Monday, February 21, 2022

 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 87ஆம் அகவைத் திருவிழா மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில்  மன்ற இயக்குநர்தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை




அருமைத் தந்தையார் 87ஆம் அகவைத் திருவிழாவும் மூன்று நூல்கள் வெளியீட்டுவிழாவும் இன்று நடைபெறுகிறது. எங்களோடு நீண்டு நாட்களாக இணைந்து பணியாற்றும் அருமை மூத்தகவிஞர் அண்மையில் கவியரசன் கண்ணதாசன் அவர்களோடு தந்தையார் பதிவை மாலைமலர் இதழில் எழுதியிருந்தார் அதை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளோம். தொடக்கவுரையாற்றவுள்ள விழாவிற்கு தலைமை தாங்கும் முனைவர் இரவிபாரதி எழுத்தாளர் சங்கத்தலைவர் முனைவர் பெரியண்ணன். முன்னிலை வகிக்கும்.வழக்கறிஞர் சிவகுமார் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் இதயகீதம் இராமானுசம் பெருமக்களை வருக வருகவென்று வரவேற்கிறேன்.

அன்னை சேதுநினைவலைகள் நூலை அன்னை மணிமேகலையின் தமிழ்வாணன் திருமகன்  லேனாதமிழ்வாணன்  வெளியிட முதல் நூலை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் பெற உள்ளார். தமிழ் முழக்கம் நூலை நீதியரசர்  இரா.காந்தி வெளியிட முதல் நூலை வழக்கறிஞர் சாசகான் பெற உள்ளார் தமிழ் நடைப்பாவை நூலை தி.மு.க. இலக்கிய அணி செயலர் முனைவர் சந்திரபாபு வெளியிட முதல் நூலை வழக்கறிஞர் மோ.அ.சுப்பிரமணியம் , பாவலர் கணபதி பெற உள்ளார் அனைவரயும் வருக வருக என்று வரவேற்கிறேன். 

ஆய்வுரை வழங்கவுள்ள பெருமக்கள் முனைவர் சோ.கருப்பசாமி கவிஞர் தமிழியலன் கவிஞர் மார்சல் முருகன் பொறிஞர் பீட்டர்ராசன் சித்தமருத்துவர் பாக்கம் தமிழன் வாழ்த்துரை வழங்கவுள்ள பெருமக்கள் அனைவரையும் இந்த தீ நூண்மி காலத்திலும் பேருள்ளத்தோடு வருகை தந்துள்ள பெருமக்கள்  எழுத்தாளார்  உதையை வீரையன் புலவர் நமச்சிவாயம் உள்ளிட்ட அனைவரையும் வருக வருக வருகவென்று வரவேற்கிறேன்

கவிச்சிங்கம் கண்மதியன் தலைமையில் ;பெருங்கவிக்கோ வாழ்த்துக் கவியரங்கில் பங்கேற்கும்   கவிஞர் பெருமக்கள் குடியாத்தம் குமணன் பாவலர் இராமச்சந்திரன் கவிஞர் நல்ல அறிவழகன் கவிஞர் வீரமுத்து கவிஞர் நந்தா கவிஞர் சுமி, கவிஞர் சுப சந்திரசேகர். கவிஞர் ஆசுகவி இனியா ஆகியோரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

லேனா அவர்களின் தந்தை தமிழ்வாணன் அவர்கள் பெருங்கவிக்கோவின் கவிதைகள் தூங்கும் தமிழனை தொட்டு எழுப்பவனல்ல தட்டி எழுப்பவன் என்று அந்தக் காலத்திலேயே பாராட்டியுள்ளார். இன்று அவரது மைந்தர் லேனா அவர்கள் நூலிற்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கி இன்று நூல் வெளியீட்டுக்கும் வந்து சிறப்பித்துள்ளார், நாங்கள் இந்த ஆண்டு சேது அறக்கட்டளை விருது வழங்கியபோது எங்கள் கிராமத்திற்கே வந்து சிறப்பித்த பெருமகன்..

அன்னை சேது நிலைவலைகள் நூலில் எம் அன்னை காலமானபோது தமிழ்ப்பணியில் வெளியான கவிதைகள் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இங்கே வருகைதந்துள்ள பெருமக்கள் பலர் படைப்புகளும் இந்நூலில் வெளியாகியுள்ளது. 

தமிழ் முழக்கம் நூல் ஐயாவின் தொடக்க காலத்தில் வெளியான நூல் அந்த மீள் பதிப்பை இன்று வெளியிடுகிறோம். பாவேந்தரின்  தமிழியக்கம் வழி தொடர் நூல் இது. அன்று பாடிய பாட்டு இன்றும் தேவையாகவே உள்ளது.  

கால்விழுந்து உமையெல்லாம கெஞ்சிக் கேட்டேன்                                                        கதையெழுதி வீண்பொழுது போக்க வேண்டா                                               மேல்விழுந்தே உமை வேண்டுகின்றேன் இந்த                                                   மேன்மைமிகு தமிழ்க்குலத்தின் சார்பில் நின்று                                                                வால்பிடிக்க வேண்டாம் நீர் ஆங்கிலத்தை                                                               வரலாற்றை மாற்றுங்கள் தமிழில் பாடப்                                                            பால்குடிக்க அருளுங்கள் பட்டம் பெற்ற                                                                 பண்பாளர் இனில் தனைச் செய்தல் வேண்டும்

அன்றே ஆங்கிலத்தின் மோகத்தை  மோகத்தை வேரறுக்கப் பாடியது. இன்றும் தேவையாக உள்ளது.

காந்திமகான் தன்னைஒரு கோட்சே என்ற                                    காதகனும் கைதொழுது தானே சுட்டேன்                                                                 தீந்தமிழின் உரிமையையும் இப்படித்தான்                                                                    செய்திடவும் நினைக்கின்றார் கொடுமை அந்தோ                                         ஏந்துகிறார் வஞ்சகத்தைச் நடித்துப் பேசும்                                                            எத்தர்க்கு கொத்தான் மாலை சூட்டி                                                              வாந்திதானை  ஏமாந்தே உணவென் றெண்ணி                                                 வயிறுமுட்ட உண்ணாதீர்  எச்சரிக்கை

 என எச்சரிக்கையூட்டியுள்ளதை நாம் இன்றும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மூன்றாம் பதிப்பிற்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் வாழ்த்துப்பா அணி சேர்க்கிறது. 

தமிழ் நடைப்பாவை நூல் 1993ஆம் ஆண்டு குமரி முதல் சென்னைவரை 1330 கி.மீட்டர் பெருங்கவிக்கொ தலைமையிஒ 100 அறிஞர்களோடு நடைப்பயணம் நட்ந்த வரலாற்றைக் கூறும் நூல். நடந்த பெருமக்கள் உதவிய உள்ளங்கள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையின் மூச்சாக இந்நூல் உள்ளது. 

                                                                                                                                                     அன்னை மொழியொன்றே                                                                                                          ஆ!பெரிது என்கின்றீர்                                                                                                                         முன்னிவையத் தோர்தொடர்பு                                                        முக்காலும் ஆங்கிலமே


என்னடி பேதாய் ஆம்                                                                                                 வையமெலாம் சென்றோமே                                                அன்னைமொழி ஒன்றை                                                                                               அவரவர்நா டேமுதன்மை 


நன்றாய்த் தொடர்புமொழி                                                              நட்புமொழி வேற்றுமொழி                                                                     நன்று செர்மன்நாடு பிரான்சு                                                                           ஐந்துகண்டம் எல்லாமே


தன்தாய் மொழிபோற்றித்                                                    தாய்மொழிக்கே பீடு தந்தார்                                                                                   நன்றிதனை நாமுணர                                                                                                     நாட்டுநடை எம்பாவாய் 

 என உலகில் அவரவர் தம் தம் தாய்மொழியில் நாட்டம் கொள்வது நம்மோர் ஆங்கில மோகம் கொள்வதும் கண்டு குமுறுகிறார்.இந்த நூலைப் படிக்கும்போது நடைப்பயணக் காட்சிகள் நம் கண்முன் நிற்கிறது.  

மானமில்லார் நம்மறிஞர்                                      மாத்தமிழ் வாழ்வெண்ணார்                                  ஈனமில்லாப் பாவலர்கள்                                                       பாப்புனைதலோடு சரி 


ஞானமில்லா மக்களுக்கோ                                                         நாளெல்லாம்  கிழ்வழக்கு                                                         தானமில்லாச் செல்வரிங்கே                                                      தண்டமிழை யாரறிவார் 


 மோன்மில்லா யோகியர்க்கோ                                  மூச்சடக்கும் வாசிநிலை                                                            ஆனநிஅலை ஈதானால                                                    அன்னைமொழி காப்பார் யார்  


வானமுயர் வையமுயர்                                                         வண்டமிழ்குச் சக்தியுண்டு                                                                                                              போனதமிழ் ஆற்றல்பெற                                                                                           பூத்தநடை எம்பாவாய் 

 என நாட்டின் நிலையையும் மீண்டும் தமிழ் ஆளும் என்ற நம்பிக்கையும் தருகிறார். பெருமக்களே தொடர்ந்து நூல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். தாங்கள் அனைவரும் படியுங்கள் அல்லது இலவசமாகவாவது பெற்று படித்து தமிழ் உணர்வை மீட்டுங்கள் எனக் கூறி விடைபெறுகிறேன்


No comments:

Post a Comment