Sunday, April 10, 2022

 பார் போற்றும் பாலா 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி



 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்


பேராசிரியர் பாலசுப்பிரமணியம் மிகச் சிறந்த பண்பாளர். உன்னத மனித நேயர், ஆய்ந்தறிந்த கல்வியாளர் சுற்றம் தாங்குவதில் அருட்தந்தை உலகம் சுற்றிய தமிழ்ப் பறவை

பாலா அவர்களை எம் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவை  அண்ணே என்று அழைப்பதும் அவர் மீண்டும் தந்தையை மறுஒலியாக அண்ணே என்று அழைப்பதும் 45 வருடகால ஒலி இன்று அடங்கி ஒராண்டாவதை எண்ணி கண் கலங்குகிறேன். அறிஞர் பாலா அவர்களை நான் தந்தை என்றும் அவர்தம் அன்புத் துணைவியார் சரசுவதி அம்மையாரை அம்மா என்று அழைப்பதும் எங்கள் உறவு முறை.

தந்தை பாலா அவர்கள் நான் மலேசியா சென்றுவிட்டால் ஈப்போ பேருந்து நிலையத்திலிருந்து அவரது பென்சு ஊர்தியில் அழைத்துச் சென்று இல்லத்தில் தங்கவைத்து இன்னமுது தந்து உலகளாவிய பயணங்கள் தமிழக நிலைகள் தம் இளமைக்கால தமிழக அனுபவங்கள் பற்றி எல்லாம் நயம்படப் பேசிப் மகிழ்விப்பார். பாலா அவர்கள் ஒர் நகைச்சுவை நாவலர்.

மலேசிய அரசியல் தலைவர்கள்,பெரும் பேராசிரியர்கள், தொழிலதிபர்கள் இன வேற்றுபாடின்றி மலாய் சீனப் பெருமக்களிடம் பேரன்பைப் பெற்றவர். அவரோடு பல நிகழ்வுகள் மலேசிய மண்ணில் சென்று மகிழ்ந்துள்ளேன். பொன்விழாக் காணும் தமிழ்ப்பணி இதழுக்கு மலேசியாவில் ஒரு உறுப்பிணர் குழாத்தையே உருவாக்கிய பெருமகன் நம் பேராசிரியர் பாலா.


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தபோது தலைவராகப் பொறுபேற்று தமிழக உலகப் பெருமக்களை சிறப்பாக வரவேற்று மாநட்டை சிறப்பாக நடத்தி எனக்கு செந்தமிழ்த் தொண்டின் சிகரம் எனப் பட்டம் வழங்கிய பெருமகன்.

ஈப்போ கிளப்பில் உள்ள கொல்ஃப் திடலுக்கு அழைத்துச் சென்று எனக்கு கொல்ஃப் விளையாடக் கற்றுக் கொடுப்பார். பலமுறை அவரோடு சென்று விளையாடி இருக்கிறேன். அதே கிளப்பில் அவர் மாண்டார் என்ற செய்தி எம் நெஞ்சை விட்டு அகலவில்லை.

மறைந்து ஓராண்டு ஆனாலும் அறிஞர் பாலா அவர்கள் உலகத் தமிழர்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்துள்ளார். தன்னமற்ற தூய நெஞ்சர் பாலாவின் புகழ் ஓங்குக


No comments:

Post a Comment