Monday, August 15, 2022

 அற்புதம் அன்னை ஈகம் அரும்மகன் விடுதலை கண்டார்

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்  


அற்புதம் அன்னை ஈகம்  

அரும்மகன் விடுதலை கண்டார் 

பொற்கனி காணும் வயதில் 

பொல்லாங்காய் சிறையில் வெந்தார்

 நற்களம் எல்லாம் பெற்றே 

நயத்தகு பட்டம் பெற்றார் 

விற்பணர் பேரறி வாளர் 

விந்தையின் வியப்பே வாழ்க!  


சட்டமாய் மன்றம் கூட்டி 

சரிநிகர் தீர்மானம் கண்டும் 

கிட்டா ஆளுநர் வேடம் 

கிடைக்கா விடுதலை முறையா 

மட்டிலா நீதி மன்றம் 

மாண்புற விடுதலை தந்தே 

கொட்டிய கருணைத் தாயாய் 

கொண்டாடிடும் அறமே வாழ்க!! 


இளமையை சிறையில் கழித்தே 

இணையிலா வாழ்வை இழந்தார் 

பலமிகு சமூகச் சீற்றம்

 பண்பென செங்கதிர் சாவு

 உளமுள உரிமைச் சுற்றம் 

உவந்தே நாடிச் சென்றே 

திலகமாம் அற்புதம் அன்னை 

தீத்திறம் விடுதலை கண்டார்!!


கட்டியே பிடித்து முதல்வர்  

கவலையைப் போக்கும் மாண்பு 

கிட்டிய வாழ்வைத் தொடங்க 

கிள்ளையை வாழ்த்தும் பாங்கு 

மட்டிலா ஸ்டாலின் கோமான் 

மகத்துவ ஆளுமைச் செயலே 

தட்டிய கதவாய் நீதி 

தாங்கிய விடுதலை வாழ்க!!!

No comments:

Post a Comment