Thursday, April 11, 2024

 

 

திசையெலாம்  இண்டியாக்  கூட்டணி

 தீர்க்கமாய் வெல்க ஆள்க

  தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்


சனநா யகம் மீளவே

 சரித்திரம் மீட்டெ டுக்க

இனமா மானமே காக்க

 இசுடாலின் தலைமை வெல்க

 கனப்பொ ழுதுமே சோரா

 கனையென தேர்தல் வீயூகம்

 தினம்தினம் கொள்மை முழக்கம்

 திண்ணிய் இண்டியா கூட்டணி

 திறமாய் வெல்க ஆள்க

 

 மதத்தை கொள்கை என்றே

 மனிதமே வன்முறைக் களமாய்

 சிதைக்கும் பாசக ஆட்சி

 சிதறிய மணிப்பூர் மக்கள்

 விதைக்கும் இந்தியக் கூட்டணி

விழிப்பு இராகுல்  யாத்திரை

திசையெலாம்  தேர்தல் வென்று

 தீர்க்கமாய் வெல்க ஆள்க

 

 தேர்தல் நன்கொடை என்றே

 திக்கெலாம் பணத்தைத் திரட்டி

 வாரிய சனநாயக கொலையால்

 வதங்கிய இந்தியக் கட்சிகள்

ஊரிலே உத்தமர் வேடம்

உரிமையைப் பறித்த அவலம்

 பாரினில் இந்தியக் கூட்டணி

பரிசாய் வெல்க ஆள்க  

 

சிறையிலே எதிர்க்கட் சியினரே

சிதைத்திடும் சனநாயைக் கொலையே

வருமான அமலாக் கத்துறை  

வஞ்சித்தே பாயும் மோசம்

அறமான இந்தியக் கூட்டணி

 அயராமல் உழைக்கும் தலைவர்

 கரத்திலே வெற்றிக் கனியாய்

 கருணையர் வெல்க ஆள்க

Friday, March 29, 2024

 

விண்ணுயர் கலைகள் காக்கும்

பத்மா லோகன் இணையர் வாழ்க

 

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்

 

கடமையின் வீரன் எங்கள்

       கவலைகள் போக்கும் தீரர்

உடைமைகள் இல்லா ஈழம்

      உரிமைகள் முழங்கும் நெஞ்சர்

 தடைகளை உடைக்கும் இதழாம்  

      தகுதியின் உதயன் ஆசான்

 உடலின் பாதி என்ற

       உத்தமி பத்மா கணவர்

 

இணையரின் தொண்டு எங்கும்

      இணையிலாப் பெருமை சொல்லும்

 கனையென எதிர்க்கும் ஆற்றல்

      கருணையின் வடிவம் பத்மா

 பணிகளைப் பறந்தே  செய்யும்

       பண்புயர் மகளிர் மாமணி

 பிணியிலா உறவைப் போற்றும்

பதமா இணையர் வாழ்க

 

பேரன் பேத்திகள் என்றே

     பெற்றிமைக் குடும்பம்  காப்பார்

அறமென சுற்றம் சூழ்ந்தே

      அற்புத அன்பின் வடிவம்  

திறமான பங்காரு அம்மா

     திகழ்புகழ் வாழிபாடு கண்டே

உறவென உலகம் போற்றும்

       உன்னத இணையர் வாழ்க

 

பண்புயர் கனடா  நாட்டில்

பரிதியின் ஒளியாய் ஒளிரும்

 விண்ணுயர் கலைகள் காக்கும்

          வித்தக பத்மா லோகன்

 தன்மொழி உலக அறிஞர்

         தலமெலாம் தேடிச் சென்றே

 கண்ணென விருதை வழங்கும்

         கருணையே வாழ்க வாழ்க

Wednesday, March 27, 2024

 v

கவினார் வெண்மை மலையில்

கவிஞன் சுவிசில் நடந்தேன்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

 சுவிசின் குளுமை ஆட்சி

     சுகமாய் எங்கும் காணும்

கவிஞன் உடலைப் போர்த்தி

      கருணைக் கிருபா தந்தார்

 புவியில் பனியின் வெண்மை

      புதுமை இயற்கை அன்றோ

அவியும் நம்மூர் வெட்கை

      அழகு சுவிசில் இல்லை

 

வெளியில் நடந்தே சென்றால்

       வெண்மைத் துகல்கள் பொழியும்

 புலியாய் சுதந்திர வேட்கை

      புரிந்தோர் இங்கே உள்ளர்

விழிகள் மட்டும் தெரிய

       வினைகள் ஆற்றும் மக்கள்

களிப்பாய் நாடாளு மன்றம்

      கண்டோம்  பூந்துவல் ஊடே 

 

சுடர்சுபர்க் நகரை விட்டே

     சுகமாய் கிருபா ஓட்ட  

தட த்தில் எழிலின் ஆட்சி 

      தக்க மலைகள் சாட்சி

 இடமும் வலமும் இன்பம்

       இனிதாய் மின்னொளிர்க் காட்சி

 திடமாய் மலையைக் குடைந்தே

       தகுதி குகைவழிப் பாதை

 

தவழும் வெண்மை எங்கும்

      தளிரே தெரியா மலைமேல் 

தவமாய் சந்திர தாசும்

      தக்க இண்டர் லாக்கில்

 கவினார் வெண்மை மலையில்  

      கவிஞன் யானும் நடந்தேன்  

செவியை அடைக்கும் குளிரில்

       செழுமைப் பயணம் அன்றோ

Tuesday, March 19, 2024

 

பாட்டினில் பாடும் பாவாய்

பார்புகழ் நீரில் பயணம்.

தமிழ்மாமணி   வா.மு.சே.திருவள்ளுவர்

எழுச்சியின் வளர்ச்சி எங்கும்

      எழுந்திடும் துபாய் நாட்டில்

பழுத்திடும் பேரிச்சம் பழமே

       பற்றிடும்  உலக ஈர்ப்பே

தொழுதிடும் மெக்கா மதினா

       தொடர்ந்திடும் மக்கள் வெள்ளம்

 அழகுயர்  பரந்த மசுதீ

         அருகுள அபுதாபி விந்தை  

 

 துபாயின் கேளிக்கைக் கூத்து

        தரணியின் மாந்தர் வருவர்

அபாரமாய் நீரின் ஆட்சி

        ஆற்றினில்  வளமாய்ப் பொங்கும்

 திறமான நாவாய்  ஆற்றில்

         திகழொளி உமிழ்ந்தே செல்லும்

 உறவென நண்பர் சேர்ந்தே

         உலகுயர் நீரில் பயணம்

 

  ஆற்றினில் எழிலாய் செல்லு,ம்

        அணியென கப்பல் காட்சி 

பேற்றினை உலக மக்கள்

        பெற்றிமை ஆடல் பாடல்

வேற்றுமை  இல்லா இசையில்

     வேண்டியே  சூழ்ந்தே மகிழ்வர்

 ஆற்றினில் கவிஞன் யானும்

        ஆனந்த நடனம் கொண்டேன் 

 

 ஊட்டிடும் உணவு எல்லாம்

       உலகுயர் மக்கள் உண்பர்

 நாட்டிடும் மதுவின் போதை

       நாளெலாம் குடித்தே களிப்பர்

 ஓட்டிடும் கப்பல் உள்ளே

      ஒன்றியே உவந்தே ஆட்டம்

 பாட்டினில் பாடும் பாவாய்

         பார்புகழ் நீரில் பயணம்.

Sunday, March 17, 2024

 

 

 கவித்துவ அமெரிக்காவில் கருணையர் விவேகா நந்தர்

தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர்

 

இந்திய அருளின் ஆட்சி

     இதயமாய் சிக்காக் காக்கோவில்

செந்தமிழ்ப்  பாட்கர் மன்னர்

       செம்மையாய் அழைப்பைத் தந்தார்

 முந்திடும் இந்திய மக்கள்

       முனைப்புடன் அனுப்பி வைத்தர்

விந்தியம் ஐரோப்பா கனடா

       வியப்புடை  ஆறுத் திங்கள்

 

 கனடாவில் தொடரி மூலம்

       களிப்புடன் சிக்காக்கோ வந்தார்

 அன்பினில் இணைந்த நங்கை

      அணிபுகழ் அரங்கம் கண்டார்

 பண்பினில் உயர்ந்த சொல்லாம்

      பாரொளி சகோதரச் சிந்தை

எண்பினில் அருளாள் இணைந்த

       எழிலகம் இன்றும் உண்டே

 

உள்ளியது எளிது என்ற

    உத்தமர் வள்ளுவர் சொல்லின்

 உள்ளொளி அரங்க மேடை

      உவந்துமே நின்றேன் மொழிந்தேன்

 கள்ளமில் வாழ்க்கை வாழ்ந்தால்

      கவின் புகழ் பெருமை எல்லாம்

 கருணையர் விவேகா நந்தர்

      கவித்துவ ஆட்சி அன்றோ

 

 பள்ளியில் நரேந்திர எம்மான்

     பக்தி இராம கிருட்டிணர்

 வெல்புகழ் அடியைப் பற்றி

       வெற்றி விவேகா நந்தர் 

நல்மொழி கட உள்  நாதம்

     நயத்தகு மனித நேயம்

 வெல்அமெ ரிக்க  மண்ணில்

      வித்தகச் சான்று மாதோ!

 

Saturday, March 16, 2024

 

இந்தியக் குடியாட்சியையே

 இதயமாய் இந்தியா காக்கும்

 

அரசு ஊழியர் கையூட்டு

     அதிரடி சிறையில் அடைப்பர்

விரசத் தேர்தல் நிதியாய்

     விதவித வழியில் சேர்த்து  

அறமே அழிக்கும் போக்காய்

     ஆட்சியை பணத்தால் அமைத்து

 உரமிலா பாசக செய்கை

      உரிமை சனநா யகமா

 

நீதியே மிரட்டி மொழிந்தும்

      நீட்டிடும் அநீதி முறையா

ஓதியே வங்கியைத் தமக்காய்

      ஒடுக்கிடும் ஆணவப் போக்கு

மீதியாய் கடைசிப் பகுதி

       மிரட்டிடும்  நீதிப் பாதை

உதித்திடும் தேர்தல் நாளில்

      உரிமையாய் துரத்தி வெல்வேம்

 

நடிகர்கள் தோற்பர் நன்றாய்

       நாளெலாம் கோமாளிக் கோளம்

 விடியாத மக்கள் வாழ்வில்

      வித்தகக் குடும்பம் என்றே

அரசியல் நேர்மை இன்றி

       அலையுதே மோடி தேகம்

அடாவடி ஆணவப் பேச்சு

        அடக்கிடும் நாள்தான் தேர்தல்

 

 இந்தியக் கட்சி எல்லாம்

      இணைந்து ஒன்றாய் நின்றே

நொந்திடும்    அவலம் போக்க

      நுட்பமாய் களத்தில் வெல்வோம்

  மந்தியின் கையில் ஆட்சி  

      மக்களின் ஒற்றுமை குலைக்கும்

இந்தியக் குடியா ட்சியையே

     இதயமாய் இந்தியா காக்கும்

      

 

Wednesday, March 13, 2024

 

தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் 89ஆம் அகவைத்திருநாள் நோபல் தவம் நூல் வெளியீட்டு விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 தந்தையார் பெருங்கவிகோ அவர்களின் 89ஆம் அகவைத்திருநாளும் நோபல் தவம் நூல் வெளியீட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு சமூக நலக் காவலர் எங்கள் மண்ணின் மைந்தர் பிற்படுத்தப்பட்டோர்  உயர் கல்வித் துறை அமைச்சர் இராச கண்ப்பன அவர்களை தங்களி பலத்த கரவொளிக்கிடையில் வருக வருக என்று வரவேற்கிறேன். வீரம் செறிந்த மண்ணின் வெற்றி நாயகனாக நம் அமைச்சர் வலம் வருகிறார் அவர் வருகை யாம் பெற்ற பெரும் பேறு. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும்பயணித்து  பேருரையாலும் எழுத்தாலும் இணையவழியிலும் புலன வழியிலும் பரப்பிவரும் திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உலகில் எங்கு நோக்கினோம் திருவள்ளுவர் பெருமான் சிலைய நிறுவும் வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் இதுவரை 165 சிலைகளை நிறுவியுள்ள செவாலியர் வி.ஜி.சந்தோசம் அவர்களை வரவேற்று மகிழ்கிறேன். மூன்று தலைமுறாகளாக தமிழ் வளர்க்கும் ஒள்வை நடராசனார் திருமகன் தமிழ்வளர்ச்சித் துறை இயக்கநர்  ஒள ந, அருள் நம் தமிழ் வள்ளல் சந்திரசேகர் வழித் தோன்றல் ச. ஆனந்த் மற்றும் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவரை வருக வருக வரவேற்கிறேன்.

                     இன்று வெளியிடப்படும் நோபல் தவம் ஒரு மிகச் சிறந்த நூல் .தமிழகத்தில் நோபல் பரிசு பெறும் பெருமக்கள் பலர் உள்ளனர். அவர்களின் ஆற்றலை எந்த வித த்த்லும் குறைகூற முடியாது. இந்த நோபல் தவம் நூலை எழுத்தியுள்ள தந்தையார்  பெருங்கவிக்கோ அவர்கள் தம் வாழ்நாளை கவிதைக்காகவே அர்ப்பணித்தவர்.1981ஆம் ஆண்டு அமெரிக்காவில் சான்பிரான்சிசுக்க்கோ நகரில் நடந்த 5ஆம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெர்க்கா கவிஞர் ரோசு மேரி வில்கின்சன் அவர்கள் பொறுப்புச்சான்று வழங்கி அழைத்தார்கள். இன்று அன்று எளிதாகச் செல்ல முடியாது அந்த காலத்திலேயே அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றார். நாவுக்கரசர் ஒளவை நடராசன் அவர்களும் பங்கேற்றார்கள். அந்த  உலக க் கவிஞர்கள் மாநாட்டின் நாயகர் நம் கிருட்டிணா சீனிவாசன் மொழிபெயர்த்த தந்தையாரின் Flames of Thoughts  நூலையும்  மூன்னூறு தமிழ்க் கவிஞர்கள் கவிதைகளை மொழி பெய்ர்த்த Tamil Poets Today அந்த மாநாட்டில் வெளியிட்டார்கள் அங்கு மொழிபெயர்த்த பெருமை அறிஞர் ஒளவை நடராசன் ஆவார்.. 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாடு முதல் இன்று வரை தொடர்ந்து உலக க் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேறு உலகப் பார்வையை அன்றே பெற்ற உலகக கவிஞர் பெருங்கவிக்கோ. இங்கும் கவிஞர்கள் மாநாடு நட த்தி ரோசுமேரி வில்கின்சன் பெருநாட்டு க் கவிஞர் பேதூரு பொன்ன்ற பல்வேற் நாட்டுக் கவிஞர்களை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளோம்

       நோபல் தவம் நூல் சூவிடன் நாட்டு சுடாக்கோம்  ந்கர் சென்று அங்குநோபல் பரிசு வழங்கும் அலுவலகம் சென்று நோபல் சிலையை வருடிய வண்ணம் காட்சி தருகிறார் பெருங்கவிக்கோ. சூவீடன் நாட்டிற்கு செருமணி நாட்டில் ஈழத் தமிழரளின் அன்பில் திளைத்து பின் நண்பர்கள் உதவியோடு சூவிடன் சென்ற் பயண அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளா.ர்

         கணினி உலகில் மாபெரும் புரட்சிசெய்த கணினி அறிஞர் யாழான் சண்முகலிங்கம் ஒப்பற்ற பேரறிஞர். தமிழுக்கு எழுத்துரு கண்டவர். பன்னாட்டுத் தம்மிழுறவு மன்றம் மூலம் தமிழகமெங்கும் அவர்க் எழுத்துருவை அறிமுகம் செய்தோம். அவருடை உற்ற நண்பர்தான் பேராசிரியர் பீட்டர் சல்க் அவரின் வழிதான் சுவீடம் செல்ல திட்டமிட்டு பிரான்சு பாரிசுலிருந்து எங்கள் நீண்ட கால நண்பர் பூபாள சோமசுந்தரம் அனுப்பிவைத்த தை நூலில் பதிவிட்டுள்ளார். சுடாக்கோம் விமான நிலையத்தில் வரவேற்று தம் பல்கலைக்கழகம் நோபல் அலுவலகம் என அனைத்துப் பகுதிக்கும் அழைத்துச் சென்றுள்ளதை அவரது மனிதநேயப் பண்பை சிறப்பாகப் பதிவிட்டுள்ளார். பேராசிரியர்  பீட்டர் சல்க் தமிழ் ஈழ ஆதரவாளர்.

          உள்ளியது எய்தல்  எளிதுமண் மற்றுந்தன்

          உள்ளத்தாள் உள்ளப் பெறின்   

       என்ற வள்ளுவப் பேராசான் குறள் வழி  தமிழ்க்கவிஞர்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என்பது பேரவா. அந்தக் குறிக்கோளோடு தம் பயணத்தையும் கவிதை ஆக்கத்தையும் உலகளாவிய தொண்டையும் தம் குறிக்கோளாக க் கொண்டு உள்ளியது எய்தும் உலக் மாக்கவியாக வலம் வருகிறார் பெருங்கவிக்கோ. மீண்டும் வருகை தந்த பெருமக்களை வரவேற்று மகிழ்கிறேன்.