Sunday, August 28, 2022

 பவளவிழாக் காணும் சுதந்திரம் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 


விடுதலை இந்தியத் திருநாள் 

வியத்தகு வெற்றிப் பெருநாள் 

கொடுமை சிறையைக் கண்டோர் 

கடமையின் கருணை நிறைநாள் 

உடைகள் அகற்றி மண்ணில்

 உரிமையாய் சம்மாய் வாழ்ந்து 

விடையென சுதந்திர ஒளியாம்

 வித்தக காந்திக் கனவு!

 

பவள விழாவாம் இன்று 

பண்புள சனநாயகம் உளதா

 தவமாம் கர்நாடகா ஆட்சி  

கயமை மாற்றல் முறையா 

உவக்கப் பணத்தை விதைத்து 

உரிமை பெறலோ விடுதலை

 தவிக்கும் வறுமை எண்ணா 

தற்குறித் தலைமை வீழ்கவே! 


விடுதலை ஆசான் நேரு 

வித்தக வழியினர் கண்டு 

கெடுதலாய் வீழ்த்தும் மமதை 

கேளியாய் பாராளு மன்றம் 

திடுமென செருப்பு வீசும் 

திமிரெனப் பேசும் அவலம் 

கடுமைச் செயலால் நாடு 

கலங்கி நிற்றல் முறையோ! 


ஆக்கமாம் உத்தம் தாக்ரே 

அரசாம் மராடியம் கலைத்தல் 

ஊக்கமாய் பணத்தைக் கொட்டி 

உரிமை அழித்தல் நெறியா 

திக்கெலாம் பவள விழாவாம் 

திகழ்புகழ் பாரத அன்னை 

விக்கியே அழுதிடும் சோகம் 

விடுதலை எந்நாள்? எந்நாள்?

No comments:

Post a Comment