(6-7-2014 அன்று கனடாவில் டொரண்டோ நகரில் யாதும் ஊரே நூல்
வெளியீட்டுவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
பெருமதிப்பிற்குரிய தலைவர் கவிவாணர் கந்தவணம் அவர்களே, நிகழ்ச்சிக்கு அணி சேர்க்கும் வண்ணம் நூலைப் படித்து அரியதொரு உரை ஆற்றிய கணபதி இரவிச்சந்திரன் அவர்களே நூலைப் மூன்று நூல்களாகப் பகுத்து உரையாற்றிய கவிஞர் புகாரி அவர்களே என்னை கனடா வரவேற்று அன்பு பாராட்டி உங்களையெல்லாம் கூட்டி இந்த யாதும் ஊரே நுலை வெளியீட்டு நிகழ்வை நடத்தும், அருமை அண்ணன் நட்பின் நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்தம் துணைவியார் மகளிர்மாமணி பத்மலோசினி அவர்களே வாழ்த்துரை வழங்கிய உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க தமிழ்க் கல்விப் பொறுப்பாளர் துரைராசா அவர்கல்ளே, மூத்த பெருமகன் துரைசிங்கம் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
கனடா வருவதென்றால் எனக்குப் பேரின்பம். இங்கு உணர்ச்சியுள்ள பெருமக்கள் தமிழ் உணர்வோடு வாழ்கின்றீர்கள். சென்ற முறை நான் வருகை தந்தபோது தாங்கள் காட்டிய அன்பையும் தங்களின் தமிழ் ஈழ உணர்ச்சியையும் யாதும் ஊரே இந் நூலில் பதிவு செய்துள்ளேன். இந்நூலை தங்கள் முன்னிலையில் வேளியிடுவது என்பது யான் பெற்ற பேறு. யான் சென்ற பயணத்தில் கண்ட அன்பு உள்ளங்களை அன்பு குன்றாமல் மீண்டும் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இங்கு உள்ள கோயில்கள் ஈழத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் உள்ளட்டக்கி உள்ளன. நம்மவர்கள் எங்கு பார்த்தாலும் பக்திப் பரவசமாகவே உள்ளார்கள். ஆனால் ஈழத்து மக்களும் இந்துதான் என்ற உணர்ச்சி நம் இந்தியு மத்திய அரசுக்கு இல்லையே. நம் மக்களை கொன்று குவித்தபோது வாளாயிருந்த்தனர் அதனால்தான் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப் பட்டனர்.இந்த்துவா பேசும் பாசக வினருக்கு ஈழத் தமிழர்கள் என்ற உணர்ச்சியும் இல்லையே. இனிமேலாவது ஈழப் பிரச்சினையில் நியாயமான தீர்வை எட்டவேண்டும்.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வறுத்தக் கூலி தரும்
என்று நம் ஐயன் கூறியவண்ணம் தம் மெய்வருத்தி ஈழத்திற்காப் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்வருத்தம் உலகம் முழுமையும் உள்ள தமிழர்களை அடையாளம் காட்டி இன்றும் நீரு பூத்த நெருப்பாக ஈழம் உள்ளது அவருடைய ஈகம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். உலகத் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் குடியிருப்பார் தமிழர் குல மாணிக்கம் தலைவர் பிரபாகரன்.
திரைப்படத் துறையினருக்கு நாம் காட்டும் ஆர்வத்தை முற்றிலுமாக போக்கவேண்டும் நம் இனத்திற்கு மொழிக்கும் ஈகம் செய்யும் பெருமக்களைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும். நம் மக்கள் ஈழத்திற்காக் செய்த ஈகங்கள் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும். திரைப்படக் கவர்ச்சி நம் உணர்ச்சிகளை மழுங்கச் செய்துவிடாமல் இருக்க வேண்டும்.
கணபதி இரவிச்சந்திரன் அவர்கள் பேசும்போது உண்மையிலேயே மெய்மறந்தேன். நேற்று என்னை கீதவாகிணி வானொலியில் பேட்டி கண்டார். பேட்டியின் போது பெருமக்கள் ஆவலோடு உரையாடினர். அப்போதுதான் நான் யாதும் ஊரே நூலைத் கணபதி இரவிச்சந்திரன் அவர்களிடம் தந்தேன். ஓர் இரவில் படித்து என் உள்ளம் நெகிழ்ந்த செய்திகளையெல்லாம் பட்டியலிட்டுள்ளார். ஈழத்து மக்களின் பதிவே இந்நூல் என பதிவு செய்தது எனக்குக் கிடைத்த சான்றிதழாகவே கருதுகிறேன்.
இலண்டனில் ஊர்தி ஓட்டுநர் டேவிட்டுடன் நடந்த நிகழ்வையும் கனாடாவில் டோரண்டோ நகரில் வாழும் ஈழத்து மூதாட்டி சீவரட்டிணம் அம்மையார் அவர்களைக் பற்றிக் கூறியுள்ள பதிவையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார். பெருமகானாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இன்னலின் சிகரத்திற்கு தாங்கள் சென்றாலும் தமிழையும் தமிழரையும் உலகில் என்றும் வலம் வரச் செய்த பெருமை ஈழத் தமிழ் தியாக உருக்களே தங்கட்கு என்றும் உண்டு. அந்தப் பதிவுகள்தான் இந்த யாதும் ஊரே எனப் பெருமிதம் கொள்கிறேன்.
அருமை அண்ணன் லோகன் அவர்கள் செல்லா சோதி அவர்களின் அச்சகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தமிழ் கணினி தட்டச்சும் அச்சகமும் மிகச் சிறப்பாக நடத்துகிறார். அவரது துணைவியார் உற்ற துணையாக உள்ளார். தற்போது சோதி செல்லா அவர்கள் மார்க்கம் தொகுதியில் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார். கோயம்பத்தூரில் வருகை தந்து இங்கு குடியுரிமை பெற்றுள்ள மாணிக்கம் அவர்களும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் வட இந்தியப் பெருமக்களும் வருகை தந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொள்கிறேன். கனடாவில் சனநாயகம் கோலோச்சி உள்ள தங்களைக் காணும்போது அரிய முடிகிறது.
ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பை மனித உரிமை மீரலை கண்டித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்த பெருமை கனடா பிரதமருக்கு உண்டு. இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டை புறக்கணித்த பெருமையும் கனடாவிற்கு உண்டு. இந்த நாட்டிற்கும் ஆட்சியாளர்களுக்கும் என் நன்றியைத் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கவிவாணர் கந்தவணம் அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ பற்றியும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி நாங்கள் ஆற்றும் பணியையும் மனம் நெகிழக் கூறினார். பெருங்கவிக்கோ மகன் திருவள்ளுவர் ஒழுக்கத்தின் சிகரம் என்று கூறினார். மூத்த கவிஞர் பெருமகன் வாயால் யான் கிடைத்த பாராட்டை பெரும் விருதாகவே எண்ணுகிறேன்.
கவிவாணர் கந்தவணம் ஐயா அவர்கள் வருகை தந்திருந்த போது தந்தையார் அவர்கள் ஊரில் இல்லை என்றும் நான் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாப் படத்தையும் வெளியான நெடு நாட்களுக்கு முன் வெளியான தமிழ்ப்பணி இதழையும் காண்பித்தார்.முன்னாள் மேயர் சா. கணேசன் அவர்கள் கவிவாணருக்கு பொன்னடை போர்துகிறார். கவிவாணர் போன்ற பெருமக்களெல்லாம் வருவது தமிழர்கள் பெற்ற கொடை அன்றோ. பவள விழாக் கண்ட பெருமகன் கவிவாணர் கந்தவனத்தை வணங்கி மகிழ்கிறேன்
அரும்பாடுபட்டு இந்த விழாவை நடத்திய அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்கட்கும் துணை நின்ற அண்ணன் அவர்களின் நிழலாகத் தொடரும் சகோதரர் விமல்ரத்தினம் அவர்ககும் மற்றும் பெருமக்கட்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
Casino site review - LuckyClub
ReplyDeleteLuckyClub review. Read our casino review of all the new games and sportsbook, as well as everything you need to know about the site's luckyclub.live functions and Rating: 4 · Review by LuckyClub