Tuesday, April 12, 2022

அரிமா இயக்கத்தில்    விஞ்சி நிறபது தொண்டா  தோழைமையா பட்டிமன்றம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

அரிமா மாவட்டத்தின் தமிழ் ஆளுமை மிக்க ஆளுநர் பெருமகன் இன்பத் தமிழை செல்லும் இடமெல்லாம் அன்று முதல் இன்று வரை தடம் மாறாமல் ஒலிக்கும் மாசிலா மாணிக்கம் அவர்களே துணை நிலை ஆளுநர்களே ஒரு தமிழ் விழாவை அரிமா நண்பர்களைக் கொண்டே நடத்த ஆளுமையான செயல்திறன் படைத்த அரிமா சுரேசு பாபு அவர்களே பட்டிமன்ற நடுவர் அடக்கத்தின் சிகரம் நம் அரிமா சட்டக் கையேட்டை செந்தம்ழில் வழங்கிய மூத்த வழக்கறிஞர் அரிமா சம்பத் அவர்களே  தொண்டே எனும் தலைப்பிலும் தோழமையே எனும் தலைப்பிலும்  வாதிட வரும் என் அருமை அரிமா நண்பர்களே  வாழ்நாளில் கிடைத்டற்கரிய செல்வமாக நான் என் எண்ணும் அரிமா தோழமைகளே அவர்தம் வாழ்க்கைத்துணைநலங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரிமா இயக்கத்தில் தொண்டும் தோழமையும் இணைந்து செல்லும் ஆளுமைகள். இதில் விஞ்சி நிறபது எது என்றால் தோழைமையே.                                                    

நான் பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியுள்ளேன் இதைக் கண்ட என் நண்பர் அரிமா பசீர் அகமது அனைத்துத் தோழமைகளும் தாங்கள் காணவேண்டும் என்னை இந்த இயக்கத்தில் அறிமுகப் படுத்தினார்  இயக்கத்தில் வெள்ளிவிழாக் காண உள்ளேன். இதில் மதம் மொழி சாதி அனைத்தையும் தோழமையின் ஒருருவாக இந்த அரிமா இயக்கத்தைக் காண்கிறேன்.

 நம் மாவட்ட்த்தில் தேர்தல் எந்த அளவுக்கு உச்சமாகவும் வேகமாகவும் நடக்கும் என்பது நமக்குத் தெரியும். அதில் வென்றவர் உடனே தோற்றவருக்கு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறுகிறார் என்றார் இங்கே எது விஞ்சி நிற்கிறது தோழமைதானே தோழர்களே..

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்          பண்புடை யாளர் தொடர்பு  (783)  

படிக்கப் படிக்கப் இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.. 

தொழமையின் சிறந்த விழா நம் சித்திரைத் திருவிழா. மதுரை மாநாகரில் எழுச்சிக்கோலமாக அனைத்து மக்களும் வேறு[பாடின்றி சித்திரைத் திருவிழாவை கொண்டாடுவர் மதுரை மாநகரில் நடைபெறும் திருவிழாவை இன்று நாம் சென்னையில் தியாக ராயர்  அரங்கில் நடத்துகிறோம்.மதுரை அருகில் உள்ள  கிராம மக்களெல்லாம நடத்தும் அருமை தோழமைகளின் திருவிழாதன் சித்திரைத் திருவிழா.                                            இன்று அறிஞர் வாசிக்கலாநிதி கி.வ.சா. அவர்களின் பிறந்தாநாள் அவர் பிறந்த நன்நாளில் அரிமா தமிழ்த் திருவிழா நடப்பது மகிழ்சிக்குரிய ஒன்றாகும். ஒருமுறை கி. வ. ச. அவர்களை பலசரக்குக் கடைக்காரர் சந்தித்தார். தாம் ஒரு கடை திறப்பதாகவும் அந்தக் கடையில் கடவுள் படம் வைக்கப் போவதாகவும் விநாய்கர் முருகன் இலக்குமி எந்தப் படம் வைக்கலாம் எனக் கேட்டார். உடனே கிவசா அவர்கள் எந்தப்படம் வேண்டுமானலும் வைக்கலாம் ஆனால் கலப்படம் மட்டும் வைக்காதீர்கள் என சிலேடை நயத்தோடு  கூறும் ஆற்றல் பெற்ற அறிஞர் பெருமகன் திருநாள்.                                         அரிமா நண்பர்களின் தோழமைக்கு ஒரு சான்று கூறுகிறேன் நான் நேற்று ஆதம்பாக்கம் அமரர் இராமலிங்கனார் நிகழ்வுக்கு பார்வையாளராகச் சென்றேன். அங்கு நம் அரிமா மகாலிங்கம் நெறியாளராக நிகழ்ச்சி நட்த்தினார். அமர்ந்திருந்த என்னை உரையாற்றுவார் என அழைத்தார் நான் வருவதும் அவருக்குத் தெரியாது ஆனால் அந்த்த் தோழமை உணர்வு பேரறிஞர்கள்  மத்தியில் அழைத்தார் என்றால் தோழமையின் சிறப்பு அல்லவா.               .                                                  ஒரு மருத்துவமனையில் என் ம்கன் மருத்துப் பணிக்காக நான் மருத்துவ மனையில் இருந்தேன். அதுபோது திருவள்ளுவர் என்ற குரல் என்னை அழைத்த்து சென்று பார்த்தேன் நான் பெரிதும் போற்றக்கூடிய அரிமாப் பெருமாட்டி. தைரியமாக செல்லுங்கள் நீங்கள் நலமோடு திரும்புவீர்கள் என வாழ்த்தி அனுப்பினேன், நல்மோடு திரும்பினார் இன்னும் நுறாண்டுகள் நலமாக வாழ்வார். இந்த உணர்வுதோழமையின் உணர்வல்லவா.

 இங்கே அமர்ந்திருக்கும் அரிமா இலக்குமி சங்கர் சங்கர் அவர்களின் தோழமை உணர்வு இல்லாமல் நம்மோடு பயணிக்க முடியுமா. சிறந்த பணியாற்றும் அரிமா பத்மாவின் கணவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் அவர்து தோழாமைதான் தொண்டுக்கு ஆதாரம். நம் அரிமா நங்கையர்களெல்லம் சிறப்பாக ஆடினார்கள் அவர்கள் ஆட்டம் எலோரையும் மகிழ்வித்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதன வழிப்படுத்திய அரிமா பாவனா கூறினார்கள் தோழ்மையால்தான் இச் செயல் முடிந்த்து என்று. உண்மை நண்பர்களே தோழமையால்தான் எதையும் சாதிக்க முடியும்.

  எந்தத் தொண்டும் தோழமையின் வலிமையில்லாமல் தொண்டு சிறக்காது. அரிமா நண்பர்கள் பலரது நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்திவிட்டுக் கூறுவார்கள் இது என்னால் அல்ல என் குழுவைச் சேர்ந்த நண்பர்களால்தான் என்று. உண்மை நண்பர்களே தோழமைதான் எந்த்த் தொண்டுக்கும் அச்சானி. 

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு    அரும்பொருள் யாதொன்றும் இல் (462)  

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றவேண்டிய செயலை ஆராய்ந்து தாமும் நன்கு சிந்தித்து செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. 

நேற்று நம் இப்தார் நோண்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன் மத வேறுபாடின்றி அரிமா நண்பர்கள் அனைவும் தோப்பி போட்டுக்கொண்டு வணங்கிய நிகழ்வு தோழமையின் சிகரமல்லவா.  அருமைத் தோழர்களே . அரிமா இயக்கத்தில் விஞ்சி நிற்பது தோழமையே தோழமையே எனக்கூறி நிறைவு செய்கிறேன்.

(11 – 4- 2022 அன்று அரிமா இயக்கத்தில்    விஞ்சி நிறபது தொண்டா  தோழைமையா பட்டிமன்றத்தின்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை))


No comments:

Post a Comment