கல் விளம்பரம் வெளியிட்டிருந்தார். இகேதா அவர்கள் மறைந்தை நன்றி உணர்ச்சியோடு இந்தியத் திருநாட்டில் வெளியிட்டது அவரது நன்றியுணர்ச்சியைக் காட்டுகிறது. பின் தந்தையார் இசுரேல் கவிஞருடன்   இருக்கும் பட த்தை எனக்கு புலனத்தில் அனுப்பி ஐயாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.  பின் என்னை தொலைபேசியில் அழைத்தர் குமணன். நான் இகேதா அவர்களுக்கு ஒரு நம் கவிஞர்களை அழைத்து நினைவேந்தல் நட த்த வேண்டுமே என்றேன். நான் நாளை சென்னை வருகிறேன் நட த்திவிடுவோம் என்றார். இன்று நாம் இகேதா நினைவைப் போற்றும் வகையில் கூடியுள்ளோம்.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 செய்நன்றி கொன்ற  மகற்கு

வள்ளுவப் பேராசான் கருத்துப்படி இன்று செய்நன்றியாக உலக் கவிஞருக்கு நினைவேந்தல் நட த்துகிறோம்.

இங்கு நாம் இகேதா என்ற கவிஞரை எண்ணுகிறோம் என்றால் அதற்கு மூல காரணம் கவிதை ஞாரி கிருட்டிணா சீனிவான். தமிழ்க் கவிஞர்களுக்கு உலகப் பார்வையை தொடக்கியவர் கவிதை ஞானி கிருட்டிணா சீனிவாசன். அவர் நட த்திய பொயட்ரி ஆங்கில மாதப் பத்திரிக்கை உலகப் புகழ் பெற்றது தாம் இறக்கும் வரை தொடர்ந்து நட த்தியவர். இகேதா அவர்களின் கவிதைகளை தொடர்ந்து பொயட்ரி ஆங்கில இதழில் வெளியிட்டு இந்திய மக்களுக்கு அறிமுகப் படுத்திய பெருமகன். இகேதாவின் கவிதைகளை மட்டுமே முழு இதழிலும் வெளியிட்டு பெருமை சேர்தவர். த்ந்தையார் பெருங்கவிக்கோவை 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற பெருமை  கவிதைஞானி கிருட்டிணா அவர்களையே சாரும். 1980ஆம் ஆண்டே அமெரிக்க கவிஞர் ரோசுமேரி வில்கின்சன் சான்று வழங்கி அழைத்தமை வரலாற்று நிகழ்வாகும். அந்த மாநாட்டில் 300 கவிஞர்களின் கவிதைகளை கவிதைஞானி மொழிப்யர்க்க நாங்கள் அதை  வெளியிட்டு அதை அமெரிக்கா மாநாட்டில் அறிஞர் அவ்வை நடராசன் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட து தமிழ்க் கவிஞர்களின் பெருமைக்குரிய நிகழ்வாகும். 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

குமணன் அவர்கள் சப்பான் மொழி ஆசிரியை கியோமி அவர்களின் எண்ணை கொடுத்டிருந்தார். நான் ஆங்கிலத்தில் பேசினேன் அவர் அழகு தமிழில் பேசினார் நான் அவரிடம் நினைவேந்தல் நிகழ்வில் தமிழில் பேசுங்கள் என்றேன் சிற்ப்பாக தமிழில் பேசினார். அவர் தமிழில் பேசுப்போது அழகாக மிளிர்கிறார்.  

டததைசாகு இகேடாஅ சனாவரி2 1928 ஆம் ஆண்டு  சப்பான் ஓட்டா  டோக்கியோ நக்ரில் எட்டுக்க் குழந்தைகளில் ஐந்தாம் மகனாகப்  பிறந்தார். நவம்பர் 15ஆம் நாள் 2023சின்சுக்கு டோக்கியோ நகரில் 15 நவம்பர் 2023 அன்று இறந்தார். தம் பெற்றோருக்கு  எட்டு மக்களில் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர். தம் 30ஆம் அகவையில் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிர் மீண்டு வந்தவர் உல்க நாடுகளின் பல்வேரு சிறப்பு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் இகேதா. தேசாய் இகேதா புத்த அருள்ஞானி. மனித குல அமைதிக்காகப் பாடுபட்டவர் சோகா அக்காய் அமைப்பின் மூன்றாம் தலைவர். உலக் சோகா அக்காய் அமைப்பி  நிறுவனத் தலைவர்.  1957ஆம் ஆண்டு 50.000 சோக்கா அக்காய்இளைஞர்களைத் திரட்டி மனித குல் அழிவிற்கான 

 அனுஅயுத்தை எதிர்த்துப் போராட்டம் நட த்தியுள்ளார்.தம் 32ஆம் வய்தில் அமைரிக்கா கண்டா பிரேசில் போன்ற நாடுகளுக்கு நிச்சிரன் புத்த மத கொள்கைகளுக்கும் உலக அமைதிக்கும் பயணம் மேற்கொண்டார். இவரது துணைவியார் கோனெக்கோ இகேடா இணையருக்கு மூன்று மக்கள். இவர் புகைப்படம் த த்துவம் கவிதை இசை என அனைத்துத் துறையிலும் நூல்கள் வெளியிட்டுள்ளார்.இகேதா கல்லூரியின் நூலகர் பேசும்போது இகேதாவின் நூல்கள் அனைத்தும் கல்லூரியில் உள்ளதை குறிப்பிட்டார். பேராசிரியர்கள் அனைவரும் இகேதா பற்றி கவிதை தம்ழிலும் ஆங்கிலத்திலுக் பாடினீர்கள். இறுதியாக வள்ளியம்மாள் கல்விக்  குழுமத்தின் தலைவர் குமணன் உரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கவிதையால் அனைத்தும் முடியும் என்பதை சேது குமணன் சாதித்துள்ளார். 

(உலகக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார்30 /11/2023 சென்னையில் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)