Saturday, November 16, 2013

அன்னை சேதுமதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்


(அன்னை சேதுமதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2013அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.)

       அன்னையின் நினைவிடத்தில் அருள்திரு மோகனசுந்தரம் அடிகளார் குழுவினர்மலர்க்கோலம் அமைத்து தமிழ் நெறிப்படி அஞ்சலி செலுத்தினார். அருள்திரு சாய்இரவிச்சந்திரசாமிக\ள் புலவர் நெடுஞ்சேரலாதன் புலவர் தமிழாளன்,கவிஞர் அந்தமான் கணேசன்,கவிஞர் காந்தி கவிஞர் பாப்பாங்குளம் பாண்டியன் கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் சிந்தை கோ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்


.          தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார். கிராம மக்கள் அனைவருக்கும் ஆண்டநாயகபுரம் மடத்தில் உணவு வழங்கப்பட்டது.

          திரு பால் செந்தில் அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.

         10-11-2013 அன்று அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முனைவர் பேராசிரியர் முத்துக்குமரன்தலைமையேற்றார் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு ரூ.10,000 பொற்கிழி வழங்கினார்.

         பாராட்டு விருதாக கவிஞர் மாசிலாம\ணி, ஓவியக்கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் புலவர் செகநாதன், கவிச்சுடர் அழகுதாசன், கவிஞர் இளம்விழியன், கவிஞர் சேலம்பாலன், கவிஞர் இரா.சொ. இராமசாமி, ஒயெம்சிஎ பக்தவ்த்சலம் திருகுறள் இலலிதாசுந்தரம், திருக்குறள் செல்லம்மாள் ஆகிய பத்துப் பெருமக்களுக்கு தலா ரூ1000 மும் பட்டயமும் வழங்கப் பட்டது.

         இதழாளர் லேனா தமிழ்வாணன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி     வாழ்துரைத்தார்.முன்னாள் மேயர் சா.கணெசன் பட்டயம் வழங்கினார். தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாறினார். முனைவர் ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார். நிறைவாக பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நன்றி பாராட்டினார்.

No comments:

Post a Comment