Tuesday, May 26, 2015

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோலாலம்பூர் கிளையின் சார்பில் மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்குப் பாராட்டு விழா


(பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோலாலம்பூர் கிளையின் சார்பில் மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்புரை)

பேருள்ளப் பெருந்தகை சமுதாயக் காவலர் இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் பண்டிட் ஐயா மதிராசன் அவர்களே நான் இங்கு வந்ததிலிருந்து என்னோடு பயணிக்கும் அருமை நண்பர் கவிஞர் சுதந்திரன் அவர்களே கற்றபின் நிற்க் நுலை ஆய்வுரை வழங்கிய அருமை நண்பர் அவர்களே மகளீர் மாமணியாக இங்கே வந்து அமர்ந்திருக்கும் அன்னையர் அவர்களே மற்றும் வருகை தந்திருக்குகு பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
பெருமைமிகு நம் தலைவர் மதிராசன் நம் நீண்ட கால நண்பர். அவர் இங்கு ஆற்றிவரும் அளப்பரிய தொண்டை நான் அறிவேன். தாம் பொறுப்பேற்று நடத்திய மருத்துவர் சங்க அமைப்புக்கு கோலால்ம்பூரிலே ஒர் கட்டடம் கட்டி தமிழர் பெருமையை நிலை நாட்டியுள்ளார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னலம் இல்லாமல் இருந்தால்தான் இத்தகைய சாதனைகள் செய்யமுடியும். தன்னலமில்லாத் தகைமையை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
கவிஞர் சுதந்திரன் அவர்கள் மிகச் சிறந்த கவிஞராக மிளிர்கிறார். தமிழ் தந்தையைப் பற்றி தம் மகள் எழுதிய கவிதையை காண்பித்தார். உண்மையிலேயே மலேசியாவில் நம் பிள்ளைகள் தமிழ் உணர்வோடு வளர்வதை இந்நூல் படிப்போர் உணரலாம். சுதந்திரன் அவர்களும் பல் கவிதைப் படைப்புகளை எழுதியுள்ளார் அவற்றை ஐயா பெருங்கவிக்கோ கண்டு பாராட்டியுள்ளார். கூடியவிரைவில் அவரது கவிதைநூல் வெளியிடுவார் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.
பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம் உலகளாவிய அமைப்பு. இதற்கு வித்திட்டது மலேசியமண். இங்கு பினாங்கு நகரிலேயே வாழந்த சுவாமி இராமதாசர் தம் மணிவிழாவிற்கு தம் மாணவரான நம் பெருங்கவிக்கோவை 1977ஆம் ஆண்டு அழைத்தார். அழைத்தபின் தமிழகத்திற்கு வரும் பெருமக்களை வரவேற்க அமைக்கப்பட்ட அமைப்புதான் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். வாரம் ஒரு பெருமக்கள் என உலகம் முழுமையும் நம் தமிழ் நெஞச்ங்கள் தமிழகம் வருகின்றனர். அவர்களை வரவேற்று தமிழ் உலகிற்கு அறிமுகப் படுத்துவதே நம் கடமையாகப் கொண்டுள்ளோம். அண்மையில் அய்யா மதிராசன் தமிழகம் வந்திருந்தபோது திருச்சியில் அருமையானதொரு விழாநடத்தி அதை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளோம். இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருமக்களுக்கு வரவேற்பு வழங்கியுள்ளோம் என்பதைப் பதிவு செய்வதில் பெருமையும் உவகையும் கொள்கிறேன்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ஆறு மாநாடுகளை உலகம் முழுமையும் நடத்தியுள்ளது. முதல் மாநாடு திருச்சியிலும் இரண்டாம் மாநாடு சென்னையிலும் மூன்றாம் மாநாடு செர்மன் தலைநகர் பெர்லினிலும் நான்காம் மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் ஐந்தாம் மாநாடு மதுரையிலும் ஆறாம் மாநாடு இங்கும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இங்கு நடைபெற்ற மாநாட்டில் மாண்பமை அமைச்சர் டாண்சிறீ கோசூகூன் அவர்களும், நம் சாதனைத்தலைவர் உத்தாமா டத்தோ சாமிவேலு மற்ற நம் தமிழ் அமைச்சர்கள் உலகளாவிய அறிஞர்கள் மலேயா பல்கலைக்கழகத்தில் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் மாநாடு அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். 2015ஆம் ஆண்டு சூலை திங்கள் 25, 26 நாட்களில் நடைபெறவுள்ளது. தமிழன்பர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.
தமிழ்ப்பணி திங்களிதழ் 44 ஆண்டுகளாக வெளிவருகிறது. உலகம் முழுமையும் வாழும் தமிழர்களின் கருத்துப் பெட்டகமாக உள்ளது, மலேசியா முழுமையும் இவ்விதழ் உறுப்பிணர்களைக் கொண்டது, அமைப்போ இதழோ நடத்துவது என்பது எளிதான செயல் அல்ல.
நண்பர்களே இவ்வளவு பெரும் சாதனைகளை செய்த இயக்கம் தமிழகத்திலோ இங்கோ நிலையாக நாம் சாதிக்க வேண்டும். தமிழகத்திலே உலகத்தமிழ்க்குடில் கட்டுவதற்கு திட்டமிட்டு அறக்கட்ட:ளை தொடங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே நம் குறிக்கோள். 1993ஆம் ஆண்டு நம் நிறுவனர் பெருங்கவிக்கோ தலைமையில் குமரியிலிருந்து சென்னைவரை நடைப்பயணமாக 100 தமிழ் அறிஞர்களுடன் பட்டிதொட்டி எல்லாம் முழக்கமிட்டு வந்தோம். இன்றளவும் தமிழ் எல்லாநிலைகளிலும் வராத நிலை. இங்கு கூட நம் தமிழ்ப் பிள்:ளைகள் 20 விழுக்காடு சீனததைப் படிப்பதாக வறுத்தப்பட்டனர், தமிழ்கத்தில் நம் மொழியை நாம் எந்நிலையிலும் இழக்கக் கூடாது. அதைத் தொடர்ந்து ஊர்திப் பயணமாகா ஆண்டுதோரும் அருஞ்சாதனை நிகழ்த்தும் மன்றம் நம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். இம் மன்றத்தில் இணைத்துக் கொண்ட பெருமக்கள் அனைவருக்கும் எனது வரவேற்பையும் மகிழ்சியையும் தெருவித்துக் கொள்கிறேன்.
மிகக குறுகிய காலத்தில் விழாவை அமைத்து சிறப்பித்த தலைவர் மதிராசன் அவர்களையும் கவிஞர் சுதந்திரன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாகி விடை பெறுகிறேன். 

No comments:

Post a Comment