Wednesday, April 13, 2022

 

 

போரினை விடுத்து நன்றாய்   பொழிவுடன் மகிழ்வே வருக!

 

 

கூடியே வாழ்ந்த மக்கள்

குழுவாய் நாடாய்ப் பிரிந்தார்

நாடிய நாடுகள் நாடி

நலமிலா கொள்கை கொண்டார் 

தேடிய வளமை செல்வம்

தெறித்ததே குண்டு மழையால் வாடிடும் அவலம் இன்றோ

 வளமிகு உக்ரேன் மண்ணில்!

 

நெட்டோ படைகள் ஊட்டம்

 நேரெதிர் காக்கா வேடம்

கொட்டும் பிரங்கி சண்டை

கொடுமையாய் மாய்வது முறையா மொட்டும் மலராம் குழந்தை

மடிந்திடும் உறவின் உறவால்

கிட்டும்   நலமேநைந்து                       கிடந்திடும் குவலயம் எங்கும்!

 

இரசியா புட்டின் தாமும்

இரக்க உணர்வே இன்றி

உரக்க உலகே மொழிந்தும்                                               உன்னத மக்கள் வெறுத்தும்

அரக்க மனமாய் போரில்

அடக்க அறியா மடமை

வெறுக்கும் மனித மாண்பை

வெடித்ததே உலகம் எங்கும்!

 

கூட்டாய் வாழ்ந்த செலன்சுகி                                  கூட்டில் பிரிந்தே சென்றார்

    நாட்டிய பழமை மறந்தே

நயத்தகு நுட்பம் இன்றி

ஓட்டிய மக்கள் எல்லாம்

   உலகெலாம் அகதி வாழ்வு

போட்டியை விடுத்து நன்றாய்                                   பொழிவுடன் மகிழ்வே வருக!

No comments:

Post a Comment