Tuesday, April 19, 2022

 கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் பேராசிரியர் கு. மோகன்ராசு அவர்களுக்குப் பாராட்டுவிழா                         

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                        

 கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிவிருது பெற்ற குறள் ஞானி மோகன் ராசு அவர்களை அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் பாராட்டுவது சாலப்போறுத்தம் கடந்த 50 ஆண்டுகளாக அவரை வாழ்த்தி வழிகாட்டிய பெருமகன். தந்தையார் அவர்களும் மோகன் ராசு அவர்களும் பேராசியர் ந. சஞ்சீவியை பேராசானாகப் பெற்ற பெருமைக்குரியவர்கள். நான் பேராசான் சஞ்சீவி அவர்களைக் பலமுறை பல்கலைக் கழகத்தில் கண்டு வியந்திருக்கிறேன். ஐயா சஞ்சீவி அவர்களுக்கு முகம் முழுமையும் தாடி சடை பிண்ணிக் கொண்டிருக்கும் இப்போது மோகன் ராசு அவர்கள் அதைத் தொடர்கிறார்கள். ஐயா பெருங்கவிக்கோவின் தாய்மண் நூலிற்கு நான் அணிந்துரை வாங்கச் சென்றபோது காவியக் கதையை கூறக் கூறினார. பல்கலைக்கழகத்தின் முன் உள்ள கடற்கரையில் நடந்துகொண்டே கதையைக் கேட்டார். அணிந்துரையிலும் மகன் சொல்ல தந்தையின் காப்பியக் கதையைக் கேட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அறிஞர்களை கவிஞர்களை உருவாக்கிய பெருமகன் பேராசான் ந. சஞ்சீவி. அவரின் வழித் தோன்றல்கள்தான் உலகை ஆளும் பெருங்கவிக்கோவும் திருக்குறள் ஞானி விருதாளர் மோகன் ராசுவும். வாழ்த்துரை வழங்கிய உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் செவாலியர் டாக்டர் சந்தோசம், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத் தலைவர் சேயோன் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை கால்டுவெல் வேள்நம்பி போன்றோரின் உலகளாவிய வாழ்த்து சிறந்த வாழ்த்து. இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணித்த அமெரிக்க சாக்கரமெண்டோவில் வாழும் எங்கள்து நெடு நாளைய நண்பர் மருத்துவமாமணி செல்வி முருகேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த அவையில் பாராட்ட குழுமியிருக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.  

குறள்ஞானி மோகன்ராசு அவர்கள் திருக்குறளை வாழ்வியல் முறையாக மாற்றிய பெருமைக்குரியவர் மார்கழித்திருநாளில் திருவள்ளுவர் சிலையை ஏந்தி திருகுறள் பாடி தொண்டர்களை தெருவெல்லாம் வலம் வர வைத்துக் கொண்டிருப்பவர்.

 திருவள்ளுவப் பெருமானை உலகப் பெரும் அறிஞர்களோடு ஒப்பிட்டு வள்ளுவர் கோட்ட்த்தில்  நிகழ்வுகளிலும் பல மாநாடுகளிலும் அறிஞர்கள்  உரையாற்றவைத்து வள்ளுவம் ஓங்கி நிற்பதை உலகிற்கு உணர்த்தியவர்.

 திருகுறளுக்கு தொண்டு செய்த சான்றோர்களை காலங்களாகப் பிரித்து அவர்களின் தொண்டுகளை மனமாச்சரியமின்றி திருக்குறள் தூதர்களை ஆய்வு செய்யப் பணித்து பேசவைத்து நூலாக ஆக்கியுள்ளார் சாதனைச் சிகரம் 

நமது குறள்ஞானி அவர்கள். தன் மனைவியை காதல் மணமுடித்து அதனால் ஏற்பட்ட துன்பத்தையெல்லாம் ஏற்று தம் மனைவியையும் திருக்குறள் சாதனையாளராக உருவாக்கிய பெருமகன் ஐயா மோகன் ராசு அவர்கள்..  

காணக் கிடைக்கா மாபெரும் தலைவர் யாரும் சிந்திக்க முடியாத கலைஞர் விருதை உருவாக்கிச் சென்றுள்ளார், அந்த விருது மோகன் ராசு அவர்களுக்கு தகுதியான விருது. வாழ்க விருதாளர் ஓங்குக கலைஞரின் புகழ். 

(17-4 2022 அன்றுகலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் பேராசிரியர் கு. மோகன்ராசு அவர்களுக்கு நடந்த காணொளிப் பாராட்டுவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)


No comments:

Post a Comment