நேர்படப் பேசு அமுதசுரபி அறக்கட்டளையின் விருது வழங்கு விழா
தமிழ்மாணி வா.மு.சே.திருவள்ளுவர்
நேர்படப்பேசு இதழின் ஆசிரியர் அமுதசுரபி அறக்கட்டளையின் தலைவர் அரிமா ஞானி அவர்களின் அழைப்பின் பேரில் வந்துள்ளேன்.சாதனைப் பெண்கள் பலருக்கும் விருது வழங்கியதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விருது பெற்ற கலைஞர்கள் கவிஞர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் சமூக சேவகர்கள் அனைவருக்கும் வாழ்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற ஆண்டு அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் ஊர்திப் பயணமாக வந்தபோது சென்னையில் மிகச் சிறந்த வரவேற்பு வழங்கினார் ஞானி அம்மையார். சென்னையில் பல தமிழ் அமைப்புகள் இருப்பினும் ஞானி அவர்களின் அமுதசுரபி அறக்கட்டளைதான் நடத்தியது அந்த நன்றியுணர்ச்சியின் காரண்மாகவே இங்கு நின்றுள்ளேன். விருது பெற்ற பெருமக்கள் பலர் பல மாவட்டங்களிலிருந்து பல ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார்கள். அவருக்கும் துணைநின்ற பெருமக்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன். விருது பெற்ற பெருமக்கள் சிலர் காலில் விழுந்தனர். அருள்கூர்ந்து காலில் விழுவது தவறு இரு கரம் கூப்பி வணங்குங்கள். நான் ஒருமுறை இனமானக் காவலர் பேராசியர் பிறந்த நாளில் அவர் காலைத் தொட்டு வணங்கினேன். பேராசியர் என்னைத் தட்டி கைகொடு காலில் விழாதே என்று கூறினார் அன்றிலிருந்து நான் காலில் விழுவதை விட்டுவிட்டேன். சுய மாரியாதை உணர்வு தேவை. ஒரு அம்மையாரை கணவர் காலில் கூட விழக் கூடாது தோழமையோடு இருங்கள் என்றேன். இது என் கொள்கை என்று கூறினார். அவரது மொழியையும் ஏற்கிறேன். இருப்பினும் நம்மவர்கள் காலில் விழுந்து அடிமைகளாக இருந்ததை நாம்மறக்கக் கூடாது. அருமை நண்பர் அரிமா தகுதி திவாகரன் அவர்கள் என்னை இந்த மேடைக்கு மிகச்சிறப்பாக அறிமுகப் படுத்தினாரகள் பெருமகனாருக்கு நென்சார்ந்த நன்றி. தமிழ் அறிஞர்களுக்கு தொண்டு செய்வதில் மிகச்சிறந்த் பெருமகன். ஆளுயர மாலை அணிவித்து அவரிடம் சிறப்புப் பெறாத பெருமக்கள் இல்லை எனும் அளவிற்கு பெருந்தொண்டுச் சிகரம். அரிமா மாவ்ட்ட்த்தில் ஆசிரியர் தின விழா மாவட்ட்த் தலைவராக இருந்தபோது 1000 ஆசிரியப் பெருமக்களை சிறப்பித்த பெருமகன்.
ஞானியன் கணவர் அரிமா அசய் மிகச்சிறந்த பண்பாளராக உள்ளார். ஞானியின் பணிகளுக்கு பின் புலமாக உள்ளார். ஒவ்வொரு ஆணிற்குப் பிண்ணும் பெண் உள்ளார் இங்கு மாற்றாக ஆண் உள்ளார். அசய் பெருமகனை நெஞ்சாரப் போற்றுமிறேன்.
நான் அரிமா சங்கத்தின் தலைவராக இருந்த போது ருபேலா என்ற பருவப் பெண்களுக்கு போடப் படும் ஊசி அரிமா இயக்கம் அறிமுகப் படுத்தியது. பல் பெண்களுக்கு அப்பொது விழிப்புணர்வூட்டி போடவைத்தோம். இரத்த வங்கி கண்வங்கி என மக்கள் தொண்டறப் பணியில் தலைசிறந்து நிற்பது அரிமா இயக்கம். எங்கல் சங்கத்தின் அறக்கட்டளை மருத்துவமனை வைசுனாவ கல்லூரியில் வாயிலில் உள்ளது அங்கு கண் பல் பொது மருத்துவம் பெண்கள் சிறப்பு மருத்துவம் எளிய மக்களுக்குப் பார்க்கிறோம் என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறேன்
மகளிர் பெருமக்கள் திரளாக கூடியுள்ளீர்கள். ஆற்றல் பெருமக்களாக இங்கே அனைவருக்கும் விருது வழங்கியுள்ளது அமுத சுரபி அறக்கட்டளை.
ஒரு குடும்பத்தின் ஆணி வேர் பெண் தான். ஒரு பெண் இல்லையென்றால் வாழ்க்கை முழுமை பெறாது. எந்தக் குடும்பமாக இருந்தாலும் பெண் சிறப்பாக இருந்தால்தான் அக் குடும்பம் சிறக்கும்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை
ஒரு ஆண் செம்மாந்து உள்ளான் என்றால் அதற்குத் பெண்தான் காரணம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.. அதற்கு அச்சானியாக விளங்கும் இங்கு வருகை தந்துள்ள பெருமாட்டிகளே உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். நம் ஊரில் உள்ள குடும்ப அமைப்புதான் இந்தியாவின் வெற்றிக்குக் காரணம். வெளிநாடுகளில் குடும்ப உறவு சிறப்பாக இல்லை .
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாண்பாடு அங்கில்லை. இன்று ஒருவர் மனைவி மற்றொரு நாள் மற்றவரின் மனைவியாக உள்ளார். அதை அந்நாடு ஏற்றுக் கொள்கிறது. ஆதலால் குடும்ப உறவுகள் மீக்கெழுவதில்லை.
தற்காத்த்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்
தன்னையும் காத்து தம் கணவரையும் காத்து தம் புகழையும் காத்து உறுதி கலையாமல் நிற்பவள் பெண் என்று வள்ளுவப் பேராசான் கூறுகிறார். வளுவப் பேராசான் வாக்கிற்கிணங்க வாழும் மகளிர் பெருமக்கள் அனைவரையும் போற்றுகிறேன்.
இசுலாமியப் பெருமக்கள் கிறித்துவப் பெருமக்களும் இவ்விழாவில் பங்கேற்பது கண்டு மகிழ்கிறேன். ஒரு மதச் சார்பற்ற விழாவாக நடத்தும் பாங்கைப் போற்றுகிறேன். பெண்களை போற்றும் குடும்பம் உச்சம் பெறும். பெண்களைப் போற்றும் அமைப்பு பொலிவுறும். பெண்களைப் போற்றும் நாடு முன்னணி நாடாக விளங்கும் என்பது கண்கூடு. விருதுகள் பெற்றுள்ள விருதாளர்களே மகளிர் பெருமக்களே உங்களை மீண்டும் வாழ்த்தி விடைபெறுகிறேன்
.( நேர்படப் பேசு அமுதசுரபி அறக்கட்டளையின் விருது வழங்கு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)
No comments:
Post a Comment