முப்பதாம் ஆண்டு நிறைவு ஊர்திப்பயணம் தொடக்கவிழா தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 30 ஆம் ஆண்டு நிறைவு ஊர்திப்பயணம் நிகழ்வு இன்று காந்தி நினைவாலய்ம் முன் ஐயன் திருவள்ளுவர் அருட்பார்வை முன் நடப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய எண்ணங்களெல்லாம் 1993ஆம் ஆண்டு முன்னோக்கிச் செல்கிறது. இந்த மண்னின் மைந்தர் தி.மு.க மாநிலங்கவை உறுப்பினர் ஆரல்வாய்மொழி கல்லூரியின் தாளாளர் சங்கரலிஙகனார் புலவர் பெருமாள் பிள்ளை ஆயோரின் பெரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கிறேன். நடைப்பயந்த்தை தம் தள்ளாத வயதிலும் குமரி வந்து தொடங்கி வைத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் பெரியார் பேருரையாளர் இறையன், திராவிடன் நல நிதியின் தலைவர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பெருமகன் நீதியரசர் வேணுகோபால் உணர்வோடு நடைபயணத்தில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள் புலவர் பெருமக்கள் இளைஞர்கள் அனைவரையும் இன்று எண்ணிப்பார்க்கிறேன். இன்று பலர் காலமாகிவிட்ட்னர் ஆனால் அவர்கள் எந்தக் கொள்கைக்காக எங்களோடு நடந்தார்களோ அந்தக் கொள்கை இந்த ஊர்திப் பயணத்தின் வழி உயிரோட்டமாக உள்ளது. அந்த நடைப்பயணத்தின் தொட்டர்ச்சிதான் இன்றைய 30ஆ,ம் ஆண்டு தமிழ் ஊர்திப் பயணம். ஒவ்வொரு ஆண்டும் தளர்ச்சியில்லாமல் குமரியில் எல்லாப் பணிகளையும் தம் மேல் கொண்டு செயலாற்றும் மூதிளைஞர் குமரிக் கிளைத் தலைவர் தியாகி முத்துக்கருப்பன் பணி மகத்தானது. ஐயா அவர்கள் கீழே விழுந்து புண் ஆறாத நிலையிலும் இப்பயணக் கூட்டத்தை நடத்தி தொடங்கி வைக்கும் அவர்கள் நெஞ்சுரத்தைப் போற்றுகிறேன். அவரோடு இணைந்து பணியாற்றும் இவ்வாண்டு எங்கள் சேது அறக்கட்டளை விருதாளர் தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் இளங்கோ என்ற வஞ்சிக்கோ அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன் . தலைநகரில் தமிழ்ச்சங்கத்திற்கன கட்டிடம் கண்டு அங்கு தமிழ்ச் சான்றோர்கள் படங்களையெல்லாம் திறந்து அழியாப் புகழை உருவாக்கியுள்ள சுந்தர்ராசன் அவர்கள் இங்கே வருகை தந்துள்ளார் மற்றும் வாழ்த்தி வரவேற்ற அனைத்துப் பெருமக்களையும் வணங்கி மகிழ்கிறேன். தமிழ் ஊர்திப்பயண 30ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு மாண்பமை முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் காணச் சென்றோம். கொரணா காலமாக உள்ளதால் கவனமாக சிறப்பாக செயல்படுங்கள் என வாழ்த்தி அனுப்பினார். தந்தையாரின் பிறந்த நாளன்று தந்தையை கைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெருவித்தார். இந்த வாழ்த்து ஐயா முத்துக் கருப்பன் வஞ்சிக்கோ சுந்தர்ராசன் அரிமா கீதாகுமாரி தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் தெருவிக்கப்பட்ட வாழ்த்து. ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்கட்கு தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பல தமிழ் சார்ந்த திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளார். தந்தைபெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை தம் ஆற்றலால் முதல்வர் அவர்கள் நீக்கி ஆலயங்களில் தமிழ் வழிபாட்டிற்கு வித்திட்டுள்ளார். அனைவரையும் அர்ச்சகராக்கி அமைதிப் புரட்சியே நடத்தியுள்ளார். தமிழக அரசின் பணியாளர் தேர்வணையத்தில் தமிழ் தேர்வு மொழியாக அறிவித்துள்ளது. தமிழ் தேர்வில் வெற்றி பெற்றால்தான் தமிழக அரசின் வேலை என் அறிவித்து சாதனைச் செம்மலாகத் திகழ்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த திருவள்ளுவர் ஆண்டை சென்ற ஆட்சி முடக்கி நாசகார வேலை செய்த்து. அதையெல்லாம் முறியடித்து மீண்டும் திருவள்ளுவராண்டு தமிழாண்டு நடைமுறைப்படுத்தியுள்ளார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நம் கொள்கை முழக்கத்திற்கு நம் முதல்வர் அவர்கள் தம் ஆட்ட்சியை ஒப்படைத்து அளப்பரிய சாதனைச் சிகரமாக விளங்குகிறார். இந்த ஆட்சியைத் தக்கவைத்தால்தான் தமிழ் வாழும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஊர்திப்பயணத்தின் வெள்ளிவிழா ஆண்டின் போது குமரியிலிருந்து தில்லி நோக்கி பெருங்கவிக்கோ தலைமையில் பயணித்தோம். இந்தியா முழுமையும் திருக்குறளை தேசிய மொழியாக்குக என்ற முழக்கத்தை முன்வைத்தோம். தலைமையமைச்சர் அலுவகத்தில் எங்கள் கோரிக்கைமடலை சேர்ப்பித்தோர்ம் பெற்றுக்கொண்டமைக்கு மடல் வந்தது. ஆனால் இது நாள்வரை திருக்குறள் தேசிய நூலாக்கப் படவில்லை. அதற்குத் தொடர்ந்து போராடுவோம். குமரி முதல் சென்னை தில்லி வரை நம் கொள்கைக்கு இணைந்து போராடும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைப்பயணத்தின் நினைவாக இங்கே நினைவு கற்பலகை திறந்திருந்தொம். நம் கழக வேட்பாளர் மகேசு அவர்கள் நாகர்கோய்யில் மாநாகராட்சியில் வெற்றிபெறுவார் என்பதுதிண்ணம். மீண்டும் இங்கே பலகை திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
(குமரியில் 30 ஆம் ஆண்டு ஊர்திப்பயணம் தொடக்க்க நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
No comments:
Post a Comment