Thursday, November 21, 2013

பாவாணர் கோட்டம் நடத்திய தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பிறந்தநாள் விழா


(முரம்புவில் பாவாணர் கோட்டம் நடத்திய தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பிறந்தநாள் விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

          முரம்புவில் பாவாணர் கோட்டத்தைக் பாவாணரை ஆண்டுதோறும் நினைவில் நிறுத்தி தொண்டாற்றும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் நெடுஞ்சேரலாதன் அவர்களே தலைநகர் தமிழ்ச்சங்க நிறுவனர் ஐயா அழகரசன் அவர்களே வில்லுப்பாட்டுக்கலைஞர் செல்லதுரை அவர்களே திரளாக வருகை தந்துள்ள முரம்பு வாழ் பெருமக்களே சான்றோர்களே முச்சந்திக் கூட்டம் ஆகையால் நெடுஞ்சாலைக் கடைகளில் ஆர்வத்தோடு நிகழ்வைக் கேட்கும் வணிகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை உரித்தாக்குகிறேன் பரிசளிப்பு பொன்னாடை போர்த்தல் வாழ்த்துரைத்தல் என இப் பகுதிவாழ் மக்கட்கு ஒரு மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை பாவாணர்கோட்டம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பாவாணர் கோட்டத்து.ப் பெருமககளை நெஞ்சாரப் போற்றுகிறேன்

        எனனை தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பற்றிப் பேசப் பணீத்துள்ளீர்கள். சென்னை பல்லாவரத்தில் தன் இல்லத்திற்கு முன் உள்ள பூங்காவில் தம் மகள் நீலாம்பிகை அம்மையாரோடு வள்ளலாரின் பாடலான

 பெற்றதாய்தனை ம்கமறந் தாலும்
 பிளையை பெறுதாய் மறந்தாலும்
 உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

 பாடியபோது தேகம் என்ற வட்டமொழிச்சொல்லே சிந்தையில் வேராக நுழைந்து யாக்கை என்ற தமிழ்ச் சொல்லை போட்டிருந்த்தால் சிற்ப்பாக இருக்குமே என்ற எண்ணம் அடிகளாரிடம் முளைவிட்டது. மறைமலையடிகள் 1876 – 1750 வரை வாழ்ந்து தம் வாழ்நாளையே தமிழ் தமிழர்க்கு ஒப்புவித்த பெருமகன்.. இயற்பெயர் சுவாமி வேதாச்சலம்.ஆங்கிலத்திலும் வடமொழியிலும் வல்லுனர், கிருத்துவக்கல்லுரியில் பணியாற்றியபோது அவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள் தணிகைமணி வ.சு செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சிதம்பரனார், திருப்புகழ்மணி டி.எம்.கிருட்டிணசாமி ஐயர்,பெருநாவ;லர் சோமசுந்தர பாரதியார்,திவான்பகதூர் ஆ.வி.கிருட்டிணன் சி.என்.முத்துரங்க முதலியார் பேரறிஞர் வையாபுரிப்பிள்ளை, டாக்டர் சுப்புராயன் என ஒரு மாபெரும் தமிழ்ப் பரம்பரையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். அறிவுக்கடல் என தனித்தமிழ் இதழும் ஆங்கில இதழும் நடத்தி தமிழ் உலகில் வலம் வந்துள்ளார்.

         வடமொழியில் செறிவான புலமையுடைவர் அடிகளார்.மகாகவி காளிதாசரின் சாகுந்தலத்தை தனித்தமிழில் அதன் நயம் குறையாமல் மொழிபெயர்த்து சாதனை படைத்துள்ளார். அடிகளாரின் திருவடி படாத இடங்களே இல்லை எனும் அள்விற்கு தமிழகம்,கொல்காத்தா ,டார்சிலிங் காசி பொன்ற இடங்களுக்குச் சென்று தமிழ் தமிழ்ர் பெருமையை நிலைநிறுத்தியுள்ளார். ஈழம் இருமுறை சென்றுள்ளார். கொழும்பு அனுராதபுரம்,மாத்தளை பொன்ற இடங்களில் தமிழுரை ஆற்றியுள்ளார். ஈழத்து இசை மேதை விபுலானந்த அடிகளைச் சந்தித்துள்ளார். தமிழர்களின் தவப் பேற்றினால் மிகப் பெரும் மாற்றம் உருவானது.அடிகளார் தம் 40ஆம் அகவையில் 1916ஆம் ஆண்டு அவர் ஆற்றிய அனைத்துப் பணிகளுக்கும் உயிரோட்டமாக தனித்தமிழ் இயக்கம் இன்ற பேரியககத்தைக் கண்டார்.

     அடிகளார் அவர்கள் ஒருவர் அல்ல அவர் இயக்கம் என நாடு அறிந்து தனித்தமிழ்த்தந்தை எனப் போற்றி மகிழ்ந்தது. தனித்தமிழுக்காகப் நாமெல்லாம் போராட்டிக்கொண்டிருக்கிற வேளையில் தமிங்கிலத்தமிழ் தமிழ் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நம்மை ஆள்கிற அரசுக்கு தமிழைப் பற்றி எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசுப் பள்ளிகள் ஒன்றுதான் தமிழ் வழியாகப் பயிற்றுவித்து வருகிறது. அதிலும் இடி விழுந்தார்போல் அங்கும் ஆங்கிலக் வழியை புகுத்துகிறார்கள்.

       இதை வண்மையாக கண்டித்து இக்கூட்டத்தின் வாயிலாக கண்டத்தை தெருவித்துக்கொள்கிறேன்.. இதை உடனெ நிறுத்தி எல்லாநிலைகளிளும் தமிழை நடைமுறைப்படுத்தவேண்டும். இதுவே நாம் அடிகளாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment