Friday, August 26, 2022

 




கொடுமைப் பாதகன் வீழ்கவே

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

மக்களை நலமாய்க் காக்கா மூடன் 

மனித நேயம் இல்லாப் போக்கால் 

திக்கெலாம் மக்கள் திரண்டே விரட்ட 

திண்ணாமாய் நடக்கும் புரட்சி வெல்க 

உக்கிர வறட்சி தீர்க்கா மோசம்

 உலுத்தர் வாழ்வு ஊதாரிச் செயலால்

 திக்கெலாம் தப்ப முயன்றே முனைந்தும்

 திகைக்க மக்கள் புரட்சி அடக்குதே!

 

முற்பகல் செய்யின் பிற்பகல் வருமே 

முன்னோன் குறளோன் முகிழ்த்த சொல்லின்

 நற்றவ நல்லோர் தமிழர் மாய்த்த

 நாசம் மோசம் தொடராய் மாய்க்குமே 

முற்றும் துறந்தே அகதி வாழ்வாய் 

மூத்த குடியே அலைந்த அவலம்

சற்றும் முற்றும் தப்ப இயலா 

சூழல் பக்சே குடும்பம் மாய்க்கும்

 

அதிபர் மாளிகை ஆடிடும் களமாய் 

அழிவைக் கண்முன் காணும் தளமாய்

 விதியென வாழ்ந்த மக்கள் புரட்சி 

வர்த்தக ஒற்றுமை இணைந்து நின்றே

 கதியெனத் துரத்தும் கய்மைகள அனைத்தும் 

குற்றக் கூண்டில் நிறுத்தும் நாளிதே

 மதிமிகு மக்கள் நடத்தும் புரட்சி 

மண்ணில் ஆணவம் ஒழிக்கும் அன்றோ! 


முள்ளி வாய்க்கால் கண்ட போதே 

முழுமைக் கண்கள் நீராய் வீழ்ந்ததே 

சொல்லில் அடங்கா வீரத் தலைவன் 

சரித்திரச் செம்மல் பிராபா கரனின்

கல்லும் மண்ணும் நினைவாய் எடுத்தோம்

 கரும வீர்ர் வீட்டின் சிதைவில்

 கொல்லும் மமதை அடங்காத் தனத்தோர்

    கொடுமை நெஞ்சர் வீழ்க வீழ்கவே

No comments:

Post a Comment