Tuesday, November 19, 2013

முரம்பு தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா


[தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை]

          முரம்புவில் பாவாணர் பணியாற்றிய பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெறுவது சாலச் சிறந்த்தாகும். பாவாணர் தனித்தமிழிற்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்தவர். அவர் வழித் தோன்றல்களாக உலகம் முழுமையும் தனித்தமிழ்ச் செம்மல்கள் சீரிய தொண்டாற்றி வருகின்றனர். விழாவை தமிழ் உணர்வோட்டு கூட்டியுள்ள ஆசிரியப் பெருமக்களையும திரளாக ஆர்வத்தோடு அமர்ந்துள்ள மாணவச் செல்வங்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

        பாவாணர் மண்ஆற்றல் பெற்றவர்கள். நம் வழிவழிச் சிறப்பபுகளை காககும் பேறுபெற்றவர்கள்.. தமிழ் அன்னை உங்கள் புண்ணகையில் மகிழ்கிறாள்.

       ஆசிரியப் பெருமக்களே நாம் பெற்றால்தான் பிள்ளைகளலல. படிக்கும் தாய் வயிற்றில் அனைவரும் பிறக்க இயாலாமையால் தனித்தனியாகப் பிறந்தொள்ளோம் எனக் கூறி தம்பி அண்ணன் என்ற தமிழ் உறவை ஏற்படுத்தியவர்கள். அந்த உணர்வுகள் எல்லாம் நம் சமுகத்திற்கு பயன்பட வேண்டும். அன்புச் செல்வங்களே உங்களுக்கு ஆசிரியர் திருக்குறள் நடத்தியிருப்பார்கள். தாங்கள் அனைவருக் இன்றையிலிருந்தே நாளும் ஒரு குறள் படித்து வாருணில் புலவர் நெடுஞ்சேரலாதன் அவர்கள் என்னை முரம்புக்கு அழைத்தமையால் உங்களையெல்லாம் சந்திக்கும் பேறு பெற்றேன். தமிழ் வழி பயிலும் அன்புச் செல்வங்களே நீங்கள் அனைவரும் சுயமாக சிந்திக்கும் ங்கள். திருக்குறள் உங்களுக்கு தன்னம்பிக்கை முயற்சி கற்றலின் மேன்மை என வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும். நான் கேட்ட திருக்குறளையெல்லம் மிகச் சி”றப்பாக பொருளோடு கூறினீர்கள் உங்கள் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்

        .உங்களைப் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களையும் போற்றி மகிழ்கிறேன் வாழ்வில் உன்னத இடத்தைப் பெற்ற பெருமக்களெல்லாம் திருக்குறளின் வழி நின்றவர்களே. இரசியா நாட்டுப் பேரறிஞர் டால்ச்டாய் அண்ணல் காந்தியடிகளுக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளைப் பற்றி எழுதியுள்ளார். அண்ணல் அவர்கள் தென் ஆப்ரிக்காவில் திருக்குறளை தமிழ் மொழியில் படிப்பதற்காகவே நம் தமிழ் மொழியைப் படித்தர்ர்கள் என்பது வரலாறு. பாவாணர் பணியாற்றிய பள்ளியில் பயிலும் நீங்க்கள் திருக்குறளைப் பயின்று வாழ்க்கையில் பின்பற்றி இந்த உலகை ஆள .வேண்டும் என் வாழ்த்தி விடைபெறிகிறேன்

No comments:

Post a Comment