[27 12-2014 அன்று மலேசியாவில் கோலலம்பூர் நகரில் தான்சிறீ சோமா மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் குழுவினர் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை]
பெருமதிப்பிற்குரிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பொன்சண்முகம் அவர்களே மக்கள் ஓசை ஆசிரியர் இராசன் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் தமிழருக்காக தொண்டாற்றும் ”தமிழ் எங்கள் உயிர் குழுவின்” தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உல்கத் தமிழர் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திய அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம் அவர்கள் தமிழ்கத்திலிருந்து வருகை தந்திருக்கும் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள் அண்ணன் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
தமிழில் பெயரை முறைப்படி எழுதுவது எப்படி என சரியான தலைப்பை கலந்துரையாடலின் தலைப்பாக தந்துள்ளீர்கள். தமிழ் வாழ நம் பெயரில் வாழ தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பெருமுயற்சியாகும். இந்தக் கலந்துரையாடலுக்கும் நடுநாயகமாக மலேசியத் திருநாட்டி முன்னணி நாளிதழ் மக்கள் ஓசையின் ஆசிரியர் அமந்திருந்து அனைவருடைய கருத்துகளையும் உள் வாங்கி தன் கருத்தை வழங்கினார்கள். நீண்ட அனுபவமும் தமிழ் அறிவும் உள்ள ஐயா அவர்கள் தன் நேரத்தை தமிழ் மேம்பாட்டுக்கு ப்யண்படுத்துவதை அனைவரும் பின் பற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் தமிழ்வழிக் கல்விக்காகவும் தமிழ் மொழிக்காகவும் அரும்பாடுபட்ட ஐயா அமரர் மணிவெள்ளையன் அவர்களையும் அவரின் தொண்டைத் தொடரும் தமிழ் நெஞ்சங்களையும் போற்றுகிறேன்.
முதலில் தமிழைச் சிதைப்பது மூடநம்பிக்கையே. தமிழர்கள் தாம் பெற்ற செல்வத்திற்கு பெயர் வைப்பதற்கு சோதிடனிடம் கேட்கிறார்க:. அவர்கள் வடமொழிப் முதல் எழுத்தைக் கொடுத்து தமிழக் குழந்தைக்கு தமிழ் அல்லாத பெயரை முன்மொழிகிறார்கள். அவர்களைத் புறம் தள்ள நம்மவர்கள் தெளிவு பெறவேண்டும்.
தமிழகத்தில் தமிழ்ச்சுரங்கம் என்ற அமைப்பின் வழி பேராசிரியர் ஆறு. அழகப்பனார் அவர்கள் தமிழ்ர்கள் தலைபெழுத்துகளை தமிழில்தான் எழுத் வேண்டும் என வலிய்றுத்தி செயல் பட்டு வருகிறார்கள். தமிழ்ப்பணியிலும் ந்நான் வெளியிட்டுள்ளேன்,
பெருமக்களே நாம் முதலில் நம் பிள்ளைகளும் வழிமுறையினருக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும், என் தந்தையார் பெருங்கவிக்கோ எனக்கு இட்ட பெயர் திருவள்ளுவர் என் தம்பிகள் கவியரசன் ஆண்டவர் தமிழ்மணிகண்டன். தங்கைக்கு பூங்கொடி எனவும் என் மக்கட்கு அறிவன் அன்பன் என என் குடும்பம் முழுமையும் தமிழ்ப்பெயர்களே.
அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ 1993ஆம் ஆண்டு குமரியிலிருந்து சென்னை நடைப்பயணம் வந்தபோது மதுரையில் தம்பி கவியரசன் – முத்துமாரிக்கு பெண்குழந்தை பிற்ந்தது. விழா மேடையில் மகளுக்கு தமிழ் நடைப் பாவை என பெயர் வைத்தோம். அம்மகள் இன்று அமெரிக்காவில் தமிழ் நடைப்பாவை வலம் வருகிறார்.
நம் பெயரைக் கூறும் நம் மொழியும் இனமும் ஒளிரவேண்டும்.
இறுதியாக ஐயா பொன் சண்முகம் ஐயா அவர்கள் தலைபெழுத்தும் பெயரும் முழுமையாக இடம் பெறவேண்டும் என தீர்மாணம்
தந்தைபெயர்+தனதுபெயர் தனதுபெயர்+ துணைவர்பெயர் என இடம் பெறவேண்டும்
என இயற்றியுள்ளார்கள் இதை கோலலம்பூர் பிரகடணம் என மொழிந்துள்ளார்கள். இத் தீர்மாணத்தை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பாக வழிமொழிந்து உலகம் வாழ் தமிழர்கள் பின் பற்றவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment