Monday, December 14, 2009

கடாரம் வென்ற சோழனின் கெடா பூசாங் பகுதியை வணங்கினோம்




கடாரம் வென்ற சோழனின் கெடா பூசாங் பகுதியை வணங்கினோம்
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு மலேசியாவில் மலயாப் பல்கலைக்கழக்த்தில் 25,26-9-2009ஆம் நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, இந்நூற்றாண்டிற்குத் தேவையான ஐந்து தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை வழங்கினர்.மாநட்டிற்குப் பிறகு செப்டம்பர் 28ஆம் நாள் தமிழகதிலிருந்து வருகை தந்த பெருமக்கள் பினாங்கு கெடா நோக்கிப் பயணமானோம். முன்னாள் செனனைமாநகரத் தந்தை சா.கணேசன், தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், திருச்சி அறந்தை திருமாறன்,மற்றும் 45 பெருமக்கள் அனைவரும் பெருந்தில் பண்மானோம். பேருந்தில் அருட்பா பாடகி அன்னபூரணி, தமிழிசைமாமணி தி.க.ச.கலைவாணன், திருக்குறள் கோ.பா.செல்லம்மாள், திருவேஙகடவன் பலக்லைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் மனுவல் ஆகியோர் தஙகள் இனிய குரலால் பாடி மகிழ்வித்தனர். நமது நிறுவனர் பெருஙகவிக்கோ பாவேந்தரின் பாடலைப் பாடி மகிழ்வித்தவாறு யாங்கள் பேருந்தில் பயணித்தோம். நமது மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாகடர்.சி.தருமலிஙகம் மலேசியத் தமிழர்கள் பற்றியும் மலேசிய நாட்டைப் பற்றியும் விவரித்தார்.ஆங்காங்கே யான் என் கருத்துக்களைக் அறிஞர்களுக்குக் கூறி தமிழுறவுப் பயணம் பினாங்கு கெடா நோக்கி பயணமானது.

பினாங்கில் 27 இரவு பினாங்கு மாநில துணைமுதல்வர் பேராசிரியர் இரா. இராமசாமி அவர்களுடன் கலந்துரையாடலை முடித்து சிறப்பான விருந்தும் அளித்தனர். 28ஆம் நாள் காலை யாங்கள் கெடாநோக்கிப் பயணமானோம்..வந்திருந்த அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் இராசேந்திர சோழன் வென்ற கடாரப் பகுதியைக் காணப்போகிறோம் என்ற ஆவல் மீக்கெழுந்து இருந்தது. அனவரும் பேருந்தில் சுங்கைப் பட்டானியைக் கடந்து கெடா பகுதியை அடைந்தோம். அறிஞர் பெருமக்கள் அனைவரும் இராசேந்திர சோழன் காலடி பட்ட மண்ணை வணங்கினர்.

லெம்பாங் பூசாங் பள்ளத்தாக்கில் உள்ள அக்ழ்வாராய்சி அரங்கைக் கண்டு வியந்தோம்.கெடாமாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வஉருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர்.1500ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.

யாங்கள் அனைவரும் அருங்காட்சியகத்தைக் கண்டோம். சிவன்,, வினாயகர், துர்ககை சிதைந்த நிலையில் பார்வைக்கு வைத்துள்ளனர். தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் காணமுடிந்தது. பெருமக்கள் அனைவரும் தங்களின் ஒளிப்படக் கருவியில் பட்மெடுத்தவண்ணம் இருந்தனர். எங்களுடைய குழுவில் வருகைதந்த கட்டிடக் கலைஞர் தமிழ்வள்ளல் சந்திரசேகரும் அவரது துணைவியார் மாலதியும் ஆர்வத்தோடு அனைத்தையும் கண்டு படமெடுத்தனர். திருமதி மாலதி ச்ந்திரசேகர் எல்லோரிடமும் அன்பும் பரிவும் காட்டிய பாங்கைக் கண்டபோது வியப்பு மேலோங்கியது. சந்திரசேகர் அவர்கள் இல்லத்தில்க தம் மனைவியை பாட்டாளி என அழைப்பதின் ஆழம் புரிந்த்து.தலைசிறந்த கவிஞர் முனைவர் சவகர்லால் தன் துணைவியரோடு கண்டு குறிப்பெடுத்தார்.

செம்மொழிவாரியத்தின் அலுவலராகப் பணியாற்றும் கோ.புண்ணியமூர்த்தி மிகச்சிறந்த ஆராய்சிக் கட்டுரையை மலருக்கு வழங்கியுள்ளார். அவர் அனைத்துத் தகவல்களையும் ஆர்வத்தோடு பதிவுசெய்தவண்ணமிருந்தனர். நகர்ப்புற வடிவமைப்பின் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானநவனீதன் ஆர்வத்தோடும் வியப்போடும் கண்டு குறிப்பெடுத்தார்.கவிச்சிங்கம் கண்மதியன் தன் 85 வயது தாயோடு கண்டது எமக்குப் பெரு மகிழ்வைத் தந்தது.

அருங்காட்சியகத்தைக் கடந்து மலைமேல் சென்று கண்டோம். இந்துக் கோயிலின் வடிவமைப்பு அங்கே உள்ளது..கருங்கற்கலாளான சுற்றுச்சுவரும் மேற்பகுதியில் கருவரையும் உள்ளன. குறிப்புப்பலகையில் 11ஆம் நூற்றாண்டின் கோயில் என குறிப்பிட்டுள்ளனர் தஞ்சைப் பெரிய கோயில் காலமும் ஆயிரம் காலப் பழமையானது. அதை நாம் பாதுகாத்துவருவதால் இராசராசனின் பெயர் இன்றும் நிலை பெற்றுள்ளது. பன்னெடுங்காலம் கழித்து இங்கே கண்பிடித்தமையால் முழுமையாக இல்லாமல் உள்ளதை உணரலாம். தமிழகக் கோயில்களில் நாம் பயன்படுத்தும் கற்கலாளான உடைந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அங்கு காணமுடிகிறது.

யாங்கள் பெருந்தில் பயணித்தபோது சாலையின் இரு புறங்களிலும் நெல்வயல்கள் பச்சை வண்ணத்தில் காட்சியளித்தன.தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம் அதைப்போன்றே கெடா மாநிலமும் காட்சி தந்தன.எம்மோடு வந்த மறக்குணத்து பிரபாகரன் இராசேந்திர சோழன் காலத்தில் வந்தவர்கள் இங்கு விவசாயம் செய்திருக்கின்றனர் என்ற செய்தியையும் தெருவித்தார். திருக்குறள் தொண்டில் தன் வாழ் நாளையே ஒப்புவித்த வேங்கடேசனும் தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் தேவராசும் ,ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சிவருவாய்த்துறை அதிகாரி சி.முனிசாமியும் எவ்வித களைப்பும் இன்றி மலையின் உச்சி வரை எம்மோடு வந்தனர். மலையின் முன்பகுதி கடல்வெளி இந்தக் கடல் வழிதான் சோழர்கள் கடாரத்தை வென்றுள்ளனர்.

சோழம்ன்னர்கள் கெடாவையும்,சயாமையும் ஆண்ட செய்தியும்,முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட குறிப்பும், சோழன் கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட வரலாறும் நம் பழம்பெரும் இலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் உணரமுடிகிறது..

மாநாட்டிற்கு வருகைதந்த பெருமக்களெல்லாம் ஆய்ந்தறிந்த அறிஞர்கள். அச் சான்றோர் பெருமக்களை இஙுகு அழைத்துவந்ததன் நோக்கம் இன்னும் வரலாற்றுப் பதிவுகளை பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலே ஆகும். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் நடத்திய ஆறு மாநாடுகளில் மூன்று செர்மனி,தாய்லாந்து,தற்போது மலேசியாவிலும் நடத்தியுள்ளது.அனைத்தும் தமிழுறவை இருகப் பிணைக்கும் மாநாடுகளாகும்.கங்கை கொண்டான் கடாரம் வென்றான் எனற பழம்பெரும் தமிழர்கள் பெருமையை 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு உணர்த்தியுள்ளது.

.