Thursday, September 4, 2014

தமிழர் திருநாள்


           உலகத்தமிழ்  எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் போன்றே நம்மையெல்லாம் மேடையில் ஏற்றி தாம் கீழே இருந்து இந்தத் தலைமுறைக்கு வழிகாட்டும்  பெரியார் பெருந்தொண்டர் எழுத்துச் செம்மல் மூத்த வழக்கறிஞர் சமரசம் ஐயா அவர்களே  நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வெங்கடேசன் அவர்களே, முன்னிலைவகிக்கும் சிவசுப்பிரமணியம் அவர்களே மிகச் சிறப்பாக உரையாற்றிய பெருமக்கள் பேராசிரியர் சம்பத் குமார் புலவர் சதாசிவம் கவிஞர் சொக்கர் மணாளன் கவிஞர் மதி சி.குப்பன் மகளிர் மாமணியாக இங்கு உரையாற்றிய செந்தமிழ்செல்வி குணசேகரன் அவர்களே, அவையிலே அமர்ந்திருக்கும் எங்களது தமிழ்ப்பணியின் நீண்ட காலப் படைப்பாளர் படைக்களப்பாவலர் மூர்த்தி அவர்களே, மலேசியா புகுத்தறிவு மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு  நடந்த மாநாட்டு நிகழ்வுகளை 16 பககம் மிகச் சிறப்பாக தொகுத்து வெளியிட்ட  ஆற்காட்டிலிருந்து இங்கு வருகை தந்துள்ள ஆசிரியப் பெருமகன் புலவர் பன்னீர்செல்வம் அவர்களே திரளாக வருகை தந்திருக்கும் வேலூர் தமிழ்ப்பெருங்குடிமக்களே உங்கள் அனைவருக்கும்  எம் பணிவான வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

          தமிழர் திருநாளை நாம்  கொண்டாடக் நாமெல்லாம் இங்கு கூடியுள்ளாம். தமிழ் தமிழர்  சிந்தனைகளெல்லம் தமிழ்நாட்டில் பின் பற்றப்படுகிறதா என்றால் வெட்கப்பட வேண்டியுள்ளது.  திருவள்ளுவர் ஆண்டு என தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பாவேந்தர்                பாரதிதாசன்,முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவாநாதம் மற்றும் அறிஞர் பெருமக்களெல்லாம் கூடி எடுத்த முடிவை  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழகஅரசின் ஆண்டாக முத்ன்முதல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது நடைமுறைப்படுத்தி வழக்கத்தின் இருந்து வந்தது.. தற்போது சென்ற முறை  அவர் ஆட்சி செய்தபோது தை மாதம் தமிழாண்டின் தொடக்கமாக  திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமே  தமிழாண்டாக அறிவித்து அதை உலகமே  கொண்டாடுகிறது.ஆனால் இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழாண்டை சித்திரையாகக் கூறுகிறார்கள். மிகுந்த வெட்கக்கேடாக உள்ளது.

           சித்திரை தமிழாண்டு  தொடக்கமெனில் 60 ஆண்டுளில் ஒரு தமிழ்ப் பெயர்களாவது உள்ளதா. ஆண்டுப் பிறப்புக்கு அவர்க்ள கூறும்  பகுத்தறிவுக்கு உகந்ததாக உள்ளதா பகுத்தறிவுக்கு ஒத்ததா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்துவரை திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டு. பொங்கல் திருநாளே தமிழர் திருநாள்.

           நான் பர்மா சென்றிருந்தபோது தட்டோன் நகர்ப் பகுதிக்கு சென்றிருந்தோம்.அங்கு திருக்குறள் பெரியார் அமரர் மாரிமுத்து அவர்கள் எழுப்பிய வள்ளுவர் கோட்டம் கண்டு  மெய்மறந்தேன். அங்கு திருவள்ளுவர் சிலை முன்பு ஓதுவார் குருசாமி அவர்கள் திருக்குறளை  ஓதி வழிபாடு செய்தது இந்த மறைமொழி உலகமெங்கும் வாழும தமிழர்கள் பகுதிகளில் என்று ஒலிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. தட்டோனிலிருந்து யங்கூன் திரும்பியபோது ஒரு சுமையுந்தில் வண்ணவிளக்குகள் சூழ் திருவள்ளுவர் படத்தி ஏந்தி தமிழ்மக்கள் உலா வந்தனர்.

          சுவிட்சர்லாந்தில் முருகவேள் நந்தினி இணையர் வள்ளுவன் பாடசாலை வைத்து ஆண்டுதோறும் திருவள்ளுவர் ஆண்டான தமிழ் ஆண்டை  மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

          மலேசியாவில் திருவள்ளுவர் ஆண்டே தமிழ் ஆண்டுஎன பல விழாக்கள் பல  தமிழ் அமைப்புகள்  மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் தமிழர் சிந்தனைகளெல்லாம் புதைக்கப் படுவது கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாட்டில் தமிழ் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஆலயங்களில் தமிழ் இல்லை. ஆட்சியில் தமிழ் என்று சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் போராடினாலும் தமிழுக்கு இடமில்லை. கொடுமையிலும் கொடுமை பள்ளிகளில் தமிழ் இல்லாத அலங்கோலம் இன்று உள்ளது. கொடுமையின் உச்சமாக இந்த அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை புகுத்துகிறது. தமிழர் திருநாளை கொண்டாடும் நாம் எண்ணி எண்ணி வேதனைப்படும் கொரடூரம் நடைபெறுகிறது.

ஈழத் தமிழர்கள் அவலம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இட்லரைவிடக் கொடிய இராசபக்சே இலட்சக்கணக்காண தமிழர்களைக் கொன்று குவித்து முள்வேலிகளில் மண்ணின் மைந்தர்களை அடைத்து வைத்துள்ள கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது. தமிழினத்தையே அழிக்கும் கொடூரத்திற்கு இந்தியஅரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. உலகமெங்கும் 10 கோடித் தமிழர்கள்  வாழ்ந்தும் பயணின்றி ஒப்பாரியாகவே உள்ளது. இந்த பயங்கரவாதத்தைப் புரிந்த இராசாபக்சே ஐநா மன்ற நீதிமன்றத்தில் தண்டிக்கப்படு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப் படவேண்டும். ஈழத் தமிழர்களின் குமுறல் கட்டாயம்  நிறுத்தும்.

உலகமெங்கும் பரவிச் சென்ற ஈழத் தமிழர்கள் தமிழ் தமிழர் பண்பாட்டை கட்டிக்காத்து வருகிறார்கள். தமிழ்மொழி  உலக மொழியாக வலம் வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மொழியின் சிறப்பை பேணிப் பாதுக்காகின்றனர். கனடா பாராளுமன்றத்தில் ஒரு இராதிகா எனற தமிழ்ப்பெண்மணி  பாராளுமன்ற உறுப்பினராகி பாராளுமன்ற முழக்கமே தமிழில் முழங்கி அனைத்தும் பெருமக்களும் கரஒலி எழுப்பி மகிழ்ந்தனர். கெராலிசு சிம் என்ற பாரளு மன்ற உறுப்பினர் தம்முடைய தொகுதி மக்களுக்கு தமிழில் அரசு சட்ட்திட்டங்களை அச்சடித்து வழங்கியுள்ளார்.

ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்க்ளின் குடும்ப்ப பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன.இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்ச்கத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்த்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் தமிழை பல நூற்றாண்ண்டு காலமாக பல்வேறு ஆதிக்க சக்திகள் அடக்கிஒழிக்க எண்ணின.  ஆனால் தமிழும் தமிழரும் பீனிக்சு பறவையாக ஒளிர்ந்துகொண்டிருகிறார்கள்.

  ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்களின் குடும்பப் பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன. இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்சகத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயப் பொறுப்பும் திராவிட இயக்கப் பெருந்தொண்டரும் எழுத்துச்செம்மல் சமரசம் ஐயா அவர்க்ள் அழைத்தமைக்கு நெஞசார்ந்த நன்றியைக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

(உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் சார்பில் 27-11-2013 அன்று நடந்த தமிழர் திருநாள் விழாவில் ஆற்றிய உரை)
   

No comments:

Post a Comment