Monday, November 18, 2013

கன்பூசியசும் திரு வள்ளுவரும்


(வள்ளுவர் கோட்டத்தில் குறள்ஞானி மோகன்ராசு அவர்களின் கன்பூசியசும் திருவள்ளுவரும் ஒப்பாய்வு குறித்து கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

          கன்பூசியசும் திருவள்ளுவரும் நூலை ஆய்வுசெய்ய குறள்ஞானி அவர்கள் எம்மைப் ஆய்வுரை வழங்கப் பணித்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தம் வாழ்நாளையே திருக்குறளுக்காக் ஒப்புவித்த பெருமகன் திருக்குறள் நெறியாளர்களை தமிழுலகுக்கு உருவாக்கும் சான்றோன் மோகன்ராசு. இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

        சீனாவின் மறை நூலாகிய லூன்யூ உரைநடைநூல். இருபது இயல்களில் 499 முதுமொழிகள் உள்ளன.அவற்றுள் 424 முதுமொழிகள் கன்பூசியசு உரைத்தவை. 32 முதுமொழிகள் கன்பூசியசு பற்றியவை 43முதுமொழிகள் பிறர் உரைத்தவை திருக்குறள் குறள் வெண்பாவால் அறம் பொருள் இன்பம் என்று மூன்று பால்களால் 133 அதிகாரங்ளில் மொத்தம் 1330 குறட்பாக்களைக் கொண்டது என புள்ளி விபரம் தருகிறார்

         ஆசிரியர் கன்பூசியசின் காலம் கி.மு.551 என்றும் கி.மு.552 என்றும் ஆய்வுகளைக் கொண்டு கனித்துள்ளனர்.காலவேறுபாடு ஒரு ஆண்டு.திருவவள்ளுவர் காலத்டின் மேல் எல்லை கி.மு6027 கீழ் எலலை கி.பி 1000 காலவேறுபாடு 7027 எனக்கூறி கால ஆய்வில் நம் அவலநிலையைச் சாடுகிறார் பேராசான்.

        கல்வியின் மீது இருவரும் குறிக்கோள் எனும் எல்லையில் பெரிதும் ஒன்றுபடிகின்றனர்..மென்மேலும் அறிவினைப் பெறும் மனிதரையே பெருமைக்குரியவராகக் கருதியுள்ளனர்.

      கன்பூசியசு பழ்மையிலும் சடங்குக்ளிலும் ஈடுபாடு கொண்டவர்களாக விளங்க வேண்டும் என லூன்யூ வழி வலியுறுத்துவதை விளக்குகிறார். திருவள்ளுவர் கன்பூசியசின் நோக்கிலிருந்து பெரிதும் வேறுபடிகின்றார்.பழமையில் ஒரளவுபற்றாளராக இருப்ப்பினும் பழமையாயினும் புதுமையாயினும் பயனுடையாதாயின் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற வள்ளுவ நெறியை பதிவு செய்கிறார்


        குறள்ஞானி. பெண்கள் கல்வியில் கன்பூசியசு ஆர்வம் காட்டவில்லை என்றும் வள்ளுவரோ எல்லோருக்கும் கல்வி என புரட்சி செய்த புரட்சிப் பேரறிஞர் எனப் புகழாரம் சூட்டுகிறார் குறள் தூதர். குற்கிய மனப்பான்மை இன்மை , அழுக்காறு இன்மை அவாஎன்மை வெறுப்புண்ர்ச்சிக்கு இடம் கொடாமை பிறர்பொருள் கவர நினையாமை முதலிய அறச்சிந்தனைகள் மாந்தர்களிடம் மிளிர வேண்டும் என விரும்புகின்றனர். இக்கருத்துக்கள் கன்பூசியசின் லூன்யூவை விட திருக்குரளிலேயே விரிவாக இடம் பெற்றுள்ளதை ஆசிரியர் பதிவு செய்கிறார்.

        பிறன்மனை நோக்காமையை பேராண்மை என திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். கன்பூசியசின் கருத்துக்களி. இடம் பெறவிலலை. இதற்கு ச்முதாயச் சூழல் காரணமாக இருக்கலாம் என் ஆசிரியர் குறிப்பிடுகிறார் இருவரும் சொல்வழித்தான அறம் திறம் இரண்டையும் கருதுகின்றனர். இருப்பினும் திருவள்ளுவர் தரும் அழுத்தம் சிறப்பு கன்பூசியசில் காணப் பெறவிலலை என மொழிகிறார்

         ஆசிரியர் கன்பூசியசு இயற்கையில் மனிதர்கள் ஒருவரே செயாலால் வேறுபடுகின்றனர் இக்கருத்து திருவள்ளுவருக்கும் உடன் பாடானதே. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்புநிலையை விளக்குவதில் இருவரும் உடன்படுவதை பதிவுசெய்கிறார். பகையைக் நட்பாகக் கொண்டொலுகும் பண்பு, பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நாகரீகம், பிறன்மனை நாட்டமின்மை, உய்ர்ந்தோர்களுக்கு வேண்டும் என்ற வள்ளுவத்தின் எதிர்பார்ப்புகள் கன்பூசியசு சிந்த்னைகளில் இடம் பெறவில்லை எனப் பகர்கிறார் ஆசிரியர்.

          உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும், நண்பெணும் நாடாச் சிறப்பு என நட்பைப் பற்றி திருவள்ளுவர் சிந்தித்த அள்விற்கு கன்பூசியசு சிந்திக்கவில்லை எனவும் காரணம் சீனாவில் உறவிற்கு இருந்த முதன்மை நட்பிற்கு இல்லாத்ததே எனவும் பதிவு செய்கிறார் பேராசான். கன்பூசியசு உள்ளம் பழமைப் பற்றால் உலகம் என்ற சிந்தனை வெளிபட தடையாக அமைவதாகவும் திருவள்ளுவர் அனைத்துப் பற்றுக்களையும் துறந்ததால் உலகம் அவரைப் பற்றிக் கொண்ட்தாக நயம்படக் கூறுகிறார்.

         வள்ளுவர் கோட்டத்தில் தொடர்ந்து பல்வேறு திருக்குறள் சிந்த்னைகளை திருக்குறள் மையம் நிகழ்த்தி வருகிறது. திருக்குறள் குறித்த முனைவர் பட்டாஆய்வுக்கள் பேராசிரியர் வழிகாட்டுதலில் நடைபெறுகின்றன. கனபூசியசோடு திருவள்ளுவாரை ஒப்ப்பாய்வு செய்த பெருமகனை நெஞ்சாரப் போற்றிகிறேன். உலக மறை நூல்களைப் படிக்க இந்த ஒப்பாய்வு வழிகாட்டுகிறது என்றால் மிகையில்லை. ஆய்ந்தறிந்த சான்றோர் பெருமக்கள் அமர்ந்துள்ளீர்கள். அம்மையார் சிவகாமி நடராசன் இங்கே வருகை தந்திருக்கிறார். எங்களது குடும்பத்தின் நெடுநாளைய நண்பர் அமரர் நடராசன் அவர்களின் துணைவியார் பெருமக்களையெல்லாம் திருக்குறபால் ஈர்த்த குறள்ஞானி அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment