ஈப்போ நகரில் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் ஐயா அருண் ஆறுமுகம் அவர்களின் அப்பழுக்கில்லாத் தமிழ்ப்பணியை நெஞ்சாரப் போற்றுகிறேன். அம்மா காமலாட்சி ஆறுமுகம் அவர்களைத் தொடர்பு கொண்டபோது தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வழி எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் ஆறுமுகம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதறிந்து மிக்க மகிழ்ச்சியடைநதேன். மிகக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த ஆறுமுகம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கட்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். .
ஆசிரியமணி மாணிக்கம் ஏற்பாடு செய்த மகாகவி பாரதியின் பிறதநாள் விழாவிற்கு என்னுடைய தலைமையில் 12 அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் அருண் ஆறுமுகம் ஐயா அவர்களின் பேருழைப்பைக் கண்டோம். யாங்கள் கெடா பினாங்கு சென்று ஈப்போ வழி வரும்போது அறநெறிக் கழகத்தின் சார்பில் அனைவருக்கும் பாராட்டு வழங்கி விருந்து வழங்கி சிறபபித்தார். அன்று நெல்சன் மண்டேலா அவர்கட்கு இரங்கல் தெருவித்து அவரைப் பற்றிய கட்டுரையும் வழங்கினர்.
அருமை நண்பர் அருணாஆறுமுகம் அவர்கள் தம் காவல் துறை அனுபவங்களை நூலாக தமிழகத்தில் வெளியிட உள்ளார். பெருமகனை தமிழகத் தமிழர்களின் சார்பாக வரவேற்கிறேன்.
தமிழர்களின் தடங்களை எல்லாம் அழிக்க தமிழ் விரோதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அண்மையில் பூசாங் பள்ளத்த்தாக்கில் உள்ள இராசேந்திர சோழன் பதித்த தடங்களெல்லாம் உடைக்கப்படுவதை
பத்திரிக்கைகளில் கண்டு அதிர்ந்தேன். யான் பன்முறை பூசாங்க் பள்ளத்தாகிற்கு சென்றுள்ளேன் தற்போதும் அறிஞர் பெருமக்களோடு சென்று வந்தோம்.
கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.
பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.
பூசாங்க் பள்ளத்தாக்கில் சோழர் காலத்தில் கட்டிய கோயில் வடிவம் இன்றும் உள்ளது அதில் 10 ஆம் நூற்றாண்டு கோயில் என்று குறிப்பிட்டுள்ளார்களேயொழிய அதில் சோழர்கள் பற்றிய பதிவு இல்லாதது வருந்தத்தக்கது
.
இருப்பினும் பள்ளத்தாக்கில் ஒரு சீனக் கட்டுமான நிறுவனம் உடைத்தெடுபதை மலேசியத் தமிழர்களின் எழுச்சியால் தடை செய்யப் பட்டுள்ளது கண்டு பெருமகிழ்ச்சி யடைகிறேன்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்ற்மை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு
என்ற மகாகவி பாரதியின் பாடலைக் கூறி அனைவரும் ஒன்றுபட்டு தாழ்வுகளை நீக்குவோம் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
(25-12-2013 அன்று மலேசியா ஈப்போ தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை)
No comments:
Post a Comment