Tuesday, May 26, 2015

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு



(சோகூர் மாநிலத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளியே என் தேர்வு நிகழ்ச்சியில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

சிங்கையிலிருந்து  மலேசியா வரும்போது நான் சோகூர் மாநிலத்தில் அருமை நண்பர்கள் கவிஞர் வடிவேலு, எழுத்தாளர் வேணுகோபால் அவர்களை சந்தித்து ஒரு நிகழ்வில் பங்கேற்றுச் செல்வது வழக்கம். இம் முறை முனைவர் சேதுபதி அவர்கள் என்னை பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக இந் நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களும் கல்வித் துறை அதிகாரிகளும் ம.இ.க தொகுதித் தலைவர்களும் வருகை  தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் துறையின் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்ட  வரைவு முழக்கமாம “ தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” என அச்சிட்ட படிகளை என்னிடம் வழங்கினர்.

அதில் அண்மைக் கால் தமிழ்ப் பள்ளிகளின் வெற்றிகளையும் நடவடிக்கைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.

100% பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள்

45% இளங்கலை/முதுகலை கல்வி தகுதி பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்.

2013ல் யு.ப்.எசு.ஆர். மாணவர்களின் சிற்புத் தேர்ச்சி அடைவுநிலை 62% உயர்வு.

2014ஆம் ஆண்டு பிறபள்ளிகளைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு பதிவு உயர்வு  கண்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் பயின்ற மாண்வர்கள் உலக அளவில் பெற்ற் வெற்றிகளையும் பட்டியலிட்டுள்ளீர்கள்

உண்மையிலேயே தமிழ்வழிப் பள்ளி சிறப்புற அமைய தாங்கள் எடுத்து வரும் முயற்சியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

ஆனால் தற்போது பெற்றோர்களிடம் அந்த ஆவல் இல்லை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களி எண்ணிக்கை குறைகிறது என்ற செய்தியையும் குறிப்ப்பிட்டீர்கள். 20% சீன வழிப் பள்ளிகளில்  நம் தமிழ்ப் பிள்ளைகள் சேர்கிறார்கள் என்ற அதிர்ச்சியான்  செய்தியையும் வெளியிட்டீர்கள்.
தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து மக்கள் ஆங்கில மோகத்தில் திளைத்து தமிழையே புதை குழிக்குத் தள்ளும் அவலம் தொடர்கிறது.

1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் 50 தமிழ் அறிஞர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிட்டு தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை பட்டி தொட்டி எல்லாம் பரப்பினோம். அதைத் தொடந்து இவாண்டு வரை 22 ஆண்டுகளாக் ஊர்திப் பயணமாக வலம் வந்து தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தை உயிர்க் கொள்கையாகக் கொண்டு பரப்பி வருகிறோம்.

தமிழகத்தில் ஆங்கிலம் பிடித்த இடத்தை மலேசியாவில் சீனம் தொடர  அனுமதிக்கக் கூடாது. அதற்காக அரசாங்கப் பணீயாற்றும் ஆசிரியாராகப் பணீயாற்றும் நீங்கள் அரசோடு இணைந்து எடுத்துவரும் முயற்சி கட்டாயம் பலனளிக்கும். தமிழ்ப் பெற்றோர்களை அழைத்து தாங்கள் கொடுத்துவரும் விழிப்புணர்ச்சி நம் மக்கள் நம் மொழியைப் பேணுவார்கள் என்ற நம்பிக்கையை வழங்குகிறது.

நான் மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன் கோலாலம்பூர், ஈப்போ, தாப்பா, பினாங்கு பட்டர்வொர்த் சிம்பாங் அம்பாட், சித்தியவான், கெடா, சிரம்பான், தெலுக்கிந்தான், போன்ற பகுதிகளிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள் பிள்ளைகளின் வளர்சிகளையும் ஆசிரியர்களின் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளேன்.

ஆயிரக்கணக்கில் இருந்து தமிழ்ப் பள்ளிகள் ஐநூறாக இக் காலக் கட்டங்களில் குறைந்துள்ளது வேதனைப்படத்தக்க ஒன்றாகும். அது மேலும் குறையாவண்ணம் தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு நாங்களும் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும் என்றும் துணைநிற்கும் எனக்கூறி என்னை இங்கு அழைத்துவந்த அருமைச்சகோதரர் முனைவர் சேதுபதி அவர்கட்கு நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment