Monday, March 13, 2023


ஈழத்துப் போராட்டங்களால்  பிரான்சில் புலம் பெயர்ந்த   உங்களோடுஅடுத்த தலைமைமுறைகளோடு 2054 திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் விழா

அருமை நண்பர் கிருபானந்தன் அவர்கள் சென்னை வருகை தந்தபோது சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஒரு வரவேற்பு வழங்கினோம். அந்த வரவேற்பின் தன் தம்பி மகன் திருமணம் ஈழத்திலிருந்து தம் தாய் தன்னோடு படித்த நண்பர் முரளி குடும்பம் பிரான்சில் தம் மகனோடு படிக்கும் பிரான்சு மாணவர்கள் என உலகச் சுற்றத்தையே கூட்டியிருந்தார் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பட்டம் வழங்கி சிறப்பித்து மகிழ்ந்தோம்.1993ஆம் ஆண்டு ஐரோப்ப்பிய மண்ணின் செருமணி பெர்லின் நகரில் மாநாடு நட்த்தினோம். தமிழகத்திலிருந்து 50 பெருமக்க்கள் ஈழக் குடும்பங்களில் த்ங்கியிருந்து இன்றும் அந்த்த் தொடர்புகள் பல்லிப் பெருகி தோப்பாக உள்ளது. அந்த காலக்கட்ட்த்தில் எத்தனையோ எம் ஈழத்துச் சொந்தங்கள் இங்கு வருவதற்கு மன்றம் பெரும்ப்பணியாற்றியுள்ளது. ஈழத்து போராட்டங்களால் புலம் பெயர்ந்த நீங்க்ள் இன்று அடுத்த தலைமைமுறைகளோடு திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறீர்கள். அந்த தமிழ்ப் பெரும விழாவிற்கு என்னை அழைத்துள்ளீர்கள். பிரான்சு வாழ் எம் தமிழ்ச் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பிலும் உலகத் தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டு பொக்கள் வாழ்த்துக்களை தெருவித்துக் கொள்கிறேன். நான் வருவதை கிருபா அவர்களுக்கு தெரிவித்து சூரிச் விமான நிலையம் நேற்று வந்தடைந்தேன். கிருபா தம் தங்கை மக்னோடு என்னை பூங்கொத்து கொடுத்து வரவேற்று இரவொடு இரவாக சுடாபர்க் நகர் அழைத்து வந்துள்ளார். கடுமையான குளிர் இந்தக் குளிரும் இருப்பினும். தங்கள் அன்பால் மிக வெதுவெதுப்பாக உள்ளது. காலை எழுந்தவுடன் கிருபா என்னை ஓய்வெடுங்கள் என்று கூறினார் இல்லை நான் அரங்கம் வருகிறேன் என்று காலையில் அவரோடே வந்துவிட்டேன். என்னை. ஊர்தியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றபோது ஒரு அழைப்பு கிருபா கைப்பேசிக்கு வந்த்த்து நான் எடுத்துப் பேசினேன் நான் உசா அக்கா பேசுகிறேன் என்ற் ஒரு குரல் வந்த்து நானும் திருவள்ளுவர் பேசுகிறேன் என்றி உரையாடினேன் நான் அரங்கம் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். கிருபாவுடன் கூறுங்கள் என்று கூறினார். அரங்கம் வந்தவுடன் அனைவரும் பம்ம்பரமாகச் சுழன்று கூட்ட் நிகழ்வை நட்த்த தாங்கள் மேற்கொண்ட உழைப்பை தமிழ் உணர்வை பண்பாட்டை  காக்கும் பாங்கை நெஞ்;சார[ப் போற்றுகிறேன். இந்த மேடை தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் மேடை இந்த அரங்கம் தமிழ்ப் பண்பாட்டும் சுரங்கம். என் அருகில் ஒரு நண்பர் அமர்ந்தார் தான் சுந்தர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். கிருபா என் மைத்துனர் என்றார் அவர் தங்கையைத்தான் மண்ந்துள்ளேன் என்றார். நானும் கிருபாவின் தங்கை ருக்குமணியும் ஈழத்தில் ஒருவர் ஒருவர் விரும்பினோம் திருமண்ந்திற்கும் குடும்பத்தார் ஒப்பவில்லை. போராட்ட காலம் நான் கடும் போராட்ட்த்திற்கிடையில் இன்னலின் உச்சத்திற்கு சென்று ப்ல்வேறு நாடுகளைக் கடந்து செருமணிக்கு அகதியாக வந்து செருமனி சட்ட நடவடிக்களையெல்லாம் தாங்கி இந்த சுடார்பெர்க் நகர் வந்தேன். மீண்டும் எட்டு ஆண்டுகள் கழிந்து எவ்வித்த் தொடர்பும் இன்றி எனையே நினைத்து மணமாகாமல்இருந்த என் அருமைக் காதலி ருக்மணியை  ஈழம் சென்று பெற்றோர் ஒப்புதலோடு அழைத்து வந்து இஙுகு திருமணம் செய்து கொண்டேன் என்றார். நான் ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். ருக்குமணி அம்மா எந்திருங்க அருமை நண்பர்களே இந்த இணையருக்கு ஒரு பலத்த கரஒலி தட்டுங்கள். 

ஞாயும் ஞாயும் யாராகியரோ எந்தைய்ம் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்றா புறநானூறுப் பாடலின் இலக்கணம் இந்த இணையர். அவர்கள் வந்த்து மட்டுமல்ல தம் குடும்பங்களையே இந்த மண்ணிற்கு வரவழைது தமிழ்ச் சுற்றத்தைக் காத்துள்ளனர். கிருபாவின் மனைவி கலையரசி சுந்தரின் தங்கை. அண்மையில் தமிழ்நாடு வருகை த்ந்தனர் நாங்கள் உறவாடி மகிழ்ந்தோம். குற்ற மிலனாய் குடிசெய்து வாழ்வானை சுற்றமாய்ச் சுற்றும் உலகு என்ற குறளுக்கு இலக்ணமாக வாழும் உங்கள் அனைவரையும் நெஞ்சார்ப் போற்ற்கிறேன்.


இங்கே வருகை த்ந்துள்ள அருட் தந்தை கெலன் பிராட்சிசு அவர்கள் பிரஞ்சு மொழி இதழில் பொங்கல் திருவிழா குறித்து தாம் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். எனுற்ம் தமிழைக் காக்கும் அறிஞர் சி.யூ.போப்,  அறிஞர் விராமாமுனிவர் இன்றும் உலகத் தமிழ் மாநாடுகளுக்கு காரணமாக விளங்கும் அருட்தந்தைகள் வழியில் தொண்டாற்றும் கெலன் அவர்களின் பணி ஓங்குக.  இங்கு அடுத்த தலைமுறைகள் பிரான்சு நாட்டில் பிரஞ்சு மொழி பண்பாட்டோடு வளர்ந்தாலும் நம் மொழி பண்பாடு மொழி அழியா வண்ணம் தமிழ்ச்சோலை மிகச்சிறப்பக மொழியையும் பண்பாட்டையும் காத்து வருகிறது தமிழ்ச்சொலை அமைப்பினர் அனைவருக்கும் எம்  நென்ச்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலகெங்கும் எம்ம்மோடு இணைந்து பணியாற்றும் பெருமக்களுக்கு தமிழ்ப்பணிச்செம்மல் விருது வழங்கினோம். அப்போது கிருபானந்தம் கலையரசி இணைய்ருக்கு வழங்கினோம், தாம் பெற்ற் இன்பம் பெறுக் இவ்வையகம் என்ற கிருபாவின் வேண்டுகோளை ஏற்று தமிழ்ப்பணியாற்றும் பெருமக்களுக்கு பன்னாட்டுத் தமிழுறவு தமிழ்ப்பணிச் செம்மல் விருது வழங்ச்கி சிறப்பிப்பதில் பெரும்கிழ்ச்சியடைகிறேன். விழா தொடக்கத்தில் மகளிர் பெருமக்கள் பொங்கல் வைத்து மிகச் சிற[ப்பாக்க் கொண்டாடினீர்கள். அப்போது நான் குலவையிடுங்கள் எனக் கூறினேன் நீங்கள் அனைவரும் மிகச்சிற்ப்பாக்க் குலவையிட்டீர்கள். எங்கல் பாட்டிகள்  இராமாயி பூவாயி போன்ற பெருமக்கள் எல்லாம் மங்கல ஒலியாக எழுப்பிய ஒலி இன்று பிரான்சு ந்கரிலும் ஒலித்த்து. இங்கு நடந்த பேச்சுப் போட்டி திருக்குறள் போட்டி இசைப் போட்டி என அனைத்துப் போட்டிகள்லும் பங்கேற்ற பரிசு பெற்ற மாணவச் செல்வங்களையும் அவர்களை தமிழ்ப் பண்பாட்டோடு வளர்த்த பெற்றோர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன். 


Saturday, January 7, 2023

 இந்திய முசுலீம்லீக் நடத்திய மீலாது தொடர்சொற்பொழிவு  சமய 

நல்லிணக்க விழா


தமிழ்மாமணி வா.முசே.திருவள்ளுவர்   

              இந்திய முசுலீம் லீக் வடக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பில் நடைபெறும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன.  இந்த நிகழ்வுக்கு நான் வருவதற்கு காரணமான் என் பள்ளி நண்பர் குலாம் உசேன் அவர்களுக்கு எஅன் நன்றியை உரித்தாக்குகிறேன். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் எங்கள் தமிழாசிரியர். தந்தையார் அவர்கள் தம் பூசை அறையில் எல்லா தெய்வங்களையும் வணங்குவர். அறையில் கிறித்தவர்களின் கர்த்தரும் இந்துக்களின் பல் தெய்வங்களும்இசுலாமியரின் மக்காமதினாவும் ஆசையைத் துறந்த புத்தரும் அருட்பிரகாச வள்ளலாரும் அருட்குநாதர் சாதுகுருசாமிகளும் உள்ளார்கள். அனைவருக்கும் கற்பூர தீபம் காட்டி வழிபடுவார். சுத்த் சன்மார்க்க நெறி எம் தந்தையார் அவர்களின் வழிபாட்டில் இருக்கும். அவர் வழிபடும் முறை இசுலாமிய முறை போன்று ஐந்துமுறை முட்டியிட்டு மண்ணில் முட்டி வழிபடுவார். தற்போது எம் தந்தையாரின் நெற்றி முட்டிய வடு திராவிட இயக்கத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அருமை முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பொற்கால ஆட்சியைத்த் தரும் பெரும்க்கள் வழியில் அரிய தொண்டாற்றும் அருமைப் பெருமகன் நாஞ்சில் சம்பத் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் போன்றே நானும்  பேச்சைக் கேட்க ஆவலாய் உள்ளேன். பெருமகனுக்கு வணக்கமநிகழ்வுக்கு தலைமைதாங்கியுள்ள ஆலம்கான் சிறப்பாக நிகழ்ச்சியை தொடர்ந்து செம்மையாக் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவணைத்து நட்த்தும் தொகுப்புரையாற்றும் நிசாமுதின், தொடர்ந்து  உரையாற்றவுள்ள மவுலவி அப்துல் காதர்சிராசு, முகமது அபுபக்கர் வருஅனவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன்.அந்தப் பள்ளியில் பணியாற்றிய அருளாளர் அப்துல் சலாம் மிக இனிமையான குரலில் ஓதுவார் அது இனிமை நாதமாக ஒலிக்கும். அருமை நண்பர் குலாம் உசேன் அவர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பள்ளியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாடுவார்கள். இன்றும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் பெருமகன் அப்ப்துல் சலாம் அவர்கள் நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம்  அவர்களைப் பற்றிப் பேச மேடை ஏற்றினார்கள். அதுதான் எனது முதல் மேடை. இன்று உலகம் முழுமையும் மேடை ஏறி முழங்கிக் கொண்டிருக்கிறேன். 

நம் வள்ளுவப் பேராசான் எழுதிய குறளுக்கு மண்ணில் சான்றாக வாழ்ந்து வழிகாட்டிய அருளாளர் நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள்.. நாயகம் அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு அம்மையார் குப்பையை அவர் தலைமேல் வீசிக் கொண்டிருந்தார்.  ஒரு நாள் குப்பை விழவில்லை உடனே நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள் அந்த அம்மையாரைப் பற்றி விசாரிக்க அவர் உடல் நலமில்லை என் அறிந்து அவரைக் காணச் சென்றார். அந்த  அம்மையார் மனம் திருந்தி மார்க்கத்தின் இணைந்தார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 

நன்நயம் செய்து விடல் 

தனக்கு தீமை செய்தவரையும் அவர் நாண நன்நயம் செய்த குறள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாயகம் அவர்கள் தாயின் காலடியில் சொர்க்கம் எனக் கூறி தாயின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். நம் உண்ணும் உணவு நா சுவைக்கும் முன் தந்தை  சுவைத்திருக்க வேண்டும் என்ற தந்தை பேணலை உணர்த்தியுள்ளார். நபிகள் நாயகம் சல்ல்லாகு சலைகுவ சல்லம் அவர்கள் ஒட்டகத்தைக் கட்டிவிட்டுத் தூங்குங்கள். உங்கள் கடமையை செய்து இறைவனைக் கும்பிடுங்கள். என தன் சீடர்களுக்கு கூறியுள்ளார்.

 ஏழைகளின் பசியை உணர இரமலான் மாத்த்தி. நோண்பு இருக்கப் பணித்தார்.. தன் உணவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பண்பை நெறியாக்கியுள்ளார்.


 நாயகம் அவர்கள் தம் மெக்கா மதினா குர்துப் போரின்போது மக்காவை அடைந்து விட்டார் அப்போது மக்கா அரசர்மூன்று கட்டளைகள் விதித்தார்.  குறிப்பிட்ட  நாள் மதினா விலிருந்து மக்காவிற்கு நுழையக்கூடாது. மீறி யாரும் நுழைந்தால் தாங்களே அவர்களை ஒப்படைக்க வேண்டும் அவர்கட்கு  இங்கு மரண தண்டணை வழஙகப்ப்படும்அதற்கான உடன்ப்டிக்கை தயாரானது அந்த உடன்படிக்கையில் நபி இறைத்தூதர் என்ற் சொல்லை மறுத்தனர்.அப்துல்லா முகமது என்ற பெயரே இருக்கவேண்டும் என்றனர். சீடர்கள் மறுத்தனர். ஆனால்  என் பெயர் முக்கியமல்ல உடன்படிக்கைதான் முக்கியம் என ஒப்பினார்.   நபிகள் நாயகம் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒப்புதலோடு மக்கா  நுழைந்தார என்பது வரலாறு.

 இன்றைய மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைப் போட்டு கடந்த ஒராண்டாக போராடி வருகிறார்கள். அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களின் போராட்ட உணர்வை மதிக்க்காத அரசாக உள்ளது. நான் தில்லி சென்றபோது போராட்டக் களத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். குடும்பத்தோடு விவசாயிகள் போராடி வருகின்றனர். நானும் பங்கேற்று சன் தொலைக்காட்சியில் ஆதரித்து பேட்டி கொடுத்தேன்.. மனித நேயம் முற்றிலும் இங்கு தவிர்க்கப் படுவதைக் காணலாம்.


Wednesday, January 4, 2023

 திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அந்தாதி 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர் தமிழ்ப்பணி 

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் 

     

      மதரை மாநகரின் அடையாளமாக விளங்கிய திருக்குறட்செம்மல் மணிமொழியனாரின் அந்தாதி அவர் வாழும் காலத்தில் தந்தையார் பெருங்கவிக்கோ பாடி தமிழ்ப்பணியில் வெளியாக்கி இன்று நூலாக வெளிவருவது காலத்தின் கொடையாகும் 


      உலகம் முழுமையும் தமிழால்அளந்த பெருங்கவிக்கோ இந்த தமிழ்க்குடிக்கு அடையாளப்படுத்திய  சான்றோர்கள் ஏராளம் அவருள் நம் திருக்குறட்செம்மல் மணிமொழியானார் தலையானவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி எண்ணற்ற பெருமக்களை அவரது கல்லூரி விடுதியில் பாராட்டி சிறப்பித்த புரவலர் பெருமகன். முத்தாய்ப்பாக பன்னாட்டுத் தமிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டை 4 நாட்கள் தந்தையார் பெருங்கவிக்கோவின் வேண்டுகோளுக்கிணங்க தலைமையேற்று உலகமே வியக்கும் வண்ணம் வெள்ளிவிழா மாநாட்டை நடத்திய தமிழ்செம்மல்.மாநாடு நடத்தியதோடு மட்டுமல்லாமல்  நிலையான கல்வெட்டாகத் தம் விடுதியின் திருவள்ளுவர் அரங்க வாயிலில் பொறித்து வைத்த பெருமகன் நம் அந்தாதி நாயகன். 

 நம் அந்தாதி நாயகரை அறிமுகப் படுத்தும் நம் உலக மாக்கவி 

ஓங்குவகை வாழ்வில் ஒளிமல்கும் செய்வினைகள் 

தாங்கு தமிழ்குடி தான்பிறந்தே – வீங்குவளம் 

செல்வம்நல் செல்வாக்கு சீரார் மனிதநேயம்                 நல்ல மணிமொழி யன். (1)

இந்த நான்கு வரிகளுக்குள்ளேயே மணிமொழியானாரின் பிறப்பு வாழ்வு சிறபைப் பதிவு செய்துள்ளார். விடுதிகள் பலர் வைத்துள்ளனர் ஆனால் நம் மணிமொழியானாரின் விடுதியில் தங்காத சான்றோர்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் காக்கும் கொடை நெஞ்சராகத் திகழ்ந்தவர் நம் அந்தாதி நாயகர். 

ஐயா அவர்களின் துணைவியார் அன்னை கமலா அம்மா அவர்கள் பற்றி எழுதிய அந்த்தாதி அவர்தம் பெருமையை செப்புகிறது. 

வீணையின் நாதமோ மெல்லிசை கீதமோ 

பூணும் அணிஅழகோ பொன்னோ - மாணும்நல்           ஓவியமோ காவியமோ உள்ளொளிக் காந்தமோ 

தேவிக மலாவின் திரு  (54) 


திருமகளோ கொஞ்சும் அருமகளோ பாசக் 

கருமகளோ காமகளோ காதல்  - தருமகளோ 

தேவி கமலா செம்மை மணிமொழியன் 

ஆவி கலந்த அகம் (55)  


தம் துணைவரையே எண்ணி வாழும் அருமைப் பெருமாட்டி செல்வச் சீமாட்டி அன்னை கமலா அம்மையாரின் சிறப்பு இந்தப் பாக்கள் மெய்ப்பிக்கிறது. கமலா அம்மையாரும் ஐயாவும் இணைந்து  தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் எம் மதுரை பொற்பரி இல்லத்தைத் திறந்த்து என் கண்முன் நிற்கிறது.

அய்யாவின் மருகர் கல்விக்கோ கணேசன் அவர்களின் தந்தையார் சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றிய பாடல் கல்விக் குடிச் சிறப்பைப் பறைசாற்றுகிறது

 பண்பாடு மிக்கார் பலகல்வி யாளர்க்கோ 

சண்முகம் சுந்தரம் தக்கமுறை – புண்ணியர் 

போற்று கண்பதியர் பொந்தேவி தந்த மாமா  

ஏற்று சம்பந்தத்தின் இயல்  ( 23 )

தமிகத்தில் கல்விக்கொடை நெஞ்சராக வாழும் குடும்பத்தைப் பற்றிய பதிவு நம் நெஞ்சைத் தொடுகிறது.

திருக்குறட் செம்மல் மணிமொழியார் அவர்களின் உரையாடும் போது வள்ளுவப் பேராசானின் குறள்கள் மடை திறந்த வெள்ளம்போல் வெளிவரும். நாம் எந்தப் பொருள்பற்றிப் பேசுகிறோம் அந்தப் பொருளிற்கான் குறளைத் தருவார். திருகுறட்செம்மல் ஒரு கவகனகராகவே வலம் வந்தார். 

தெளிவாய்த் திருக்குறள் நூற்றுமுப் பத்தின் 

அளிமூன்றோ டேதான் அகத்தில் – ஒளிபதித்த 

சான்றோர் மயக்கும்  தடைநீக்கும் வேளாளன்  

வான்போல் வளந்த வகுப்பு   (75)

வகுத்தான் வகுத்த வகையல்லால்  கோடி 

தொகுத்தார்க்கும் துய்ப்பது அரிதாம் – பகுத்துச்சொல் 

வள்ளுவன் தேர்ந்த வழிகற்றே அவ்வழியின்

     வெள்ளம்போல் சொல்லும் விடை  ( 76 )

மதுரை மாநகரின் குறளாசானாக மணிமொழியார் திகழ்ந்த்தை இப்பாடல் படிப்போர் உணரலாம்.

அன்பே உருவான் ஐயா அவர்களின் சிரிப்பு . காட்சிக்கு எளியாராக எல்லோரையும் அரவணைக்கும் பேருள்ளம் நம் மணிமொழியாரின் உள்ளம். 

காண்பார் களுக்கெல்லா காட்சி மலர்முகமே

பூண்பார் தமக்கெல்லாம் புன்னகையே – மாண்புடைய         உச்சத் தமைச்சர் உறவுமுதல் சாமான்யர்                   மெச்சும் நடுநிலை வீறு  ( 47 ) 

       மாசற்ற மாமனிதரின் அந்தாதி அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய நூல். ஏற்ற தாழ்வுள்ள சமுதாயத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும். அறச் சிந்தனைகள் இல்லறத்தின் வழி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மணிமொழியானாரின் அந்தாதி நூல் சிறந்த பதிவு. நூறு பாடல்களும் மணிமொழியனாரின் புகழ்பாடும் பாடல்கள். தம் பல்வேறு அயராத்  தமிழ்த் தொண்டுகளுக்கிடையே அந்தாதி வழங்கிய தந்தையாரைப் போற்றி பதிப்பிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். திருக்குறட்செம்மல் மணிமொழியனார் புகழ் ஒங்குக உயர்க.




Tuesday, January 3, 2023

 திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் சிறந்து விளங்குவது கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எனும் தலைப்பியல் 

சிந்தனைப்பட்டிமன்றம்

தமிழ்மாமணி வா.மு. சே.திருவள்ளுவர்

தமிழ்நாடு திருவள்ளுவர்  கழகம் அறக்கட்டளை  தொடர்நிகழ்வுகள் பல நடத்தி  சாதனை நிகழ்த்தியுள்ளார்  தொண்டர் திலகம் வை.மா.குமார். இன்று திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் சிறந்து விளங்குவது கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எனும் தலைப்பில் 

சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில் நடுவராகப் பொறுப்பேற்று நட்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வில் இரு தலைப்பிலும் வழக்காட உள்ள பெருமக்களைப் போற்றுகிறேன். தொடர் மழை வெள்ளங்களுக்கிடையில் வருகை தந்துள்ள பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

நம் குறளாசான் கல்வி எனும் அதிகாரத்தில் 391ஆம் குறள் நம்மை சிந்திக்க செயலாற்றவைக்கும் குறளாகும்

கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக

தமது குறைகள் நீங்குமளவுக்கு குறையில்லாமல் கற்க வேண்டும். கற்றால் மட்டும் போதுமா அதன் வழி நடந்து சிறப்புற மேன்மையுறவேண்டும். இந்தக் குறள் கல்வியின் சிறப்பை மனிதகுலத்திற்கு வழங்குகிறது. கல்வி என்பது பணிக்காக  பதவிக்காக் அறப்பணிகளுக்காக குடும்ப  உயர்வுக்காக சமுதாய உயர்வுக்காக நாட்டு உயர்வுக்காக மனிதநேய சம நிலைச் சிந்தனைகளுக்கா என அனைத்து நிலைகளுக்கும் கல்வி அச்சாணியாக உள்ளது. 

அண்ணல்  காந்தியடிகள் இலண்டன் சென்று பாரிசுட்டர் பட்டம் முடித்து தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞர் பணியாற்றச் சென்றவர். அங்கு நடக்கும் நிறவெறிக் கொடுமைகள் கண்டு தம் அறப்பணியைத் தொடங்கியவர். பின் இந்தியா வந்து விடுதலைப் போராட்ட்த்தில் தலையேற்று நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். அவர் பயின்ற அறக் கல்வியும் அறிவுக் கல்வியும்  தம் வாழ்நாளில்  மனச்சான்றோடு பயண்படுத்திதை நாம் அறியலாம். தமிழக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியபேரறிஞர்அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து உயர் கல்வி கற்று  சராசரியான மனிதர்கள்போல தன் பெண்டு பிள்ளை வேலை என வாழமல் தந்தைபெரியாரிடம் இணைந்து தமிழ்நாட்டைக் காத்த பெருமகன் அவர் வழியில்  கிடைத்த தலைவர் கலைஞர் தமிழகத்திற்கு சாதித்த சாதனைகள் கற்க கசடற கற்றபின் நிற்க என்ற கஉளுக்கு சான்றாகினர்.

பொருளின் சிறப்பைப் பற்றிக்  வள்ளுவப் பேராசான் கூறும் குறள் சிந்திக்க வைக்கிறது. 


பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது

 பொருளல்ல இல்லை பொருள்  (751)

 நம் நடைமுறை வாழ்கையிலேயே காணலாம் பொருள் உள்ளவர்களிடம் அனைவரும் மத்க்கும் போக்கு இன்றும் உள்ளது. எந்தக் காரியங்களையும் பொருளுள்ளவர்கள் எளிதாக செய்யும் திறன் உடையவராகின்றனர். இந்தக் காலத்தில் கல்வியே பொருள் இல்லையென்றால் கேள்விக்குறியாகிறது. வள்ளு வப் பேராசான் எந்த பொருளைப் பற்றிப் பாடுகிறாரோ அந்தப் பொருளின் நிலையினின்றே பாடுகிறார் என்பதை அறியாலாம். 


கல்வியும் பொருளும் நம் வாழ்வில் எவ்வாறு அங்கம் வகிக்கின்றன என்பட்தி திருக்குறள் வழி கற்றுணர்ந்து வாதாட வருகின்றனர் நம் அறிஞர் பெருமக்கள்

  யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்  

  சாந்துனையும் கல்லாத வாறு (397)


வள்ளுவர் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் மிகச் சிறந்த விளக்குவது கல்விச் செல்வமே தலைப்பில்  உரையாற்ற முன்னைவர் வாணிசோதி,  ஆசுகவி இனியா இளங்கலை மாணவி சன்னி  கற்றவர்களுக்க்கெல்லம்  எங்கு சென்றாலும் சிறப்பு என்ற வகையில் கற்ற்றிந்த அறிஞர் பெருமக்கள் திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வருகை  தந்துள்ளனர். . 


ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை

 ஊக்கார் அறிவ்டையார்  

என்கிறார் வள்ளுவப் பேராசான் . 

கல்வி கற்கிறீர்கள் கற்றபின் செல்லவத்தை சேர்க்க பாடாய் படுகிறீரகள்/ பின் சேர்த்த செல்வத்தை பாதுகாப்பதும் நமது கடமை என மொழிகிறார் நம் ஆசான். நம்  அறிவுக்கு புலப்படாத இந்த்த் தொழிலைச் நாம் செய்யமுடியுமா என்ற பட்டறிவு இல்லாமல்   இருக்கும் முதலையும் அறிவுடையவர்கள் இழக்க மாட்டார்கள் என நம் ஆசான் ஆணித்தரமாக்க் கூறுகிறார்.  


குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொண் றுண்டாகச் செய்வான் வினை. (758) 


மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பது போல்  தக்க பொருளோடு செயலைச் செய்தால் வாழ்வின் உச்சத்தை அடைமுடியும்.  என்று வள்ளுவப் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழ்யில்  மிகச் சிறந்து விளங்குவது பொருட் செல்வமே. எனும் தலைப்பில் ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள் கவிஞர் பொருனை மாயன்  ககவிஞர் ஞால இரவிச்சந்திரன் கவிஞர் மதியரசு திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வாதாட் வந்துள்ளனர். திருவள்ளுவர் கழக அறக்கட்டளை அழைத்துள்ள நிகழ்வுக்கு வருகை தந்துள்ள சிந்தனைச் செல்வங்களே திருவள்ளுவர் கூறும் அறச் சிந்தனைகளை வருகை தந்துள்ள  அறவாணர்கள்  கருத்துக்களை நுட்பமாகக் கேளுங்கள்.

கல்விச்செல்வமே என்ற அணியின் தலைவர் முனைவர் வாணிசோதி பேச வருகிறார்கள். நெல்லை மாவட்டத்துப் பெருமாட்டி இங்கு சிந்தி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் கும்மனாஞ்சாவடி வழியாக திருவேற்காட்ட்டில் உள்ள கல்லூரிகுச் செல்கிறார்கள். தினமும் 34கிலோமீட்டர்  பயணித்து தமிழ்ப்பேராசிரியப்  பணியாற்றும் பெருமாட்டியை கல்விச் செல்வமே என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கிறேன்.  பேராசிரியர் உரை மிகச் சிறந்த உரை. வள்ளுவப் பெருமான் கல்விக்கே என  சிறப்பாக பதிவு செய்துள்ளார். 

பொருட்செல்வமே எனும் அணிக்கு தலைமை தாங்கும் கவிஞர் பொருனை மாயன் வருகிறார். தோற்றமே புலவர் பெருமக்களின் தோற்றத்தோடு இருகிறார். ஆனால் பொருளுக்கு ஆதரவாக பேச வருகிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பட்டிமன்ற நிகழ்வுகளில் பேசிவரும் பெருமகன். திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கு உருகார் என்ற மொழிக்கேற்ப  திருவாசக உரைகள் பல வழங்கிய கவிஞர். வருக பொருட்செல்லவமே  தலைப்பில் திருக்குறள் பதிவைத்தருக.

 பொருட்செல்வமே தலைப்பில் அரிய கருத்துக்களைத் தந்துள்ளீர்கள். நம் மண்ணிலேயே உழைப்பால் உயர்ந்த சிறந்த செல்வர்கள். இலக்கிய செல்வர் குமரிஅனந்தனால அழைத்துவரப்பட்ட தம்பி வசந்த்குமாரை வி.சி.பி நிறுவணத்தில் பணியாளாக சேர்ந்து இன்று வசந்த் நிறுவணம் 100ஆவது கிளையைத் துவங்குகிறது. பாராளுமன்ற உறுப்பினராக வசந்தகுமார் மகன் உள்ளார். பொருள்செல்வத்தின் சான்று. 

கல்விச் செல்வத்திற்கு பேச ஆசுகவி இனியா அவர்களை அழைக்கிறேன். எந்த இலக்கிய நிகழ்வுக்கும் அயர்ச்சியில்லாமல் சென்று இலக்கியம் வளர்க்க்கு  கவிஞர்இனியா அவர்கள் பணி மகத்தான பணி வாழ்த்துகிறேன். 

இனியா அவர்கள் மிகச்சிறந்த  திருக்குறள் சிந்தனைகளை வழங்கினார். என் அருமைத்தையார் அவர்களும் சிற்றந்தையார் அவர்களும் ஒரு ஆண்டநாயகபுரம் குக் கிராமத்தில் பிறந்தவர்கள். எனது தாத்தா  முத்து பாட்டி இராமாயி அரும்பாடுபட்டு கல்வியைக் கொடுத்தனர். அந்தக் கல்வியின் சிறப்புதான் இன்று நாங்கள் கல்விச் சிகரத்தில் உள்ளோம். தந்தையார் நீங்கள் அறிந்த உலா மாக்கவி பெருங்கவிக்கோ என் அருமை சிற்றந்தையார் வா,மு.முத்தராமலிங்கம் ஐ ஆர் எஸ் முடித்து இந்தியாவின் நேரடித்துறைத் தலைவராக பொறுப்பேற்று  கல்வியால் சாதித்து சுற்றங்களை பேணிக் காத்தவர். இனியா வழி கல்வியின் பெருமையை பதிவு செய்கிறேன். 

 அடுத்து பொருட்செல்வமே தலைப்பில் காணொளிகளின் காதநாயகன் கவிஞர் ஞால. இரவிச்சந்திரன் அவர்களை அழைப்பதில் மகிழ்கிறேன். கவிஞர் ஞால இரவிச்சந்திரன் சிறந்த கவிதை நூலை  பெருமகன்  வழங்கியுள்ளார். வருக திருவள்ளுவரின் பொருட்சிந்தனைகளைத் தருக.. 

கவிஞர் ஞால இரவிச்சந்திரன் பொருள் சார்ந்த திருக்குறள் கருத்துக்களை வழங்கினார். வாழ்த்துகள். மலேசியா சென்றவர்களுக்குத் தெரியும் துன்சம்பந்தன் சாலையில் 25 மாடி கட்ட்டிடம் மாலேசியா தோட்டப்பு’றத் தொழிலாளிகளின் கட்டிடம். அதை உருவாக்கிய பெருமை டான்சிறி சோம சுந்தரம் அவர்களைச் சாரும். எழுத்தாளர்கள் கவிஞர்கள்  மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி என அனைவருக்கும் நிதி வழங்கும் பெருமகன். சிறந்த எழுத்தாளர்களுக்கு உயரிய 10000 டாலர் உயரிய விருதைத் தரும் பெருமகன். பொருளை உருவாக்கி மக்கட்கு வழங்கும் அவர்களை அறிய வேண்டும் என பதிவு செய்கிறேன்.

 கல்வியே எனும் தலைப்பில் இறுதியாக மாணவி சனனி  அவர்களைப் பேச அழைக்கிறேன்.மாணவியை பயிற்றுவித்து அழைத்து வந்துள்ள வாணி சோதியைப் பாராட்டுகிறேன்.. மாணவி சனனி மிகச்சிறந்த உரையாற்றினார். வாழ்த்துகள் மிகச் சிறப்பாகப் பேசினீர்கள் தொடர்க. 

 இறுதியாக செலவமே தலைப்பில் பேசுவதற்கு கவிஞர் மதியரசு அவர்களை அழைக்கிறேன்.முத்தாய்ப்பாக திருக்குறள் கருத்துகளில் செல்வச் செழுமையை வழங்க வேண்டுகிறேன். மதியரசு மிகச் சிறந்த பதிவுகளை சிலப்பதிகாரம் தொல்காப்பியம் புறநானூறு என இலக்கியப்ப் பதிவுகளை வழங்கியுள்ளார். சிறப்பு. 

இங்கு அமர்ந்து கேட்போர் சார்பில் பொருளுக்கு அருளாளர் ஐயாப்பிள்ளை அவர்களையும் கல்விக்கு கவிஞர் திருவைபாபு அவர்களையும் அழைக்கிறேன். அனைவரின் கருத்துக்களையும் கேட்ட நான் எதற்கு தீர்ப்பு வழங்குவது என்ற திகைப்பில் இருக்கிறேன். மிகச் சிறப்பாக தங்கள் அணிக்கு சிறப்பாக வாதாடியுள்ளீர்கள். பொருள் குறித்து நீங்கள் பேசும்போது எனக்க் தென் ஆப்ப்ரிக்கா வாழும் தமிழர் மிக்கி செட்டி நினைவுக்கு வருகிறார். தென் ஆப்ரிக்காவில் தமிழர்கள் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள்.









Sunday, November 13, 2022

 அன்னைசேது 17ஆம் ஆண்டு


 விருதளிப்பு விழா

அன்னை சேது 17ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு. இன்று பெரியார்திடல் மணியம்மை அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்வில் பங்கேற்று அறிஞர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி விருது வழங்க தமிழர் தலைவர் உடல் நலம் சோர்ந்த நிலையிலும் இங்கே வருகை தந்துள்ளார்கள். இன்று தந்தை பெரியாரின் தொண்டறத்தை தமிழகத்தில் ஏன் உலகெங்கும் நிலைநாட்டி வரும் அருமைத் தமிழர்தலைவர் வருகை யாம் பெற்ற பேறு. யான் தமிழ்ப்பணியின் பொன்விழாவிற்கே அழைத்தேன் கனடா செல்ல உள்ளதால் வர இயலாமையை தெருவித்து இன்று அன்னையின் நினைவேந்தலுக்கு வருகை தந்துள்ள தலைவர் பெருமகனை நெஞ்சாரப் போற்றி தங்கள் கர ஒலிகளுக்கிடையில் வருக வருக என வரவேற்கிறேன். 

இன்று சமூக நீதிக் கொள்கையை  தி.க., தி.முக மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளையும் இந்தக் கொள்கைக்காக ஒருங்கிணைக்கும் பேராற்றல் மிக்க தலைவர் நம் தமிழர் தலைவர். எங்கள் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களை உலகறிய மொழிந்த பெருமை மூன்று தலைவர்களுக்கு உண்டு. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இனமானப் பேராசிரியர் நம் அருமைத் தலைவர் தமிழர் தலைவர். தலைவர்களைத் தொடர்ந்து நம் முத்துவேலர் கருணாநிதி  ஸ்டாலின் அவர்கள் தந்தையின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெருவித்து அதை அனைத்து ஊடகத்திலும் இணைய தளங்களிலும் பதிவு செய்து உலகறியச் செய்தார்கள். தந்தையார் அவர்களின் சேதுகாப்பிய்ம் 12 காண்டங்களையும் தமிழர் தலைவர் சிங்கப்பூரில் வெளியிட்டு தொகையையும் திரட்டித் தந்த பெருமைக்குரிய தமிழர் தலைவர் அவர்கள். பேராயக் கட்சியின் துணைத்தலைவர் ஊடகங்களில் திண்மையான கருத்துக்களை வலிமையாக பதிவிடும் பெருமகன் எங்கள் பார்திபனூர் பெருமகன் இதயதுல்லா அவர்களை வரவேற்று மகிழ்கிறேன். பெருமக்களே இங்கு விருதுபெறும் அறிஞர் பெருமக்கள் யாரையும் நானோ தம்பி கவியரசரோ ஆண்டவரோ தேர்ந்தெடுத்தது அல்ல அனைவையும் எண்ணிப்பார்த்து தந்தையின்  சிந்தையில் தோன்றிய பெருமக்களே என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் 1. தொண்ணூறு வயது அண்மையில் கண்ட பெரும்புலவர் இராமலிங்கம் விருது பெறுகிறார். தமிழ்ப்பணியின்பால் பற்று கொண்டவர். யான் அமெரிக்காவில் இருக்கும்போது கூட தொடர்பு கொண்டு பாராட்டும் பெரும் பண்பினர். நீதியரசர் அரிபரந்தாமன் போன்ற அறிவுச் சுரங்கங்களை உருவாக்கிய பெருமகன்.2. பேராசிரியர் சோதிவாணன் திராவிட இயக்க கருத்துக்களை நெஞ்சில் தாங்கி தொடர்ந்து திராவிடத் தீர்ராக வாழ்ந்து வருகிறார். தினமணியில் வெளியான கட்டுரைகளுக்கு தமிழ்ப்பணியில் பல மறுப்புக் கட்டுரை எழுதி அளப்பரிய தொண்டாற்றி வருபவர். சிறந்த திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் பெருமகன் இன்று விருது பெறுகிறார். 3. அமரிக்காவில் வாழும் பெருங்கவிஞர் இராமசாமி அமெரிக்கா பெட்னா மாநாடுகளில் கவியரங்கங்களில் தலைமையேற்று பாடிய பெருமகன் யான் பங்கேற்ற சிக்காக்கொ 10ஆம் உலக மாநாட்டிலும் பாடிய பெருமகன் தமிழகத்தில் பாரதி கலைக் கழகத்தில் பெருந்தொண்டாற்றிய பெருமகன் விருது பெறுகிறார்.4.மியான்மாரில் வாழ்ந்து தமிழகத்தில் பர்மாவின் அடையாளமாக வாழும் பெரும் மரபுப் பாவலர் வேணுகொபால்.ரெப்ப்கோ வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியவர். பர்மாவைப் பற்றி மிகச் சிறந்த நூலை தமிழ் உலகிற்குத் தந்துள்ள பெருமகன் விருது பெறுகிறார். 5, ஏர்வாடி இராதாகிருட்டிணன் கவிதைஉறவுக் காவலர் கவிஞர்களின் வேடந்தாங்கள் கவிதை உறவு 

இதழை தொடர்ந்து நடத்திவரும் சிறந்த எழுத்தாளர் கவிஞர். தந்தையாரைப் போன்றே ஆண்டுதோறும் நூல்கள் எழுதி வெளியிடும் பெருமகன்.கொரானா காலத்தில் கருணைக்கூடை எனும் அமைப்பு மூலம் நிதியை திரட்டி  நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிய பெருமகன் விருது பெறுகிறார்.6.அரசியலிலும் திரைப்படத்திலும் சிறந்து விளங்கிய முனைவர் இரவிபாரதி. நாங்கள் நட்த்திய பன்னாட்டுத் தமிழுறவு ம்ன்ற மாநாட்டிற்கு அரும்பணியாற்றியவர். செருமணி மாநாட்டில் பங்கேற்ற பெருமகன். அரசியலில் பெருந்தலைவர்களோடு நெருங்கிப் பழகி அளப்பரிய பணிகள் செய்தவர் சென்னை மாநாகராட்சி உறுப்பிணராக இருந்து தொண்டாற்றிய பெருமகன் விருது பெறுகிறார். 7.பெருங்கவிஞர் கடவூர் மணிமாறன். சிறந்த தனித்தமிழ்ப் பற்றாளர் பாவலரேறு பெருஞ்சித்திரானார் வழி பெருந்தொண்டாற்றிய பெருமகன். மிகச் சிறந்த கவிதைநூல்களின் ஆசிரியர் மொழிப்போர் ஈகி வீரப்பனாருக்கு சிலை எழுப்பி மலர் வெளியிட்ட தீர்ர்.. இதுவரை அரசு விருது பெறாமை வியப்புக்குரியதே. திராவிட முன்னேற்றக் கழக வெற்றிக்கு அரும் பாடுபட்ட பெருமகன் விருது பெறுகிறார். 8. பாவலர் ம. கணபதி மிகச்சிறந்த பண்பாளர். தலைநகர் தமிழ்ச்ங்கத்திற்கு ஒருகட்டிடம் இருக்கிறது என்றால் அதற்கு கணபதியின் பங்களிப்பு மகத்தானது. இப்படி துணை நிற்கும் ஒருவர் சுந்தரராசன் அவர்கட்குத் துணை நின்றதாலேயே இன்று சங்கத்திற்குக் கட்டிடம் இயல்பானது. இன்றும் அதை பாரமரிக்கும் பெரும் பொறுப்பை ஏற்று வழிநட்த்திவரும் பெருமகன் விருது பெறுகிறார். இவர் தம் துணைவியார் சரோசா இளையராசா குழுவில் தில்ருபா கலைஞர் 9. மாணவர் மன்றத் தலைவர் ப.கி.பொன்னுசாமி மாணவர் மன்றத்தை திறம்பட இன்று வரை நட்த்திவரும் தொண்ணூற்றைந்து வயதுப் பெருமகன். நான் செருமணி சென்றபோது தமிழ்மணி பட்டப் படிப்பு செருமணி தமிழர்கள் பட்டம் பெற்றதை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கப் பொதுச்செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் இல்லத்தில் கண்டேன். மகத்தான் பணிகளைச் செய்யும் பெருமகன் விருது பெறுகிறார்.10. பொறிஞர் பீட்டர் ராசன் மேட்டூரில் பணியாற்றியபோது பன்னாட்டுத் தம்ழுறவு மன்ற அமைப்பை நிறுவி அரும்பணியாற்றியவர். இன்று சான்றோர் தளம் என்ற அமைப்பை நிறுவி அளப்பரிய சாதனைபுரியும் பெருமக்ன் விருது பெறுகிறார். 11. குறளோன் வேலரசு சிறந்த கவிஞர். தந்தைபெரியார் அண்ணா கலைஞருக்கு முப்பா வழி தொடர் நிகழ்வுகள் நடத்திய பெருமகன். குறள்வழி நூல்கள் யாத்துள்ள பெருமகன் விருது பெறுகிறார். 12. முகவை மண்ணைச் சேர்ந்த தந்தையின் மாணவர் பாதுசா. மாணவராக இருந்து ஆசிரியராக அரும் தொண்டாற்றி இன்று விருது பெறுகிறார். 13. தந்தையாருக்கு உற்றுழி உதவும் பொறிஞர் கோபாலகிருட்டிணன். ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி ஆங்கிலத்தில் திறன் பெற்றவர். இவ்வாண்டு விருது பெறுகிறார். 14. சந்தப் பாவலர் நந்தா. தொடர் இலக்கியப் பணிகள் ஆற்ற்பவர். இதழின் ஆசிரியர்.. மக்கள் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தொண்டாற்றும் செயல் மறவர் விருது பெறுகிறார். பெருமக்களே அனவரும் தமிழர் தலைவர் கரத்தால் விருது பெறுகின்றனர். நானும் எனது சிற்றந்தையார் வா.மு. முத்துராமலிங்கம் ஐ ஆர் எஸ் இந்திய வருமான வரித் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றவர் அவர்களும் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்துள்ளோம். தமிழர் தலைவர்பால் பேரன்பு கொண்டவர் பெருமனாரையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். விருது பெறும் பெருமக்கள் வருகை தந்துள்ள பெருமக்க்கள் அனைவரையும் எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பாகவும் வர்வேற்று விடைபெறுகிறேன்.  . (12-11-2022 அன்றுஅன்னை சேது விருதளிப்பு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

 6-11-2022 அன்று அன்னையின் அருள்மங்களம் ஆண்டநாயபுரம் அன்னை சமாதியில் சிறப்புடன் நடைபெற்றது. புலவர் நெடுஞ்சேரலாதன், கோடையிடி குற்றாளம், ஆசிரியர் பாதுசா. குமணன் ஆசிரியர் மூக்கன் வழக்கறிஞர் முத்துக்கண்ணன், சேவியர் விசயகுமார் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்று உரையாற்றினர்.


Sunday, August 28, 2022

 பவளவிழாக் காணும் சுதந்திரம் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 


விடுதலை இந்தியத் திருநாள் 

வியத்தகு வெற்றிப் பெருநாள் 

கொடுமை சிறையைக் கண்டோர் 

கடமையின் கருணை நிறைநாள் 

உடைகள் அகற்றி மண்ணில்

 உரிமையாய் சம்மாய் வாழ்ந்து 

விடையென சுதந்திர ஒளியாம்

 வித்தக காந்திக் கனவு!

 

பவள விழாவாம் இன்று 

பண்புள சனநாயகம் உளதா

 தவமாம் கர்நாடகா ஆட்சி  

கயமை மாற்றல் முறையா 

உவக்கப் பணத்தை விதைத்து 

உரிமை பெறலோ விடுதலை

 தவிக்கும் வறுமை எண்ணா 

தற்குறித் தலைமை வீழ்கவே! 


விடுதலை ஆசான் நேரு 

வித்தக வழியினர் கண்டு 

கெடுதலாய் வீழ்த்தும் மமதை 

கேளியாய் பாராளு மன்றம் 

திடுமென செருப்பு வீசும் 

திமிரெனப் பேசும் அவலம் 

கடுமைச் செயலால் நாடு 

கலங்கி நிற்றல் முறையோ! 


ஆக்கமாம் உத்தம் தாக்ரே 

அரசாம் மராடியம் கலைத்தல் 

ஊக்கமாய் பணத்தைக் கொட்டி 

உரிமை அழித்தல் நெறியா 

திக்கெலாம் பவள விழாவாம் 

திகழ்புகழ் பாரத அன்னை 

விக்கியே அழுதிடும் சோகம் 

விடுதலை எந்நாள்? எந்நாள்?

Friday, August 26, 2022

 




கொடுமைப் பாதகன் வீழ்கவே

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

மக்களை நலமாய்க் காக்கா மூடன் 

மனித நேயம் இல்லாப் போக்கால் 

திக்கெலாம் மக்கள் திரண்டே விரட்ட 

திண்ணாமாய் நடக்கும் புரட்சி வெல்க 

உக்கிர வறட்சி தீர்க்கா மோசம்

 உலுத்தர் வாழ்வு ஊதாரிச் செயலால்

 திக்கெலாம் தப்ப முயன்றே முனைந்தும்

 திகைக்க மக்கள் புரட்சி அடக்குதே!

 

முற்பகல் செய்யின் பிற்பகல் வருமே 

முன்னோன் குறளோன் முகிழ்த்த சொல்லின்

 நற்றவ நல்லோர் தமிழர் மாய்த்த

 நாசம் மோசம் தொடராய் மாய்க்குமே 

முற்றும் துறந்தே அகதி வாழ்வாய் 

மூத்த குடியே அலைந்த அவலம்

சற்றும் முற்றும் தப்ப இயலா 

சூழல் பக்சே குடும்பம் மாய்க்கும்

 

அதிபர் மாளிகை ஆடிடும் களமாய் 

அழிவைக் கண்முன் காணும் தளமாய்

 விதியென வாழ்ந்த மக்கள் புரட்சி 

வர்த்தக ஒற்றுமை இணைந்து நின்றே

 கதியெனத் துரத்தும் கய்மைகள அனைத்தும் 

குற்றக் கூண்டில் நிறுத்தும் நாளிதே

 மதிமிகு மக்கள் நடத்தும் புரட்சி 

மண்ணில் ஆணவம் ஒழிக்கும் அன்றோ! 


முள்ளி வாய்க்கால் கண்ட போதே 

முழுமைக் கண்கள் நீராய் வீழ்ந்ததே 

சொல்லில் அடங்கா வீரத் தலைவன் 

சரித்திரச் செம்மல் பிராபா கரனின்

கல்லும் மண்ணும் நினைவாய் எடுத்தோம்

 கரும வீர்ர் வீட்டின் சிதைவில்

 கொல்லும் மமதை அடங்காத் தனத்தோர்

    கொடுமை நெஞ்சர் வீழ்க வீழ்கவே