Monday, December 31, 2012

80ஆம் அகவை காணும் பெரியாரின் பேரறம் தமிழர் தலைவர் வீரமணி நீடு வாழ்க!



கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


காத்தடும் தமிழர் நாட்டில்
    கயமையை துறத்தி மாய்த்து
சாத்திரம் சடங்கு நோயை
    சலிக்காமல் மிரட்டி ஓட்டும்
பாத்திறத் தந்தை எங்கள்
    பெரியாரின் தொண்டைப் பற்றி
பூத்திடும் ஒதுக்கீடு மேன்மைப்
    பேறுவீர மணியே வாழ்க!

சிறுவனாய் வளரும் போதே
    சேரிடம் சேர்ந்த செம்மல்
மருவிலா சேவை காக்கும்
    மாண்புறு தமிழர் தலைவர்
பெரியாரின் வடிவாய் இன்றும்
    புகழேணி தாங்கும் நெஞ்சம்
வறியவர் வாழ்வு ஓங்க
    வாழும்வீர மணியே வாழ்க!

உலகினில் பறந்து சுற்றி
    ஒப்பிலா பெரியார் கொள்கை
பலமோடு பரப்பி எங்கும்
    பகுத்தறிவு ஓங்கச் செய்தார்
தலைநகர் தில்லி இன்று
    தந்தையின் கொள்கை செப்பும்
கலைஉயர் கோட்டம் கண்ட
    கோவீர மணியே வாழ்க!

சாதியால் தமிழன் சாகும்
    சதியினைப் போக்க இன்றும்
மதிஉயர் கலப்பு மணமாம்
    மாப்புரட்சி காணும் செம்மல்
விதியிலா நம்மின் பெண்கள்
    வித்தக் கல்வி தந்தார்
நிதியிலாப் பிஞ்சைக் காக்கும்
    நிலைவீர மணியே வாழ்க!

நதியினில் தவழும் நீராய்
    நற்றமிழ் மேடைப் பேச்சு
விதிமூடம் மடமை சாய்க்கும்
    சாடலில் அருவி வேகம்
மதிநல அறிவின் ஊற்றாம்
    மாத்தமிழ் நூல்கள் கற்றோன்
கதியிலா நம்மொர் காக்கும்
    களம்வீர மணியே வாழ்க!

ஈழத்துத் தமிழர் வாழ்வில்
    இனமான உணர்வைக் கூட்டி
வேழம்நம் கலைஞர் எண்ணம்
    வேதனை போக்கும் தீரர்
காலத்தின் கொடையாம் டெசோ
    கண்டனக் கணைகள் சேர்த்து
ஓலத்தின்  தீர்க்கும் வீர
    ஓய்விலா  மணியே வாழ்க!

பகுத்தறிவு இதழ்கள் எல்லாம்
    பாரினில் வழங்கும் சான்றோன்
வகுத்தநல் விடுதலை இன்றும்
    வியத்தகு கொள்கைக் குன்றம்
தகுதியாய் மன்றம் கூட்டும்
    தக்கநல் இராதா கூடம்
மிகுதியால் அறிவுக் கோட்டம்
    மீட்டிடும் நூலகம் கண்டார்!

கழகத்தின் இரும்புக் கோட்டை
    கற்பகத் தறுவே வாழ்க!
போலிமை என்றும் போக்கும்
    பொன்னொளிர் தலைவா வாழ்க!
எண்பதைக் கடந்து இன்றும்
    எழுச்சியின் வடிவே வாழ்க!
மாணுடம் காக்கும் பண்பே
    மாசறு தொண்டே வாழ்க!

Sunday, December 30, 2012

சென்னை இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை


(சென்னை இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெற்ற 381 ஆம் விழாவில் முகம் மாமணி தலைமையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்      ஆற்றிய உரை)

இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெறும் இவ் விழாவிற்கு தலைமை தாங்கும் மூத்த இதழ் ஆசிரியர்  தந்தை பெரியாரின் வழியில் பெரியாரின் சிந்தனைகளை தமிழ் உலகிற்கு அளித்தும், கிந்தனாராக முகம் இதழில் நடுநிலையான பதில்களை வழங்கிவரும் முகம் மாமணி அவர்களே, நிகழ்ச்சிகளை அரும்பாடுபட்டு தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திவரும் முனைவர் பிரபாகரன் அவர்களே, முகத்தின் சிறப்பாசிரியரும் நமக்கு மக்காவ் பயணம் மாதந்தோறும் அழைத்துச் செல்லும் பாரதிதாசனை என்றும் மறவாத பாவேந்தர் மரபு வழிப்பாவலர் இளமாறன் அவர்களே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய பாவேந்தர் இன்னிசைமணி சித்த்ராமணி அவர்களே குறுந்தொகைப் பாடலை விளக்கத்தோடு வழங்கிய நக்கீரன் அவர்களே வருகை தந்துள்ள ஆசிரியர் இராசசேகரன், திருக்குறள் வீராசாமி, திருக்குறள் கவிஞர் பத்மநாபன், வனத்துறையில் பணியாற்றி சிறந்த இலககிய ஒருங்கிணைப்பாளராக செயலாற்றும் கவிஞர் இராமச்சந்திரன் கவிச்சித்தர் பூவை அமுதன் போன்ற பெருமக்களே சான்றோர் பெருமக்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

    அருமை நண்பர் பிரபாகரன் அவர்கள் வெளிநாடுகளில் தமிழர்களின் வாழ்வும் வளமும் பற்றிப் பேசுங்கள் எனக் கூறினார். உண்மையிலேயே தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர். தமிழர்கள் வாழ்வை தங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    மியான்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் நம் தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர். அங்குள்ள கோயில்களெல்லாம் புதுப்பிக்கப்பட்டு எழிலார்ந்த நிலையில் உள்ளது.அங்குள்ள ஒரு கோவிந்தராசப் பெருமாள் கோயிலைப் புதுப்பிக்க ஒரு தமிழர் 5கோடி பர்மீயப் பணம் வழங்கியுள்ளார் என்றால் தமிழர்களின்வாழ்கை நிலையை எண்ணிப் பாருங்கள். தட்டோன் என்ற பகுதியில் வள்ளுவர் கோட்டம் கட்டி திருவள்ளுவருக்கு தினமும் திருக்குறள் ஓதி வழிபடுகின்றனர். பழைய இரும்பு விற்னை செயும் அங்காடி 60% விழுக்காடு தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய இரும்பு என்றால் ஃபொர்டு, பென்சு போன்ற கார்களின் இன்சின்களையே விற்பனை செய்யும் நிலையில் உள்ளனர்.

    தாய்லாந்தின் பாங்காக் நகர் சென்றோமானால் நம் இசுலாமியத் தமிழர்கள் கல் வணிகத்தில் மிகச் சிறந்து விளங்குகின்றனர், அயூப், குமாயூன். இலியாசு, போன்ற பெருமக்கள் உலகம் முழுதும் கல்வணீகம் சிறப்பாகச் செய்கின்றனர். அங்கு மாரியம்மன் கோயில் என்ற கோயில் பாங்காக்கின் முக்கிய வீதியில் உள்ளது. பாங்க்காக்கில்தான் நாங்கள் 1999ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாட்டை நடத்தினோம். இந்த இசுலாமியப் பெருமக்களெல்லாம் பேருதவி புரிந்தனர். தாய்லாந்தில் அரசர் பதிவி ஏற்கும்போது நம் திருப்பாவை திர்வெம்பாவை பாடுகின்றனர்.

    சிங்கப்பூர் தமிழுக்கும் தமிழருக்கும் முறையான அங்கீகாரம் கொடுத்துள்ள நாடு. தமிழர்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். சாலைகள், தொடர் வண்டிகள் எங்கும் தமிழ் முழக்கம் உள்ளது, ஆட்சி அமைப்பிலும் முறையான பங்களிப்பு உண்டு. மூத்த அமைச்சர் லீகுவான்யூ அவர்கள் சிங்கப்பூர் முன்னேற்றத்தில் தமிழர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்த பெருமகன்.

    மலேசியத் தமிழர்கள் வளமாக உள்ள நாடு. பேரறிஞர்அண்ணா அவர்கள் மலேசியாவிலதான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றார். இன்றும் அது உண்மைஎன அறியலாம். தமிழ்ப் பள்ளிகள், தமிழ் இதழ்கள் உணவகங்கள் என அனைத்துதுறையிலும் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர். மலேசியாவில் ம.இ.கா. என்ற நம் அமைப்பு அம்னோவுடன் சேர்ந்து தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர் மலேசியாவின் நீண்டகால அமைசர்ராக இருந்த பெருமை டத்தோ சாமிவேலு. அவர்காலத்தில்தான் மலேசியா முழுமையும் 6 வழிச் சாலைகள் மிகப் பெரும்புரட்சியை உருவாக்கினார். உலகின் மிக உயர்ந்த இரட்டை கோபுரத்தை கட்டியவர் அனந்த கிருட்டிணன் என்ற தமிழர். இன்று மிகச் சிறப்பாக ஒடும் ஏர் ஆசியா வானூர்தியின் உரிமையாளாரும் தமிழரே. மலெசியாவில் 2009 ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தி 6ஆம் மாநாட்டை நடத்தினோம். ,மலேசியத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பதிவாகும்

    அமெரிக்காவில் தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர், கணினித் துறையில் அமெரிக்கர்களை விட நம் இந்தியர்களே மிகச் சிறந்த ஊதியத்தைப் பெறுகின்றனர். தமிழகத்து நகரங்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அனைத்து மாகானங்களிலும் தமிழ் சங்கங்கள் உள்ளன. ஆண்டு தோரும் அமெரிக்கா கூட்டுத் தமிழ்ச் சங்கத்தினர் ஃபெட்னா என்ற அமைப்பின் மூலம் மாநாடுகள் நடத்துகின்றனர்.

    கனடா ஈழத்தில் நடைபெறும் கொடூரத்தால் புலம் பெயர்ந்த மக்கள். தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றி பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்கும் அளவிற்கு தமிழர்கள் முன்னேறிஉள்ளனர். மாநாடுகள், நாட்டிய, இசை, அரங்கேற்றங்கள் என தமிழ்ப் பண்பாட்டு மையமாக கனடா இன்றும் உள்ளது. ஈழத்தில் உள்ள கோயில்களேல்லாம் இன்று கனடாவில் கட்டப்பட்டு ஆன்மீகப் பணியிலும் தொய்வில்லாமல்.ஆனால் பேரியாரின் தாக்கங்களைக் காண இயலவில்லை.
    ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஈழத்தமிழர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி வாழ்கின்றனர். அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றனர். தொலைக் காட்சிகள் வானொலிகள், உணவகங்கள், கடைகள், இதழ்கள் என அனைத்துத்துறையிலும் முன்னணியில் உள்ளனர். ஐரோப்பியன் நாடுகளிலும் நம் ஈழத் தமிழர்கள் கோயில்கள் கட்டி ஆன்மீகத் தொண்டை எங்கும் தொடர்கின்றனர். 1993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் மூன்றாம் மாநாட்டை நடத்தினோம்.

    ஈழத்துப் போராட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் உழைத்த செல்வங்களை எல்லாம் அளித்து போராட்டத் தளபதிகளாக வாழ்ந்துள்ளனர். காலம் கருதி ஒரே ஒரு அனுபவத்தை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யான் இலண்டனை விட்டு புறப்படும்போது திருமதி தயாபரி கருணானந்த ராசா அவர்கள் பணிக்குச் செல்வதால்  டேவிட் என்ற வாடகை ஊர்தி ஓட்டுநர் எண்ணைக் கொடுத்து அவர் வழி வானூர்திநிலையம் செல்லப் பணித்தார்.டே விட்டுடன் தொடர்ப்பு கொண்டுஇலண்டனில் வானூர்தி நிலையம் செல்வதற்கு ஒரு வாடகை ஊர்தியில் பயணித்தேன். டேவிட் என்ற ஈழ ஒட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.யான் தமிழராய் உள்ளதால் பேச்சைத் தொடங்கினேன். அவர்கோபத்துடன் என்னுடன் பேசுவதற்கு விருப்பிமின்மையாக இருந்தார். மிகவும் முயன்று பேச்சுக் கொடுத்து வந்தேன். அவர் கூறினார் இந்தியத் தமிழர்களே மோசம் எனக் கூறினார். நான் அப்படிக் கூறக் கூடாது அங்கு தங்களுக்காக போராடுபவர்கள் பலர் உள்ளனர். ஈழத் தமிழர்க்காக நாம் நடத்திய போராட்டங்களைக் கூறினேன். அவர் தன்னுடைய ஈழ மண்ணில் இந்திய அமைதிப் படை சென்றபோது ஒருதமிழ்வீரர் தம்மை வேகமாக திட்டி அடித்ததில் மயக்கமடைந்ததாகவும் பின் அதே வீரர் இல்லம் வந்து நான் அடிக்காமல் இருந்தால் உன்னை சுட்டிருப்பார்கள் என்னை மண்ணித்துவிடு என்று கூறியதைக் கூறினார். அன்று தப்பித்து இன்று இங்கு உள்ளேன் என்றார். எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு இராணுவ வீரருக்கு உள்ள தமிழ் உணர்வைப் பார்த்தீர்களா டேவிட் என்று கூறினேன்.எங்கிருந்தாலும் தமிழர்கள் உணர்வுகள் உங்களைச் சுற்றியே இருக்கும் எனக் கூறினேன்.வானூர்தி நிலையம் வந்தது கட்டணம் வாங்க மறுத்து என் பெட்டிகளை அவரே கொண்டு வந்து வழியணுப்பினார். ஆனால் இன்று ஏற்பட்ட கோடுரங்களையும்க ண்டு இந்திய அரசின் பாரா முகமும் அவரது கோபம் நியாயாமனதுதான் என்று எண்ணி இன்று நோகிறேன். ஈழ மக்களுக்கு நாம் ஒரு நிலையான தீர்வைக் காணவேண்டும்
.
    நிகழ்ச்சியை நடத்திய பெருமக்களுக்கும் வருகைதந்த பெருமக்களுக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்,


Friday, December 28, 2012

மலேசியா கோலாலம்பூரில் மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய கற்றனைத்து ஊறும் நூல் அறிமுக விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


(1-8-2012 அன்றுமலேசியா கோலாலம்பூரில் செந்தூல் கறி உணவகத்தில் மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய கற்றனைத்து ஊறும் நூல் அறிமுக விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியம் அவர்களே எங்களின் அன்புச் சகோதரர் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டை சிறப்புடன் நடத்திய மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியச் செயலாளர் டாக்டர் சி. தருமலிங்கம் அவர்களே. பொருளாலர் திருக்குறள் பெருமாள் அவர்களே கெடா மாநிலத்தில் சோழன் கால் பதித்த வரலாற்றை உலகெங்கும்  உணர்த்திய அருமை எழுத்தாளார் பெருந்தகை சந்திரகாந்தன் அவர்களே, கற்றனைத்து ஊறும் நூலை மிகச் சிறப்பாக ஆய்வு செய்த புலவர் பெருந்தகை தொல்காப்பியத்திற்கு அகராதி வழங்கிய ஐயா புலவர் முருகையன் அவர்களே, அருமை நண்பர் பாரதிதான் அவர்களே இளங்கோ அவர்களே எங்களின் தமிழ்த் தொண்டிற்கு என்றும் எம்மைத் தாங்கும் மலேசியத் தமிழ் நெஞசங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

    மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவையின் சார்பில் இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளீர்கள். மலேசியாவிலுள்ள அமைப்புகளெல்லம் இணைந்த ஒருங்கிணைப்பு அவசியமான ஒன்றாகும். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் வேட்கையும் இதுவே

    என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்
    இறுது எமக்கு வாராது
    என்றன் மொழி உலகாள வைக்காமல்
    என்றன் உயிரோ போகாது
    என்று பாடிய பாடிய பாடலே

எங்களது வாழ்க்கையாக உள்ளது.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டை அருமை அண்ணன் தருமலிங்கம் அவர்கள் போறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தினார்கள். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்கள் அனைவரையும் கெடா மாநிலத்திலுள்ள பூசாங்க் பள்ளத்தாகிற்கு அழைத்துச் சென்றோம். சோழன் காலடி பதித்த லெம்பாங் பூசாங் பள்ளத்தாக்கில் உள்ள அக்ழ்வாராய்சி அரங்கைக் கண்டு வியந்தோம்.கெடாமாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வஉருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர்.1500ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதசச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

    நான் இப்போது குறிப்பிட்ட செய்திகளையெல்லாம் இந்த உலகுக்கு உணர்த்திய பெருமை இதோ நம் எதிரில் அடக்கத்தின் உருவமாக அமர்ந்துள்ளாரே எழுர்தாளர் சந்திரகாந்தம் அவர்களையே சாரும்
.
    இந்தப் பெருமைக்குரிய தமிழினம், ஒருன்கிணைவு இல்லாத காரணத்தாலேயே மிகப் பெரும் வீழ்ச்சிகளைக் கண்டோம். இதைஎல்லாம் போக்கும் வண்ணம் இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை செயல்படுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    மலேசிய நாடு செழிப்பான நாடு. மலேசியத் தமிழர்கள் உள்ளத்தால் உயர்ந்த பெருமக்கள். அறிஞர் அண்ணா அவர்கள் மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கூறி மலேசியத் தமிழர்களின் பெருமையை அன்றே நிலைநாட்டியுள்ளார்.

    மலேசியா இயக்கங்கள் மட்டுமல்ல உலகத் தமிழ் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று கூடி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வெற்றிபெறுவோம்

    பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் வருகைதந்துள்ள மகளிர் மாமணி பொன். இலட்சுமி அவர்கட்கும் மற்றும் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். நன்றி. வணக்கம்.

Wednesday, December 26, 2012

பெங்களூரு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் உரை



(பெங்களூருவில் 27-8-2012 அன்று   உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்  ஆற்றிய பாராட்டுரை)

பெங்களூரு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பெங்களூருவில் பங்கேற்பதை பெரும் பேறாகக் கருதுகிறேன். நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கும் கவிஞர் இந்திய் ஆட்சித் துறையில் மிகப் பெரும் பொறுப்புக்களையெல்லாம் வகித்த ஐயா பெருமாள், அவர்களே நன்றிக்கு இலக்கணமாக வாழும் இரட்டையர்கள்வெற்றிவீரன், சுந்தரரவேல் அவர்களே தமிழ் நாட்டிலிர்ந்து வருகை தந்திருக்கும் உலகப் பதிப்பாளர் லேனா தமிழ்வாணன் அவர்களே மிகச் சிறந்த அரங்கில் கூடியிருக்கும் பெங்களூர்  வாழ் தமிழ் நெஞசங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்

    பாராட்டுப் பெறும் உலகத்த்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் கனடா வேலுப்பிள்ளை, செயலாளார் நாயகம் செருமனி  துரை கணேசலிங்கம். பொருளாளர் பிரான்சு செல்வராசு தென் ஆப்ரிக்காத்தலைவர் மிகிசெட்டி செயலர் மேசுத்திரி, பாரிசு நிலா, திருமதி செலவராசா, இயத்தின் தூணாகவும் ஊடகத்துறை பொறுப்பாளாரகவ்வும் பொறுப்பேற்றுள்ள உதயன் ஆசிரியர் யோகேந்திர லிங்கம் உலகக கல்வி மாநாட்டின் தலைவர் கனடா துரைராச, திருமதி துரைராசா மற்றும் பங்கேற்றுள்ள அயல் நாட்டுப் பேராளர்களே உங்களைப் பாராட்டுவது உலகத்தமிழரைப் பாராட்டுவதற்கு ஒப்பாகும்.

    பண்பாட்டு இயக்கத்தின்பெங்கள்ளூர் கி    ளைத் தலைவர் பக்கதவக்சலம் மிகசிறந்த செயல்வீர்ராக உள்ளார், வந்துள்ள அனைவரையும் மைசூர் பிருந்தாவன் என அனைத்து ப்குதிகளுக்கும் அழைத்துச் சென்று மிகச்சிறந்த விருந்தோம்ம்பலை புலப்படுதியுள்ளார். பெங்களூர் போறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

    நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இங்கு செல்லக் கூடாது எனச் சிலர் கூறினர். ஐயா மிக்கி செட்டி அவர்களும் தயங்க்கினார். நான்
உங்களின் உன்னதமான் அன்பழைப்பை ஏற்க வேண்டு என்றேன். மிக்கிசெட்டி அவர்கள் இங்கே குழுவோடு வருகை தந்துள்ளார்கல் பெருமகனாருக்கு
தலைதாழ்ந்த நன்ற்யை உரித்தாக்குகிறேன்.

    யாங்கள் ஆங்காங்கே சென்றுகொண்டிருந்தபோது அருமை பாரிசு செல்வாராசா அவர்கள் தம் தொபேபேசியில் பிரான்சில் அவர் நடத்தும்
வானொலிய்ல்யில் எங்களைப் பேட்டி கண்டு ஒலிபரப்பிக் கொண்டுவந்தார். பெங்களூர் தமிழ்ப் பெருமக்களின் கருத்துக்களெல்லாம் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது.செல்வாராசாவின் அற்புதத் தமிழ்த் தொண்டைப் பாரட்டுகிறேன்.

    கண்டாவில் அரியதொரு தொண்டாற்றும் உதயன் யோகேந்திரலிங்கம். கனடாவில் தின்மும் நடைபெறும் விழாக்களின் கதாநாயகராக விளங்குபவர். நமக்கும் கனடாவாழ் தமிழருக்கும் தன் உதயன் இதழ் மூலம் பாலமாக விளங்குபவர். பெருமகனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    ஐயா மிக்கிசெட்டி அவர்கள் தமிழாசிரியர்கள் தென் ஆப்ரிக்காவிற்கு வேண்டும் என்று கூறியுள்ளார் நாமெல்லாம் இணைந்து அவர்களின் தெவையைநிறைவு செய்வோம். தமிழ் உணர்வோடு ஒருகுழுவையே கூட்டி அவர்களது தமிழ் உணர்வை நிலைநாட்டியுள்ள பெருமனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    ஈழத் தமிழர்களின் தாங்கள் அளித்துவரும் உணர்வு உலகறிந்த்து. ஈழத்து மக்களுக்கு ஒரு விடிவுக்கு நாம் என்றும் போராடுவோம்

    அயலகத்திலிருந்து வருகை தந்துள்ளா உங்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன். நன்றி வணக்கம்

Tuesday, December 25, 2012

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க உலகக் கல்வி மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை


( சென்னையில் ஆகஃசுடு 25,26- 2012 நாட்களில் நடைபெற்ற  உலகப் பண்பாட்டு இயக்கத்தின் உலகக் கல்வி மாநாட்டில் பங்கேற்று கவிமுரசு வா..மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை )

    உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகக் கல்வி மாநாட்டை கண்டாவிலிர்ந்து இங்கு வந்து மிகசிறப்பாகநடத்தும் துரைராசா அவர்களையும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை.  கணேசலிங்கம் அவர்களையும் பாரிசுலிருந்து வந்துள்ள பொருளாளர் செல்வராசா அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஒரு ,மிகச் சிறந்த இயக்கம் உலகம் முழுமையும் நம் உணர்வுள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற இயக்கம். உலக நாடுகல் முழுமையும் அனைத்து நாட்டுத் தமிழர்களும் அந்தந்த நாடுகளில் கிளைகள் அமைத்து மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.

 இங்கே பாருங்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தி தென் ஆப்ரிக்காத் தலைவர்  மிக்கிசெட்டி அவர்கள் ஒரு பெருங்குழுவோடு இங்கே வந்திருர்கிறார்காள். எங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்  தேவை எனக் குறிபிட்டார்கள். இந்தியஅரசே இதைச் செய்யவேண்டும் அலல்து தமிழக அரசாவது செய்யவேண்டும்,

தென் ஆப்ரிக்கா மட்டுமல்லா ம்லேசியா சிங்கப்பூர் தவிர்த்த அதைதுப் நாடுகளிலும் இந்த அவலம் உள்ளாது. யாங்கள் பன்னாட்டுத்  தமிழுறவ மன்றத்தின் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவின்  அயரா முயற்சியால்ல் ஆறு மாநாடுகள் நடத்தியுள்ளோம்.மூன்று மாநாடுகள் வெளிநாடுகளில் நடத்தியுள்ளதால் இந்த அவலத்தை
உணர முடிகிறது.அருமை வழ்க்கறிஞர் காந்தி அவர்கள் இங்கே இருகிறார்கள். அரசே தேவையில்லை நாமெல்லாம் ஒன்று கூடினால் இந்த அவலத்தைப் போக்க முடியும்.

   
உலகத் தமிழ்ப் பாட்டு இயக்கதின் முதல் மாநாட்டை  சென்னையில்தான் தலைவர் இரா.ந.வீரப்பன்,  தந்தையார் பெர்ருங்கவிக்கோஎழுகதிர் அருகோ இணைந்து நடத்தியது என் மனக் கண்முன் நிழாழாடுகிறது. தமிழ்ப்பணியின் சார்பில் ஒரு அரிய மலர் வெளியிடோம். இந்தப் பண்பாட்டு இயக்க புதுச்சேரி மாநாட்டை நாங்கள்தன் அரும்பாடுபட்டு நடத்தினோம். மலேசியாவில்  ப;கு.சண்முகம்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு இங்கிருந்து என்னுடையா தலைமையில் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்த்தோம். ஆனால் பங்கேற்ற பெருமக்களெல்ல ஒருங்கிணைய வழியில்லாமல் இம்மாநாடு நடைபெறுகிறது. தடி எடுத்தவரகள்  தண்டல்காரர்கள் போல் அல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மன முதிர்ச்சியை நாம் பெற வேண்டும்.

    அண்ணன் கனடா யோகேந்திரலிங்கம் அவர்கள் இப் பண்பாட்டு இயக்ககதிற்கு வழ்ங்கியுள்ள பங்க்ளிப்புகள் எண்ணிப் போற்றத்தக்கது.
  அரசுகளை நம்பாமல் இயக்கவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழாசிரியர்களை தேவையான நாடுகளுக்கு அனுப்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

         வெளிநாட்டுத் தமிழர்களுக்கு ஒருபாட திட்டத்தை உருவாக்கி நம் பல்கலைக் கழகங்கங்களோடு ஒருங்கிணைத்து வெற்றி பெறவேண்டும். ஐயா துரைராசா அவர்கள் டொரோண்டோவில் கல்லூரி அமைத்துள்ளார்கள். ஆயிரக் கணக்காண மாணவர்கள் பயில்கிறார்கள். இங்கு திருநெல்வேலி மனோன்மணியும் சுந்த்ரனார் பல்கலைக் கழத்தின் வழி பட்டம் பெற்றுத் தருகிறார்கள். இந்த வழிகளை உலகத் தமிழர்கள் பின் பற்றவேண்டும்


நாம் அனைவரு ஒருங்கிணைந்து உலகத் தமிழர்களின்இன்னல்களைக் கலைவோம் என்ற உறுதி மொழி ஏற்போம் நன்றி வணக்கம்.

தமிழாகரர் பேராசிரியர் ஆறு. அழகப்பனார் பவள விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்மாமணி பட்டம்



சென்னையில் தமிழாகரர் பேராசிரியர் ஆறு. அழகப்பனார் பவள விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்மாமணி  பட்டம் தமிழக ப.ச.க. தலைவர் பொற்றாமரை இல. கணேசன் தலைமையில் பெருங்கவிக்கோ முன்னிலையில் முன்னாள் துணைவேந்தர்கள் முனைவர் க.ப. அறவாணன், முனைவர் பொற்கோ வழங்கினர்.

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் தமிழ்ப்பணி இதழின் அரிய சேவையையும், உலகளாவிய தமிழ்த் தொண்டையும்., உரைவீச்சையும் பாராட்டி தமிழ்மாமணி பட்டம், வழங்கப் பட்டது.

 இவவிழாவில் அறிஞர் பெருமக்கள் தமிழ்மாமணி பட்டம் பெற்றனர். எழுகதிர் அரு.கோபாலன், கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன்
கண்ணியம் குலோத்துங்கன், தென்மொழி பூங்குன்றன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் கடவூர் மணிமாறன், முகம் மாமணி உள்ளிட்ட பெருமக்கள் சிறப்பிக்கப் பட்டனர்.

Wednesday, December 12, 2012

அன்னை சேதுமதியின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா





அன்னை சேதுமதியின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2012 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.   அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருகுறள் நாவை சிவம், புலவர் தமிழாளன்,திருச்சி நாகராசன்,இதழ்மாமணி பட்டாபிராமன்,செந்தமிழ்விரும்பி பார்த்தசாரதி செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் சிந்தை கோ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம்  குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார். கிராம மக்கள் அனைவருக்கும் ஆண்டநாயகபுரம் மடத்தில் உணவு வழங்கப்பட்டது. திரு பால் செந்தில்  அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட  ஏற்பாடு செய்திருந்தார்.

           05=11-2012 அன்று மாலை ஆண்டநாயகபுரம் முத்து இராமயி இல்லத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது.

           11-11-2012 அன்று அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முனைவர் அவ்வை நடராசன் தலைமையேற்று கவிச்சிங்கம் கண்மதியன், செந்தமிழ்முரசு செந்தமிழ் விரும்பி ஆகியோர்க்கு தலா ரூ.10,000 பொற்கிழி வழங்கினார்.செம்மொழி மத்திய நிறுன இராமசாம், முனைவர் மறைமலை இலக்குவனார், கவிக்கொண்டல் செங்குட்டுவன், வாழ்த்த்ரை வழங்கினர்.

        தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாறினார். முனைவர் ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார். நிறைவாக பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நன்றி பாராட்டினார். அனைவருக்கும் சரவண்பவண் உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது.

தமிழ்ப்பணி ஆசிரியர் ,தமிழ்மாமணி ,கவிமுரசு ,வா .மு .சே .திருவள்ளுவரின் "யாதும் ஊரே" நூல் வெளியீட்டு விழா !

"யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா ! 
தமிழ்ப்பணி ஆசிரியர் ,தமிழ்மாமணி ,கவிமுரசு ,வா .மு .சே .திருவள்ளுவரின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு ,அவர் எழுதிய "யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா கல்லூரி விடுதி மதுரையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் திருக்குறள் பேரவை சார்பிலும் நடைபெற்றது .கவிபாரதி அசோக்ராசு வரவேற்றார் , கவிஞர் மார்சல் முருகன் அறிமுக உரையாற்றினார் .முனைவர் இ.கி.இராமசாமி தலைமை  வகித்து   நூலை வெளியிட்டார்  .பேராசிரியர் ஞா .விக்டர் ,ஆசிரியர் கல்யாணி இருவரும் பெற்றுக்  கொண்டனர் .கவிஞர்கள் வீரபாண்டியத்  தென்னவன் ,கா .கருப்பையா ,இளங்கவின், அருட் தந்தை ஆனந்தராசு வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர் இரா .இரவி நூல் ஆசிரியருக்கு பொன்னாடைப் போர்த்தி நூலினைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார் .நூல் ஆசிரியர் வா .மு .சே .திருவள்ளுவர்  ஏற்புரையாற்றினார் .கவிஞர் இராம பாண்டியன் நன்றி கூறினார். தேசியவலிமை வே .சுவாமிநாதன் ,திருமதி பரிமளா திருவள்ளுவர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !


   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .கவிஞர் இரா .கல்யாண சுந்தரம்முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  கவிமுரசு வா . மு .சே. திருவள்ளுவர் அவர்கள் "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .ஆசிரியர்கள் பீட்டர் ,ரூபி பீட்டர் ஆகியோர் தன்னம்பிக்கை கருத்துக் கூறினார்கள் .
திரு.ஜோ .சம்பத்   நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.

--

யாதும் ஊரே !



நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை .281திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை .சென்னை .5. 
  விலை ரூபாய் 150.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு கட்டமைப்பு அனைத்தும் மிக அருமை .பாராட்டுக்கள் .நூலின் உள்ளே மின்னூர் சீனி வரைந்துள்ள பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஓவியம் அற்புதம் .

வணிகவியல் பட்டதாரியான நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் படித்த படிப்பிற்கு  ஏற்ற ஒரு வங்கி வேலை வாங்கி சராசரி மனிதனைப் போல வாழாமல் ,தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை  41 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வருவது சாதனை .நல்ல உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு . 

திரைப்பட நடிகர், நடிகை கவர்ச்சிப் படங்கள் இன்றி இதழ் நடத்துவது பாராட்டுக்குரியது . நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் இரா. மோகன்அவர்கள் குறிப்பிட்டார்கள் .ஒருவர் கையில் உள்ள பணத்தை விரைவில்    கரைக்க வேண்டும் நிபந்தனை .சீட்டு விளையாண்டார் தோற்காமல் வென்றார் .குதிரை   மீது கட்டினார் அதுவும் வென்றது .ஒரு இதழ் தொடங்கினார் பணம் முழுவதும் கரைந்ததாம் .இது நகைச் சுவை அல்ல உண்மை .பல சிற்றிதழ்கள் மாதம் தோறும் சில ஆயிரங்களை இழந்துதான் வெளிவருகின்றன. இப்படி ஒரு இதழுக்கு ஆசிரிராக இருந்துக் கொண்டு கவிதை, கட்டுரை எழுதி நூலும் வெளியிட்டு வருகிறார் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .தந்தையின் வழியில் மகன் நடக்க வில்லை என்பதுதான் இன்றைய குற்றச்சாட்டு .னால் தந்தையின் வழியில் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர்நடப்பது பெருமை .
இந்த நூல் பயண இலக்கிய நூல் .முத்திரை பதித்துள்ள அற்புத நூல் .நூல்ஆசிரியர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைர வரிகள் சிந்திக்க வைத்தது .
" ஈழத் தமிழர்கள் இன்னல்களுக்கு இ
ந்நூற்றாண்டில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பொறுப்பானவர்கள்தான் .அவர்கள் இந்தியாவின் வஞ்சத்தால் இன்றும் தொப்பூழ்க் கொடி உறவுகள் ஈழத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்றவர்களை  முள்வேலிகளில் முடங்கி விட்டனர் .கொடூரம் என் நெஞ்சைப்  பிழிகிறது .   .நூல்ஆசிரியர்  நெஞ்சை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களின் நெஞ்சையும் பிழிகிறது . ஈழத் தமிழர்கள் இன்னல்கள் நூலில் பதிவாகி உள்ளது .ஆனால் தனி ஈழத்தை என்றும் ஆதரிக்காத பேராயக் கட்சியை இன்று வரை தன் சுய நலத்திற்காக ஆதரிக்கும் கலைஞரை  நூல் ஆசிரியர் ஆதரித்து எழுதி உள்ள கருத்து மட்டும் முரண் பாடாக உள்ளது .

புலம் பெயர்ந்து வாழும் வலி மிகுந்த அகதி வாழ்விலும் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழுக்கும் ,  தமிழருக்கும் செலவு செய்து தமிழ் வளர்க்கும் உயர்ந்த உள்ளங்களின் அன்பை நன்கு ஆவணப் படுத்தி உள்ளார் .பாராட்டுக்கள்
.
குறிப்பாக இணையராக இருந்து விருந்தோம்பல் செய்து தமிழ்ப் பண்பாடு காத்து வருவதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .
வெளி நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேற்றுமையை ஒப்பீடு செய்துள்ளார் .இன்றும் சென்னை தொடர் வண்டிகளில் வ
ண்டிக்குள் எந்த நிலையத்தில் நிற்கிறது என்ற  ஒலி வருவதில்லை .ஆனால் அயல் நாடுகளில் எந்த நிலையம் என்பதை ஒலியால் வண்டியின் உள்  உணர்த்துகின்றனர் .தேம்சு நதி போல சென்னை   கூவமும் மாற வேண்டும் என்ற ஆசையை எழுதி உள்ளார் .

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள ஈழத் தமிழர்களில் பலர் நான் அறிந்தவர்கள் .என் படைப்புக்களைப் பாராட்டியவர்கள் .லண்டன்  நல்ல மனிதர்கள் சம்பந்தன் ,பொன் பாலசுந்தரம் போன்றவர்கள் பற்றியும் எழுதி உள்ளார் .அய்யா பொன் பாலசுந்தரம் அவர்கள் அவராகவே சமைத்து மீன் குழம்பு வைத்து விருந்து  வைத்ததை எழுதி உள்ளார் .

" சொல்லொணாத் துயரைத்   தாங்கி வாடும் ஈழத்து மக்களின் தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்பதை உலகமே உணர முடிகின்றது "

இந்த வைர வரிகளை உலகம் உணர வேண்டும் .

லண்டன் ,கனடா ,பாரீசு ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆய்ந்து அறிந்து நூல் எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் கவிஞர் என்பதால் சில இடங்களில் கவிதையாக நன்கு பதிவு செய்துள்ளார். பயணித்த வானுர்தி தடங்களின் விபரத்தை ஆங்கிலத்தில் நூலின் இறுதியில் எழுதி உள்ளார் .இனி பயணம் செய்ய இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் பற்றிய குறிப்பு விரிவாக உள்ளது .பல பரிசுகளும் விருதுகளும் பெற்று, புலிக்குப் பிறந்தது பூனையாகாது  என்ற பொன் மொழியை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் .பாராட்டுக்கள் .

இலக்கிய சுற்றுலா செல்லும்போது தான் மட்டும் செல்லாமல் தன் மனைவி பரிமளா அவர்களையும் உடன் அழைத்து சென்றது சிறப்பு .

தன் மனைவி பரிமளா பற்றி ஒரு கவிதையும் எழுதி உள்ளார் .

நங்கை பரிமளா நல்லாள்
நதியின் கரைபோல் இல்லாள்
மங்கையர் உலகம் போற்றும்
மகுடப் பொறுமையைச் சொல்லாள்
பொங்கும் வெள்ளம் தாங்கும்
புனித நதியின் பாதை
தங்கும் இன்பம் தவழ
தேம்சில் நடந்து சென்றோம் !
பயண இலக்கிய நூல்களில் சிறப்பிடம்  பெறும் நூலாக வந்துள்ளது .இந்த நூலிற்கு விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும்

தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ கச் காசிம் மண்டபத்தில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


(31-7-2012 அன்று தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய  உரை)

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே எந்தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
    வீரரின் வீரமும் வெற்றியும் நீயே
முந்தைய நாளினில் அறிவும் இலாது
    மொய்த்தநல் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாம ரைக்காடு பூத்தது போல
    செழித்த எம்தமிழே ஒளியே வாழி!

    என்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார்  பாடலைக் கூறித் தொடங்குகின்றேன்.

தமிழர் முன்னேற்றக் கழகத்தின்  சார்பில் நடைபெறும் நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் மன்றத்தின் தலைவர் சுப்பையா  அவர்களே. ஆலோசகர் தண்ணீர்மலை பொருளாலர் முனுசாமி அவர்களே. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் பெரியவர் காப்பளர் ஐயா முத்துசாமி அவர்களே  நிகழ்ச்சியை அரும் பாடுபட்டு நடத்தி வரும் எழுத்தாளர் திருஞானசம்பந்தம் இராணி அவர்களே, கடவுள் வாழ்த்துப் பாடிய கனகரத்தினம் அவர்களே திரளாகப் பங்கேற்றிருக்கும் தைப்பீங் நகரத்துப் பெருமக்ககளே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்

    யான் மலேசியா புறப்பட்டு வரும்போது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் திரு திருஞானசம்பந்தம் அவர்களைத் தொடர்பு கொள்ளூம்படி கூறினார். கோலாலம்பூர் வந்தவுடன் நண்பரிடம் தொடர்புகொண்டேன். நான் கேஎல் சென்றல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கிறேன் சந்தியுங்கள் இங்கு வந்து விடுங்கள் என்றேன். யான் தொடர்வண்டி நிலையத்தின் பேரழகை எப்போது சென்றாலும் காண்பேன். நாளுக்கு  நாள் அதனுடைய அழகை வசதிகளை அரசாங்கம் உயர்த்திக் கொண்டே இருக்கும். நம் ஊரில் தில்லியாக இருந்தாலும் சென்னையாக இருந்தாலும் தொடர்வண்டி நிலையம் வளர்ச்சி என்பதே இல்லாமல் பராமரிப்புக்கூட பொறுப்புணர்வோடு செய்யாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துவேன். நண்பர் எனக்குத் தொடர்பு கொண்டார் நான் வாயிலில் இருக்கிறேன் என்றேன். சந்தித்து பெருமகிழ்ச்சியடைந்தோம்.

எனக்கு நீங்கள் சென்னையில் பாராட்டு விழார நடத்தினீர்கள். சென்னையில் நான் மனைவியோடு வந்தபோது தங்களிடம் தொடர்பு கொண்டேன் அப்போது தந்தையார் ஊரில் இல்லை. தாங்கள் உணவகத்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் எழுத்தாளர்கள் நண்பர்களை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினீர்கள் என்றார். உண்மையிலெயே எனக்கு பெருமகிழ்சிச்யாக இருந்தது. தந்தையார் 1977 ஆம் ஆண்டு  வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வெளிநாட்டுப் பெருமக்களும் வரவேற்பு அளிப்பது என்பது பன்னாடுத்தமிழுறவு மன்றக் குறிக்கோள்களில் ஒன்று. எனக்கே நினைவில் இல்லை நினைவோடு திருஞாசம்பந்தம் கூறியது மன நிறைவைத் தந்தது. திருஞானசம்பந்தம் நிகழ்வையெல்லாம் யான் தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளதையும் கூறினேன்.

    அப்பொது நான் உங்களுக்கு மலேசியாவில் வரவேற்பு வழங்க வேண்டும் எனக் கூறினார் அதனையுடைய முயற்சிதான் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,.

    நான் தைப்பிங் நகருக்கு சனவரி மாதம் பேச வந்திருந்தபோது அருமைப் பெரியார் முத்துசாமி ஒரு மலரை வழங்கினார்கள். அந்த மலரில் தோட்டப்புறப் பள்ளிகளுக்கு அவர் வழங்கிய அர்பணிப்பான சேவைகளைக் கூறியுள்ளார்கள். இந்தக் கட்டுரை முழுமையையும் தமிழ்ப்பணி மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளேன். இவரைப் போன்ற பெருமக்களால்தான் மலேசியாவில் தமிழ் வாழ்கிறது. இவர்ளுடைய ஈகமான பணிகள்தான் இன்றும் மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் செழித்து ஒங்குகின. ஆனால் தற்போது தமிழ்ப்பள்ளிகள் குறைந்து வருகின்றன.

    ஐயா முத்துசாமி அவர்கள் துன் சம்பந்தன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார்கள். துன் சம்பந்தம் என்ற மாபெரும் தலைவர் இலலையென்றால் மலேசியாவில் தமிழர்களுக்கு வாழ்க்கை இல்லை. தம் வாழ்நாளையே ஒப்படைத்து இன்று தமிழ்ச்சமுதாயத்தை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    ஐயா முத்துசாமி அவகள் துன் சம்பந்தம் அவர்களோடு இணைந்து தொண்டாற்றிய பெருமகன். அவர்கள் இங்கு வந்து என்னை வாழ்த்துவதென்பது துன் சம்பந்தம் வந்து வாழ்த்துவதாகவே கருதுகிறேன். துன் அவர்களோடு ஐயா அவர்கள்  தொண்டு வாழ்வைக் குறிப்பிட்டபோது கண்கள் கலங்கின. இன்றைக்கு வானளாவ இருக்கும் தேசிய நல கூட்டுறவு சங்கம் மலேசிய மண்ணில் விரிந்து பரந்து இருப்பதற்கு வித்திட்டவர். துன் சம்பந்தம் அவர்கள். மலேசியாவில் ஒவ்வொரு தோட்டப் புறங்களுக்கும் சென்று பங்குத் தொகையைப் பெற்று மலேசியாவில் தமிழர்களைத் தலைநிமிரச் செய்ய மிகப் பெரிய திட்டத்தை வகுத்த தீர்க்கதரிசி.

    மலேசியாவின்  தோட்டப்புறங்களிளெல்லாம் இன்று தமிழ்ப்பள்ளிகள் தளிர்த்ததினால்தான். இன்றைக்கு சம்பந்தம் இராணி போன்ற பெருமக்களெல்லாம் படித்துப் பணியில் உள்ளனர். பள்ளிகள் இல்லையென்றால் நம் மக்கள் மேல்நிலையை அடைய முடியாது.

    உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். தமிழர்கள் ஆங்காங்கே தமிழையும் தமிழரையும்  பேணிப் பாதுகாக்கின்றனர். மியான்மரில் வள்ளுவர் கோட்டம் கட்டி திருக்குறளிலேயே ஒதி திருவள்ளுவரை வணங்குகின்றனர்.

    அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ச்சங்கங்கள் நிறுவி அனைத்துத் கூட்டுத் தமிழ்ச்ச்ங்கங்களையும் ஒன்றினைத்து ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய மாநாடு நடத்துகின்றனர்.

    ஐரோப்பிய நாடுகளில் ஈழ த்தமிழர்களின் புலம் பெயர்வால். தமிழுக்கு மாநாடுகளும் விழாக்களும் ஏராளம். யான் யாதும் ஊரே என்ற நூலில் அனைத்து நாடுகளிலுள்ள தமிழர்களைப் பற்றியும்  குறிப்பிட்டுள்ளேன்.
    கனடாவில் இது தமிழகமோ என வியக்கும் வண்ணம் தமிழ் இதழ்களும் தொலைக்காட்சிகளும், நடன அரங்கேற்றங்களும், மாநாடுகளும், தமிழ்க் கல்லூரிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    பெருமக்களே கற்றனைத்து ஊறும் என்ற நூலில் மலேசியாவின் சிறப்புகளையும் நான் கண்ட அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளேன். உலக நாடுகளில் கண்ட அனுபவங்களையும் தமிழ் தமிழர் சிந்தனைகளையும் எழுதியுள்ளேன்.

    தமிழினம் உலக இனம், ஆனால் அதற்கென நாடு இல்லாதது ஒரு பேரிழப்பே. ஈழம் கிடத்திருக்கும் ஆனால்  துரோகிகளின் வஞ்சகத்தல் அந்த வாய்ப்பை இழந்தொம். ஆனால் ஈழ மக்கள் பெற்றே தீருவார்கள் என்பதில் ஐயமில்லை.

    ஐயா முத்துசாமி அவர்கள் இல்லத்தில் அம்மா அவர்கள் இல்லாமை கண்டு வருந்தினேன். அம்மாவோடு  ஐயா அவர்கள் தமிழகம் வந்துள்ளார்கள், திருஞானசம்பந்தம் இராணி அவர்களும் வந்துள்ளார்கள். வருகை தந்திருக்கும் பெருமக்களே தாங்களும் தமிழகத்திற்கு வாருங்கள் வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறேன். பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் தங்களை வரவேற்க உள்ளது எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.
       
 

Monday, December 10, 2012

மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை



 (30-7-2912 அன்று மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் டத்தின் தாமரைச்செல்வி தலைமையில் முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்பிரமணியம் முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை)

மலேசியாவின் கெடா மாநில சுங்கை பட்டானியில் தமிழர் சங்கத்தில் பங்கேற்று உரையாற்றுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். மிகக் கூறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த டத்தோ சுப்பிரமணியம் அவர்களையும் டத்தின் தாமரைச்செல்வி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். டத்தின் அவர்களின் அன்னைக்கு நூலை டத்தின் அவர்களின் அண்ணன் எழுத்தாளர் மூத்த வழக்கறிஞர் சமரசம் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள். நூல் முழுமையும் படித்து வியந்தேன். டத்தின் அவர்களின் பெற்றோர் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றி திராவிட உணர்வை வளர்த்ததையும் அவர்கள் சிறை சென்று தமிழுணர்வு நிலை நாட்டியதையும் படித்தபோது கண்கள் குளமாகின. தன் அண்ணன் சமரசம் அச்கத்தில் பணியாற்றியபோது விரல்கள் பாதிக்கப் பட்டதையும் குடும்பப் பொறுப்பைச் சுமந்து  அனைவரையும் உருவாக்கியதையும் நன்றியுணர்ச்சியோடு பதிவு செய்துள்ளார்கள்.

    திருவள்ளுவர் இல்லத்திற்கு திருவள்ளுவர் வருகிறார் என டத்தின் எழுதி வைத்துள்ளார்கள். வள்ளுவப் பெருமான் கூறிய அறக் கருத்துகளையும் தந்தை பெரியாரின் வழி தொடர்ந்து டத்தின்  அவர்கள் மலேசியாவில் ஆற்றும் பணி அரும் பணியாகும். முன்னாள் அமைச்சர் என்ற செருக்கே இல்லாமல் மக்களோடு மக்களாக தொண்டாற்றும் டத்தோ அவர்களயும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    மலேசியாவின்  அருகிலுள்ள பினாங்கு மாநிலம் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலா மாநிலமாகும்.சுங்கைப் பட்டாணிக்கு அருகில் உள்ள  பினாங்கில் சுவாமி இராமதாசர் என்ற பேரறிவாளி வாழ்ந்த பகுதியாகும். ஆய கலைகள் அறுபத்தி நான்களிலும் பயிற்சி பெற்ற பேரறிஞர். மலேசியா முழுமையும் மாணாக்கர்ளை உருவாக்கி மருத்துவம் கவிதை என அனைதுத் துறையிலும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழிற்கு இன்றும் பெரும் அரணாக உள்ளனர்.

    சுவாமி இராமதாசர் அவர்கள் தம் மணிவிழாவிற்கு தமிழகத்தில் தம் மாணவரான என் தந்தை பெருங்கவிக்கோவை 1977ஆம் ஆண்டு அழைத்திருந்தார்கள் ஒரு குரு தம் மாணவரை சிறப்பு விருந்தினராக அழைத்து மணிவிழா நடத்தியதென்பது வரலாற்றுப் பதிவாகும். என்றும் இலக்கிய உல்கில் மலேசியாவிற்கு நிலையான பெருமையாகும்.

    இன்று உலகம் முழுமையும் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிறோமே அதற்கும் வித்திட்டது மலேசிய மண்ணே. மலேயாப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறையிலிருந்த தனிநாயக அடிகளாரே அந்தப் பெருமைக்குரிய பெருமகன். இவ்வாண்டு அப் பெருமகனாருக்கு நூற்றாண்டு விழா உலக்த் தமிழர்கள் அனைவரும் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டிய பேராசியப் பெருமகன். இன்றைக்கு நாம் உலகம் முழுமையும் மாநாடு நடத்திகிறோமென்றால் தனிநாயக அடிகளின் அப்பலுக்கற்ற் தூய தமிழ்ப்பணிதான் அந்தப் பெருமகனை பணியாற்றிய மலேயா பல்க்லைகழம்தான். அந்தப் பல்கலைக் கழத்தில்தான் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம்.டத்தோ டத்தின் அவர்க்ளையும் கேட்டுக்கொள்கிறேன்
தனிநாயக அடிகளாருக்கு நூற்றாண்டு விழா நடத்துங்கள்.

    மலேசியா மண்ணை தமிழர்களுக்கும் முழு உரிமைகளையும் பெற்றுத் தந்த துன் சமந்தன் அவர்கள். மாணிக்கவாசகம் அவர்கள் ஈகங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்வேண்டியவை.

    அவர்கள் வழியிலே மாலேசியத் திருநாட்டில் பெரும்பணியாற்றி தமிழர்களின் ஆளுமைக்கு சான்றாக வாழும் டத்தோசிறி சாமிவேலு அவர்கள்.. அவர்கள் வழி ம.இ.கா. வை வழிநட்த்தும் நம் டத்தோ டத்தின் உள்ளிட்ட அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

    டத்தின் அவர்கள் என்னை இங்கு ஒரு பொது நிகழ்சிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு ம.இ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பெருமக்களும் வருகைதந்து வாழ்த்தினர். எனக்கு மகிழ்ச்சியாக் இருந்தது சனநாயகத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வு எந்த சக்தியாலும்  பிரிக்கா வண்ணம் நிலைநாட்ட வேண்டும்.

       இலக்கிய உலகில்  மலேசியாவில் மணிமன்றம் அருந்தமிழ்த் தொண்டாற்றிய ஐயா அன்பானந்தம் அவர்களை எண்ணிப் போற்றவேண்டும் .அவர்வழி இன்றும் தமிழ்த் தொண்டு செழித்தோங்குகிறது.

    இன்றும் தோட்ப்புறத் தொழிலாளர்களுக்கு மிகப் பெரும் கொடையாக இருப்பது தேசிய நல கூட்டுறவுச் சங்கம். கோலாலம்பூரில் விசுமா துன்சம்பந்தன் மாளிகை தமிழர்களின் பெருமையை செப்பும். அதைத் தலைமைதாங்கி நடத்தும் டான்சிறி சோமசுந்தரம் அவர்களை தமிழ் உலகம் என்றும் மறக்காது. அவர் வழியில் அரும்பணியாற்றும் டத்தோ  சகாதேவன் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பெருமக்கள் மலேசியத் தமிழர்களின் வளர்ச்சித் தூண்கள்.

    உலகத் தமிழர் இயக்கம் நடத்திய அமரர் டேவிட் அவர்கள். அவரது இறப்பின் போது நான் இங்கிருந்தேன். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரி பணி மகத்தானது.

    மலேசியாவில் மிகச்சிறந்த கவிஞர் பெருமக்கள் அளப்பரிய பணியாற்றியுள்ளார்கள். அமரர் பெருமக்கள் செந்தமிழ்க் கவிமணி வி.கே.சுப்பிரமணியம், செந்தமிழ்க் கவிமணி இரா.பாண்டியன், கவிஞர் முத்துவேல்,  தமிழ்க்குயில் கலியபெருமாள் போன்ற பெருமக்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

    இன்றும் கவிதைத் தொண்டாற்றும் தீப்பொறி பொன்னுசாமி, கவிஞர் காரைக் கிழார், கவிஞர் தமிழ்மணி வடிவேலு போன்ற எண்ணற்ற பெருமக்கள் அரிய இலக்கியத் தொண்டாற்றுகின்றனர். மலேசியக் கவிஞர்களின் ஆய்வுக் களஞ்சியம் பெருந்தொகுப்பு ஒன்றை முனைவர் முரசு நெடுமாறன் தொகுத்துள்ளார். திருக்குறள் பாடல்கள் என் மிகப் பெரிய சிறந்த தொகுப்பை தந்துள்ளார். அனைத்தும் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த பதிவுகளாகும்.

    தமிழ் இணையத் துறைக்கு மலேசிய முரசு முத்தெழிலன் பங்களிப்பு அளப்பரிய பங்களிப்பாகும்.

    யாங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு நடத்தும்போது மாநாட்டை முன்னின்று நடத்திய விக்டர் சுப்பைய, டாக்டர் தர்மலிங்கம், முனைவர் குமரன், ஆசீயமணி மாணிக்கம், பேராசிரியர் பாலசுப்பிரமணியம் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

    பெருமக்களே மலேசியாவின் அருமைப் பெருமக்களை உங்கள் முன் நினைவு கூறுவதற்கு காரணம். எங்களின் மலேசியத் தொடர்பு 77ஆம் ஆண்டு முதல் இன்று வரை பூத்துக் குலுங்குகிறது. அவர்களை நினை வு படுத்த வாய்ப்பளித்த டத்தோ அவர்களுக்கும் டத்தின் அவர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

Sunday, December 9, 2012

மலேசியா சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை




(29-7-2012 அன்று சோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத்தில் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமையில் செயளாலர்  கவிஞர்  தமிழ்மணி வடிவேலு முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் இலக்கிய உரை)

                தமிழர் சங்கத் தலைவர் வெற்றி நிச்சயம் நூலின் ஆசிரியர் வேணுகோபால் அவர்களே, மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கருத்தை பொய்ப்பிக்கும் வண்ணம் சோகூர் மாநிலத்தில் தமிழ் பயிற்றுவித்து தமிழ்ப் பட்டாதாரிகளை உருவாக்கும் அருமைக் கவிஞர் பெருமகன் தமிழ்மணி வடிவேலு அவர்களே. என் உரையைக் கேட்க வந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களே, சான்றோர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
     தலைவர் வேணுகோபால் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலை அனைவரும் படித்திருப்பீர்கள். உண்மையிலேயெ தமிழ் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். அவரது தந்தையார் அவர்கள் சப்பான் போரின் போது அனைவரும் உடைமைகளை விற்றுக், கொண்டிருந்த நேரத்தில் தாம் சேர்த்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் பரன்மேல் பாதுகாப்பாக வைத்துவிட்டு வந்தார்களாம். போருக்குப் பிறகு ஊர் திரும்பி மிகச் சிறந்த தொழில் அதிபராக மிளிர்ந்தார். என்பதை நன்றிப் பெருக்கோடு கூறியுள்ளார். தந்தையார் வழியில் மலேசியாவின் தொழில் அதிபராக, திருகோயிலின் தலைவராக, சிறந்த எழுத்தாளராக இன்றும் தளராது நடைபோடுகிறார்.
     நமது செயலாளர் தமிழ்மணி வடிவேலு அவர்கள் மலேசியா சிங்கை நாடுகளை இணைத்து மாநாட்டு மலரில் ஒரு கவிதை எழுதியுள்ளார். மிகச் சிறந்த கவிதை. மலேசிய சிங்கை ஒப்புறவுக் கவிதையாகக் கூறலாம் அந்தக் கவிதையை நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன் உலகத்தமிழர்களின் பாரட்டுதலைப் பெற்ற கவிதை. மேலும் தொண்டின் சிகரமாக சோகூர் மாநிலத்தில் தமிழ்ப் பட்டப் படிப்பை பயிற்றுவிக்கும் அமைப்பை நிறுவி தமிழகத்திலிருந்து நூல்களையெல்லாம் வரவழைத்து இம்மாநில மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரிய தமிழ்த் தொண்டாற்றுகிறார். பேராசிரியரிடம் கல்வி பயிலும் பெருமக்கள் பலரைக்  இங்கு காணும்போது பெருமகிழ்ச்சியாக உள்ளது. பெரு முயற்சி எடுத்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள  இரு பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
     நண்பர்களே தமிழர்கள் உலகம் முழுமையும் வாழக்கூடிய இனம். தமிழ் அன்றும் இன்றும் என்றும் உலக நீதியை வழங்கக் கூடிய மொழி. நாமெல்லாம் தமிழர்கள் என்பதில் பெருமையோடு நெஞ்சுயர்த்தி வாழாலாம். நம்மையும் மொழியையும் அழித்துவிடலாம் என நம் எதிரிகள் எண்ணுவர், சங்க காலம் முதல் இன்று  வரை போராடி போராடித்தான் தமிழ் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
      நம் இலக்கியங்கள் என்றும் நமக்கு பேரரணாகப் இருப்பவை. இதொ ஒரு பாடலைக் கேளுங்கள்.
     எற்றென்றும் இல்லாவிடத் தும்குடிப் பிறந்தார் 
     அற்றுத்தற் சேர்ந்தார்க்குஅசைவிடத்து ஊற்றாவார் 
     அற்றக் கடைத்தும் அகல்யா(று) அகழ்ந்தக்கால் 
     தெற்றெனத் தெண்ணீர் படும்
     பாடலின் பொருளைப் பாருங்கள். ஆற்றில் நீர்ப் பெருக்கு அற்றுப்பொய் நடப்பவர்கள் அடியைச் சுடும் கொடும் வெப்பம் நிறைந்த கோடை காலத்தில் தன் பால் ஊறிவரும் நீரால் உலகை ஊட்டுகின்றது, அவ்வாறு நற்குடியில் பிறந்தவர்கள் தம்மிடம் இல்லையென்றாலும் ஏற்றவர்க்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். ஈதலின்  வலிமையை உலகிற்கே நம் இலக்கியங்கள் பகர்கின்றன.
ஒரு பழம் பாடல் கூறும் அறத்தை நோக்குங்கள்.

ஈயெனஇரத்தல்இழிந்தன்றுஅதனெதிர் 
                                   ஈயேன்என்றல்அதனினும்இழிந்தன்று 
                                   
கொள்ளெனக்கொடுத்தல்உயர்ந்தன்றுஅதனெதிர் 

 கொள்ளேன் என்றல் அதனினும்  உயர்ந்தன்று 
பிறரை நாடி இரங்குதல் இழிவு அதைவிட இழிவு கேடபவர்க்கு இல்லை என்று கூறுதல் அதைவிட இழிவான செயல் என்று கூறுகிறது.
நம் இலக்கியங்கள் உலக நீதியையும் அறத்தையும் உலகிற்கு வழங்கியுள்ளன. உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவர் கூறும் அறத்தைப் பாருங்கள்.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அஃது
ஈதல் இயையாக் கடை                (குறள்-230).
நம்மிடம் இருக்கும் பொருளை உலகில் நம்மோடு இருக்கும் மக்கட்கு கொடுத்து உதவும் ஈகைக் குணம் இல்லை என்றால்  அவன் சாவதே மேல் எனக் கூறுகிறார். இதை விடக் கடுமையாகக் கூற முடியாது.
நக்கீரரின் பழம் பாடல்  ஒன்று கேளுங்கள் மானிட வாழ்வியலைப்
படம் பிடித்துக் காட்டுகிறது.

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
ஒருநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கருமாப் பாக்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது தாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்குமே
செல்வத்தும் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே

செல்வர் என்பதன் பொருளே ஈதலே என்பதை அழகாக செறிவாக உணர்த்திகிறது. உண்பதும் உடுப்பதும் அனைவருக்கும் ஒன்றே என்று நயம் பட உணத்தியுள்ளதை அறியலாம்
பெருமக்களே நம்மிடம் ஏற்படும் தோல்விக்கு காரணமே பொதுமை இல்லாததுதான். அது உணர்வாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் வலியோர் எளியோரை எண்ணாமையே ஆகும்.
     வளம் மிக்கமலேசிய மக்களே என்றும்போல் மொழிக்கும் இனத்திற்கும் வழிகாட்டுங்கள். எம்முடைய 42 ஆண்டுகால தமிழ்ப்பணியை தங்களின் உறவுப் பாலமாக பயன்படுத்துங்கள் எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி. வணக்கம்.
    


       

Friday, December 7, 2012

மருத்துவ மாமேதை, எளியோர் ஏந்தல் இனப் பாதுகாவலர் செ.நெ.தெய்வநாயகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மனிதருள் மாணிக்கமாகவும், மருத்துவ உலகில் மாமேதையாகவும் தமிழர்தம் தன்மானத்திற்குச் சான்றாகவும், விளங்கிய மருத்துவமாமணி செ.நெ. தெய்வநாயகத்தின்(70) இழப்பு தமிழர்களுக்கும், மருதுவ உலகிற்கும் பேரிழப்பாகும்.

    புகழ் வாய்ந்த தந்தை பெரியாரோடு நெறுங்கிய தொடர்புகொண்ட தமிழ்க்குடியாம் செ. நெ . நாயகம் அவர்களின் குடியில் நவம்பர் 15ஆம் நாள் தோன்றிய பெருமகன் மருத்துவ மாமணி தெய்வநாயகம் அவர்கள்.

         தம் மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கலலூரியில் படித்தவர்.வடகு அயர்லாண்டில் உள்ள சுகாட்லாந்த்தில் 18 மாதங்கள் தம் உயர் படிப்பை முடித்தவர்.எடின்பர்க் இராயல் கல்லூரியில் ஆய்வு அறிஞராகப் பணியாற்றியவர்.

    மருத்துவம் படிப்பு முடித்த தமிழர்கள் யாரையும் தமிழர்களின் வேட்டி சட்டை அடையாளத்துடன் காண முடியாது. ஆனால் மருத்துவ மாமணி அவர்கள் தமிழர் அடையாளத்துடன் புன் சிரிபோடு காட்சி தருவார்கள். மருத்துவ மாமேதையுடன் எனது சகோதரூக்காக தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக காணச் சென்றோம். அருமைப் பெருந்தகை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் பணிபுரிந்தார்கள். எங்களை அங்கு வரப் பணித்தார்கள். யாங்கள் மருத்துவம் காணச் சென்றபோது வரிசையில் வரப்பணித்து அவர்கள் ஆற்றிய சேவையை எண்ணும்போது கண்கள் குளமாகின்றன. மருத்துவ மனையிலேயே சேர்த்து அவர் வழங்கிய சிகிச்சையை எண்ணும்போது சேவையின் உருவமாகத் திகழ்கிறார். பெரிய மருத்துவ மனைகளெல்லாம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பெருமகன் தன் மருத்துவத் துறையில் பெற்றுள்ள பேரறிவால்  எம்மை மட்டுமல்ல ஏழை எளிய மக்களை நெஞ்சக நோயிலிருந்து காப்பாற்றிய மாவீரர் இன்று நம்மிடம் இல்லை.
      உயிர்க்கொல்லி நோய்க்கு சித்த மருத்துவம் மூலம் திர்வு கண்டவர். சித்த மருத்துவத்திலும் மிகச் சிறந்த நிபுணர்.

  என்னுடைய நண்பர்கள் பலரை பெருமகனாரிடம் அனுப்பியுள்ளேன். அனைவரும் நலம் பெற்று அவரை நெஞ்சார வாழ்த்திகின்றனர்  நோய் தீர்க்கும்  மாமேதை தெய்வநாயகனார். நேர்கொண்ட பார்வை யாருக்கும், அஞ்சா மன உறம் கொண்டவர்கள். இது அவரை அறிந்தோர் அறிவர். பணியிலிருந்து விடுபட்ட பின் தியாகராயநகர் தம் இல்லத்திலும், எழும்பூர் செஞ்சிலுவைச் சங்க மையத்திலும் தன் மருத்துவப் பணியைத் தொடர்ந்தாரகள். இறுதிக் காலத்தில் எழும்பூர் மையத்தினர் அவரை புறக்கணித்தபோது வாயிலிலேயே இருக்கையைப்போட்டு ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவம் செய்த மாவீரர் தெய்வநாயாகனார்.

    தம் குடும்ப அறநிலையமான தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகப் பொறுப்பேற்று ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த கல்வித் தந்தை.

    தமிழர் தமிழர் சிந்தனைகளுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கியவர், ஈழத்தில் பெருங்கொடுமை நடந்தபோது கண்டனக் கூட்டங்களுக்கு தம் பள்ளியின் திடலையே வழங்கிய இனப் பாதுகாவலர்.

    மருத்துவத் துறையாக இருந்தாலும் , கல்வித்துறையாக இருந்தாலும், இனப் பாதுகாப்பாக இருந்தாலும் செ.நா. தெய்வநாயகம் தமிழர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்துள்ளார். அவருடைய வாழ்வு சேவை வாழ்வு.

 இந்திய அரசின் பத்மபூசன் போன்ற விருதுகளெல்லாம் எளிய மக்களுக்காக வாழ்ந்த இப் பெருமக்களுக்கு வழங்க வேண்டும் எனபது நம் வேடகை.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய                                                        மண்ணுயிர் எல்லாம் தொழும். (குறள் 268)

    என்ற வாக்கிற்கிணங்க மருத்துவ மாமணியின் பணியைத் தொழுது தமிழர்கள் அவர்தம் வாழ்வைப் பின்பற்றி வாழ்வோமாக

Thursday, December 6, 2012

பொன்மகள் மலாளா நேயம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மார்க்கம் கடந்த தொண்டு
    மனிதக் கல்வி தன்னை
தீர்க்கமாய துணிவாய்ச் செய்த
    திண்ணிய மலாளா வாழ்க!
ஊர்க்குருவி இன்று வானில்
    உன்னதத் தொண்டால் இன்று
பார்க்குருவி பறந்து தோன்றும்
    பல்லூடக மலாளா வாழ்க!

பெண்களின் கல்வி என்றும்
    பேணிடும் குடும்ப ஏற்றம்
நன்றுள மகளிர்  கற்றால்
    நாளெலாம் பெண்மை ஓங்கும்
கன்றுபோல் சொன்ன சொல்லை
    கதறியே சுட்ட தீயோர்
நன்றான மனித நேயம்
    நாட்டிடும் நாள்தான் என்நாள்?

தொட்டனைத்து ஊறும் கல்வி
    தொல்லுயர் மாந்தர் கண்ணை
மட்டிலா மலாளா தொண்டு
    மாத்துயர் போக்கும் அன்றோ!
முட்டிடும் முரட்டு மார்க்கம்
    முதுநிலை அறிவை எண்ணி
மட்டிலா சேவைக் கன்னி
    மாசிலா மலாளா வாழ்க!

எரித்திடும் தீவிர வாதம்
    எழுப்பிய மூடச் சூட்டால்
வித்திடும் செயலை என்றும்
    முனைப்புடன் உலகே சாய்க்கும்
பொறித்திட்ட ஞானக் குஞ்சாம்
    பொன்மகள் மலாளா நேயம்
நெறிகாக்கும் மகளிர் கல்வி
    நாளாகக் கொள்வோம் நன்றே!

விடுக எம் காவிரிக் கண்ணை


கவிமுரசு வா. மு. சே. திருவள்ளுவர்


இந்தியா ஒருமித்த நாடு 
                                     
இன்பம் இணைந்தே நீதேடு
                            
  சந்ததி வழிவழி நீரை
                                          
 சதிவலை பின்னுதல் தீது 
                         
முந்தைய தமிழரின் மோசம்
                                     
 முறைதனிமை காணாத சோகம்  
                           
 நிந்திக்கும் கர்நாடக மண்ணே
                                     
  நீதியை கண்டு நீதேறு!



வெடித்திடும் நிலத்தினைப் பாரு
                                     
 வேதனை பொங்கிடும் நீரால்
                               
 துடித்திடும் அவலத்தைக் காணு
                                    
 துயரினைப் போக்கிட எண்ணு
                                 
மடிதுயில் காணாத மக்கள்
                                        
மாத்தவம் வேண்டிடும் ஆறு
                        
பொடிப்பொடி ஆக்கிடும் கண்ணீர்
                                  
போதனை கேட்டுநீ மாறு!







எரித்திடும் எரிமலை வேகம் 
                           
  எழும்பிய காவிரித் தாகம்  
                         
பறித்திடும் நீர்வளம்  தன்னை 
                                        
பொசுக்கிடும் எம்மினம் உன்னை
                              
தரித்திரம் ஒளியினால் கண்டும்
                                  
தந்திடும் மின்வளம் எண்ணு  
                               
விரித்திடும் மனநலம் எண்ணி
                                   
விடுக எம்காவிரிக் கண்ணை!


திராவிடம் கூறியே எம்மோர்
                                          
 தகைமையை கண்டு நீ வாழு
  
 உறவினைப் பெருக்கிடும் ஆற்றின்
                                  
உலகத்துப்  பொதுமையை உணரு
                              
கரவினால் கயமையைத் தேடும்
                                  
 கொலைவெறித் தாண்டவம் ஏனோ
                             
 மறத்தமிழ் மக்களின் வீரம்
                                      
 மாய்த்திடும் மம தையை என்றும்!

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(ஐந்தாவது சித்தநெறி மாநாடு சூலை 20, 21,  – 2012 மலேசிய நாட்டில் ஆகிய நாட்கள் சோகூர் மாநகரில்  நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மலேசிய அமைசர்கள் ம.இ.க. தலைவர டத்தொ பழனிவேலு, டத்தோ சுப்பிரமணியம், பங்கேற்றனர்.ம  அகத்திய ஞானபீட நிறுவனர் தலைவர் அருள்மிகு வாலைச் சித்தர் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆன்மீகத் தென்றல் மாரியப்பன் அவர்களும் மாநாட்டுக் குழுவினரும் பெரும்முயற்சி மேற்கொண்டு அரும்பாடுபட்டு மாநாட்டை சிறப்புடன் நடத்தினர்.. அதுபோது கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

    மலேசியாவில் பத்துமலையில் அருள்மிகு வாலைச் சித்தர் அவர்களின் திருமுகம் கண்டடேன். அது போது பாம்பாட்டிச்சித்தர் பற்றி கட்டுரை வழங்கும்படி பணித்தார்கள். மலேசியா இசுலாமிய நாடாக இருப்பினும் ஆலயங்கள் எங்கு நோக்கினும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும். அண்மையில் யான் தைப்பூச நிகழ்வையும் பங்குனி உத்திர நிகழ்வையும் கண்ட போது மெய்சிலிர்த்தேன். தொடர் வண்டி பேருந்து எங்கு நோக்கினும் தமிழர்கூட்டம். ஆன்மீகம் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அருள்நெறியாக உள்ளது. அம்மண்ணில் தமிழகம் சிங்கை உலகமெங்கும் வாழும் அருள்ளாளர்கள் கூடுவது சாலப்பொருத்தமாகும்.

    தமிழகம் சித்தர்களின் பிறப்பிடம் உலகப் பற்றுகளை வெறுத்து உன்னதமான மாந்தநேய நெறிகளை மண்ணுக்கு உணர்த்தியவர்கள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

    என்ற வள்ளுவப் பெருமானின் குறளிற்கேற்ப ஆசைகளில் விடுபடும்போது அதிலுள்ள துன்பத்திலிருந்தும் விடுபடுகிறோம்.

    கடவுள் வழிபாட்டில் பகுத்தறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் சித்தர் பெருமக்களே. சாதி சமயம் ஆண் பேண் என்ற வேறுபாட்டை தகர்த்தெறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே.

இதுவரை யாம் படித்துணர்ந்த  சித்த பெருமக்களின் பெயர்களைப் பதிவு செய்வதை கடமையாகக் கருதுகிறேன்.

1, சிவவாக்கியர் 2, அழுகிணி சித்தர் 3, கடுவெளிச்சித்தர் 4, குதம்பைச் சித்தர் 5, பத்திரகிரியார் 6, பாம்பாட்டிச்சித்தர் 7, காசுபுகண்டர் 8, சங்கிலிச் சித்தர் 9, சத்தியானாதர் என்ற ஞானச்சித்தர் 10, ஏசுநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் 11, மச்சேந்திரநாதர் என்ற நொண்டிச் சித்தர் 12, திரிகோணச்சித்தர்    13, கடேந்திரநாதர் என்ற விளையாட்டுச் சித்தர் 14, புண்ணாக்குச் சித்தர் 15, கல்லுளிச்சித்தர் 16, கஞ்சமலைச்சித்தர் 17, வகுளிநாதர் என்ற மௌனச்சித்தர்
18, ஆதிநாதர் என்ற வேதாந்தச்சித்தர் 19, காரைச்சித்தர் 20, சதோகநாதர் என்ற யோகச்சித்தர் 21, காயக் கப்பல் 22, உரோமரிசி ஞானம் 23, தடங்கண் சித்தர் 24, பட்டிணத்துச் சித்தர் ஞானம் 25, கைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனர் 26, கொங்கெனச் சித்தர் 27, சட்டைமுனிஞானம் 28, திருவள்ளுவ ஞானம்    29, அகத்தியர் 30, திருமூல நாயனார் 31, வால்மீகி சூத்திரம்  32, இராமதேவர்   33, கருவூரார் 34, அகப்பேய்ச் சித்தர் 35, இடைக்காட்டுச் சித்தர்               36, சூரியானந்தர் சூத்திரம்.

    மேற்கூறிய சித்தர் பெருமக்களின் பாடல்கள் ஆன்மீக மருந்தாக அறிவுக்கு விருந்தாக உலகில் வலம் வருகின்றன. மாநாட்டின் தலைவர் வாலைச்சித்தர் அவர்கள் எம்மை பாம்பாட்டிச் சித்தர் பற்றி எழுதப் பணித்ததால் பாம்பாட்டிச் சித்தர் பற்றிக் காண்போம்.

    பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்தோறும் ஆடு பாம்பே, ஆடுபாம்பே என பாம்பை ஆட்டிவிப்பது போல் பாடல்கள் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இவரின் குருவின் பெயர்  சட்டைமுனிநாதர். சீர்காழியில் உள்ள சிவனின் பெயர் சட்டையப்பர் சட்டைநாதர் என்பதாம்.

    ”குண்டலினி சக்தி வளைந்து மண்டலித்து மூலதாரத்தில் கிடைக்கும் நிலையாலும் புற்றில் ஏறுவதுபோல் சுழிமுனை நாடியில் ஏறி இந்த சக்தி உச்சி வரை வருவதாலும் அக்குண்டலினி என்ற உடல் சக்தி  புறக்குண்டலினியாகிய பிரபஞ்ச சக்தியோடு பாம்பு மண்டலத்து போல் தொடர்பு கொள்வதாலும் உஃச் உஃச் என மூச்சுக்காற்றோடு தொடர்பு கொண்டதாலும் குண்டலினி சக்தியாகியா பராசக்தியின் அருளாற்றளை பாம்பு என்று சித்தர்கள் அழைப்பது மரபு “ என அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இவர் பாடியா 129 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவரது பெரும்பகுதி பாடல்கள் யோகமேயாகும். இவரது சமாதி விருத்தாச்சலத்தில் உள்ளதாக பதிவு செய்துள்ளனர். விருத்தாச்சலம் ஊர் சென்னையிலிருந்து திண்டிவனம் விழுப்புரம் தாண்டி  திருச்சி செல்லும் தென் பகுதியில் உள்ளது.

    இனி பாம்பாட்டிச் சித்தரி பாடல்களைக் காண்போம்

    நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்தமென்றே
    நித்திய மென்றே பெரிய முத்தியென்றே
    பாடுபடும் போதுமஆதி பாதம் நினைந்தே
    பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே    (2)

ஆதியாகிய இறைவன் திருவடியை நினைத்தபடியே பன்முறை நினைந்து நினைந்து ஆடுவாயக பாம்பே எனக் குறிப்பிடுகிறார்.

    பொன்னிலொளி போல எங்கு பூரணமதாய்ப்
    பூவின்மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
    மன்னும்பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
    வள்ளலடி வணங்கிநின் றாடுபாம்பே   (3)
  
    பொன்னின் ஒளி பூரன்மாய் அதனுள் நிறைந்துள்ளது போல், மலரின் மணம் பருவம் வரும்போது வெளிப்படுவ்து போல் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ள வள்ளல் அடியை நினைந்து ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.

    அண்டபிண்டந் தந்த எங்கள் ஆதிதேவனை
    அகலம லேநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட எத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே    (5)

அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்த ஆதிதேவனை எண்ணி எட்டுத் திசையும் புகழுமாறு அன்புடன் வணங்கி வாழ்த்தி பாம்பே ஏக மனதுடன் ஆடுவாயாக என மொழிகிறார். சித்தர் பெருமக்கள் அண்டத்தையும் பிண்டத்தையும் பாடி அன்றே வானவியல் தத்துவத்தை கூறியுள்ள மெய்ஞானிகள்:.

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவ னாயும்
செறிந்தவசுத் துவைப்போற்றி யாடு பாம்பே

உருவமின்மையாகவும் உருவமாகவும், தொடக்கமாகவும் முடிவாகவும், இருளாகவும் ஒளியாகவும், ஆகமமாகவும் வேதமாகவும் , குருவாகவும் சீவனாகவும்  எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பரம்பொருளை எண்ணி ஆடு பாம்பே என திருவாய் மல்ர்ந்தருளியிருக்கிறார்.

    எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
    இருந்து விளையாட் டெய்தியும் பின்னர்
    அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகிய நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே  (9)

உயிரையும் உலகையும் படைத்து ஐந்தொழிலாகிய திருவிளையாட்டை நடத்தி பின்னர் உலகும் உயிருமாக இருந்திடும் மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டு ஆடு பாம்பே  எனப் பகர்கிறார் சித்தர் பெருமான்.

குரு வணகத்தில் பாம்பாட்டிச் சித்தர் சமூகச் சீரழிவுகளைச் சாடி புரட்சிச் சித்தராக தோன்றுகிறார்.

பொய்மதங்கள் போத்னைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்நெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய் பாம்பே    (11)

பொய்யான மதங்களை கற்பிக்கும் மத குருமார்களை மாற்றி நன்னெறிப்படுத்தும் மெய்குருவின் திருவடிகளைப் போற்றி ஆடுபாம்பே என புரட்சிகரமாகக் கூறுகிறார்.

உள்ளங்கையிற் கனிபொல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனம் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்துநின்றாடாய் பாம்பே    (13)

உள்ளாதை உள்ளவாறு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டவல்ல வல்லமையான குருவை ஏற்று மகிழ்ந்து மகிழ்ந்து ஆடாய் பாம்பே என குருவின் மேன்மையை விளக்குகிறார் சித்தர்.

கூடுவிட்டு கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்து நின்றாடாய் பாம்பே     (16)

ஓர் உடல் விட்டு வேறோர் உடல் பாய்ந்து செல்லும் வல்லமைபெற்ற பேராற்றல் குருவைப் பணிந்து ஆடு பாம்பே எனப் பகர்கிறார் சித்தர்.

ஆடு பாம்பே ஆடுபாம்பே என பாடிய பாம்பாட்டிச் சித்தர் பாம்பின் சிறப்பையும் பாடியுள்ளார்.

நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளையாடு பாம்பே     (20)

தமிழ்கத்தில் மிகப் பரவலாக பாடும் சொற்றொடர் ”நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே”. பர்மசிவன் முடிமீதிருக்கும் நாகப்பாம்பே.நச்சுப்பை வைத்திருக்கும் நல்ல பாம்பே புற்றைக் குடைந்து பாதளத்தில் குடியேறும் பாம்பே. நாதத்திற்கு கட்டுண்டு பாடப் பாட விளையடி மேலேறும் பாம்பே என பாம்பின் சிறப்பகக் கூறுகிறார் சித்தர்.

குற்றமற்ற சிவனுக்கு குண்டல மானாய்
கறுந்திரு மாலினுக்கு குடையு மானாய்
காற்றைக்குழல் பார்வத்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே        (22)

    சிவனுக்குக் குண்டலமாகவும் திருமாலுக்குக் குடையாகவும் பார்வதிக்கு தோள் வலையமாகவும் விளங்கும் பாம்பே எங்கும் மறையாமல் மகிழ்ந்து ஆடுக என பாம்பின் சிறப்பைக் கூறுகிறார்.
  
    மூண்டெரியும் அக்கினுக்குள் மூழ்கி வருவோம்
    முந்நீருள் இருப்பினும் மூச்சு அடக்குவோம்
    தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
    தார்வேந்தன் முன்பு நின்றாடு பாம்பே        (30)
  
    கொளுந்துவிட்டெறியும்  செந்தீயில் மூழ்கி வெளிவருவோம். ஆழமான கடலிலும் மூச்சையடக்குவோம். சீரிவரும் கடும்புலியை அடக்குவோம். வேந்தனாகிய இறைவன் முன்பு ஆடு பாம்பே என மொழிகிறார் சித்தர்.

    சிறுபுலி யனையாளி சிங்க முதலாய்ச்
    சிற்றடிக்கு குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
    வீறுபெருங் கடவுளை எங்களுடனே
    விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே   (34)

    புலி யானை சிங்கம் யாளி போன்றவற்றை சிறு உயிர்களுக்கு ஏவல் செய்யச் சொல்லுவோம்.  இறைவனோடு நாம் விளையாடுவோம் என்று ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.
  
    சித்தர் உரையாடலாக சில பாடல்கள் பாடியுள்ளார் அதில் ஒரு பாடலில்

    நடுவால ஆதிசேடம் தன்னை நட்டும்
    நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
    கடுவிசங் கக்கவேயக் கட்செ விகளைக்
    கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே    (39)

    அட்டபந்தத்தின் நடுவே ஆதிசேடனை நாட்டி நான்கு பக்கங்களிலும் மந்தரித்த திருநீறு தூவி நஞ்சைக் கக்கும் பாம்புகளைக் கையிலெடுத்து ஆடுங்கள். எனக் கூறுகிறார் சித்தர்.
    பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில
  
    நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம்
    நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
    கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ
    கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே   (40)
  
    நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அவற்றை எல்லாம் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர்.

    மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
    மாளும்போது கூட அவர் மாள்வதில்லையே
    தக்கவுல கவனைத்தையும் தந்த கர்த்தனைத்
    தாவித்தாவித் துதித்து நின்றாடாய் பாம்பே    (48)

நாம் இறக்கும்போது குழந்தைகள், மனைவி சுற்றத்தார் யாரும் கூடவே இறப்பதில்லை ஆகவே இவ்வுலகைப் படைத்த இறைவனை எண்ணி தாவித் துதித்து நின்று ஆடு பாம்பே என்று நிலையாமையைப் பற்றி விளம்புகிறார் சித்தர்.

    கானலைமான் நீரென்று கண்டு செல்லல்போல்
    காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
    மேனிலைகண் டார்கள்வீணாய் வீம்பு பேசிடார்
    மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே    (49)

மான் கானல் நீரைக் கண்டு ஏமாறுவதுபோல் வினை வசத்தால் மூடர் தகுதியற்றதைக் கண்டு மகிழ்வர் .உலக நிலை கண்டவர்கள் மெய்யான் இறைவன் திருவடிகளையே நாடுவார் என்று ஆடுபாம்பே எனக் கூறி மகிழ்கிறார் சித்தர்.

    காமவிலக்கல் எனும் தலைப்பில் 10 பாடல்கள் உள்ளன அதில் பெண்ணாசையைக் கடுமையாக சாடியுள்ளார். பாடல்களில் சில

    வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
    விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
    ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
    உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே        (51)

    பெண்கள் அழகை விரும்பி மேலும் மேலும் ஆசை கொள்ளும் மாந்தர் இளவம் பஞ்சை பழமென்று காத்திருந்த கிளிபோல் உடல் தளர்ந்ததும் ஆசையை கைவிட்டு ஒடுவர் என ஆடு பாம்பே என்று பாடுகிறார் சித்தர்.

    நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
    நன்னுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
    கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
    கோன் நிலையை யறியாரென் றாடாய் பாம்பே     (57)

    பெண்களின் எச்சிலை அமுதமென்றும் சளியுள்ள மூக்கை குமிழம்பூ என்றும் கூறுவார்கள் மடையர்கள். இறைமை நிலையை அடையமாட்டார்கள் என்று ஆடு பாம்பே. என பெண்ணாசையைச் சாடுகிறார் சித்தர் பெருமான்.

    உடலிழிவைப் பற்றி சித்தர் பெருமான் 10 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில

ஊத்தைக் குழிதனில் மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்ந்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கும் ஆகாதென் றாடாய் பாம்பே.    (60)

மக்கிய மண் குழியில் மண்ணெடுத்து உதிரமாகிய நீரால் உண்டை சேர்த்து  குயவனார் பண்ணும் பாத்திரம் உடைந்த ஓட்டுக்குரிய மதிப்பைக் கூடப் பெறாத என ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பல்பேரறியவே மெத்த வீங்கிப்
பரியாரம் ஒருமாது பார்த்த போது
அரைக்காசுகு ஆகாதென் றாடாய் பாம்பே        (62)

விளையாட்டாக ஓர் ஆடவன் பெண்ணும் கூடியதால் பலரும் அறியும்படி கர்ப்பமாகி வயிறு வீங்கியது.மருத்துவச்சியின் துணையால் கர்ப்பைப்பை குழந்தை கழன்று விழுந்தது.பராசத்தியாகியா மாது இதைப் பரிகாரத்தால்  உடலாகிய பை நீங்குமாறு யோகசித்தி கூடுமென்று ஆடுபாம்பே எனக் கூறுகிறார்.

நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல்
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்தனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே    (64)

நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நில்லாமல் நீங்கும் உலகில் உயிர்களைப் படைத்த இறைவனைப் பற்றி ஆடு பாம்பே என உடலழிவைப் பற்றி பாடுகிறார்.

    மனப் பற்று நீக்கலை பற்றி பல பாடல்கள் யாத்துள்ளார் சித்தர் அவற்றுள் சில.

மனமென்ன்னுங் குதிரையை வாகன மாக்கி
மதியென்னுங் கடிவாளம் வாயில் பூட்டிச்
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே    (78)

மனமென்னும் குதிரையைப் பூட்டி புத்தியை கடிவாளமாகப் பூட்டி, சினமென்னும் குன்றில் சீராக ஏறி சாவாரி சென்றோம் என்று ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

ஆழிபெயர்ந் தாலுமேறு அலையும்
அடியோடு பெயர்ந்தாலும் மன்றிக் கால
ஊழிபெயர்ந் தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே      (85)

கடல் பெயர்ந்தாலும், மேறுமலையே அடியோடு பெயர்ந்தாலும் ஊழியாகிய காலம் பெயர்ந்தாலும் உண்மையான் அறிவு வழியில் நின்றாடாய் பாம்பே என பற்றற்று பகர்கிறார் சித்தர்.

விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
    வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்
    காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
    சுற்றிவலம் வந்துநித்ய சூட்சமங் கண்டும்
உரையற்ற மந்திரம் சொல்லி மீட்டோம்
    ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே    (117)

    விரகம் எனும் குடத்தில் குண்டலிணியை இணைப்போம்.வேதாந்த வெளியாகிய் யோகத்தில் விடுவோம். வினைகளை இதற்கு இறையாக்குவோம். காலமெனும் சுடுவெளியில்  ஆடவைப்போம். குதிரையில் ஏறி உலகம் முழுமையும் வலம் வருவோம் சூட்சமத்தைக் கண்டு வாய்விட்டு உரைக்காத மவுன மந்திரம் கூறுவோம் இதனால் நான்காவதான வீட்டைப் பெறுவோம் என்று சித்தர் கூறி மனித சமுதாய மீட்சிக்கு வழி கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள். பற்றற்று வாழ நமக்குக் கிடைத்த ஞானப்பாடல்கள். முற்றும் துறந்த நிலையில் முழுமைப் பாடல்கள். ஒவ்வொன்றும் உலக ஞனத்தையும் அஞ்ஞானத்தையும் உணர்த்தும் மாமருந்துகள்..

 .