Thursday, March 24, 2022


கனடா உதயனின் பகிர்வோம் பாராட்டுவோம் வெள்ளிவிழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                       

  இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்  


                                          

 உதயன் ஆசிரியர் நட்பின் நாயகர் லோகேந்திரலிங்கம் அவர்கள் கோரனா தீநுண்மி காலத்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கு வருகை தந்துள்ளார்கள். நானும் தம்பி உதயன் இந்தியப் பிரதிதி பிரகாசு அவர்களும் வானூர்தி நிலையம் சென்று அவரை வரவேற்று மகிழ்ந்தோம். தமிழகத்திலிருந்து செல்லும் அறிஞர் பெருமக்களை வரவேற்று தம் இதழில் வெளியிட்டு சிறப்பிக்கும் பேருள்ளத்திற்கு சொந்தக்காரர். உலகில் எத்தனையோ தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன. கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் வார இதழிற்கு என்றும் சிறப்புண்டு. உலகளாவிய தமிழர்களுக்கு விருது வழங்கும் பெருமை உடைய இதழ். கனடிய அரசிடம் சான்றிதழ்கள் பெற்று அந்த நிகழ்வில் வழங்குவது உதயனின் தனிச்சிறப்பு. நானே கனடாவில் அவர் சான்றிதழ் பெற படும் பாட்டை நேரில் கண்டிருக்கிறேன்.

  உதயன் இதழின் வெள்ளிவிழா ஆண்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டு கனடாவில் மிகச் சிறப்பாக நடத்தினார். சென்னையிலும் பங்களித்த பெருமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறபித்து நம்மோடு மகிழவே இந்த நிகழ்வை பகிர்வோர் பாராட்டுவோம் என இந்த ஐந்து நட்சத்திர விடுதியில்நடத்துகிறார். மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பிரகாசு அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். 

ஒரு சிறந்த பெண்மணியாகவும் குடும்பத்தலைவியாகவும், ஆண்மீக ஒருங்கிணைப்பாளராகவும், சமுகச் சிந்தனையுடையவராகவும் விளங்கும் லோகன் அவர்களின் துணைவியார் பத்மா லோசினி அவர்கள் வருகை தந்துள்ளார்கள். மகளிர் தினத்தன்று அருமை அம்மையார் அவர்களுக்கு நந்தவனம் இதழின் சார்பாக விருது வழங்கினார்கள். மிகத் தகுதியான் பெருமாட்டிக்கு விருது வழங்கியுள்ளீரகள். தம் குடும்பம் தன் கணவர் குடும்பம் தமிழ் உறவுக் குடும்பம் என அனைவருக்கும் அன்னையாக விளங்கும் பத்ம லோசினி அம்மையாருக்கு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உதயன் லோகன் அவர்கள் நன்றியின் இலக்கணம் இன்று சென்னையில் தனக்கு தன் இதழிற்கு உதவியாக இருக்கும் பெருமக்களை நன்றியுணர்ச்சியோடு பாராட்டியுள்ளார்கள். பாராட்டும் போது அனைவருக்கும் பரிசுப் பொதி ஒன்றை வழங்கியுள்ளார்கள். அந்தப் பரிசைப் பொதி தானே தயார் செய்து இங்கு வழங்கியுள்ளார்கள். அவர் வழங்கியுள்ள கோப்பையில் உதயன் நண்பன் ரூபம் என்ற மூன்று பெயர்களும் பொறிக்கப்பட்டு அழகு ஒளிர மிளிர்கிறது.. இந்த நிகழ்விற்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் உலகமெலாம் தமிழர்கள் தம் மதுரா பயண ஏற்பாட்டகம் சார்பில் ஒருங்கிணைக்கும் வி.கே.டி பாலன் அவர்களும் வருகை தந்துள்ளாது இந் நிகழ்வுக்குப் பெருஞ்சிறப்பு.. நட்பின் நாயகரின் அரும்பணிதொடரவும் உதயன் இதழ் நூற்றாண்டு காணவும் வாழ்த்தி இந்தக்  கவிதையை வழங்கி மகிழ்கிறேன். 

வெள்ளிவிழாக் காணும் எங்கள் 

வித்தான உதயன் மாட்சி

கிள்ளைமுதல் முதியோர் காணும் 

கிளர்ந்தெழும் எழுத்தின் ஆட்சி  

வல்லமையார் உழைப்புச் செம்மல் 

வழங்கிடும் தமிழின் காட்சி  

எல்லையிலா சோதனை மீண்டே 

ஏற்றநம் உதயன் வாழ்க !


நட்பிற்கே நாயகன் இவரே 

நலமோங்கும் காவலர் லோகன் 

திட்டமிடும் தெளிந்த நோக்கால் 

திகழ்புகழ் உதயன் வென்றார் 

மட்டிலா எழுச்சி பொங்க 

மனம்மகிழ் கனடா காண்பார் 

விட்டிலாய் ஊர்தி பறந்தே 

வினைத்திட்ப லோகன் வாழ்க!! 


கற்றமேல் சான்றோர் சூழ்ந்தே 

கவிவானம் போன்றே செல்வார்

நற்றவம்சேர் தொண்டர் தம்மை 

நனிபுகழும் உதயன் காட்சி 

பெற்றிநல் கூட்டம் சேவை 

பெருமைசேர் நாயகன் லோகன் 

சுற்றமென உலகம் காணும் 

சூழ்புகழ் உதயன் வாழ்க!!!  


உலகெலாம் தமிழர் கண்டு 

உன்னதமாம் உதயன் விழாவில் 

வளம்காணும் விருதைத் தந்தே 

வண்டமிழைக் காக்கும் லோகன்  

களம்பல கண்டோர் தம்மை 

கவினார்ந்த உதயன் காட்டும் 

நலமெலாம் உருவாய் பத்மா 

நயத்தகு இணையர் வாழ்க !!!!

No comments:

Post a Comment