Thursday, November 21, 2013

மணமகன் சத்திசுகுமார் மணமகள் சுரேகா திருமணத்தை கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் நடத்திவைத்து வாழ்த்திய உரை


கங்காதரன் பானுமதி இணையரின் மகன் சத்தீசுகுமாருக்கும் அண்ணக்கிளி அருணாச்சலம் மகள் சுரெகாவிற்கும் இன்று (17-10-2013) இல்லறம் மேற்கொள்கின்றனர். பெரியார் அண்ணா கலைஞரின் தொண்டராக திருப்போரூரில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமகன் சொக்கலிங்கம் இல்லத் திருமணத்தை நடத்திவைப்பதில் பெரு மகிழ்ச்சி கொளின்றேன். திருமண விழாவிற்கு தலைமையேற்றுள்ள முன்னாள் சட்ட்டமன்ற உறுப்பினர் நன்னிலம் நடராசன், கழக பேச்சாளர் சாமி நாகப்பன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் அன்புதுரை மற்றும் வருகைதந்துள்ள கழகக் குடும்பத்தினர் தாய்மர்கள் சான்றோர்கள் இரு வீட்டார் உறவினர்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக்கொள்கிறேன்

. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இருகோப்புகளில் கையெழுத்திட்டார்கள் ஒன்று சென்னை இராசதனியை தமிழ்நாடு என்று மாற்றியமைக்கு. மற்றொன்று சீர்திருத்த திருமணத்திற்கு எனபதை நாம் எல்லோரும் அறிவோம். இல்லறம் மேற்கொண்டுள்ள மணமக்களுக்கு திருக்குறள் நூல் ஒன்றை பரிசாகத் தந்துள்ளேன். திருக்குறள் படித்திருப்பீர்கள். தற்போது தாங்கள் இருவரும் இணைந்து குறளைப் படியுங்கள். குறள் வழி வாழுங்கள். இயல்பினான் இல்வாழ்ககை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. முயற்சியுடைய வாழ்க்கையின் தலைமையுடைய இல்வாழ்க்கை வாழ்பவர் எவர் என்றால் இயல்பான நடைமுறையில் இல்வாழ்வைச் சமைத்து வாழ்பவரே ஆவர். இல்வாழ்கை மெற்கொண்டுள்ள இணையர்களே நீங்கள் திருக்குறள் நெறி நின்று சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்.

 தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் அயராது தொண்டாற்றும் தளபதி ஸ்டாலின் வழியில் தொண்டற்றுங்கள். தமிழின்ம் எழுச்சியுற தமிழன் தமிழனாக வாழ அயராது பாடுபடும் உறுதியை திருமண நாளில் ஏற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய கையில் இருக்கும் நூலைப் பாருங்கள். புரட்சிக்கவிஞரின் குடும்ப விளக்கு. பாவேந்தர் ஒரு தமிழ்க்குடும்பத் தலைவன் தலைவி மக்கள் உறவு தொழில் காதல் திருமணம் மகப்பேறு தமிழ்க்கல்வி தொண்டு முதுமை என அனைத்தையும் கொஞ்சு தமிழில் தந்துள்ளார். படியுங்கள் படித்து வாழ்க்கைய முழு இன்பத்தோடு வாழுங்கள் என் வாழ்த்துகிறேன்.

 ஒருசெய்தியை நான் இங்குகுறிப்பிட வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் வீட்டுத் திருமணத்தை மதுரையில் நடத்தி வைக்க நாள் கொடுத்திருந்தார்கள். அப்போது அவர் முதல்வர் அன்றைய இரவு ஆட்சியைக் கலைக்கும் கொடுங்கொண்மையை மத்திய அரசு செய்கிறது. இருப்பினும் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு சென்ன்னை வந்தார்கள். தலைவர் கலைஞரைப்போன்ற தலைவரின் மன உறுதியும் எதையும் தாங்கும் இதயமும் நாம் பெறவேண்டும். நம் தலைவர்களின் தடத்தில் நாம் தடம்புரளாமல் நடை போட வேண்டும் எனக் கூறி மணமக்கள் நீடூ வாழா நெஞ்சார வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment