Wednesday, October 6, 2010

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் ‘ பாருலாப் பாக்கள்’ நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையத்தள வலைப்பூ அறிமுக விழா





பெருங்கவிக்கோமுன்னிலையில்,மேயர்மா.சுப்பிரமணியன் வலைப்பூவைத் திறக்க தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது


பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் பாருலாப் பாக்கள் நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையதள வலைப்பூ அறிமுக விழா 4-10-10 சென்னையில் கன்னிமாரா நூலக அண்ணா அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

சென்னைமாநகரத் தந்தை வணக்கத்திற்குரிய மா.சுப்பிரமணியன் தமிழ்ப்பணி பிளக்சுபாட் வலைப்பூவை திறந்து வைத்துப் பேசினார். வலைப்பூவில் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது கண்டோர் மகிழ்சிப் பெருக்கில் கரவொலி எழுப்பினர். விழாவிற்கு சா.கணேசன் தலைமை தாங்கினார். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முன்னிலை உரையாற்றினார். கவிமுரசு திருவள்ளுவரின் பாருலாப்பாக்கள் நூலை இலண்டன் கவிஞர் கருணானந்த ராசா வெளீயிட தமிழ் வள்ளல் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் மறைமலை வலைப்பூ பயிற்சி பட்டறையை சிறப்புடன் நடத்தினார்.அவர் அவர் உருவாக்கிய 31 பாவேந்தர் பர்ம்பரைக் கவிஞர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தி உரையாற்றி காணொலியில் காட்டினார்.

கணித்மிழ்ச் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர். இரா.கருணாநிதி,வாழ்த்துரை வழங்கினர். கவிச்சிங்கம் கண்மதியன் வரவேற்புரையாற்றினார். திருக்குறள் மு.வேங்கடேசன் நன்றி நவின்றார். கவிமுரசு வா..மு. சே. திருவள்ளுவர் ஏற்புரையாற்றினார்.

2 comments:

  1. ulakelam paravattum
    polurdhayanithi
    http;//polurdhayanithi.blogspot.com

    ReplyDelete
  2. கவிமுரசு வா.மு. திருவள்ளுவர் அவர்களின் பாருலாப்பாக்க‍ள் என்ற நூலில் உள்ள‍ கவிதைகளைப் படிக்கும்போதே நாமே நேரில் உலகத்தையே சுற்றிவந்த எண்ண‍ம் எனக்குள் ஏற்பட்ட‍தைக் கண்டு ஆச்ச‍ரியம் அடைந்தேன். இவரது சேவை மென்மேலும் புரியவேண்டும் என்று கூறி இந்த சிறியோனுக்கு வாழ்த்த‍ வயதில்லை அவரை வணங்குகிறேன்.

    இவரது பாருலாப் பாக்க‍ள் என்ற கவிதைகளை எங்களது வலைதளமான விதை2விருட்சம் (vidhai2virutcham.wordpress.com)-ல் வெளியிட்டுள்ளோம்.


    - விதை2விருட்சம் வலைப்பதிவு ஆசிரியர்

    ReplyDelete