Monday, March 11, 2024

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் குமரியில் 32ஆம் ஆண்டு ஊர்திப் பயணத் தொடக்கவிழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

(பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் இன்று 32ஆம் ஆண்டு ஊர்திப் பயணத் தொடக்கவிழாவில் இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் இன்று 32ஆம் ஆண்டு ஊர்திப் பயணத் தொடக்கவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போல் இவ்வாண்டும்  திருக்குரளை படிப்பதற்க்காகவே தென்னாப்ப்ரிக்காவில் வாழும் தமிழைப் பயின்ற அண்ணல் காந்தியடிகள் நினைவு மண்டபம் முன் தொடங்குகிறோம்.

       தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் 1993ஆம் ஆண்டு நடந்த நடைப்பயண என் கண்முன் நிழலாடுகிறது. வயதில் முதிர்ந்த பெருமக்கள் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பே.விசுவநாதம் நீதியரசர் வேணுகோபால் இம்மண்ணின் மைந்தர் சங்கரலிங்கனார் போன்ற பெருமக்கள் இந்த இந்த இடத்தில் நடைப்பயணத்தைத் தொடஙி வைத்தனர். அந்த நடைப்பயணத்தின் தொடரச்சிதான் தமிழூர்திப் பயணமாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கை முழக்கத்தோடு இந்த தமிழூர்த்திப் பயணம் நடைபெறுகிறது, ஒவ்வொரு ஆண்டும் கண்ணியாகுமரி பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம் சார்பில் இந்த தொடக்கவிழாவை நட த்தும் கிளைத் தலைவர் தியாகி முத்துக்கருப்பன் அவர்களின் பணி மகத்தானது. தன்னுடைய மகனை இழந்து தன் மனைவியை தொடர்ந்து இழந்து தானும் உடல் குன்றி மீண்டு ந்டக்க இயலாமல் இருந்தபோது நடைப் பயண் தொடக்கவிழாவை இங்கு நட துகிறாரென்றால் அவர் மன் உறுதி எண்ணி அவரை வணங்கி ம்கிழ்கிறேன். இங்கு மட்டுமல்ல தமிழ்ப்பணியில் வெளியானவுடன் அந்த  ந்தப் பகுதிகளில் எழுச்சியோடு பெரும்பணியாற்ற்றும் தொண்டறச் செல்வர்களை  தமிழ் உணர்வாளகளை நெஞ்சாரப் போற்றுகிறேன். நிகாழ்விற்கு தலைமை தாங்கும் தொழிற்சங்கத் த்லைவர் இளங்கோ திராவிடர் கழக  சுப்பிரமணியம் தி,மு.க சரவணன் மகளிர் மாமணி கீதா சிவதானு தொண்டறச்செல்வர்  தாமசு அனைவரையும் வணங்குகிறேன்

     சென்னையில் புலியூர் மாநகராட்சி பள்ளியில் அரிமா இயக்கத்தினர் குழ்ந்தைகள் தின் விழாவிற்கு அழைதிருந்தனர். பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நட த்தி பரிசுகள் வழங்கினோம். அந்தப் பள்ளித் தலைமையாசிரியரிடம் இங்கு எத்தனை தமிழ் வழி வகுப்புகள் உள்ளன என வினவினேன் அவர் ஒன்றும் இல்லை அனைத்தும் ஆங்கில வழி என பூரிப்பாக க் கூறினார். எனக்கு மிகவும் வேதனையாக இருந்த து. இந்தப் பள்ளியிந்தான் நம் தமிழ்வழிக் கல்வி போராட்ட நாயகரகள் சுந்தராசன் கணப்தி  போன்றோர் பணியாற்றிய பள்ளி . பெற்றோர்களின் மூட த் தனமான ஆர்வத்தால் இந்த அவல நிலை உள்ளது.

          ஊர்திப் பயணங்கள் ஒவ்வொரு ஆண்டும்   எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைப் பயணமாக நடைபெறுகிற்து. கல்விநிலையங்களில் முழுமையாகத் தமிழ் என்ற கொள்கை முழக்கங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். தமிழ் வழி படித்தவரக்ளுக்கு வேலைகளில் முன்னுரிமை போன்ற திட்டங்களில் மூலமே தமிழைப் ப்யில மக்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.

     ஆலயங்கங்களில் கருவறையில் தமிழ் வாராமை பெரியார் நெஞ்சில் குத்திய முள். அந்த முள்ளை அகற்ற தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து சட்ட்டப் போராட்டங்கள் நட த்தி அதன் தொடர்ச்சியாக முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழை திருக்கோயில்களில்  வழிபாட்டு மொழியாக மட்டுமல்லாமல் அனைவரும் அர்சகராக ஆகலாம் என்ற புரட்சியை இந்த திராவிட ஆட்சி வழிப் படுத்தியுள்ளது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் பணி மகத்தானது.. தலைவர் கலைஞர் ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த முனைவர் தமிழ்க்குடிமகன் ஒத்துழைப்போடு ஓர் ஆண்டு ஊர்திப் பயணத்தில் ஒவ்வொரு கொவொகளிலும் பெருங்கவிக்கோ தலைமையில் கருவறையில் சென்று அர்ச்சகர்களை தெளிவுபடுத்து தமிழில் வழிபாடு செய்த து மகத்தான் சாதனையாகும்.

                     திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க க் கோரி குமரி முதல் இமயமலை தில்லி வரை பெருங்கவிக்கோ தலைமையில் ஊர்திப் பயணமாக இந்தியா முழுமையும் பயணித்து தில்லி சென்று தலைமையமிச்சர் அலுவலகத்தில் ந்ம விண்ணப்பத்தை வழங்கியது வரலாற்று சாதனையாகும். அந்தப் பயணத்தில் இந்தியாவில் உள்ள அனைத்த்துத் தமிழ்சங்கங்களும் தமிழ் அமைப்புகளும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தினர் இதியா முழுமையும் திருக்குறள் தேசிய நூலாக்க ப் பட வேண்டும் என்ற முழக்கம் பெருமுழக்கமாக இருந்த து. அண்மையில் நம் மாண்பமை முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உலக க க்ணினி மாநாட்டில் பேசும்போது தமிழர்களை கைபேசிகளி குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழில் அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் கூறியது போல் அனைவரும் அனைத்து நிலைகளிகும் தமிழைப் பயண்படுத்துங்கள். தமிழே நம் அடையாளம். வங்கிகளில் பணம் எடுக்கும் பணப்பொறி இயந்திரத்தில் தமிழை எப்போதும் பயண்படுத்துங்கள். தற்போது அனைத்தும் கணினி வழி நடைபெறுவதால் எத்தனைபேர் பேர் தமிழை ப்யண்படுத்திகிறார்கள் என்பது தெரியும். தமிழே பயண்படுத்தவில்லை என்றால் தமிழையே எடுத்துவிடுவார்கள். தமிழர்கள் தமிழை வாழ்வியல் மொழியாக உருவாக்க வேண்டும்.


No comments:

Post a Comment