Thursday, February 10, 2022





 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 87ஆம் அகவைத் திருவிழா மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 87ஆம் அகவைத் திருவிழா மூன்று நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்புடன் நடைபெற்றது.பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். மூத்தகவிஞர் முனைவர் இரவிபாரதி தலைமை தாங்கினார்..எழுத்தாளர் சங்கத்தலைவர் முனைவர் பெரியண்ணன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் வா.மு.சே.ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார்.வழக்கறிஞர் சிவகுமார் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் இதயகீதம் இராமானுசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .

அன்னை சேதுநினைவ்லைகள் நூலை எழுத்தாளுமை வேந்தர் லேனாதமிழ்வாணன்  வெளியிட முதல் நூலை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் பெற்றார். தமிழ் முழக்கம் நூலை நீதியரசர்  இரா.காந்தி வெளியிட முதல் நூலை வழக்கறிஞர் சாசகான் பெற்றுக் கொண்டார். தமிழ் நடைப்பாவை நூலை தி.மு.க. இலக்கிய அணி செயலர் முனைவர் சந்திரபாபு வெளியிட முதல் நூலை வழக்கறிஞர் மோ.அ.சுப்பிரமணியம் , பாவலர் கணபதி பெற்றுக்கொண்டனர்.

முனைவர் சோ.கருப்பசாமி கவிஞர் தமிழியலன் கவிஞர் மார்சல் முருகன் பொறிஞர் பீட்டர்ராசன் சித்தமருத்துவர் பாக்கம் தமிழன் நூல் ஆய்வுரை வழங்கினர். 

கவிச்சிங்கம் கண்மதியன் தலைமையில் ;பெருங்கவிக்கோ வாழ்த்துக் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் பெருமக்கள் குடியாத்தம் குமணன் பாவலர் இராமச்சந்திரன் கவிஞர் நல்ல அறிவழகன் கவிஞர் வீரமுத்து கவிஞர் நந்தா கவிஞர் சுமி, கவிஞர் சுப சந்திரசேகர். கவிஞர் ஆசுகவி இனியா கவிபாடினர்.


கலைமாமணி தி.க.ச. கலைவாணன் தமிழ் வாழ்த்துப் பாடினார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் சிந்தை கோ.சேகர், கோபாலகிருட்டிணன் விழாவை ஒருங்கிணைத்து சிறப்புடன் நடத்தினர். 


No comments:

Post a Comment