Sunday, August 28, 2022

 பவளவிழாக் காணும் சுதந்திரம் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 


விடுதலை இந்தியத் திருநாள் 

வியத்தகு வெற்றிப் பெருநாள் 

கொடுமை சிறையைக் கண்டோர் 

கடமையின் கருணை நிறைநாள் 

உடைகள் அகற்றி மண்ணில்

 உரிமையாய் சம்மாய் வாழ்ந்து 

விடையென சுதந்திர ஒளியாம்

 வித்தக காந்திக் கனவு!

 

பவள விழாவாம் இன்று 

பண்புள சனநாயகம் உளதா

 தவமாம் கர்நாடகா ஆட்சி  

கயமை மாற்றல் முறையா 

உவக்கப் பணத்தை விதைத்து 

உரிமை பெறலோ விடுதலை

 தவிக்கும் வறுமை எண்ணா 

தற்குறித் தலைமை வீழ்கவே! 


விடுதலை ஆசான் நேரு 

வித்தக வழியினர் கண்டு 

கெடுதலாய் வீழ்த்தும் மமதை 

கேளியாய் பாராளு மன்றம் 

திடுமென செருப்பு வீசும் 

திமிரெனப் பேசும் அவலம் 

கடுமைச் செயலால் நாடு 

கலங்கி நிற்றல் முறையோ! 


ஆக்கமாம் உத்தம் தாக்ரே 

அரசாம் மராடியம் கலைத்தல் 

ஊக்கமாய் பணத்தைக் கொட்டி 

உரிமை அழித்தல் நெறியா 

திக்கெலாம் பவள விழாவாம் 

திகழ்புகழ் பாரத அன்னை 

விக்கியே அழுதிடும் சோகம் 

விடுதலை எந்நாள்? எந்நாள்?

Friday, August 26, 2022

 




கொடுமைப் பாதகன் வீழ்கவே

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

மக்களை நலமாய்க் காக்கா மூடன் 

மனித நேயம் இல்லாப் போக்கால் 

திக்கெலாம் மக்கள் திரண்டே விரட்ட 

திண்ணாமாய் நடக்கும் புரட்சி வெல்க 

உக்கிர வறட்சி தீர்க்கா மோசம்

 உலுத்தர் வாழ்வு ஊதாரிச் செயலால்

 திக்கெலாம் தப்ப முயன்றே முனைந்தும்

 திகைக்க மக்கள் புரட்சி அடக்குதே!

 

முற்பகல் செய்யின் பிற்பகல் வருமே 

முன்னோன் குறளோன் முகிழ்த்த சொல்லின்

 நற்றவ நல்லோர் தமிழர் மாய்த்த

 நாசம் மோசம் தொடராய் மாய்க்குமே 

முற்றும் துறந்தே அகதி வாழ்வாய் 

மூத்த குடியே அலைந்த அவலம்

சற்றும் முற்றும் தப்ப இயலா 

சூழல் பக்சே குடும்பம் மாய்க்கும்

 

அதிபர் மாளிகை ஆடிடும் களமாய் 

அழிவைக் கண்முன் காணும் தளமாய்

 விதியென வாழ்ந்த மக்கள் புரட்சி 

வர்த்தக ஒற்றுமை இணைந்து நின்றே

 கதியெனத் துரத்தும் கய்மைகள அனைத்தும் 

குற்றக் கூண்டில் நிறுத்தும் நாளிதே

 மதிமிகு மக்கள் நடத்தும் புரட்சி 

மண்ணில் ஆணவம் ஒழிக்கும் அன்றோ! 


முள்ளி வாய்க்கால் கண்ட போதே 

முழுமைக் கண்கள் நீராய் வீழ்ந்ததே 

சொல்லில் அடங்கா வீரத் தலைவன் 

சரித்திரச் செம்மல் பிராபா கரனின்

கல்லும் மண்ணும் நினைவாய் எடுத்தோம்

 கரும வீர்ர் வீட்டின் சிதைவில்

 கொல்லும் மமதை அடங்காத் தனத்தோர்

    கொடுமை நெஞ்சர் வீழ்க வீழ்கவே

Monday, August 15, 2022

 அற்புதம் அன்னை ஈகம் அரும்மகன் விடுதலை கண்டார்

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்  


அற்புதம் அன்னை ஈகம்  

அரும்மகன் விடுதலை கண்டார் 

பொற்கனி காணும் வயதில் 

பொல்லாங்காய் சிறையில் வெந்தார்

 நற்களம் எல்லாம் பெற்றே 

நயத்தகு பட்டம் பெற்றார் 

விற்பணர் பேரறி வாளர் 

விந்தையின் வியப்பே வாழ்க!  


சட்டமாய் மன்றம் கூட்டி 

சரிநிகர் தீர்மானம் கண்டும் 

கிட்டா ஆளுநர் வேடம் 

கிடைக்கா விடுதலை முறையா 

மட்டிலா நீதி மன்றம் 

மாண்புற விடுதலை தந்தே 

கொட்டிய கருணைத் தாயாய் 

கொண்டாடிடும் அறமே வாழ்க!! 


இளமையை சிறையில் கழித்தே 

இணையிலா வாழ்வை இழந்தார் 

பலமிகு சமூகச் சீற்றம்

 பண்பென செங்கதிர் சாவு

 உளமுள உரிமைச் சுற்றம் 

உவந்தே நாடிச் சென்றே 

திலகமாம் அற்புதம் அன்னை 

தீத்திறம் விடுதலை கண்டார்!!


கட்டியே பிடித்து முதல்வர்  

கவலையைப் போக்கும் மாண்பு 

கிட்டிய வாழ்வைத் தொடங்க 

கிள்ளையை வாழ்த்தும் பாங்கு 

மட்டிலா ஸ்டாலின் கோமான் 

மகத்துவ ஆளுமைச் செயலே 

தட்டிய கதவாய் நீதி 

தாங்கிய விடுதலை வாழ்க!!!

 விடுதலைத் திருநாள் பவள விழா அமுதப் பெருவிழா                                                                   தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                                                                              

     மாநகர் மத்திய அரிமா சங்கத்தின் அரிமாத் தலைவர் இசைமாமணி பழனி அவர்களே செயலராகப் பொறுப்பேற்றிருக்கும் செயல் வல்லார் வின்சன்ட் அவர்களே பொருளராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு நெஞ்சர் செல்வம் அவர்களே இந்த நிகழ்வை பொறுப்பேற்று நட்த்தும் அரிமா சிவராஜ் அவர்களே. திருவல்லிக்கேணி மாநாகராட்சிப் பள்ளியை சிறப்பாக நிர்வாகித்து இன்றைய சுதந்திரதின பவள விழாவை ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சுதந்திரதினப் பவள விழாவை சிறப்புடன் நடத்தும் தலைமையாசிரியர் அவர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தையும் சுதந்திர ட்தின வாழ்த்துகளையும் தெருவித்துக் கொள்கிறேன். நமது நூற்றாண்டு ஆளுநர் பெருமகன் அரிமா குணராசா அவர்கள் தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு விடுதலைத் திருநாளுக்கு தம் பல்வேறு பணிகளுக்கிடையிலும் வருகைதந்து சென்றுள்ளார். தொண்டர் செம்மலை  நெஞ்சாரப் போற்ருகிறேன் தலைமையாரியப் பெருமாட்டிக்கு நான் ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன்.     

      தமிழக முதல்வர் நம் மாண்புமிகு முத்துவேலர் ஸ்டாலின் அவர்கள் எல்லா நிலையிலும் தமிழை முன்னிறுத்தி நடத்தி வருகிறார். தாங்கள் மாணவர்களுக்கு நிகழ்வுகளில் தமிழ் வழி நடத்த வேண்டும். உலக நாடுகள் எல்லம் சென்று வந்திருக்கிறேன் மலேசியாவில் 530 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன். தமிழை முன்னிலைப் படுத்துகிறார்கள். தாங்கள் வகுப்பில் ஆங்கில வகுப்பு எடுக்கிறீர்கள் அது தங்கள் பணி.  ஆனால் நிகழ்வில் தமிழில் நட்த்தி தமிழ்ழொழிக்க்க்கு முதண்மை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகள் போன்று ஆங்கில வெறி வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போதுகூட இசைத்தட்டில் இசைத்தீர்கள். மாணவர்களை பயிற்சி கொடுத்து பாடவைக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் மனதில் பதியும். அரசு விழாக்களில் பாடகர்களே பாடுகிறார்கள்.

         சமத்துவமான மதமாச்சரியரியற்ற நாம் எல்லாம் ஒருவர் என்ற எண்ணம் நம்மில் எழவேண்டும் சாதி மதம் நம்மை பிரிக்கக் கூடாது. நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் நம்முள் எழவேண்டும். இங்கே இருக்கும் பெருமக்களை காணும்போது சமத்துவத்தைக் காண்கிறேன்.பேரறிஞர் அண்ணா அவர்கள் அனைவரும் நாம் ஒரே தாய் வயிற்றில் பிறக்க இயலாது. ஆதாலால் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் என்றார். இங்கே மாணவர்கள் காந்தியாகவும் நேருவாகவும் பாரதியாகவும் நம் சுதந்திரத்திற்குப் போராட்ட்த்திற்குப் பாடுபட்டவர்களையெல்லாம்  நம் கண்முன் மாணவர்கள் நிறுத்தினீர்ர்கள். தலைவர் பெருமக்களையெல்லாம் எண்ணி எண்ணி வணங்குகிறேன். நம் தமிழ் நாட்டில் மதுரை மாநகருக்கு  வருகை தந்த காந்தி மகான் நம் விவசாயிகளின் உடைகளைக் கண்டு தன் கோட்சூட்டை மாற்றி அரை ஆடையை தம் ஆடையாக மாற்றி மக்களோடு மக்களாக வாழ்ந்து நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். அந்த சுதந்திரத் திருருநாளன்று வறிய மக்களை எண்ணி சமத்த்துவமாக வாழ வேண்டும் நம் கண்ணியமிக்க  தலைவர் காயிதே மில்லத் அவர்கள் நாடாளுமன்றதில் இந்தியாவின் இணைப்பு மொழி இந்தியா ஆங்கிலமா என்று வாதம் வந்துபோது நமக்கு ஆதரவாக முழங்கினார். அவர் தாடி தொப்பி எல்லாம் அணிந்திருந்த்தைக் கண்டு வட நாட்டார் இந்திக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்று எண்ணியபோது இசுலாம் எங்கள் வழி அன்னைத்தமிழ் எங்கள் மொழி என முழங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். 

        நான் இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் பயின்றேன். நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி முதன் முதலில் மேடையில் பேசினேன். இன்று உலகம் முழுமையும் பேசிவருகிறேன். இதே போன்று சிறப்பாகப் பேசிய மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் புகழ் பெறுவீர்கள். நம்மை பதப்படுத்தும் பட்டைதீட்டு இடம்தான் பள்ளிகள். அதன் கர்த்தாக்கள்தான் ஆசிரியப் பெருமக்க்கள். அருமை நண்பர் பசீர் அரகள் முகநூலில் தாம் கன்னியகுமரி ஆளூர் பகுதியில் இருப்பதைப் பதிவிட்டிருந்தார். நான் இன்று வரமாட்டார் என்று எண்ணினேன். மிகக் கடினப்பட்டு இரவோடு இரவாக சுதந்திர தின நிகழ்வுக்காக வந்துள்ளார். இந்தக் குழந்தைகள் மேல் உள்ள பற்றை உணரலாம். ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த தொண்டாற்றும் பசிரை வாழ்த்துகிறேன். அருமை அண்ணன் அரிமா சேவியர் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் தொடர்ந்து இந்தச் சங்கப் பணிகளையும் தொண்டறப் பணிகளையும்சிறப்பாகச் செய்து வருகிறார். 

துன்பம் உறவரினும் துணிவாற்றிச் செய்க 

இன்பம் பயக்கும் வினை. 

   என்ற குறளுக்கு ஒப்பாக தொண்டாற்றுகிறார் அருமை அண்ணன் சேவியர். 

தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு நாங்கள் தொண்டறச் சேவை தொடர்ந்து செய்த வருகிறோம்.  அருமை ஆசிரியப் பெருமக்களே மாணவர்களை சிறப்பாக உருவாக்குங்கள். தமிழ்ச் சிந்தனைகளை வழங்குங்கள் . வருங்காலத் தலைவர்களை உருவாக்குங்கள் என் இந்த் சுதந்திரத் திருநாளில் வேண்டுகொள் விடுத்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.                   

  (15 – 8-2022 அன்று சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சிப் பள்ளியில் விடுதலைத் திருநாளில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

  


Sunday, August 14, 2022

 ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள தென் ஆப்ப்ரிக்கா லெஸ் கவுண்டர் 

தமிழ்மாமணி வா.மு..சே.திருவள்ளுவர்

தென் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து தமிழகம் வருகை தந்த லெஸ்கவுண்டர் அவர்களை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நுல்கள் வழங்கி உரையாடினேன். அவருடைய முன்னோர் சேலம் மாவட்டத்திலிருந்து சென்ற பெருமக்கள். அவருடைய தந்தை சடையப்பகவுண்டர் தாயார் மாரியம்மாள். பெற்றோர்கள் நன்கு தமிழ் பேசுவார்கள். ஆனால் லெஸ் தமிழ் கொஞ்சம் பேசுகிறார். பட்டப் படிப்புவரை படித்து ஆசிரியராக தொடக்கத்தில் பணியாற்றி தம் வாழ்வைத் தொடங்குகிறார். இவருடைய பெற்றோர் பொது வாழ்வில் ஈடுபடுத்தி பல மக்கள் பணிகளைச் செய்யும் மாமனிதராக உள்ளார்.. இவர் வாழும் பகுதியில் மூன்று இலட்சம் இந்தியர்களும் அதில் தமிழர்கள் இரண்டுலட்சம் தமிழர்கள் என்றார். திருமதி சாவித்திரி அம்மையாரை மணந்து இரு மக்களைப்  பெற்றுள்ளார்.அணிதா படித்து இயன்முறை சிகிச்சை செய்கிறார். நிக்கி இசை வல்லுநராக உள்ளார். கவுண்டர் மிகச் சிறந்த பொதுநலத் தொண்டர். தமிழ்ப்பாடசாலையில் தமிழ் மக்கள் தமிழ் பயில்வாதற்கு ஆக்கப்பூர்வமான் பணி செய்கிறார்.மய்செரிஅன் பரெஅச்க) வைனவ ஆலயம் அருள்மிகு சுப்ரமணியம் ஆலயம் போன்ற திருக்கோயில் தொடர்ந்து திருப்பணி செய்து வருகிறார்.கவுண்டர் 

அவர்கள் கர்த்தா சுதந்திரக் கட்சியில் 19 ஆண்டுகாளக பங்கு பெற்று பல்வேறு பொறுப்புகளைப் பெற்று சிறப்பாகப் தொண்டறப் பணியாற்றியுள்ளார். தற்போது இந்தக் கட்சி பிரின்சு புத்தலெசி அரசர் பரம்பரையைச் சேர்ந்தவர் கட்சியின் தலைவராக உள்ளார். தற்போது எதிர்க் கட்சியாக செயல்படுகிறது. இந்தக் கட்சியி  சட்டமன்ற உறுப்பினராக 2002 முதல் இன்று வரை ஐந்து முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் எதிர்க் கட்சி என்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளதையும் குறிப்பிட்டார். 

அங்கு ஆளும் கட்சியாக ஆப்ரிக்கன் தேசிய காங்கிரஸ்  உள்ளது . பிரதமராக சிறி இராமா பொரெக் உள்ளதாக குறிப்பிட்டார். இருவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர். இரவி பிள்ளை மாகிகவுண்டர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இரவி சென்னைக்கு பொருளாதார மாநாட்டிற்கு நிதி மந்திரியாக இருந்தார். தற்போது பொறுப்பில் இல்லை மாக்கி கவுண்டர் அமைச்சராக உள்ளார் என்று குறிப்பிட்டார். சீவரத்தினம் என்ற தமிழர் ரிச்சர்ட்ஸ் பேகுதியின் துணைமேயராக உள்ளார் என்று குறிப்பிட்டார். 

அவரோடு பிரேமிபா என்ற பெருமாட்டியும் வருகை தந்துள்ளார். அவர் தந்தையார் பெயர் வேல் ஆதிமூலம் மாணிக்கம் பிள்ளை எனக் குறிப்பிட்டார்.. அவர் தாயார் இலக்குமி. அவர் தந்தை சோகன்ஸ்பர்க் பகுதியில் அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது மக்கள் சாத்தின் சியோலியா. அம்மையார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதாக்க் குறிப்பிட்டார். 

செயல் திறன் மிக்க பெருமகன் பல தலைறைக்கு முன் தென் ஆப்ரிக்கா சென்று இன்று ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அவருடைய பேருழைப்பு வியப்பைத் தருகிறது. நான் தங்கள் நாட்டில் பெற்றோருக்குப் பின் ஏன் தமிழ் பேச இயலவில்லை எனக் குறிப்பிட்டேன். ஏன் நான் பேசுகிறேனே என ஒருசில வார்த்தைகள் பேசினார். தமிழ் பேச இயலாத்தற்கு நிறவெறிதான் எனக் குறிப்பிட்டார். அப்போது தமிழ் பள்ளிகளில் தமிழ் படிக்க இயலவில்லை என்றார். தற்போது மேல்நிலை வகுப்புவரை தமிழ் படிக்க வாய்ப்பு உள்ளது என்றார். 312 மாணவர்கள் தம் பகுதியில் தமிழ் படிப்பதாக பெருமையாகக் குறிப்பிட்டார்.


பாதகன் பொந்தில் மறைகிறான் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


சூழ்ந்து தொடர்ந்து தாக்குதல்

     சூழ்ச்சி துரோக எழுச்சியே 

ஆளுமை அறியா பாதாகன்

     அடாவடி கோடுமைத் தீயவன் 

ஊரின் உன்னத மக்களை 

     உரிமையாய்க் காக்காப் பேயவன் 

போரில் கொன்றான் தமிழரை 

     பொந்தில் மறைகிறான் அவலமாய்


மக்களைத் தூசியாய் எண்ணினான்  

     மமதைக் கொழுப்பால் தள்ளினான்

 திக்கெலாம் சொத்துகள் சேர்த்துளான்

     திருட்டு வழியில் ஏய்த்தனன் 

வக்கிலாக் குடும்பம் உயர்த்தினான் 

     வறுமை மக்களை எண்ணிலன் 

மீக்கெழும் புரட்சி இலங்கையில் 

      மின்னலாய் அவலம் அழித்ததே


அலறித் துடிக்கும் பாதகன் 

    அலைந்தே ஓடியே ஒளியுரான் 

தலைமுறை தாண்டியும் தன்னலம்

 தகர்த்து எரியும் மக்களே  

     மலைநிகர் சனநாயக மாண்புகள்

 மடையன் செயலால் மாயுதே 

     கொலைகள் கண்ட கயவனின் 

கொடுமை மாய்க்கும் நாளிதே


மேதகு த்லைவனை மாய்த்தனன் 

     மேன்மைப் புலிகள் சாய்த்தனன் 

தீதீலா பால்கன் கொன்றனன் 

     திண்ணிய தமிழரை அழித்தனன்  

வீதியில் தமிழர் பிணங்களை 

     வீசிய கயமையே மாய்ந்திடு 

ஓய்விலா தமிழரின் ஓலமே 

     ஒழிக்குதே இராச பக்க்சே(வினை)