Sunday, January 23, 2022

 உலகை ஆளும் திருக்குறள் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்



 
  

                                                                     விசிபி உலகத் தழிழ்சங்கத்தின் சார்பில்    உலகமெலாம். வாழும் தமிழர்களோடு உரையாட இந்நிகழ்வில் பங்கேற்பது பெருமகிழ்ச்சியடைகிறேன் தமிழர்கள் மேன்மையுறுவதில் விசிபி குடும்பத்திற்கு பெரும் பங்களிப்பு உண்டு. அன்னையைப் போற்றுவதிலும் சகோதரத்துவத்தை பேணிக் காப்பதிலும் விசிபிக் கு நிகர் அக்குடும்பமே. உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர்பெருமகன் உலகமெங்கும் 133 ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவிய தொண்டறச் செம்மல் செவாலியர் வி.சி.சந்தோசம் அவர்கட்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணிவிழாக் காணும் இராசாதாசு அவர்கட்கும் இந்தக் காணொளியைக் காணும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு என் திருவள்ளுவர் ஆண்டு 2053 தமிழாண்டு புத்தாண்டு வாழ்த்துகளையும் வணக்கத்தைத் தெரிவிததுக்கொள்கிறேன்                         

   மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்                                                                      ஆகுல நீற பிற                                                                                                                                    வள்ளுவப் பெருமான் கூற்றைப் பார்த்தீர்களா பெருமக்களே. எந்த அறத்தையும் விட மனத்தில் மாசிலாமால் வாழ்வதுதான் சிறந்த அறம் என்கிறார். மனத்தில் மாசில்லாமல் இருந்தால்தான் உலகில் உயர்ந்த அறத்தை செய்யமுடியும். உலகில் வாழும் மாந்தர்கள் அனைவருக்கும் கூறியுள்ளார். மதம் மொழி இனம் நாடு அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாம் திருக்குறள் உலகிற்கு உணர்த்துகிறது நம் அண்ணாச்சி சந்தோசம் அவர்களின் தொண்டே இதற்குச் சான்று மதத்தை எல்லாம் கடந்து உலகெங்கும் 133 திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். யார் திருவள்ளுவர் சிலை வேண்டினாலும் அவரே தாயார் செய்து அந்த நாடுகளுக்கு அனுப்பி தாமே திறந்துவைக்கிறார். பல்வேறு நிகழ்வுகளில் நான் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் .

         முத்தமிழறிஞர தலைவர் கலைஞர் பெருமகன் திருவள்ளுவர் சிலையை குமரியில் 133 அடியில் நிறுத்தி உலகை உற்று நோக்கவைத்தார். சென்னையில் வள்ளுவர் கோட்ட்த்தை நிறுவி 1330 குறள்களையும் சலவைக் கல்லில் செதுக்கி மக்கள் நெஞ்சில் நிறைந்துள்ளார். அனைதுப் பேருந்துகளிலும் திருக்குறள் எழுதப்பட்டு வலம் வருகிறது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்  அனைத்துப் பெருந்திலும் தெளிவுரையுடன் வண்ணமாயமாக உள்ளது.

     திருக்குறள் உலகை ஆள வித்துட்டுள்ளார். அண்ணல் காந்தியடிகள் தெனாப்ரிக்காவில் இருக்கும்போது டால்ஸ்டாயின் படைப்புகளைப் பாராட்டியபோது அவை தங்கள் நாட்டில் வாழ்ந்த திருவள்ளுவர் சிந்தனைகள்தான் என டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார்.                                                                 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண                                                                              நன்னயம் செய்து  விடல்                                                                                       நமக்கு தீமை செய்தவருக்கும் அவர் வெட்கி நாணும் அளவிற்கு நண்மை செய்தல் . ஏசு பெருமானும் ஒருகண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்பதை ஒத்தது..    உடனே அண்ணல் அவர்கள் அங்கு வாழ்ந்த தில்லையாடி அம்மையாருடான் தமிழ் பயின்று திருக்குறளைத் தமிழில் பயின்றார். செம்மொழி அறிஞர்  சார்ச்காட் ஆங்கிலம் சான்சுகிரிட் இருமொழியிலும்திருக்குறளைப்  படித்துள்ளேன் தமிழில் படிக்கும்போதுதான் திருக்குறளை உணரமுடிகிறது என்கிறார். 

    மலேசியாவில் எழுத்தாண்மை ஏந்தல் பெரு அ.தமிழ்மணி நடத்திய மாநாட்டில் உலகத் தமிழ்மறை மாநாட்டில் அண்ணாச்சி சந்தோசம் அவர்களும் சகோதர் இராசாதாசு அவர்களும் அமரர் மூவேந்தர் முத்து அவர்களும் நானும் இணைந்து ஒருங்கிணைத்து நட்த்தியது பசுமையாக நினைவில் உள்ளது. அண்ணாச்சி அவர்கள் மலேசியாவில் நிறுவ திருவள்ளுவர் சிலையை உருவாக்கி மலேசியா தோட்டப்புற மாளிகையில் டத்தோ சாமிவேலு டான்சிறி சோமசுந்தரம் மற்றும் உலகளாவிய பெருமக்கள் பங்கேற்று திறந்துவைத்துச் சிறப்பித்தனர். நான் ஒவ்வொறு முறை மலேசியா செல்லும்போதும்  தோட்டப்புற மாளிகையில் உள்ள திருவள்ளுவரை வணங்கி வருவது வழக்கம் மலேசியத்தமிழர்கள். திருக்குறளைப் பரப்புவதில் தலைசிறந்தவர்கள். பத்துமலையில் திருக்குறள் அனைத்தையும் பதித்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். மலேசியப் பல்கலைக் கழகத்தில் எண்ணற்ற திருக்குறள் மாநாடு நட்த்திய பெருமை மலேசியத் தமிழர்களுக்கு உண்டு. இலங்கையிலிருந்து நெல்லைக்கு  மதம் பரப்ப வருகை வந்த  தனிநாயம் அடிகள் தமிழ் பயின்று பட்டம் பெற்று மலேசியப் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். திருகுறள் குறித்த ஆழாமன சிந்தனைகளை வழங்கிய பெருமை அடிகளாருக்கு உண்டு. உலகத் தமிழ்மாநாடு நடத்துவதற்கு வித்திட்டபெருமை அடிகளாரையே சாரும். 

    சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் திருக்குறளை முன்னிறுத்துவதில்     தலைசிறந்த தமிழர்கள். எண்ணற்ற திருக்குறள் மாநாடுகள் கூட்டங்கள் நடத்தி சிங்கைத் தமிழர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். சிங்கை அரசு சிங்கப்பூரின் மையப் பகுதியில் சாக்ரட்டிசு அரிசுடாட்டில் போன்ற உலக அறிஞர்களோடு திருவள்ளுவரை நிறுவி உலகின் பார்வையை ஈர்த்துள்ளனர்  

                .மியான்மார் நானும் தமிழாகரர் ஆறு அழகப்பனாரும் சென்றிருந்தபோது தட்டோன் நகருக்கு சென்றிருந்தோம். தட்டோன் நகரில்  மியான்மார் வாழ் தமிழர்கள் வள்ளுவர் கோட்டம் நிறுவியுள்ளனர். திருவள்ளுவர் சிலை கலைஞர் திருக்கரத்தால் தொட்டு உருவாக்கிய சிலை. அந்தக்கோட்டத்தில் வள்ளுவரை சிலையை வணங்கும்போது அருளாளர் குருசாமி திருக்குறள் ஓதி எங்களை வரவேற்றார். யங்கூன் சாலையில் திருவள்ளுவர் படத்தை வைத்து வணங்கி ஊர்வலாமக தமிழர்கள் வலம் வந்து வணங்குகின்றனர்.                         

    சிக்காக்கோ நகரில் நடைபெற்ற 10ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் அண்ணாச்சி அவர்கள் நிறுவிய 50ஆவது சிலையை நிறுவும் நிகழ்வில் பங்கேற்கும் பேறு பெற்றேன். அந்த மாநாட்டை நடத்திய  பெருமக்கள் அறிஞர்கள் மருத்துவர்கள் தொழில் வல்லுனர்கள் ஆய்வாளர்கள் என பல்தரப் பட்ட தமிழர்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டு என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அம்மாநாட்டில் திருக்குறள் சிந்தனைகள் தமிழர்கள் சிந்தையெல்லாம் நிறைந்தன. சிக்காக்கோ நகரில் வாழ்ந்து அண்மையில் மறைந்த அறிஞர் இராம் மோகன் திருக்குறள் பைபில் பதிப்புகு மேலாக பதிப்பித்து உலகம் முழுமையும் பரப்பியுள்ளார். திருக்குறள் மூலம் உரை ஆங்கில மொழியாக்க ஆங்கில உரை கதைகள் ஒவியம் என அனைத்து நிலையிலும் பதிப்பித்துள்ளார். அமெரிக்கா வாசிங்டன் நகரில் அறிஞர் பிரபாகரன் ஏச்லேஸ் விஸ்டம் நூலை துணைவேந்தர் சுந்தரமூர்த்தி வெளியிட நான் பெற்றுகொண்டேன். புத்தர் கன்பூசியஸ் போன்ற உலகளாவிய அறிஞர் பெருமக்களை ஒப்பிட்டு வள்ளுவத்தின் உயர்வை எழுதியுள்ளார். அண்ணாச்சி அவர்கள் நிறுவிய சிலை வாசிங்க்டன் முருகன் கோவிலில் தமிழ்ச்சங்கத் தலைவர் சான்பீட்டர் தலைமையில் திறக்கப்பட்டது. 

தந்தை பெரியார் அவர்கள் 1949ஆம் ஆண்டு நட்த்திய மாநாடுதான் திருக்குறள் பாமரர்களுக்கும் செல்லும் சூழல் ஏற்பட்டது. அந்த  மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் திருவி.க கி.ஆ.பெ.வி. போன்ற பெருமக்கள் கலந்து கொண்ட மாநாடு. அப்போது தந்தை பெரியார் அவர்கள் திருக்குறளுக்கு அவரவர் போக்குக்கு உரை எழுதுகின்றனர். நடுநிலையோடு எழுத வேண்டும் என்று கூறினார். புலவர் குழந்தை நாவலர் நெடுஞ்செழியன் தலைவர் கலைஞர் அறிஞர் மு.வ.போன்றோரின் உரைகள் வெளிவந்தன. 

        திருக்குறளை .வீரமாமுனிவர் இலத்தீனிலும் எச் டபில்யூ எல்லீசு,டபில்யூ எச் ட்ரூ, சி.யூ கோவர், ஈ.ஜே.இராபின்சன்,, ஜே.லாசரஸ், ஜீ.யூ.போப்,  போன்றோர் ஆங்கிலத்திலும் எம்,ஏரியல், தூமா, எம் லாமரஸ், பிரஞ்சிலும்  டாக்டர் கிரால் இலத்தினிலும் செர்மனிலும் மொழிபெயர்த்து மேலை நாட்டவர்க்கு வழங்கினர்.                               

        அறிஞர்   ஏரியல் திருக்குறள் மனித இனத்தின் மிக உயர்ந்த மிகத் தூய்மையான வெளிப்பாடுகளில் ஒன்று எனக் குறிபிடுகிறார்.

              இறுதியாக ஒரு பதிவை இங்கு முன்மொழிய விழைகிறேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிவிக்கக் கோரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து தில்லி வரை ஊர்திப்பயணமாக தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் சென்று பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கி வந்தோம், அந்த விண்ணப்பம் நடைமுறைப் படுத்த வி.சி.பி உலகத் தமிழ்சங்கம் உள்ளிட்ட அனத்து அமைப்புகளும் வலியுறுத்த வேண்டுகிறேன்.

         பேரறிஞர் ஆல்பர்ட் சுவைசர் திருக்குறள் குறித்துக் கூறிய சிந்தனையைக் கேளுங்கள் “ திருக்குறள் எனும் நூலே அன்பாகிய வாழும் அறம் ஆகும். அது எளிய அறவுணர்வு கொண்ட மாந்தரின் குறிகோளைத் தவறில்லாமல் எடுத்துச் சொல்வது.மனிதன் தன்னிடமும் உலகத்தாரிடமும் நடந்துகொள்ள வேண்டிய பண்பாட்டின் பலதரப்பட்ட சிக்கல்கள் பற்றிய அதன் கூற்றுகள் நல்லறிவுக்கேற்றவர்.உயர்ந்தவை. பேரறிவின் விளைவாகிய இத்தகைய அறக்கோட்பாடுகளின் தொகுதியை உலக இலக்கியத்தில் வேறெங்கும் காண்டல் அரிது.குறள்கூறும் வாழ்வால் பெறும் இன்பம் பற்றிய கருத்துகள். வாழ்க்கை ஏற்பிற்கும் உலகின் உறுதிப்பாட்டிற்கும் சாட்சியம் அளிப்பவை. இவற்றை இந்தியரிடமிருந்து யாரும் எதிர்பார்க்க முடியாது.”                                                       எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்                                                                       திண்ணியர் ஆகப் பெறின்                                                                                                       என வள்ளுவர் வழியில் கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்

 (10-1-2022 அன்று வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கம் நட்த்திய கணொளியில் உலகை ஆளும் திருக்குறள் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

No comments:

Post a Comment