Thursday, September 4, 2014

மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு


           சிறப்புமிக்க மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.  எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்களுக்காக வாங்கப்பட்ட கட்டிடம்  என அறியும்போது பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

யான் யாதும் ஊரே நுலை வெலியிட வேண்டும் எனறு அருளாளர் அசுவின் முத்து அவர்களிடம் கூறிவுடன் முதுபெரும்கவிஞர் தமிழ் நெஞ்சர் காரைக் கிழார் அவர்களைத் தொடர்பு கொண்டார். மனம்  மகிழ்வோடு ஐயா அவர்கள்  இடத்தைத தந்து வாழ்த்தையும் தெருவித்துள்ளார்.

இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் ஆசிரியமணி மாணிக்கம்  அவர்கள் மிகச் சிறந்த தமிழ்த் தொண்டர்.  மாணிக்கம் அவர்களின் அழைப்பின் பேரிலேயே மகாகவி பாரதி  விழாவில் ஈப்போ நகரில் பங்கேற்று தற்போது இங்கே இந்நிகழ்வில் அரிய உரை ஆற்றியுள்ளார்கள்

ஆய்வறிஞர் சந்திரகாந்தன் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவாளார். தமிழ் உலகுக்கு தம் ஆய்வுக் கட்டுரை வழியாக பூசாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திர்சோழனின் பதிவை வழங்கிய பெருமகனார். நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளேன். தற்போது ஆவணப் படங்கள் எடுப்பதில் காம்ரேன் மலைப்பகுதியில் படப்பிடிப்புக் குழுவினருடன் பர்பரப்பாக உள்ள நேரத்த்லும் என் அழைப்பை ஏற்று இந்நூலிற்கு மிகச் சிறந்த ஆய்வுரை வழங்கியுள்ளார்.

           இந்நூலை வெளியிட்டுள்ள பேருரை ஆற்றிய மூத்த தலைவர் டத்தோ வி.க.செல்லப்பன் வரவேற்புரையாற்றிய  ஆசிரியர் திலகம் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கிய அருள்நெஞ்சர் இரெங்கய்யா நன்றியுரையாற்றிய இந் நிகழ்வுக்கு முதுகெழும்பாகச் செயல்பட்ட அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம். இந்த அழைப்பை வடிவமைத்த அருமை கணினி  வல்லுனர் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.  

          மலேசிய  மண் தமிழைத்  தமிழகாப் படிக்கும்  பயிற்றுவிக்க்கும் மண். இந்த மண்ணில்தான் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6 ஆம் மாநாடான தமிழர் ஒற்றுமை மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினீர்கள். இன்றும் தமிழ் தமிழர் இன்னல்களுக்கு குரல் கொடுக்கும் வல்லமைமிக்க தமிழர்கள் இங்கே வாழ்கிறார்கள்.  அப்பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
யாதும் ஊரே நூல் உலகெங்கும் வாழும்  தமிழர்ளைப் பற்றிய பதிவுப்  பயணநூல். அமெரிக்கா கனாட ஐரோப்பிய நாடுகளில் நான் கண்ட காட்சிகளைப் பதிவு செய்துள்ளேன் உலகம்   முழுமையும் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பதிவு செய்துள்ளேன். ஒரு நிகழ்ச்சியை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

          கனடாவில் டொரண்டோ நகரில் சீவரட்ணம்  அம்மையா வாழ்ந்து வருகிறார்.  யான் அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அம்மையார் எம் தமிழ்ப்பணியிலும் எழுதி வருகிறார். அம்மையார் அவர்கள் அங்குள்ள தொலைக்காட்சிகளில் அடிக்கடி பேட்டி கொடுப்பார். அம்மையார் இல்லத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். கனடாவில் வாழும் ஈழத் தமிழர்கள் மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மண்ணின் பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஈழத்தில் தம் வீடு பெரிய வீடு என்றும் மிகப் பெரும் தோட்டம் உள்ளதையும் குறிப்பிட்டு இன்று தரை மட்டமாகியுள்ளது கன்கலங்கிக்  கூறினார். கனடா வீட்டில் உள்ள தோட்டத்தில் இது ஈழத்திலிருந்து கொண்டுவந்த கத்திரிச் செடி அனைத்துச் செடிகளீலும் என் மண்ணைக் காண்கிறேன் என்று கூறியது இன்றும் என் கண்களில் நீர் பெருக  வைக்கும்.

           ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு எந்த முறையிலும் தீர்வைக் காணாத்து தமிழினத்திற்குச் செய்த கொடுமை. ஈழத்திற்குச் சென்ற பெஇண்டன் பிரதமர் டேவிகாம்ரான் யாழ்ப்பாணம் சென்று தமிழர்க்ளின் இன்னல்களை உலகறியச் செய்தர்ர். ஐநா அதிகாரி வீரப் பெண்மணி நவனிதம்பிள்ளை ஈழத்துக் கொடுமைகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். ஐநா மன்ற விசாரனையில் போர்க்குற்றவாளி இராசபக்சே தண்டிக்கப்பட்டு ஈழம் கிடைத்தால்தான் சீவரத்தினம்  போன்ற ஈழ் மக்களின் நெஞ்சக் குமுறல் நீங்கும். அதற்கான பணிகளைச் செய்வதே ந்ம்முடைய முதற்பணி..

         மலேசிய மண்ணில் கவிஞர்கள் எழுத்தாளர்கள்  தமீழுக்கு மிகப்பெரிய ஆக்கங்களைத் தந்துவருகின்றனர். டான்சிறீ சோமசுந்தரம் அறவாரியம் உலகின் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து மிகப் பெரிய பரிசுத் தோகை அமெரிக்க டாலர் 10000 வழங்குகிறது. ஆண்டுதோறும் எண்ணற்ற மாநாடுகள் நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்க்கும் மலேசியத் தமிழர்களை வணங்கி விடை பெறுகிறேன்..

(28-12-2013 அன்று மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

No comments:

Post a Comment