அன்னைசேது 17ஆம் ஆண்டு
விருதளிப்பு விழா
அன்னை சேது 17ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு. இன்று பெரியார்திடல் மணியம்மை அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்வில் பங்கேற்று அறிஞர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி விருது வழங்க தமிழர் தலைவர் உடல் நலம் சோர்ந்த நிலையிலும் இங்கே வருகை தந்துள்ளார்கள். இன்று தந்தை பெரியாரின் தொண்டறத்தை தமிழகத்தில் ஏன் உலகெங்கும் நிலைநாட்டி வரும் அருமைத் தமிழர்தலைவர் வருகை யாம் பெற்ற பேறு. யான் தமிழ்ப்பணியின் பொன்விழாவிற்கே அழைத்தேன் கனடா செல்ல உள்ளதால் வர இயலாமையை தெருவித்து இன்று அன்னையின் நினைவேந்தலுக்கு வருகை தந்துள்ள தலைவர் பெருமகனை நெஞ்சாரப் போற்றி தங்கள் கர ஒலிகளுக்கிடையில் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்று சமூக நீதிக் கொள்கையை தி.க., தி.முக மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளையும் இந்தக் கொள்கைக்காக ஒருங்கிணைக்கும் பேராற்றல் மிக்க தலைவர் நம் தமிழர் தலைவர். எங்கள் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களை உலகறிய மொழிந்த பெருமை மூன்று தலைவர்களுக்கு உண்டு. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இனமானப் பேராசிரியர் நம் அருமைத் தலைவர் தமிழர் தலைவர். தலைவர்களைத் தொடர்ந்து நம் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தையின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெருவித்து அதை அனைத்து ஊடகத்திலும் இணைய தளங்களிலும் பதிவு செய்து உலகறியச் செய்தார்கள். தந்தையார் அவர்களின் சேதுகாப்பிய்ம் 12 காண்டங்களையும் தமிழர் தலைவர் சிங்கப்பூரில் வெளியிட்டு தொகையையும் திரட்டித் தந்த பெருமைக்குரிய தமிழர் தலைவர் அவர்கள். பேராயக் கட்சியின் துணைத்தலைவர் ஊடகங்களில் திண்மையான கருத்துக்களை வலிமையாக பதிவிடும் பெருமகன் எங்கள் பார்திபனூர் பெருமகன் இதயதுல்லா அவர்களை வரவேற்று மகிழ்கிறேன். பெருமக்களே இங்கு விருதுபெறும் அறிஞர் பெருமக்கள் யாரையும் நானோ தம்பி கவியரசரோ ஆண்டவரோ தேர்ந்தெடுத்தது அல்ல அனைவையும் எண்ணிப்பார்த்து தந்தையின் சிந்தையில் தோன்றிய பெருமக்களே என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் 1. தொண்ணூறு வயது அண்மையில் கண்ட பெரும்புலவர் இராமலிங்கம் விருது பெறுகிறார். தமிழ்ப்பணியின்பால் பற்று கொண்டவர். யான் அமெரிக்காவில் இருக்கும்போது கூட தொடர்பு கொண்டு பாராட்டும் பெரும் பண்பினர். நீதியரசர் அரிபரந்தாமன் போன்ற அறிவுச் சுரங்கங்களை உருவாக்கிய பெருமகன்.2. பேராசிரியர் சோதிவாணன் திராவிட இயக்க கருத்துக்களை நெஞ்சில் தாங்கி தொடர்ந்து திராவிடத் தீர்ராக வாழ்ந்து வருகிறார். தினமணியில் வெளியான கட்டுரைகளுக்கு தமிழ்ப்பணியில் பல மறுப்புக் கட்டுரை எழுதி அளப்பரிய தொண்டாற்றி வருபவர். சிறந்த திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் பெருமகன் இன்று விருது பெறுகிறார். 3. அமரிக்காவில் வாழும் பெருங்கவிஞர் இராமசாமி அமெரிக்கா பெட்னா மாநாடுகளில் கவியரங்கங்களில் தலைமையேற்று பாடிய பெருமகன் யான் பங்கேற்ற சிக்காக்கொ 10ஆம் உலக மாநாட்டிலும் பாடிய பெருமகன் தமிழகத்தில் பாரதி கலைக் கழகத்தில் பெருந்தொண்டாற்றிய பெருமகன் விருது பெறுகிறார்.4.மியான்மாரில் வாழ்ந்து தமிழகத்தில் பர்மாவின் அடையாளமாக வாழும் பெரும் மரபுப் பாவலர் வேணுகொபால்.ரெப்ப்கோ வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியவர். பர்மாவைப் பற்றி மிகச் சிறந்த நூலை தமிழ் உலகிற்குத் தந்துள்ள பெருமகன் விருது பெறுகிறார். 5, ஏர்வாடி இராதாகிருட்டிணன் கவிதைஉறவுக் காவலர் கவிஞர்களின் வேடந்தாங்கள் கவிதை உறவு
இதழை தொடர்ந்து நடத்திவரும் சிறந்த எழுத்தாளர் கவிஞர். தந்தையாரைப் போன்றே ஆண்டுதோறும் நூல்கள் எழுதி வெளியிடும் பெருமகன்.கொரானா காலத்தில் கருணைக்கூடை எனும் அமைப்பு மூலம் நிதியை திரட்டி நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிய பெருமகன் விருது பெறுகிறார்.6.அரசியலிலும் திரைப்படத்திலும் சிறந்து விளங்கிய முனைவர் இரவிபாரதி. நாங்கள் நட்த்திய பன்னாட்டுத் தமிழுறவு ம்ன்ற மாநாட்டிற்கு அரும்பணியாற்றியவர். செருமணி மாநாட்டில் பங்கேற்ற பெருமகன். அரசியலில் பெருந்தலைவர்களோடு நெருங்கிப் பழகி அளப்பரிய பணிகள் செய்தவர் சென்னை மாநாகராட்சி உறுப்பிணராக இருந்து தொண்டாற்றிய பெருமகன் விருது பெறுகிறார். 7.பெருங்கவிஞர் கடவூர் மணிமாறன். சிறந்த தனித்தமிழ்ப் பற்றாளர் பாவலரேறு பெருஞ்சித்திரானார் வழி பெருந்தொண்டாற்றிய பெருமகன். மிகச் சிறந்த கவிதைநூல்களின் ஆசிரியர் மொழிப்போர் ஈகி வீரப்பனாருக்கு சிலை எழுப்பி மலர் வெளியிட்ட தீர்ர்.. இதுவரை அரசு விருது பெறாமை வியப்புக்குரியதே. திராவிட முன்னேற்றக் கழக வெற்றிக்கு அரும் பாடுபட்ட பெருமகன் விருது பெறுகிறார். 8. பாவலர் ம. கணபதி மிகச்சிறந்த பண்பாளர். தலைநகர் தமிழ்ச்ங்கத்திற்கு ஒருகட்டிடம் இருக்கிறது என்றால் அதற்கு கணபதியின் பங்களிப்பு மகத்தானது. இப்படி துணை நிற்கும் ஒருவர் சுந்தரராசன் அவர்கட்குத் துணை நின்றதாலேயே இன்று சங்கத்திற்குக் கட்டிடம் இயல்பானது. இன்றும் அதை பாரமரிக்கும் பெரும் பொறுப்பை ஏற்று வழிநட்த்திவரும் பெருமகன் விருது பெறுகிறார். இவர் தம் துணைவியார் சரோசா இளையராசா குழுவில் தில்ருபா கலைஞர் 9. மாணவர் மன்றத் தலைவர் ப.கி.பொன்னுசாமி மாணவர் மன்றத்தை திறம்பட இன்று வரை நட்த்திவரும் தொண்ணூற்றைந்து வயதுப் பெருமகன். நான் செருமணி சென்றபோது தமிழ்மணி பட்டப் படிப்பு செருமணி தமிழர்கள் பட்டம் பெற்றதை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கப் பொதுச்செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் இல்லத்தில் கண்டேன். மகத்தான் பணிகளைச் செய்யும் பெருமகன் விருது பெறுகிறார்.10. பொறிஞர் பீட்டர் ராசன் மேட்டூரில் பணியாற்றியபோது பன்னாட்டுத் தம்ழுறவு மன்ற அமைப்பை நிறுவி அரும்பணியாற்றியவர். இன்று சான்றோர் தளம் என்ற அமைப்பை நிறுவி அளப்பரிய சாதனைபுரியும் பெருமக்ன் விருது பெறுகிறார். 11. குறளோன் வேலரசு சிறந்த கவிஞர். தந்தைபெரியார் அண்ணா கலைஞருக்கு முப்பா வழி தொடர் நிகழ்வுகள் நடத்திய பெருமகன். குறள்வழி நூல்கள் யாத்துள்ள பெருமகன் விருது பெறுகிறார். 12. முகவை மண்ணைச் சேர்ந்த தந்தையின் மாணவர் பாதுசா. மாணவராக இருந்து ஆசிரியராக அரும் தொண்டாற்றி இன்று விருது பெறுகிறார். 13. தந்தையாருக்கு உற்றுழி உதவும் பொறிஞர் கோபாலகிருட்டிணன். ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி ஆங்கிலத்தில் திறன் பெற்றவர். இவ்வாண்டு விருது பெறுகிறார். 14. சந்தப் பாவலர் நந்தா. தொடர் இலக்கியப் பணிகள் ஆற்ற்பவர். இதழின் ஆசிரியர்.. மக்கள் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தொண்டாற்றும் செயல் மறவர் விருது பெறுகிறார். பெருமக்களே அனவரும் தமிழர் தலைவர் கரத்தால் விருது பெறுகின்றனர். நானும் எனது சிற்றந்தையார் வா.மு. முத்துராமலிங்கம் ஐ ஆர் எஸ் இந்திய வருமான வரித் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றவர் அவர்களும் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்துள்ளோம். தமிழர் தலைவர்பால் பேரன்பு கொண்டவர் பெருமனாரையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். விருது பெறும் பெருமக்கள் வருகை தந்துள்ள பெருமக்க்கள் அனைவரையும் எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பாகவும் வர்வேற்று விடைபெறுகிறேன். . (12-11-2022 அன்றுஅன்னை சேது விருதளிப்பு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)
6-11-2022 அன்று அன்னையின் அருள்மங்களம் ஆண்டநாயபுரம் அன்னை சமாதியில் சிறப்புடன் நடைபெற்றது. புலவர் நெடுஞ்சேரலாதன், கோடையிடி குற்றாளம், ஆசிரியர் பாதுசா. குமணன் ஆசிரியர் மூக்கன் வழக்கறிஞர் முத்துக்கண்ணன், சேவியர் விசயகுமார் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்று உரையாற்றினர்.
No comments:
Post a Comment