குமரி சென்னை ஊர்திப் பயண நிறைவுவிழா தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர் தமிழ்ப்பணி இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தோடு உலகத் தாய்மொழிநாள் தமிழ் இந்திய ஆட்சிமொழி திருக்குறள் தேசிய நூல் ஆகிய நோக்கங்களுக்கு குமரி முதல் சென்னை வரை 1993 ஆம் ஆண்டு நடைப்பயணமாகத் தொடங்கி தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஊர்திப்பயணமாக வரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கொ அவர்களை இவ்வாண்டு வரவேற்று நிறைவு விழாவைக் நடத்தும் பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
தலைநகர்த் தமிழ்சங்கத்தின் கட்டிடத்தில் நடை பெறுவது சாலச் சிறந்தது. அரங்கில் தமிழ் அறிஞர்களின் திரு உருவங்களாக உள்ளன. அரும்பாடுபட்டு உருவாக்கிய சுந்தரராசன் அவர்களையும் அவரோடு துணைநின்ற பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். கன்னியாகுமரியில் அண்ணல் காந்தி மண்டபம் முன் ஐயன் திருவள்ளுவர் அருட்பார்வையோடு 12\2 ல் தொடங்கிய பயணம் தமிழகம் முழுமையும் முழக்கமிட்டு கூட்டங்கள் நடத்தி உலகத் தாய்மொழி நாளான இன்று 21\2ல் தலைநகர்த் தமிழ்சங்கத்தில் உள்ள ஐயன் திருவளுவர் சிலைமுன் நிறைவுற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டம நகரம் பேரூர் சிற்றூர் அனைத்து இடங்களிலும் நிகழ்வுகள் நடத்தி ஆதரவு நல்கிய தமிழ் அமைப்புகளுக்கும் அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ இங்கே வருகை தந்துள்ளார்கள் அவருடைய அளப்பரிய தொண்டு உரை தமிழர்களை நெஞ்சு நிமிரச் செய்யும். அவர் இன்று ஒரு கோட்டம் அமைத்து அங்கு அவரை நாடி தமிழர்கள் தமிழர் வரலாறு அறிய வேண்டும். போலிச் சாமியார்கள்தான் நாட்டில் பெரும் சாதனையளர்களாக உள்ளது தமிழகத்தின் சாபக்கேடு.
மண்பாண்ட தொழிலாளர்களின் தலைவர் மேனாள் மாநகராட்சி உறுப்பினர் ஐயா சேம நாராயணன் அவர்கள் ஐயாவை வாழ்த்த வருகை தந்துள்ளார்கள். ஐயா அவர்களின் வீட்டின் முன் மண்பாண்டங்கள் குவிந்து இருக்கும் தனக்கும் மண்பாண்டங்கள் செய்யத் தெரியும் நான் செய்துள்ளேன என்பதை வரவேற்கிறேன்.. இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் அண்மையில் கடைசிவிவசாயி என்ற படம் பார்த்தேன் அந்தப் படத்தில் நடிகர் விசய் சேதுபதி எடுத்துள்ளார் அவர் சிறிய வேடத்தில் வந்து விவசாயியை முன்னிறுத்துகிறார். பறை இசைக் கலைஞர்கள் மண்பாண்ட குயவர்கள் எந்திலையில் உள்ளனர். அவர்கள் ஒற்றுமையாய் இருந்தால்தான் நாடு செழிக்கும் தழைக்கும். இல்லையேனறால் அனைவரும் கடைசித் தலைமுறைதான் என்பதை உணர்த்துகிறார்..
தமிழ் தமிழர் சிந்தனைகளுக்காக தம் வாழ்நாளையே ஒப்புவித்த தந்தையார் பெருங்கவிக்கோ 1993ஆம் ஆண்டு நடைப்பயணமாக தமிழ் அறிஞர்களோடு வந்து இன்று 30 ஆண்டுளாக ஊர்திப்பயணமாக வந்துள்ளோம் இந்த உணர்வுகளுக்கும் கடைசி மாமனிதராக உள்ளார். தமிழர்களாகிய நாம் நம்மில் உள்ள வேறு[பாடுகளைக் களைந்து ஒற்றுமையோடு நாம் நம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் திருக்குறள் தேசிய நூல் சாதனையை நிகழ்த்துவோம்.. அறிஞர் பெருமக்கள் பலர் தங்கள் அமைப்புகளின் சார்பில் பங்கேற்றுள்ளீரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்
.( 21-2-2022 அன்று குமரி சென்னை ஊர்திப்பயண நிறைவு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
No comments:
Post a Comment