Thursday, February 29, 2024

 



சிவகிரி தமிழ்ச்சங்கம்  திறப்புவிழா மருத்துவர் சாந்தி சரவணபாய், ஆசிரியர் தங்கமுத்து பட த் திறப்பு

தமிழ்மாமணி வா.மு.திருவள்ளுவர்

      சிவகிரி தமிழ்ச்சங்கத்தின் திறப்புவிழாவிற்கு இராயகிரி தமிழ்ச்சங்கு விழா முட்டித்து இங்கு வந்துள்ளேன். அருமை மருத்துவர் செண்பக விநாயகம்  தம் மனைவி மருத்துவர் சாந்தி சரவணபாய் இறந்த நிலையிலும் அவர்கள் பட த்தைத் திறந்து கண்ணீர் மல்க நினைவேந்தல் நிகழ்வாகவும் சிவகிரி தமிழ்ச்சங்க தொடக்க விழாவாகவும் நட த்துகிறார். அவர்தம் துணைவி பட்த்தை நான் திறந்து வைப்பதிலும் சிவகிரி தமிழ்ச் சங்கத்தை திறந்து வைப்பதிலும் நான் பங்கேற்பது கடமையாகக் கருதுகிறேன். கழகப் பொறுப்பாளராகவும் இருந்து இப்பகுதியில் அரும்பணியாற்றுகிறார். தி.மு.க இந்த தொண்டுணர்வையும் தமிழுணர்வையும் ஊட்டியுள்ளது வியப்பில்லை.

தம் மனைவி மட்டுமன்றி இப் பகுதியில் தோன்றி கோவையில் ஆசிரியப் பணியாற்றி மறைந்த தங்கமுத்து அவர்களின் பட த்தை ஆசிரியர் வைரவன் அவர்கள் திறந்து வைத்து அவருடை  சிறப்புக் குணங்களை எடுத்துரைத்தார். தங்கமுத்து அவர்களின் மனைவி இங்கு வந்து பாடிய கவிதை நெஞ்சை நெகிழச் செய்தது. அம்மையாரும் ஆசிரியராகப் பணியாற்றி அவரோடு வாழ்ந்த வாழ்க்கையை பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார், இதைவிட தங்கமுத்து அவர்களின் பெருமைக்கு சான்று வேறு தேவையில்லை. மேழும் இப்பகுதி அறப் பணிகளுக்கு உரூபா 10000  வைப்பு நிதியாக வங்கியில்  செலுத்தி இங்கு தமிழ்சங்கத் தலைவர் செண்பக விநாயகம் கரத்தில் வழங்கியுள்ளார். மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்ற ஆசிரியர் தங்கமுத்து குடும்பத்தாரின்  அற உணவர்வை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

       மருத்துவர் அம்மையார் பட த்தை திற்கும்போது நான் நெகிழ்ந்தேன். ஒருமருத்துவமனை நிறுவி அதை கணவர் பராமரிக்க அரசு மருத்துவராக கணவரின் வேண்டுகோளை ஏற்று பணியாற்றி ஏழை எளியவரின் ஏந்தலாக வாழ்ந்துள்ளார் தம் மகளையும் மருத்துவராக உருவாக்கியுள்ளார். 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற          சொற்காத்து சோர்விலாள் பெண்

        என்ற வள்ளுவப் பேராசானின் குளுக்கு இலக்காக வாழ்ந்த மருத்துவப் பெருமாட்டியை நெஞ்சாரப் போற்ருகிறேன். அம்மையார் அவர்களின் மருத்துவப் பணியை பெருமக்கள் பலரும் நெஞ்சுருகப் போற்றினர். குறிப்பாக கொராணா தீநுண்மி காலத்தில் ஆற்றிய மகத்தான மக்கள்பணி உலகமே போற்றும்பணி. அரசின் விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். மருதுவ குடும்ப பணிகளின் ஊடே இந்த பள்ளியையும் நிர்வாகித்து மருதுவர் செண்பக விநாயகத்தின் கரத்தை வலுப்படுத்தியுள்ளார். 

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சதாற் காணப் படும்

     என்ற வள்ளுவப் பேராசான் குறளுக்கொப்ப அவருடைய வழியினரும்  நிறுவனங்களும் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். ஒங்குக அவர்தம் புகழ். 

       என்னை இங்கு அழைத்துவந்த முறம்பு பாவாணர் கோட்ட நிறுவனர் புலவர் நெடுஞ்சேரலாதன் சிவகிரி தமிழ்ச்ச்ங்கத்தை திறந்து வைத்து  உலகில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் பற்றி உரையாற்றப் பணித்தார். காலையில்தான் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள இராயகிரி தமிழ்ச்சங்க 8ஆம ஆண்டு விழாவில் பங்கேற்று இங்கு சிவகிரி தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைத்துள்ளேன்

      தமிழ்ச் சங்கங்கள் உருவானால் தமிழர்கள் சாதி மதம் கடந்து ஒரு குடைக்கீழ் வளர்வர். சாதி மத த்தை மறந்தாலே நாம் எல்லாம ஒரே தமிழ் என்ற சிந்தனையில் ஒன்று பட சிறந்த வழி. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் என்ற அமைப்பின் வழி உலகத்தையே இணைத்துள்ளோம். உலகம் முழுமையும் 7 மாநாடுகளை நட த்தியுள்ளோம். வெளிநாடுகளில் செருமணி தாய்லாந்து ம்லேசியே அமெரிக்கா போன்ற வெளி நாடுளில் மாநாடுகளை நட த்தி பெருஞ் சாதனை புரிந்துள்ளோம். அமெர்க்காவில் உள்ள 50 மாநிலங்களில் தமிழர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும்  தமிழ்ச்சங்கங்கள் நிறுவியுள்ளனர். இதழ்களும் நட த்தி வருகின்றனர். வளரும் தலைமுறைக்கு தமிழைப் பயிற்றுவித்து வருகின்றனர. ஒவ்வொரு ஆண்டும்  ஃ பெட்னா என ஒருங்கிணைந்து  மாநாடு ஒவ்வொரு மாந்லத்திலும் மாநாடு நட த்தி வருகின்றனர். சிக்காக்கோ நகரில் நடைபெற்ற 10ஆம் உலகத் தமிழ் மாநாட்டை  நட த்திய பெருமையும் இந்த தமிழ்ச்சங்கங்களுக்கு உண்டு. கனடாவில் தமிழர்கள் தமிழ் அமைப்புகள் சிறப்புடன் நட த்தி வருகின்றனர். கனடா தமிழ்ச்சங்கம் என்ற பெயரிலேயா வள்ளிக்கண்ணன் மருதப்பன் மிகச் சிறப்பாக நட த்துகிறார். ஒரு முறை நான் அமெரிக்காவிலிருந்து கனடா சென்றபோது நம் மேனால் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் இறந்தபோது நினைவேந்தல் கூட்டம் நட த்தினர் அதில் பங்கேற்று இரங்கலுரை நிகழ்த்தினேன். கனடா முழுமையும் ஈழத்தமிழர்களின் அர்ப்பணிப்பாண தமிழ்ப்பணியும் ஆலயப்பணியும் நட த்தி வருகின்றனர். இலண்டன் தமிழ்ச் சங்கம் மிகச்சிறப்பாக நடைபெறுகிரது. சென்னை தோசை நிறுவன அசோகன் சங்கத்தின் சங்கத்தில் என்னை வரவேற்று  தொலைக்காட்சி செவ்வி எடுத்தார். 

    ஐரோப்பிய நாடுகள் முழுமையும் தமிழ் அமைப்புகள் மிகச் சிறப்பாக நட த்தி வருகின்றனர். உலகத் தமிழோசை அமைப்பு வளரும் தலைமுறைக்கு தமிழ் பயிற்றுவித்து திருகுறள் போட்டி நட த்துகின்றனர். சென்ற ஆண்டு பிரான்சு சுடார்பக்சு நகரில் நட ந்த பொங்கல் விழாவில் பங்கேற்க என்னை  அழைத்தனர். அவர்கள் தமிழுணர்வையும் பண்பாட்டையும் காக்கும் பாங்கைக் கண்டு மெய்சிலிர்த்தேன். பின் சுவிட்சர்லாந்தில்  நட ந்த திருவள்ளுவர் திருநாளில் பங்கேற்றேன். திருவள்ளுவரை பல்லக்கில் ஏற்றி திருகுறள் ஒதி  மேடைக்கு அழைத்துச் சென்றனர். தமிழர்களில் தமிழுண்ர்வை தாங்கள் நன்கு அறியலாம். 

ஆசுத்திரேலியாவில் தமிழர்கள் பங்களிப்பு மக்த்தானது, தமிழ் அமைப்புகள் வழி எல்லா நிலைகளிலும் உய்ர்த்தி வருகின்றனர். தென்னாப்ரிக்கா மொரிசியசு ரீயூனியன் மடகாசுகர்  பலதலைமுறைகளுக்கு சென்ற தமிழர்களுகு தமிழே மற்ந்துவிட்ட து. இறைவணக்கப் பாடலை ஆங்கிலத்தில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.  அங்கு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கமும் இராமசாமை பல்கைக் கழகமும் இணைந்து தமிழாசியரை பயிற்றுவித்து அங்குள்ள மக்களுக்கு தமிழ் பயில வழிசெய்துள்ளனர். டர்பன்  நகரில்  நடந்த பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்றுள்ளேன். அருகிலுள்ள மலேசியா சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளுக்கு பலர் சென்றுள்ளீர்கள் அங்கு தமிழின் வளர்ச்சி நம்மிடம் போட்டி போட்டுக்கொண்டு வளர்கிறது. துபாய் பக்ரீன் அபுதாமி கத்தார் ஓமன் போன்ற இசுலாமிய நாடுகளில் தமிழ் மாநாடுகள் விழாக்கள் என மிகச் சிறப்பாக தமிழை வளர்க்கின்றனர் 

       இந்தியா முழுமையும் தமிழ்சங்கள் நீகமற நிறைந்துள்ளது. தில்லித் தமிழ்சங்கம் மும்பை தமிழ்ச்சங்கம் பெங்களூர் தமிழ்ச்சங்கம் திருவன்ந்தபுரம் தமிழ்ச்சங்கம் என அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழை வளர்த்து வருகின்றனர்.

       தமிழ்ப்பணி என்ற இந்த் மாத இதழ் 1971ஆம் ஆண்டு தந்தையாரால் நிறுவப்படு தொடர்ந்து 52 ஆண்டுகளாக நட த்தி வருகிறோம். தொடங்கும்போது 12 தற்போது வரை உலகத்தமிழர்களுக்கு அர்ப்பணித்த இதழாக வெளிவருகிறது. இந்த இதழில் தங்கள் உணர்வுகளையும் உலகத்தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். 

      சிவகிரி தமிழ்ச்சங்கப் பெருமக்களே  தமிழர்களை ஒன்றுபடுத்தி தமிழை எல்லா நிலைகளும் மேம்படுத்துங்கள் தமிழர்களாக ஒன்று படுங்கள் . அரும்பாடுபட்டு தமிச்சங்கத்தை நிறுவியுள்ள அனைவரையும் போற்றி விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment