Friday, February 23, 2024




 தென்காசி இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் பட த் திறப்பு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழாவும் மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் அவர்களின் பட த் திறப்பும் இங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு என்னை அழைத்துள்ளீர்கள். உங்கள் பேரன்பிற்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

 சென்ற ஆண்டு இதே நாள் சென்னையிலிருந்து துபாய் வழியாக சூரிச் நகருக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு  பயணமானேன் .  சூரிச் விமான் நிலையத்தில் சுவிட்சர்லாந்து  வள்ளுவன் பள்ளி நிருவனர் முருகவேல் தம் நண்பருடனும்பிரான்சு உலகத் தமிழோசை கிருபானந்தன் அவர்களும் சூரிச் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுது வரவேற்றனர். பின் பிரான்சு சுடார்சுபர்க்  நகருக்கு கிருபானந்தன் தம் மருமகன் ஊர்தி ஓட்ட அழைத்துச் சென்றார். சுடார்சு பர்க் நகரில் பொங்கல் விழாவும் பெர்ன் ந்கரில் திருவள்ளுவர் திருநாளும் கொண்டாடி பாரிசு வழியாக சென்னை திரும்பினேன்.

இவ்வாண்டு நண்பர் பாவாணர் கோட்ட நெடுஞ்சேரலாதன் என்னை இவ் விழாவிற்கு வரவேண்டும் என இரு மாதங்களுக்கு முன்னரே இசைவு பெற்று இங்கு அழைத்துள்ளார். நான் சென்னையிலிருந்து பொதிகை தொடரி மூலம் இராசபாளையம் காலை வந்திறங்கி தொடர் வண்டி நிலையத்திலிருந்து நெடுஞ்சேரலாதனிற்கு தொடர்புகொண்டேன் அவர் தானி வந்து கொண்டிருக்கிறது என்றார் அரைமணிநேரம் கழித்து நான் தானியைப் பிடித்து முறம்பு வரத் தொடங்கினேன். பாவாணர் கோட்டம் பன்னெடுங்காலம் தொண்டாற்றிவருகிறது தாணிஓட்டுநருக்கு கோட்டம் தெரியவில்லை சோழபுரத்தில் இறக்கிவிட்டார். பின் ஒரு பேருந்தில் அங்கிருந்து ஏற்றிவிட்டனர் நெடுஞ்சேரலாதனுக்கு தொடர்பு கொண்டேன் அவர் முறம்பு வந்துவிட்டேன் என்றேன் அவர் ஐயா நான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார் முறம்பில் ஒரு தேனீர் கடையில் காலை 6-30 மணியளவில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தேன். அதுபோது தம் நண்பரோடு நெடுஞ்சேரலாதன் வருகை தந்தார். இது தன் மாணவர் கடை என்று பெருமிதமாக்க கூறினார் அங்கிருந்த மாணவர் மகனுக்கு அவரது அருமை தெரியவில்லை. 

பின் அங்கிருந்து கோட்ட த்திற்கு அழைத்துசென்றார். பெரிய அரங்கம் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளார். தன்னை என்றும் முன்னெடுத்துச் செல்லாமல் கொள்கைக்காகவே வாழும் திருமகன் ஐயா நெடுஞ்சேரலாதனின்  பணியை எண்ணி இறும்பூதெய்தினேன். தம் பாவாணர் கோட்ட படைப்புகளையும் என்னிடம் வழங்கினார். 

 திராவிடக் கொள்கையின் ஆணிவேர் நம் நெடுஞ்சேரலாதான்  நான் இரு ஆண்டுகளுக்கு முன்பு தம்பி கவியரசன் மகள் திருமணத்திற்கு அமெரிக்கா சென்றபோது அய்யாவின் வளர்த்த கிடா மார்பில் குத்துவது வளர்ந்த கிடாவும்தான் குத்துகிறது தம் பாவாணர்கோட்ட  பதிவுகள் நுல்கள் என 5கிலோ இருக்கும் அமஎரிக்காவிற்கு கொண்டு செல்ல அனுப்பிவைத்தார். எம் பொருளையெல்லம் இங்கு வைத்துவிட்டு அந்தப் பொதியை கொண்டு சென்று சிக்காக்கோ பாபுவிடம் வழங்கி நெடுஞ்சேரலாத  அரும்பணியைப் பற்றிக் கூறினேன். இயல்பாக உணர்வோடு உந்துதலோடு வளர்பவர்களை சிதைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க க் கூடாது. மலேசியாவிற்கு பாரதியார் விழாவிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு தனித்தமிழ அன்பர் திருவளவனோடு இணைந்து ஆற்றிய பணி அளப்பரியது.

பின் அவரது இல்லம்  சென்றோம் அன்பே உருவான் ஐயாவின் துணைவியாரை வணங்கினேன்.அவரது வழியினர் வாழ்வு பல்வேறு சிக்கலில் உள்ளதால்  அவர்துணைவியார் நெடுஞ்சேராலாதன் மேல் மிக க் கோபாமாகா இருந்தார். தம் பெண்டு பிள்ளை பதவி பணம் என்று வாழும் பண்டாரப் பரதேசிகள் உள்ள நாட்டில் கொள்கை மாறாச் சிங்கமாக தனித்தமிழ் காக்கும் மறவராக பகுத்தறிவுக் கோமானாக வலம் வருகிறார் நம் நெடுஞ்சேரலாதன். 

அவர் இல்லத்திலிருந்து இராயாகிரிக்கு அழைத்து வந்தார். தாம் பிறந்த மண் இராயகிரி என பெருமை பொங்க கூறினார். வரும் வழியெங்கும் மலைகளும் ஏரிகளும் பசுமைக் கம்பளம் விரிதாற் போன்று செழிப்பாக இருந்த து. அருவிகள் பல இங்கு உள்ளன ஓய்வாக வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றார். தம் இளமை கால நண்பர் ஒருவரை அன்போடு அனைத்து சிறு கடையில் உணவு வழங்கினார். நம் நெடுஞ்சேரலாதன். இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்கு காரணம் நான் அரும்பாடுபட்டு இந்த இராயகிரிக்கு வந்துள்ளது இராயகிரியில் பிறந்து அருந்தொண்டாற்றும் நெடுஞ்ச்சேரலாதனின் தமிழ்தொண்டு ஒன்றே.இந்த மண்ணில் பிறந்து தமிழிற்கு அரும் பணியாற்றிய அருணாச்சலனார் முத்துசாமிப் பெருமகன் கந்தசாமிப் புலவர் போன்றோர் படங்களெல்லாம் இங்கே வைத்துள்ளீர்க்ள். இன்றும் தமிழ் வாழ்கிறது என்றால் இங்கு பிறந்த பேரறிஞர்கள்தான்.  

மேனாள் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் பட த்தை தென்காசி மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் இராச ஈசுசரன் மிகப் பொறுப்புணச்ச்சியோடு பட த்தை திறந்து வைத்து சென்றிஉக்கிறார். தி.மு.க. ஒன்றுதான் மக்களோடும் தமிழோடும் பயணிக்கிறது என்பதற்கு சிறந்த் சான்று. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியார் அண்ண கலைஞர் வழியில் இயக்கத்தை வழிட த்துகிறார். தமிழ் உணர்வையும் பகுத்தறிவு இய்க்கத்தையும் கட்டிக் காக்கும் இயக்கம் தி.மு.க.

அமர ர் சிவசுப்பிரமணியம் அவர்களின் சகோதர ர்  மக்கள் அனைவரும் அவரின் புகழ் பாடுவதோடு மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியத்தில் சான்றுகளை அடுக்கி வந்தனர் . எனக்கு பெருமகிழ்வாக இருந்த து. தம்பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறார் குற்ப்பாக அவர் மகள் பாடகர் பாடும்போது என் தந்தை இந்தப் பாடலை உணர்ந்து மகிழ்வார் இந்தப் பாட்லைப் பாடுங்கள் எனக் கூறியபோது எந்த அளவுக்கு இணைந்து வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. 

சிவசுப்பிரமணியம் துணைவியார் இங்கே அமைதியின் வடிவாக அமர்ந்துள்ளனர். கால்நடை மருத்துவராகவும் தமிழ்ச்சங்கத் தலைவராஅகவும் பொதுநலத் தொண்டராகவும் வாழ்ல்ந்திருகிறார் என்றால் முழுமையும் அம்மா அவர்களின் அர்ப்பணிப்பான வாழ்க்கையே ஆகும்.  

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்                  ஏறுபோல் பீடு நடை

என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த பெருமாட்டி. இறப்பு என்பது தூங்கி எழுவது போன்றது என்கிறார் நம் வள்ளுவப் பேராசான். அம்மையார் ஐயா அவர்களின் பசுமையான் நினைவோகளோடு வாழுங்கள் என வேண்டுகிறேன்.

          தில்லியில் பணிபுரியும் அவரது மகன் ஞனசம்பந்தன் உரையைக் கண்டு மகிழ்ந்தேன். வெளியூர் சென்றால்தான் நம் மொழியின் அருமை தமிழர்களின் பெருமை புரியும். மிகச் சிறப்பாக ஒரு தமிழியக்கவாதி போன்று உரையாற்றினார். மிகச்சிறப்பு தங்களின் பங்களிப்பு இராயகிரி தமிழ்சங்கத்திற்கு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      நினைவு மலர் ஒன்று வெளியிட்டுள்ளீர்கள்.  மறைந்த மருத்துவரின் பெருமைக்கள் அனைத்தும் அடங்கிய மலராக உள்ளது. அதில் நெடுஞ்சேரலாதனின் கவிதை இராயகிரி மலைகள் மேல விளக்காக நம் ம்ருத்துவரின் பெருமையைப் பேசுகிறது. தலைவர் குருசாமி தம் கட்டுரையில் தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவோம் என்று எழுதியுள்ளார். கட்டாயம்  இதைச் செய்யவேண்டு. சாதி மத அடையாளங்களை துறந்து தமிழர்களாக இணைந்து கட்டிடம் கட்டுங்கள்.

 உலக நாடுகளிஎல்லாம் தமிழர்கள் தமிழியக்கங்கள் கட்டிடங்கள் கட்டி சிறந்த தமிழ்த்த் தொண்டாற்றுகின்றனர். மலெசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் சிறு கிராமங்களில்கூட கட்டிங்கள் கட்டி தமிழ்த் தொண்டு புரிகின்றனர். அருமை இராயகிரி தமிழ் உள்ளங்களே ஐயா சிவசுப்பிரமணியம் காட்டிய வழியில் பணியாற்றி தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் உருவாக்கி தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என வேண்டி விழைகிறேன். இனமானக் காவலர் பேராசியர் க.அன்பழ்கனார், நாவலர் நெடுஞ்செழியன் தமிழர் தலைவர் வீரமணி போன்றோருக்கு தமிழ்ப்பாலூட்டிய தமிழ்ப் பேராசிரியர்கள் பிறந்த மண்ணில் உரையாற்றியதை பெரும் பேராகக் கருதுகிறேன். வாழ்க இராயகிரி தமிழ்ச்சங்கம் சிவசுப்பிரமணியனார் புகழ் ஓங்குக. 

No comments:

Post a Comment