Tuesday, May 26, 2015

கனடாவில் டொரண்டோ நகரில் “யாதும் ஊரே” நூல் வெளியீட்டுவிழா



(6-7-2014 அன்று கனடாவில் டொரண்டோ நகரில் யாதும் ஊரே நூல்
வெளியீட்டுவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பெருமதிப்பிற்குரிய தலைவர் கவிவாணர் கந்தவணம் அவர்களே, நிகழ்ச்சிக்கு அணி சேர்க்கும் வண்ணம் நூலைப் படித்து அரியதொரு உரை ஆற்றிய கணபதி இரவிச்சந்திரன் அவர்களே நூலைப் மூன்று நூல்களாகப் பகுத்து உரையாற்றிய கவிஞர் புகாரி அவர்களே என்னை கனடா வரவேற்று  அன்பு பாராட்டி உங்களையெல்லாம் கூட்டி இந்த யாதும் ஊரே நுலை வெளியீட்டு நிகழ்வை நடத்தும், அருமை அண்ணன் நட்பின் நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்தம் துணைவியார் மகளிர்மாமணி பத்மலோசினி அவர்களே வாழ்த்துரை வழங்கிய உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க தமிழ்க் கல்விப் பொறுப்பாளர் துரைராசா அவர்கல்ளே, மூத்த பெருமகன் துரைசிங்கம் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

கனடா வருவதென்றால் எனக்குப் பேரின்பம். இங்கு உணர்ச்சியுள்ள பெருமக்கள் தமிழ் உணர்வோடு வாழ்கின்றீர்கள். சென்ற முறை நான் வருகை தந்தபோது தாங்கள் காட்டிய அன்பையும் தங்களின் தமிழ் ஈழ உணர்ச்சியையும் யாதும் ஊரே இந் நூலில் பதிவு செய்துள்ளேன். இந்நூலை தங்கள் முன்னிலையில் வேளியிடுவது என்பது யான் பெற்ற பேறு. யான் சென்ற பயணத்தில் கண்ட அன்பு உள்ளங்களை அன்பு குன்றாமல் மீண்டும் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு உள்ள கோயில்கள் ஈழத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் உள்ளட்டக்கி உள்ளன. நம்மவர்கள் எங்கு பார்த்தாலும் பக்திப் பரவசமாகவே உள்ளார்கள். ஆனால் ஈழத்து மக்களும் இந்துதான் என்ற உணர்ச்சி நம் இந்தியு மத்திய அரசுக்கு  இல்லையே. நம் மக்களை கொன்று குவித்தபோது வாளாயிருந்த்தனர் அதனால்தான் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப் பட்டனர்.இந்த்துவா பேசும் பாசக வினருக்கு ஈழத் தமிழர்கள் என்ற உணர்ச்சியும் இல்லையே. இனிமேலாவது ஈழப் பிரச்சினையில் நியாயமான தீர்வை எட்டவேண்டும்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வறுத்தக் கூலி தரும்

என்று நம் ஐயன் கூறியவண்ணம் தம் மெய்வருத்தி ஈழத்திற்காப் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்வருத்தம் உலகம் முழுமையும் உள்ள தமிழர்களை அடையாளம் காட்டி இன்றும் நீரு பூத்த நெருப்பாக ஈழம் உள்ளது அவருடைய ஈகம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். உலகத் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் குடியிருப்பார் தமிழர் குல மாணிக்கம் தலைவர் பிரபாகரன்.

திரைப்படத் துறையினருக்கு நாம் காட்டும் ஆர்வத்தை முற்றிலுமாக போக்கவேண்டும் நம் இனத்திற்கு மொழிக்கும் ஈகம் செய்யும் பெருமக்களைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும். நம் மக்கள் ஈழத்திற்காக் செய்த ஈகங்கள் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும். திரைப்படக் கவர்ச்சி நம் உணர்ச்சிகளை மழுங்கச் செய்துவிடாமல் இருக்க வேண்டும்.

கணபதி இரவிச்சந்திரன் அவர்கள் பேசும்போது உண்மையிலேயே மெய்மறந்தேன். நேற்று என்னை கீதவாகிணி வானொலியில் பேட்டி கண்டார். பேட்டியின் போது பெருமக்கள் ஆவலோடு உரையாடினர். அப்போதுதான் நான் யாதும் ஊரே நூலைத் கணபதி இரவிச்சந்திரன் அவர்களிடம் தந்தேன். ஓர் இரவில் படித்து என் உள்ளம் நெகிழ்ந்த செய்திகளையெல்லாம் பட்டியலிட்டுள்ளார். ஈழத்து மக்களின் பதிவே இந்நூல் என பதிவு செய்தது எனக்குக் கிடைத்த சான்றிதழாகவே கருதுகிறேன்.

இலண்டனில் ஊர்தி ஓட்டுநர் டேவிட்டுடன் நடந்த நிகழ்வையும் கனாடாவில் டோரண்டோ நகரில் வாழும் ஈழத்து மூதாட்டி சீவரட்டிணம் அம்மையார் அவர்களைக் பற்றிக் கூறியுள்ள பதிவையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார். பெருமகானாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இன்னலின் சிகரத்திற்கு தாங்கள் சென்றாலும் தமிழையும் தமிழரையும் உலகில் என்றும் வலம் வரச் செய்த பெருமை ஈழத் தமிழ் தியாக உருக்களே தங்கட்கு என்றும் உண்டு. அந்தப் பதிவுகள்தான் இந்த யாதும் ஊரே எனப் பெருமிதம் கொள்கிறேன்.

அருமை அண்ணன் லோகன் அவர்கள் செல்லா சோதி அவர்களின் அச்சகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தமிழ் கணினி தட்டச்சும் அச்சகமும் மிகச் சிறப்பாக நடத்துகிறார். அவரது துணைவியார் உற்ற துணையாக உள்ளார். தற்போது சோதி செல்லா அவர்கள் மார்க்கம் தொகுதியில் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார். கோயம்பத்தூரில் வருகை தந்து இங்கு குடியுரிமை பெற்றுள்ள மாணிக்கம் அவர்களும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் வட இந்தியப் பெருமக்களும் வருகை தந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொள்கிறேன். கனடாவில் சனநாயகம் கோலோச்சி உள்ள தங்களைக் காணும்போது அரிய முடிகிறது.

ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பை மனித உரிமை மீரலை கண்டித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்த பெருமை கனடா பிரதமருக்கு உண்டு. இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டை புறக்கணித்த பெருமையும் கனடாவிற்கு உண்டு. இந்த நாட்டிற்கும் ஆட்சியாளர்களுக்கும் என் நன்றியைத் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கவிவாணர் கந்தவணம் அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ பற்றியும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி நாங்கள் ஆற்றும் பணியையும் மனம் நெகிழக் கூறினார்.  பெருங்கவிக்கோ மகன் திருவள்ளுவர் ஒழுக்கத்தின் சிகரம் என்று கூறினார். மூத்த கவிஞர் பெருமகன் வாயால் யான் கிடைத்த பாராட்டை பெரும் விருதாகவே எண்ணுகிறேன்.

கவிவாணர் கந்தவணம் ஐயா அவர்கள்  வருகை தந்திருந்த போது தந்தையார் அவர்கள் ஊரில் இல்லை என்றும் நான் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாப் படத்தையும் வெளியான நெடு நாட்களுக்கு முன் வெளியான தமிழ்ப்பணி இதழையும் காண்பித்தார்.முன்னாள் மேயர் சா. கணேசன் அவர்கள் கவிவாணருக்கு பொன்னடை போர்துகிறார். கவிவாணர் போன்ற பெருமக்களெல்லாம் வருவது தமிழர்கள் பெற்ற கொடை அன்றோ. பவள விழாக் கண்ட பெருமகன் கவிவாணர் கந்தவனத்தை  வணங்கி மகிழ்கிறேன்

அரும்பாடுபட்டு இந்த விழாவை நடத்திய அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்கட்கும் துணை நின்ற அண்ணன் அவர்களின் நிழலாகத் தொடரும் சகோதரர் விமல்ரத்தினம் அவர்ககும் மற்றும் பெருமக்கட்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு



(சோகூர் மாநிலத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளியே என் தேர்வு நிகழ்ச்சியில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

சிங்கையிலிருந்து  மலேசியா வரும்போது நான் சோகூர் மாநிலத்தில் அருமை நண்பர்கள் கவிஞர் வடிவேலு, எழுத்தாளர் வேணுகோபால் அவர்களை சந்தித்து ஒரு நிகழ்வில் பங்கேற்றுச் செல்வது வழக்கம். இம் முறை முனைவர் சேதுபதி அவர்கள் என்னை பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக இந் நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களும் கல்வித் துறை அதிகாரிகளும் ம.இ.க தொகுதித் தலைவர்களும் வருகை  தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் துறையின் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்ட  வரைவு முழக்கமாம “ தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” என அச்சிட்ட படிகளை என்னிடம் வழங்கினர்.

அதில் அண்மைக் கால் தமிழ்ப் பள்ளிகளின் வெற்றிகளையும் நடவடிக்கைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.

100% பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள்

45% இளங்கலை/முதுகலை கல்வி தகுதி பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்.

2013ல் யு.ப்.எசு.ஆர். மாணவர்களின் சிற்புத் தேர்ச்சி அடைவுநிலை 62% உயர்வு.

2014ஆம் ஆண்டு பிறபள்ளிகளைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு பதிவு உயர்வு  கண்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் பயின்ற மாண்வர்கள் உலக அளவில் பெற்ற் வெற்றிகளையும் பட்டியலிட்டுள்ளீர்கள்

உண்மையிலேயே தமிழ்வழிப் பள்ளி சிறப்புற அமைய தாங்கள் எடுத்து வரும் முயற்சியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

ஆனால் தற்போது பெற்றோர்களிடம் அந்த ஆவல் இல்லை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களி எண்ணிக்கை குறைகிறது என்ற செய்தியையும் குறிப்ப்பிட்டீர்கள். 20% சீன வழிப் பள்ளிகளில்  நம் தமிழ்ப் பிள்ளைகள் சேர்கிறார்கள் என்ற அதிர்ச்சியான்  செய்தியையும் வெளியிட்டீர்கள்.
தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து மக்கள் ஆங்கில மோகத்தில் திளைத்து தமிழையே புதை குழிக்குத் தள்ளும் அவலம் தொடர்கிறது.

1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் 50 தமிழ் அறிஞர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிட்டு தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை பட்டி தொட்டி எல்லாம் பரப்பினோம். அதைத் தொடந்து இவாண்டு வரை 22 ஆண்டுகளாக் ஊர்திப் பயணமாக வலம் வந்து தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தை உயிர்க் கொள்கையாகக் கொண்டு பரப்பி வருகிறோம்.

தமிழகத்தில் ஆங்கிலம் பிடித்த இடத்தை மலேசியாவில் சீனம் தொடர  அனுமதிக்கக் கூடாது. அதற்காக அரசாங்கப் பணீயாற்றும் ஆசிரியாராகப் பணீயாற்றும் நீங்கள் அரசோடு இணைந்து எடுத்துவரும் முயற்சி கட்டாயம் பலனளிக்கும். தமிழ்ப் பெற்றோர்களை அழைத்து தாங்கள் கொடுத்துவரும் விழிப்புணர்ச்சி நம் மக்கள் நம் மொழியைப் பேணுவார்கள் என்ற நம்பிக்கையை வழங்குகிறது.

நான் மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன் கோலாலம்பூர், ஈப்போ, தாப்பா, பினாங்கு பட்டர்வொர்த் சிம்பாங் அம்பாட், சித்தியவான், கெடா, சிரம்பான், தெலுக்கிந்தான், போன்ற பகுதிகளிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள் பிள்ளைகளின் வளர்சிகளையும் ஆசிரியர்களின் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளேன்.

ஆயிரக்கணக்கில் இருந்து தமிழ்ப் பள்ளிகள் ஐநூறாக இக் காலக் கட்டங்களில் குறைந்துள்ளது வேதனைப்படத்தக்க ஒன்றாகும். அது மேலும் குறையாவண்ணம் தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு நாங்களும் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும் என்றும் துணைநிற்கும் எனக்கூறி என்னை இங்கு அழைத்துவந்த அருமைச்சகோதரர் முனைவர் சேதுபதி அவர்கட்கு நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன்.

தமிழில் பெயர் எழுதுவது எப்படி


[27 12-2014 அன்று மலேசியாவில் கோலலம்பூர் நகரில் தான்சிறீ சோமா மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் குழுவினர் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை]

பெருமதிப்பிற்குரிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பொன்சண்முகம் அவர்களே மக்கள் ஓசை ஆசிரியர் இராசன் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் தமிழருக்காக தொண்டாற்றும் ”தமிழ் எங்கள் உயிர் குழுவின்” தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உல்கத் தமிழர் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திய அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம் அவர்கள் தமிழ்கத்திலிருந்து வருகை தந்திருக்கும் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள் அண்ணன் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழில் பெயரை முறைப்படி எழுதுவது எப்படி என சரியான தலைப்பை  கலந்துரையாடலின் தலைப்பாக தந்துள்ளீர்கள். தமிழ் வாழ நம் பெயரில் வாழ தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பெருமுயற்சியாகும். இந்தக் கலந்துரையாடலுக்கும் நடுநாயகமாக மலேசியத் திருநாட்டி முன்னணி நாளிதழ் மக்கள் ஓசையின் ஆசிரியர் அமந்திருந்து அனைவருடைய கருத்துகளையும் உள் வாங்கி தன் கருத்தை வழங்கினார்கள். நீண்ட அனுபவமும் தமிழ் அறிவும் உள்ள ஐயா அவர்கள் தன் நேரத்தை தமிழ் மேம்பாட்டுக்கு ப்யண்படுத்துவதை அனைவரும் பின் பற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் தமிழ்வழிக் கல்விக்காகவும் தமிழ் மொழிக்காகவும் அரும்பாடுபட்ட ஐயா அமரர் மணிவெள்ளையன் அவர்களையும் அவரின் தொண்டைத் தொடரும் தமிழ் நெஞ்சங்களையும் போற்றுகிறேன்.
முதலில் தமிழைச் சிதைப்பது மூடநம்பிக்கையே. தமிழர்கள் தாம் பெற்ற செல்வத்திற்கு பெயர் வைப்பதற்கு சோதிடனிடம் கேட்கிறார்க:. அவர்கள் வடமொழிப் முதல் எழுத்தைக் கொடுத்து தமிழக் குழந்தைக்கு தமிழ் அல்லாத பெயரை முன்மொழிகிறார்கள். அவர்களைத் புறம் தள்ள நம்மவர்கள் தெளிவு பெறவேண்டும்.

தமிழகத்தில் தமிழ்ச்சுரங்கம் என்ற அமைப்பின் வழி பேராசிரியர் ஆறு. அழகப்பனார் அவர்கள் தமிழ்ர்கள் தலைபெழுத்துகளை தமிழில்தான் எழுத் வேண்டும் என வலிய்றுத்தி செயல் பட்டு வருகிறார்கள். தமிழ்ப்பணியிலும் ந்நான் வெளியிட்டுள்ளேன்,

பெருமக்களே நாம் முதலில் நம் பிள்ளைகளும் வழிமுறையினருக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும், என் தந்தையார் பெருங்கவிக்கோ எனக்கு இட்ட பெயர் திருவள்ளுவர் என் தம்பிகள் கவியரசன் ஆண்டவர் தமிழ்மணிகண்டன். தங்கைக்கு பூங்கொடி எனவும் என் மக்கட்கு அறிவன் அன்பன் என என் குடும்பம் முழுமையும் தமிழ்ப்பெயர்களே.

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ 1993ஆம் ஆண்டு குமரியிலிருந்து சென்னை நடைப்பயணம் வந்தபோது மதுரையில் தம்பி கவியரசன் – முத்துமாரிக்கு பெண்குழந்தை பிற்ந்தது. விழா மேடையில் மகளுக்கு தமிழ் நடைப் பாவை என பெயர் வைத்தோம். அம்மகள் இன்று அமெரிக்காவில் தமிழ் நடைப்பாவை வலம் வருகிறார்.

நம் பெயரைக் கூறும் நம் மொழியும் இனமும் ஒளிரவேண்டும்.
இறுதியாக ஐயா பொன் சண்முகம் ஐயா அவர்கள் தலைபெழுத்தும் பெயரும் முழுமையாக இடம் பெறவேண்டும் என தீர்மாணம்
தந்தைபெயர்+தனதுபெயர் தனதுபெயர்+ துணைவர்பெயர் என இடம் பெறவேண்டும்

என இயற்றியுள்ளார்கள் இதை கோலலம்பூர் பிரகடணம் என மொழிந்துள்ளார்கள். இத் தீர்மாணத்தை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பாக வழிமொழிந்து உலகம் வாழ் தமிழர்கள் பின் பற்றவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோலாலம்பூர் கிளையின் சார்பில் மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்குப் பாராட்டு விழா


(பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோலாலம்பூர் கிளையின் சார்பில் மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்புரை)

பேருள்ளப் பெருந்தகை சமுதாயக் காவலர் இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் பண்டிட் ஐயா மதிராசன் அவர்களே நான் இங்கு வந்ததிலிருந்து என்னோடு பயணிக்கும் அருமை நண்பர் கவிஞர் சுதந்திரன் அவர்களே கற்றபின் நிற்க் நுலை ஆய்வுரை வழங்கிய அருமை நண்பர் அவர்களே மகளீர் மாமணியாக இங்கே வந்து அமர்ந்திருக்கும் அன்னையர் அவர்களே மற்றும் வருகை தந்திருக்குகு பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
பெருமைமிகு நம் தலைவர் மதிராசன் நம் நீண்ட கால நண்பர். அவர் இங்கு ஆற்றிவரும் அளப்பரிய தொண்டை நான் அறிவேன். தாம் பொறுப்பேற்று நடத்திய மருத்துவர் சங்க அமைப்புக்கு கோலால்ம்பூரிலே ஒர் கட்டடம் கட்டி தமிழர் பெருமையை நிலை நாட்டியுள்ளார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னலம் இல்லாமல் இருந்தால்தான் இத்தகைய சாதனைகள் செய்யமுடியும். தன்னலமில்லாத் தகைமையை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
கவிஞர் சுதந்திரன் அவர்கள் மிகச் சிறந்த கவிஞராக மிளிர்கிறார். தமிழ் தந்தையைப் பற்றி தம் மகள் எழுதிய கவிதையை காண்பித்தார். உண்மையிலேயே மலேசியாவில் நம் பிள்ளைகள் தமிழ் உணர்வோடு வளர்வதை இந்நூல் படிப்போர் உணரலாம். சுதந்திரன் அவர்களும் பல் கவிதைப் படைப்புகளை எழுதியுள்ளார் அவற்றை ஐயா பெருங்கவிக்கோ கண்டு பாராட்டியுள்ளார். கூடியவிரைவில் அவரது கவிதைநூல் வெளியிடுவார் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.
பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம் உலகளாவிய அமைப்பு. இதற்கு வித்திட்டது மலேசியமண். இங்கு பினாங்கு நகரிலேயே வாழந்த சுவாமி இராமதாசர் தம் மணிவிழாவிற்கு தம் மாணவரான நம் பெருங்கவிக்கோவை 1977ஆம் ஆண்டு அழைத்தார். அழைத்தபின் தமிழகத்திற்கு வரும் பெருமக்களை வரவேற்க அமைக்கப்பட்ட அமைப்புதான் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். வாரம் ஒரு பெருமக்கள் என உலகம் முழுமையும் நம் தமிழ் நெஞச்ங்கள் தமிழகம் வருகின்றனர். அவர்களை வரவேற்று தமிழ் உலகிற்கு அறிமுகப் படுத்துவதே நம் கடமையாகப் கொண்டுள்ளோம். அண்மையில் அய்யா மதிராசன் தமிழகம் வந்திருந்தபோது திருச்சியில் அருமையானதொரு விழாநடத்தி அதை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளோம். இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருமக்களுக்கு வரவேற்பு வழங்கியுள்ளோம் என்பதைப் பதிவு செய்வதில் பெருமையும் உவகையும் கொள்கிறேன்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ஆறு மாநாடுகளை உலகம் முழுமையும் நடத்தியுள்ளது. முதல் மாநாடு திருச்சியிலும் இரண்டாம் மாநாடு சென்னையிலும் மூன்றாம் மாநாடு செர்மன் தலைநகர் பெர்லினிலும் நான்காம் மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் ஐந்தாம் மாநாடு மதுரையிலும் ஆறாம் மாநாடு இங்கும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இங்கு நடைபெற்ற மாநாட்டில் மாண்பமை அமைச்சர் டாண்சிறீ கோசூகூன் அவர்களும், நம் சாதனைத்தலைவர் உத்தாமா டத்தோ சாமிவேலு மற்ற நம் தமிழ் அமைச்சர்கள் உலகளாவிய அறிஞர்கள் மலேயா பல்கலைக்கழகத்தில் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் மாநாடு அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். 2015ஆம் ஆண்டு சூலை திங்கள் 25, 26 நாட்களில் நடைபெறவுள்ளது. தமிழன்பர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.
தமிழ்ப்பணி திங்களிதழ் 44 ஆண்டுகளாக வெளிவருகிறது. உலகம் முழுமையும் வாழும் தமிழர்களின் கருத்துப் பெட்டகமாக உள்ளது, மலேசியா முழுமையும் இவ்விதழ் உறுப்பிணர்களைக் கொண்டது, அமைப்போ இதழோ நடத்துவது என்பது எளிதான செயல் அல்ல.
நண்பர்களே இவ்வளவு பெரும் சாதனைகளை செய்த இயக்கம் தமிழகத்திலோ இங்கோ நிலையாக நாம் சாதிக்க வேண்டும். தமிழகத்திலே உலகத்தமிழ்க்குடில் கட்டுவதற்கு திட்டமிட்டு அறக்கட்ட:ளை தொடங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே நம் குறிக்கோள். 1993ஆம் ஆண்டு நம் நிறுவனர் பெருங்கவிக்கோ தலைமையில் குமரியிலிருந்து சென்னைவரை நடைப்பயணமாக 100 தமிழ் அறிஞர்களுடன் பட்டிதொட்டி எல்லாம் முழக்கமிட்டு வந்தோம். இன்றளவும் தமிழ் எல்லாநிலைகளிலும் வராத நிலை. இங்கு கூட நம் தமிழ்ப் பிள்:ளைகள் 20 விழுக்காடு சீனததைப் படிப்பதாக வறுத்தப்பட்டனர், தமிழ்கத்தில் நம் மொழியை நாம் எந்நிலையிலும் இழக்கக் கூடாது. அதைத் தொடர்ந்து ஊர்திப் பயணமாகா ஆண்டுதோரும் அருஞ்சாதனை நிகழ்த்தும் மன்றம் நம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். இம் மன்றத்தில் இணைத்துக் கொண்ட பெருமக்கள் அனைவருக்கும் எனது வரவேற்பையும் மகிழ்சியையும் தெருவித்துக் கொள்கிறேன்.
மிகக குறுகிய காலத்தில் விழாவை அமைத்து சிறப்பித்த தலைவர் மதிராசன் அவர்களையும் கவிஞர் சுதந்திரன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாகி விடை பெறுகிறேன். 

Thursday, September 4, 2014

மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு


           சிறப்புமிக்க மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.  எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்களுக்காக வாங்கப்பட்ட கட்டிடம்  என அறியும்போது பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

யான் யாதும் ஊரே நுலை வெலியிட வேண்டும் எனறு அருளாளர் அசுவின் முத்து அவர்களிடம் கூறிவுடன் முதுபெரும்கவிஞர் தமிழ் நெஞ்சர் காரைக் கிழார் அவர்களைத் தொடர்பு கொண்டார். மனம்  மகிழ்வோடு ஐயா அவர்கள்  இடத்தைத தந்து வாழ்த்தையும் தெருவித்துள்ளார்.

இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் ஆசிரியமணி மாணிக்கம்  அவர்கள் மிகச் சிறந்த தமிழ்த் தொண்டர்.  மாணிக்கம் அவர்களின் அழைப்பின் பேரிலேயே மகாகவி பாரதி  விழாவில் ஈப்போ நகரில் பங்கேற்று தற்போது இங்கே இந்நிகழ்வில் அரிய உரை ஆற்றியுள்ளார்கள்

ஆய்வறிஞர் சந்திரகாந்தன் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவாளார். தமிழ் உலகுக்கு தம் ஆய்வுக் கட்டுரை வழியாக பூசாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திர்சோழனின் பதிவை வழங்கிய பெருமகனார். நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளேன். தற்போது ஆவணப் படங்கள் எடுப்பதில் காம்ரேன் மலைப்பகுதியில் படப்பிடிப்புக் குழுவினருடன் பர்பரப்பாக உள்ள நேரத்த்லும் என் அழைப்பை ஏற்று இந்நூலிற்கு மிகச் சிறந்த ஆய்வுரை வழங்கியுள்ளார்.

           இந்நூலை வெளியிட்டுள்ள பேருரை ஆற்றிய மூத்த தலைவர் டத்தோ வி.க.செல்லப்பன் வரவேற்புரையாற்றிய  ஆசிரியர் திலகம் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கிய அருள்நெஞ்சர் இரெங்கய்யா நன்றியுரையாற்றிய இந் நிகழ்வுக்கு முதுகெழும்பாகச் செயல்பட்ட அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம். இந்த அழைப்பை வடிவமைத்த அருமை கணினி  வல்லுனர் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.  

          மலேசிய  மண் தமிழைத்  தமிழகாப் படிக்கும்  பயிற்றுவிக்க்கும் மண். இந்த மண்ணில்தான் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6 ஆம் மாநாடான தமிழர் ஒற்றுமை மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினீர்கள். இன்றும் தமிழ் தமிழர் இன்னல்களுக்கு குரல் கொடுக்கும் வல்லமைமிக்க தமிழர்கள் இங்கே வாழ்கிறார்கள்.  அப்பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
யாதும் ஊரே நூல் உலகெங்கும் வாழும்  தமிழர்ளைப் பற்றிய பதிவுப்  பயணநூல். அமெரிக்கா கனாட ஐரோப்பிய நாடுகளில் நான் கண்ட காட்சிகளைப் பதிவு செய்துள்ளேன் உலகம்   முழுமையும் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பதிவு செய்துள்ளேன். ஒரு நிகழ்ச்சியை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

          கனடாவில் டொரண்டோ நகரில் சீவரட்ணம்  அம்மையா வாழ்ந்து வருகிறார்.  யான் அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அம்மையார் எம் தமிழ்ப்பணியிலும் எழுதி வருகிறார். அம்மையார் அவர்கள் அங்குள்ள தொலைக்காட்சிகளில் அடிக்கடி பேட்டி கொடுப்பார். அம்மையார் இல்லத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். கனடாவில் வாழும் ஈழத் தமிழர்கள் மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மண்ணின் பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஈழத்தில் தம் வீடு பெரிய வீடு என்றும் மிகப் பெரும் தோட்டம் உள்ளதையும் குறிப்பிட்டு இன்று தரை மட்டமாகியுள்ளது கன்கலங்கிக்  கூறினார். கனடா வீட்டில் உள்ள தோட்டத்தில் இது ஈழத்திலிருந்து கொண்டுவந்த கத்திரிச் செடி அனைத்துச் செடிகளீலும் என் மண்ணைக் காண்கிறேன் என்று கூறியது இன்றும் என் கண்களில் நீர் பெருக  வைக்கும்.

           ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு எந்த முறையிலும் தீர்வைக் காணாத்து தமிழினத்திற்குச் செய்த கொடுமை. ஈழத்திற்குச் சென்ற பெஇண்டன் பிரதமர் டேவிகாம்ரான் யாழ்ப்பாணம் சென்று தமிழர்க்ளின் இன்னல்களை உலகறியச் செய்தர்ர். ஐநா அதிகாரி வீரப் பெண்மணி நவனிதம்பிள்ளை ஈழத்துக் கொடுமைகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். ஐநா மன்ற விசாரனையில் போர்க்குற்றவாளி இராசபக்சே தண்டிக்கப்பட்டு ஈழம் கிடைத்தால்தான் சீவரத்தினம்  போன்ற ஈழ் மக்களின் நெஞ்சக் குமுறல் நீங்கும். அதற்கான பணிகளைச் செய்வதே ந்ம்முடைய முதற்பணி..

         மலேசிய மண்ணில் கவிஞர்கள் எழுத்தாளர்கள்  தமீழுக்கு மிகப்பெரிய ஆக்கங்களைத் தந்துவருகின்றனர். டான்சிறீ சோமசுந்தரம் அறவாரியம் உலகின் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து மிகப் பெரிய பரிசுத் தோகை அமெரிக்க டாலர் 10000 வழங்குகிறது. ஆண்டுதோறும் எண்ணற்ற மாநாடுகள் நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்க்கும் மலேசியத் தமிழர்களை வணங்கி விடை பெறுகிறேன்..

(28-12-2013 அன்று மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

ஒன்றுபட்டுத் தாழ்வுகளை நீக்குவோம்


        ஈப்போ நகரில் காவல்  துறையில் அதிகாரியாகப் பணியாற்றும்  ஐயா அருண் ஆறுமுகம் அவர்களின் அப்பழுக்கில்லாத் தமிழ்ப்பணியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.  அம்மா காமலாட்சி ஆறுமுகம் அவர்களைத் தொடர்பு கொண்டபோது தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வழி எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் ஆறுமுகம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதறிந்து மிக்க மகிழ்ச்சியடைநதேன். மிகக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த ஆறுமுகம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கட்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். .

ஆசிரியமணி மாணிக்கம் ஏற்பாடு செய்த மகாகவி பாரதியின் பிறதநாள் விழாவிற்கு என்னுடைய  தலைமையில் 12 அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் அருண் ஆறுமுகம் ஐயா அவர்களின் பேருழைப்பைக் கண்டோம். யாங்கள் கெடா பினாங்கு சென்று ஈப்போ வழி வரும்போது அறநெறிக் கழகத்தின் சார்பில் அனைவருக்கும் பாராட்டு வழங்கி விருந்து வழங்கி  சிறபபித்தார். அன்று நெல்சன் மண்டேலா அவர்கட்கு இரங்கல்  தெருவித்து அவரைப் பற்றிய கட்டுரையும் வழங்கினர்.

அருமை நண்பர் அருணாஆறுமுகம் அவர்கள் தம் காவல் துறை அனுபவங்களை நூலாக தமிழகத்தில் வெளியிட உள்ளார். பெருமகனை தமிழகத் தமிழர்களின் சார்பாக வரவேற்கிறேன்.

தமிழர்களின் தடங்களை எல்லாம் அழிக்க தமிழ் விரோதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அண்மையில் பூசாங் பள்ளத்த்தாக்கில் உள்ள இராசேந்திர சோழன் பதித்த தடங்களெல்லாம் உடைக்கப்படுவதை
பத்திரிக்கைகளில் கண்டு அதிர்ந்தேன். யான் பன்முறை பூசாங்க் பள்ளத்தாகிற்கு சென்றுள்ளேன் தற்போதும்  அறிஞர் பெருமக்களோடு சென்று வந்தோம்.

          கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

         பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.

          பூசாங்க் பள்ளத்தாக்கில் சோழர் காலத்தில் கட்டிய கோயில்  வடிவம் இன்றும் உள்ளது அதில் 10 ஆம் நூற்றாண்டு கோயில்  என்று குறிப்பிட்டுள்ளார்களேயொழிய அதில்  சோழர்கள் பற்றிய பதிவு இல்லாதது வருந்தத்தக்கது
.
         இருப்பினும் பள்ளத்தாக்கில் ஒரு சீனக் கட்டுமான நிறுவனம் உடைத்தெடுபதை மலேசியத் தமிழர்களின் எழுச்சியால் தடை செய்யப் பட்டுள்ளது கண்டு பெருமகிழ்ச்சி யடைகிறேன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்ற்மை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு

என்ற மகாகவி பாரதியின் பாடலைக் கூறி அனைவரும் ஒன்றுபட்டு தாழ்வுகளை  நீக்குவோம் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

(25-12-2013 அன்று மலேசியா ஈப்போ தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை)

தமிழர் திருநாள்


           உலகத்தமிழ்  எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் போன்றே நம்மையெல்லாம் மேடையில் ஏற்றி தாம் கீழே இருந்து இந்தத் தலைமுறைக்கு வழிகாட்டும்  பெரியார் பெருந்தொண்டர் எழுத்துச் செம்மல் மூத்த வழக்கறிஞர் சமரசம் ஐயா அவர்களே  நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வெங்கடேசன் அவர்களே, முன்னிலைவகிக்கும் சிவசுப்பிரமணியம் அவர்களே மிகச் சிறப்பாக உரையாற்றிய பெருமக்கள் பேராசிரியர் சம்பத் குமார் புலவர் சதாசிவம் கவிஞர் சொக்கர் மணாளன் கவிஞர் மதி சி.குப்பன் மகளிர் மாமணியாக இங்கு உரையாற்றிய செந்தமிழ்செல்வி குணசேகரன் அவர்களே, அவையிலே அமர்ந்திருக்கும் எங்களது தமிழ்ப்பணியின் நீண்ட காலப் படைப்பாளர் படைக்களப்பாவலர் மூர்த்தி அவர்களே, மலேசியா புகுத்தறிவு மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு  நடந்த மாநாட்டு நிகழ்வுகளை 16 பககம் மிகச் சிறப்பாக தொகுத்து வெளியிட்ட  ஆற்காட்டிலிருந்து இங்கு வருகை தந்துள்ள ஆசிரியப் பெருமகன் புலவர் பன்னீர்செல்வம் அவர்களே திரளாக வருகை தந்திருக்கும் வேலூர் தமிழ்ப்பெருங்குடிமக்களே உங்கள் அனைவருக்கும்  எம் பணிவான வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

          தமிழர் திருநாளை நாம்  கொண்டாடக் நாமெல்லாம் இங்கு கூடியுள்ளாம். தமிழ் தமிழர்  சிந்தனைகளெல்லம் தமிழ்நாட்டில் பின் பற்றப்படுகிறதா என்றால் வெட்கப்பட வேண்டியுள்ளது.  திருவள்ளுவர் ஆண்டு என தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பாவேந்தர்                பாரதிதாசன்,முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவாநாதம் மற்றும் அறிஞர் பெருமக்களெல்லாம் கூடி எடுத்த முடிவை  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழகஅரசின் ஆண்டாக முத்ன்முதல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது நடைமுறைப்படுத்தி வழக்கத்தின் இருந்து வந்தது.. தற்போது சென்ற முறை  அவர் ஆட்சி செய்தபோது தை மாதம் தமிழாண்டின் தொடக்கமாக  திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமே  தமிழாண்டாக அறிவித்து அதை உலகமே  கொண்டாடுகிறது.ஆனால் இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழாண்டை சித்திரையாகக் கூறுகிறார்கள். மிகுந்த வெட்கக்கேடாக உள்ளது.

           சித்திரை தமிழாண்டு  தொடக்கமெனில் 60 ஆண்டுளில் ஒரு தமிழ்ப் பெயர்களாவது உள்ளதா. ஆண்டுப் பிறப்புக்கு அவர்க்ள கூறும்  பகுத்தறிவுக்கு உகந்ததாக உள்ளதா பகுத்தறிவுக்கு ஒத்ததா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்துவரை திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டு. பொங்கல் திருநாளே தமிழர் திருநாள்.

           நான் பர்மா சென்றிருந்தபோது தட்டோன் நகர்ப் பகுதிக்கு சென்றிருந்தோம்.அங்கு திருக்குறள் பெரியார் அமரர் மாரிமுத்து அவர்கள் எழுப்பிய வள்ளுவர் கோட்டம் கண்டு  மெய்மறந்தேன். அங்கு திருவள்ளுவர் சிலை முன்பு ஓதுவார் குருசாமி அவர்கள் திருக்குறளை  ஓதி வழிபாடு செய்தது இந்த மறைமொழி உலகமெங்கும் வாழும தமிழர்கள் பகுதிகளில் என்று ஒலிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. தட்டோனிலிருந்து யங்கூன் திரும்பியபோது ஒரு சுமையுந்தில் வண்ணவிளக்குகள் சூழ் திருவள்ளுவர் படத்தி ஏந்தி தமிழ்மக்கள் உலா வந்தனர்.

          சுவிட்சர்லாந்தில் முருகவேள் நந்தினி இணையர் வள்ளுவன் பாடசாலை வைத்து ஆண்டுதோறும் திருவள்ளுவர் ஆண்டான தமிழ் ஆண்டை  மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

          மலேசியாவில் திருவள்ளுவர் ஆண்டே தமிழ் ஆண்டுஎன பல விழாக்கள் பல  தமிழ் அமைப்புகள்  மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் தமிழர் சிந்தனைகளெல்லாம் புதைக்கப் படுவது கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாட்டில் தமிழ் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஆலயங்களில் தமிழ் இல்லை. ஆட்சியில் தமிழ் என்று சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் போராடினாலும் தமிழுக்கு இடமில்லை. கொடுமையிலும் கொடுமை பள்ளிகளில் தமிழ் இல்லாத அலங்கோலம் இன்று உள்ளது. கொடுமையின் உச்சமாக இந்த அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை புகுத்துகிறது. தமிழர் திருநாளை கொண்டாடும் நாம் எண்ணி எண்ணி வேதனைப்படும் கொரடூரம் நடைபெறுகிறது.

ஈழத் தமிழர்கள் அவலம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இட்லரைவிடக் கொடிய இராசபக்சே இலட்சக்கணக்காண தமிழர்களைக் கொன்று குவித்து முள்வேலிகளில் மண்ணின் மைந்தர்களை அடைத்து வைத்துள்ள கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது. தமிழினத்தையே அழிக்கும் கொடூரத்திற்கு இந்தியஅரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. உலகமெங்கும் 10 கோடித் தமிழர்கள்  வாழ்ந்தும் பயணின்றி ஒப்பாரியாகவே உள்ளது. இந்த பயங்கரவாதத்தைப் புரிந்த இராசாபக்சே ஐநா மன்ற நீதிமன்றத்தில் தண்டிக்கப்படு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப் படவேண்டும். ஈழத் தமிழர்களின் குமுறல் கட்டாயம்  நிறுத்தும்.

உலகமெங்கும் பரவிச் சென்ற ஈழத் தமிழர்கள் தமிழ் தமிழர் பண்பாட்டை கட்டிக்காத்து வருகிறார்கள். தமிழ்மொழி  உலக மொழியாக வலம் வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மொழியின் சிறப்பை பேணிப் பாதுக்காகின்றனர். கனடா பாராளுமன்றத்தில் ஒரு இராதிகா எனற தமிழ்ப்பெண்மணி  பாராளுமன்ற உறுப்பினராகி பாராளுமன்ற முழக்கமே தமிழில் முழங்கி அனைத்தும் பெருமக்களும் கரஒலி எழுப்பி மகிழ்ந்தனர். கெராலிசு சிம் என்ற பாரளு மன்ற உறுப்பினர் தம்முடைய தொகுதி மக்களுக்கு தமிழில் அரசு சட்ட்திட்டங்களை அச்சடித்து வழங்கியுள்ளார்.

ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்க்ளின் குடும்ப்ப பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன.இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்ச்கத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்த்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் தமிழை பல நூற்றாண்ண்டு காலமாக பல்வேறு ஆதிக்க சக்திகள் அடக்கிஒழிக்க எண்ணின.  ஆனால் தமிழும் தமிழரும் பீனிக்சு பறவையாக ஒளிர்ந்துகொண்டிருகிறார்கள்.

  ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்களின் குடும்பப் பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன. இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்சகத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயப் பொறுப்பும் திராவிட இயக்கப் பெருந்தொண்டரும் எழுத்துச்செம்மல் சமரசம் ஐயா அவர்க்ள் அழைத்தமைக்கு நெஞசார்ந்த நன்றியைக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

(உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் சார்பில் 27-11-2013 அன்று நடந்த தமிழர் திருநாள் விழாவில் ஆற்றிய உரை)