Thursday, December 31, 2015

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் பதில்கள்பேட்டி கண்டவர் முனைவர் பேராசிரியர் சாந்தி சென்னை
1.      கவிதையில் உங்களுக்கு ஈடுபாடு வரக் காரணம்.?                           நான் பிறந்தது தமிழ்க் கவிதைக்  குடும்பம். தந்தை பெருங்கவிக்கோ அவர்கள் எங்களைப் பள்ளிப் பருவத்திலிருந்த்தே கவிதை எழுத ஊக்குவிப்பார்கள். தந்தையார் கவிதைகளும், இந்நூற்றாண்டில் வாழும் கவிஞர்களின் கவிதைகளின் தாக்கமே கவிஊற்றின் காரணம். சமூக அவலங்களைக் காணும்போது எழும் உள்ளக் கொதிப்பே கவிதையின் பிறப்பு.
2.      வணிகவியல் படித்துவிட்டு தமிழ் எழுத்தாளர் வரிசையில் வரக் கார்ணம் என்ன?                                                                பள்ளி நாடகளிலேயே  எழுத்தார்வம் எம்மை ஆட்கொண்டது. தமிழ்ப்பணி எனும் இதழ் தந்தையாரால் தொடங்கப்பட்டு 44 ஆண்டுகளாக் வெளியிட்டு வருகிறேன். புதுமுக வகுப்புக்குப்பிற்குப் தமிழ்ப்பணியின் ஆசிரியராகவும் மாலைநேரக் கல்லூரியில் வணிகவியலும் படித்தேன். தமிழ்ப்பணிக்கென அச்சகம் தொடங்கினேன்.பின் முதுகலை வணிகவியல் அஞ்சல் வழியில் படித்தேன். என் அன்னைக்கு வங்கிப்பணிக்கு யான் செல்லவேண்டும் என்ற பேரவா. தந்தையின் வழிகாட்டுதலில்  தமிழ்ப்பணியே என்னை ஆட்கொண்டது.‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்”                   என்ற வள்ளுவனாரின் எண்ணமே எழுத்தாளர் வரிசையில் வரக் காரணம்.
3.      உங்கள் புத்தகங்களில் ஈழத் தமிழர்கள் குறித்து அதிகம் எழுதியுள்ளீர்கள் அதுகுறித்து சில வார்த்தைகள்?                                ஈழத் தமிழர் போராட்டங்களைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவாக பன்னாட்டுத் தமிழுமன்றம் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழகத்தில் அனைத்துக் கட்சி போராட்டங்கள் தில்லி மாநகர் போரட்டங்கள் சுவிடசர்லாந்து, இலண்டன், அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர் போராட்டங்களில் கலந்து அவர்களுடைய இன்னலில் பங்கேற்றுள்ளேன்.தமிழகத்திலிருந்து எண்ணற்ற் ஈழ மக்கள் புலம் பெயர்வதற்கு என் இல்லத்திலேயே தங்கவைத்து வழிப்படுத்தியுள்ளேன். அந்த புறநானூற்றுத் தமிழர்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளேன்.நம் வாழும் காலத்தில் தமிழர்களின் வீரத்தையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்தியவர்கள் ஈழத்தமிழர்களே.
4.      தந்தை பெரியாரின் சிந்தனைகளை உங்கள் எழுத்துக்களின் பதிவு செய்துள்ளீர்கள் பெரியாரின் கருத்துப்படி பெண்களின் முன்னேற்றம் உள்ளதா இல்லையா?                                             தந்தைபெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் சமத்துவம் தோன்றிருக்காது. தந்தை பெரியார் 94ஆம் அகவை வரை முத்திரப்பையை சுமந்து இறுதி வரை மனித இனதிற்கும் சமூக நீதிக்க்கும் பெண்சமத்துவத்திற்கும் போராடிய மாமனிதர்.. அவர் போராடிய அனைத்திலும் சமூகம் முன்னேற்ற்ப் பாதையில் உள்ளது. பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக உயர்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு மேலாக கோலோச்சுகிறார்கள். சொத்துரிமை, குடும்ப கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு.அனைத்திலும் முன்னனியில் உள்ளார்கள். ஆண்பெண் சமத்துவச் சிற்பி தந்தைபெரியார். அவருடைய பகுத்தறிவுக் கொள்கைகளே தமிழர்களின் ஆயுதம் என்பதில் அசையாத கொள்கையாளன் நான்.
5.      சினிமா  பெண்களை காட்சிப் பொருளாக விளம்பரப் பொருளாக பயண்படுத்திக் கொண்டிருப்பது குறித்து தங்கள் கருத்து?               ”பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்ற பொய்யாமொழியாரின் மொழியை உணராத அறிவிழிகள். பெண் தாயாக, தாரமாக, மகளாக. மருமகளாக, வாழ்ந்து சமூகத்திலும் தலையாய பங்கேற்கிறார்கள். நான் பெண் என்ற தலைப்பிலேயே நெருப்ப்பு நதி நூலில் எழுதியுள்ளேன். அவர்கள் காட்சிப் பொருளல்ல கற்பகத் தருக்கள். அந்தப் படங்களை மக்கள் புறக்கணிபதற்கு கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
6.      இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதலைத் தவிர வேறு சிந்தனை இந்த சினிமா பதிக்கவில்லை அதுகுறித்து உங்கள் கருத்து?                 தமிழர்கள் வாழ்வில் காதல் இரண்டறக் கலந்தது “செம்புலப் பெயல்நீர் போல அன்புடைநெஞ்சம்” என புறநானூற்றும் புலவன் பாடியுள்ளான். காதல் இருபாலாரும் கற்புடன் கடமையுடன் சமூக உணர்வுடன் இருக்கும் காதலாக இருக்கவேண்டும். சாதியை சமாதியாக்கும் ஒரே சக்தி காதல்தான். வரும் படங்கள் காமத்தையே தூண்டுகிறது காதலைத் தூண்டவில்லை கண்டிக்கப் படவேண்டிய ஒன்று.
7.      சமூகச் சீரழிவுகளைக் களைய இளைஞர்கள் மத்தியில் எந்த வழியில் சிந்தனைகளைப் பதிக்க வேண்டும்.                                              ஒவ்வொறு இளைஞனுக்கும் திருக்குறள் மறை நூலாகப் பதியவைக்க வேண்டும். அது வீடு பள்ளி சமுகம் என நம் தமிழர்களுக்குப் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்து வோமானல் சீரழிவுகள் தானகக் களையும்.தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வர்.
8.      நூல் ஆசிரியர் கவிஞர் பேச்சாளர் இதில் எந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்வீர்கள்?                                                               நான் எழுத்துவதையோ பேசுவதையோவிட  செயல் வடிவில் தொண்டாகச் செய்வதில்தான் மகிழ்ச்சியடைவேன். எழுதுவதால் மட்டும் சாதித்து விடமுடியாது அதைப் பின்பற்றினால்தான் சமுதாயம் மேன்மையுறும். என்னுடைய ஒரு நூலின் தலைப்பே “கற்றபின் நிற்க” என வைத்துள்ளேன்
9.      உங்கள் படைப்புகளில் எது சிறந்தது.?                                         என்னுடைய படைப்புகள் அனைத்துமே சிறந்த படைப்புகளாகவே. இருப்பினும்  “யாதும் ஊரே” உலகத் தமிழர்களின் உரைகல். கனடாவில் டோரண்டோ நகரில் இந்நூல் வெளியீட்டின்போது கீதம் வானொலி அறிஞர் கணபதி இரவீந்திரன் ஈழத்தமிழர்கள் பற்றிய நான் ;பட்டியலிட்ட கருத்துக்களை நெகிழ்வுடன் கூறி ஈழத்தமிழர்கள் துன்பத்தை திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார் ஈழத்தமிழர்கள் ஆசிரியருக்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறியது நூலின் பயணை உணர்ந்தேன். மலேசியாவில் ஆய்வறிஞர் அமரர் சந்திரகாந்தன் ஆய்வுரை என உலக நாடுகளில் பலநாடுளிலும் வெளியீடு கண்ட நூல்.
10.   உங்கள் படைப்புகளில் எதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று நினைத்தது உண்டா?                                                                 யான் பர்மா சென்று திரும்பியவுடன் பர்மா மண்ணிலே எனும் நூல் வெளியிட்டேன். இன்னும் விரிவாக பர்மா பற்றி எழுத ஆவல் காலப் போக்கில் நிறைவு செய்வேன்.
11.   தமிழ்நாட்டில் தமிழ் பின் தங்கியதற்கு காரணம் என்ன?                              தமிழ் நாட்டில் தமிழ் பின் தங்கியதற்குக் காரணம் பெற்றோர்களின் ஆங்கில மோகம். கல்வியை அரசு கட்டுப்பாட்டிலிருந்து மெட்ரிகுலேசன் பள்ளி என தனியார் துறையாக்கியது. அரசு பள்ளி ஏதோ எழைமக்களின் புகழிடம் என மாற்றி வஞ்சித்தது. தமிழ் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை அளிக்காதது. தமிழ்நாட்டில் தமிழரல்லாதாரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் 1993ஆம் ஆண்டு தந்தையார் 50 தமிழ் அறிஞர்களுடன் 1330கி.மீ. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக நடைப்பயணமாக வந்தோம். தொடர்ந்து 23 ஆண்டுகாலமாக ஊர்திப் பயணமாக விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடர்ந்து செய்துவருகிறோம். மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். ஆட்சியாளர்கள் கபட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் ஆள வகை செய்யவேண்டும்.
12.   ஒருமொழியின் பொருளாதர பொருளாதார நிலை உயரும்போது மொழியின்நிலை உயரும் இது குறித்து உங்கள் கருத்து?                          தமிழுக்கு எல்லா ஆற்றலும் உண்டு தமிழர்களுக்கு உண்டா. மொழி தலைமுறை தலைமுறையாக வென்று வருகிறது. அது தன் இனத்திற்கு மிகப் பெரிய அரணாக உள்ளது. கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்பது வரலாறு இன்று வாழும் தலைமுறையினர் தம் பொருளாதர வளத்தைப் பெருக்கி மொழியைக் காக்கவேண்டியது அவசியம. அதற்கு ஆட்சியாளர்களைப் பணிய வைப்பதற்கு புரட்சி வேண்டும் அதற்கு தமிழர்கள் அணியமாக வேண்டும். வீன் பிதற்றலால் பயணில்லை.
13.    மலேசிய மக்களுக்கு தமிழ்ப் பற்று அதிகம் காரணம் என்ன என்பது குறித்து கருத்துகள்?                                                     பேரறிஞர் அண்ணா அவர்கள் மலேசியா பயணத்தின்போது மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று குறிப்ப்பிட்டார். இன்றும் அதுதான் தமிழை வாழவைக்கிறார்கள். தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், ஆலயங்கள், பகுத்தறிவு முழக்கங்கள், தமிழ் மாநாடுகள் நூல் வெளியீடுகள்  நாளிதழ்கள் பருவ இதழ்கள் தமிழ் இயக்கங்கள், தமிழ் வானொலி, தொலைக்காட்சி என தமிழ் வளர்ச்சியைப் பட்டியலிடலாம். கற்றணைத்து ஊறும் நூலில் விரிவாகக் கூறியுள்ளேன். 2009 ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு கோலாலம்பூர், ஈப்போ. பினாங்கு. கெடா ஊர்களில் நான்கு நாட்கள் நடத்தினோம். நடத்திய பெருமைக்குரியவர்கள் மலேசியத் தமிழர்களே.
14.   அமெரிக்கா கனடா சப்பான் ஐரோப்பிய தென்ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளில் தமிழின் நிலைகுறித்து தங்கள் கருத்து?     அமெரிக்கத் தமிழர்கள் அனைத்து மாநிலத்திலும் ச்ங்கம் வைத்து தமிழ் வளர்க்கின்றனர். ஆண்டுதோறும் ஃபெட்னா கூட்டமைப்பின் மூலம் மாநாடுகள் நடத்திவருகின்றனர். ஒவ்வொரு சங்கமும் தமிழ் இதழ்கள் நடத்துகின்றனர்.இந்த ஆண்டு சூலை25,26. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 7ஆம் உலகத் தமிழர்கள் மாநாடு வாசிங்க்டன் நகரில் நடத்தினோம் உலகளாவிய பெருமக்கள் பங்கெற்றனர். கனடாவில் ஈழத் தமிழர்களின் தமிழ் உணர்ச்சியையும் வளர்சியையும் கணலாம் டொரண்டோ நகரில்எங்கு நோக்கினும் தமிழ்ப்பெயர்ப் பலகைகள். 15 மேற்பட்ட தமிழ் இதழ்கள்  தமிழ்க் கல்லூரிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். நாள்தோறும் கலை நடன விழாக்காள் ஆண்மிக ஆலயங்கள் என தமிழ் உணர்வு பொங்கும் நாடு கனடா. ஐரோப்பிய நாடுகளில் நாடுகளின் தம் பிள்ளைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர். ஈழத் துன்பத்தல் புலம் பெயர்ந்தாலும் தமிழைத் தன் வாழ்வில் நீங்கா வண்ணம் காத்து வருகின்றனர்.உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் மூலம் 10 மாநாடுகள் உல்கம் முழுமையும் நடத்தியுள்ளனர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் செர்மனி பெர்லின்நகரில் 3ஆம் உலகத்தமிழ்மாநாடு நடத்தினோம். 50 அறிஞர் பெருமக்கள் 50 ஈழக் குடும்பங்களில் தங்கினர். உலகப் பெருமக்கள் பங்கேற்ற மாநாடு இது. தென் ஆப்ரிக்காவில் நம் இந்தியத் தமிழர்கள் தமிழ் மறந்து தமிழ் பெயரளவில் கொண்டுள்ளனர், தமிழ்கத்திலிருந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இராமசாமி பல்கலைகழகமும் இணைந்து தமிழ் பயிற்றுணர்களை உருவாகியுள்ளனர். யானும் தந்தையும் தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோம். கவிவானம் நூலில் பதிவு செய்துள்ளேன். தமிழ்க்கலை ஆலயம் அங்கு சிறப்பாக உள்ளது.
15.   பேச்சுத் தமிழ் குறித்து உங்கள் கருத்து?                                பெற்றோர்கள் இல்லத்தில் தமிழிலேயே மக்களிடம் பேசவேண்டும். ஆனால் மம்மி டாடியும் வாக் பன்னித்  டாக்பன்னி என பன்னித் தமிழ் தமிழர் நாவில் வருவதைக் கண்டு நெஞ்சம் குமுறுகிறது. மக்களை வழிப்படுத்த வேண்டிய ஊடகங்களின் தலைப்பும் பேச்சும் ஆங்கில மயம்.செய்தித் தாள்கள் தமிழ் பத்திரிகை என்ற எண்ணமே இல்லை, நான் பர்மா சென்றிருந்த்தபோது அனைத்து மக்களிடமும் இராமநாதபுர மாவட்ட கொஞ்சு தமிழ் நடமாடியது. உங்கள் தொலைக் காட்சி இங்கு வந்தவுடன் தமிழ் இங்கு கெடுகிறது என்று கூறிய்போது வெட்கித் தலைகுனிந்தேன். தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலக்காத தமிழே பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலம் பேசும் மான உணர்ச்யைக் கொள்ளவேண்டும்.
16.   கவிதைகள் குறித்து உங்கள் கருத்து?                                      தழிழ்க் கவிதையின் பொற்காலம் இக்காலம். மூத்த கவிஞர்களும் இளைய கவிஞர்களும் உலகம் முழுமையும் சாதனை புரிகின்றனர். எல்லா பாவகைத் தளத்திலும் தமிழ்க் கவிதை உச்சத்தில் உள்ளது, இணைய தளத்திலும் கவிதைத் தாய் ஊர்வலம் மிகச்சிறப்பாக உள்ளது. எம் தந்தையார் கூறுவதுபோல் ஒரு தமிழ்க் கவிஞர் நோபல் பரிசு பெறுவார். தமிழ்க் கவிதை தம் வீச்சால்  உலகை ஆள்கிறது.                      
17.   பொதுவுடைமை குறித்து உங்கள் கருத்து                                 பெரியார் சிந்தனைகள் எல்லம் பொதுவுடைமை கருத்து தானே. பெரியார் சிந்தனையாளர்கள் பொதுவுடைச் சிந்த்னையாளர்களே
18.   தமிழ் வளர்வதற்கு அரசு செய்ய வேண்டிய வேலை என்ன.? முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் தமிழுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்து எல்லா நிலைகளிலும் தமிழை முதன்மைப் படுத்தினார்கள் அது தொடர வேண்டும். செம்மொழி எனத் தகுதி பெற்று அதற்கென நிதி பெற்று செம்மொழி மாநாடு உலகமே வியக்கும் வண்ணம் நடத்தினார்கள் தற்போது செம்மொழி என்ற சொல்லே இல்லாமல் புதைக்கிறார்கள் அது யார் ஆண்டாளும் செம்மையாக தொடரவேண்டும். தமிழர்கள் பெட்டகம் அறிஞர் அண்ணா நூலகம் போன்று மாவட்டம் தோறும் தொடரவேண்டும். ஆட்சி மாற்றம் தமிழைப் புதைக்கக் கூடாது. ஆட்சியில் அலுவலில், நீதிமன்றத்தில். கல்விக்கூடத்தில். உயர்கல்வியில் ஆலயத்தில், வாழ்கையில் அனைத்திலும் தமிழை நடைமுறைப்படுத்தவேண்டும்.
19.   மெட்ரிக்குலேசன் கல்வி குறித்து தங்கள் கருத்து?                                         கல்வியை வியாபார மையமாக மாற்றிய ஒரு அமைப்புதான் மெட்ரிகுலேசன் பள்ளி. பெற்றோர்களிடம்பகல் கொள்ளை, பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியம் அவர்கள் கல்லூரி பல்கலைக்கழகமென உயர்வர். அங்கு படித்தவர்கள் பெரும்பாண்மையினர் எவ்வித எம்மொழியறிவும் இல்லாமல் அறிவுமின்றி அல்லலுறுகின்றனர். சென்னை முதல் குமரி முதல் அனைவருக்கும் ஒரே அரசுவழி  தரமான தமிழ் வழிக் கல்வி கொண்ட வரத்  திட்டமிட வேண்டும்.
20.   இலக்கிய உலகில் தமிழின் நிலை முதல் இடத்தில் உள்ளது ஆனால்  நடைமுறையில் ஏன் தளர்ந்து உள்ளது?                                           தாங்கள் கூறுவது உண்மை சங்க காலம் முதல் இன்றுவரை தமிழின் நிலை முதல்நிலையில்தான் உள்ளது. மதத்தைப் பரப்பவந்த மத போதகர்களை ஆட்கொண்டு அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. இன்று தமிழர்கள் அனைத்தையும் படிக்கும் ஆர்வம் பெருக வேண்டும். தமிழ் உணர்வாளர்கள் தமிழுக்காக போராடியவர்கள் போற்றப்பட வேண்டும். வளர்ந்தவர்கள் தங்களைப் பற்றியே தன்னல விளம்பரம் செய்யாமல் அனைவரையும் வெளிச்சம் காட்டவேண்டும். அரசு பரிசுகள் நடுநிலையோடு வழங்கி ஊக்கமளிக்கவேண்டும். ஆசிரியரில் நூல்கள் அரசு நூலகங்களில் கன்னியத்தோடு வாங்கி எழுத்தாளர்களை பாதுகாக்கவேண்டும்.தமிழ் என்றும் முதன்மையாகவே  இருக்கும் தமிழைத் தாங்குவர்களை தமிழர்கள் முன்னிறுத்தவேண்டும்.
21.   தமிழ் மொழியின் ஆய்வுகள் குறித்து ஒரு சில கருத்துகள்?        தமிழ் காட்சிப் பொருளாக இல்லாமல். கருவூலமாகத் திகழ எல்லா நிலைளிலும் தமிழ் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழர்கள் இன்று உலகம் முழுமையும் வெற்றிகொடி நாட்டுவதை தமிழ்த் திரைப்படம் வரும்போது உணரலாம், இந்தத் தளத்தை ஆய்வுக் களமாக எல்லா நிலைகளிலும் முயற்சி மேற்கொள்ளவேண்டும். ஒவ்வொரு உலகப் பல்கலைக்கழகங்களும் தமிழ் இருக்கைகள் அமைத்து உலகத் தமிழர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழனால் முடியும் என்ற சாதனைச் சரித்திரம் நிலைகொள்ளவேண்டும். 
                                                             

No comments:

Post a Comment