விடுதலைத் திருநாள் பவள விழா அமுதப் பெருவிழா தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
மாநகர் மத்திய அரிமா சங்கத்தின் அரிமாத் தலைவர் இசைமாமணி பழனி அவர்களே செயலராகப் பொறுப்பேற்றிருக்கும் செயல் வல்லார் வின்சன்ட் அவர்களே பொருளராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு நெஞ்சர் செல்வம் அவர்களே இந்த நிகழ்வை பொறுப்பேற்று நட்த்தும் அரிமா சிவராஜ் அவர்களே. திருவல்லிக்கேணி மாநாகராட்சிப் பள்ளியை சிறப்பாக நிர்வாகித்து இன்றைய சுதந்திரதின பவள விழாவை ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சுதந்திரதினப் பவள விழாவை சிறப்புடன் நடத்தும் தலைமையாசிரியர் அவர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தையும் சுதந்திர ட்தின வாழ்த்துகளையும் தெருவித்துக் கொள்கிறேன். நமது நூற்றாண்டு ஆளுநர் பெருமகன் அரிமா குணராசா அவர்கள் தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு விடுதலைத் திருநாளுக்கு தம் பல்வேறு பணிகளுக்கிடையிலும் வருகைதந்து சென்றுள்ளார். தொண்டர் செம்மலை நெஞ்சாரப் போற்ருகிறேன் தலைமையாரியப் பெருமாட்டிக்கு நான் ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன்.
தமிழக முதல்வர் நம் மாண்புமிகு முத்துவேலர் ஸ்டாலின் அவர்கள் எல்லா நிலையிலும் தமிழை முன்னிறுத்தி நடத்தி வருகிறார். தாங்கள் மாணவர்களுக்கு நிகழ்வுகளில் தமிழ் வழி நடத்த வேண்டும். உலக நாடுகள் எல்லம் சென்று வந்திருக்கிறேன் மலேசியாவில் 530 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன். தமிழை முன்னிலைப் படுத்துகிறார்கள். தாங்கள் வகுப்பில் ஆங்கில வகுப்பு எடுக்கிறீர்கள் அது தங்கள் பணி. ஆனால் நிகழ்வில் தமிழில் நட்த்தி தமிழ்ழொழிக்க்க்கு முதண்மை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகள் போன்று ஆங்கில வெறி வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போதுகூட இசைத்தட்டில் இசைத்தீர்கள். மாணவர்களை பயிற்சி கொடுத்து பாடவைக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் மனதில் பதியும். அரசு விழாக்களில் பாடகர்களே பாடுகிறார்கள்.
சமத்துவமான மதமாச்சரியரியற்ற நாம் எல்லாம் ஒருவர் என்ற எண்ணம் நம்மில் எழவேண்டும் சாதி மதம் நம்மை பிரிக்கக் கூடாது. நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் நம்முள் எழவேண்டும். இங்கே இருக்கும் பெருமக்களை காணும்போது சமத்துவத்தைக் காண்கிறேன்.பேரறிஞர் அண்ணா அவர்கள் அனைவரும் நாம் ஒரே தாய் வயிற்றில் பிறக்க இயலாது. ஆதாலால் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் என்றார். இங்கே மாணவர்கள் காந்தியாகவும் நேருவாகவும் பாரதியாகவும் நம் சுதந்திரத்திற்குப் போராட்ட்த்திற்குப் பாடுபட்டவர்களையெல்லாம் நம் கண்முன் மாணவர்கள் நிறுத்தினீர்ர்கள். தலைவர் பெருமக்களையெல்லாம் எண்ணி எண்ணி வணங்குகிறேன். நம் தமிழ் நாட்டில் மதுரை மாநகருக்கு வருகை தந்த காந்தி மகான் நம் விவசாயிகளின் உடைகளைக் கண்டு தன் கோட்சூட்டை மாற்றி அரை ஆடையை தம் ஆடையாக மாற்றி மக்களோடு மக்களாக வாழ்ந்து நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். அந்த சுதந்திரத் திருருநாளன்று வறிய மக்களை எண்ணி சமத்த்துவமாக வாழ வேண்டும் நம் கண்ணியமிக்க தலைவர் காயிதே மில்லத் அவர்கள் நாடாளுமன்றதில் இந்தியாவின் இணைப்பு மொழி இந்தியா ஆங்கிலமா என்று வாதம் வந்துபோது நமக்கு ஆதரவாக முழங்கினார். அவர் தாடி தொப்பி எல்லாம் அணிந்திருந்த்தைக் கண்டு வட நாட்டார் இந்திக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்று எண்ணியபோது இசுலாம் எங்கள் வழி அன்னைத்தமிழ் எங்கள் மொழி என முழங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.
நான் இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் பயின்றேன். நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி முதன் முதலில் மேடையில் பேசினேன். இன்று உலகம் முழுமையும் பேசிவருகிறேன். இதே போன்று சிறப்பாகப் பேசிய மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் புகழ் பெறுவீர்கள். நம்மை பதப்படுத்தும் பட்டைதீட்டு இடம்தான் பள்ளிகள். அதன் கர்த்தாக்கள்தான் ஆசிரியப் பெருமக்க்கள். அருமை நண்பர் பசீர் அரகள் முகநூலில் தாம் கன்னியகுமரி ஆளூர் பகுதியில் இருப்பதைப் பதிவிட்டிருந்தார். நான் இன்று வரமாட்டார் என்று எண்ணினேன். மிகக் கடினப்பட்டு இரவோடு இரவாக சுதந்திர தின நிகழ்வுக்காக வந்துள்ளார். இந்தக் குழந்தைகள் மேல் உள்ள பற்றை உணரலாம். ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த தொண்டாற்றும் பசிரை வாழ்த்துகிறேன். அருமை அண்ணன் அரிமா சேவியர் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் தொடர்ந்து இந்தச் சங்கப் பணிகளையும் தொண்டறப் பணிகளையும்சிறப்பாகச் செய்து வருகிறார்.
துன்பம் உறவரினும் துணிவாற்றிச் செய்க
இன்பம் பயக்கும் வினை.
என்ற குறளுக்கு ஒப்பாக தொண்டாற்றுகிறார் அருமை அண்ணன் சேவியர்.
தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு நாங்கள் தொண்டறச் சேவை தொடர்ந்து செய்த வருகிறோம். அருமை ஆசிரியப் பெருமக்களே மாணவர்களை சிறப்பாக உருவாக்குங்கள். தமிழ்ச் சிந்தனைகளை வழங்குங்கள் . வருங்காலத் தலைவர்களை உருவாக்குங்கள் என் இந்த் சுதந்திரத் திருநாளில் வேண்டுகொள் விடுத்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
(15 – 8-2022 அன்று சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சிப் பள்ளியில் விடுதலைத் திருநாளில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
No comments:
Post a Comment