Wednesday, March 27, 2024

 v

கவினார் வெண்மை மலையில்

கவிஞன் சுவிசில் நடந்தேன்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

 சுவிசின் குளுமை ஆட்சி

     சுகமாய் எங்கும் காணும்

கவிஞன் உடலைப் போர்த்தி

      கருணைக் கிருபா தந்தார்

 புவியில் பனியின் வெண்மை

      புதுமை இயற்கை அன்றோ

அவியும் நம்மூர் வெட்கை

      அழகு சுவிசில் இல்லை

 

வெளியில் நடந்தே சென்றால்

       வெண்மைத் துகல்கள் பொழியும்

 புலியாய் சுதந்திர வேட்கை

      புரிந்தோர் இங்கே உள்ளர்

விழிகள் மட்டும் தெரிய

       வினைகள் ஆற்றும் மக்கள்

களிப்பாய் நாடாளு மன்றம்

      கண்டோம்  பூந்துவல் ஊடே 

 

சுடர்சுபர்க் நகரை விட்டே

     சுகமாய் கிருபா ஓட்ட  

தட த்தில் எழிலின் ஆட்சி 

      தக்க மலைகள் சாட்சி

 இடமும் வலமும் இன்பம்

       இனிதாய் மின்னொளிர்க் காட்சி

 திடமாய் மலையைக் குடைந்தே

       தகுதி குகைவழிப் பாதை

 

தவழும் வெண்மை எங்கும்

      தளிரே தெரியா மலைமேல் 

தவமாய் சந்திர தாசும்

      தக்க இண்டர் லாக்கில்

 கவினார் வெண்மை மலையில்  

      கவிஞன் யானும் நடந்தேன்  

செவியை அடைக்கும் குளிரில்

       செழுமைப் பயணம் அன்றோ

No comments:

Post a Comment